சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Commonwealth Games spell major crisis for Indian elite

காமன்வெல்த் போட்டிகள் இந்திய மேற்தட்டின்மீது பெரும் நெருக்கடியைக் குவிக்கிறது

By Deepal Jayasekera
2 October 2010

Use this version to print | Send feedback

அக்டோபர் 3இல் தொடங்கவிருக்கும் காமன்வெல்த் போட்டிகள் (CWG) இந்திய ஆளும் மேற்தட்டிற்கு ஒரு பெரும் நெருக்கடியை முன்னிருத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகரை ஓர் "உலக தரத்திலான நகரமாக" காட்டுவதற்குரிய இடமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு மாறாக விளையாட்டு போட்டிகள் இந்திய அரசியல் நிர்வாகத்தின் ஊழலையும், அதன் சவாலை எதிர்கொள்ள முடியாததன்மையையும் விளக்கமாக வெளிப்படுத்திக் காட்டியுள்ளன. இது நிகழ்ச்சி வெற்றிகரமாக நடக்குமா என்பதையே கேள்விக்குள்ளாக்கி உள்ளது.

காமன்வெல்த் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களின் போட்டித்திறனை வெளிப்படுத்தும் வகையில், நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் காமன்வெல்த் போட்டிகள், பல்வேறு விளையாட்டுக்களை உள்ளடக்கிய ஒரு சர்வதேச போட்டியாகும். 2006இல், இந்த போட்டி ஆஸ்திரேலியாவால் மெல்போர்னில் நடத்தப்பட்டது.

விளையாட்டு போட்டி நடக்கும் இடங்களின் கட்டுமானம், விளையாட்டு வீரர்கள் தங்குவதற்கான விளையாட்டு போட்டி நகரங்களின் தங்கமுடியாத அளவில் இருக்கும் நிலைமைகள் மற்றும் மோசமான கட்டுமானம், அத்துடன் விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பு ஆகியவற்றில் இருக்கும் ஊழல் அவதூறுகள் தான் 2010 விளையாட்டுக்களைச் சிக்கலுக்குள்ளாக்கி இருக்கும் முக்கிய சில பிரச்சினைகளாக உள்ளன. இந்த பிரச்சினைகள், உலக விளையாட்டு வீரர்கள் பலரை இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. இது விளையாட்டு போட்டியின் தரத்தையும் குறைத்துவிட்டிருக்கிறது.

2003இல், இந்து மேலாதிக்க பாரதீய ஜனதா கட்சியின் தலைமையிலிருந்த தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) அரசாங்கத்தின் அப்போதைய பிரதம மந்திரி அடல் பிஹாரி வாஜ்பாயின் காலக்கட்டத்தில், 2010 காமன்வெல்த் போட்டியை நடத்துவதற்கான உரிமை இந்தியாவால் பெறப்பட்டது. 1982இல் ஆசிய போட்டிகள் நடத்தப்பட்ட பின்னர், இந்தியாவில் இப்போது தான் இதுபோன்ற சர்வதேச விளையாட்டு நிகழ்வு முதன்முறையாக நடத்தப்பட உள்ளது. காமன்வெல்த்தின் 54 உறுப்புநாடுகளைச் சேர்ந்த 71 குழுக்களிலிருந்து 7000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்களும், அதிகாரிகளும், ஏனைய நபர்களும் இதில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

டெல்லி காமன்வெல்த் போட்டிகள் நடத்துவதற்கான வாய்ப்பானது, உலக அரங்கில் ஒரு முதல்தர பொருளாதார மற்றும் அரசியல் சக்தியாக இந்தியா வந்திருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுவதற்கான ஒரு வாய்ப்பாக இந்திய மேற்தட்டால் கருதப்படுகிறது. இந்நிலையில், இந்த போட்டிகளைச் சுற்றியிருக்கும் நெருக்கடியும், முரண்பாடுகளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசாங்கத்திற்கும், ஒட்டுமொத்தமாக இந்திய ஆளும் மேற்தட்டிற்கும் ஆழமான வெட்கக்கேட்டை உருவாக்கி கொண்டிருக்கின்றன.

