சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French Socialist Party advocates fraudulent “Real Equality” program

மோசடித்தன “உண்மைச் சமத்துவ” திட்டமென்பதிற்கு பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி வாதிடுகிறது

By Kumaran Ira
20 November 2010

Use this version to print | Send feedback

சோசலிஸ்ட் கட்சி (PS) நிறைவேற்றுக்குழு “உண்மைச் சமத்துவம்” குறித்த பொருளுரை ஒன்றை நவம்பர் 9ம் தேதி ஏற்று, அடுத்த 15 ஆண்டுகளுக்கு ஒரு வழிவகை வரைபடத்தை அறிமுகப்படுத்தியது. இதில் கல்வி, சுகாதாரம், பொதுப் பணிகள் மற்றும் வீடுகள் பற்றிய திட்டங்கள் அடங்கியுள்ளன.

இது PS ன் வெறுக்கத்தக்க தந்திரோபாயம் ஆகும். ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் சமூகச் செலவு வெட்டுக்களுக்கு மக்கள் கொண்டுள்ள எதிர்ப்புக்களுக்கு அழைப்புவிடும் நோக்கத்தைக் கொண்டது. கடந்த மாதம் ஏராளமான வேலைநிறுத்தங்களும் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட அணிவகுப்புக்களும் இருந்தன. இதில் பல வாரங்கள் நீடித்த ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான எண்ணெய்துறை மற்றும் துறைமுக வேலைநிறுத்தங்களும் அடங்கியிருந்தன. அவற்றுள் குறைந்த பட்ச மற்றும் முழு ஓய்வூதியம் பெறுவதற்கான வயதில் 2 ஆண்டுகள் அதிகரிப்பும் இருந்தது. தான் ஓய்வு பெறுவதற்குக் குறைந்த பட்ச வயது 60 என இருக்க விரும்புவதாகக் கூறிய சோசலிஸ்ட் கட்சி, அதே நேரத்தில் பணிக்காலம், ஓய்வூதிய வயதை 65ல் இருந்து 67க்கு உயர்த்துவது போன்ற பிற ஓய்வூதிய வெட்டுக்களுக்கு சாமர்த்தியமாக ஆதரவு கொடுத்தது.

PS க்கு பொதுமக்களிடம் ஒரு தவறான "இடது” முகத்தை அளிக்க வேண்டும் என்னும் அழுத்தம் தீவிரமாகியுள்ளது. ஏனெனில் சார்க்கோசிக்கு எதிராகப் பெருகியுள்ள மக்கள் சீற்றத்தில் இருந்து அது அரசியல் ஆதாயங்களை இன்னும் அடையவில்லை. ஒரு சமீபத்திய கருத்துக் கணிப்பு மக்களில் 62 சதவிகிதத்தினர் PS ஐ நம்பவில்லை, அதிகாரத்திற்கு அது மீண்டும் வந்தால் ஓய்வூதியக் குறைந்தபட்ச வயது 60க்குத் திரும்பும் என்னும் தன் உறுதிமொழியைச் செயல்படுத்தாது என்றுதான் நினைக்கின்றனர் எனக் காட்டுகிறது. இத்தகைய பொதுமக்களின் அவநம்பிக்கை முற்றிலும் நியாயமானதே. ஏனெனில் PS ன் கடந்த கால வலதுசாரித்தனச் செயல்கள் அவ்வாறுதான் உள்ளன.

இந்தப் பொருளுரை PS ன் செய்தித் தொடர்பாளர் Benoît Hamon ஆல் தயாரிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய வேலைநிறுத்தங்களின்போது ஆர்ப்பாட்டக்காரர்களுடன் அவர் நல்ல உறவுகளைத் தக்க வைக்க முயன்றுள்ளார். பல கூட்டங்களில் NPA எனப்படும் புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சியின் ஒலிவியே பெசென்ஸநோவுடன் தோன்றியுள்ளார்.

அறிமுகவுரை கூறுகிறது: “சமூகப் படிநிலையில் அவர்கள் இடம் எப்படி இருந்தாலும் அவர்களுடைய வாழ்க்கை நிலைமைகளை முன்னேற்றுவிப்பதற்கு சோசலிஸ்ட்டுக்களின் திட்டம் முன்னுரிமை அளிக்கிறது. எனவேதான் நாங்கள் வருவாய், வாழ்க்கை நிலைமைகள், சுகாதாரம், வீடுகள் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் உள்ள சமத்துவமற்ற தன்மைகளைக் குறைக்க விரும்புகிறோம்.”

