சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : அயர்லாந்து

Social crisis grips Ireland

அயர்லாந்தை சமூக நெருக்கடி இறுக்கிப்பிடிக்கின்றது

By Steve James
19 November 2010

Use this version to print | Send feedback

அயர்லாந்தில் அதிகரித்துக்கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடி தொழிலாளர்களின் பரந்த அடுக்குகளின் மீது குறிப்பாக அதிக பாதிப்பிற்கு உட்படக்கூடிய குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நிலையற்ற வீடுகளில் வசிக்கும் குறைவூதியம் பெறுவோர் மீது கடுமையான தாக்கத்தைக் கொண்டுள்ளது.

நூறாயிரக்கணக்கான மக்கள் அடிப்படை வசதிகளற்ற நிலை மற்றும் இடர்களை சமூக வாழ்வின் ஒவ்வொரு கூறுபாட்டிலும் எதிர்கொண்டு மிருகத்தனமான சமூகநலச் செலவுக் குறைப்புக்கள் மற்றும் பெருகிய வேலையின்மையைனால் ஏற்பட்டுள்ள அழுத்தங்களுக்கு உட்பட்டுள்ளனர். இது அயர்லாந்தின் உயரடுக்கு, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவை வங்கிமுறைக்கு மீண்டும் பாரியளவு தொகை பொதுப்பணத்தை உதவிக்கு கொடுக்கும் நடவடிக்கைகளுக்கு முன்னரே ஏற்பட்டுள்ள நிலைமை ஆகும்.

டப்ளின் நகர மரணவிசாரண நீதிமன்றம் கடந்த வாரம், தன் டப்ளின் வீட்டில் அதிகாலையில் நெருப்புப் பற்றிக் கொண்டாதால் ஏற்பட்ட விபத்தில் இறந்துவிட்ட 81 வயது ஆன் குமின்ஸ்கியின் வழக்கை விசாரித்தது. திருமதி குமிஸ்கி தன்னுடைய மருமகன் பட்ரிக் கோர்மனுடன் வசித்துவந்தார்; கோர்மனால் மின்கட்டங்களை செலுத்த வசதி இல்லாததால் வீட்டில் இருந்த அனைத்து மின்பொறிகளையும் அகற்றிவிட்டார். திருமதி குமிஸ்கி வசிக்குமிடம், படுக்கையறைகளில் மெழுகுவர்த்தியைத்தான் பயன்படுத்தினார் எனத் தோன்றுகிறது. இதில் ஒன்று அவருடைய படுக்கையறையில் தீயை மூட்டிவிட்டது. புகையினால் பேரிடருக்கு அவர் உட்பட்டார். குடும்பத்தில் இருந்த மற்ற உறுப்பினர்களும் தீக்காயங்கள், எலும்பு உடைவு போன்றவற்றால் அவதியுற்றனர். சமீபத்தில்தான் திரு.கோர்மன் தன் வேலையை இழந்துவிட்டார்.

இப்பெரும் சோகம் அயர்லாந்துக் குடியரசின் வேலையற்றோர் எண்ணிக்கைக்குப் பின்னால் உள்ள அடையாளம் காணமுடியாத எண்ணற்ற பல தனிப்பட்ட நெருக்கடிகளை சுட்டிக் காட்டுகிறது. தற்பொழுது வேலையின்மை விகிதம் 2005இன் 4.3%, மற்றும் 2007 இன் 7.6% ஆகியவற்றில் இருந்து 13.6% ஆக அதிகரித்துள்ளது. அக்டோபர் மாதம் இந்த எண்ணிக்கை சற்றே 13.8% இல் இருந்து குறைந்தாலும், இது நாட்டை விட்டு வெளியேறியவர்கள் அதிகமானதால் வந்த எண்ணிக்கை ஆகும்.

1,250 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒவ்வொரு மாதமும் நாட்டை விட்டு நீங்குவதாக தகவல்கள் வந்துள்ளன. ஆயிரக்கணக்கான, பெரும்பாலும் இளந்தொழிலாளர்கள் இப்பொழுது மீண்டும் பிழைப்பிற்காக வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது. சமீபத்திய செய்தி ஊடகத் தகவல்களில், தென்கொரியா வரை வேலைநாடிச் சென்றுள்ள தொழிலாளர்களுடன் பேட்டியும் அடங்கியுள்ளது; இது மரபார்ந்த முறையில் செல்லும் இடங்களான அமெரிக்கா, கனடா ஆகியவற்றுடன் சேருகிறது.

