சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

NATO summit to embrace indefinite Afghan war

நேட்டோ உச்சிமாநாடு காலவரையற்ற ஆப்கான் போரை ஏற்றுக்கொள்ள இருக்கிறது

James Cogan
20 November 2010

Use this version to print | Send feedback

போர்த்துகலின் லிஸ்பனில் நேற்று தொடங்கிய நேட்டோ உச்சிமாநாடு ஆப்கானிஸ்தானில் நடக்கும் அமெரிக்க தலைமையிலான போர் விடயத்தில் ஒரே ஒரு பிரதான நோக்கத்தையே கொண்டிருக்கிறது: ஜனாதிபதி பராக் ஒபாமா பேசி வருகின்ற துருப்புகளை திரும்பப் பெறுவதை ஆரம்பிப்பதற்கான 2011 ஜூலை காலக்கெடுவை கிடப்பில் போடுவது.

சமீப காலங்களில் ஆப்கானிஸ்தான் குறித்த தனது அறிக்கைகளில் ஒபாமா நிர்வாகம் “திரும்பப் பெறுவது” என்னும் வார்த்தையை தவிர்த்திருக்கிறது. 2011 ஜூலை என்பது வெறுமனே “உருமருவலின்” தொடக்கம் மட்டுமே என்பதாக ஆகியிருக்கிறது. 2014 இன் இறுதி என்பது இப்போது அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளால் போரின் முக்கியமான தினமாய் கூறப்பட்டு வருகிறது.

அந்த காலத்திற்குள்ளாக, ஜனாதிபதி ஹமீது கர்சாயின் கைப்பாவை ஆப்கான் அரசாங்கத்தின் இராணுவமும் தேசியக் காவற்படையும் தலிபான்கள் மற்றும் பிற ஆக்கிரமிப்பு-எதிர்ப்பு கிளர்ச்சி அமைப்புகளுக்கு எதிரான பிரதான சண்டைகளை பார்த்துக் கொள்ளும் அளவிற்கு போதுமான அளவு பெரியதாகவும் பயிற்சி பெற்றதாகவும் திட்டமிட்ட வகையில் மாற்றப்பட்டிருக்கும். அமெரிக்க சிறப்புத் தூதரான ரிச்சார்ட் ஹோல்புரூக் இந்த வாரம் பாகிஸ்தானில் செய்தியாளர்களிடம் சொன்னார்: ”லிஸ்பனுக்குப் பின் பாதுகாப்பு விடயத்தில் தலைமைக்கான பொறுப்பை ஆப்கானிஸ்தான் எடுத்துக் கொள்வதற்கான இலக்கு தேதியாய் 2014ன் இறுதியைக் கொண்ட ஒரு உருமருவல் மூலோபாயத்தை நாம் பின்பற்றுவோம்.” ஆயினும், அதற்குப் பின்னும் அமெரிக்கப் படைகள் அங்கே இருக்கும். “எங்களுடையது உருமருவல் மூலோபாயமே தவிர வெளியேறும் மூலோபாயம் அல்ல” என்று ஹோல்புரூக் வலியுறுத்தினார்.

நிர்வாகத்தின் அதிகாரிகளிடம் பேசிய பின்னர் நியூயோர்க் டைம்ஸ் நவம்பர் 14 அன்று ஒபாமாவின் முன்னோக்கை சுருக்கமாய் தெரிவித்தது: “2014 இறுதிக்குள்ளாக, நிலைமைகள் ஒத்துழைக்கும் பட்சத்தில் அமெரிக்க மற்றும் நேட்டோவின் போர்ப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பப் பெறப்படலாம். ஆயினும் பத்தாயிரக்கணக்கான துருப்புகள் அதற்குப் பின்னும் பயிற்சி, ஆலோசனை மற்றும் பிற உதவிகளுக்காய் அங்கே தான் இருப்பார்கள், எப்படி 50,000 அமெரிக்க துருப்புகள் இன்னும் ஈராக்கில் இருக்கின்றனவோ அது போல.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஆப்கானிஸ்தானில் காலவரையின்றி அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளை வைத்திருக்க அமெரிக்கா திட்டம் கொண்டிருக்கிறது. 2014க்குள் நேரடிச் சண்டைக்கு அந்நியத் துருப்புகள் அவசியமில்லை என்னும் அளவிற்கு “நிலைமைகள் ஒத்துழைத்தாலும்” கூட (இந்த வாய்ப்பை ஏறக்குறைய எல்லா ஆய்வாளர்களும் நிராகரிக்கின்றனர்) பென்டகன் “பயிற்சி, ஆலோசனை மற்றும் பிற உதவிகளுக்கு” இன்னும் பல காலம் இருப்பது அவசியம் என உறுதிபடக் கூறும்.

