சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

Pakistani attacks on NATO tankers deepen US crisis in Af-Pak war

நேட்டோ டாங்கர்கள் மீது பாக்கிஸ்தானிய தாக்குதல்களானது ஆப்-பாக் போரில் அமெரிக்க நெருக்கடியை ஆழப்படுத்துகின்றன

By Barry Grey
2 October 2010

Use this version to print | Send feedback

ஆப்கானிஸ்தானில் காந்தகாருக்கு எதிரான அமெரிக்கத் தாக்குதலுக்கு கொண்டுசெல்லப்படும் வினியோகப் பொருட்களை எடுத்துச் சென்ற இரு டஜன் பாரவண்டிகள் மற்றும் எண்ணெய் வண்டிகள் தெற்கு பாக்கிஸ்தானில் வெள்ளியன்று இரு வேறு தாக்குதல்களில் அழிக்கப்பட்டன. முந்தைய நாள் ஒரு முக்கிய எல்லை கடக்கும் பாதையை பாக்கிஸ்தானிய அரசாங்கம் மூடியதையடுத்து ஏற்பட்ட அமெரிக்க மற்றும் நேட்டோ ஆக்கிரமிப்புப் படைகளின் நெருக்கடியை இத்தாக்குதல்கள் பெருக்கிவிட்டன.

ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்கா, நேட்டோ மற்றும் நட்பு நாடுகளில் ஆக்கிரமிப்பிற்கு தேவைப்படும் பொருட்கள் வினியோகிக்கப்படுவதில் 80 சதவிகிதத்திற்கும் மேலானவை, எரிபொருளில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமானது உட்பட, பாக்கிஸ்தான் மூலம் செல்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

பாக்கிஸ்தானின் வடமேற்கிலுள்ள பேஷாவரையும் கிழக்கு ஆப்கானிஸ்தானிலுள்ள ஜலாலாபாத்தையும் இணைக்கும் கைபர் கணவாய்ப் பாதை நேட்டோ வினியோக தொடர் வரிசைகளுக்கு மூடப்பட்டுவிட்டன. இதற்குக் காரணம் வியாழனன்று பாக்கிஸ்தானிய இராணுவச் சாவடிகளின் மீது இரு அமெரிக்க விமானத் தாக்குதல்களையொட்டி மூன்று பாக்கிஸ்தானிய எல்லைப் படைத் துருப்புக்கள் கொல்லப்பட்டதும் மற்றும் மூன்று பேர் காயமடைந்ததும்தான்.

இத்தாக்குதல்கள் இதற்கும் முந்தைய வார இறுதியில் பாக்கிஸ்தானிய எல்லைப் புறத்தில் அமெரிக்க ஹெலிகாப்டர்கள் மூலம் நடந்த தாக்குதல் 55 பாக்கிஸ்தானியர்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ள நிகழ்வை அடுத்து வந்துள்ளன. கடந்த மாதம் அமெரிக்க CIA, ட்ரோன்கள் மூலம் ஏவுகணை செலுத்துவதை பாக்கிஸ்தானின் பழங்குடிப் பகுதிகளில் இலக்காக்குவதை தீவிரமாக அதிகப்படுத்தியது. செப்டம்பர் மாதம் 20 அல்லது அதற்கும் மேலான தாக்குதல்களை நடத்தியது.

ஆப்கானிஸ்தானில் நவ காலனித்துவ போர் நடத்துவதில் எல்லை மூடலின் தீவிர உட்குறிப்புத் திறன்கள் பற்றி பேசுகையில் வாஷிங்டனிலுள்ள Center for Strategic and International Studies ன் தெற்கு ஆசியத் திட்டத்தின் இயக்குனரான Teresita C.Schaffer, நியூ யோர்க் டைம்ஸிடம் கூறினார்: “இரண்டு ஆண்டுகளாக பாக்கிஸ்தானை முக்கிய பொருட்களை அனுப்புவதற்கு நம்பிக்கை கொண்டிருப்பதைக் குறைக்க முயற்சித்து வருகிறோம். ஆனால் 90 சதவிகிதத்தில் இருந்து 80 சதவிகிதம்தான் குறைக்க முடிந்துள்ளது. எனவே, நமக்கு வேறு இடம் ஏதும் இவற்றை அனுப்பக் கிடைக்கவில்லை.”

வெள்ளியன்று அதிகாலையில் ஒரு டஜன் முகமூடியணிந்த துப்பாக்கியேந்தியவர்கள் தெற்கு சிந்து மாகாணத்தில் ஷில்கர்பூர் நகரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தொடர் வரிசை எண்ணெய் வண்டிகள் மீது தாக்குதலை நடத்தினர். சாரதிகளை எச்சரிப்பதற்கு கிளச்சியாளர்கள் ஆகாயத்தை நோக்கிச் சுட்டு, பின்னர் ஐந்து வண்டிகளை எரித்தனர். மொத்தம் 27 அழிக்கப்பட்டுவிட்டன. சிந்து மாகாணத்தில் இத்தகைய நிகழ்வு இதுவே முதல் தடவையாகும்.

