சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : அயர்லாந்து

The markets fall as Ireland reveals further austerity plan

அயர்லாந்து மேலும் சிக்கன நடவடிக்கையை வெளிப்படுத்துகையில் ஐரோப்பியச் சந்தைகள் சரிகின்றன                               

By Jordan Shilton
25 November 2010

Use this version to print | Send feedback

அயர்லாந்து அரசாங்கம் அதன் நான்காண்டுமீட்புத் திட்டத்தைநேற்று அறிவித்தது. இது 2014 க்குள் அதன் வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவிகிதத்திற்கு குறைத்துவிடும் நோக்கம் கொண்டது. ஒரு பிணை எடுப்புப் பொதி அளிப்பதற்காக EU மற்றும் IMF கோரிய இச்சுமத்துதல் வரவு-செலவுத் திட்டக் குறைப்பை 15 பில்லியன் ஈரோக்களை --10 பில்லியன் ஈரோக்கள் செலவுகளை வெட்டுவதிலும், 5 பில்லியனை வரி உயர்வுகள் மூலமும் -- பெறும்.

இந்த நடவடிக்கைகள் தேவையான பாதிப்பைக் கொடுக்கவில்லை. ஏனெனில் ஐரோப்பா முழுவதும் சந்தைகள் சரிந்தன. மிகவும் கடன்பட்டுள்ள நாடுகளின் அரசாங்கப் பத்திரங்கள் மீதான வட்டி மீண்டும் உயர்ந்தது. வங்கிப் பங்குகளும் பெரிதும் சரிந்தன. அயர்லாந்தின் 10-ஆண்டுப் பத்திரத்திற்கான வட்டி விகிதம் 8.8 சதவிகிதம் என்று நேற்று பிற்பகல் உயர்ந்தது. இதில் கிரேக்கமும் மோசமான இடருக்கு உட்பட்டது.

அயர்லாந்து இன்னும் இரு வங்கிகளை—Allied Irish Bank மற்றும் Bank of Ireland என-- தேசிமயமாக்கும் கட்டாயத்தில் தள்ளப்படும் என்ற செய்தியை அடுத்து அச்சங்கள் பெருகின. அதே நேரத்தில் மிருகத்தனமான நடவடிக்கைகள் கூட அரசாங்கத்தை கடனைத் திருப்பக்கட்டுவதில் காப்பாற்ற முடியாது என்ற சந்தைகளின் முடிவையும் வெளிப்படுத்தியது. ஊகங்களில் பில்லியன் கணக்கானவற்றை இழந்துவிட்ட நிதிய ஒட்டுண்ணிகளுக்கு இன்னும் அதிகப் பணம் தேவைப்படுகிறது.

2011-2014 தேசிய மீட்புத் திட்டம் போருக்குப் பிந்தைய ஐரோப்பாவில் கொண்டுவரப்பட்ட சிக்கன நடவடிக்கைகளிலேயே மிகக் கடுமையானது என்று கருதப்படுகிறது. 10 பில்லியன் ஈரோக்கள் செலவுகளில் வரும் 4 ஆண்டுகளில் குறைத்தல் என்பது அரசாங்கச் செலவுகள் 2010 மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 49 சதவிகிதத்தில் இருந்து 2014ல் 36 சதவிகிதத்திற்க்குத்தான் குறையும் என்று காணப்படும். இது வரவு-செலவுத் திட்டங்களில் கால்பகுதிக்கும் மேலான சரிவிற்குச் சமமாகும். அதுவும் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ள 14.5 பில்லியன் ஈரோக்கள் பொதியையும்விட அதிகமாகும்.

இத்திட்டம் சமூக நலச் செலவுகளில் 2.8 பில்லியன் ஈரோக்கள் குறைக்கப்பட கோரியுள்ளது. அதே நேரத்தில் உத்தியோகபூர்வ வேலையின்மை என்பது 13 சதவிகிதமாக உள்ளது. அடுத்த ஆண்டு இதில் 780 மில்லியன் ஈரோக்கள்  குறைக்கப்படும். டிசம்பர் 7 வரவு-செலவுத் திட்டத்தில் இது உள்ளடங்கும்.

