சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : கொரியா

Pentagon ratchets up Korea tensions over nuclear facility

அணுசக்தி நிலையங்கள் பற்றிக் கொரியா அழுத்தங்களை பென்டகன் அதிகரிக்கிறது

By Bill Van Auken
23 November 2010

Use this version to print | Send feedback

வட கொரியா ஒரு புதிய யுரேனிய அடர்த்தித் திட்ட ஆலையை நிறுவியுள்ளது பற்றிய அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானி ஒருவரின் அறிக்கை உயர்மட்ட அமெரிக்க இராணுவ மற்றும் அரசியல் அதிகாரிகளிடம் இருந்து பெரும் எச்சரிக்கைகளைத் தூண்டியுள்ளது.

வலைத் தளத்தில் வார இறுதியில் அளிக்கப்பட்ட அறிக்கை ஒன்றில், Los Alamos National Laboratory உடைய முன்னாள் இயக்குனரான சீக்பிரட் ஹெக்கர் கடந்த வாரம் வட கொரியாவின் Yongbyon அணுசக்தி வளாகத்திற்குச் சென்றிருந்தபோது, தான் ஒரு புதிய பரிசோதனை இலேசான நீர் அணுசக்தி உலை மற்றும் வேறு ஒரு “1,000 அணுக்களை பிரிக்கும் கருவிகளை” கொண்ட ஆலைக்கும் அழைத்துச் செல்லப்பட்தாகவும், வட கொரியர்கள் ஏற்கனவே குறைந்த அடர்த்தி உடைய யுரேனியத்தை அணு உலைக்கு எரிபொருளாகப் பயன்படுத்துகின்றனர் என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையத்தை ஹெக்கர் “பெரும் அதிர்ச்சிக்கு உட்படுத்தியது” என்று விவரித்துள்ளார். தன்னுடைய அறிக்கையில், “ஒரு சில அணுக்களை பிரிக்கும் கருவிகளுக்கான குழாய்களைப் பார்ப்பதற்குப் பதிலாக -அவைதான் வட கொரியாவில் இருக்கும் என்று நான் நம்பினேன்- நாங்கள் ஒரு நவீன, தூய அணுக்களை பிரிக்கும் கருவிகளை கொண்ட ஆலையை அனைத்தும் மிகத் துப்பரவாக வரிசைப்படுத்தி, தயார் நிலையில் எங்களுக்குக் கீழ் இருப்பதைக் கண்டோம்.” இந்த ஆலை “வியத்தகு முறையில் நவீனமாக உள்ளது” என்றும், “இது எந்த நவீன அமெரிக்க வழிவகை நிலையத்திற்கும் ஒப்பானது” என்றும் சேர்த்துக் கொண்டார்.

இந்த ஆலை இலேசான நீர் உலைக்கு எரிபொருளாகத்தான் பயன்படுத்தப்படும் என்னும் வட கொரியர்களில் வலியுறுத்தல் பற்றிக் குறிப்பிட்டு (அணுசக்தித் தொழில்நுட்பம், எரிபொருள் ஆகியவற்றை இறக்குமதி செய்ய வடகொரியா தடைக்கு உட்பட்டுள்ளது) அமெரிக்க விஞ்ஞானி எழுதினார்: “ப்யோன்யாங்கின் விரைவான நடவடிக்கைகள் பின்னர் மிகவும் தேவைப்படும் மின்சார உற்பத்திக்காகத்தான் முக்கியமாக இயக்கப்படுகின்றன என்று இருக்கலாம். ஆனாலும்கூட, யுரேனிய அடர்த்தித் தொழில்நுட்பத்தின் இராணுவ சாத்தியப்பாடு கவனத்திற்குரியது.”

குறைந்த அடர்த்தி அணுசக்தி எரிபொருள் மின்சார நிலையப் பயன்பாட்டிற்கு வடிவமைக்கப்படுகையில், அத்தகைய நிலையம் அணுவாயுதங்கள் தயாரிப்பிற்குத் தேவையான உயர் அடர்த்தி யுரேனிய உற்பத்திக்காக மாற்றியும் அமைக்கப்பட முடியும்.

இந்த அறிக்கை வாஷிங்டனில் தீவிர ஆத்திரமூட்டலை தூண்டி அப்பகுதியில் ஏற்கனவே உயர்ந்துள்ள அழுத்தங்களை இன்னும் அதிகமாக்கியுள்ளது. படைகளுக்கான கூட்டுத் தலைவரான அட்மைரல் மைக்கேல் முல்லன் ஞாயிறு அன்று கலை நிகழ்ச்சிகளில் தொடர்ந்து மிரட்டும் வகையிலான அறிக்கைகளை வெளியிட்டார். “பல ஆண்டுகளாக அவர்களுடைய யுரேனிய அடர்த்தி பற்றிய கவலையை இது உறுதிப்படுத்துகிறது, சரியெனக்கூறுகிறது; ஆனால் அவர்கள் வாடிக்கையாக அதை மறுத்து வந்துள்ளனர்” என்றார் முல்லன். “தாங்கள் கூறுவதைச் செய்யும் நாடு என்ற அதை நம்ப முடியாத நிலைதான் வாடிக்கையாக உள்ளது.”