வெள்ளியன்று அதற்குப் பின்னர் ஆயுதமேந்திய போராளிகள் இரண்டு நேட்டோ வாகனங்கள் மீது பலுச்சிஸ்தான் மாகாணத்திலுள்ள தெற்மேற்கு நகரமான குச்டரில் தீ வைத்தனர்.

இரு தாக்குதல்களிலும் இலக்கு வைக்கப்பட்ட பாரவண்டிகள் கராச்சித் துறைமுக நகரத்திலிருந்து ஷாமனிலுள்ள எல்லை கடக்கும் சாவடிக்கு செல்லும் பாதையில் சென்றுகொண்டிருந்தன. இது ஆப்கானிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரமும், நீண்டகாலமாக தாலிபன் கோட்டையாகவும் இருக்கும் காந்தகாருக்குச் செல்லும் பாதையுடன் தொடர்புபடுத்துகிறது. கடந்த வாரம் 2001க்குப் பின்னர் அமெரிக்கா அதன் மிகப் பெரிய இராணுவத் தாக்குதலை காந்தகார் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தொடக்கியது.

பாக்கிஸ்தானிய ஆட்சி அமெரிக்கா, நேட்டோ வாகனத் தொடர்கள் ஷாமன் எல்லையைக் கடப்பதை மூடிவிடவில்லை. ஆனால் டொர்க்கம் நகரின் எல்லையை கடக்கும் வடக்குப் புறத்தில் வெள்ளியன்று கிட்டத்தட்ட 400 நேட்டோ வாகனங்கள் வரிசையில் இருந்ததாக உள்ளூர் அதிகாரிகள் கூறினர்.

வெள்ளியன்று எழுச்சியாளர்கள் தாக்குதல்கள் நடத்திய இடம், காந்தகாருக்கு விநியோகப் பொருட்களை எடுத்துச் செல்லும் திறந்த பாதைகள் தடைக்குட்படுத்தப்பட வேண்டும் என்ற தெளிவான மூலோபாயத்தின் அடிப்படையைக் காட்டுகிறது. இது வடக்குப் பாதை மூடப்படுவதால் எழும் பிரச்சினைகளை ஆக்கிரமிப்புப் படைகளுக்கு அதிகமாக்கியுள்ளது.

பாக்கிஸ்தானில் விரிவாக்கம் அடையும் எழுச்சியின் மற்றொரு அடையாளமாக, வியாழனன்று 200 போராளிகள் ஒரு டஜன் பொலிசாரைப் பிடித்து வைத்து அவர்களைப் பணையக் கைதிகளாக வைத்துள்ளனர் என்று அறிவித்துள்ளது. இது செய்தி ஊடகத்தில் ஆப்கானிய எல்லைக்கு அருகே உள்ள சிட்ரல் மாவட்டத்தில் “பொதுவாக அமைதியாக இருக்கும் இடம்” என்று வர்ணிக்கப்படுவது ஆகும்.

பாக்கிஸ்தானுக்குள் இராணுவ நடவடிக்கைகளை வாஷிங்டன் விரிவாக்கம் செய்துள்ளது இரு நாடுகளுக்கும் இடையே அழுத்தங்களை அதிகரித்துள்ளது. அதே நேரம் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியின் பெருந்திகைப்புடைய அரசியல் நெருக்கடியையும் இன்னும் அதிகரித்துள்ளது. இவர் உட்குறிப்பாக CIA ட்ரோன் தாக்குதல்களை ஆப்கானிய எல்லையை அடுத்துள்ள பழங்குடிப் பகுதிகளில் நடத்துவதை ஏற்றுள்ளார். ஆனால் விமானம் அல்லது தரையில் வெளிப்படையான அமெரிக்க ஊடுருவல்கள் பற்றி வரம்பு கட்ட முற்பட்டுள்ளார்.

சமீபத்திய அமெரிக்கத் தாக்குதல்களால், அமெரிக்காவிற்கும், வாஷிங்டனின் கைப்பாவை அரசாங்கம் என்று பெருகிய முறையில் இழிவுபடுத்தப்படும் இஸ்லாமாபாத் அரசாங்கத்திற்கும் எதிராகவுள்ள பாக்கிஸ்தானிய மக்களின் சீற்றம் இன்னும் அதிகமாக எரியூட்டப்பட்டுள்ளது. அரசாங்கம் இந்தக் கோடைகாலத்தில் வெள்ளத்தால் இடம் பெயர்ந்துள்ள மில்லியன்கணக்கான மக்களுக்கு உதவி அளிக்கத் தவறியது பற்றிய அரசாங்கத்தின் தோல்வி பற்றியும் அமைதியின்மை வளர்ந்து வருகிறது.

