சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The Irish bailout and the necessity for the United Socialist States of Europe

அயர்லாந்தின் பிணையெடுப்பும் ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான அவசியமும்

Stefan Steinberg
24 November 2010

Use this version to print | Send feedback

சர்வதேச வங்கிகள் தேசியக் கருவூலங்களை சூறையாடுவதற்கும் பல தசாப்தங்களாய் கட்டப்பட்ட சமூக நல அமைப்புகளை கழற்றியெறிவதற்கும் தொடர்ந்து அனுமதித்தால் சமூகம் ஒரு பேரழிவுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் என்பதையே அயர்லாந்தை பிணையெடுக்கும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நடவடிக்கைகள் தெளிவாக்குகின்றன.  

நிதி மீட்சித் தொகுப்பானது ஒவ்வொரு ஐரோப்பிய ஸ்தாபனமும் மற்றும் தேசிய அரசாங்கமும் உலகளாவிய நிதி பிரபுத்துவத்தின் சேவகர்களாய் பாத்திரம் ஆற்றுவதை அம்பலப்படுத்தியிருக்கிறது. விரிவடைந்து கொண்டே செல்லும் சர்வதேச நிதி மூலதனத்தின் அதிகாரத்தை நிறுத்துவதற்கு எந்த ஒரு அரசாங்கத்திடமோ அல்லது ஒரே ஒரு நாடாளுமன்றக் கட்சியிடமோ கூட விருப்பம் கிடையாது அல்லது ஆற்றல் இல்லை.

இந்த ஆண்டு மே மாதத்தில், முக்கியமான வங்கிகளும் தர மதிப்பீட்டு முகவாண்மைகளும் கிரேக்க கடன் தரத்தைக் குறைப்பதற்கும் கிரேக்க அரசாங்க பத்திரங்களின் விலையை மேலேற்றுவதற்கும் ஒன்றுபட்ட பிரச்சாரத்தை நடத்தியதைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியமும் சர்வதேச நாணய நிதியமும் தலையிட்டு அந்நாட்டிற்கு 110 பில்லியன் யூரோ பிணையெடுப்பை ஏற்பாடு செய்தன. அப்போது, கிரேக்கம் ஒரு விதிவிலக்கான சந்தர்ப்பம் என்றும் இன்னொரு நாட்டில் இதே வகை பிணையெடுப்பு இருக்காது என்றும் வரி செலுத்துவோருக்கு ஐரோப்பிய அரசியல்வாதிகளும் ஊடகவியலாளர்களும் உறுதியளித்தனர்.  

இப்போது, ஆறு மாத காலத்திலேயே, சர்வதேச வங்கியாளர்களும் ஊக நிபுணர்களும் அயர்லாந்தின் தரமதிப்பீட்டைக் குறைத்து அழிவுகரமான இன்னுமொரு பிரச்சாரத்தை செய்ததை அடுத்து, ஐரோப்பிய ஒன்றியமும் சர்வதேச நாணய நிதியமும் இன்னுமொரு கணிசமான தொகையை (இறுதியில் வரி செலுத்துவோர் தான் இதனை திருப்பிச் செலுத்தியாக வேண்டியிருக்கும்) ஒதுக்கியிருக்கின்றன.

தங்களது மோசமான சூதாட்ட வராக் கடன்களை மறைப்பதற்கு நூறு பில்லியன் கணக்கான தொகையை தேசிய அரசாங்கங்களிடம் இருந்து பெற்று விட்டு இந்த நிதிக் கனவான்கள் எல்லாம் இப்போது போருக்குப் பிந்தைய ஐரோப்பாவின் வரலாற்றில் மிகத் தண்டனையாய் அமைந்த சிக்கன நடவடிக்கைகளுக்கு உத்தரவுகளை வழங்கிக் கொண்டிருக்கின்றனர். அயர்லாந்து நிதிநிலை அறிக்கையின் விவரங்கள் இன்று வெளியாக இருக்கின்றன. வங்கிகளால் அரசாங்கத்திற்கு உத்தரவிடப்பட்டிருக்கும் வேலைகள் மீதான, வாழ்க்கைத் தரங்கள் மீதான, நல உரிமைகள் மீதான வெட்டுகள் முன்கண்டிராத அளவானதாய் இருக்கும். அயர்லாந்திற்காக வரையப்படும் சிக்கன நடவடிக்கைகளை ஒலிவர் கிராம்வெல் தொகுப்புஎன்று ஐரோப்பிய ஆணையத்தைச் சேர்ந்த ஒருவர் விவரித்தார். ஆங்கிலேய பிரபுக் காவலரான இந்த ஒலிவர் கிராம்வெல்லின் படைகள் தான் 1649ல் மறுஆட்சிக்கான ஒரு கோரமான பிரச்சாரத்தில் அயர்லாந்தை சின்னாபின்னப்படுத்தியது.

