சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

Growing signs of renewed debt crisis in Europe

ஐரோப்பாவில் மீண்டும் கடன் நெருக்கடியின் பெருகும் அடையாளங்கள்

By Stefan Steinberg
13 November 2010

Use this version to print | Send feedback

கடன் பத்திரத்தின் (Bond) மூலம் ஆதாயங்கள் மிக உயர்ந்துள்ள நிலையில், கண்டத்தின் பொருளாதார வளர்ச்சி தேங்கியிருக்கையில் பல ஐரோப்பிய நாடுகளில் கடன் நெருக்கடி மீண்டும் வரக்கூடும் என்பதற்கான அதிகரித்த அடையாளங்கள் தெரிகின்றன.

அயர்லாந்துத் தலைவர்கள் நாட்டின் வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறையைத் தீர்க்க எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் நம்பிக்கை கொண்டுள்ளது என்பதை அறிவிக்க சியோலில் கூடிய G20 குழு மாநாட்டைப் பயன்படுத்தும் அசாதாரண நடவடிக்கையை முக்கிய ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் எடுத்தனர். அதே நேரத்தில் ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஐக்கிய இராச்சியம் நாடுகளின் தலைவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஐரோப்பிய ஒன்றியம் குறைந்தபட்சம் 2013 வரை ஐரோப்பிய நாடுகளுக்குக் கூடுதலாக எந்த பிணை எடுப்பிற்கும் திட்டம் இல்லை என்று கூறிவிட்டனர்.

Bond பத்திரங்களில் கிடைக்கும் இலாபங்கள், ஐரோப்பிய அரசாங்கங்களுக்கு எதிரான தனியார் முதலீட்டாளர்கள் மீது அதிக சுமை இருக்கும் வகையில் பிணை எடுப்பு முறைகள் இருக்க வேண்டும் என்னும் ஜேர்மனியின் அழைப்புக்களால் ஓரளவு உந்துதல் பெற்றது. சந்தைகளை அமைதிப்படுத்தும் வகையில் ஐரோப்பியத் தலைவர்கள் வெள்ளியன்று திட்டமிடப்பட்டுள்ள புதிய பிணை எடுப்பு வழிவகை “தற்பொழுது நிலுவையில் உள்ள கடன்களுக்குப் பொருந்தாது” என்று வலியுறுத்தினர்.

அயர்லாந்து அரசாங்க ஆதாரங்கள் மற்றும் யூரோ வலையப் பகுதி நாடுகள் குழுவின் தலைவர் Jean-Claude Juncker ஆகியோர் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து நெருக்கடிக் கால உதவி கோர அயர்லாந்து விண்ணப்பிக்க இருப்பாதாக வந்த தகவல்களை மறுத்த ஒரு நாளைக்குப் பின் சியோல் அறிக்கை வந்துள்ளது. இந்த வாரம் நிதியச் செய்தி ஏடுகளில் அயர்லாந்து மற்றும் பாதிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய நாடுகளுக்கு பிணை எடுப்பு என்பது ஒன்றுதான் அவற்றின் கடக்க முடியாத பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு என்ற ஊகங்கள் அதிகமாக வந்துள்ளன.

அயர்லாந்துக் கடன் பத்திரத்தின் மீதான விளைவு 1999ல் யூரோ தொடக்கப்பட்டதிலிருந்து மிக உயர்ந்த அளவிற்கு அதிகரித்தது. ஐரோப்பிய மத்திய வங்கி அயர்லாந்தின் சார்பாக அரசாங்கப் பத்திரங்களைப் பெரிதும் வாங்கும் முறையில் குறுக்கிடப்போவதாக வந்த அறிக்கையையும் மீறி இவ்வாறு உள்ளது.

