சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : அயர்லாந்து

Irish government moves to push through austerity measures

சிக்கன நடவடிக்கைகளை முன்தள்ளி அயர்லாந்து அரசாங்கம் நகர்வு

By Jordan Shilton
24 November 2010

Use this version to print | Send feedback

அயர்லாந்தின் Fianna Fáil -பசுமைக் கட்சி அரசாங்கத்தின் மீது, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவை ஒரு பல பில்லியன் யூரோ பிணை எடுப்புப் பொதிக்கு உடன்பட்டுள்ள விதிகளைச் சுமத்த முற்படுகையில் அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.

திங்களன்று பசுமைவாதிகள் தாங்கள் அரசாங்கத்தை விட்டு நீங்க இருப்பதாகவும் ஜனவரி இறுதியில் ஒரு முன்கூட்டிய பொதுத் தேர்தல்களை நாட இருப்பதாகவும் அறிவித்தனர். Taoiseach (பிரதம மந்திரி) பிரயன் கோவன் மற்றும் அவருடைய அரசாங்கம் பற்றிய விமர்சனங்களும் Fianna Fáil பாராளுமன்ற உறுப்பினர்களிடம் (Teachta Data) இருந்து அதிகரித்துள்ளன. பலரும் அவர் இராஜிநாமா செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர். இரு நடவடிக்கைகளுமே எதிர்க்கட்சிகள் உடனடியாகப் பொதுத் தேர்தல்களைத் தாமதப்படுத்தும் நோக்கத்தைத்தான் கொண்டுள்ளன.

இத்தகைய முறையீடுகள் சிக்கன நடவடிக்கைகளில் அடிப்படை வேறுபாடு எதையும் வெளிப்படுத்தவில்லை. அவை இன்னும் 15 பில்லியன் ஈரோக்கள் செலவு வெட்டுக்களை 2014க்குள் செயல்படுத்தும். மாறாக இவை 2008ல் இருந்து கடும் சிக்கன வரவு-செலவுத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக மக்களிடையே பெரும் செல்வாக்கிழந்துள்ள தற்போதைய அரசாங்கம் இனியும் அரசாங்கத் திவால் என்னும் சந்தைகள் அச்சத்தைப் போக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் நிலையில் இல்லை என்ற கவலைகளைத்தான் பிரதிபலிக்கின்றன.

அரசாங்கத்தில் இருந்து விலகும் தங்கள் விருப்பத்தை அறிவித்தபோதே, பசுமைவாதிகள் தாங்கள் முதலில் தங்கள் முழு ஆதரவையும் இன்று வெளியிடப்படவிருக்கும் நான்கு ஆண்டுச் சிக்கன நடவடிக்கைக்கு முழு ஆதரவையும் தருவதாகக் கூறியுள்ளனர். அடுத்த ஆண்டு வரவு-செலவுத் திட்டடிற்கும் அவர்கள் ஆதரவு கொடுப்பர். அது பாராளுமன்றத்தில் டிசம்பர் 7ம் தேதி அளிக்கப்பட உள்ளது. கட்சித் தலைவர் John Gormley ஒரு அறிக்கையில், “நாட்டில் அரசாங்கம் இல்லாமல் செய்வது, அதுவும் இப்பிரச்சினைகள் தீர்க்கப்படாத நிலையில், என்பது பெரும் சேதம் ஏற்படுத்தும், மற்றும் நம் பாதுகாப்புக் கடமைகளையும் தகர்க்கும்என்று அறிவித்துள்ளார்.

திங்களன்று மாலை, 2011 வரவு-செலவுத் திட்டம் இயற்றும் வழிவகை முடிந்த பின் பொதுத் தேர்தல்களுக்கு அழைப்பு விட இருப்பதாக கோவன் கூறினார். இது அடுத்த ஆண்டு நடைபெறக்கூடும். RTE வானொலியின் Morning Ireland  ல் செவ்வாயன்று கொடுத்த கருத்துக்களில், போக்குவரத்து மந்திரி நோயல் டெம்ப்சி EU மற்றும் IMF இல் இருந்து கிடைக்கக் கூடிய ஆதரவு இந்த வழிவகை தாமதப்பட்டால் ஆபத்திற்கு உட்படக்கூடும் என்று எச்சரித்துள்ளார். “நம்மைப் பொறுத்தவரை எப்பொழுதும் செய்யலாம் என்ற ஆடம்பரத்திற்கு இடம் இல்லை. நாம் உதவி கேட்டோம், நான்காண்டுத் திட்ட அடிப்படையில் அது கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இந்த வரவு-செலவுத் திட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் உள்ளது. அதை நாம் செய்யமுடியாவிட்டால் உதவி கிடைக்காது.”

