சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Obama continues Washington’s aggressive courting of India

இந்தியாவிடம் ஆதரவு கோரும் வாஷிங்டனின் தீவிர முயற்சியை ஒபாமா தொடர்கிறார்

By Keith Jones
6 November 2010

Use this version to print | Send feedback

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நான்கு நாடுகளுக்கான பத்துநாள் ஆசிய பயணத்தின் தொடக்கமாக, இந்தியாவிற்கு மூன்று நாள் விஜயத்தை இன்று தொடங்குகிறார். இந்தியாவுடன் சேர்ந்து, இந்தோனேஷியா, தென்கொரியா ஆகிய நாடுகளுக்கும் இறுதியாக ஜப்பானுக்கும் செல்வார். தென்கொரியாவில் அவர் G-20 நாடுகளின் அரசாங்க தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொள்வார்.

இந்த நான்கு நாடுகள் சுற்றுப்பயணத்தை அடிக்கோடிடும் அமெரிக்காவின் முக்கிய மூலோபாய நோக்கம் —வளர்ந்துவரும் சீனாவை கட்டுப்படுத்தும் நோக்கம்— அமெரிக்க பத்திரிகைகளின் மற்றும் ஒபாமா நிர்வாகத்தின் வார்த்தைகளில், ஜனாதிபதி ஆசியாவின் முன்னனி "ஜனநாயகங்களாக" விளங்கும் நாடுகளுக்கு விஜயம் செய்கிறார் என்பதாக எடுத்துக்காட்டப்படுகிறது.

“இந்த சுற்றுப்பயணத்தில் நான்கு ஆசிய ஜனநாயக நாடுகளுக்கு நாங்கள் செல்கிறோம் என்பது தன்னியல்பாக பொருந்தி வந்ததல்ல" என்று ஒபாமாவின் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் பென் ரோட்ஸ் வியாழனன்று தெரிவித்தார். அவர் கூறியதாவது: “ஆசியாவிலும் உலகம் முழுவதும் ஜனநாயகத்தின் வெற்றியை அடிக்கோடிடவே நாங்கள் விரும்புகிறோம். மேலும் முக்கியமாக, நாங்கள் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து... ஒவ்வொரு இடத்திலும் பேச இருக்கிறோம்” என்றார்.

ஸ்பானிஷ்-அமெரிக்க யுத்தத்தின் முடிவில் பிலிப்பைன்ஸின் அமெரிக்க பின்னிணைப்பைக் குறித்து திரும்பி பார்த்தால், வாஷிங்டனும் வோல் ஸ்ட்ரீட்டும் ஆசியாவில் அவற்றின் ஏகாதிபத்திய நலன்களை இரக்கமில்லாமல் துரத்திப்பிடிப்பதற்கான நடவடிக்கையில் ஜனநாயகம் குறித்து வாய்ஜாலங்களைப் பயன்படுத்தி இருக்கின்றன. இன்று அமெரிக்க அரசியல் மற்றும் இராணுவ-மூலோபாய நிர்வாகங்கள், 'அமெரிக்காவும் இந்தியாவும் அவற்றின் "ஜனநாயக மதிப்புகளைப்" பகிர்ந்து கொண்டிருப்பதால், "இயற்கையாக அமைந்த கூட்டாளிகளாக" இருப்பதாக' மீண்டும் மீண்டும் குறிப்பிடுகின்றன. ஆனால் பனிப்போர் காலத்தின் போது, இஸ்லாமாபாத்தில் இருந்த வலதுசாரி இராணுவ சர்வாதிகாரங்களின் வெற்றியைத் தக்க வைப்பதிலும், ஆயுதபாணி ஆக்குவதிலும் புது தில்லியின் பரம-விரோதியான பாகிஸ்தானுடன் அமெரிக்க கூட்டு சேர்ந்திருந்ததால், இரண்டு நாடுகளும் விரோதம் கொண்டிருந்தன.

அமெரிக்க மற்றும் இந்திய ஆளும் மேற்தட்டுக்கள் எதை பகிர்ந்து கொள்கின்றன என்றால், மிக வேகமாக விரிவடைந்து வரும் சீனாவின் பொருளாதார சக்தியைக் குறித்தும், புவி-அரசியல் விரிவின் மீதான அச்ச உணர்வையும் தான் பகிர்ந்து கொள்கின்றன.