உண்மையில் இக்கூற்றுக்கள் “உண்மைச் சமத்துவம்” பற்றிய நடவடிக்கைகளை ஆராய்ந்தால் முற்றிலும் சிதைந்து விடுகின்றன. அவற்றுள் சில—சுழலும் கடனை வரம்பிற்கு உட்படுத்துதல் போன்றவை—பொருளாதார செழிப்பு நிலையில் செயல்படுத்தப்பட்டால் முன்னேற்றகரமாக இருக்கும் என்றாலும், மிக முக்கியமான கருத்துக்கள் முற்றிலும் பிற்போக்குத்தனமானவை.

பள்ளிகளுக்கு அவற்றின் சொத்துக்களை நிர்வகிப்பதில் தன்னாட்சி உரிமை கொடுக்கும் பரிந்துரையானது, தேசியக் கல்வி முறை முறிவதற்கும், கல்வி தனியார்மயம் ஆக்கப்படுவதற்கும் தளத்தை அமைக்கிறது. எல்லா இள வயதினரையும் “ஓராண்டு ஆட்சிப் பணித்துறையில்” கட்டாயமாகச் சேர்க்கும் திட்டங்கள் அவர்களுக்கு ஊதியங்களை மறுக்கும் என்பதோடு, கட்டாயச் சேவைக்கும் வழிவகுக்கும். “ஊதியங்கள் பற்றி பெரிய ஆண்டு விவாதங்கள்” பற்றிய கூட்டத்தை அமைப்பது என்பதில் “இது மகத்தான வெட்டுக்களைச் செயல்படுத்துவதற்கு முயலப்படும் போலிக்காரணங்களுக்கு வழிவகுக்கும், குறிப்பாக இப்பொழுதுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையில்” என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த வலதுசாரித்தன அடித்தளத்தில் சமூக அதிருப்திக்கு முறையீடு செய்வதற்கு ஹாமோன் மோசடித்தனமாக முயல்கையில், மற்ற முக்கிய PS உறுப்பினர்கள் Hamon னின் பொருளுரையைக் கண்டித்துள்ளனர். உட்குறிப்பாக இன்னும் கூடுதலான சமூகநலச் செலவு வெட்டுக்களுக்கு வாதிட்டுள்ளனர். நடவடிக்கைகளுக்கு வெளிப்படையாக நிதி அளிக்கப்படாதது குறித்து அவர்கள் குறைகூறியிருப்பதுடன், இத்தகைய கடுமையான வரவு-செலவுத் திட்டக் குறைப்புக்கள் எந்த சூழ்நிலையில் தயாரிக்கப்படுகின்றன என்பது பற்றியும் குறைகூறியுள்ளனர்

முன்னாள் PS முதன்மை செயலாளரான François Hollande கூறினார்: “உண்மைச் சமத்துவ நடவடிக்கைகளின் செலவுகள் மதிப்பீடு செய்வதற்கு இயலாதவை. அறிக்கையை வெளியிடுவதற்கு முன், எப்படி செயல்முறையில் மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும் என்பது பற்றிய மதீப்பீடு இருந்திருக்க வேண்டும்.”

ஒரு PS சட்டமன்ற உறுப்பினரும் IMF தலைவர் டொமினிக் ஸ்ட்ராஸ் –கானுக்கு நெருக்கமான நண்பருமான Pierre Moscovici கூறினார்: “இந்த 200 கருத்துக்களும் PS ஐ எதற்கும் உறுதியளிக்கக் கட்டுப்படுத்தவில்லை. ஆனால் அவை ஒரு பெட்டியில் உள்ள கருத்துத் தொகுப்புக்கள்.” Hamon “செலவினங்களைப் பற்றி சரியாக மதிப்பீடு செய்யவில்லை, தன்னுடைய திட்டங்களுக்கு எப்படி நிதி திரட்டுவது என்பது பற்றியும் கூறில்லை.”

