சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Sarkozy reshuffles French cabinet

பிரெஞ்சு மந்திரிசபையை சார்க்கோசி மாற்றி அமைக்கிறார்

By Alex Lantier
16 November 2010

Use this version to print | Send feedback

சனிக்கிழமை தன்னுடைய காபினெட் மந்திரிகளை இராஜிநாமா செய்யுமாறு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி கேட்டுக் கொண்டதை அடுத்து, ஞாயிறு கடைசி நேரத்தில் பிரான்சில் ஒரு புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டது. முந்தைய கன்சர்வேட்டிவ் அரசாங்கத்துடன் ஒப்பிடுகையில்கூட, புதிய மந்திரிசபைக் குழு வலதிற்கு ஒரு நகர்தலைக் குறிக்கிறது. சார்க்கோசியின் சிக்கனக் கொள்கைகளை, இன சமத்துவம் மற்றும் நகர்ப்புற புத்துயிர்ப்பு என்னும் ஒரு போலி இடது முகப்பைக் காட்டி மறைக்க முற்பட்ட நபர்களும் அகற்றப்பட்டுவிட்டனர்.

இந்த மந்திரிசபை மாற்றம் கடந்த மாதம் அவருடைய ஓய்வூதியத் திட்டங்களுக்கு எதிராக பல வாரங்கள் நடைபெற்ற துறைமுக மற்றும் எண்ணெய்த்துறை வேலைநிறுத்தங்களைத் தோற்கடித்தபின், பாராளுமன்றத்தில் அக்டோபர் 27 ந் திகதிச் சட்டம் அவற்றிற்காக இயற்றப்பட்டபின், வந்துள்ள சார்க்கோசியின் முதல் பெரிய அரசியல் நடவடிக்கை ஆகும். வேலைநிறுத்தங்கள் பெரும் மக்கள் ஆதரவைப் பெற்றிருந்தன. கருத்துக் கணிப்புக்களில் 65 முதல் 70 சதவிகித ஆதரவைப் பெற்று மூன்று மில்லியனுக்கும் மேலான அணிவகுப்பாளர்கள் நாடெங்கிலும் பங்கு பெற்றிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் கொண்டிருந்தது. மக்கள் உணர்வை மதியாமல் சட்டம் இயற்றியதில் வெற்றி பெற்றுவிட்டதால், தான் தன் தொழிலாளர்-விரோத நடவடிக்கைகளைத் தொடர்வேன் என்று சார்க்கோசி அடையாளம் காட்டுவதுதான் இந்தப் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளதன் அடையாளம் ஆகும்.

பிரதம மந்திரி பிரான்சுவா பிய்யோனுக்கு பதிலாக முன்னாள் சுற்றுச்சூழல், எரிசக்தி மற்றும் நீடித்த வளர்ச்சித் துறை மந்திரி Jean-Louis Borloo பிரதமராகலாம் என்ற ஊகங்கள் இருந்த போதிலும் கூட, அவர் தன் பதவியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். 2003ல் பொதுத்துறை ஓய்வூதிய வெட்டுக்களுக்கு முக்கிய சிற்பியாக இருந்த பிய்யோன் வணிக வட்டங்களில் சமூகநலச் செலவு வெட்டுக்களுக்கு உறுதியாக வாதிடுபவராகக் கருதப்படுகிறார்.

மெடப் என்னும் பிரெஞ்சு வணிக இயக்கத்தின் தலைவர் லோரென்ஸ் பாரிசோ, பிய்யோனை “பெரும் சிக்கனவாதி” என்று பாராட்டியுள்ளார். மேலும், “சனிக்கிழமை இராஜிநாமா செய்த அரசாங்கம் நம் நாட்டில் அதன் அடிச்சுவட்டை நேரிய வகையில் பதித்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் இருந்து நம்மை மீட்பதற்கு பெரும் சீர்திருத்தங்களைச் செய்துள்ளது” என்றார்.

பெரும் பாதிப்பிற்கு உட்பட்டிருந்த வடக்குப் பகுதி தொழில்துறை நகரான Valenciennes ன் முன்னாள் மேயரான போர்லோ ஒரு சமூக சமரசவாதி என்னும் செய்தி ஊடகத் தோற்றத்தை செதுக்கிக் கொண்டு, தொடர்ந்து பல சிறிய மந்திரிப் பதவிகளை சுற்றுச்சூழல் மற்றும் நகர்ப் புத்துயிர்ப்புடன் 2002ல் இருந்து பல வலதுசாரி அரசாங்கங்களுடன் தொடர்பில் இருந்தார். பிரதம மந்திரி பதவி அவரை கடந்துசென்றபின், தற்போதைய அரசாங்கத்தில் அவர் பங்கு பெறுவதில்லை என்று அவர் முடிவெடுத்தார்.