இந்த இறுதி எச்சரிக்கை EU பொருளாதார மற்றும் நிதிப் பிரிவுகளின் ஆணையரான ஒல்லி ரெஹ்ன் ஆதரவைக் கொண்டுள்ளது. அவர் அயர்லாந்து அரசாங்கம் வரவு-செலவுத் திட்டத்தை இயற்றிவிட்டு நான்கு ஆண்டுத் திட்டத்தையும் விரைவில் அளிக்க வேண்டும் என்றார்.

திங்களன்றே, இரு சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்திற்கு பாராளுமன்றத்தில் குறைந்த பெரும்பான்மையை அளிப்பவர்கள், தாங்கள் 2011 வரவு-செலவுத் திட்டத்தை ஒருவேளை ஆதரிக்காது விடலாம் என்று தெரிவித்துள்ளனர். அதையொட்டி அரசாங்கத்தின் பெரும்பான்மை இன்னும் குறையலாம், Fianna Fall நாளை தென்மேற்கில் ஒரு இடைத் தேர்தலில்  எதிர்பார்த்துள்ளபடி தோற்றால், இன்னும் சரியும்.

தலைமைக்கான சவால் என்பதற்கான வாய்ப்பும் விவாதிக்கப்படுகிறது. நேற்று இரவு Fiannal Fail பாராளுமன்ற உறுப்பினர்கள் (TD) கூட்டத்திற்குப் பின்னர் கோவன் இராஜிநாமா வேண்டும் என்று கருதியவர்கள் கூடியதாகவும் அவருக்குப் பின் எவர் வரலாம் என்று விவாதித்ததாகவும் தகவல்கள் சுற்றி வந்தன. கோவனைப் பற்றிய விமர்சனங்கள் பொதுவாக அவருடைய தலைமையைப் பற்றி சந்தேகம் எழுப்பிவந்துள்ள கீழ் சபைகாரர்களிடம் மட்டும் என்று இல்லாமல். செய்தி ஊடகம், முன்னாள் கோவன் ஆதரவாளர்கள் என்று விவரித்துள்ளவர்களிடம் இருந்தும் வந்துள்ளது.

அயர்லாந்து அரசாங்கத்தின் நிதியத் தன்மை உறுதியாக இராது என்பது பற்றிய புதுப்பிக்கப்பட்ட சந்தைக் கவலைகளின் பின்னணியில் அரசியல் உறுதியற்ற தன்மை ஆழ்ந்துவிட்டது. “தொற்று”, யூரோ தப்பிப்பிழைத்தல் போன்றவை பற்றிக்கூட பெருகிய முறையில் அச்சங்கள் ஒலிக்கின்றன.

தர மதிப்பீட்டு அமைப்பான Moody’s, ஐரோப்பிய ஒன்றிய, சர்வதேச நாணய நிதியப் பிணை எடுப்பு இன்னும் அதிக வங்கிக் கடன்களை அரசிற்கு மாற்றத்தான் வழிவகுக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் அயர்லாந்து அடுத்த மாதம் அதன் தரமதிப்பில் பல படிகள் இறங்கக்கூடும், அரசாங்கம் வரவு-செலவுத் திட்டத்தை இயற்றும் திறனைக் காட்ட முடிந்தாலும் கூட. இதை எதிர்கொள்கையில், செவ்வாயன்று டப்ளினில் பங்குச் சந்தைகள் சரிந்தன. வங்கிப் பங்குகள் 20 சதவிகிதம் சரிந்தன. Allied Irish Bank என்னும் அதிகப் பிணை எடுப்புப் பொதியை இதுவரை பெற்றுள்ள மூன்று வங்கிகளில் ஒன்றில் அரசாங்கம் அதன் பங்கை அதிகரிக்கும் கட்டாயத்திற்கு உட்படும் என்ற அச்சங்கள் பெருகியுள்ளன.

அயர்லாந்தின் 10 ஆண்டு bond பத்திரத்தின் மீதான வட்டி விகிதம் மிக அதிமாக 8.65 சதவிகிதம் என்று உயர்ந்துள்ளது அதன் பொருளாதாரத்தை மீட்பதற்கான பிணைஎடுப்பு வாய்ப்பு பற்றி ஒரு எதிர்மறைத் தீர்ப்பு ஆகும். மற்ற நாடுகளும் இதேபோல் அவதியுற்றுள்ளன. ஸ்பெயின் கடனின் ஏலம் யூரோ சகாப்தத்திலேயே மிக அதிகமான முறையில் அதன் கடன்கள் மீது முக்கிய முதலீட்டாளர்கள் குறிவைத்துள்ளதை குறிக்கிறது.