ABC யில் பேசிய அமெரிக்க இராணுவத் தளபதி கூறினார்: “அவர்கள் கூடுதல் அணுவாயுதங்கள் திசையில் சென்று கொண்டிருக்கிறார்கள் என்னும் எடுகோள் உறுதியாக உள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தை அதிகரிக்கவும் அவர்கள் அறிந்துள்ளனர் என்பதும் தெரிந்ததே. எனவே அது ஒரு ஆபத்தான நாடு.” அவர் மேலும் கூறியது: “வடக்கு கொரியா, அதன் அணுத்திறன் பற்றி நீண்ட நாட்களாகவே நான் கவலை கொண்டுள்ளேன். நாம் அனைவரும் மிக, மிகக் குவிப்புடன் கட்டாயமாக இருக்க வேண்டும், உண்மை வாழ்வில் என்ற திறனைத்தான் இது உறுதியாக அளிக்கிறது.”

CNN ல் தோன்றியபோது முல்லன் கூறினார்: “இவை அனைத்துமே உலகின் ஒரு ஆபத்தான பகுதியில் மிரட்டும் நடத்தைத் தொடர்ச்சியாக இருப்பது, தொடர்ந்து உறுதியற்ற நிலையைத் தோற்றுவித்தல் இவற்றுடன் இயைந்துதான் உள்ளன.” பொலிவியாவில், அமெரிக்க நாடுகளின் பாதுகாப்பு மந்திரிகள் மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றிருந்த அமெரிக்கப் பாதுகாப்பு மந்திரி ரோபர்ட் கேட்ஸ், “இது போன்ற யுரேனிய அடர்த்தி ஆலை, அது அப்படித்தான் என்று கொண்டால், வெளிப்படையாக அவர்களுக்கு இன்னும் அதிக அணுவாயுதங்களை உருவாக்கும் திறனை கொடுக்கும்.”

வடகொரியா இப்பொழுது அணுசக்தி ஆலை எரிபொருள் தண்டுகளின் பயன்பாட்டில் இருந்து எடுக்கப்பட்ட ப்ளூட்டோனியம் மூலம், 8 முதல் 12 ஆயுதங்களை வைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது சமீபத்தில் இவற்றுள் இரண்டை நயமற்ற கருவிகள் மூலம் சோதித்தது. அடர்த்தியான யுரேனியம் இன்னும் சக்தி வாய்ந்த ஆயுதங்களைத் தயாரிக்க ஒரு மாற்று வகையாகும்.

“ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக்குழுத் தீர்மானங்கள் பலவற்றை வடகொரியா புறக்கணித்துள்ளது. அவர்கள் தொடர்ந்து ஆயுதங்களை ஏற்றுமதி செய்கின்றனர். எனவே அவர்கள் இதையும் தயாரித்திருக்கக் கூடும் என்னும் கருத்து ஒரு கவலை என்பது வெளிப்படைதான்.” என்றார் கேட்ஸ். ப்யோங்யாங் தான் குறைந்த அடர்த்தி உடைய யுரேனியத்தை, சமாதான வகைக்காக, விசை தயாரிக்கத்தான், உருவாக்கி வருவதாக வலியுறுத்திவருவது பற்றிக் கேட்கப்பட்டதற்கு, கேட்ஸ் நிருபர்களிடம் “நான் அதற்கு மதிப்புக் கொடுக்கவில்லை” என்றார்.

தென் கொரியாவின் பாதுகாப்பு மந்திரி கிம் டே யங் நாட்டின் பாராளுமன்றத்தில் வட கொரிய அறிக்கை ஒன்றிற்கு விடையிறுக்கையில் சியோல் அரசாங்கம் வாஷிங்டன் மீண்டும் தீபகற்பத்தில் தந்திரோபாய அணுவாயுதங்களை நிலைநிறுத்த வேண்டும் எனக் கோருவதைப் பரிசீலிப்பதாகக் கூறினார்.

