சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

APEC summit ends with drift toward trade war

ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டுறவு ஸ்தாபனத்தின் (APEC) உச்சிமாநடு வணிகப் போருக்கான நகர்வுடன் முடிவு

By James Cogan
15 November 2010

Use this version to print | Send feedback

ஜப்பானில் 24 ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டுறவு ஸ்தாபனத்தின் (APEC) உறுப்பு நாடுகளிடைய கூட்டம் நேற்று யோகோஹமாவில் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே பிராந்திய வணிகம் தொடர்பாக தெளிவான வேறுபாடுகளைக் காட்டிய விதத்தில் முடிந்தது. கடந்த வாரம் G20 உச்சிமாநாடும் வளரும் நாணய சர்ச்சைகளைத் தீர்ப்பதில் தோல்வி அடைந்துள்ள நிலையில், APEC கூட்டம் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் முக்கிய சக்திகளுக்கு இடையே உறவுகளில் முறிவு என்பதை நோக்கிச் செல்கிறது என்பதை இன்னும் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது.

பிரதம மந்திரி நாவோடோ கானின் ஜப்பானிய அரசாங்கத்தின் ஆதரவுடன் ஒபாமா நிர்வாகம் கடந்த வார இறுதியில் APEC ஒரு தடையற்ற ஆசிய பசிபிக் பகுதி (FTAAP) நிறுவப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. அமெரிக்காவை உள்ளடக்கிய, இப்பகுதியில் செயலிலுள்ள பல இருதரப்பு உடன்படிக்கைகளுக்குப் பதிலாக வரும் FTAAP பற்றிய ஒரு முன்னோக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்க ஏற்றுமதிகள் இருமடங்காக ஆக்கப்பட வேண்டும் என்னும் ஒபாமாவின் முன்னோக்குடன் நெருக்கமாகப் பிணைந்துள்ளது. அத்தகைய மாற்றம் அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனங்கள் உலகம் முழுவதும் போட்டியாளர்களின் சந்தைகளைக் கைப்பற்றுவதின் மூலம், குறிப்பாகச் சீனப் பெருநிறுவனங்களிலிருந்து கைப்பற்றுவதின் மூலம்தான் முடியும்.

G20 உச்சிமாநாட்டைப் போலவே, APEC கூட்டத்தையும் சீனாவையும் பிற முக்கிய ஏற்றுமதி நாடுகளையும் அமெரிக்காவுடன் அவை கொண்டுள்ள வணிக உபரிகள் குறித்து ஒபாமா தாக்கினார். சனிக்கிழமை ஒரு வணிக அரங்கத்தில் பேசிய ஒபாமா கூறினார்: “பொருளாதார நெருக்கடி எங்களுக்குக் கற்றுத் தந்துள்ள முக்கிய படிப்பினைகளில் ஒன்று அமெரிக்க நுகர்வோர்களை முக்கியமாக நம்பியிருத்தல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான ஆசிய ஏற்றுமதியாளர்களின் உந்துதல் ஆகியவற்றின் வரம்புகள்தான். முன்னேற வேண்டுமானால் எந்த நாடும் தங்கள் செழிப்பிற்கான பாதை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதின் மூலம் சிறப்பாகும் என்ற முன்கருத்தைக் கொண்டிருக்கக்கூடாது.’

நாடுகளானது அமெரிக்காவுடனான தங்கள் வணிகச் சீரற்ற தன்மையைக் குறைக்க வேண்டும் என்னும் பல முறைகூறப்படும் ஒபாமாவின் கோரிக்கைகளில் அவை நடவடிக்கைள் எடுத்து தங்கள் நாணயங்களின் மதிப்புக்களை உயர்த்தி, தங்கள் சந்தைகளையும் அமெரிக்க நிறுவனங்களுக்குத் திறக்கவில்லை என்றால் வணிகத் தடைகள் வரும் என்ற அச்சுறுத்தல் உட்குறிப்பாக உள்ளது. சீன ஜனாதிபதி ஹு ஜின்டாவோவிடம் அடுத்த ஜனவரி மாதம் இரு நாடுகளின் தலைவர்களுக்கு இடையே திட்டமிடப்பட்டுள்ள பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக, சீனா அதன் நாணயமான யுவானின் மதிப்பை உயர்த்தும் என எதிர்பார்க்கிறது என்று ஒபாமா கூறினார் என அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் தோமஸ் டோனிலன் செய்தியாளர்களிடம் அறிவித்தார்.