விளையாட்டு நகரங்களில் இருக்கும் சுகாதாரமற்ற மற்றும் அருவருப்பான நிலைமைகளே, பெரும் எதிர்மறை அழுத்தத்தை உருவாக்கும் பிரச்சினையாக உள்ளன. செப்டம்பர் 21ஆம் தேதியின்படி, விளையாட்டு வீரர்கள் தங்கும் நகரம் "தங்குவதற்கு ஏற்ற வகையில் இல்லை" என்று காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கூட்டமைப்பு (Commonwealth Games Federation-CGF) அறிவித்தது. பள்ளம்மேடுமான நடைபாதைகள், சரியாக செயல்படாத கழிவறைகள் அங்கே இருந்தன. மேலும் மின்சார அமைப்புகளும் பிரச்சினைகளாக இருந்தன. கட்டிட அடித்தளங்கள் கனமழையால் ஏற்பட்ட நீரால் நிரம்பி இருந்தன; விளையாட்டு நகரத்தின் பல பகுதிகள் கட்டி முடிக்கப்படாமல் இருந்தன.

விளையாட்டி போட்டிகளுக்கான கட்டுமானத்தின் தரமற்ற இயல்பை எடுத்துக்காட்டும் வகையில், காமன்வெல்த் போட்டிகள் நடைபெறும் முக்கிய இடமான ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தின் நடைபாலம் செப்டம்பர் 21 அன்று உடைந்து விழுந்தது. இதில் 26 தொழிலாளர்கள் காயமுற்றனர். அதற்கடுத்த நாள், எடைதூக்கும் போட்டி நடைபெறும் இடத்திலிருந்த மேற்கூரை உடைந்து விழுந்தது. தொழிலாளர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த நெரிசலான அழுக்கடைந்த தங்குமிடங்களிலிருந்து பரவிய நோய்களாலும், விபத்துக்களாலும் விளையாட்டு போட்டிகள் நடக்கவிருக்கும் இடங்களில் சுமார் 100 கட்டுமான தொழிலாளர்கள் இறந்துள்ளார்கள் என்று தெரிய வருகிறது. நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர்.

காமன்வெல்த் விளையாட்டு அரங்கங்களின் தரம் குறித்து The Royal Institution of Chartered Surveyors (RICS) அதன் ஆழமான கவலையை வெளியிட்டுள்ளது. RICS க்கான இந்தியாவின் தலைவர் சச்சின் சந்திர், “பெரும்பாலான இடங்களை முடிப்பதற்கான கடைசி நிமிட பரபரப்பு, சுத்தப்படுத்தலைக் கைவிடும் நிலைக்கு கொண்டு வந்து, தொழிலாளர்களையும் கடுமையாக வேலை வாங்கி, திட்டத்தின் தரத்தையும் குறைத்துவிட்டிருக்கிறது," என்று எச்சரித்தார்.

சமீபத்தில் நடைபாலம் மற்றும் மேற்கூரை இடிந்து விழுந்திருப்பதை ஆதாரமாக காட்டி அவர் கூறியதாவது: “மிக விரைவாக கட்டப்பட்டு, தொங்கி கொண்டிருக்கும் அல்லது பாதிப்படைய கூடிய நிலையில் இருக்கும் கட்டமைப்புகளானது, கட்டமைப்பின் தரம், இடங்களின் நிலைப்புத்திறன் மற்றும் பாதுகாப்பு ஆகியவை குறித்து மிகுந்த கவலையை எழுப்பியுள்ளது. மேலும் அவை கட்டிட நெறிமுறைகள் மற்றும் விதிமுறைகளையும், அத்துடன் தொழில்ரீதியான வழக்கமான வழிமுறைகளையும் ஒட்டுமொத்தமாக மீறியமைக்கான அடையாளங்களாக இருக்கின்றன.

நாட்டின் கூட்டமைப்பு (federal body), மத்திய புலனாய்வு கழகம் (Central Bureau of Investigation) மற்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணையம் (Vigilance Commission) ஆகியவை விளையாட்டு தொடர்பான 16 திட்டங்களின் வெவ்வேறு ஒப்பந்தங்களில் நெறிமுறை பின்பற்றப்படாததைக் கண்டறிந்துள்ளதாக தெரிவித்திருந்த விஷயம், காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் உள்ளடங்கி இருக்கும் இலஞ்ச விவகாரங்களை வெளிப்படையாக்கி உள்ளது. விளையாட்டு நகரத்தின் நீச்சல் குளம், பயிற்சி அரங்கம் மற்றும் ஓடுதளம் ஆகியவையும் அவற்றில் உள்ளடங்கும். கடந்த அக்டோபரில் இலண்டனில் Queen’s Baton தொடரோட்டத்தின் (relay) போது, சேவைகள் அளிப்பதற்காக பணத்தை எவ்வித ஆவணங்களும் இல்லாமல் இலண்டனை மையமாக கொண்ட ஒரு நிறுவனத்திற்கு பரிவர்த்தனைச் செய்ததாக குற்றஞ்சாட்டி இரண்டு உயர்-அதிகாரிகளும் கூட குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து வரும் விளையாட்டு வீரர்களின் பயத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் வகையில், செப்டம்பர் 19ல் புதுடெல்லியின் பிரபல மசூதியான ஜமா மஸ்ஜித்தின் முன்னால் இரண்டு சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

