சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா

US exploits Korean clash to step up pressure on China

சீனாவிற்கு அழுத்தத்தை அதிகரிக்க கொரிய மோதலை அமெரிக்கா சுரண்டிக்கொள்கிறது

By John Chan             
25 November 2010

Use this version to print | Send feedback

செவ்வாயன்று இரு கொரிய நாடுகளுக்கும் இடையே பீரங்கிக் குண்டுத் தாக்குதல்கள் ஏற்பட்டதை அடுத்து, கொரிய தீபகற்பத்தில் வந்துள்ள அழுத்தங்களைப் பயன்படுத்தும் விதத்தில், ஒபாமா நிர்வாகம் ஆசிய-பசிபிக் பகுதியில் மேலாதிக்கப் போட்டியில் வெளிப்பட்டுவரும் வாஷிங்டனின் போட்டி நாடாகிய சீனா மீது கூடுதல் அழுத்தத்தைக் கொடுக்க முற்பட்டுள்ளது.

யிவோன்பியோங் தீவில் இரு கட்டுமானத்துறைத் தொழிலாளர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து செவ்வாயன்று தென்கொரிய நாட்டின் இறப்பு எண்ணிக்கை 4 என உயர்ந்துள்ளது. வட கொரியாவின் பீரங்கித் தாக்குதலில் இரு தென்கொரிய படையினர்களும் கொல்லப்பட்டனர். தென் கொரிய இராணுவம்பதிலுக்குத் தாக்குதல் நடத்தியதாக”, 80 சுற்றுக்கள் குண்டுகள் போடப்பட்டதாகக் கூறப்படுவதில் வட கொரியாவிற்கு ஏற்பட்டுள்ள சேதத்தின் பரப்பு தெளிவாகத் தெரியவில்லை. ஆசிய மற்றும் சர்வதேச பங்குச் சந்தைகள் புதனன்று சரிந்தன. இது இன்னும் கூடுதலான இராணுவத் தாக்குதல்கள் மற்றும் முக்கிய சக்திகளின் தலையீடு வரக்கூடும் என்ற அச்சங்களைப் பிரதிபலிக்கிறது.

அழுத்தங்களைக் குறைப்பதற்கு செயல்படுவதற்கு முற்றிலும் மாறாக, ஒபாமா நிர்வாகம் புதனன்று போர் விமானத் தளத்தைக் கொண்ட USS George Washington மற்றும் ஐந்து போர்க் கப்பல்களை வட கடலுக்கு தென் கொரியாவுடன் கூட்டுப் பயிற்சிகள் நடத்த அனுப்பியுள்ளது. நேற்று நியூ யோர்க் டைம்ஸ் ஜூலை மாதமே பயிற்சிகளில் பங்கு பெறுவது திட்டமிடப்பட்டிருந்தது என்று கூறினாலும், “இரு நாடுகளின் ஜனாதிபதிகளும் நவம்பர் 28-டிசம்பர் 1 என்ற குறிப்பிட்ட தேதிகளை நிர்ணயித்துள்ளனர். இது வட கொரியப் பீரங்கித் தாக்குதலுக்கு விடையிறுப்பு ஆகும்என்று எழுதியுள்ளது.

ஜூலை மாதம் சீனா மஞ்சள் கடலில் USS George Washington நிலைப்பாடு கொள்வது குறித்து அது ஒரு தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று கூறி கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தது. அப்பகுதியில் சீனா தன்னுடைய முக்கிய இராணுவப் பயிற்சிகளை பெய்ஜிங்கின் தீவிர உணர்வுகளை அடிக்கோடிட்டுக் காட்டுவதற்கு நடத்தியது. அதையொட்டி அமெரிக்கா, தென் கொரிய கடற்படைப் பயிற்சிகள் பின்னர் ஜப்பான் கடலுக்கு மாற்றப்பட்டன. ஒபாமா நிர்வாகம் பலமுறையும் தான் மீண்டும் விமானத் தளம் உடைய கப்பலை மஞ்சள் கடலில் நிலைநிறுத்த இருப்பதாகக் கூறிவந்துள்ளது. எனவே, இரு கொரியாக்களுக்கும் இடையே தீவிர அழுத்தங்களுக்கு இடையே இந்த விமானத்தளமுடைய கப்பல் நிலைநிறுத்தப்பட்டுள்ள நேரம் குறிப்பிடத்தக்க வகையில் தூண்டுதல் தன்மை கொண்டதாகும்.

செய்தி ஊடகத் தகவல்களின்படி தென்கொரியாவில் பல சாதாரணக் குடிமக்கள் முழு அளவிலான போர் மூளக்கூடும் என்று அஞ்சுகின்றனர். இராணுவச் சேவையில் முதலாவது ஆண்டில் இருக்கும் மகனின் தாயான கிம் மி-சூக் கொரியா ஹெரால்டிடம் : “செய்தி வந்த கணத்திலேயே நான் மிகவும் பீதி அடைந்துள்ளேன். வட கொரியாவின் சிறு தூண்டுதல், இராணுவ நடவடிக்கைகள் பற்றிய அடையாளங்கள் கூட ஒரு வீரருடைய தாயின் மனத்தில் கவலையைத் தூண்டப் போதுமானது. இதில் மோசமானது என்ன என்றால், நிலைமை எப்பொழுதையும் விட போர்த்தன்மை நிறைந்திருப்பதுதான்.” என்று கூறினார்.