கொரியாவில் 28,500 துருப்புக்களை நிறைநிறுத்தியுள்ள அமெரிக்க இராணுவம் 1953 கொரியப் போர் முடிந்ததில் இருந்து அங்கு நிலை கொண்டுள்ளது; 1991ம் ஆண்டு அணுவாயுதங்களை முன்னாள் சோவியத் ஒன்றியத்துடன் அணுவாயுத உடன்பாட்டின் ஒரு பகுதியாக திரும்பப் பெற்றுக் கொண்டது. அமெரிக்காவும் கொரியாவும் மீண்டும் நிலைநிறுத்தப்படுதலை, “அணுசக்தித் தடுப்பு முறை பற்றி ஆலோசனை செய்யும் குழுவில் கலந்துரையாடும்” என்று கொரிய ஹெரால்ட் ஒரு தகவலில் கொடுத்துள்ளது.

அமெரிக்க அணுவாயுதங்களை மீண்டும் கொரியத் தீபகற்பத்தில் கொண்டுவருவதற்கு உடனடியாகத் திட்டங்கள் ஏதும் இல்லை என்று பென்டகன் கூறியுள்ளது. ஆனால் ஒரு வட கொரிய அணுவாயுதத் தாக்குதல் தென் கொரியா மீது நடத்தப்பட்டால் அது ஒரு அமெரிக்க அணுவாயுத விடையிறுப்பைப் பெறும் என்றுதான் பரந்த முறையில் அறியப்பட்டுள்ளது. வட கொரிய புதிய அணுசக்தி நிலையங்களைப் பற்றிய விவாதம் ஜனாதிபதி ஒபாமாவின் வட கொரியாவிற்கான சிறப்புத் தூதர் ஸ்ரெபான் பொஸ்வோர்த் அப்பகுதியில் ஆறு தரப்புப் பேச்சுவார்த்தைகளைப் புதுப்பிக்கும் வாய்ப்பு பற்றி ஆயாரச் சென்றிருந்தபோது வந்துள்ளது. அவர் சியோலிலும் டோக்கியோவிலும் திங்களன்று அதிகாரிகளைச் சந்தித்து, பெய்ஜிங்கில் செவ்வாயன்று பேச்சுக்களை நடத்த உள்ளார்.

வட, தென் கொரியாக்கள், ஜப்பான், அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனா ஆகியவை பங்கு பெறும் வட கொரியாவின் அணுத்திட்டம் பற்றிய இப்பேச்சுவார்த்தைகளில், ஏப்ரல் 2009ல் பேச்சுக்களில் இருந்து ப்யோங்யாங் விலகியதும் முறிந்து போயின. வட கொரிய அதிகாரிகள் ஹெக்கரிடம் புதிய உலையில் பணிகள் அதே மாதம் தொடங்கியதாகக் கூறினர். அமெரிக்க வெளிவிவகாரத்துறையின் செய்தித் தொடர்பாளர் பிலிப் ஜே.க்ரோலீ திங்களன்று நிருபர்களிடம் வட கொரியா அமெரிக்க விஞ்ஞானியிடம் அணுசக்தி நிலையத்தைக் காட்டியது “ஒரு பிரச்சாரத்திற்கான கழைக்கூத்தாடித்தனமாக” இருக்கலாம், வாஷிங்டன் மீண்டும் பேச்சுக்களைத் தொடர்வதற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கலாம் என்றார்.

“வட கொரியாவிற்கு மோசமான நடத்தைக்கு வெகுமதி கொடுக்கும் நிலையில் நாங்கள் இழுக்கப்பட மாட்டோம். அவர்கள் பலமுறையும் ஏதேனும் சீற்றம் தரும், ஆத்திரமூட்டும் செயல்களைச் செய்து, நாம் எகிறிக் குதித்துவருவோம் என எதிர்பார்க்கின்றனர்; ஆனால் நாம் இந்த வட்டத்தில் மீண்டும் நுழையப்போவதில்லை.” என்றார் அவர்.

தென் கொரியா மற்றும் ஜப்பான் இரண்டுடனும் வாஷிங்டன் இதுவரை பேச்சுக்களைத் தொடர்வது குறித்து கடினப் போக்கைத்தான் கொண்டுள்ளது; ஆனால் முன்னிபந்தனையாக வட கொரிய ஆயுதங்களைக் களையவேண்டும், கடந்த மார்ச் மாதம் 46 கடற்படையினர் இறக்க காரணமாக இருந்த தென்கொரியப் போர்க் கப்பலை மூழ்கடித்த தற்குப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று கோரிவருகிறது. ஆனால் கப்பலைத் தாக்கவில்லை என்று ப்யோங்யாங் மறுத்துள்ளது. வட கொரிய ஆட்சி உலை நிலையத்தையும் அணுக்களை பிரிக்கும் கருவிகளையும் திறந்துள்ளது, பேச்சுக்களை உடனடியாகத் தொடங்க வைக்கும் என்று நம்பியிருக்கக்கூடும்; அதையொட்டி அதற்கு மிக அதிகமாகத் தேவைப்படும் உதவி நிதிகள் பற்றி வழிபிறக்கும், வாஷிங்டனுடன் அதன் உறவுகள் சீராக்கும் இலக்கு அடையப்படலாம் என்று நினைத்திருக்கலாம்; இது தவறான கணிப்பாகும்.