குறிப்பாக ஆப்கானிஸ்தானிடம் விமானப் படை இல்லை என்பதால் மேற்சொன்னபடி தான் நடக்கும். மத்திய ஆசியாவின் வெகு இருதயத்தானமான பகுதியில், பக்ராமில் அமெரிக்கா கட்டியிருக்கும் மிகப்பெரும் விமானத் தளத்தில் இருந்து காலவரையின்றி செயல்படுவதற்கே அமெரிக்க இராணுவம் நோக்கம் கொண்டிருக்கிறது.

திரும்பப் பெறும் கால அட்டவணைகளை மறுதலித்திருப்பதென்பது என்பது ஒபாமாவின் வாய்வீச்சு எல்லாம் எப்போதும் ஏமாற்றுவதிலான ஒரு சிடுமூஞ்சித்தனமான நடைமுறை என்பதையே அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. உண்மை என்னவென்றால், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இரண்டு கட்சிகளுமே, மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கு ஆகிய உலகின் இரண்டு முக்கியமான எரிசக்தி-உற்பத்தி செய்யும் பிராந்தியங்களில் நிரந்தரமாக அமெரிக்க இராணுவத்தின் காலடியைக் கொண்டிருப்பதற்கு ஒரே அளவிலான உறுதிப்பாடு கொண்டவை என்பதே.

இலாபகரமான ஆதாரவளங்களை சுரண்டுவதில் அமெரிக்க நிறுவனங்களுக்கு ஒரு பெரும் பங்கு கிட்டச் செய்வதும், சீனா போன்ற மூலோபாய எதிரிகளுக்கு எரிசக்தி விநியோகத்தை இடைஞ்சல் செய்வதற்கு அல்லது முற்றுமுதலாய் நிறுத்துவதற்குக் கூட தயாரான ஒரு நிலையில் அமெரிக்க இராணுவத்தை நிறுத்துவதும் தான் “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்கிற மோசடியான பதாகையின் கீழ் நடத்தப்படும் போர்களின் அடிப்படை நோக்கமாக இருந்து வந்திருக்கிறது.

ஒன்பது பயங்கர ஆண்டுகளாய், வறுமையில் உழன்றாலும் ஆவேசமான சுதந்திர தாகம் கொண்ட ஆப்கான் மக்களின் கணிசமான பகுதிகள் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் கூட்டாளிகளின் திட்டநிரலை எதிர்த்து வந்துள்ளன. பத்தாயிரக்கணக்கில் மக்கள் உயிரிழந்துள்ளனர். விமானத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட அல்லது கிராமங்கள் மற்றும் வீடுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் போது சுட்டு வீழ்த்தப்பட்ட ஆயிரக்கணக்கான பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோரும் இதில் அடக்கம். போரின் அழிவு மற்றும் இடைஞ்சல்கள் இடையே, எண்ணிக்கையில் இல்லாத ஏராளமானோர் ஊட்டச்சத்துக் குறைவால், நோயால் மற்றும் மருத்துவ சிகிச்சியின்மையால் உயிரிழந்துள்ளனர்.