துறைமுக, எண்ணெய்த்துறைத் தொழிலாளர்களை பகிரங்கமாகக் கண்டிக்க மறுத்ததற்காக போர்லோ ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார் என்பது வெளிப்படை. அந்த வேலைநிறுத்தங்கள் கடந்த மாதம் எரிபொருள் பற்றாக்குறைக்கு வழிவகுத்தன. அது எரிசக்தி மந்திரி என்னும் அவருடைய பொறுப்பின் கீழ் இருந்தது. பெயரிட விரும்பாத ஒரு மந்திரி L’Express இடம் கூறினார்: “அவர் பகிரங்கமாகத் தொடர்பு கொள்ள விரும்பவில்லை. ஏனெனில் இது மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருக்கவில்லை. எரிசக்திப் பிரச்சினைகளில் அவர் எப்பொழுதுமே ஆர்வம் காட்டியது இல்லை.” மற்றொரு மந்திரி Le Express இடம் போர்லோ “சற்று ஒவ்வாத சூழ்நிலை வந்தவுடன் மறைந்து விடுவார்” என்றார்.

Le Nouvel Observateue போர்லோ “சமூகச் சார்பு உடைய வலது மற்றும் மத்தியத்தின் மதிப்பிக்களைப் பிரதிபலிப்பதாக” கூறுகிறார் என்று மேற்கோளிட்டுள்ளது. போர்லோவின் அரசியல் தொடர்பு கொண்ட Marc-Philippe Daubresse, லிபரேஷனிடம் “ஒரு மத்தியக் கூட்டமைப்பை தோற்றுவிக்க” போர்வால் ஒருவேளை முடியும்” என்றார். அத்தகைய குழு, ஒருவேளை முன்னாள் பிரதம மந்திரி டொமினிக் டு வில்ப்பனையும் அடக்கியது, ஒரு வலதுசாரி, வணிக சார்புடைய அரசியல்வாதிகளைக் கொண்டிருக்கும். அது பகிரங்கமாக சார்க்கோசியின் சோவனிச வெறி முறையீடுகள் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுக்கத் தயங்கும்.

முன்னாள் பிரதம மந்திரி அலன் யூப்பே தேசிய அரசியலுக்கு Hervé Morin இடம் இருந்து பாதுகாப்புத் துறையை எடுத்துக் கொண்டு, மீண்டும் வந்துள்ளார். 1995ல் பல வாரங்கள் நீடித்த இரயில் வேலைநிறுத்தத்திற்கு காரணமாக இருந்த முக்கிய ஓய்வூதிய வெட்டுக்களின் சிற்பியான இவர், கன்சர்வேட்டிவ் RPR (Rally for the Republic) கட்சிக்கு 2004ல் நிதி உதவி பெற்ற உயர்மட்ட ஊழலில் குற்றம் இழைத்தவர் என்று கூறப்பட்டவுடன் தேசிய அரசியலில் இருந்து விலகியிருந்தார். ஆனால் அக்டோபர் 2006ல் இருந்து அவர் போர்த்தோவின் மேயராக உள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ஜாக் சிராக்குடன் முக்கிய தொடர்புடையவராகவும் யூப்பே இருந்தார்; அவர் பிரெஞ்சு வலது பிரிவிற்குள் சார்க்கோசியின் முக்கிய போட்டியாளர் ஆவார்.

Pierre Lellouche வெளியுறவுத் துணை மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடைய கொள்கை பிரான்சின் போட்டித்தன்மையை உயரத்துவது என்றார். ஏனெனில் ஏற்றுமதித் துறையில் “ஜேர்மனியுடன் கொண்டுள்ள இடைவெளி” ஒரு “கவலையை” தருகிறது என்றார். இலத்தீன் அமெரிக்காவில் Mercosur வணிக முகாம் மற்றும் பால்கன் பகுதி நாடுகளுடன் நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒரு முன்னாள் காலனிப் பகுதியான வியட்நாமிற்கு பயணம் செய்ய இருப்பது பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால் பெரும்பலான உயர் பதவி மந்திரிகள் மாறாமல் உள்ளனர். Brice Hortefeux உள்துறை அமைச்சரகப் பொறுப்பில் தொடர்ந்து உள்ளார். ஆனால் அவர் கூடுதலாக குடியேற்ற இலாகாவை தேசிய அடையாளம் என்னும் பொறுப்பின் பெயர் குறிப்பிடப்படாமால் திரும்பப்பெற்றுள்ளார். Christine Lagarde பொருளாதார மந்திரியாகத் தொடர்கிறார். Michèle Alliot-Marie நீதித்துறை மந்திரியில் இருந்து வெளியுறவு அமைச்சரகத்திற்குச் செல்கிறார். அங்கு அவர் PS ன் முன்னாள் எதிர்க்கட்சி உறுப்பினரும் Doctors withuout Borders ன் தலைவருமான பேர்னார்ட் குஷ்நெருக்குப் பதிலாக வருகிறார்.