சுகாதாரம், கல்வி, நீதித்துறை, விவசாயத்துறை ஆகியவையில் குறைப்புக்கள் 3 பில்லியன் ஈரோக்கள் என்று இருக்கும். சுகாதார வரவு-செலவுத் திட்டத்தில் தற்பொழுது 6 பில்லியன் ஈரோக்களிலிருந்து 1.5 பில்லியன் ஈரோக்களாக குறைக்கப்படும். அதில் 6,000 வேலை இழப்புக்களும் அடங்கும்.

கல்விச் செலவின வெட்டுக்களில் பள்ளிகளுக்கான நிதியத்தில் 5 சதவிகிதக் குறைவு மற்றும் கல்லூரி, பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கான கட்டணம் 1,600 ஈரோக்களிலிருந்து 2,000 உயர்த்தப்படல் ஆகியவை அடங்கும்.

தொழிலாளர்களின் ஊதியத்தின் மீதும் அரசாங்கம் தாக்குதல் நடத்தும். குறைந்தபட்ச ஊதியம் ஒரு மணித்தியாலயத்திற்கு 1 ஈரோ என்று 12 சதவிகிதம் குறைக்கப்படும். பொதுத்துறை ஊதியச் செலவு 1.2 பில்லியன் குறையும். 13,200 வேலைகள் பொதுத்துறையில் இப்பொழுதில் இருந்து 2014க்குள் அகற்றப்பட்டுவிடும். 12,000 வேலைகள் ஏற்கனவே இத்துறையில் 2008ல் இருந்து அழிக்கப்பட்டுவிட்டன. இதன் பொருள் இறுதியாக மொத்தம் 25.000 வேலை இழப்புக்கள் ஆகும். பொதுத்துறையில் புதிதாக நுழைபவர்களுக்கு உடனடியாக 10 சதவிகித ஊதியக் குறைப்பு சுமத்தப்படும்.

வரிவிதிப்புச் சட்டத்தைப் பொறுத்தவரை, ஏழைகளும் குறைவூதியத் தொழிலாளர்களும் மிக அதிகமாக சிரமப்படுவர். வருமானவரி உயர்த்தப்பட்டு மொத்தம் 1.9 பில்லியன் ஈரோக்களாக இருக்கும். இதன் பொருள் 2012ல் 1 சதவிகிதம் அதிகம் என்பதாகும். வருமானவரி கொடுப்பதற்கு நுழைவுத் தளம் கிட்டத்தட்ட 18,000 ஈரோக்களிலிருந்து 15,000 ஈரோக்கள் என்று குறையும். மதிப்புக்கூட்டு வரியும் அதன் தற்போதைய உயர்ந்த அளவான 21 சதவிகிதத்திலிருந்து 2013ல் 22 சதவிகிதம் எனவும், 2014ல் 23 சதவிகிதம் என்றும் ஆகும். நீருக்கான புதிய கட்டணம் அறிமுகப்படுத்தப்படும். குறைவூதியத் தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த பல வரிச் சலுகைகள் அகற்றப்படும்.

ஓய்வூதியம் பெறுவோரும் தாக்குதலின் கீழ் வருகின்றனர். ஏனெனில் பொது ஓய்வூதியங்களில் 800 மில்லியன் ஈரோக்கள் குறைக்கப்படுகிறது. ஓய்வூதியம் பெறுவதற்கான வயது படிப்படியாக இப்பொழுதில் இருந்து 2028 க்குள் கடைசி ஆண்டில் 68 என உயர்த்துப்படும். இதையும்விட மோசமானது, நிதி மந்திரி பிரயன் லெனிஹன் அரசாங்கத்தின் ஓய்வூதிய நிதி வங்கிகளுக்கு உதவத் தேவையானால் பயன்படுத்தப்படும் என்று கூறியுள்ளதுதான்.

