சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French President Sarkozy outlines right-wing agenda in TV interview

பிரெஞ்சு ஜனாதிபதி சார்க்கோசி, தொலைக்காட்சிப் பேட்டியில் வலதுசாரி செயற்பட்டியலை கோடிட்டுக் காட்டுகிறார்

By Pierre Mabut
20 November 2010

Use this version to print | Send feedback

தன்னுடைய பிற்போக்குத்தன, வெகுஜன வேலைநிறுத்தங்கள், எதிர்ப்புக்களுக்கு இடையே சுமத்தப்பட்ட, ஓய்வூதியச் சீர்திருத்தம் சட்டமாக்கப்பட்டு ஒரு வாரத்திற்குப் பின்னர், ஜனாதிபதி சார்க்கோசி தொலைக்காட்சியில் அவருடைய எஞ்சியிருக்கும் வரைகாலத்திற்குத் தன் திட்டத்தை எடுத்துரைத்தார். அடுத்த ஜனாதிபதித் தேர்தல் 2012 ல் நடக்கவுள்ளது.

சார்க்கோசி செவ்வாயன்று கொடுத்த பேட்டியில், தொழிலாள வர்க்கத்தை தோல்வியடையச் செய்தபின், தான் மிகக் கடுமையான தாக்குதல்களை –சமூகநலத் திட்டங்களில் செயல்படுத்த விரும்புவதாகவும் அதே நேரத்தில் செல்வந்தர்களுக்கு வரிச் சலுகைகளை அளிக்க இருப்பதாகவும், ஏகாதிபத்தியப் போர்களில் பிரான்ஸ் பங்கு பெறுவதைத் தொடர இருப்பதாகவும் கூறினார்.

ஹாரிஸ் கருத்துக் கணிப்பு ஒன்று பேட்டியைப் பார்த்தவர்களில் 64 சதவீதத்தினர் சார்க்கோசியின் கருத்துக்கள் “நம்பிக்கை ஊட்டவில்லை” எனக் கருதியதாகத் தெரிவிக்கிறது.

வாக்காளர்களிடையே தான் கொண்டுள்ள செல்வாக்கற்ற தன்மை பற்றிய வினாக்களுக்கு விடையிறுக்கையில், சார்க்கோசி தான் பிறர் கூறுவதைக் கேட்கக் கடமைப்பட்டுள்ளதாகவும், ஆனால் அதனால் தன் போக்கை மாற்றிக் கொள்ளத்தயாரில்லை என்றும் கூறினார். “பெரிய பிரச்சினைகளில் நான் செல்வாக்கிற்கு அதிகம் கட்டுப்படுவதில்லை. ஏனெனில் பிரான்ஸ் செய்ய வேண்டிய சிலவற்றைப் பற்றி எனக்கு நம்பிக்கை உள்ளது” என்று விளக்கினார்.

ஓய்வூதிய வெட்டுக்கள் இயற்றப்படுவதை அனுமதித்த தொழிற்சங்கங்களுக்கு அவர் மரியாதையை தெரிவித்தார்: “தொழிற்சங்கங்களுக்கு பாராட்டுக்கள் அளிக்கப்பட வேண்டும். வன்முறை இல்லாமல் கணிசமான சீர்திருத்தங்களைச் செய்துவிட்டோம்” என்று கூறினார். சமூக உறவுகள் “எப்பொழுதுமே எளிமையாக இல்லாத ஒரு நாட்டில்” இது குறிப்பிடத்தக்கது ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வன்முறை இல்லை என்னும் அவருடைய கூற்று தவறாகும். துறைமுகங்களிலும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களிலும் நடைபெற்ற வேலைநிறுத்தங்கள், மறியல்கள் ஆகியவற்றை உடைப்பதற்கு பொலிசார் பலமுறையும் வன்முறையைத்தான் பயன்படுத்தினர். நாடெங்கிலும் நடந்த மாணவர்கள் எதிர்ப்புக்களிலும் அவர்கள் ஊடுருவியதுடன் அவர்களைத் தாக்கவும் செய்தனர்.

ஆனால் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக வெகுஜன எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டுப்படுத்தி, காட்டிக் கொடுத்ததற்கு அவர் தொழிற்சங்கங்களுக்கு உரிய பெருமை கொடுத்திருப்பது என்பது சரியானதுதான். தொழிற்சங்கத் தலைமையில் ஒத்துழைப்பு இல்லாவிடின், சார்க்கோசி இத்தகைய முன்னோடி இல்லாத வெட்டுக்களைச் சுமத்தியிருக்க முடியாது.