யூரோ 1.8 சதவிகிதம் குறைந்து 1.338 டொலர் என்ற மதிப்பைக் கொண்டது. இது, அதன் நடுத்தர காலத்தில் தப்பிப்பிழைப்பது பற்றிய ஊகத்தை எழுப்பியுள்ளது. Baring Asset Management நிறுவனத்தின் நிரந்தர வருமானம், நாணயப் பிரிவின் தலைவரான Alan Wilde, பைனான்சியல் டைம்ஸிடம், “யூரோப் பகுதிக்கு தொற்று என்பது பெரிய பிரச்சினை. அயர்லாந்து பற்றிய கவலைகள் குறையாது, மாறாக அதிகரிக்கும். நெருக்கடி போர்த்துக்கல்லுக்கும் பின்னர் ஸ்பெயினுக்கும் பரவும். ஸ்பெயின் விரைவில் பிணை எடுக்கப்பட வேண்டும் என்றால் அது யூரோப் பகுதி முழுவதற்கும் கவலைகளை எழுப்பும்.”

ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல், பிரிட்டனின் Lloyds TSB வங்கியின் பிரதிநிதிகள்அயர்லாந்தில் பிணை எடுப்பு ஐரோப்பிய நெருக்கடியை தீர்க்கும்என்பதில்கிட்டத்தட்ட பூஜ்ய நம்பிக்கைதான் உள்ளதுஎன்று கூறியுள்ள நிலையில், தொடர்ச்சியான ஐரோப்பிய பிணை எடுப்புக்கள் வரக்கூடியது என்பதுமிகவும் ஆபத்தானதுஎன்றார்.

வரவு-செலவுத் திட்டத்தை இயற்றுவது பற்றி அரசாங்கத்தின் திறன் சந்தேகத்திற்கு உட்பட்டுள்ள நிலையில், கோவன் எதிர்க்கட்சிகளின் ஆதரவையும் நாட முற்பட்டுள்ளார். இதில் உடன்பாடு ஏற்படக்கூடும் என்று வர்ணனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய Fine Gael, தொழிற் கட்சி பிரதிநிதிகளுடன் கோவன் தொடர்பு கொண்டு, பாராளுமன்ற உறுப்பினர்கள்தேசிய நலன்களில்குவிப்புக் காட்ட வேண்டிய தேவை பற்றி விவாதித்தார்அதாவது, EU/IMF ஆணையைச் செயல்படுத்துவதில். எதிர்க்கட்சி பிரதிநிதிகளை EU உடனான விவாதங்களில் பங்கு பெறுவதற்கும் அவர் அழைத்துள்ளார். இந்த நடவடிக்கைக்கு File Gael தலைவர் எண்டா கென்னி ஒப்புக் கொண்டுள்ளார்.

Fine Gael உடைய செய்தித் தொடர்பாளர் எதிர்க்கட்சி அரசாங்கத்துடன் ஒரு உடன்பாட்டைக் கொண்டு அவர்களுடைய ஒப்புதல் கொடுக்கப்பட்டால் அரசாங்கம் வரவு-செலவுத் திட்டத்தை இயற்றிவிடும் வாய்ப்பு உண்டு என்று கூறியுள்ளார். இந்தக் கட்சி தான் தேர்தலுக்குப் பின்னர் புதிய அரசாங்கத்தை அமைக்கக்கூடும் என முன்னனுமானிக்கும் கட்சியாகும். இது அடுத்த ஆண்டு செலவுத் திட்டங்களில் இருந்து 6 பில்லியன் யூரோக்களைக் குறைப்பதற்கு முழு ஆதரவு கொடுப்பதுடன், உண்மையில் முழு 15 பில்லியன் குறைப்புப் பொதிக்கும் இசைவு தருகிறது.