அமெரிக்க வெளியுறவு விவகாரத்துறை செயலாளர் ஹிலாரி கிளின்டனின் 13 நாடுகள் ஆசிய சுற்றுப்பயணத்தின் தொடர்ச்சியாக ஒபாமாவின் ஆசிய பயணம் வருகிறது. ஹிலாரி கிளின்டனின் சுற்றுப்பயணத்தின் போது, அப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் செல்வாக்கை உறுதிப்படுத்திய அவர், அதை எடுத்துக்காட்டும் விதமாக தென்சீனா மற்றும் கிழக்கு சீன கடல்களில் பெய்ஜிங்கிற்கு எதிராக ஜப்பான், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கும், சீனாவிற்கும் இடையிலான தீவுகள் மீதான நீண்டகால எல்லை பிரச்சினைக்குள் அமெரிக்காவை நுழைத்துக் காட்டினார்.

இரண்டு தசாப்தங்களுக்கும் அதிகமான காலத்திற்குப் பின்னர் ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதியின் முதல் விஜயமாக 2000 தில் பில் கிளின்டன் இந்தியாவிற்கு சென்று வந்த பின்னர், வாஷிங்டன் இந்தியாவின் ஆதரவிற்காக மிக தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின்கீழ், இந்தியாவுடன் ஒரு "சர்வதேச மூலோபாய கூட்டணியை" அமெரிக்கா வெளிப்படுத்தியது. அத்துடன் இந்தியா ஒரு வல்லரசாக உருவாவதில் வாஷிங்டன் உதவ தயாராக இருப்பதை எடுத்துக்காட்ட, இந்தியாவுடன் மூன்று தசாப்தங்களுக்கு பழமையான உள்நாட்டு அணுசக்தி வர்த்தகத்தின் மீதான சர்வதேச தடையை நீக்குவதற்கும் அது இட்டு சென்றது. அணு ஆயுத தடை ஒப்பந்தத்தை மீறி அணு ஆயுதங்களைத் தயாரித்த ஒரு நாடாக, ஆனால் அணுசக்தி எரிபொருள் மற்றும் உள்நாட்டு அணுசக்தி தொழில்நுட்பத்தில் வர்த்தகம் செய்ய அனுமதிக்கப்பட்டிருக்கின்ற நிலையில், உலக அணுசக்தி ஒழுங்கமைப்பு அதிகாரங்களுக்குள் இந்தியா இப்போது ஒரு தனிச்சலுகையை அனுபவிப்பதற்கு வாஷிங்டனுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.

இந்திய பெருங்கடலில் ஒரு பெரும் சக்தியாக விளங்க வேண்டும் என்ற இந்தியாவின் விருப்பத்திற்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு குரல் கொடுத்து கொண்டிருக்கிறது. மேலும் சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்க இராணுவம், ஏனைய பிற எந்த நாட்டுடன் ஈடுபட்டதைவிட இந்தியாவின் ஆயுதப்படைகளுடன் அதிகளவில் இருதரப்பு இராணுவ பயிற்சிகளை நிகழ்த்தி இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க இராணுவ தளவாடங்களை வாங்கும் முக்கிய நாடாக இந்தியாவை மாற்றுவது தான் அமெரிக்காவின் முக்கிய நோக்கமாகும். இது கூட்டு இராணுவ நடவடிக்கைகளுக்கு உதவும் என்பது மட்டுமில்லாமல், புது டில்லியை இது வாஷிங்டனுக்கு மிக நெருக்கத்தில் கொண்டு வரும் என்பதே கணக்காக இருக்கிறது.

இந்திய-அமெரிக்க உறவை அமெரிக்காவின் உலக மூலோபாயத்தின் ஒரு மைய ஆதாரமாக மாற்ற புஷ் நிர்வாகத்தின் நடவடிக்கைக்குத் தலைமை தாங்கிய பலர், வாஷிங்டனின் இந்திய உறவைப் பாதுகாக்க தற்போதைய நிர்வாகம் ஒபாமாவின் இந்திய சுற்றுப்பயணத்தில் நிறைய செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கான அதன் கோரிக்கைக்கு ஆதரவு காட்டுவது மற்றும் ஐந்து "அங்கீகரிக்கப்பட்ட" அணு-ஆயுத நாடுகளுக்குச் சமமாக இந்தியாவிற்கு உரிமைகளை வழங்குவது ஆகியவற்றில் அமெரிக்க ஆதரவை வெளிப்படுத்துவதும் இதில் உள்ளடங்கும்.

