சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

US deficit panel launches offensive against social programs

அமெரிக்க பற்றாக்குறை ஆய்வு ஆணையம் சமூக வேலைத்திட்டங்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தொடுக்கிறது

Joseph Kishore
12 November 2010

Use this version to print | Send feedback

ஒபாமா நிர்வாகத்தின் பற்றாக்குறை ஆய்வு ஆணையத்தின் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி தலைவர்கள் புதனன்று அறிவித்த முன்மொழிவுகள் தொழிலாள வர்க்கத்தின் மீதான ஒட்டுமொத்த தாக்குதலையும், பெருநிறுவன-செல்வந்த தனவான்களுக்கு இன்னும் பெரிய வரிச் சலுகைகளும் அதிர்ஷ்டமழையும் கிட்டவிருப்பதையும் குறித்து நிற்கின்றன. இருப்பினும், இவை அனைத்துமே அமெரிக்காவில் தயாரிப்பு செய்யப்பட்டு வரும் சமூக வேலைத்திட்டங்கள் மீதான, வேலைகள் மீதான மற்றும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமைகள் மீதான தாக்குதலுக்கு ஒரு ஆரம்ப அறிகுறி மட்டுமே.

குடியரசுக் கட்சியின் முன்னாள் செனட்டரான ஆலன் சிம்ப்சன் மற்றும் கிளிண்டன் நிர்வாகத்தின் முன்னாள் அலுவலரான எர்ஸ்கின் பவுல்ஸ் ஆகிய இக்குழுவின் ஆணையர்களால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் அடங்கியிருக்கும் பிரதானமான நடவடிக்கைகளில் சில:

* சமூக பாதுகாப்பு திட்டத்தில் வெட்டுகள் - ஓய்வு பெறுவோருக்குரிய வாழ்க்கை செலவுகள் அதிகரிக்கின்றன, 2050க்குள் ஓய்வு பெறும் வயது 68 ஆக்கப்பட வேண்டும் 2075க்குள்ளாக 69 ஆக்கப்பட வேண்டும்.

* அனைத்து தரப்பிலும் சுகாதாரப் பராமரிப்பு செலவினங்களைக் குறைப்பது [ஒபாமாவின் சுகாதாரப் பராமரிப்பு “சீர்திருத்த”த்தில் இடம்பெற்றதை விடவும் கூடுதலாக மெடிக்கேர் மற்றும் மெடிக்கெய்ட் இரண்டிலும் ஆழமான வெட்டுகள் உட்பட]. மருத்துவரீதியான மோசடி சம்பவங்களில் இழப்பீடு கோரி வழக்குத் தொடுப்பதற்கு இருக்கும் வசதியையும் குறைப்பதற்கு “அநீதி வழக்கு சீர்திருத்தம்” விடயத்திலும் ஆணையர்கள் வாகைசூடியுள்ளனர்.

* கூட்டரசின் மொத்த பணியாளர்களில் 10 சதவீதக் குறைப்பு, அதாவது 200,000 வேலைகள் ஒழிப்பு. கூடுதலாய் 250,000 இராணுவம்-சாரா ஒப்பந்ததாரர்கள் அகற்றம், அத்துடன் அனைத்து இராணுவம்-சாரா கூட்டரசுப் பணியாளர்களுக்கும் மூன்று வருட கால சம்பள நிறுத்தம்.

* வரி அமைப்பை செல்வந்தர்களுக்கு சாதகமான வகையில் இன்னும் சுழற்றக் கூடிய “வரிச் சீர்திருத்த”த்திற்கான பல்வேறு ஆலோசனைகளில் ஒன்றை அமல்படுத்துவது. வரிப் பிடித்தங்களை இல்லாது செய்வதற்கு அல்லது குறைப்பதற்கான ஆலோசனைகள் மற்றும் தனிநபர் வருமான வரி விகிதங்களைக் குறைப்பது ஆகியவை இந்த ஆலோசனைகளில் அடங்கும். பெரும் வருவாய்தாரர்களின் வருமான வரி விகிதத்தை நடப்பு 35 சதவீதத்தில் இருந்து 23 சதவீதமாக பாரிய அளவில் குறைப்பதும் இந்த வரிக் குறைப்பு ஆலோசனைகளில் அடங்கும். பெருநிறுவன வரி விகிதங்களை நடப்பு 35 சதவீதத்தில் இருந்து 26 சதவீதமாகக் குறைப்பது மற்றும் “அமெரிக்காவை ஒரு வணிகத்தை ஆரம்பித்து நடத்துவதற்கு சிறந்த இடமாக ஆக்கும்” திட்டத்தின் பாகமாக பெருநிறுவன வரி வரவினங்களை நிரந்தரமாக நீட்டிப்பது ஆகியவையும் இந்த ஆலோசனைகளில் இடம்பெற்றுள்ளன. பிணை வட்டி வரி வரவினம் போன்ற வெகுஜன வரிச் சலுகைகள் முடிவுக்கு வர இருக்கின்றன, அத்துடன் பிற்போக்கான நுகர்வு வரிகளும் திணிக்கப்படவிருக்கின்றன. 2013க்குள்ளாக பெட்ரோல் வரிகளை 15 சதவீதம் அதிகரிப்பதும் இதில் அடங்கும்.