முக்கிய பத்திர முதலீட்டாளர்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒரு பெரும் 440 பில்லியன் டொலர் அவசரக்கால நிதி தோற்றுவிப்பதற்கு முன்னிருந்த கிரேக்கக் கடன்களுக்கு இருந்த உயர்ந்த தரத்தில் அயர்லாந்துக் கடன் வட்டிவிகிதத்தையும் உயர்த்தியுள்ளனர். EFST எனப்படும் ஐரோப்பிய நிதிய உறுதிப்பாட்டு நிதியத்திற்கு இன்னும் 60 பில்லியன் யூரோக்கள் ஐரோப்பிய ஆணையத்தாலும் 250 பில்லியன் யூரோக்கள் சர்வதேச நாணய நிதியத்தாலும் கொடுக்கப்பட்டன. மே மாதம் கிரேக்கத்திற்கு பிணை எடுப்புத் தொகுப்பான தனி 110 பில்லியன் யூரோக்களை என்பதைத் தொடர்ந்து EFSF நிதி வந்தது.

சந்தையில் அயர்லாந்தின் நிதிய அந்தஸ்தைப் பற்றிய தளர்ச்சி கடந்த வாரம் நாட்டின் மத்திய வங்கி கவர்னர் பாட்ரிக் ஹொனோஹன் வெளியிட்ட கருத்துக்களை அடுத்துப் பெருகியது. அரசாங்கம் IMF ஐ நாட இருப்பதாக அவர் குறிப்புக் காட்டினார். உலகச் சந்தைகளிலிருந்து வந்த அழுத்தங்களைச் சமாளிக்கும் விதத்தில் அயர்லாந்து அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தின் மீது தீவிரத் தாக்குதல்களை நடத்தியது. சமீபத்தில் இது 15 பில்லியன் யூரோக்கள் சிக்கன நடவடிக்கை பொதியை நான்கு ஆண்டுகள் விரிவடைந்து இருக்கும் என்று அறிவித்துள்ளது. ஆனால் இவை நிதிய வட்டங்களில் பெரும் செல்வாக்கற்ற Fianna Fail-பசுமைக் கூட்டணி திட்டமிட்ட வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறைகளை அதிகரிக்கும் மக்கள் எதிர்ப்புக்களுக்கு இடையே செயல்படுத்த முடியாமல் போகும் என்ற கவலைகளைக் கொடுத்துள்ளது.

அயர்லாந்தின் பெருகும் நிதியப் பிரச்சினைகளைப் பற்றிக் கருத்துக் கூறும் டப்ளின் பல்கலைக்கழகக் கல்லூரியின் மோர்கன் கெல்லி ஐரிஷ் டைம்ஸில் இந்த வாரம் எழுதினார்: “நெருக்கடியின் அடுத்த செயல் இதே மோசமான கடன்கள், வெளிநாட்டுக் கடன் என்று ஒத்திகை பார்க்கும், ஆனால் இம்முறை பெருஞ்சோகமாக இருக்குமே ஒழிய கேலிக்கூத்தாக இருக்காது.” அயர்லாந்து சர்வதேச நிதியச் சந்தைகளில் எதிர்கொண்ட பிரச்சினைகள் மற்ற பல நாடுகளிலும் எதிரொலித்துள்ளன. செய்தி ஊடகங்கள் பலவும் “ஒரு பரவும் தொற்றுவியாதி” என்று விவரித்துள்ள வகையில், மூன்று முக்கிய நாடுகளான ஸ்பெயின், போர்த்துக்கல் மற்றும் இத்தாலி ஆகியவற்றின் கடன்கள் அனைத்தும் உயர்ந்த அளவிற்கு இந்த வாரம் சென்றுவிட்டன. கிரேக்கத்தின் வட்டிவிகிதம் ஏற்கனவே 2010 மே மாதத்திற்கு முன்பு இருந்த உயர்நிலைக்குச் சென்றுவிட்டது. பெல்ஜியப் பத்திரங்களுக்கான உயர் வட்டிகளும் மிக உயர்ந்த தரத்தை அடைந்துவிட்டன.

கடந்த வாரம் வெளியிடப்பட்ட பொருளாதாரத் தகவல்கள், பொருளாதார நடவடிக்கைகளில் வளர்ச்சிக் குறைவு என்பதையும் காட்டியுள்ளன. 16 யூரோப்பகுதி நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி செப்டம்பர் முடிய மூன்று மாதங்களில் 0.04 சதவிகிதம் மட்டுமே உயர்ந்தது என்று ஐரோப்பிய புள்ளிவிவர அலுவலகமான யூரோஸ்டாட் குறிப்பிட்டுள்ளது. இது இந்த ஆண்டு இரண்டாம் காலாண்டுப் பகுதியில் பதிவான 1.0 சதவித விரிவாக்கத்தை விட உறுதியான குறைப்பு ஆகும். மொத்த யூரோப் பகுதி வளர்ச்சிப் புள்ளிவிவரங்கள் ஜேர்மனியில் பொருளாதார வளர்ச்சியின் சராசரிக்கும் மேலான தன்மையினால் உயர்ந்து காணப்படுகின்றன. பல நாடுகளும் தேக்கநிலை அல்லது பொருளாதாரச் சரிவைக் கூடக் கண்டுள்ளன.