பருவந்தோறும் திருத்தம்செய்யப்படும் பருவகால மற்றும் பகுதித் தொழிலாளர்கள் பற்றிய தகவல்களை உள்ளடக்கிய Live Register, இப்பொழுது 443,000 என்னும் எண்ணிக்கையை காட்டுகிறது. இதில் 24 சதவிகிதத்தினர் டப்ளினில் வாழ்கின்றனர். வேலை நாடுபவர்களின் அதிகமானவர்கள் உள்ள பிரிவு கைவினைத் தொழிலாளர்கள் ஆவர். இதில் கட்டிடத் தொழில், ஆலைகளில் வேலை செய்பவர்கள் ஆகியோர் அடங்குவர். கிட்டத்தட்ட 74,635 பேர் அயர்லாந்து நாட்டினர் அல்லர்; இதில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வந்துள்ள 40,685 பேரும் அடங்குவர். 2004 முதல் 2008 வரையிலான கட்டிடத்துறை உயர் ஏற்றக்காலத்தில், ஆயிரக்கணக்கான கிழக்கு ஐரோப்பிய தொழிலாளர்கள் அயர்லாந்திற்கு வேலை நாடி வந்திருந்தனர். அவர்களில் பலர் இப்பொழுது திகைத்து நிற்கின்றனர். Live Register இல் உள்ள பலரும் இளந்தொழிலாளர்கள் ஆவர். அதில் 25 வயதிற்கு உட்பட்டவர்கள் 82,992 ஆகும்.

2009/2010 வரவுசெலவுத்திட்ட குறைப்புக்கள் வறியவர்களைப் பாதிக்காது என்று அரசாங்கம் கூறினாலும், உண்மையில் அரசாங்கத்தின் நிதி உதவியை முற்றிலும் நம்பியிருக்கும் ஒரு குடும்பம் 2010ஆம் ஆண்டு வார வருமானத்தில் €31 வெட்டைப் பெற்றது என குழந்தைகளின் அறக்கட்டளையான Barnardo’s இன் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கம் குழந்தைகள் நலன்களில் திட்டமிடப்பட்டுள்ள 5 சதவிகிதக் குறைப்புக்களை செயல்படுத்தினால், அக்குடும்பம் இன்னும் €13.53 ஐ ஒவ்வொரு வாரமும் இழக்கும். வெட்டுக்கள் 10% ஆகுமானால் அதே குடும்பம் €45.87 ஐ இழக்கும்.

ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ள வெட்டுக்கள் மற்றும் வரவிருக்கும் வரவு-செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட உள்ள வெட்டுக்களால் இன்னும் பல இழப்புக்கள் தவிர்க்க முடியாதவை. வரவு-செலவுத் திட்ட குறைப்புக்கள் குறைந்தது 6 பில்லியன் யூரோக்களை சமூகநலச் செலவுகளில் குறைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு, முன்பு கூறப்பட்ட 13,000த்தில் இருந்து அதிகமாக கிட்டத்தட்ட 20,000 பொதுத்துறை வேலைகள் நேரடியான புதிய வரவு-செலவுத் திட்ட பாதிப்பால் இழக்கப்படும்.

பொதுத்துறைத் தொழிலாளர்கள் அயர்லாந்து செய்தி ஊடகத்தில் பெருமளவு தாக்கப்பட்டுள்ளனர்; அவர்கள் எந்தப் பொறுப்பையும் கொண்டிராத பொருளாதார நெருக்கடிக்காக குற்றம்சாட்டப்படுகின்றனர். உண்மையில் 300,000 பொதுத்துறைத் தொழிலாளர்கள்தான் மிக அடிப்படையான சமூகநலப்பணிகளை வழங்குகின்றனர். இவை குறைக்கப்படும் அல்லது முற்றிலும் தகர்க்கப்படும் போல் உள்ளன. உதாரணமாக நூற்றுக்கணக்கில் குழந்தைகளுக்குத் தனித்தனியே கல்விப் பிரிவில் உதவி புரியும் SNAக்கள் எனப்பட்ட சிறப்புத் தேவை உதவியாளர்கள் இலக்கு வைக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 10,000 SNAக்களில் ஐந்து சதவிகிதத்தினர், பலரும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்பவர்கள், முறையில் இருந்து 100 வகைத் தேவைகளை அகற்றும் அரசாங்கத்தின் முடிவை ஒட்டி பணிநீக்கம் பெறுவர். Barnardo’s ன் Fergus Finlay ஏற்கனவே கடந்த இரு ஆண்டுகளில் SNAக்கள் ஏராளமானவர்கள் பொறுக்கியெடுக்கப்பட்டு அகற்றபட்டு விட்டனர் என்று எச்சரித்துள்ளார். குழந்தைகளின் அரசியலமைப்பு வகைப்படியான கல்வி உரிமைகள் ஆபத்திற்கு உட்பட்டால், இன்னும் அதிக வெட்டுக்கள் என்பது சமூகத்தின் பெரும் பாதிக்கப்படகூடிய குழந்தைகளை பொதுப்பள்ளிகளில் மீண்டும் கொண்டு சேர்த்துவிடும் என்று எச்சரித்துள்ளார்.