இந்தப் பணங்களை மதிப்பிடுகையில், அயர்லாந்தின் மக்கள் தொகை 4.5 மில்லியன்தான் என்பதை நாம் மனத்தில் கொள்ள வேண்டும். இந்த வெட்டுக்கள் அயர்லாந்தின் மொத்த உள்நாட்டு வருமானத்தில் பொதுத்துறை செலவுகளை 7.5 சதவிகிதமாக அரசாங்கம் குறைத்தது, பொதுத்துறை ஊதியத்தை 15 சதமாகக் குறைத்தது, குழந்தைகளுக்கான நலன்கள் 10 சதவிகிதத்தாலும் மற்றும் வேலையின்மை நலன்களை 4.1 சதவிகிதமாகக் குறைத்தது இது முன்னைய 14.5 பில்லியன் ஈரோக்கள் வெட்டுக்களை இருமடங்காக ஆக்கும். உதாரணமாக இது பிரிட்டனில் செய்யப்பட்டிருந்தால், 150 பில்லியன் பவுண்டுகளுக்குச் சமமாக இருக்கும். இப்பொழுது அந்த எண்ணிக்கையும் இருமடங்காக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் வணிக உயரடுக்கு பெருநிறுவன வரிவிகிதம் 12.5 தான் என்பதைத் தொடர்ந்து அனுபவிக்கும். ஆவணம் கூறுகிறது: “ஏற்றுமதிச் சார்புடைய செயல்களுக்கு குறைந்த பெருநிறுவன வரிவிதிப்பு என்பது 1950 களிலிருந்து நம் தொழில்துறைக் கொள்கையின் மையப் பகுதியாக உள்ளது. அதே போல் 12.5 சதவிகிதம் இப்பொழுது நம்முடைய சர்வதேசஅடையாள முத்திரையின்ஒரு பகுதியாகும்.” இந்த ஆவணம் பெருநிறுவன வரிவிதிப்புஎச் சூழ்நிலையிலும் உயர்த்தப்பட மாட்டாதுஎன்று உறுதியளிக்கிறது.

பரந்த பகுதிகள் மீது தாக்குதல் மற்றும் வெட்டுக்களின் ஆழ்ந்த தன்மை இருந்தாலும், இந்த நடவடிக்கைகள் அரசாங்கத் திவால்தன்மையைத் தடுப்பதற்குப் போதுமான செயல்களில் ஒரு சிறுபிரிவாகத்தான் இருக்கும். வங்கிப் பிணைஎடுப்பிற்கான மொத்தத் தொகை பற்றிய மதிப்பீடுகள் தொடர்ந்து உயர்கின்றன. ஒரு வர்ணனையாளர் புதன்கிழமை அன்று கிட்டத்தட்ட 120 பில்லியன் ஈரோ நிதி EU/IMF இடமிருந்து தேவைப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Standard & Poor’s செவ்வாயன்று திடீரென அதன் அயர்லாந்துக்கான கடன் தரத்தைக் குறைத்து விட்டது. வருங்காலத்தில் எதிர்மறைப் பார்வையை தக்க வைக்கும் வகையில் அரசாங்கத் திட்டம் எதன்மீதும் தனக்கு நம்பிக்கை இல்லை என்பதைத்தான் இது விளக்குகிறது.

சந்தைக் கவலைகளும் அயர்லாந்து வங்கிகளுடைய பங்குகள் சரிவைக் கண்டன. AIB மற்றும் Bank of Ireland இரண்டின் பங்குகளும் 20 சதவிகிதம் குறைந்தது. அரசாங்கம் இவற்றின் பெரும்பான்மையான பங்குகளை எடுத்துக் கொண்டு இன்னும் சூதாட்டக் கடன்களுக்கு பொறுப்பேற்கும் கட்டாயம் உள்ளது என்ற அறிக்கைகளை அடுத்து இத்தகவல்கள் உறுதிபடுத்தப்பட்டுள்ளன. இத்திட்டம் வங்கிப் பிணை எடுப்பின் செலவுகளை எடுத்துக் கொள்வதை மட்டுமே குறிப்பிடுகிறது. வரும் காலத்தில் இந்த எண்ணிக்கை உறுதியாக உயரும், அதையொட்டி அரசாங்கத்தின் சேமிப்புக்களையும் அதிகம் கோரும்.