வியாழனன்று, ஸ்பெயினின் புள்ளிவிவர அலுவலகம் பொருளாதாரம் மூன்றாம் காலாண்டில் எவ்வித வளர்ச்சியையும் காட்டவில்லை என்று தகவல் கொடுத்துள்ளது. இந்த ஆண்டு முன்னதாக சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் அறிமுகப்படுத்திய சிக்கன நடவடிக்கைகள் இன்னும் விளைவைக் கொடுக்கவில்லை. இதன் பொருள் பொருளாதாரத்தின் தொடர்ந்த தேக்க நிலை அல்லது பொருளாதார உற்பத்தியில் சரிவு என்று கூட அண்மையில் இருக்கக்கூடும்.

அருகிலுள்ள போர்த்துக்கல் நாட்டிற்கு முக்கியச் சந்தைகளில் ஸ்பெயினும் ஒன்றாகும். எல்லை கடந்த நடக்கும் நெருக்கடி போர்த்துகல்லின் வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறையைக் கடக்கும் வாய்ப்புக்களை மோசமாக்கியுள்ளது. போர்த்துக்கல்லின் பற்றாக்குறை ஐரோப்பிய ஒன்றியத்தில், அயர்லாந்து, கிரேக்கம் மற்றும் ஸ்பெயின் ஆகியவற்றை அடுத்து நான்காம் பெரிய பற்றாக்குறை ஆகும்.

போர்த்துகல்லின் சோசலிஸ்ட் கட்சித் தலைமையிலான அரசாங்கம் சமீபத்தில் மாதம் 1,500 யூரோக்களுக்கு மேல் ஊதியம் பெறும் பொதுத்துறை தொழிலாளர்களின் ஊதியத் தொகுப்பில் 5 சதவிகித வெட்டுக்களைக் கொண்டுவந்துள்ள வரவு-செலவுத் திட்டத்தை இயற்றியுள்ளது. அனைத்துப் புதிய வேலைகளும் முடக்கப்பட்டுள்ளது மற்றும் மதிப்புக்கூட்டு வரியில் 2 சதவிகிதப் புள்ளியை உயர்ததியது அதை 23 சதவிகிதமாக ஆக்கியுள்ளது. இந்த நடவடிக்கைகள் இருந்தாலும், 1978 ஆண்டிலிருந்து நாட்டில் செலவுகள் வெட்டுகளுக்கான பரந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியது. வருகின்ற வருடம் நாட்டின் பொதுக் கடனானது பொது உள்நாட்டு உற்பத்தியின் விகிதத்தில் உண்மையில் அதிகரிக்கும் என்று அது எதிர்பார்ப்பதாக போர்த்துக்கல் நிதி மந்திரி இந்த வாரம் அறிவித்தார்.

கிரேக்கத்தைப் பொறுத்தவரை பிரதம மந்திரி ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூ இந்த வாரத் தொடக்கத்தில் இந்த ஆண்டு தன்னுடைய அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள கடும் சிக்கன நடவடிக்கைகள் இருந்தாலும், அதன் பொதுப் பற்றாக்குறை இலக்குகளை அடைவது கடினம் என்று ஒப்புக் கொண்டார்.