வட மேற்கு பாகிஸ்தானிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இங்கு அமெரிக்காவை ஆதரிக்கும் பாகிஸ்தானிய அரசாங்கம் ஆப்கானிய எதிர்ப்பை ஆதரிக்கும் பழங்குடி மக்களுக்கு எதிரான மிருகத்தனமான பரப்புரைகளை நிகழ்த்தி வருகிறது. அமெரிக்காவின் ஆளில்லாத வேட்டை விமானங்கள் கிளர்ச்சியாளர்கள் இருப்பதான பேரில் மக்கள் வாழும் பகுதிகளில் ஏவுகணைகளைக் கொண்டு சரமாரியாய் தொடர்ந்து தாக்கி வருகின்றன.

ஆப்கானிஸ்தான் மற்றும் வட மேற்கு பாகிஸ்தானின் மக்களுக்கு லிஸ்பன் உச்சி மாநாட்டின் தாக்கங்கள் எண்ணிக்கையற்ற வருடங்களுக்கான சாவு, அழிவு மற்றும் பயங்கரமாய் இருக்கும்.

ஏற்கனவே ஒபாமாவின் துருப்பு அதிகரிப்பின் பாகமாக (அமெரிக்க மற்றும் நேட்டோ துருப்புகளின் எண்ணிக்கை 150,000 ஆக உயர்த்தப்பட்டது) வன்முறை மிகப்பெரும் அளவில் அதிகரித்திருக்கிறது. ஹேல்மண்ட் மற்றும் காந்தகார் மாகாணங்களில் புதிய தாக்குதல்கள் தொடக்கப்பட்டன. இத்தகைய இராணுவ நடவடிக்கைகளின் கோரமான தன்மையை சுட்டிக்காட்டும் அடையாளமாக ஆப்கானிஸ்தானில் போடப்படும் குண்டுகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. அக்டோபர் மாதத்தில் 1,000 குண்டுவீச்சுகள் நடைபெற்றன அக்டோபர் 2009ல் இது 660 ஆக இருந்தது.

தெற்கு ஆப்கானிஸ்தானில் சிப்பாய்களுக்கு அவர்கள் எதிர்கொள்ளும் கிளர்ச்சியை அடக்குவதற்கு உதவுவதற்கு முதல்முறையாக கனரக எம்1 ஆப்ரம் தாங்கிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

அப்பாவிப் பொதுமக்கள் வித்தியாசமற்ற கூட்டுத் தண்டனைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். காந்தகாரின் முன்னாள் தலிபான் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருக்கும் நூற்றுக்கணக்கான வீடுகள், அவை பொறிகளாக ஆக்கப்பட்டிருக்கலாம் என்பதான பேரில் திட்டமிட்டு தரைமட்டமாக்கப்படுவதாக செவ்வாயன்று நியூயோர்க் டைம்ஸில் வெளியானதொரு கட்டுரை தெரிவித்தது. வியட்நாம் போரின் கோரத்தை நினைவூட்டும் வகையிலான ஒரு கூற்றினை, ஏறக்குறைய ஆறு கிராமங்கள் தரைமட்டமாக்கப்பட்டிருக்கும் காந்தகாரின் கோஸ்ரோ மாவட்டத்தின் ஆக்கிரமிப்பு ஆதரவு ஆப்கான் ஆளுநர் டைம்ஸிடம் கூறினார்: “அவற்றின் பாதுகாப்புக்காக நாங்கள் [அக்கிராமங்களை] தரைமட்டமாக்க வேண்டியதானது.”

வியட்நாமை நினைவூட்டும் வகையிலேயே, அமெரிக்க மற்றும் நேட்டோவின் சிறப்புப் படைப் பிரிவுகள் கூட்டமாய் கொல்லும் ஆபரேஷன் பீனிக்ஸ் பாணித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ஒவ்வொரு 24 மணி நேரத்திலும் சிறப்புப் படைகள் “மூன்று முதல் ஐந்து வரையான மத்திய நிலை எதிரித் தலைவர்களையும் 24 எதிரிப் போராளிகளையும் கொல்கின்றன அல்லது சிறைப்பிடிக்கின்றன” என்று ஒரு அமெரிக்க தளபதி இந்த வாரம் கிறிஸ்டியன் சயின்ஸ் மானிட்டர் இதழுக்கு குரூர திருப்தியுடன் கூறினார்.