“அமெரிக்காவின் மூலோபாய நலனில்... இந்தியாவை சர்வதேச சக்தியாக உயர்த்துவதென்பது ஒரு ஸ்திரமான ஆசிய மற்றும் உலகளாவிய சமப்பாட்டை அல்லது சக்தியை உறுதிப்படுத்துவதாகும்,” என்று ரிச்சார்ட் அர்மிடேஜ், நிகோலஸ் பர்ன்ஸ் மற்றும் ரிச்சார்ட் ஃபன்டைன் ஆகியோரால் எழுதப்பட்ட ஓர் அறிக்கை குறிப்பிட்டது. இது கடந்த மாதம் CNAS இல் (The Centre for a New American Security) வெளியானது.

ஒபாமா, புதனன்று நடந்த அவரின் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், “இந்தியாவின் எழுச்சி இரண்டு நாடுகளுக்கும், அந்த பிராந்தியத்திற்கும், உலகத்திற்கும் மிக முக்கியமாக இருக்கும்" என்று அறிவித்ததன் மூலம், இந்திய-அமெரிக்க உறவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

“இந்தியா ஒரு வல்லரசாக உயர்வதை நான் வரவேற்கிறேன்; ஆதரிக்கிறேன்," ஒபாமா வலியுறுத்தினார். பின்னர் அவர், “ஒரு மிகவும் ஸ்திரமான, பாதுகாப்பான ஓர் உலகை வடிவமைப்பதில் இந்தியாவும், அமெரிக்காவும் சேர்ந்து பணியாற்றும் ஒரு கூட்டணி தான் என்னுடைய நோக்கம்,” என்பதையும் சேர்த்து கொண்டார்.

எவ்வாறிருப்பினும், தேர்தலுக்கு பிந்தைய அவருடைய செய்தியாளர் கூட்டத்தில் ஒபாமா அளித்த கருத்துக்கள் உடனடியாக இந்தியாவில் எரிச்சலை உயர்த்தியது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர இடத்திற்கான இந்தியாவின் முறையீட்டை அமெரிக்கா ஆதரிக்கும் என்பதற்கு முழுவதும் உத்தரவாதம் அளிக்க அவர் மறுத்தார். அத்துடன் "மிகவும் வித்தியாசமான மற்றும் சிக்கலான" சில குறிப்பிட்ட அமெரிக்க உயர்-தொழில்நுட்ப பொருட்களின் மீது இந்தியா விதித்திருக்கும் "இருதரப்பு-பயன்பாட்டின்" கடிவாளங்களை நீக்குவது குறித்தும், அமெரிக்க இராணுவ தளவாடங்களை வாங்குமாறு செய்வதிலும் இந்தியாவின் மீது அழுத்தம் அளிக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்க வியாபாரங்கள் செழிப்படையவும், நம்முடைய நிறைய பொருட்களை விற்கவும், இங்கே அமெரிக்காவில் நிறைய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் நாம் எவ்வாறு சந்தைகளைத் திறந்துவிடுவது என்பதே தம்முடைய பயணத்திற்கான திட்டுமிடுதலில் "முக்கிய இடம்" பெற்றிருந்ததாக அவர் தெரிவித்தார்.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்-அவுட்சோர்சிங் நிகழ்முறைகளைக் குறைப்பதற்கான மற்றும் அமெரிக்க டாலர் மதிப்பைக் குறைப்பதற்கான அச்சுறுத்தல்கள் உட்பட, பாதுகாப்புவாத முறைமைகள் மூலமாக அமெரிக்கா அதன் நெருக்கடியை ஏற்றுமதி செய்யும் முயற்சிகளால் இந்திய மேற்தட்டு கோபம் அடைந்துள்ளது மற்றும் இறுகிப்போய் உள்ளது. “நீண்டகாலமாக இந்திய-அமெரிக்க உறவுகளை வலுவாக ஊக்குவித்து வந்த முன்னனி இந்திய பெருநிறுவனங்களின் தலைவர்களும் கூட இப்போது, அமெரிக்கா உண்மையாகவே கட்டுபாடற்ற வர்த்தகத்தை விரும்புகிறதா அல்லது சமாதானப்படுத்துவதற்கான கோஷமாக அந்த கொள்கையை வெறுமனே உச்சரிக்கிறதா என்று வெளிப்படையாகவே கேட்கின்றனர்,” என்று நீண்டகாலமாக வாஷிங்டனுக்கும் புது டில்லிக்கும் இடையிலான உறவுகளை ஊக்குவித்து வந்த அமெரிக்காவில் கல்வியாளராக இருக்கும் சுமித் கங்குலி தெரிவிக்கிறார்.