இந்த முன்மொழிவுகள் எல்லாம் அமெரிக்க மக்களால் பரவலாக எதிர்க்கப்படுபவை என்பதை இந்த ஆணையர்களே ஒப்புக் கொள்கின்றனர். மக்களை உதாசீனத்துடன் நோக்குவதை மறைக்க வேண்டும் என்று கூட சிம்சன் கவலைப்படவில்லை, தான் “சாட்சியை பாதுகாக்கும் திட்டத்தில்” சேர நேரிடலாம் என்று நகைச்சுவையாய் கூறினார். ”அமெரிக்க மக்கள் அசைபோடும் பொருட்டு” எல்லா விடயங்களையும் ஆணையர்கள் மேஜை மீது வைத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

“தியாகத்தை பகிர்ந்து மேற்கொள்வதற்கான” அழைப்பாக இந்த அறிக்கையை ஆணையர்களும் ஊடகங்களும் குறிப்பிடுகின்றன. இது ஒரு மோசடி ஆகும். முதியவர்களுக்கு சுகாதார பராமரிப்பில் வெட்டுகள் உட்பட தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகத் தான் மிகப்பெருமளவில் இந்த வெட்டுக்கள் செலுத்தப்படுகின்றன என்பது மட்டுமல்ல, பற்றாக்குறை குறைப்பு மற்றும் நிதிப் பொறுப்புடைமை ஆகிய மறைப்புகளின் கீழ் அரசாங்கத்திடம் இருந்து டிரில்லியன் கணக்கான டாலர்கள் நிதியப் பிரபுக்களின் வங்கிக் கணக்குகளுக்கு திறம்பட சென்றுசேரும் வகையில் வரி அமைப்பில் மாற்றங்கள் செய்ய ஆலோசனையளிக்கப்படுகிறது.

ஆளும் தட்டின் குற்றவியல் தன்மையாலும் பேராசையாலும் கட்டவிழ்ந்த பொருளாதார நெருக்கடியே அதே தட்டுக்களின் நலன்களுக்காக சமூக வாழ்க்கை மற்றும் வர்க்க உறவுகளை அடிப்படையாகவும் நிரந்தரமாகவும் மாற்றுவதற்கு பயன்படுத்தப்படுவதை இந்த முன்மொழிவுகள் விளங்கப்படுத்துகின்றன.

இந்த வர்க்கப் போர் கொள்கைக்கு ஒபாமா நிர்வாகத்தின் ஆதரவும் மற்றும் இரண்டு அரசியல் கட்சிகளின் ஆதரவும் உண்டு. வியாழனன்று தென் கொரியாவில் இருந்து பேசிய ஒபாமா இந்த ஆணையர்களைப் பாதுகாத்து பேசுவதற்குத் தாவினார், இந்த வெட்டுகள் ரொம்ப அதிகம் என்பதாய் கூறிய தனது சொந்தக் கட்சி உறுப்பினர்களை விமர்சித்தார். “கடினமான நடவடிக்கைகளையே நாம் எடுக்க வேண்டியிருக்கும் அத்துடன் அமெரிக்க மக்களுக்கு நாம் உண்மைகளையே கூற வேண்டியதாய் இருக்கும்” என்று அந்த அறிக்கை பேசும் அதே புள்ளிகளை ஒபாமா எதிரொலித்துப் பேசினார்.

செல்வந்தர்களுக்கு புஷ் வழங்கிய வரிச் சலுகைகளை (இது குடியரசுக் கட்சியினர் கோரிய ஒரு கொள்கை) நீட்டிக்க சம்மதிக்கவிருப்பதாக வெள்ளை மாளிகை மிக அப்பட்டமான ஒரு அறிக்கையை வழங்கிய அதே தினத்தில் இந்த முன்மொழிவுகள் வெளியாயின. அனைத்து தரப்பினருக்கும் (வருடத்திற்கு 200,000 டாலருக்கும் அதிகமாய் சம்பாதிப்பவர்கள் உட்பட) வரிச் சலுகைகளை தற்காலிகமாய் நீட்டிக்க நிர்வாகம் ஒப்புக் கொள்ளவிருப்பதாக ஒபாமாவின் ஆலோசகர் டேவிட் ஆக்செல்ராட் ஹபிங்டன் போஸ்ட் பத்திரிகையில் புதனன்று தெரிவித்தார்.