நிதிய உயரடுக்கு எந்த ஆபத்தையும் எடுத்துக் கொள்வதில்லை. அவர்களது இலாபங்களுக்கு கடிவாளம் போடுகிற மிகச் சாதாரணமான நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்வதற்கும் கூட அவர்கள் தயாராய் இல்லை. வங்கிகளும் முக்கியமான கடனளிப்பாளர்களும் இனிவரும் ஒரு பிணையெடுப்பின் சில செலவுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சில வாரங்களுக்கு முன்பாக ஜேர்மன் அரசாங்கம், பிரான்சின் ஆதரவுடன், ஒரு கோழைத்தனமான உத்தேசத்தை முன்வைத்தபோது முன்னணி வங்கியாளர்கள் எல்லாம் கோபத்துடன் பதிலிறுப்பு செய்தனர்ஜேர்மன் திட்டத்தை கண்டித்த Deutsche Bank வங்கியின் தலைவர் இந்த யோசனையை இரகசியமாய் அழிக்கும் நோக்கத்துடன் ஐரோப்பா முழுவதிலும் பயணம் செய்து நிறுவன இயக்குநர்கள் மற்றும் அரசியல் ஸ்தாபனங்களுடன்  பேசினார். அவசர அவசரமாய் பின்வாங்கிய ஜேர்மன் அரசாங்கம் வங்கிகள் குறைந்தபட்சம் 2013 ஆம் ஆண்டு வரையேனும் எதுவும் திருப்பி செலுத்துவதற்கான அவசியம் நேராது என்று அறிவித்தது. இந்த வாரத்தின் அயர்லாந்து பிணையெடுப்பில் வங்கிகளுக்கோ அல்லது பெரும் பத்திரக் கடனளிப்பாளர்களுக்கோ எந்த இழப்புகளுக்கும் வழிவகை இல்லை.

தங்களது சமீபத்திய சர்வதேச தாக்குதல் மூலம், வங்கிகள் தங்களது வேகத்தை அதிகப்படுத்தியிருக்கின்றன. பிற்போக்கான பிணையெடுப்புகள் போதாது என்று ஒரு புதிய சுற்று நிதி ஊகத்திற்கு பெரும் நிதிகளை அரசாங்கங்கள் ஒதுக்குவதற்கும் அவை கோருகின்றன.

இந்த நிகழ்முறை குறித்து Frankfurter Allgemeine Sonntags zeitung பின்வருமாறு கருத்து தெரிவித்தது: “நிதி நெருக்கடியானது அது ஆரம்பித்த இடமான வங்கிகள் என்னும் இடத்திற்கே மீண்டும் வந்து சேர்ந்திருக்கின்றது. அவை இன்னும் தினவெடுத்து வளர்ச்சி கண்டுள்ளன. வங்கிகளை வரிசெலுத்துவோர் பிணையெடுப்பதன் அவசியத்தை நிரூபிக்க லெஹ்மன் புஸ்வானமாகிப் போக வேண்டியிருந்தது என்றால், இப்போதோ சாத்தியமுள்ள நெருக்கடிகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய வரிசெலுத்துவோர் முன்கூட்டிய தீர்வு நடவடிக்கைஎடுக்க வேண்டியிருக்கிறது. இவ்வாறாக, ’ஒரு பேரிடர் நேரும் ஒரு பெரும் கடன்தாரர் கடனைத் திருப்பியளிக்க முடியாது போவார்என்கிற அபாயத்திற்கு (இதன் பேரில் அவர்கள் எக்கச்சக்கமான வட்டியை வசூலித்துக் கொண்டும் விடுகிறார்கள்) வங்கிகள் பொறுப்பெடுத்துக் கொள்ளாது.