சமீபத்திய குண்டுவீச்சுக்கள் நடந்த இடத்தின் அருகே, தென் கொரியாவின் மேற்கு கடலோரப் பகுதியான Inchon ல் வசிக்கும் மக்கள் அரசாங்கம் அறிவித்துள்ள மிக உயர்ந்த எச்சரிக்கையினால் தங்கள் கவலைகள் அதிகமாகியுள்ளதை உணர்கின்றனர். அங்கு துறைமுகங்கள் மூடப்பட்டுள்ளன, சாதாரண மக்கள், போக்குவரத்து ஆகியவை தடைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. யுவோல்பியோங் தீவில் நூற்றுக்கணக்கானவர்கள் அகதிகளாக Inchon க்கு வந்துள்ளனர். ஒரு உள்ளூர்வாசியான Jeon Seung-wook கூறினார்: “நிலைமை தீவிரமாகி, மோசமாகக்கூடும் என்று நான் அஞ்சுகிறேன்.”

செவ்வாயன்று ஜனாதிபதி ஒபாமா ABC News இடம் தென் கொரியாவிற்கு இராணுவ ஆதரவைக் கொடுப்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது என்றார். இரு நாடுகளின் கூட்டும்பசிபிக் பகுதியில் அமெரிக்கப் பாதுகாப்பிற்கு ஒரு மூலைக்கல்என்று குறிப்பாக விவரித்தார். வட கொரியாஒரு உள்ளார்ந்த அக்கறையுடைய, செயல்பாட்டு அச்சுறுத்தலைக் கொடுக்கிறது, அதை விழிப்புடன் நடத்த வேண்டும்என்றும் ஒபாமா முத்திரையிட்டார். அமெரிக்க ஜனாதிபதி தென் கொரிய ஜனாதிபதி லீ ம்யுங்-பாக்கிடம் தொலைபேசித் தொடர்பு கொண்டு இராணுவக் கூட்டிற்கு வாஷிங்டனின் உறுதிப்பாட்டிற்கு  மீண்டும் உத்தரவாதம் அளித்தார்.

இப்படி வலுவான அமெரிக்க ஆதரவு இருக்கையில், லீயின் GNP எனப்படும் Grand National Party  அரசாங்கம் ஒரு கடின நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. இனி வட கொரியத் தாக்குதல்கள் ஏதேனும் வந்தால் இராணுவப் பதிலடி கொடுக்கப்படும் என்று அச்சுறுத்தியுள்ளது. GNP முன்னாள் தென்கொரிய இராணுவச் சர்வாதிகாரத்தின் கட்சியாகும். அதைத்தான் பனிப் போர்க்காலத்தில் அமெரிக்கா முட்டுக் கொடுத்து நிறுத்தியிருந்தது.

வட கொரியா, தான் பீரங்கித் தாக்குதல் நடத்தியது எதிர்த்தாக்குதல்தான் என்று வலியுறுத்தியுள்ளது. தென் கொரியாவின் மிகப்பெரிய “Hoguk” இராணுவப்  பயிற்சி மஞ்சள் கடலில் நடத்தும்போது வட கொரியாவின் நீர்நிலைகளில் பீரங்கிக் குண்டுகளைப் போட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

மஞ்சள் கடலில் நீர்நிலைகளைப் பிரிக்கும் வடக்கு வரம்புக் கோட்டை வட கொரியா ஒருபொழுதும் ஏற்றுக் கொண்டதில்லை. இந்தக் கோடு 1953ல் கொரியப் போர் முடிந்தவுடன் அமெரிக்கத் தலைமையில் இருந்த சக்திகளால் சுமத்தப்பட்டது. 1999ல் வட கொரியா மோதலுக்கு உட்பட்ட கடல் நிலைகளில் அதன் எல்லைகளை அறிவித்தது. இதையொட்டி இரு பெரும் மோதல்கள் ஏற்பட்டன.  குறைந்தது 17 வட கொரிய கடற்படையினர்கள் ஒரு கடற்படைப் போரில் கொல்லப்பட்டனர். 2002ல் நான்கு தென் கொரியர்களும் 30 வட கொரியர்களும் மற்றொரு மோதலில் உயிரிழந்தனர். நவம்பர் 2009ல் மற்றொரு மோதல் ஏற்பட்டது. அப்பொழுது தென்கொரியக் கப்பல்கள் வட கொரியக் கப்பல்களைப் பெரிதும் நாசப்படுத்தின. இது ஆசியாவிற்கு ஒபாமா முதல்முறையாக வந்தபோது நடந்தது.