இத்தகைய தந்திரோபாயங்கள் கட்சியின் கோரிக்கையான உடனடிப் பொதுத் தேர்தல்களுக்கு முற்றிலும் முறையாக முரணானது ஆகும். ஆனால் இவை அதே அடிப்படை உந்துதல்களைக் கொண்டுள்ளன. கென்னி கூறினார்: “இப்பொழுது தேவை உடனடிப் பொதுத் தேர்தல்தான் அதையொட்டி ஒரு தெளிவான பாராளுமன்றப் பெரும்பான்மையுடன் ஒரு அரசாங்கம் நான்கு ஆண்டுகள் பொருளாதாரத் திட்டத்தை தயாரிக்க முடியும், EU மற்றும் IMF உடன் பேச்சுவார்த்தைகளை முடிக்க முடியும் மற்றும் 2011க்கு ஒரு வரவு-செலவுத் திட்டத்தையும் இயற்ற முடியும்.”

நேற்று பாராளுமன்றத்தில் கென்னி கோவன் வரவு-செலவுத் திட்டத்தை  ஒருவாரம் முன்பாகவே சமர்ப்பிக்குமாறு கோரினார். இவ்விதத்தில் இந்த வழிவகை கிறிஸ்துமஸ்ஸிற்கு முன்பு முடிவடையும், தேர்தலுக்கு வழியமைக்கும் என்ற நம்பிக்கையில் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் தயாரித்துள்ள வரவு-செலவுத் திட்டத்திற்கு ஏற்கனவே தொழிற் கட்சி ஆதரவு இல்லை என்று கூறியிருந்தாலும்கூட, அது ஆழ்ந்த வெட்டுக்களுக்கு முழு ஆதரவைக் கொடுக்கிறது. இது Fine Gael உடன் புதிய அரசாங்கத்தில் அநேகமாகச் சேரலாம். அதன் பின் இது நிதிய உயரடுக்கின் கோரிக்கைகளை நிறைவேற்றும். தொழிற் கட்சித் தலைவர் Eamon  Gillmore அபத்தமான முறையில் EU/IMF ஆதரவுப் பொதிக்கு வாதிட்டுள்ளார். இதற்கான பேச்சுவார்த்தைகள் பற்றி உத்தியோகபூர்வமாக ஞாயிறன்று அறிவிப்பு வந்துள்ளது. இது அயர்லாந்தில் நிலைமையை வலுப்படுத்துவதுடன் விவாதிக்கப்படும் வெட்டு அளவுகளையும் தேவையற்றதாக ஆக்கியுள்ளது.

வெட்டுக்களைக் குறைப்பதாகக் கூறி ஆதாயம் அடைய முற்படும் Sinn Fein, உண்மையில் வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவிகிதத்திற்குள் இருக்குமாறு குறைக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்கு ஆதரவு கொடுக்கிறது. இதைச் செய்வதற்கான கால அவகாசம் 2016 வரை நீட்டிக்கப்பட வேண்டும் என்று மட்டும் அது கோருகிறது. அதே நேரத்தில் தேசிய சார்புடைய வனப்புரைகள் பெருகிவிட்டன, கட்சித் தலைவர் Gerry Adams இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் தன் இடத்தை விட்டுவிடுவதாகவும், அதனால் வரவிருக்கும் தேர்தலில் அயர்லாந்துப் பாராளுமன்றத்தில் நிற்கும் விருப்பத்தையும் அறிவித்துள்ளார்.

பாராளுமன்றக் கட்சிகள் அனைத்தும் தங்கள் ஆதரவை வரவு-செலவுத் திட்டம் குறைப்பிற்கு கொடுத்திருக்கையில், தவிர்க்க முடியாமல் தீவிரமாகக் கூடிய மக்கள் எதிர்ப்புக்களை அடக்கும் முக்கிய பங்கு தொழிற்சங்கங்கள் மற்றும்இடதுஎன அழைக்கப்படும் கட்சிகளிடம்தான் இருக்கும். தொழிற்சங்கங்கள் இந்த சனிக்கிழமை ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.இதைவிடச் சிறந்த வழி ஒன்றுள்ளதுஎன்ற தலைப்பின்கீழ் அது நடைபெற உள்ளது. ஆனால், தொழிற்சங்கங்கள் செலவு வெட்டுக்களை எதிர்க்கவில்லை. இது நெருக்கடி தொடங்கியதில் இருந்தே அவற்றின் பங்கிலிருந்து நன்கு புலனாகும். சமீபத்திய நாட்களில், முக்கிய அதிகாரிகள் தொழிற்சங்கங்களும் EU மற்றும் IMF உடனான பேச்சுவார்த்தைகளில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இது சமூக நிலைமைகளை தகர்ப்பதற்கு அவர்கள் இன்னும் கூடுதலாக ஒத்துழைப்பதற்கான விருப்பத்தைத்தான் நிரூபிக்கிறது.