ஒபாமா நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கை சிதைந்து நிற்கையில், குடியரசுக் கட்சியின் வெற்றி இடைக்காலத் தேர்தல்களில் நிர்வாகத்தை இன்னும் வலதிற்கு நகர்த்தியிருக்கையில், வெள்ளை மாளிகை இன்னும் மோதலான அணுகுமுறையைத்தான் கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம். இதன் கொள்கை அதிக அளவில் ஆசியா முழுவதும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாய நலன்கள், மற்றும் இன்னும் அடிப்படையில் பெய்ஜிங்கிற்கு இடையே பெருகியுள்ள பூசல்களின் தன்மையில்தான் நிர்ணயிக்கப்படும்.

ஞாயிறன்று தன் கருத்துக்களில் கூட்டுப்படைகளின் தலைவர் அட்மைரல் முல்லன் வாஷிங்டன் இந்த பிரச்சினையைப் பயன்படுத்தி சீனா மீது அழுத்தத்தை அதிகரிக்கும் என்று குறிப்புக் காட்டினார். “கூடுதலான காலமாக சீனாவுடன் தொடர்பு கொண்டுள்ளோம், அதுவும் வட கொரியா பற்றி” என்றார் முல்லன். “இதில் அதிகப் பங்கு பெய்ஜிங் மூலம் செய்யப்பட வேண்டும்.” வட கொரியாவின் வணிகத்தில் கிட்டத்தட்ட முக்கால் பகுதி சீனாவுடன் நடக்கிறது; மேலும் நாட்டின் 90% எண்ணெய் இறக்குமதிகளுக்கும் சீனாவைத்தான் நம்பியுள்ளது. இந்நாடு ஒரு இடைப்பட்ட மூலோபாய நாடு என்று பெய்ஜிங் காண்கிறது; அதே நேரத்தில் எப்பொழுதும் இறுகிவரும் பொருளாதாரத் தடைகளை ஒட்டி விளையும் பொருளாதார, அரசியல்அழுத்தங்களின் கீழ் பாதிப்பு வரும் என்றும் அஞ்சுகிறது. அதே நேரத்தில் சீனத் தலைமை வடகொரிய அணுசக்திப் பிரச்சினை அப்பகுதியில் அமெரிக்க இராணுவ சக்தி அதிகப்படுத்தப்படுவதற்கும், தென் கொரியா, ஜப்பான் ஆகியவற்றில் இராணுவக் கட்டமைப்புக்கள் வருவதற்கும் ஒரு போலிக் காரணம் ஆகக்கூடாது என்றும் கருதுகிறது.

திங்களன்று ஆயுதப்படைகள் செய்தி ஊடகப் பணிக்குக் கொடுத்த பேட்டி ஒன்றில் பாதுகாப்புக் கொள்கையின் உதவிச் செயலர் மிஷாலே ப்ளோநோய் ஆசியாவில் பெருகிய ஆக்கிரமிப்பு அமெரிக்க இராணுவ நிலைப்பாட்டிற்கு ஒரு உருக் கொடுத்தார். “நாம் 21ம் நூற்றாண்டைப் பற்றி நினைக்கும்போது, ஆசியா பெருகிய முறையில் முக்கியத்துவம் பெற்று நம் வெளியுறவுக் கொள்கையின் மையமாக இருக்கும் என்று கருதுகிறோம்.” என்றார் அவர். ஆசியாவில் அமெரிக்கப் பங்கைப் பற்றி விவரித்த அவர் அது “பிராந்தியத்தை உறுதிப்படுத்துகிறது” என்றும், “அங்கு நம் பிரசன்னம் அதிகளவு உறுதியைக் கொடுத்துள்ளது, பல நாடுகளுக்கு ஸ்திரப்பாட்டை அளித்துள்ளது; அதையொட்டி பொருளாதார உந்துசக்தி தொடரும்” என்று சேர்த்துக் கொண்டார். ஆசியாவின் பொலிஸ்காரர்கள் என்ற விதத்தில் அமெரிக்க இராணுவம் கொண்டுள்ள இந்த முன்னோக்குத்தான் தவிர்க்க முடியாமல் சீனாவுடன் இராணுவ மோதலுக்கான சாத்தியப்பாடுகளை கொண்டிருக்கிறது.