இந்த ஆண்டில் முன்னதாக அமெரிக்கா மார்ச் மாதம் இதே மோதலுக்கு உட்பட்ட கடல் நிலைகளில் தென் கொரிய போர்க் கப்பல் மூழ்கடிக்கப்பட்டதையும் பயன்படுத்திக் கொண்டது. ஆனால் வட கொரியா இந்த நிகழ்வில் தனக்கு பங்கு ஏதும் இல்லை என்று மறுத்துவிட்டது. ஜப்பான் கடலில் இருந்து நகர்த்தப்பட்டிருந்தாலும், ஜூலை மாத அமெரிக்க-தென் கொரிய கூட்டுக் கடற்படைப் பயிற்சிகள் ஜப்பான் கடலில் இருந்து வட கொரியாவை இலக்கு கொள்ளும் வகையில் இருந்தன.

இப்பொழுது அமெரிக்க நிர்வாகம் சீனா மீது அழுத்தங்களை அதிகரித்துள்ளது. செவ்வாயன்று ஒபாமா சீனாவை அழைத்துபல சர்வதேச விதிகளை வட கொரியா ஏற்று நடக்க வேண்டும்என்று கூறியுள்ளது. அரச அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் PJ.Crowly நேற்று, “வட கொரியாவிடம் சீனா செல்வாக்கைப் பெற்றுள்ளது, சீனா அதைப் பயன்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அறிவித்தார்.

சீனவைப் பொறுத்தவரை, வட கொரியா மீதுசெல்வாக்குச் செலுத்துதல்என்பது அமெரிக்கக் கோரிக்கைகளைக் கட்டாயப்படுத்தி கொரியா நிறைவேற்றுவதற்காக ஏற்கனவே அந்த வறிய நட்பு நாட்டிற்கு கொடுக்கப்படும் உதவி நிதிகளைக் குறைப்பது என்ற பொருள் தரும். ப்யோங்யாங் பல தசாப்தங்களாக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் பொருளாதாரத் தடைகளினால் அவதியுற்று வருகிறது. சீனாதான் வட கொரியாவிற்கு மிக அதிக உதவி அளித்து, முதலீட்டையும் செய்துள்ளது. ஏற்கனவே அந்நாட்டை சீன நிறுவனங்கள் குறைவூதியத் தொழிலாளர் அரங்காகத் திறப்பதற்குத் தீவிரமாக முயல்கிறது.

அமெரிக்கச் செய்தி ஊடகங்களில் பல பிரிவுகள் வட கொரியாவின்தூண்டுதல் செயல்களுக்குபெய்ஜிங்கும் உடந்தை என்று குற்றம் சாட்ட வேண்டும் என்று வெள்ளை மாளிகையைக் கோரியுள்ளன. செவ்வாயன்று வாஷிங்டன் போஸ்ட்  “அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் வட கொரியத் தலைவர் கிம்மின் ஆபத்தான நடவடிக்கைக்கு சீனாவைப் பொறுப்பாக்க வேண்டும்என்று அறிவித்துள்ளது.

ஜோர்ஜ் டபுள்யூ புஷ் நிர்வாகத்தின்போது ஐ.நா.வின் அமெரிக்கத் தூதராக இருந்த ஜோன் போல்ட்டன், USA Today  விடம் கூறினார்: “வட கொரியாவில் இருந்து வெளிப்படும் அச்சுறுத்தல் வட கொரியாவே முடியும் வரை நிற்கப்போவதில்லை.” அவர் மேலும் கூறியதாவது: “அவர்களை கசக்கிப் பிழிய வேண்டும், முற்றிலும் தனிமைப்படுத்த வேண்டும்.” “வட கொரிய நிகழ்வுகளை நிர்ணயிக்கும் பிரத்தியேகமான திறன் சீனாவிற்குஉள்ளது என்றும் போல்டன் வலியுறுத்தினார்.

அமெரிக்காமிகைப்பட எதிர்கொள்ளும் முறைசீனாவுடனான பரந்த மோதலைத் தூண்டக்கூடும் என்ற கவலை முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் Zbiginew Brzezinsky ஐ செவ்வாயன்று பைனான்சியல் டைம்ஸில்  எழுத வைத்தது: “ஆனால் முக்கியமாக சீனாவிடம் நம் அணுகுமுறை விரோதி என்ற முறையில் இருக்கக் கூடாது. மகத்தான மக்கள் விரோதப் போக்கைத் தோற்றுவிப்பது சீனாவிற்கோ அமெரிக்காவிற்கோ நல்லதல்ல….திருவாளர் ஒபாமா திருவாளர் ஹுவிடம் பேசுவது என்பது ஒரு அக்கறையைப் பகிர்ந்து கொள்ளும் இரு தலைவர்களுடையது என்று இருக்க வேண்டும். அது ஒரு அமெரிக்கக் கடிந்து கொள்ளுதலாக இருக்கக் கூடாது.”

இன்று ஒபாமா சீன ஜனாதிபதி ஹு ஜின்டாவோவிடம் அடுத்த சில நாட்களில் பேசுவார் என்று வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியபோது, ஒபாமா USS George Washington ஐ மஞ்சள் கடலுக்கு அனுப்பிவைக்கும் முடிவு சீனாவுடன் மோதலுக்கு வழிவகுக்கக்கூடிய போக்கை வெள்ளை மாளிகை எடுத்துள்ளது என்பதைத்தான் குறிக்கிறது.