கிரீஸ் மற்றும் அயர்லாந்தின் பொருளாதாரங்களை சின்னாபின்னப்படுத்தி விட்டு, நிதித்துறையின் நிழலுலகம் இப்போது புதிய பசுமைவெளிகளுக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது. அயர்லாந்து ஒப்பந்தத்தின் மை ஈரம் காயும் முன்னதாக, சந்தைகள் போர்த்துகல், ஸ்பெயின் ஆகிய தங்களது அநேகமான அடுத்த பலிகளின் கடன்பத்திரங்கள் மீது நெருக்குதலை அதிகரித்திருக்கின்றன.

ஐரோப்பாவெங்கிலுமான அரசாங்கங்கள், அவற்றின் சிக்கன நடவடிக்கைகளின் பேரழிவான சமூகப் பின்விளைவுகளில் இருந்து கவனத்தை திருப்பவும் அதற்கு தாங்களே துணைபோவதை திசைதிருப்புவதற்கும் தேசியவாதம் என்னும் நஞ்சை பரப்புவதன் மூலம் பதிலிறுப்பு செய்து வருகின்றன. இதன்மூலம் தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஐக்கியப்பட்ட சர்வதேசிய பதிலிறுப்பைத் தவிர்க்க அவை தலைப்படுகின்றன. தொடர்ந்து பல ஐரோப்பிய நாடுகளிலும், தேசிய மேலாதிக்கத்தைத் தூண்டி விடுவதற்காக அதி வலது சாரி, இனவாத மற்றும் இஸ்லாமிய-விரோத அமைப்புகள் அரசாங்க தலைமைக்குக் கொண்டு வரப்படுகின்றன.

அயர்லாந்தில், பிரையன் கோவென் தலைமையிலான பியானா ஃபெயில் அரசாங்கம், “ஐரிஷ் தேசிய இறையாண்மையை விற்று விட்டதாக” அனைத்து அரசியல் கட்சிகள் தரப்பிடமிருந்துமான கண்டனங்களுக்கு முகம் கொடுத்திருக்கிறது. இதே கட்சிகள் தான் வங்கிகள் உத்தரவிலான சிக்கன நடவடிக்கைகளுக்கு தங்களது முழுமையான ஆதரவை தெளிவாக்கியிருக்கின்றன.

அயர்லாந்தின் பெருநிறுவன வரி 12.5 சதவீதத்தில் பாதுகாக்கப்படுவதில் (இது மூலதனத்தின் நலன்களினால் உத்தரவிடப்பட்ட குறிப்பாக அமெரிக்க பெரு நிறுவனங்களால் வலியுறுத்தப்படுகிற ஒரு கொள்கை) அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் ஒரேநோக்கத்துடன் கவனம் செலுத்துவதன் மூலம் தேசிய இறையாண்மையை உத்தியோகபூர்வமாய் இழுப்பதின் கீழமைந்த வர்க்க நலன்கள் விளங்கப் பெறுகின்றன. அயர்லாந்து அரசாங்கம், சராசரியான எதிர்ப்புகளின் உதவியுடன், தொழிலாள வர்க்கத்தின் மீது இன்னும் கோரமான தாக்குதல்களை திணிக்க உறுதியளித்து குறைவான பெருநிறுவன வரியைத் தொடர்வதை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெற்றிருக்கிறது என்பது தெளிவாகிறது.

இறுதியாக, பியானா பெயில் மற்றும் பசுமைக் கட்சியினரின் குற்றங்களில் இருந்து அகன்று விட்டால் அப்போது, கோரப்படும் சமூக வெட்டுகளைத் திணிப்பதற்கு ஏதுவான நிலை தங்களுக்குக் கிட்டும் என்பதான ஒரு நம்பிக்கையில் எதிர்க் கட்சிகள் ஊக்குவிக்கப்படுகின்றன. 