ஒரு PS சட்டமன்ற உறுப்பினரும் 2012 ஜனாதிபதித் தேர்தலில் PS தெரிவுத் தேர்தல்களுக்குத் தன் வேட்புமனுவை அறிவித்துள்ளவருமான Manuel Vallas, Le Parisien நாளேட்டிடம் பிரான்ஸிற்கு ஒரு “உண்மையான நிதியமுறைப் புரட்சி” தேவை, “அரசச் செலவுகளில் குறைப்புத் தேவை” என்றார். Hamon உடைய திட்டங்களில் “நாம் இதற்கு முற்றிலும் மாறாகத்தான் காண்கிறோம்.” என்றார் Vallas.

இத்தகைய கருத்துக்கள் PS தொடர நினைக்கும் திட்டங்கள் பற்றி சரியான, துல்லியச் சித்திரத்தை அளிக்கின்றன. முந்தைய PS அரசாங்கங்களான ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோன் (1981-1995) மற்றும் பிரதம மந்திரி லியோனல் ஜோஸ்பன் (1997-2002) ஆகியோர் பெரும் பணிநீக்கங்கள், சமூகநலச் செலவு வெட்டுக்கள், தனியார்மயமாக்குதல் ஆகியவற்றைச் செய்தனர் என்பது நன்கு அறியப்பட்டதுதான். PS ன் கொள்கைகள் அதன் கிரேக்க, போர்த்துக்கல், ஸ்பெயின் நாடுகளிலுள்ள சக கட்சியான சமூக ஜனநாயகத்துடன் ஒத்துள்ளன. அங்கெல்லாம் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு இடையே வங்கிகள் மற்றும் நிதியச் சந்தைகளை திருப்தி செய்வதற்கு தொழிலாள வர்க்கத்தின் மீது கடுமையான சமூகநலச் செலவு வெட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

Le Figaro என்னும் வலதுசாரி நாளேடு கூறுகிறது: “Hamon அறிக்கை PS சீர்திருத்தவாதிகளைப் பற்றிய பழைய அச்சத்தை மறுபடியும் தூண்டியுள்ளது: அதிகாரத்தில் இல்லாமல் இருக்கும்போது அதிக உறுதி மொழிகளைக் கொடுத்துவிட்டு, அதிகாரத்திற்கு வந்தபின் அவர்கள் உறுதிமொழிகளைச் செயல்படுத்த முடியாது. வாக்காளர்களுக்கு இதனால் ஏமாற்றம் ஏற்படும், அவர்கள் பின் 1983ல் பிரான்சுவா மித்திரோன் செய்தது போல் கடும் சிக்கன நடவடிக்கைகளில் ஈடுபடுவர்.”

Hamon உடைய பொருளுரை நடைமுறைக்கு ஒவ்வாதது என்னும் குறைகூறலுக்கு விடையிறுக்கும் வகையில், PS ன் முதன்மைச் செயலர் மார்ட்டின் ஆப்ரி Hamon உடைய பொருளுரைக்கு ஆதரவு தரும் வகையில் “இன்று பிரான்ஸின் மதிப்புக்களை முறித்துவரும் திட்டங்களுக்கு மாறாக பிரெஞ்சு மக்கள் அவர்கள்பால் நாங்கள் சார்பு கொள்ள வேண்டும், புதிய, நவீன தீர்வுகளை மற்றொரு திட்டம் மூலம் கொண்டுவரவேண்டும் என விரும்புகின்றனர்” என்பதை PS ல் பெரும்பாலானவர்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்றார்.

Hamon உடைய திட்டம் “சோசலிஸ்ட்டுக்கள் பற்றிய இன்றைய உண்மையான நம்பகத்தன்மையைக் காட்டுகிறது” என்று ஆப்ரி இழிந்த முறையில் ஆதரவு கொடுத்தார். “நம்முடைய பாதை தேவையையொட்டி இடதாகத்தான் இருக்கும், ஏனெனில் அதுதான் எங்களுக்கு ஒரு நம்பகத் தன்மையைக் கொடுக்கும்.”

அதாவது, சமூக எதிர்ப்பிற்கு முறையீடு செய்து தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு PS ஒரு “இடது”தோற்றத்தை மேற்கோள்ள வேண்டும் என்று நினைக்கிறது. ஆப்ரியே கூட தான் கூறும் உறுதிமொழிகளை நம்பவில்லை என்றாலும் இந்த நிலைப்பாடுதான் கூறப்படுகிறது. இந்த ஆண்டில் முன்னதாக, ஓய்வூதிய வெட்டுக்களை தொழிற்சங்கங்களுடன் சார்க்கோசி விவாதிக்கும்போது, ஆப்ரி தான் ஓய்வூதிய வயது 60ல் இருந்து 62க்கு உயர்த்தப்படுவதற்கு ஆதரவு தருவதாகக் கூறியிருந்தார்.