அவருடைய முக்கிய அறிவிப்புக்களில் ஒன்று செல்வந்தர்களுக்கு வரிகளைக் குறைப்பது என்று முன்வைக்கப்படும் திட்டம் ஆகும். ISF (செல்வக் கொழிப்பின் மீதான வரி) அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாக வருமானங்கள் மீது வரிவிதிக்கப்படும், மற்றும் சொத்துக்களில் இருந்து பெறப்படும் கூடுதல் மதிப்புக்கள் மீது வரி விதிக்கப்படும். இது செல்வந்தர்களுக்கு ஆண்டு ஒன்றிற்கு 4.1 பில்லியன் ஈரோக்களைச் சேமிக்கும். இதற்கு ஈடுகட்டும் வகையில் “நிதியக் கேடயம்” என்று அழைக்கப்படுவதின் கீழ் இருக்கும் வரிச் சலுகைகளைக் குறைப்பதாக சார்க்கோசி கூறியுள்ளார். ஆனால் இவையோ ஆண்டு ஒன்றிற்கு மொத்தமாக 679 மில்லியன் ஈரோக்கள் தான் இருக்கும்.

தான் பிரெஞ்சு வரிவிகிதங்களை ஜேர்மனி வகையில் 2011 இலையுதிர்காலத்திற்குள் மாற்றும் திட்டத்தைக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார். “நம்முடைய முக்கிய பங்காளி நாடான ஜேர்மனியுடன் போட்டித்தன்மையில் நான் பற்றாக்குளைகளை ஏற்க விரும்பவில்லை” என்று அவர் அறிவித்தார்.

தொழிலாளர்களின் சமூக உரிமைகள் மீது மிகக் கடுமையான தாக்குதல்களுக்கான திட்டங்களையும் அவர் அறிவித்தார். வேலையின்மையில் வாடுபவர்களுக்குக் கொடுக்கப்படும் நலன்களில் வெட்டுக்களும் இதில் அடங்கும். அவர் இதை இழிந்த முறையில் வேலைவாய்ப்புக்களுக்கு ஏற்றம் கொடுக்கும் நடவடிக்கைகள் என்று கூறுகிறார். “வேலையின்மைக்கு எதிரான முயற்சிகள் அனைத்தையும் நாம் முயன்றுவிடவில்லை” என்று கூறிய அவர் தொழிற்சங்கங்களுடன் “ஒரு புதிய வேலையின்மை நலன் முறைக்கான” பேச்சுவார்த்தைகள் பற்றியும் அறிவித்துள்ளார்.

இதற்கு நீண்ட கால வேலையின்மைக் காப்பீடு அகற்றப்படுதலும் அடங்கும் என்று ஆலோசனை கூறிய வகையில் அவர் அறிவித்தார்: “ஏராளமான பணிநீக்கங்கள் இருக்கும்போது, அது தொழிலாளர்களுடைய தவறு அல்ல! அவர்களுக்கு நாம் ஒரு வருட ஊதியத்திற்கு உத்தரவாதம் கொடுப்போம், அதன் பின் அவர்கள் ஒரு வேலையை ஒப்புக் கொள்ள வேண்டும்.”

இளைஞர்கள் வேலையின்மை பற்றிய சார்க்கோசியின் திட்டமிடப்பட்டுள்ள நடவடிக்கைகளும் இதேபோன்ற இழிந்த தன்மையைத்தான் கொண்டுள்ளன. ஓய்வூதியம் பெறும் அரசாங்க ஊழியர்களின் பதவிகளில் பாதி மட்டுமே நிரப்பப்படும் என்னும் அவருடைய பொதுத் துறை ஊதியங்களைக் குறைக்கும் நடவடிக்கை மூலம் அவர் பெருகும் தொழிலாளர் தொகுப்பு தொடர்ந்து தற்காலிக அல்லது குறைவூதிய வேலைகளில் ஈடுபடும் கட்டாயத்திற்குத்தான் உதவுகிறார். இத்தகைய நடவடிக்கைகள் வேலைச் சந்தையில் நுழையும் இளந்தொழிலாளர்களை குறிப்பாகப் பாதிக்கும்.

18 முதல் 24 வயது வரை இருப்பவர்களில் வேலையின்மை விகிதம் 23 ஆக உள்ளது. இளைஞர் வேலையின்மையைக் குறைப்பதற்கு முதலாளிகள் ஆதரவு தரும் பயிற்சித் திட்டங்களில் ஒரு மில்லியன் இளைஞர்கள் கட்டாயப்படுத்தப்படுவதின் மூலம் கொண்டுவரும் திட்டங்களை தான் கொண்டிருப்பதாக அவர் கூறினார். ஆனால், சார்க்கோசியின் கூற்றுப்படியே அத்தகைய இளைஞர்கள் ஒரு வேலைகிடைக்கும் வாய்ப்பை 70 சதவிகிதம்தான் கொண்டுள்ளனர்.