இந்தப் போக்குகள் கண்டத்தை எதிர்கொண்டுள்ள தற்போதைய நெருக்கடியிலுள்ள ஒழுங்குமுறைத் தன்மையைத்தான் உறுதிப்படுத்துகிறது. சமீபத்தில் Royal Bank of Scotland வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று ஐரோப்பா முழுவதும் அயர்லாந்து, கிரேக்கம் மற்றும் போர்த்துக்கல்லின் நிலையையொட்டி ஏற்பட்டுள்ள விளைவுகளின் ஆபத்துக்களை குறிப்பிட்டுள்ளது. “யூரோப் பகுதியில் மூன்று நாடுகள் மூலதனச் சந்தைகளுக்கான வாயப்பை கிட்டத்தட்ட இழந்துவிட்டதால், இப்பகுதியில் இதற்கான உட்குறிப்புக்கள் மொத்தமாக மீண்டும் ஒழுங்குமுறையின் சரிவு எனலாம்.”

தற்போதைய கவனம் யூரோப்பகுதி நிதி மந்திரிகள் அடுத்த வாரம் பிரஸ்ஸல்ஸில் நடக்க இருப்பதின்பால் திரும்பியுள்ளது. அங்கு ஐரோப்பிய நாடுகளின் நிலைமை பற்றி ஆராய்தல் செயற்பட்டியலில் முக்கியமாக இருக்கும். ஐரோப்பிய பொருளாதார நெருக்கடி விரைவாக வளர்ந்திருப்பது, மக்களின் பரந்த பிரிவுகள் 2008 சரிவை அடுத்து வங்கிளுக்கு கொடுக்கப்பட்ட பெரும் பிணை எடுப்பின் செலவுகளின் சுமையை ஏற்க வேண்டும் என்று ஐரோப்பிய அரசியல் உயரடுக்கு வேண்டுமென்றே எடுத்த கொள்கையின் விளைவுதான். நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்களை வங்கிகளின் பாதுகாப்புப் பெட்டிகளில் பொழிந்தவுடன், ஐரோப்பிய அரசாங்கங்கள் இப்பொழுது கண்டம் முழுவதும் கடுமையான சிக்கனக் கொள்கைகளை சுமத்துவதில் ஈடுபட்டு, மில்லியன் கணக்கான மக்களை வேலையின்மை மற்றும் வறுமையில் தள்ளியுள்ளன.

இச்சிக்கன நடவடிக்கைகள் ஐரோப்பாவிற்குள் இருக்கும் பொருளாதாரச் சமச்சீரற்ற நிலையைத் தீவிரப்படுத்தியுள்ளன. மேலும் முழு நாடுகளையும் திவால் தன்மைக்குத் தள்ளும் அச்சறுத்தலையும் கொண்டுள்ளன. இக்கொள்கைகளின் பேரழிவு விளைவுகளையும் மீறி, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் மக்கள் எதிர்ப்பை எதிர்கொண்டு தங்கள் உறுதியைத் தொடர்கின்றனர்.

நவம்பர் 3ம் தேதி பேர்லினில் ஐரோப்பிய ஒன்றிய சபைத் தலைவர் Herman Van Rompuy ஐரோப்பியத் தலைவர்களின் “தைரியத்தை” பாராட்டினார். “கடந்த ஆண்டு நம் அரசாங்கங்களின் அரசியல் தைரியம் பற்றி உண்மையில் நான் அதிகம் வியக்கவில்லை. அனைத்துமே மக்களுக்கு அதிருப்தி தரும் நடவடிக்கைகளை எடுத்துப் பொருளாதரத்தைச் சீர்திருத்தம் செய்யவும், தங்கள் வரவு-செலவுத் திட்டங்களை சீர்செய்யவும் முற்பட்டுள்ளன. அதுவும் மக்களிடையே ஒரு வெகுஜனவாதம் எழுச்சி கண்டுள்ள காலத்தில்.”

“தெருக்களில் ஆர்ப்பாட்டங்களுடன் பணியிடங்களில் வேலைநிறுத்தங்கள் அல்லது இவை அனைத்துமே ஒன்றாக ஏற்பட்டும் சில அரசாங்கத் தலைவர்கள் வெகுஜன எதிர்ப்பை பாராளுமன்றத்தில் எதிர்கொண்டும் இதைச் செய்ய முடிந்தது. தேர்தல் தோல்வி என்னும் பெரும் இடரை எதிர்கொள்கிறோம் என்று முழுமையாக அறிந்திருந்தும், இவை தொடர்ந்து செயல்படுத்தின. இது அரசியல் தைரியம் இல்லை என்றால், வேறு எதுதான் அரசியல் தைரியம்?’ என்று அவர் முடித்தார்.