போர்லோ மற்றும் குஷ்நெர் என்று முந்தைய அரசாங்கத்திற்கு ஒரு போலி இடது பளபளப்பைக் கொடுத்தவர்களுக்குப் பதிலாக மற்றவர்கள் வந்துவிட்டனர். இதில் PS ன் மற்றொரு உறுப்பினர், சார்க்கோசியின் அரசாங்கத்தில் சேர்வதற்காக கட்சியை விட்டு விலகியவர், முன்னாள் நகர்ப்பகுதிக் கொள்கைத் துணை அமைச்சர் Fadela Amara வும் அடங்குவார். முன்னாள் இளநிலை விளையாட்டுத் துறை மந்திரி Rama Yade, சார்க்கோசியின் 2007ம் ஆண்டு Dakar உரைக்கு எதிர்ப்புக் காட்டியதற்காகக் குறைகூறப்பட்டவர் அரசாங்கத்தை விட்டு விலகினார். அந்த உரையோ பிரான்சின் காலனித்துவ முறை குறித்து மீண்டும் சரியெனக்காட்டப்பட்ட சார்க்கோசி நடத்திய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.

அரசாங்கத்தின் வலதுசாரி நகர்வு இப்பொழுது இன்னும் தேவை என்றால், அரசாங்கம் மக்கள் உணர்வை மிதித்து தொழிலாள வர்க்கத்தின் மீது இன்னும் கடுமையான தாக்குதல்களைத் தொடரும் என்பதைத்தான் உறுதிப்படுகிறது. சமீபத்திய எண்ணெய்த்துறை வேலைநிறுத்தம், தொழிற்சங்கங்களால் தனிமைப்படுத்தி, காட்டிக் கொடுக்கப்பட்டது, எப்படி சார்க்கோசிக்கு இன்னும் அரசியல் இடத்தை தந்திர கையாளல் உத்திக்குப் பயன்படுத்த வழிவகுத்துள்ளது.

Les Demiere Nouvelles d’Alsace ல் Alain Duhamel சார்க்கோசியின் மந்திரி சபை மாற்றம் பெரும் சமூக மோதலை எதிர்பார்த்துள்ள தன்மையுடன் பிணைந்துள்ளது. அது மே-ஜூன் 1968 பொது வேலைநிறுத்தங்கள் போல் வரலாம் என்று கருதப்படுகிறது. ஆளும் வர்க்கத்தின் சில பிரிவுகள் அரசாங்கம் தப்பிப் பிழைப்பதையே தீவிரமாக அச்சுறுத்தலுக்கு உட்படகூடும் என்று காண்கின்றன.

Duhamel எழுதினார்: “இந்த மார்ச் மாதம் பிராந்தியத் தேர்தல்களில் பெரும் தோல்வியை அடைந்த பின், சார்க்கோசி ஓய்வூதிய வெட்டுக்கள் என்ற ஆபத்தான பிரச்சினையை முதலில் கவனிக்க விரும்பினார். இதற்கு முன்னதாக அவரால் அரசாங்கத்தை மாற்றி அமைக்க முடியவில்லை. ஏனெனில் மோதல் 1968 மற்றும் 1984 (பொதுப் பள்ளி முறை பற்றியது), 1995 (ஓய்வூதியங்கள் பற்றியதுதான்), ஆகியவற்றில் கட்டுக்கடங்காமல் போய்விடும் நிலையில் பிரதம மந்திரியை மாற்றுவதுதான் ஒரே வழி எனக் கருதப்பட்டது. எனவே மாற்றி அமைத்தல் ஓய்வூதிய வெட்டுக்களுக்குப் பின்னர் வந்தது, முன்னதாக அல்ல.”

தொழிற்சங்கங்களும் “இடது” கட்சிகளும் வேலைநிறுத்தங்களை முறிக்கும் திறன் பற்றி மிக நம்பிக்கையுடன் இருந்ததால், அவர் தொழிலாள வர்க்கத்திற்கு எந்தச் சலுகைகளையும் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இல்லை என்பதை சார்க்கோசி உணர்கிறார். மிக மேம்போக்கான சலுகைகளை கூடத் தரவேண்டியதில்லை என்று நினைக்கிறார். முன்பு ஆளும் வர்க்கம் அரசாங்கம் தப்பிப்பிழைப்பதே இடரில் உள்ளது என்று நினைத்தது தொழிலாள வர்க்கத்தின் மீது தொழிற்சங்கங்கள் சுமத்தியுள்ள தோல்வியின் பெரும் தன்மையை அடிக்கோடிட்டுக்காட்டுகிறது.

