சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

  WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஸ்பெயின்

Portugal passes austerity budget as speculative attack on Spain intensifies

ஸ்பெயின் மீது ஊகவணிகத் தாக்குதல்கள் தீவிரமாகையில் போர்த்துக்கல் சிக்கன வரவு-செலவுத் திட்டத்தை நிறைவேற்றுகிறது

By Andre Damon
27 November 2010

Use this version to print | Send feedback

ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் மீது  ஊக வணிகரக்கள் தங்கள் சமீபத்திய தாக்குதல்களை தொடர்கையில், வெள்ளியன்று ஐரோப்பிய கடன் நெருக்கடி  தீவிரமாகியது. இதற்கிடையில் ஜேர்மனிக்கும் ஐரோப்பிய அதிகாரிகளுக்கும் இடையே இன்னும் கூடுதலான பிணை எடுப்புக்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதி பற்றிய அழுத்தங்கள் எழுந்துள்ளன.

ஒற்றை நாணய முறை ஏற்றகட்டத்தில் இருந்து, ஸ்பெயின் மற்றும் அயர்லாந்து அரசாங்கங்களின் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் மிக உயர்ந்த அளவுகளை வியாழனன்று அடைந்தன. நடைபெற்று வரும் தாக்குதல்களுக்கு விடையிறுக்கும் வகையில், போர்த்துகீசிய சட்டமன்ற உறுப்பினர்கள், சோசலிஸ்ட் பிரதம மந்திரி ஜோஸ் சாக்ரடிஸ் தலைமையில் வெள்ளியன்று ஒரு சிக்கன நடவடிக்கைப் பொதியை இயற்றினர். இந்த வரவு-செலவுத் திட்டத்தில் ஓய்வூதிய குறைப்புக்கள், பொதுநலச் செலவுகள் குறைப்பு, தொழிலாள வர்க்கத்தை முக்கியமாக பாதிக்கும் வரிவிதிப்பு அதிகரிப்புக்கள் ஆகியவை அடங்கியுள்ளன.

இக்குறைப்புக்கள்  ஊக வணிகர்களின் இரை தின்னும் ஆர்வத்தை ஓரளவு குறைத்து, போர்த்துக்கல்லின் கடன்களுக்கான செலவுகள் நாளின் முற்பகுதியில் மிக அதிக அளவு சென்றதைத் தொடர்ந்து சற்றே பின்னர் குறைந்தது. இதன் பின் ஊக வணிகர்கள் தங்கள் கவனத்தை ஸ்பெயின் மீது செலுத்தினர், அந்நாட்டின் கடன்வாங்கும் செலவுகளை மிக உயர்ந்த தரத்திற்கு உயர்த்தினர்.

ஸ்பெயினின் பிரதம மந்திரி ஜோஸ் லூயி ரோட்ரிக்ஸ் ஜாபடெரோ வெள்ளியன்று அவருக்கு முன்னாள் அயர்லாந்து, கிரேக்கத் தலைவர்கள் காட்டியது போல், ஒரு மீறி நிற்கும் ஒலிக் குறிப்பைக் காட்டினார்; ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து பிணை எடுப்பு நாடுதல் பரிசீலிக்கப்படுகிறது என்பதை மறுத்தார். “ஸ்பெயின் மதிப்பைக் குறைக்கும் வகையில் செயல்படும் வணிக ஊகக்காரர்களுக்கு அவர்கள் தவறாகச் செல்லுகின்றனர், தங்கள் நலன்களுக்கு எதிராகச் செல்லுகின்றனர் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.” என்றார்.

ஜாபடேரோவின் அச்சுறுத்தல்கள் ஒன்றும் ஊக வணிகர்களை அமைதிப்படுத்தவில்லை; வெள்ளி நண்பகலை ஒட்டி பைனான்சியல் டைம்ஸ்  முக்கியத்துவம் கொடுத்து ஒரு ஸ்பெயினகுக்கான பிணை எடுப்பு பற்றி விவாதித்தது. “ஒரு கிரேக்க/அயர்லாந்து வகையிலான பிணை எடுப்பு ஸ்பெயினுக்கு என்பதானது €420 பில்லியன் ஆகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதித் திறனை முறிக்கும் அளவிற்குக் கொண்டு செல்லும்என்று எச்சரித்தது. ஸ்பெயினின் பொருளாதாரம் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அயர்லாந்து, கிரேக்கம் இணைந்ததைப் போல் அதிகமாகும், கிட்டத்தட்ட யூரோப்பகுதியின் மொத்தத்தில் 10%க்கும் அதிகமாகும்.

