சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

The protests against nuclear energy and the German Greens

அணுசக்திக்கு எதிரான எதிர்ப்புக்களும் ஜேர்மனிய பசுமை வாதிகளும்

By Peter Schwarz
12 November 2010

Use this version to print | Send feedback

ஜேர்மனிய அரசாங்கத்தின் அணுசக்திக் கொள்கை மற்றும் ஸ்ருட்கார்ட் 21 கட்டமைப்பு திட்டத்திற்கான சமீபத்திய எதிர்ப்புக்கள் பசுமைக் கட்சியால் தன் தேர்தல் ஆதாயங்களை பெருக்குவதற்கு திட்டமிட்டு பயன்படுத்தப்படுகின்றன.

இந்த எதிர்ப்பு இயக்கங்களின் தலைமையாக தங்களை பசுமைவாதிகள் காட்டிக் கொள்ள முற்பட்டுள்ளனர். கோர்லேபனில் அணுசக்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு விடுத்த கூட்டு அறிக்கை ஒன்றில், பசுமைக்கட்சி பாராளுமன்றப் பிரிவும் தேசியத் தலைமையும் பின்வருமாறு அறிவித்தது; “மத்திய அரசாங்கத்தில் இந்தக் கொள்கைக்கு எதிரான பெரும்பான்மையைத்தான் நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம்.” குளோடியா ரோத், செம் ஒஸ்டிமியர், யூர்கன் ரிட்டீன் மற்றும் பிற பசுமைக் கட்சித் தலைவர்கள் கோர்லேபனுக்கு பயணித்து ஆர்ப்பாட்டக்காரர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தியுள்ளனர்.

செய்தி ஊடகத்தில் பரந்த பிரிவுகள் எதிர்ப்புக்களுக்கு மிகவும் சாதகமான முறையில் தகவல் கொடுத்து, பசுமைவாதிகள் கொண்டுள்ள பங்கையும் வலியுறுத்தியுள்ளன. ஒரு அசாதாரண அறிக்கையில், பொலிஸ் தொழிற் சங்கம் பல நாட்கள் நீடித்த தடுப்புக்கள் மற்றும் மோதல்கள் என்று கடந்த வாரம் நடந்த காஸ்ரோர் அணுசக்தி கழிவுப் போக்குவரத்துக்கள் பொதுவாக ஆர்ப்பாட்டக்காரர்களையும் மற்றும் பசுமைவாதிகளையும் எப்பொழுதும் அவர்கள் குறைகூறுவதற்கு மாறாக அரசாங்கம்தான் காரணம் என்று கூறியுள்ளது.

கருத்துக் கணிப்புக்களில் பசுமைக் கட்சியின் தரம் இந்த எதிர்ப்புக்கள் மற்றும் செய்தி ஊடகத் தகவல்களின் விளைவாகப் பெரிதும் உயர்ந்துவிட்டது. நாடு முழுவதும் கட்சி 20 சதவிகித வாக்காளர் ஆதரவு என்ற உயர்ந்த மட்டத்தை கண்டுள்ளது. அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க இருக்கும் 6 மாநிலங்களில் பேர்லின் மற்றும் பாடன் வூர்ட்டெம்பேர்க் என்னும் இரு மாநிலங்களிலும் பசுமைவாதிகள் கணிசமான ஆதரவுடன் வெற்றி பெற்று மாநில அரசாங்கங்களைக கைப்பற்றும் என்று பண்டிதர்கள் கூறுகின்றனர்.

நாட்டின் முதன் முதல் சமூக ஜனநாயக (SPD) மற்றும் பசுமைவாதிகள் கட்சி கூட்டாட்சிக் கூட்டணி (1998-2005) சரிந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் பசுமைவாதிகள் மீண்டும் அரசாங்கம் அமைக்கத் தயாரிக்கப்படுகின்றனர். இதற்குக் காரணத்தைத் தேடி அலைய வேண்டியதில்லை. ஆளும் உயரடுக்கிற்கு அதிகரிக்கும் சமூக எதிர்ப்பின் மீது கட்டுப்பாட்டை தக்க வைத்துக் கொள்ளும் தேவை ஏற்பட்டுள்ளது.