தாராளவாத ஸ்தாபகத்தின் பதிவுசெய்யும் செய்தித்தாளான நியூயோர்க் டைம்ஸ் ஆணையத்திற்கு தனது முழுமையான ஆதரவை அறிவித்தது. பற்றாக்குறையை குறைப்பதற்கு ”எந்த நம்பகமான திட்டங்களையும்” தேர்தல் பிரச்சாரம் வழங்கியிராத நிலையில் இந்த அறிக்கை “வரவேற்கத்தக்க மாற்றுமருந்தாய்” அமைந்திருப்பதாக வியாழனன்று வெளியான அதன் முன்னணி தலையங்கம் பாராட்டியது. ”சமூகப் பாதுகாப்பு திட்டம், மெடிகேர் மற்றும் பிற கட்டாயமான வேலைத்திட்டங்களில் கணிசமான சேமிப்புகளைக் கண்டறிவதற்கான அவசியத்தைக் குறிப்பிடத் துணிந்ததற்கு” ஆணையர்களை டைம்ஸ் பாராட்டியது.

குறிப்பாக சுகாதாரப் பராமரிப்பு வெட்டுகளை டைம்ஸ் உற்சாகமாய் வரவேற்றது. ஏற்புடன் அது தெரிவித்தது: “சில மிக முக்கிய செலவினக் குறைப்பு ஏற்பாடுகளுக்கு வலுவூட்டியதன் மூலம் புதிய சுகாதாரச் சீர்திருத்த சட்டத்தையும் கடந்து ஆணையர்கள் சென்றுள்ளனர்....ஒரு மெடிகேர் செலுத்த ஆலோசனை வாரியத்திற்கும் [முதியவர்களுக்கான திட்டத்தில் வெட்டுகளைப் பரிந்துரைக்க] நிறுவன உதவியுடனான திட்டங்களுக்கு சட்டம் வழங்குவதைக் காட்டிலும் குறைவான மட்டத்தில் வரி விலக்குகளுக்கு வரம்பினை ஏற்படுத்தவும் [அதாவது தொழிலாளர்களை குறைவான விரிவெல்லைகளுடனான மலிவான திட்டங்களுக்குள் தள்ளுவது] இது வலிமையளிக்கும்”.

சிம்சன் மற்றும் பவுல்ஸ் வழங்கியிருக்கும் ஆலோசனைகள், தனது முதல் இரண்டு ஆண்டுகளை வங்கிகளை பிணையெடுக்கவும், ஊதியங்களைக் குறைக்கவும், போரை விரிவுபடுத்தவும் மற்றும் சுகாதாரப் பராமரிப்புக்கான அரசாங்க செலவினங்களை வெட்டவும் அர்ப்பணித்திருக்கும் ஒபாமா நிர்வாகத்தின் கொள்கைகளின் தொடர்ச்சியையே குறித்து நிற்கின்றன.

லிபரல் மற்றும் போலி-சோசலிச “இடதுகள்” (நேஷன் பத்திரிகை மற்றும் சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு போன்ற நடுத்தர வர்க்க குழுக்கள் உட்பட) ஒபாமா நிர்வாகத்திற்கு ஆதரவும் அரசியல் மறைப்பும் வழங்கிய நிலையில், தொழிலாள வர்க்கத்தின் மீதான ஒரு தாக்குதலுக்கு அவர் முன்நின்றார். 2008 ஆம் ஆண்டின் நிதிப் பொறிவுக்குப் பின் பெருநிறுவன-நிதித்துறை தட்டுக்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீள்வதற்கும், குடியரசுக் கட்சிக்கு (2008 ஆம் ஆண்டின் ஒபாமா அலையில் வாக்காளர்களால் மறுதலிக்கப்பட்ட கட்சி) ஒபாமா தனது தேர்தல் வாக்குறுதிகளில் செய்த காட்டிக் கொடுப்பில் இருந்து விளைந்திருக்கும் வெகுஜனங்களின் பிரமை விலக்கத்தைப் பயன்படுத்தி மீள்வதற்கும் கால அவகாசத்தை ஒபாமா நிர்வாகம் வழங்கியது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒபாமாவுக்கு வாக்களித்த தொழிலாளர்களும் இளைஞர்களும் ஆர்வம் காட்டாமலும் வாக்களிக்காமலும் ஒதுங்கிய நிலையை 2010 தேர்தல்களில் காணக் கூடியதாய் இருந்தது. குடியரசுக் கட்சியினரின் அறுதிப் பெரும்பான்மை வெற்றியானது நிதிய தட்டுக்களால் தொழிலாள வர்க்கத்தின் மீது இன்னும் கூடுதலான மூர்க்கமானதொரு தாக்குதல் தொடுக்கப்படவிருப்பதற்குக் கட்டியம் கூறுகிறது.