இன்னும் அதிக வெட்டுக்களுக்குச் சந்தை அழுத்தம் வந்துள்ளதைத் தவிர, இந்தக் கணிப்புக்கள் மிக அதிக நம்பிக்கையுடன் அரசாங்கம் கொண்டுள்ள எடுகோள்களின் அடிப்படையில் உள்ளன. பைனான்சியில் டைம்ஸ் கருத்துப்படி பல பொருளாதார வல்லுனர்கள் 2011ல் 1.75%, 2012ல் 3.25% , 2013ல் 3%, 2015 ல் 2.75% வளர்ச்சி விகிதம் என்று கருதப்படுபவை அடையப்படுவது கடினம் என்று நினைக்கிறார்கள்.

அரசியல் எதிர்ப்புக்களின் விடையிறுப்பும் மௌனமாக்கப்பட்டுள்ளது. ஒரு சிலரே திட்டத்தின் முக்கியக் கருத்து பற்றி குறைகளைக் கூறியுள்ளனர். Fine Gael உடைய பிரதிநிதியும் வணிகமுயல்வோர் துறை பற்றிய செய்தித் தொடர்பாளருமான Kieran O’Donnel, RTE வானொலியிடம் தன்னுடைய கட்சி திட்டத்தை மாற்றாது என்றும் சிலபகுதிகளைதிருத்த மட்டுமே செய்யும் என்று கூறினார். ஆனால் அவை என்ன என்பது பற்றி அவர் கோடிட்டுக் காட்டவில்லை. நிதியப் பிரிவிற்கான செய்தித் தொடர்பாளர் Michel Noonan, Fine gael 2014ல் அடையவேண்டிய GDP யில் 3 சதவிகிதம் இலக்கிற்கு கட்டுப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தினார். ஆனால் கட்சித் தலைவர் எண்டா கென்னி சில நடவடிக்கைகள்மீண்டும் பேச்சுவார்த்தைகளுக்குஐரோப்பிய ஆணையத்துடன் உட்படுத்தப்படலாம் என்று கூறினார். இது எவ்விதத்திலும் சுமத்தப்படும் மிருகத்தன நடவடிக்கைகளை மாற்றாது.

தொழிற்சங்கங்கள் இதற்கான எதிர்ப்பைக் கண்காணிக்கும் பொறுப்பில் உள்ளவை, தவிர்க்க முடியாமல் இது தொழிலாள வர்க்கத்தினுள் தூண்டுதலை ஏற்படுத்தும். ஐரிஷ் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவரான David Begg அதற்கு தன் உறுதிமொழியை அளிக்கும் வகையில் TEEU எனப்படும் தொழில்நுட்பப் பொறியியல் மின்துறைத் தொழிற்சங்கப் பொதுச் செயலாளர் Earnon Devoy முன்னாதாகக் கூறிய கருத்துக்களை மறுத்துள்ளார். “இந்நாட்டில் நாம் குறிப்பிடத்தக்க சமூக அமைதியின்மையின் விளிம்பில் உள்ளோம், பல தசாப்தங்களாக இங்கு இத்தகைய நிகழ்வு காணப்படவில்லைஎன்று Earnon Devoy எச்சரித்திருந்தார்.

இதை பெக் மறுத்து, “தொழிலாளர்கள் தெருக்களில் போக விரும்பவில்லை என்ற கருத்து ஏதும் இல்லை, அவர்கள் ஒன்றும் தேவையில்லாமல் கட்டிடங்களைச் சேதப்படுத்தி கார்களை எரிக்கவும் விரும்பவில்லைஎன்றார்.

அனைத்தும் தவிர்க்க முடியாதவை என்று ஒன்றும் மக்கள் நினைக்கவில்லை. ஒரு புரட்சி வேண்டாம் என்றும் சட்டத்தை மதிக்கும் தன்மையுடையவர்களாகவும் அவர்கள் உள்ளனர் என்பதுதான் குறிப்பிடத்தக்கதுஎன்று Reuters Insider தொலைக்காட்சிக்கு அவர் கூறினார்.