இத்துல்லியமான பங்கைத்தான் பசுமைவாதிகள் 10 ஆண்டுகளுக்கு முன், கோர்லேபனில் அணுசக்திக் கழிவுப் போக்குவரத்துக்களுக்கு ஆண்டுதோறும் நடந்த எதிர்ப்புக்கள் மற்றும் முற்றுகைகைளில் தலையிட்டது. அந்த நேரத்தில் பசுமைவாதிகளின் சுற்றுச்சூழல் மந்திரியாக இருந்த யூர்கன் ரிட்டீன் “அணுசக்தி பற்றி கருத்தொருமை” என்று கூறப்பட்ட பெரும் எரிசக்தி நிறுவனங்களுடனான உடன்பாட்டிற்கு ஒப்புதல் கொடுத்தார்; அது நீண்ட காலத்தில் அணுசக்தியில் இருந்து வெளியேறும் திட்டத்தால் குறுகியகாலத்தில் இருக்கும் எரிசக்தி ஆலைகள் சராசரியாக 32 ஆண்டுகளுக்குத்தான் செயல்படும் என்ற உத்தரவாதம் அளித்தது. அதே நேரத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒரு புதிய அரசாங்கம் இப்பொழுது நடந்துள்ளது போல் “கருத்தொருமையை” தூக்கி எறிந்துவிடும் என்பதை நன்கு அறிந்திருந்தன.

ஒரு தசாப்தத்திற்கு முன் ஒப்புக்கொள்ளப்பட்ட அணுசக்தி பற்றிய ஒருமித்த உணர்வின் ஒரு கூறுபாடு கோர்லேபனுக்கு மீண்டும் பிரச்சினைக்குரிய அணுசக்திக் கழிவுப் பொருட்களை எடுத்துச் செல்லுவதாகும். டிரிட்டீனுக்கு முன்பு சுற்றுச் சூழல் அமைச்சரகத்தில் மந்திரியாக இருந்த, தற்போதைய சான்ஸ்லரான அங்கேலா மேர்க்கெல் (CDU) இந்த எடுத்துச் செல்லுதல்களை 1998ல் காஸ்ரோர் கொள்கலன்களில் பெருவாகனங்களில் கண்டறியப்பட்ட ஆபத்தான கதிரியக்க அளவுகளினால் நிறுத்தி விட்டார்.

எடுத்துச் செல்லுதல்கள் மீண்டும் தொடரப்படுவதை ஆர்ப்பாட்டக்கார்கள் எதிர்த்தபோது, டிரிட்டீன் லோவர் சாக்சனி மாநிலத்தில் எதிர்ப்புக்களுக்கு ஆதரவு கொடுக்கும் நிலையில் இருந்த பசுமைக் கட்சிக்கு காட்டமான சொற்கள் கொண்ட ஒரு கடிதத்தை எழுதினார்; “நாம் நம்பகத் தன்மையுடன் இருக்க வேண்டும் என்றால், நம் அரசியல் விளைவுகளை நாம் ஏற்க வேண்டும். எடுத்துச் செல்லுதலுக்கு தேவையான நிபந்தனைகள் இப்பொழுது நிறைவேற்றப்பட்டுவிட்டன, எனவே பசுமைவாதிகள் இந்த எடுத்துச் செல்லுதல்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை.”

பசுமைவாதிகளின் பணி கூட்டாட்சி அரசாங்கத்தில் அணுசக்தி-எதிர்ப்புக்களை அடக்குவதுடன் நின்றுவிடவில்லை. கணிசமான உட்கட்சி எதிர்ப்பிற்கு முகங்கொடுத்து, தலைமையிடம் ஜேர்மனிய இராணுவம் சர்வதேச செயல்களில் ஈடுபடுவதற்கு பாதையைத் திறந்து, சமூக ஜனநாயக் கட்சியுடன் (SPD) இணைந்து செயற்பட்டியல் 2010 திட்டத்திற்கும் உடன்பட்டது. இது கூட்டாட்சிக் குடியரசின் வரலாற்றிலேயே மிக விரிவான பொதுநலச் செலவுக்குறைப்புக்களுக்கு வழிவகுத்தது.