PS முக்கிய தலைவர்கள் Hollande மற்றும் Michel Rocard ஆகியோரால் அவருடைய கருத்துக்களுக்கு அவர் பாராட்டப்பட்ட போதிலும்கூட, பின்னர் PS ன் சமூக சிக்கனங்களுக்கான திட்டங்களை மறைப்பதற்காக அவர் பின்னர் அவற்றில் இருந்து பின்வாங்கினார்.

Hamon உடைய கருத்துக்கள் ஒன்றும் PS ல் இருப்பவர்களிடம் இருந்து அடிப்படையில் மாறுபட்டவை அல்ல. அவர்கள் அனைவரும் வெளிப்படையாக சமூகநலச் செலவு வெட்டுக்களுக்குத்தான் அழைப்பு விடுகின்றனர். வசந்த காலத்தில் கிரேக்கக் கடன் நெருக்கடியின்போது, Hamon கிரேக்க வகையிலான வெட்டுக்கள் பிரான்சிலும் வரவேண்டும் என்பதற்கு ஆதரவு கொடுத்த விதத்தில் உட்குறிப்பாகக் கூறினார்: “பிரான்ஸானது இக்கொள்கை கிரேக்கத்தில் கடைபிடிக்க வேண்டும் என்று கூறுகிறது. ஐரோப்பிய ஆணையம் பின் பிரான்ஸிடம் கேட்கிறது, கிரேக்கத்திடம் கோரும் கொள்கையை நீங்களே ஏன் செயல்படுத்த மறுக்கிறீர்கள்?’

இறுதியில் Hamon கிரேக்கத்திலும் வெட்டுக்கள் சுமத்தப்பட உதவினார். கன்சர்வேடிவ் மற்றும் PS பிரதிநிதிகளுடன் அவர் தேசியச் சட்டமன்றத்தில் IMF-EU கிரேக்கத்திற்கான பிணை எடுப்புப் பொதியில் பிரான்ஸின் பங்கைக் கொடுப்பதற்கு வாக்களித்தார். இந்தப் பிணையெடுப்பு பிரெஞ்சு வங்கிகள் காப்பாற்றப்பட உதவியது. அவை கிரேக்கத்தில் முதலீடு செய்திருந்தன. அதே நேரத்தில் இந்த நடவடிக்கை பிரெஞ்சு வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறையை அதிகரித்து கிரேக்க நாட்டை முன்பு இருந்தது போல் கடனில்தான் நிறுத்தியுள்ளது.

செய்தி ஊடகத்திடம் Hamon இழிந்த முறையில் கூறினார்: “ஐரோப்பா கொடுத்த பணம் பொருளாதார ஊக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும், ஆனால் அதையொட்டி நம் ஒற்றுமை உணர்வைக் காட்டுவதற்கு வாக்களிப்பதை அது தடுக்காது.”

Hamon இன் “ஒற்றுமையுணர்வுத் தன்மை” பிற்போக்குத்தனமானது, தவறானது. IMF-EU பிணை எடுப்பு கிரேக்கத்தில் தொழிலாள வர்க்கத்தினரின் வாழ்க்கைத் தரங்களில் பேரழிவு தரும் சரிவை ஏற்படுத்தியது. சமூகநலத் திட்டங்களை அதிகரிப்பதாகக் கூறி அதிகாரத்திற்கு வந்த பின்னர், இன்று Hamon கூறுவது போல், கிரேக்க சமூக ஜனநாயகப் பிரதம மந்திரி ஜோர்ஜியோஸ் பாப்பாண்ட்ரூ பெரும் வேலை வெட்டுக்கள், ஓய்வூதிய வெட்டுக்கள் மற்றும் அரசாங்கத் தொழில்களை தனியார்மயம் ஆக்கியது ஆகியவற்றைச் செய்தார். செய்தி ஊடக மதிப்பீடுகளின்படி இவை தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களில் 30 சதவிகித சரிவை ஏற்படுத்தியுள்ளன.