அயர்லாந்தின் மிக உயர் ஏற்றக்காலத்தில், பல சக்திவாய்ந்த ஐரோப்பிய நாடுகளில் கூட ஒருபோதும் வழங்கப்படாத தரத்தில் இருந்த பணிகள் இந்த வெட்டுக்களால் பாதிப்பிற்கு உட்படும். “Who cares” என்னும் ஒரு சமீபத்திய அறிக்கை, அரசாங்கத் துறைகள் பற்றிய புகார்களை விசாரிக்கும் நடுவரால் வெளியிடப்பட்டது. கடந்த நான்கு தசாப்தங்களில் அரசாங்கம் 1970 சுகாதாரச் சட்டத்தின்படி முதியவர்களுக்கு மருத்துவப் பாதுகாப்பு வசதிகளைக் கொடுக்க வேண்டிய சட்டபூர்வ கடமையை “தொடர்ந்து அளிக்க” தோல்வியுற்றுள்ளது என்ற முடிவுரையைக் கூறியுள்ளது.

அரசாங்கம் ஏற்கனவே 2004ல் பல்லாயிரக்கணக்கான மக்கள் பொது பராமரிப்பு பாதுகாப்பு பெறுவதற்கு சட்டவிரோதமாக கட்டணம் வசூலிக்கப்பட்டனர் என்று ஒப்புக் கொண்டிருந்தது. ஆனால் அந்த நடுவர் இதற்கு நிவாரணத் திட்டம் எதையும் அளிக்க மறுத்துவிட்டார். ஏனெனில் அதனால் “பல பில்லயன்” யூரோக்கள் செலவு ஏற்படும்-ஆனால் அத்தகைய அளவு பணம்தான் கடந்த இரு ஆண்டுகளாக நிதித்துறையினால் வங்கி முறைக்குள் பலதடவையும் உட்செலுத்தப்பட்டுள்ளது.

முதியவர்களுக்கான தற்போதைய வசதிகள் ஆழ்ந்த அழுத்தத்தில் உள்ளன. Navan Alzheimer Day Centre கடந்த ஆண்டு எதிர்கொண்ட €19,000 வெட்டுக்களை தவிர €15,000 குறைப்புக்களை எதிர்கொண்டுள்ள நிலையில், ஒவ்வொரு நாளும் 23 நபர்களைக் கவனித்துக் கொள்ளுவதுடன் மற்றும் ஒரு 22 பேருக்கு உதவவும் செய்கிறது. நாடெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான மையங்களைப் போல், கூடுதல் நிதியம் கிடைத்தால் ஒழிய, இதுவும் அடுத்த ஆறு மாதங்களில் மூடப்பட்டுவிடும். இது பல குடும்பங்கள், உறவினர்கள்மீது அதிக சுமையைச் சுமத்தும்.

பல்லாயிரக்கணக்கான வீட்டுச் சொந்தக்காரர்களும் குடியிருப்பவர்களும் பெருகிய முறையில் மோசமான நிலைமைக்கு உட்பட்டுள்ளனர். பொருளாதார வல்லுனரான மோர்கன் கெல்லி இந்த ஆண்டு முன்னதாக அரசாங்கம் கடன்களை திருப்பிக் கொடுப்பதில் ஏற்படும் ''தவறுகள் ஏற்படுமா என்பது அல்ல, எப்பொழுது” என்றுதான் எனக் கூறியுள்ளார். நவம்பர் 8ம் தேதி Irish Times ல் அடுத்த சுற்று நெருக்கடி “நூறாயிரக்கணக்கான வீடுகளை அடைமானம் வைத்துள்ள குடும்பங்கள் பற்றியதாக இருக்கும். எட்டில் ஒருவர், கிட்டத்தட்ட 100,000 அடைமானம் வைத்தவர்கள் ஏற்கனவே நீரில் மூழ்கியுள்ளனர்; இப்பொழுதுதான் இந்த விஷயமே இங்கு தொடங்குகிறது.” என்று எச்சரித்துள்ளார்.