அமெரிக்க அரசியல் அமைப்பின் முற்றுமுதலாய் ஜனநாயகமற்ற தன்மையையும் பெருவணிகங்களின் இரண்டு வலது சாரி கட்சிகளால் மேலாதிக்கம் செலுத்தப்பட்டு நடத்தப்படும் தேர்தல்களின் அடிப்படையான மோசடியையுமே ஆணையத் தலைவர்களின் அறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பரந்த மக்களின் பெரும்பான்மையினரால் எதிர்க்கப்பட்ட சமூக வெட்டுக்களுக்கு தயாரிப்பு செய்யும் பொருட்டே ஒபாமா சென்ற பிப்ரவரியில் பற்றாக்குறை ஆய்வு ஆணையத்தை உருவாக்கி சமூகப் பாதுகாப்பு திட்டத்தை தாக்குவதில் ஸ்தாபகம் பெற்றிருந்த இரண்டு தலைவர்களையும் நியமித்தார். இந்த முன்மொழிவுகளில் வாக்காளர்களின் கருத்துக்கு இடமளிக்காத வகையிலேயே பற்றாக்குறை நிலை ஆலோசனை ஆணையத்தின் அறிக்கை திட்டமிட்டு தேர்தலுக்குப் பின் வெளிவருமாறு காலஅட்டவணையிடப்பட்டது.

ஜனநாயகக் கட்சியின் சில பிரிவுகளிடம் இருந்தும், அதன் நடுத்தர வர்க்க “இடது” ஆதரவாளர்களிடம் இருந்தும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திடம் இருந்தும் ஆணையத்தின் அறிக்கைக்கு கிட்டியிருக்கும் விமர்சனங்களை யாரும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஒபாமாவை ஊக்குவித்து அவரது நிர்வாகத்தின் முதல் இரண்டு ஆண்டு கொள்கைகளுக்கு ஆதரவளித்ததைப் போலவே அதே விடாமுயற்சியுடன் வெகுஜன எதிர்ப்பை சிதறடிப்பதற்கும் மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைகளை நிறைவேற்றுவதற்கும் அவை வேலை செய்யும்.

இந்த முன்மொழிவுகள் அமெரிக்க மக்களுக்கு முன்வைக்கப்பட்ட கடுமையான எச்சரிக்கை ஆகும். இவை வெறும் ஆரம்பம் மட்டுமே. மில்லியன்கணக்கான மக்கள் நம்பி வாழ்கிற, பல தலைமுறைகளாக அவற்றுக்கு எதுவும் நேர முடியாது என கருதிக் கொண்டிருக்கிற திட்டங்கள் எல்லாம் வெட்டுவதற்குக் குறி வைக்கப்படுகின்றன. சமூகப் பாதுகாப்பு திட்டம், வேலைவாய்ப்பில்லாதவர்களுக்கான நல உதவிகள், சுகாதாரப் பராமரிப்பு திட்டங்கள், பொதுக் கல்வி என ஒவ்வொன்றும் மேஜை மேல் உட்கார்ந்திருக்கிறது. வர்க்க உறவுகளின் இந்த மறுசீரமைப்பை மேற்கொள்வதிலான தனது உறுதியில் அமெரிக்க நிதிப் பிரபுத்துவம் இரக்கமற்று முன்செல்கிறது. ஜனநாயகக் கட்சியின் மற்றும் இரு-கட்சி அமைப்புமுறையின் இற்றுப் போன கட்டமைப்புக்குள்ளாக இந்த தாக்குதலை எதிர்ப்பது சாத்தியமற்றது என்பதையே ஒபாமா நிர்வாகத்திடம் இருந்தான அனுபவம் விளங்கப்படுத்தியிருக்கிறது.

தொழிலாள வர்க்கம் தனது நலன்களுக்காகப் போராடுவதற்கு, அமெரிக்க மற்றும் உலகப் பொருளாதாரத்தை சோசலிச அடிப்படையில் உருமாற்றுவதை அடிப்படையாகக் கொண்ட அதன் சொந்த அரசியல் கட்சியும் அதன் சொந்த வேலைத்திட்டமும் அவசியமாய் இருக்கிறது.