கோர்லேபனில் சமீபத்திய நிகழ்வுகள் பசுமைவாதிகள் கூட்டாட்சி அரசாங்கத்திற்குள் நுழைவதற்கும் முன் 1990களில் இருந்த நிலைமையைத்தான் வலுவாக நினைவுபடுத்துகின்றன. ஆனால் அப்பொழுதில் இருந்து அரசியல் மற்றும் சமூக நிலைமைகள் பாரியளவில் மாறிவிட்டன. ஐரோப்பா 1930களுக்கு பின்னர் மிகஆழ்ந்த பொருளாதார நெருக்கடியின் நடுவே உள்ளது. கண்டம் முழுவதும் இந்த நெருக்கடிக்கான விலைகளைக் கொடுக்க மக்களின் பரந்த தட்டுக்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

இதை எதிர்கொள்ளும் வகையில், கிரேக்கம், ஸ்பெயின், பிரான்ஸ் ஆகியவற்றில் சக்திவாய்ந்த வேலைநிறுத்தங்களும் எதிர்ப்புக்களும் வெளிப்பட்டுவிட்டன. ஜேர்மனியில் அரசாங்கம் இதுகாறும் ஒப்பிடத்தக்க சமூக இயக்கங்களை நசுக்குவதில் வெற்றி அடைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், பல ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் ஊதிய கட்டுப்பாட்டுக்கான ஆதரவை தொழிற்சங்கங்கள் கொடுப்பதோடு மிகப்பெரிய குறைவூதியத் தொழிலாளர் தொகுப்பை தோற்றுவிப்பதற்கும் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜேர்மனிய அரசாங்கம் சுமத்தும் கடும் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுப்பதும்தான்.

இவ்வாறு இருந்தபோதிலும்கூட, மேர்க்கெல் அரசாங்கம் ஒரு நெருக்கடியில் உள்ளது. இதற்குக் காரணம் மரபார்ந்த முறையில் ஜேர்மனியில் பழைமைவாத மற்றும் தடையற்ற சந்தைச் சார்பு தாராளவாதக் கட்சிகளுக்கு ஆதரவு கொடுத்து வந்த மத்தியதர வர்க்கத்தினர் பிரிந்து போவதுதான். கோர்லேபன் மற்றும் ஸ்ருட்கார்ட்டில் நடக்கும் சமீபத்திய எதிர்ப்புக்களே மத்தியதர வகுப்பின் உடைவின் வெளிப்பாடுகள் ஆகும். சமூகப் பல்விதப் பிரிவுகள் மற்றும் அரசியல் குழப்பம் மேலிட்ட நிலையில், இவை பரந்த முறையில் முக்கிய பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகள் அவற்றின் அரசியல் எடுபிடிகளுடன் கொண்டுள்ள பெரும் அதிருப்தியைப் பிரதிபலிக்கின்றன.

இங்குதான் பசுமைவாதிகள் நுழைகின்றனர். அவர்களுடைய பங்கு ஸ்ருட்கார்ட்டிலும் கோர்லேபனிலும் எதிர்ப்புக்கள் பரந்த சமூக இயக்கமாக வளர்வதைத் தடுப்பதாகும். மேர்க்கெல் மற்றும் வெஸ்டர்வெல்ல தலைமையில் உள்ள அரசாங்கத்திற்கு எதிராக பசுமைவாத தலைவர்களின் முக்கிய புகார் அவர்கள் “அமைதிப்படுத்தப்பட்டுவிட்ட ஜேர்மனிய சமூகத்தில் மோதல்களை வேண்டுமென்றே புதுப்பித்துவிட்டனர்” என்பதாகும்.