ஆசிய பசிபிக் பகுதியில் அமெரிக்கா வணிகத்தை விரிவாக்கும் செயற்பட்டியலைத் தொடர்கையில், ஒபாமா APEC யில் அமெரிக்கா அதிகம் அறியப்பெறாத TPP எனப்படும் பசிபிக் கடந்த பங்காளித்தனம் என்பதில் சேர்ந்துள்ளது என்று அறிவித்தார். இது கடந்த வார இறுதி வரை ப்ரூனே, சிங்கப்பூர், நியூசிலாந்து மற்றும் சிலி ஆகிய நாடுகளைத்தான் கொண்டிருந்தது. TTP 2020 ஆண்டிற்குள் அதன் உறுப்பு நாடுகளுக்கு இடையேயுள்ள காப்புவரிகள் (சுங்கவரி) முழுவதையும் அகற்றிவிட வேண்டும் என்ற தெளிவுபடுத்தப்படாத நோக்கத்தைக் கொண்டுள்ளது. ஆஸ்திரேலியா, மலேசியா, வியட்நாம் மற்றும் பெரு ஆகியவை தாங்களும் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளன. ஜப்பானின் கான் சேருவதில் “அக்கறை” உள்ளதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்க வணிகப் பிரதிநிதி ரோன் கிர்க் Bloomberg இடம் கூறினார்: “TTP உறுப்பினர்கள் இதுவரை ஈடுபட்டிராத அளவில் மிக முன்னேற்றம் தரும் சார்பு, உயர்ந்த வணிக உடன்பாடு ஆகியவற்றை தோற்றுவிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளனர்.” ஒபாமா நிர்வாகம் 2011 முழுவதும் உடன்பாட்டிற்கான விதிகளை இறுதிப்படுத்த “முழு முயற்சி எடுக்கும்”; அமெரிக்கா தலைமைதாங்கி நடத்தவுள்ள அடுத்த ஆண்டு ஹவாயில் நடைபெறவுள்ள APEC கூட்டம் தொடங்குவதற்குள் இது நடக்கும் என்று அவர் கூறினார். 1994 ஆண்டு NAFTA உடன்பாட்டை கனடா மற்றும் மெக்சிகோவுடன் செய்ததற்குப் பின்னர், TPP மிகப் பெரிய வணிக உடன்பாட்டிற்குத் தளமாக இருக்கும் என்று கிர்க் அறிவித்தார்.

APEC பேச்சுக்கள் மற்றும் வெளியிடப்பட்ட அறிக்கையின் பொருளுரை இந்த ஆண்டு ஜனவரி 1ம் திகதி முதல் சீனாவிற்கும் ASEAN உறுப்பு அரசுகளுக்கும் இடையே தடையற்ற வணிக உடன்பாட்டின் தொடக்கம் இருந்தது. சீனாவும் ஆறு ஆசியான் நாடுகளும்—ப்ரூனே, சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியவை—கிட்டத்தட்ட 90 சதவிகிதம் இருந்த காப்புவரிகளைப் பூஜ்யம் என்ற வகையில் குறைத்துள்ளன. வரவிருக்கும் ஆண்டுகளில் எஞ்சியிருக்கும் ஆசியான் நாடுகளான வியட்நாம், கம்போடியா, லாவோஸ் மற்றும் பர்மா ஆகியவையும் இதை ஏற்கும்.

இந்த தடையற்ற வணிக உடன்பாட்டையொட்டி ஓரளவும், சீனாவிற்கும் ஆசியான் உறுப்பு நாடுகளுக்கும் இடையான இருவழி வணிகத் தொடர்புகள் இந்த ஆண்டில் 50 சதவிகிதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. சீனா தைவானுடனும் ஒரு வணிக உடன்பாட்டைத் தொடங்கியுள்ளது. தென் கொரியாவுடனும் ஒரு உடன்பாட்டிற்கு இறுதி வடிவம் கொடுக்கச் செயல்பட்டு வருகிறது. ஆசிய பசிபிக் பிராந்தியம் முழுவதுமே கிட்டத்தட்ட 120 இருதரப்பு மற்றும் பிராந்திய தடையற்ற வணிக உடன்பாடுகள் இப்பொழுது செயலில் உள்ளன. இவற்றுள் பெரும்பாலானவற்றில் அமெரிக்கா இல்லை. உறவுகளில் வலையமைப்புக்கள் வெளிப்பட்டுள்ள விதமானது சீனாவை அவற்றின் மையத்தில் இருத்தி, அது உலகின் மிகப் பெரிய பொருளாதாரப் பகுதி என்று வெளிவரக்கூடிய நிலையைக் கொடுத்து, உலகின் மிகப் பெரிய பொருளாதாரம் என்று 2020க்குள் அமெரிக்காவையும் கடக்கும் நிலைப்பாட்டை அளிக்கும்.