இத்தகையதொரு விகிதத்தில், அடுத்த 12 மாதங்களில் ஆக்கிரமிப்பு கொலைப் படைகள் 10,000க்கும் அதிகமான ஆப்கான் உயிர்களை இல்லாதொழித்து விடும்.

போரில் பலியானவர்களை “பயங்கரவாதிகள்” என்று அல்லது அமெரிக்கா அல்லது மற்ற எந்த நாட்டிற்குமான ஒரு அச்சுறுத்தல் என்று கூறுவது ஒரு அருவெருக்கத்தக்க பொய்யாகும். ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானிலும் சுமார் 50 அல்லது 100 பேர் தான் அல்கெய்தா தொடர்புடன் இருப்பார்கள் என்று சிஐஏ அமைப்பே ஒத்துக் கொண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுகிறார்கள், சிறைக்கு இழுக்கப்படுகிறார்கள் அல்லது அவர்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்படுகின்றன என்றால் அதன் காரணம் அவர்கள் அந்நிய மேலாதிக்கத்தை அல்லது ஒரு அமெரிக்க கைப்பாவை அரசாங்கத்தை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை என்பது தான்.

மக்களிடையே அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்புக்கு இருக்கும் முறையான எதிர்ப்பை குருதியில் மூழ்கடிப்பதற்கான ஒரு திட்டமிட்ட மற்றும் கொலைவெறியுடனான முயற்சியே ஆப்கானிஸ்தானில் நடந்து கொண்டிருப்பது. தங்களது நவ காலனித்துவ திட்டத்தை மேற்கொள்கையில், ஆக்கிரமிக்கும் நாடுகளின் ஆளும் வர்க்கங்கள் அமெரிக்க மற்றும் நேட்டோ துருப்புகள் கொல்லப்படுவது, காயமுறுவது மற்றும் உளவியல்ரீதியாய் சிதைக்கப்படுவது குறித்தும் அலட்டிக் கொள்வதில்லை. ஏற்கனவே இந்த வருடத்தின் இழப்பு 654 என நிற்கிறது. காயமுற்றவர்கள் எண்ணிக்கை 3,000 ஐ தாண்டி விட்டது. 2001 ஆக்கிரமிப்புக்கு பிந்தைய ஒட்டுமொத்த அமெரிக்க மற்றும் நேட்டோ உயிரிழப்பு எண்ணிக்கை ஏற்கனவே 2200 ஐ கடந்து விட்டது.

லிஸ்பன் உச்சி மாநாட்டை ஒட்டி பல்வேறு நேட்டோ மற்றும் நேட்டோ-சாராத அமெரிக்க கூட்டாளிகள் போரில் தொடர்ந்து பங்கேற்பதற்கு உறுதியளிக்க முன்வந்திருக்கின்றன. ஆப்கானிஸ்தானும் “பயங்கரவாதத்தின் மீதான போரும்” அந்நாடுகளுக்கு தொடர்ந்து ஒரு திரையை அளித்துக் கொண்டிருக்கிறன. அதன்பின் நின்று கொண்டு அவர்கள் உள்நாட்டில் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை நியாயப்படுத்தலாம், தங்களது இராணுவப் படைகளின் விரிவாக்கத்தை முன்னெடுக்கலாம், அத்துடன் தங்களது சொந்த காலனித்துவ நோக்கங்களுக்கு ஆதரவளிக்க அமெரிக்க ஆதரவை வற்புறுத்தலாம்.