விளையாட்டு போட்டிக்கான நகரங்களில் நிலவும் நிலைமைகளோடு தொடர்புபடுத்தி பாதுகாப்பு அபாயங்கள் மற்றும் சுகாதார பிரச்சினைகளைக் காரணங்காட்டி, பல உயர்-தர வீரர்கள் விளையாட்டுக்களில் பங்கெடுக்காமல் திரும்பிச் செல்லும் நிலைக்கு இந்த நிலைமைகள் இட்டுச் சென்றுள்ளன. ஜமைக்கா ஸ்ப்ரென்டர்ஸ் மற்றும் ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஊஷியன் போல்ட் மற்றும் வெரோனிக்கா கேம்பெல்-பிரௌன்; பிரிட்டனிலிருந்து சைக்கிள் பந்தய வீரர் கிரிஸ் ஹோய் மற்றும் விக்டோரியா பென்டில்டன்; ஆஸ்திரேலிய நீச்சல் வீரர் கேட் கேம்ப்வெல்; ஹெப்தத்லெட் (heptathlete) ஜெஸ்சிக்கா என்னிஸ்; மற்றும் டென்னிஸ் வீரர்கள் ஆண்டி முர்ரே மற்றும் லெடன் ஹெவெட் ஆகியோருர் அவர்களில் சிலராவர். பிரெஞ்சு ஓபன் இறுதிசுற்றில் பங்குபெற்ற சமந்தா ஸ்டோசுர்; 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உலக சாதனை படைத்த கென்யாவின் டேவிட் ருடிஷா; முப்படி தாவுதல் போட்டியின் (triple jump) வெற்றியாளரான பிலிப்ஸ் இடோவ்; மற்றும் 400மீட்டர் ஓட்டப்பந்தய வீரர் கிறிஸ்டின் ஓஹூராகு ஆகியோரும் விலகுகின்றனர்.

இந்த நிலைமைகளுக்குப் பிரதிபலிப்பாக, விளையாட்டு போட்டி தயாரிப்புகளுக்குப் பொறுப்பேற்றிருக்கும் இந்திய அதிகாரிகள் இந்த பிரச்சினையின் முக்கியத்துவத்தைக் குறைக்க முயற்சிக்கிறார்கள். காமன்வெல்த் நகரத்தின் மோசமான நிலைமை குறித்த செய்திகள் "பெரிதுபடுத்தப்பட்டிருப்பதாக" அறிவித்ததுடன், காமன்வெல்த் போட்டி ஏற்பாட்டு குழுவின் (CWG Organising Committee) செய்தி தொடர்பாளர் லலித் மோடி கூறுகையில், “இந்த நகரம் இதுவரையிலான சிறந்த நகரங்களில் ஒன்றாக இருக்கிறது" என்று அறிவித்தார். நகரத்தின் அளவில்லா வசதிகளை எடுத்துக்காட்டும் பரந்த ஊடக செய்திகளின் கருத்துக்களோடு பார்த்தால், இந்த அறிக்கை அர்த்தமற்றதாக இருக்கிறது.

"சுத்தம் குறித்த விஷயத்தில் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு தரங்கள் இருக்கும்", என்று தெரிவித்த பானொட் தொடர்ந்து கூறுகையில், “மேற்கத்தியவர்கள் ஒருவித தரங்களைக் கொண்டிருப்பார்கள், நாங்கள் ஒருவிதமான தரங்களைக் கொண்டிருக்கிறோம்" என்று தெரிவித்தார். எவ்வாறிருப்பினும், ஒன்றுமில்லாமல் போவதைக் கட்டுப்படுத்தும் (damage control) ஒரு முயற்சியாக, இடங்களை சுத்தப்படுத்துவதற்கான ஒரு இறுதிகட்ட முயற்சியில் நூற்றுக்கணக்கான கூடுதல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.