APEC தெளிவாக்கியுள்ள அமெரிக்கச் செயற்பட்டியலானது ஒபாமா மற்றும் வெளியுறவுச் செயலர் ஹில்லாரி கிளின்டன் இருவரும் தீவிர இராஜதந்திர நடவடிக்கையில் ஈடுபட்டு ஆசிய பசிபிக் பகுதியில் அமெரிக்க நலன்களை மீண்டும் நிலைநிறுத்தும் முயற்சிகளைத் தொடர்ந்து வந்தது. இந்தியா, இந்தோனேசியா, தென் கொரியா மற்றும் ஜப்பானுக்கு ஒபாமா பயணித்திருந்தார். கிளின்டனோ வியட்நாம், கம்போடியா, மலேசியா, பாப்புவா நியூ கினியா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவற்றிற்கு பொருளாதார மற்றும் இராணுவ உடன்பாடுகளைச் சீனாவின் பெருகிய செல்வாக்கிற்கு எதிராகக் கொண்டுவரும் நோக்கத்தைக் கொண்டு பயணித்திருந்தார்.

ஹு ஜின்டாவோ APEC அறிக்கையில் கையெழுத்திட்டபோது—அது பிராந்தியம் நிறைந்த தடையற்ற வணிக உடன்பாட்டுக் கருத்தாய்விற்கு பரஸ்பர ஆதரவை அறிவித்திருந்தது—அவர் TPP பேச்சுக்களில் கலந்து கொள்ளும் விருப்பம் தொடர்பாக அடையாளம் எதையும் காட்டவில்லை. இவற்றிலிருந்து அதிக உருப்படியான செயற்பாடுகள் வரும் என்று கருத்தாய்வாளர்கள் எதிர்பார்க்கவில்லை. சமீப ஆண்டுகளில் அமெரிக்கா இருதரப்பு வணிக உடன்பாடுகளை தென் கொரியா, தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுடன் அடைவதில் வெற்றி அடையவில்லை. ஒபாமாவிற்குக் குறிப்பான அடி என்னும் விதத்தில், தென் கொரியாவுடன் பேச்சுக்களைப் புதுப்பிக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் G20 உச்சிமாநாட்டின்போது சரிந்துவிட்டன.

மேலும் ஒபாமா நிர்வாகம் பெருகிய முறையில் தன்னுடைய அதிகப் போட்டித்தன்மையுடைய போட்டியாளர்களுக்கு எதிராகக் காப்புவரி முறைகளை வாதிடுகிறது. இந்த வழிவகையில், அமெரிக்கா பரந்த முறையில் எதிர்ப்பையும் தூண்டுகிறது. G20 உச்சிமாநாட்டின்போது, பல நாடுகள் டாலரின் மதிப்பைக் குறைக்கும் விதத்தில் “நாணயத்தை புழக்கத்தில் விடுதல்” முறை பற்றி கண்டிப்புத் தெரிவித்தன—அதாவது அமெரிக்க கருவூலம் மாபெரும் அளவில் வாங்கப்படுவதற்கான நாணயங்களை அச்சிடும் முறை பற்றி.

சர்வதேச உறவுகளிலுள்ள அழுத்தங்களின் ஆழம் சீனா அதன் நாணயத்தை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்று அமெரிக்கா கோரியதற்கு அதிக ஆதரவைப் பெறாததின் மூலம் வெளியாயிற்று. ஜேர்மனியும் ஜப்பானும் மாறாக சீனாவுடன் சேர்ந்துகொண்டு அமெரிக்க நிதி மந்திரி டிமோதி கீத்நெரின் திட்டமான நாடுகள் தங்கள் நடப்புக் கணக்கு உபரிகள் அல்லது பற்றாக்குறைகளை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவிகிதமுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதை எதிர்த்தன.