அரசாங்கத்திற்குள் இருக்கும் முக்கிய விவாதம் இப்பொழுது சார்க்கோசியின் தீவிர வலது தேசியக் கொள்கைகள் பற்றிய எதிர்ப்பைக் கட்டுப்படுத்துவது, 2010 ஜனாதிபதித் தேர்தல்களுக்காக வரவிருக்கும் பிரச்சாரங்களில் எப்படி சார்க்கோசியை நிலைப்படுத்துவது என்பதுதான்.

முன்பு பியோன் சார்க்கோசியின் ஜூலை 30ந் திகதிச் சட்டம் மற்றும் ஒழுங்கு பற்றிய உரையை Grenoble ல் பொலிசார் இருவரைக் கொன்றபின் கொடுத்திருக்க மாட்டார் என்று கூறினார். தன்னுடைய உரையில் சார்க்கோசி ரோமாக்களை இனரீதியான நாடுகடத்தல் செய்தது, மற்றும் குடியுரிமை வழங்கப்பட்டுவிட்டவர்களின் உரிமை பறிக்கப்படுவது ஆகியவற்றிற்கு ஆதரவு கொடுத்திருந்தார். அத்தகைய நடவடிக்கைகள் பிரான்சில் இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் நாஜிக்களுடன் ஒத்துழைத்த பாசிச விஷி ஆட்சிக்குப் பின்னர் பகிரங்கமாக ஒப்புக் கொள்ளப்படவும் இல்லை, ஆதரிக்கப்படவும் இல்லை.

தேசிய அடையாள இலாகா என்னும் பெயர் குறிப்பிடுதல் Hortefeux இனுடைய அமைச்சுப் பொறுப்பிலிருந்து அகற்றப்பட்டது சார்க்கோசியின் ஜனநாயக விரோத பொலிஸ் நடவடிக்கைகள் பற்றி மக்கள் சீற்றத்தைத் திசைதிருப்பும் ஒரு நடவடிக்கையின் பகுதி என்று தான் காணப்படுகிறது. ஆனால் சார்க்கோசி தன்னுடைய தீவிர வலதிற்கு அழைப்புவிடும் பரந்த கொள்கையை மாற்றிக் கொள்வார் என்பதற்கு எந்தக் குறிப்புக்களும் இல்லை. உண்மையில் அரசாங்கம் தொழிலாளர்கள் மீது பெரும் சமூகத் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கையில், அது தொழிலாள வர்க்கத்தைப் பிரித்து இனவெறியைத் தூண்டி அரசியல் சூழலை நச்சுப்படுத்தத்தான் பார்க்கும்.

உயர்கல்வியாளர் Olivier Le Cour-Grandmaison, Le Figaro இடம் கூறினார் : ‘ நவ பாசிச தேசிய முன்னணி கருத்துக்கணிப்புக்களில் முன்னேறியிருப்பது செயற்பாட்டு தோல்வி என்பதைக் காட்டியுள்ளது. நிக்கோலா சார்க்கோசி அதையொட்டி வலது தீவிரத்தில் இருந்து இன்னும் ஆதரவைப் பெறுவதற்கு வேறு நல்ல வழி வேண்டும் என்ற முடிவிற்கு வந்தார்.”

வணிக ஏடான Les Echos அரசாங்கத்தின் கொள்கைகள், “போட்டித்தன்மை மற்றும் பாதுகாப்பில்” குவிப்புக் காட்டும் என்ற முடிவிற்கு வந்துள்ளது—அதாவது சமூகநலச் செலவுக் குறைப்புக்களும் வலதுசாரி தேசியவாதமும். சார்க்கோசி வலதிற்கு ஒரு மாற்றம் என்னும் அடிப்படையில்தான் பிரச்சாரம் செய்வார் என்று அது எழுதியுள்ளது. “வலதுசாரி வாக்காளார்களுக்கு உறுதி கொடுக்கும் வகையிலும், 2012 ஜனாதிபதித் தேர்தல்களில் முதல் சுற்றிலேயே உயர்ந்த நிலையைக் கொடுக்கக் கூடிய வகையிலும் சார்க்கோசி புதிய அரசியல் காலத்திற்குத் தயாரிப்பு நடத்துகிறார்” என்று அது கூறியுள்ளது.