பெக்கின் குறிப்பிட்ட பொறுப்புடைய அரசாங்கம் மற்றும் முதலாளித்துவ வர்க்கத்திற்கு ஒரு புரட்சிகரச் சவால் வெளிப்படுவதைத் தடுப்பது ஆகும். ஆனால் இது பெரும் சவால் நிறைந்த செயல் ஆகும். தொழிற்சங்கங்களும் பெரிய அளவில் பல ஆண்டுகளாக முதலாளிகளுடனும் பல அரசாங்கங்களுடனும் ஒத்துழைத்ததினால் இழிவுற்றுள்ளன. இது நெருக்கடி தொடங்கியவுடன் அவர்கள் Croke Park Agreement ல் Fianna-Fail/பசுமைக் கட்சிக் கூட்டணியுடன் செய்து கொண்ட உடன்பாட்டில் உச்சக் கட்டத்தை அடைந்தது. இந்த உடன்பாடு வேலைநிறுத்தம் இல்லை என்ற ஒப்பந்தம் மற்றும் முந்தைய சுற்று வெட்டுக்களுக்கு ஒத்துழைப்பு ஆகியவற்றை இன்னும் குறைப்புக்கள் இல்லை, ஊதியக் குறைப்பு இல்லை, கட்டாய பணிநீக்கங்கள் இராது என்பதற்கு ஈடாகக் கையெழுத்திடப்பட்டது.

Croke Park உடன்பாடு நீடிக்கும், ஆனால் 12 மாதங்களில் மறுபரிசீலனைக்கு உட்படும் என்று லெனிஹன் வலியுறுத்தியுள்ளார். உண்மையில் இது மீறப்படுவதில்தான் மதிக்கப்படுகிறதே ஒழிய செயல்படுவதில் இல்லை. ஏனெனில் குறைக்கப்படும் ஊதியங்களும் ஏராளமான பணிநீக்கங்களும் அதைத்தான் சுட்டிக்காட்டுகின்றன. இப்பொழுது அது குறிப்பதெல்லாம் அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஒத்துழைத்து நிற்க வேண்டும் என்ற விருப்பம்தான். புத்தாண்டில் Croke Park Agreement க்கு பொருளாதார நெருக்கடியினால் முழுப் புதிய பந்து விளையாட்டு இருக்கும். உடன்பாட்டை இயற்றியவர்களில் ஒருவரே இத்தகைய கருத்தைக் கூறியுள்ளார்

தொழிலாளர் துறை ஆணையத் தலைமை நிர்வாகி Kieran Mulvey, Oireachatas Committee on Enterprise, Trade and Innovation ல் பேசுகையில், உடன்பாடு இல்லாவிட்டால், சுகாதாரப் பணி நிர்வாகம் கோரிய 5,000 வேலைக் குறைப்புக்களைவெளிப்படையான போராட்டம்இல்லாமல் அடையப் பெற்றிருக்க முடியாது என்றார். ஆனால் இந்த உடன்பாடுபுதிய பந்து விளையாட்டைஅடுத்த ஆறு மாதங்களில் காணும். ஏனெனில் சுகாதாரம், கல்வி, ஆட்சிப்பணித்துறை, உள்ளூர் அதிகாரங்கள் ஆகியவற்றில் உள்ள அமைப்புக்கள் குறிப்பிடத்தக்க செலவுக் குறைப்புத் திறன் அளவுகளை எதிர்கொள்ளும்.

அயர்லாந்தின் சிறு, நடத்தர வணிக முயல்வோர் சங்கம், Croke Park Agreement ஐத் தக்க வைக்கும் முடிவு பொருளற்றது என்றது. பொதுத்துறையை நடத்துவதற்கான செலவுகள் பற்றித் தீர்வு காண்பது என்பது எப்பொழுதும்இழக்கப்பட்டுவிட்ட வாய்ப்புக்கள்என்று அமைப்பு குறைகூறியுள்ளது.