ஸ்பெயினின் கடன்கள் பற்றிய ஊகம் யூரோப்பகுதிக்குள் இத்தகைய சூழ்நிலையில் எவ்வளவு பணம் ஒதுக்குவது என்பது பற்றிய பூசல்களுக்கு இடம் கொடுத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையம் €440 பில்லியன் அவசரக்கால பிணைஎடுப்பு நிதியை இந்த வாரம் இருமடங்காக ஆக்கும் திட்டத்தை முன்வைத்தது; (இது IMF உறுதி கொடுத்துள்ள நிதியோடு சேர்ந்து €750 என்று ஆகும்). ஆனால் இத்தகைய நடவடிக்கையை ஜேர்மனி எதிர்த்தது, என்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது.

பல முதலீட்டாளர்களும் பகுப்பாய்வாளர்களும் ஐரோப்பிய ஒன்றியம் நிதியத்தின் மூலம் ஸ்பெயினை மீட்க, அந்நாடு பத்திரச் சந்தையை அணுகமுடிவில்ல என்றால், ஒப்புக் கொண்டுள்ளதா எனச் சந்தேகப்படுகின்றனர்என்று செய்தித்தாள் எழுதியது. “ஐரோப்பாவின் மிகப் பெரிய பொருளாதாரம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய பிணை எடுப்பு நிதிக்கு மிக அதிக பணம் கொடுத்துள்ள நாடான ஜேர்மனியின் ஆதரவு அத்தகைய நிதிய அதிகரிப்பிற்கு மிகவும் முக்கியமாகும்.”

எவ்வித பிணை எடுப்பின் செலவிலும் விகிதத்திற்கும் அதிகமான பங்கை ஏற்கும் ஜேர்மனி, நிதி தேவைப்படும் நாடுகள் அவற்றின் ஓய்வூதியங்கள் மற்றும் சமூகநலச் செலவுகளை உதவி நாடு முன் குறைக்க வேண்டும் என வலுவாக வலியுறுத்தி வந்துள்ளது. ஜேர்மனிய அரசாங்கம் கடன் மறுகட்டமைப்பு முறை தேவை என்றும் தனியார் பத்திரம் வைத்திருப்போருக்கு ஒருமுடிதிருத்தம்வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இது மற்ற நாடுகளில் இருந்தும் பத்திர முதலீட்டாளர்களிடம் இருந்தும் எதிர்ப்பைத் தோற்றுவித்துள்ளது; அவர்கள் தங்கள் ஊக நடவடிக்கை முற்றிலும் பாதிப்பிற்கு உட்படக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர்.

இத்தகையை ஜாபடெரோவின் தற்காப்பு அறிக்கையைத் தொடர்ந்து அதேபோன்ற வலியுறுத்தல் போர்த்துக்கல் அரசாங்கத்தினாலும் செய்யப்பட்டது.

போர்த்துக்கல்லின் கடன் வாங்குவதற்கான செலவுகள் அறிக்கை வந்தவுடன் உயர்ந்தன, ஆனால் அரசாங்கம் ஒரு புதிய சிக்கன வரவு-செலவுத் திட்டத்தை இயற்றிவிட்டது என்ற செய்தி வந்தபின் சற்றே குறைந்தன. இக்குறைப்புக்களில்  ஒரு ஐந்து சதவிகிதக் குறைப்பு பொதுத்துறை ஊழியர் தொகுப்பிற்கும் மதிப்புக்கூட்டு வரியில் 2 சதவிகிதப் புள்ளி அதிகரிப்பும் அடங்கியுள்ளன. அரசாங்க வரவு-செலவுத் திட்டம் புதிய சாலைகளுக்கான சுங்க வரிகளும், புதிய உள்கட்டுமானப் பணிகள் தாமதப்படுத்தப்படுவதையும் காட்டுகிறது.

சர்வதேச நிதியச் சந்தைகளின் ஆணைகளை செயல்படுத்துவதில் அரசாங்கம் உறுதி கொண்டுள்ளது. பிரதம மந்திரி சாக்ரடிஸ் குறைப்புக்கள்போர்த்துக்கல்லை நிதிய, பொருளாதார நெருக்கடியின் மையத்தில் இருந்து அகற்றுவதற்கு முற்றிலும் தேவைஎன்றார்.

புதிய வரவு-செலவுத் திட்டம் மக்கள் விரோதப் போக்கை வெளிப்படுத்தும் வகையில் தொழிற்சங்கங்களை அழைப்புவிடுத்து நடந்த ஒரு அடையாள ஒருநாள் வேலைதிறுத்தத்திற்குப் பின் வந்துள்ளது. அதே நேரத்தில் வரவு-செலவுத் திட்ட குறைப்புக்கள் செயல்படுத்தப்படுவதை தடுக்க தொழிற்சங்கங்கள் ஏதும் செய்யவில்லை.

ஐரோப்பிய ஒன்றியத்தில் பொருளாதார விவகாரங்கள் ஆணையர் ஒல்லி ரெஹ்ன் இந்த நடவடிக்கையை பாராட்டினார்; அதே நேரத்தில் இன்னும் கூடுதல் நடவடிக்கையும் தேவை என்று வலியுறுத்தினார். “ஆம், ஒரு நேர்த்தியான நடுத்தர கால வளர்ச்சி வேலைகளுக்கான நல்ல தளத்தைக் கட்டமைப்பற்கான நிதிய ஒருங்கிணைப்பு வரவிருக்கும் ஆண்டுகளிலும் தொடரப்பட வேண்டும்என்று அவர் அறிவித்தார்.

ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல்லின் வங்கி முறைகள் மற்ற ஐரோப்பிய நாடுகளைவிடப் பொருளாதார நெருக்கடியின்போது நல்ல முறையில் செயல்பட்டு வந்துள்ளன. ஆனால் ஸ்பெயினைப் பொறுத்தவரை, மேற்கு ஐரோப்பாவிலேயே மிக அதிக வேலையின்மை தரத்தைக் கொண்டுள்ளது. 1995ல் இருந்து 2007 ல் விலைவாசிகள் 2 மடங்கு உயர்ந்த நிலையில், நாடு நிலச் சொத்துக் குமிழிச் சரிவைக் கடுமையாக அனுபவித்தது.

கிரேக்கம், அயர்லாந்து ஆகியவற்றைப் பொறுத்தவரை, கடும் சிக்கன நடவடிக்கைகளோ அல்லது ஐரோப்பிய ஒன்றியப் பிணை எடுப்புக்களோ ஊக வணிகர்களின் தாக்குதலை நிறுத்திவிடவில்லை. இந்நாடுகளின் கடன்வாங்கும் செலவுகள் இந்த வாரமும் தொடர்ந்து அதிகரித்தன; அயர்லாந்து 12 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு வெள்ளியன்று உயர்வட்டிவிகிதத்தைக் கண்டது. வெள்ளியன்று வர்த்தகம் முடியும் நேரத்தில், கிரேக்கத்தின் கடனுக்கான வட்டிவிகிதம் 9 சதவிகிதப் புள்ளி விவரங்கள் அமெரிக்காவைவிட அதிகரித்தது, அயர்லாந்து 6.5 சதவிகிதம் எனவும், போர்த்துக்கல் 4.3 சதவிகிதம் என்றும் ஸ்பெயினுடையது 2.4% என்றும் இருந்தன.

இன்னும் அதிகமான பிணை எடுப்புக்கள் நாணய மதிப்பின் மீதான நம்பகத் தன்மையை குறைத்து அச்சங்களை ஏற்படுத்தியதால், யூரோவும் 0.8 சதவிகிதம் அமெரிக்க டாலருக்கு எதிராக வெள்ளியன்று சரிந்தது. ஒன்பது வாரங்களில் மிகக் குறைவாயிற்று. உலகம் முழுவதும் பங்குச் சந்தைகள் விற்பனையை கண்டன, ஐரோப்பா, ஆசியா மற்றும் அமெரிக்கக் கண்டங்களில் குறியீடுகள் .5 ல் இருந்து 1 சதவிகிதம் வரை குறைந்தன.

சமீபத்திய நிகழ்வுகளில் இருந்து ஊக வணிகக்காரர்கள் அயர்லாந்து, கிரேக்கம் போன்ற சிறிய நாடுகளை தாக்குவதுடன் திருப்தி அடைந்துவிட மாட்டார்கள் என்பது தெளிவாகிறது. இன்று அவர்கள் ஸ்பெயினைத் தாக்குகின்றனர், ஆனால் நாளை அவர்கள் எந்த ஐரோப்பிய நாட்டின்மீதும் கவனத்தைச் செலுத்தலாம்.

வருங்காலப் பிணை எடுப்புக்களின் அளவு, தேவை பற்றி முக்கிய ஐரோப்பிய சக்திகளிடையே எத்தகைய வேறுபாடுகள் இருந்தபோதிலும், அனைத்துமே ஐரோப்பாவில் உள்ள தொழிலாள வர்க்கம் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு விலை கொடுக்க வேண்டும் என்பதில் உடன்பாடு கொண்டுள்ளன. அரசாங்கங்கள், “இடதாயினும்”, வலதாயினும், தங்களுக்கு சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்துவதைத் தவிரவேறு வழி இல்லைஎன்றுதான் பிரகடனம் செய்கின்றன; அவற்றின் உள்ளூர் ஆளும் வர்க்கங்கள் நீண்டகாலமாக கோரும் கொள்கைகளைவெளிஅச்சுறுத்தல் என்ற போலிக்காரணத்தின்கீழ் செயல்படுத்துகின்றன.

இவை அனைத்திலும் பாதிக்கப்பட்டவர்கள் ஐரோப்பிய தொழிலாளர்கள்தாம்; அவர்கள் தங்கள் வருமானங்களிலும் வாழ்க்கைத் தரங்களிலும் நிதியச் சந்தைகளின் கோரிக்கைகளை திருப்திப்படுத்துவதற்காகக் கடுமையான குறைப்புக்களை காண்பர்.