கெல்லி தொடர்ந்தார்: “மக்கள் அடைமானத் தவணைகளைக் கட்டுவதற்காக அசாதாரண வகையை நாடுகின்றனர், மற்ற கடன்களை தீர்ப்பதில்லை, பெற்றோர்களிடம் இருந்து அதிகம் கடன் வாங்குகின்றனர்; இது வீடுகள் இழக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சம் மற்றும் தாங்கள் திவால் என்பதை ஒப்புக் கொண்டால் ஏற்படும் சமூக அவமானம் ஆகியவற்றின் உந்துதலைக் கொண்டுள்ளது.”

வீடுகள் வாங்குவதும் மிகக் கடினம் என்று மக்கள் உணர்ந்துள்ளனர்; இப்பொழுதுள்ள அடைமானத்திற்கான விண்ணப்பங்களில் 80% விண்ணப்பதாரகளிடம் சேமிப்புக்கள், வேலைப் பாதுகாப்பு இல்லை, மோசமான கடன் வரலாறு, போதிய வருமானம் இல்லை போன்ற காரணங்கள் காட்டப்பட்டு நிராகரிக்கப்படுகின்றன. ஆனால் சொத்துக்களின் விலைகள் 2006 உச்சக்கட்டத்தில் இருந்து இப்பொழுது 35 சதவிகிதம் குறைந்தும், அந்த ஆண்டு மாதம் திருப்பிச் செலுத்த வேண்டியதொகை இப்பொழுதுள்ளதில் பாதியாகத்தான் இருந்திருக்கும் என்றாலும் இந்த நிலைதான் உள்ளது.

தனிக் குடியிருப்பவர்களும்கூட பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகள் அறக்கட்டளையான Threshold மக்கள் கட்டாயமாக வீடுகளில் இருந்து அகற்றப்படும் எண்ணிக்கை கவலைதரக்கூடிய விதத்தில் அதிகமாக உள்ளது என்று கூறியுள்ளது.

கிட்டத்தட்ட 20,000 பேர் அறக்கட்டளையில் இருந்து ஆலோசனையைக் கடந்த ஆண்டு கேட்டனர்; அவற்றுள் 4,125 குடியிருப்பவர்களுக்கும் வீட்டுக்காரர்களுக்கும் குடியிருப்பதற்கு முன்பணம் பற்றிய பிரச்சனைகளாக இருந்தன. இது “வீட்டுச் சொந்தக்காரர்களிடம் நல்லபடியாக நடந்து கொள்ளும் குடியிருப்போருக்குக் கொடுத்த முன்பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் வசதி இல்லை என்பதைத் தெரிவிக்கிறது.”

அதிக உயர்வான ஒப்பந்தக் குத்தகையில் இருந்து மீள்வது, வாடகை கட்டமுடியாத நிலை வந்தவிட்டதால் என்ன செய்வது, டப்ளினில் பொதுநல உதவி பெறுவோர் மீது விதிக்கப்பட்டுள்ள வாடகை வரம்பு அவர்களை பூச்சிகள் நிறைந்த, பாதுகாப்பற்ற, சதுப்புநிலப் பகுதியில் போதுமான வெப்பம் பெறும் வசதியற்ற வீடுகளில் தள்ளவிடுவதால், அதற்கு என்ன செய்யமுடியும் என்பவை பற்றி இன்னும் பல குடியிருப்பவர்களும் ஆலோசனை கேட்கின்றனர்.

இலவச உணவு அளிக்கும் அமைப்புக்களும் ஆதரவை நாடும் மக்களில் வியத்தகு அதிகரிப்புப் பற்றித் தகவல் கொடுத்துள்ளனர். டப்ளினின் Capuchin Friary அமைப்பு வீடுகள் இல்லாதவர்கள், தேவைப்படுபவர்களுக்கு காலைச் சிற்றுண்டி கொடுக்கிறது. பெரும் ஏற்றகாலத்தில்கூட அன்றாடம் அத்தகைய 150பேர்தான் உதவியை நாடினர். அந்த எண்ணிக்கை இப்பொழுது மும்மடங்கு பெருகி, பகல் உணவை நாடி 700 பேர் வருகின்றனர்.