எதிர்ப்பாளர்களின் உடனடிக் கோரிக்கைகளை பசுமைவாதிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர்; அதே நேரத்தில் இக்கோரிக்கைகளைப் பரந்த சமூகப் பிரச்சினைகளுடன் பிணைக்கும் முயற்சிகள் எவற்றையும் உறுதியாக நிராகரிக்கின்றனர். இதே பெருவணிக நலன்கள்தான் அணுசக்திச் செல்வாக்குக் குழுக்களின் ஆக்கிரோஷ, திமிர்த்தன நிலைப்பாடு மற்றும் அரசாங்கத்தின் கடும் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆதரவைக் கொடுத்திருந்தாலும், பசுமைவாதிகள் இந்த எதிர்ப்பு இயக்கங்களுக்கு ஒரு முதலாளித்துவ எதிர்ப்பு திசைவழியை காட்டுவதற்கு பிடிவாதமாக மறுக்கின்றனர்.

கூட்டாட்சி அரசாங்கத்திடம் இருந்து பிரிந்ததில் இருந்து, இக்கட்சி இன்னும் நெருக்கமாகத்தான் பெருவணிகத்துடன் பிணைந்துள்ளது. Handelsblatt செய்தித்தாள் 800 உயர்மட்ட வணிக நபர்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பு ஒன்றின்படி, பசுமைவாதிகள்தான் அனைத்துக் கட்சிக்காரர்களையும் விட சிறந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. குறிப்பாக, 5.000 ஊழியர்களுக்கும் மேல் கொண்ட மிகப் பெரிய நிறுவனங்களின் மேலாண்மையாளர்களிடம் இருந்து உயர்ந்த தரமதிப்பைப் பெற்றுள்ளது.

பசுமைவாதிகள் அரசாங்கத்தின் அணுசக்திக் கொள்கை பற்றித் தங்கள் எதிர்ப்பை நியாயப்படுத்தும் விதத்தில் பெருவணிகத் தேவைகளை மேற்கோளிட்டுள்ளனர். பசுமைவாதிகளின் பாராளுமன்றப் பிரிவு மற்றும் மத்திய தலைமை விடுத்துள்ள அறிக்கை ஒன்றின்படி, அணுசக்தி ஆலைகள் நீடித்து இருக்க வேண்டிய காலம் “ஜேர்மனியில் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி வணிகத்தை அழித்துக் கொண்டிருக்கிறது.”

சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய உண்மையான அக்கறைகள், மற்றும் பெருவணிக நிறுவனங்களுடன் அரசாங்கத்தின் உடந்தைக்கு எதிரான சீற்றம் ஆகியவை பல்லாயிரக்கணக்கான மக்களை எதிர்ப்புத் தெரிவிக்க தெருக்களுக்கு கொண்டு வந்து விட்டன. ஆனால் தங்கள் பங்கிற்கு பசுமைவாதிகளும் அவர்களுடைய ஆதரவாளர்களும் இந்த எதிர்ப்புக்களை தற்போதைய கன்சர்வேடிவ்-FDP கூட்டணிக்கு எதிரான ஒரு மாற்றீட்டு அரசாங்கத்தை தயாரிப்பதற்கு இழிந்த முறையில் பயன்படுத்துகின்றன. அதாவது பெருவணிகத்தின் விருப்பங்களையும் தேவைகளையும் இன்னும் இடைஞ்சலின்றியும் நேரடியாகவும் செயல்படுத்தும் என்று கூறும் விதத்தில்.

உலக முதலாளித்துவ நெருக்கடி நிலைமைகளில், சுற்றுச் சூழல் பாதுகாப்புடன், ஜனநாயக உரிமைகள், சமூக நலன்கள் மற்றும் பிற சமூகத்தேவைகள் ஆகியவற்றைப் பாதுகாத்தல் என்பது ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் மூலம்தான் செயல்படுத்தப்பட முடியும். அதுதான் வங்கிகள் மற்றும் பெரு வணிகங்களின் இலாப நலன்களுக்கு அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளையும் அடிபணிய வைத்துள்ள இத்தீய பிரச்சினையின் வேரினை தாக்கும்.