முதியோர் பாதுகாப்பு பற்றிப் பேசுகையில், அவர் அடுத்த கோடைகாலத்தில், வசந்த கால விவாதங்களை தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிகள் குழுக்களுடன் கொண்ட பின்னர் முடிவுகள் எடுக்கப்படும் என்று அவர் கூறினார். இறுதித் தொகுப்பு மக்களைத் தனியார் காப்பீடு அல்லது பாதுகாப்புச் செலவுகளை சமாளிக்க தொழிலாளர்களின் ஊதியங்களில் வரி என்ற இரு விருப்பங்களில் ஒன்று வரும் என்றார்.

பிரெஞ்சு சோவினிச தேசப்பற்றை வளர்ப்பதில் இருந்து தான் பின்வாங்கப்போவதில்லை என்றும் சார்க்கோசி அடையாளம் காட்டினார். குடியேறுபவர்களுக்கு எதிராக, குறிப்பாக ரோமாக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே அவருடைய நடவடிக்கைகள் பிரான்ஸில் நாஜி ஆக்கிரமிப்புக் காலத்தில் விஷி ஆட்சி செயல்படுத்திய கொள்கைகளுடன் ஒப்புமையைத் தூண்டியுள்ளன. தேசிய அடையாளம் பற்றிய போராட்டங்களை ஒட்டிய குறைகூறல்களையும் ரோமாக்களை இழிந்த முறையில் தேடி விரட்டுவது பற்றிய குறைகூறல்களையும் உதறித்தள்ளும் வகையில், “இவை தவறாகப் புரிந்து கொள்வதன் விளைவு” என்றார்.

குடியேறுபவர்களை துரத்தியடிக்கும் கொள்கையில் பின்வாங்கல் ஏதும் இராது. “அடிப்படைப் பிரச்சினைகளில் நான் எதையும் கைவிடத் தயாராக இல்லை” என்று அவர் அறிவித்தார். “குடியறுபவர்கள் ஏராளமாக வருவதை நாம் கட்டுப்படுத்த முடியாவிட்டால், நம்முடைய ஒருங்கிணைப்பு முறையின் சரிவை அனுமதித்துவிடுவது போல் ஆகும்” என்று அவர் தொடர்ந்து கூறினார்.

வெளிநாடுகளுக்கு பிரெஞ்சுத் துருப்புக்கள் அனுப்பப்படுவது பற்றிய அவர் உறுதிப்பாட்டை சார்க்கோசி வலியுறுத்தினார். இதில் மிகக் கடுமையாக எதிர்க்கப்படும் ஆப்கானியப் போரும் அடங்கும். “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்பதைக் கூறி உலகின் ஜனநாயக அரசுகள் அனைத்தும் அச்சறுத்தலுக்கு உட்படுகின்றன, பிரான்சின் நிலைமை “கவலை அளிக்கிறது” என்றும் அவர் கூறினார்.

“சிறிதளவு கூட நம் [வெளிநாட்டு] கொள்கையை நாம் மாற்றமாட்டோம். ஏனெனில் நாம் அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கிறோம்” என்றார் அவர். பிரெஞ்சுக் குடிமக்கள் பிணைக்கைதிகளாக மாலி, சோமாலியா, கினி வளைகுடா மற்றும் ஆப்கானிஸ்தானில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் பல நாடுகளைப் பட்டியலிட்டுக் காட்டினார்.

அமெரிக்க தொடர்புடைய பர்மிய எதிர்ப்பாளர் ஆங் சன்சூ க்யி விடுதலை செய்யப்பட்டது பற்றி சார்க்கோசி தான் சீனாவுடன் மிக நெருக்கமாக ஒத்துழைத்து வருவதாகக் கூறினார். ஆங் நல்ல முறையில் நடத்தப்படவில்லை என்றால் பர்மாவில் இருந்து பிரெஞ்சு நிறுவனங்கள் திரும்பப் பெறப்படும் என்றும் அவர் அச்சுறுத்தினார்.

பர்மாவில் ஆட்சி மாற்றத் திறனுக்கு சார்க்கோசி தயார் செய்துவருவது போல் உள்ளது. பிரெஞ்சு நிறுவனங்களோ பர்மிய இராணுவக் குழு ஆட்சியின் கீழ் பல ஆண்டுகளாக முதலீடு செய்துள்ளன.

G20 ல் பிரான்ஸ் பெறவிருக்கும் தலைமையைக் குறிப்பிட்ட சார்க்கோசி, நாணயங்கள் பற்றிய பிரச்சினையில் அடுத்த வசந்த காலத்தில் விவாதங்கள் நடத்துவதற்கு சீனாவின் ஆதரவு தனக்கு இருக்கிறது. “இந்தப் பெரும் குழப்பத்தில் நாம் இனியும் நீடிக்கக் கூடாது” ஒரு புதிய சர்வதேச நாணய முறை தேவை என்று வலியுறுத்திய அவர் அதைப்பற்றித் தெளிவான கருத்துக்களைக் கூறவில்லை.