இந்தியாவின் விவசாயத் துறையில் அனுமதி கேட்கும் வாஷிங்டனின் தொடர்ச்சியான தீவிர பிரச்சாரத்தை இந்திய ஆளும் மேற்தட்டு எதிர்த்து வருகிறது. டோஹா வர்த்தக பேச்சுவார்த்தைகளின் தோல்விக்கு இதுவும் ஒரு காரணியாக இருந்தது. பெரும்பாலான இந்திய மக்கள் விவசாயத்திலிருந்து ஓர் அரைகுறையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் நிலைமைகளின்கீழ் அமெரிக்க வேளாண் தொழில் ஏற்றுமதிகளின் தாக்கம் குறித்து இந்திய மேற்தட்டு அஞ்சுகிறது. ஆனால் அமெரிக்க அழுத்தத்தின்கீழ், இந்திய அரசாங்கம் வால்மார்ட் போன்ற மல்டி-பிராண்ட் சில்லறை வியாபாரங்களுக்குக் கதவைத் திறந்து விட தயாராக இருப்பதாக அறிகுறிகளைக் காட்டியுள்ளது.

ரஷ்யா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இறுதியாக ஆனால் குறைவில்லாமல் சீனாவுடனும் கூட அதன் நெருக்கமான உறவுகளை இந்தியா தொடர்கின்ற போதினும், காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முன்னேற்ற கூட்டணி அரசாங்கத்தின்கீழ், "சர்வதேச மூலோபாய கூட்டணிக்கான" வாஷிங்டனின் நகர்வை முட்டுக்கொடுக்கவே இந்தியா விரும்புகிறது.

இந்திய பிரதம மந்திரி மன்மோகன் சிங் சீனாவில் தமது எதிர்பலத்தில் இருக்கும் வென் ஜியோபோவை ஹனாய் மாநாட்டை ஒட்டி கடந்த வாரம் சந்தித்து பேசிய பின்னரும், அவரை இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவிற்கு வரும்படி அழைப்புவிடுத்த பின்னரும், 'இந்தியாவும், சீனாவும் ஒரேநேரத்தில் வளர்வதற்கு போதிய இடம் இருக்கிறது' என்ற அவருடைய எப்போதுமான முறையீட்டை மீண்டும் முறையிட்டார். எவ்வாறிருப்பினும், அதன் "முக்கிய பிரச்சினைகளில்" சீனா மிக உணர்வுபூர்வமாக இருக்கும் என்று இந்தியா எதிர்பாக்கிறது என்பதையும் அவர் ஜியோபோவிற்கு தெரிவித்தார்.

இந்தியாவின் "முக்கிய பிரச்சினைகள்" என்ன என்பதை இந்திய அதிகாரிகள் கூற மறுத்த போதினும், குறைந்தபட்சம் பிரச்சினைக்குரிய காஷ்மீர் பிராந்தியத்தில் இந்தியாவின் முறையீடும் அதிலொரு பகுதியாக இருக்கும் என்று பரவலாக கூறப்படுகிறது.

காஷ்மீரில் இந்தியாவிற்கு எதிரான கிளர்ச்சியை ஒடுக்குவதையும் தம்முடைய பொறுப்பில் கொண்டிருக்கும் இந்தியாவின் வடக்கு பகுதி தளபதியைச் சீன விஜயத்திற்குச் சீனா அனுமதிக்க மறுத்த பின்னர், புது டில்லி சமீபத்தில் சீனாவுடனான உயர்-மட்ட இராணுவ பரிவர்த்தனைகளை நிறுத்தியது. மேலும் இந்தியாவைச் சேர்ந்த ஜம்மு & காஷ்மீரில் இருந்து சீனாவிற்குச் செல்லும் பயணிகளுக்கு கொடுக்கப்படும் விசாக்களை அவர்களின் இந்திய கடவுச்சீட்டில் பதியாமல் தனியாக துண்டு சீட்டில் அளிக்கும் சீனாவின் சமீபத்திய முடிவையும் இந்தியா எதிர்த்துள்ளது. இந்த நடவடிக்கைகள் காஷ்மீர் மீதான இந்தியாவின் உரிமையைச் சீனா சவால் விடுவதாக உள்ளது என்று இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால் காஷ்மீர் பிரச்சினை இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மூலமாகவே தீர்க்கப்பட வேண்டும் என்ற அதன் நிலைப்பாட்டைத் தொடர்வதாக கூறி சீனா இதை மறுக்கிறது.

இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையிலான இருதரப்பு வர்த்தகம் மலர்ந்திருக்கின்றன என்ற போதினும், ஆக்கிரமிப்புகளின் மீதான பரஸ்பர குற்றச்சாட்டுக்களும், இராஜாங்கரீதியிலான பூசல்களும் சமீபத்திய ஆண்டுகளில் டில்லிக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையிலே தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இந்தியாவுடனான உள்நாட்டு அணுசக்தி வர்த்தகத்தின் மீதான சர்வதேச தடை நீக்கும் உடன்பாட்டை தடுத்து நிறுத்துவதற்கான பதினொன்றாவது மணிநேர முயற்சியில் ஈடுபட்டமைக்கும், மற்றும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினைக்குரிய எல்லையில் அதன் இராணுவ தளங்களை கட்டமைப்பதற்கும் இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. ஓய்வு பெறவிருக்கும் இந்தியாவின் இராணுவப்படை தளபதி ஒருவர், அவருடைய நாடு ஓர் இரண்டு தரப்பு தாக்குதல் யுத்தத்தைச் சமாளிக்க போதிய வலிமையுடன் இருப்பதாக (அதாவது, ஒரே நேரத்தில் சீனாவையும், பாகிஸ்தானையும் இரண்டையும் தோற்கடிப்பதற்கான வலிமை) ஜனவரியில் தெரிவித்தார்.

சுரண்டுவதற்காகவும், சீனாவைக் குறித்த இந்திய அச்சங்களைத் தூக்கி எறியவும் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் சேர்ந்த ஒரு பாதுகாப்பு கூட்டணியை உருவாக்க வாஷிங்டன் இந்தியாவிற்கு அழுத்தம் அளித்து வருகிறது.

இதுபோன்றவொரு கூட்டணியில் இந்தியாவின் பங்களிப்பை பெய்ஜிங், 'அமெரிக்க தலைமையிலான சீன எதிர்ப்பணியில் இந்தியா அதன் பாத்திரத்தை ஏற்க அடிபணிந்துவிட்ட ஒரு நடவடிக்கையாக' பார்க்கக்கூடும் என்பதை இந்தியா தெளிவாக தெரிந்திருப்பதால், இந்தியா இதுபோன்றதொரு கூட்டணிக்கு தற்போது மறுத்துள்ளது.

இந்தியாவின் இராணுவ-புவி-அரசியல் நிர்வாகத்தின் சில பிரிவுகளும் மேலும் மேலும் வெளிப்படையாகவே அமெரிக்காவுடனான அணியில் இந்தியா அதனைப் பாத்திரப்படுத்த அழைப்புவிடுத்து வருகின்றன. உலக வல்லரசாக ஆவதற்கான இந்தியாவின் விருப்பத்தை நிறைவேற்றி கொள்ள இந்தியாவிற்கு இதுவே விரைவான மற்றும் சிறந்த வழியாக இருக்கும் என்று அவை நம்புகின்றன.

அதேசமயத்தில், இந்தியாவின் காயங்கள் மற்றும் ஆசியா முழுவதும் புவி-அரசியல் உறவுகளை அமெரிக்கா ஸ்திரமின்மைப்படுத்துவதற்கான முயற்சி இரண்டையும் குறித்த விஷயத்தில், அமெரிக்காவின் கொள்கை மீது புது டில்லிக்கு பல்வேறு கருத்து வேறுபாடுகளும், குறைகளும் உள்ளன.

ஒபாமா நிர்வாகத்தின் ஆப்கான்-பாக் யுத்த மூலோபாயத்தின் மீதும் இந்தியா மிகவும் கவலைக் கொண்டுள்ளது. தாலிபான் உடனான பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக கூறிக்கொண்டே அதேவேளையில் ஆப்கான்-பாக் யுத்த மூலோபாயத்தில் அமெரிக்க இஸ்லாமாபாத் உடனான அதன் உறவை வலிமைப்படுத்திக் கொண்டதாக பார்க்கப்படுகிறது. இதை புது டில்லி பாகிஸ்தான் நலன்களுக்காக வேலை செய்யும் அமைப்புகளைவிட சற்றே மேலானதாக பார்க்கிறது.