அதே நேரத்தில் அமெரிக்காவானது சர்தாரி மற்றும் பாக்கிஸ்தானிய இராணுவத்தின் மீது அழுத்தத்தை அதிகரித்துள்ளது—இது ஓரளவு சமீபத்திய இராணுவத் தாக்குதல்களாலும் ஏற்பட்டுள்ளது. இத்தாக்குதல்கள் விரிவாக்கத்திற்கு காரணம் ஆப்கானிய எல்லையையொட்டிய வடக்கு வஜீரிஸ்தானுக்கு தெற்கு வஜீரிஸ்தான் மற்றும் தெற்குப் பழங்குடிப் பகுதிகளில் இருந்து அமெரிக்க-எதிர்ப்பு, அரசாங்க-எதிர்ப்பு எழுச்சிகள் அடக்கப்பட வேண்டும் என்பதுதான்.

வெள்ளியன்று பாக்கிஸ்தானின் பெல்ஜியத்திலுள்ள தூதர் உத்தியோகபூர்வ எதிர்ப்பு ஒன்றை நேட்டோ தலைமையிடமான பிரஸ்ஸல்ஸில் சமீபத்திய அமெரிக்கா-நேட்டோ ஊடுருவல்கள் குறித்துப் பதிவு செய்துள்ளார். பிரதம மந்திரி யூசுப் ராசா கிலானி பாக்கிஸ்தான் பாராளுமன்றத்தில் அரசாங்கம் “நம் நாட்டின் இறைமையில் குறுக்கீடு இருந்தால் பிற விருப்புரிமைகளையும் பரிசீலிக்கும்” என்று கூறினார்.

நியூ யோர்க் டைம்ஸ் வெள்ளியன்று ஒரு மூத்த பாக்கிஸ்தானிய உளவுத்துறை அதிகாரி எல்லை ஊடுருவல்கள் இஸ்லாமாபாத்திற்கும், வாஷிங்டனுக்கும் இடையே “உறவுகள் முற்றிலும் துண்டிக்கப்பட வகைசெய்யும்” என்று கூறியதாகத் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் மோதலைத் தீர்ப்பதற்கு அமெரிக்கத் தாக்குதல்கள் பற்றி ஒரு கூட்டு விசாரணை நடத்தப்படுவதற்கான முயற்சிகளும் இருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன.

2008 ம் ஆண்டு ஒரு அமெரிக்க விமானம் மொஹ்மண்ட் பழங்குடிப் பகுதியில் ஒரு பாக்கிஸ்தானிய எல்லைச் சாவடியைத் தாக்கியபின் பல நாடுகளுக்கு எல்லையை மூடிவைத்திருந்தனர். அந்த நிகழ்வில் 11 பாக்கிஸ்தானியர்கள் கொல்லப்பட்டனர்.

சமீப காலத்தில் அமெரிக்கச் செய்தி ஊடகங்களில் அமெரிக்க அரசாங்கமும் பாக்கிஸ்தானிய இராணுவமும் சர்தாரி ஆட்சி பற்றி பெருகிய அதிருப்தி கொண்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. அரசாங்கத்தை அகற்றுவதற்குப் பாக்கிஸ்தானியத் தளபதிகள் தலையீடு செய்து ஒருவேளை சர்தாரியையும் அகற்றக்கூடும் என்ற விவாதங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

வாஷிங்டன் போஸ்ட் வியாழனன்று பெயரிடப்படாத அமெரிக்க அதிகாரிகள் வெளிப்படையாக ஒருவித இராணுவ ஆதரவு கொண்ட ஆட்சி மாற்றம் குறித்து விவாதிப்பதாக மேற்கோளிட்டுள்ளது. “அமெரிக்க அதிகாரிகள் தாங்கள் மாற்றத்தைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கிவிட்டதாகவும், இது திரு சர்தாரி ராஜிநாமா, அரசாங்கத்தை கலைத்தல் ஆகியவற்றின் மூலம் வரலாம் அல்லது அரசியலமைப்பின் கீழ் புதிய தேர்தல்களுக்கு அழைப்புவிடுவதன் மூலமும் வரலாம் என்று குறிப்புக்காட்டியுள்ளார்.” என்று நாளேடு எழுதியுள்ளது.

“சிலர் ஒரு புதிய, இன்னும் செல்வாக்கு கொண்ட அரசாங்கம், இராணுவ வலிமை பொருந்தியது, அமெரிக்கக் கொள்கைகளுக்கு ஆதரவு கொடுப்பதில் தேர்ந்ததாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்… இங்கு சிறந்த விளைவானது உறுதியற்ற தன்மை இராணுவத்தினால் பயன்படுத்திக் கொள்ளப்படக்கூடும். இது ஒன்றும் மோசமல்ல, ஏனெனில் வெற்றுத்தன மக்கள் அகற்றப்படுவர்” என்று அதிகாரி கூறினார்.