ஜேர்மனி தனது படைகளை 2012 வரை கொண்டிருக்க இருக்கிறது என்பதோடு சண்டைகளிலான ஈடுபடுத்தங்களையும் அதிகரித்துக் கொண்டுள்ளது. 2011 இறுதிக்குள்ளாக தனது படைகளை திரும்பப்பெறவிருந்த கனடா 2014 ஆம் ஆண்டு வரை தனது 1,000 வரையான “பயிற்சியாளர்”களை விட்டுச் செல்லவிருப்பதாக அறிவித்துள்ளது. ”ஆப்கான் அதிகாரிகள் தங்கள் கைகளில் நிலைமையைக் கொண்டிருக்கும் வரை” பிரெஞ்சு படைகள் அங்கிருந்து கிளம்பாது என்று பிரான்சின் பாதுகாப்பு அமைச்சரான அலன் ஜுப்பே புதனன்று தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய படைகள் “குறைந்தபட்சம் தசாப்தத்தின் இறுதி வரையேனும்” ஆப்கானிஸ்தானில் பங்குபெற்றிருக்கும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கிலார்ட் சென்ற மாதத்தில் நடந்த ஒரு நாடாளுமன்ற விவாதத்தில் தெரிவித்தார்.

பிரிட்டிஷ் இராணுவப் படைகளின் தலைவரான ஜெனரல் சர் டேவிட் ரிச்சார்ட்ஸ் இன்னும் நெடுங்கால ஈடுபடுத்தத்தை கணித்தார். அநேகமான பிரிட்டிஷ் போர் துருப்புகள் 2012 மற்றும் 2014க்கு இடையில் வெளியேறலாம் என்கிற அதே சமயத்தில் “அதனை விடவும் இன்னும் வெகு நீண்ட காலத்திற்கு நாங்கள் அங்கே இருக்க வேண்டியிருக்கும் என்பதில் எல்லோருமே தெளிவாக இருக்கிறோம்” என்று இந்த வாரத்தில் அவர் அறிவித்தார்.

அமெரிக்க/நேட்டோ ஆக்கிரமிப்பு “30 முதல் 40” ஆண்டுகளுக்கு நீடிக்கக் கூடுமா என்கிற ஒரு செய்தியாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில், “அப்படித் தான் நான் நினைக்கிறேன்” என்றார்.

ஆப்கான் மக்களை அடிமைப்படுத்தும் நவகாலனித்துவ உத்வேகத்தில் தொழிலாள வர்க்கத்திற்கு எந்த ஆர்வமும் இல்லை. வட அமெரிக்கா, ஐரோப்பா அல்லது பசிபிக் என லிஸ்பன் மாநாட்டில் பிரதிநிதித்துவம் செய்த ஒவ்வொரு நாட்டின் அரசாங்கங்களும் யாருடைய நலன்களின் பேரில் போர் நிகழ்த்தப்படுகிறதோ அதே முதலாளித்துவ சிலவரின் சார்பான சமூக அழிவுக்கே தலைமை வகிக்கின்றன. அதே சமயத்தில், ஜனநாயக உரிமைகளை அகற்றுவதற்கும் போலிஸ் அரசுகளுக்கான கட்டமைப்பை தயாரிப்பு செய்வதற்கும் “பயங்கரவாத அச்சுறுத்தல்கள்” காரணங்களை அவை பயன்படுத்திக் கொள்கின்றன.

வலிந்து செய்யும் குற்றவியல் போர்களுக்கு இனியும் ஒரு சென்ட் பணம் கூட வீணடிக்கப்படக் கூடாது. லிஸ்பனில் வரையப்படுகிற ஏகாதிபத்திய வரைபடத்திற்கான தனது பதிலிறுப்பில் தொழிலாள வர்க்கம், அனைத்து அமெரிக்க மற்றும் பிற அந்நிய துருப்புகள் ஆப்கானிஸ்தானில் இருந்து நிபந்தனையின்றி உடனடியாகத் திரும்பப் பெறப்படுவதற்கும் ஒட்டுமொத்த அமெரிக்க மற்றும் நேட்டோ போர் எந்திரமும் கலைக்கப்படுவதற்கும் அரசியல் போராட்டத்தைக் கையிலெடுக்க வேண்டும்.