குறிப்பாக இஸ்லாமாபாத் உடனான பதட்டங்களைக் குறைக்க வாஷிங்டன் புதுடில்லிக்கு அழுத்தம் அளிக்கிறது என்று இந்திய மேற்தட்டு கோபத்தில் உள்ளது. இந்தியாவின் பார்வையில், காஷ்மீரிலும் சேர்த்து "இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதத்திற்கு" உதவுவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை பாகிஸ்தான் குறைந்தளவிலேயே நிறைவேற்றி உள்ளது. “ஒசாமா பின்லேடனுடன் கை குலுக்கி முத்தமிட சொல்லி (அமெரிக்கர்களை) நாம் சொல்லலாமா?,” என்று பிரபல நாளிதழ் கட்டுரையாளர் ஒருவர் கேட்கிறார்.

பெருமளவிற்கு எரிபொருள் இறக்குமதிகளைச் சார்ந்திருக்கும் இந்தியா, ஈரானிடமிருந்து எரிசக்தி வளங்களைப் பெறுவதைத் தடுக்கும் அமெரிக்க முயற்சிகளாலும் வெறுப்படைந்துள்ளது. அமெரிக்க அழுத்தத்தின் கீழும், இந்திய-அமெரிக்க அணுசக்தி உடன்படிக்கை இறுதி செய்யப்பட வேண்டி இருந்ததாலும் 2006-07 இல் நடைபெற்ற முக்கியமான சர்வதேச அணுசக்தி ஆணையத்தின் கூட்டத்தில் ஈராக்கிற்கு எதிராக வாக்களிக்க புது டில்லி தடுமாற வேண்டியிருந்தது.

ஆனால் குறைந்தபட்சம், அதுபோன்றதொரு அபிவிருத்தி இந்திய-அமெரிக்க உறவுகளில் ஒரு வரையறுக்கத்தக்க நிகழ்வாக இருந்தது.

தம்மை வரவேற்பவர்களை மகிழ்விக்க ஒபாமா அவருடைய இந்திய பயணத்தை மும்பையிலிருந்து தொடங்குவார் என்பதுடன், 2008 நவம்பர் பயங்கரவாத தாக்குதலின் இலக்குகளில் ஒன்றாக இருந்த தாஜ் ஓட்டலில் தங்கி, உரையாற்றுவார். காஷ்மீர் குறித்து பாகிஸ்தானுடன் இந்தியாவைப் பேச்சுவார்த்தைக்குள் தள்ள வலியுறுத்துவதன் மூலம், ஆப்கான் யுத்தத்தில் அதன் முறையீடுகளுக்கு இஸ்லாமாபாத்தை முற்றிலுமாக இணங்கச் செய்ய முடியும் என்ற ஒபாமா நிர்வாகத்தின் ஆலோசனைகளை முன்கூட்டியே பின்னுக்குத் தள்ளுவதற்கு மும்பை தாக்குதலை இந்தியா பயன்படுத்திக் கொண்டிருக்கிறது..

அவ்வாறே, ஒபாமா மும்பையில் அவருடைய பயணத்தைத் தொடங்கியதும், பாகிஸ்தானிய "பயங்கரவாதத்தை" இந்த விஜயத்தின் முக்கிய கவனத்தில் கொண்டு வர இந்திய அரசாங்கம் கணக்கிடுகிறது.

ஆனால் இந்த பிரச்சினை மீது புது டில்லிக்கும், வாஷிங்டன்னுக்கும் இடையே கணிசமான ஊகங்கள் இருக்கின்றன. பொதுவழக்கில், “மோசடிக்காரர்” ஆகிப்போன அமெரிக்க அரசாங்கத்தின் உளவாளியும், மும்பை பயங்கரவாத தாக்குதலில் முக்கிய நபரும், தற்போது அமெரிக்க சிறையில் இருப்பவருமான டேவிட் ஹெட்லியைச் சந்திக்க இந்திய அதிகாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்தும் அவர்கள் எரிச்சலில் இருக்கிறார்கள்.