சீன முதலாளித்துவ உயரடுக்கின் சார்பில் வெளிப்பட்டு வரும் சீன ஆட்சி, அமெரிக்க நெருக்கடிக்கும் அமெரிக்க முதலாளித்துவத்தின் சரிவுக்கும் அது விலைகொடுக்க வேண்டும் என்னும் முயற்சிக்கு அமைதியான முறையில் விடையிறுக்கவில்லை. அது இருக்கும் வணிக மற்றும் மூலோபாய உறவுகளை வலுப்படுத்தப்பட முயல்கிறது; அவற்றில் அமெரிக்கா ஒதுக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறது. APEC கூட்டம் நடைபெற்றுவந்த போதே, சீனப் போக்குவரத்து மந்திரி ஆசியான் உறுப்பு நாடுகளுடன் ப்ரூனேயில் இன்னும் கூடுதலான வகையில் ஒருவருக்கு ஒருவர் விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் கடல்வழிப் பாதைகள் ஆகியவற்றை திறந்துவிட வேண்டும் என்பவற்றிற்கு இறுதி வடிவம் கொடுத்தார்.

நேற்று சீன நகரமான வுகானில் சீனா, ரஷ்யா மற்றும் இந்தியா ஆகியவற்றிற்கு இடையே பேச்சுக்கள் தொடங்கின. ஒரு ரஷ்ய வெளியுறவு அமைச்சரகச் செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் பேச்சுவார்த்தைகள் “ஒரு புதிய, சிறந்த பாதுகாப்புமுறை, ஒத்துழைப்பு குறித்து ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அமைப்பது பற்றியும் இந்த மூன்று நாடுகளின் பங்கு பற்றிக்” குவிப்புக்காட்டும் என்றார். இது “பன்முக பிராந்திய அமைப்புக்களின் இணையத்திற்குள்” இருக்கும் என்றும் விளக்கினார். புது டெல்லி இன்னும் அதிக பங்கை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்துவதற்கு இணையான வகையில் சீனாவும் குவிப்புக் காட்டி அது இறுதியில் ஒரு தடையற்ற வணிக உடன்பாட்டில் அக்கறை கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

APEC கூட்டத்தின்போது ஜப்பானுடன் கூட சீனா உறவுகளைச் சமாதானப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டது. அத்துடன் பெய்ஜிங் ஒரு கடுமையான நிலப்பகுதி மோதல்களில் கிழக்குச் சீனக்கடல் பகுதியிலுள்ள தீவுகளைப் பற்றிக் கொண்டுள்ளது. ஹு மற்றும் கான் இருவரும் சுருக்கமான பேச்சுக்களை நடத்தினர். அதே போல் இரு நாடுகளின் வணிக மந்திரிகளும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். ஜப்பானிய வணிக மந்திரி Akihiro Ohata கூற்றின்படி சீனா ஜப்பானுக்கு அபூர்வ தாதுப்பொருட்களின் ஏற்றுமதிகளை முடுக்குவதாக உறுதியளித்துள்ளது—இது உயர் தொழில்நுட்பத் துறைகளுக்குத் தேவையான மூலப்பொருட்களில் முக்கியமானது ஆகும். சீனா அதன் அபூர்வ தாதுப் பொருட்கள் ஏற்றுமதிகளை தீவுகள் தொடர்பான மோதலினால் முக்கிய பதிலடி கொடுக்கும் வகையில் குறைத்துவிட்டது என்று ஜப்பான் குற்றம் சாட்டியிருந்தது.

ஆசிய பசிபிக் பகுதியில் ஒரு மூலோபாயப் போரானது சந்தைகளுக்கான பங்கு, இலாபம் மற்றும் புவிசார் அரசியல் மேலாதிக்கத்திற்காக, அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையேயான போராட்டத்தை மையமாகக் கொண்டு வெளிப்பட்டுள்ளது. சர்வதேசப் பேச்சுக்கள் மீண்டும் மீண்டும் உறவுகளைக் கட்டுப்படுத்தும் வடிவமைப்பை புதிதாக நிறுவுவதில் தோல்வி அடைதல், G20 ல் இருந்து APEC வரை என்பது, போட்டியிலுள்ள முதலாளித்துவ குழுக்கள் மற்றும் அவற்றின் நலன்களை அடைய உதவும் அரசாங்கங்களின் நிலைப்பாட்டில் இருந்து ஏற்பட்டுள்ளன. வளர்ச்சி அடைந்திருப்பது விரோதப் போக்குடைய வணிக முகாம்களும் நேரடியான பாதுகாப்புவாத முறைகளும்தான்.