இந்திய அதிகாரிகள் விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்காக அவசர அவசரமாக தயாராகி கொண்டிருக்கும் நிலையில், டெல்லியின் ஏழை எளிய மக்கள் தான் இதற்கு விலை கொடுத்து வருகிறார்கள். “நகரத்தை அழகுபடுத்துகிறோம்" என்ற பெயரில், தெருவோர வியாபாரிகளையும், தினக்கூலி தொழிலாளர்களையும், புலம்பெயர்ந்தவர்களையும், இன்னும் ஏனைய மக்களையும் நகரத்திற்குத் தேவையில்லாத காட்சிகளாக கருதி அதிகாரிகள் அப்புறப்படுத்தி உள்ளனர். பிச்சையெடுப்பதைத் தடுக்கும் ஒரு பழைய சட்டத்தை பயன்படுத்தி, சுமார் 60,000 தெரு பிச்சைக்காரர்கள் புதுடெல்லியின் சேரிகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஏழு ஆண்டுகளில், சேரிவாசிகளின் (slum-dwellers) வீடுகளை அப்புறப்படுத்தியதன் மூலமாக டெல்லி அரசாங்கம் நகரத்தை "அழகுப்படுத்தி" கொண்டிருக்கிறது. இவர்களில் அடிமட்டத்திலிருக்கும் பெரும்பாலானவர்களுக்கு மாற்று இடங்களும் கூட கொடுக்கப்படவில்லை. சில தினங்களுக்கு முன்னால், 25 ஆண்டுகளாக இருக்கும் ஒரு சேரி அப்புறப்படுத்தப்பட்டது. இதில் 470 குடும்பங்கள் இடம் பெயர்க்கப்பட்டனர். புதுடெல்லியின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் சேரிவாசிகளே ஆவர். இந்த மக்களின் எண்ணிக்கை காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளின் கட்டுமானத்தின் போது, இன்னும் அதிகமாகி இருப்பதாக மதிப்பிடப்படுகிறது.

பிரதம மந்திரி மன்மோகன்சிங் தம்முடைய அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருக்கும் ஒரு பெரும் தர்மசங்கடத்தை தவிர்க்கும் ஒரு முயற்சியில், நிலைமையைச் சீரமைக்க தேவையான முறைமைகள் குறித்து விவாதிக்க கடந்த மாதத்தின் இறுதியில் மூத்த அதிகாரிகளின் ஓர் உயர்மட்ட கூட்டத்தைக் கூட்டியிருந்தார். விளையாட்டு இடங்களைத் தயார் செய்வதிலும், அதிகரித்து வரும் சர்வதேச தர்மசங்கடத்தைத் தவிர்ப்பதிலும் காணப்படும் அதிகாரிகளின் பரபரப்பு, மேலும் பாதுகாப்பு மற்றும் தரத்தை விட்டுகொடுக்க வேண்டிய அபாயத்தையே முன்னிறுத்துகிறது.

காமன்வெல்த் போட்டிகளை சுற்றியுள்ள இழிவார்ந்த நிலைமையைப் பற்றிய எதிர்மறை அறிகுறிகள்மீது பெருவியாபார நிர்வாகத்திற்குள் வெளிப்பட்டிருக்கும் கவலைகள் உலகளாவிய முதலீட்டாளர்களை சென்றடையக்கூடும் என்கின்ற நிலையில், இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் (Federation of Indian Chambers of Commerce and Industry) பொதுச்செயலாளர் அமித் மித்ரா கூறுகையில், “உண்மையில் இதுவொரு வருத்தமான வெளியுறவுத்துறை விவகாரமாக இருக்கிறது, மேலும், உளவியல்ரீதியாக, வசதிகள் செய்தளிப்பதற்கான இந்தியாவின் திறமை மீதே இது கேள்விக்குறியை எழுப்புகிறது" என்றார்.

ஏப்ரல் 2007இல், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளுக்காக இந்திய அரசாங்கம் 790 மில்லியன் அமெரிக்க டாலரை ஒதுக்கியது. ஆனால் இப்போது உண்மையான காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளுக்கான செலவு 3.17 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 6.34 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்திருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. “இந்தியாவின் எழுச்சியைக்" எடுத்துக்காட்ட அரசாங்கம் இந்த நிகழ்ச்சியைப் பயன்படுத்துகின்ற நிலையில், நாட்டின் மக்கள் தொகையில் 80 சதவீதத்தினர் நாளொன்றுக்கு 2 டாலரில் வாழ்வதற்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.