இந்த மேலாதிக்க களிப்பாட்டத்தில் முன்னணிப் பாத்திரத்தை தொழிற்சங்கங்களும் நடுத்தர வர்க்க போலி-இடது அமைப்புகளில் இருக்கும் அவர்களது வக்காலத்துவாதிகளும் ஆற்றுகின்றனர். இவை நெருக்கடியின் ஒவ்வொரு புள்ளியிலும் வெட்டுகளுக்கான பாரிய வெகுஜன எதிர்ப்பை தணித்து பிளவுபடுத்துவதற்கும் வங்கிகளின் வேலைத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு மாற்று உத்திகளுக்கு வழிவகை செய்து தரவும் தலைப்பட்டிருக்கின்றன. ஜேர்மன், பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் தொழிற்சங்கங்கள் எல்லாம் கிரீஸ் மற்றும் அயர்லாந்தில் இருக்கும் தங்களது சக தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஒரு விரலைக் கூட உயர்த்தவில்லை என்றால், அயர்லாந்தின் தொழிற்சங்கங்கள் அயர்லாந்தின் முதலாளித்துவத்தை ஸ்திரப்படுத்துவதற்கு வேலைநிறுத்தங்களுக்கு நான்கு வருடத் தடை, ஊதிய உயர்வு நிறுத்தம், மற்றும் ஆயிரக்கணக்கான வெலை வெட்டுகள் ஆகியவற்றுக்கு உடன்படும் முன்கண்டிராத நடவடிக்கையை மேற்கொண்டனர்.  

நிதிய உயரடுக்கைக் காப்பதற்கு முதலாளித்துவ அரசாங்கங்கள் தூண்டி விடும் தேசியவாதம் மற்றும் மேலாதிக்கவாதத்தை உழைக்கும் மக்கள் தீர்மானகரமாய் நிராகரிக்க வேண்டும். ஐரோப்பாவெங்கிலும் மற்றும் உலகெங்கிலும் இருக்கும் தொழிலாளர்களும் இளைஞர்களும் போராடுவதற்கான தங்களது விருப்பத்தை விளங்கப்படுத்தியிருக்கின்றனர். ஆனால் இந்த போராட்டங்கள் எல்லாம் ஐரோப்பாவின் சமூக ஜனநாயகக் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் அவர்களது போலி-இடது கூட்டாளிகளுடன் முறித்துக் கொள்வதன் அடிப்படையில் மட்டுமே வெற்றி பெற முடியும். இது ஐரிஷ்களுக்கும், கிரேக்கர்களுக்கும், ஜேர்மனியர்களுக்கும், பிரெஞ்சுக்காரருக்கும் மற்றும் பிரிட்டிஷாருக்கும் இடையிலான மோதலோ அல்லது ஐரோப்பியர்களுக்கும் அமெரிக்கர்களுக்கும் இடையிலான மோதலோ அல்ல. மாறாக ஒருபுறத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கும் மறுபுறத்தில் நிதிய மூலதனம் மற்றும் அதன் நாகரிகமான அரசியல் சேவகர்களுக்கும் இடையிலான மோதலே ஆகும்.

வறுமை, சர்வாதிகாரம் மற்றும் போர் ஆகியவை கொண்ட ஒரு எதிர்காலத்திற்கான ஒரே மாற்று ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தின் (ஊக இலாபங்களை பறிமுதல் செய்வது, செல்வந்தர்கள் மீது சுமை கூட்டி உழைக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் வரி அமைப்புகளை அதிரடியாக மாற்றியமைப்பது, தேசியக் கடன்களை மறுதலிப்பது, வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களைப் பறிமுதல் செய்து அவற்றை தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ்வரக் கூடிய மக்களுக்குச் சொந்தமான நிறுவனங்களாக மாற்றுவது ஆகியவை இதில் இடம்பெற்றிருக்கும்) அடிப்படையில் ஐக்கியப்படுவது மட்டுமே.

ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகள் என்னும் வடிவத்தில் மட்டுமே ஐரோப்பாவின் முற்போக்கான ஒருமைப்பாடு சாத்தியமாகும். உலகளவில் இத்தகையதொரு முன்னோக்கை முன்னெடுத்துச் செல்லக் கூடிய ஒரே அரசியல் அமைப்பு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே. உலக சோசலிச வலைத் தளத்தை வாசிப்பதற்கும் ஆதரவளிப்பதற்கும், நா.அ.அ.கு. பிரிவுகளின் கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டங்களைப் படிப்பதற்கும், சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியில் இணைவதற்கும் கட்டியெழுப்புவதற்கும் உழைக்கும் மக்களுக்கு மற்றும் இளைஞர்களுக்கு நாங்கள் அறைகூவல் விடுக்கிறோம்.