சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

  WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

Ireland moves closer to state bankruptcy

அரசு திவாலை நோக்கி அயர்லாந்து நகர்கிறது

By Steve James
4 October 2010

Use this version to print | Send feedback

செப்டம்பர் 30ம் திகதி அயர்லாந்து அரசாங்கம் மேற்கொண்ட அவசரக்கால பிணையெடுப்பு நாட்டில் ஆழ்ந்துள்ள நிதிய நெருக்கடியை மட்டுப்படுத்தும் நோக்கமே உள்ளது. அரசாங்கம் 2011 வரை செயலாற்றுவதற்குப் போதுமான ரொக்கம் இருப்பதாகக் கூறுகிறது, ஆனால் அழிந்த வங்கிகளுக்கு தொடர்ந்து பாரிய அரசாங்க நிதியை அளிப்பது, அதுவும் குறிப்பாக ஆங்கிலோ-ஐரிஷ் வங்கிக்கு, தேசியத் திவால் என்னும் இடரை அதிகரிக்கிறது. இத்தகைய நிகழ்வு ஐரோப்பா முழுவதும் பேரழிவான சங்கிலித்தொடரான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

அரசாங்கத்தின் கடன் தரத்தின் மதிப்பை ஸ்டாண்டர்ட் & புவர் (Standard & Poor) நிறுவனம் ஆகஸ்ட் மாதத்திலிருந்து குறைத்தபின், அயர்லாந்து மீண்டும் அதன் வங்கிகளின் நிலைப்பாடு காரணமாக சர்வதேச அபிப்பிராயங்களில் பேரழிவிற்குட்பட்டுள்ள மையமாகி விட்டது. இந்த பேராபத்தின் பரப்பைக் காட்டும் வகையில் அயர்லாந்து அரசின் 10 ஆண்டு பத்திரங்களில் இப்பொழுது வட்டிவிகிதம் மே 2010 ல் ஐரோப்பிய ஒன்றிய 110 பில்லியன் யூரோக்கள் பிணைஎடுப்பிற்கு முன்பு கிரேக்க அரசாங்கம் எதிர்கொண்ட உயர்வட்டியை விடக் கூடுதலாக உள்ளது. பல அரசாங்க கடன் பத்திர நிதிகளும் ஒருவேளை அயர்லாந்து கடனைத் திருப்ப முடியாவிடில் ஏற்படக்கூடிய இடரை எதிர்கொள்ளும் நிலைப்பாடுகளைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கின்றன. அனைத்து அயர்லாந்து வங்கிகளும் மிக அதிகமாக ஐரோப்பிய மத்திய வங்கியின் தற்காலிகமான ''வழமையற்ற தராதரத்திலான'' (non-standard) தற்காலிக நிதியுதவியில் பெருமளவில் தங்கியுள்ளன. ''

நிதி மந்திரி பிரயன் லெனிஹனுடைய சமீபத்திய நடவடிக்கைகள் தெளிவாக இல்லை. 2009 முற்பகுதியில் சரிவிலிருந்து காப்பாற்றத் தேசியமயமாக்கப்பட்ட ஆங்கிலோ-ஐரிஷ் வங்கிக்கு அரசிடமிருந்து 29.3 பில்லியன் யூரோக்கள் மொத்தம் தேவைப்படும். ஆனால் சொத்து விலைகள் எதிர்பார்த்தபடி செயல்படவில்லை என்றால், இது 34.3 பில்லியன் யூரோக்கள் என்று உயர்ந்து விடும். 22.9 பில்லியன் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது, எனவே இது குறைந்தது இன்னும் 6.4 பில்லியன் தேவை எனக் காட்டுகிறது.

Allied Irish Bank (AIB) க்கு ஆண்டு இறுதிக்குள் 7.4 பில்லியன் யூரோக்கள் தேவைப்படும். இதற்கு கடந்த ஆண்டு கொடுக்கப்பட்ட 3 பில்லியன் யூரோக்களைவிட ஆண்டு முடிவதற்குள் இன்னும் கூடுதலாக 3.5 பில்லியன் யூரோக்கள் கொடுக்கப்பட வேண்டும். வங்கியும் அரசாங்க பெரும்பான்மைக் கட்டுப்பாட்டின் கீழ் எடுத்துக் கொள்ளப்படலாம். ஏனெனில் இது சொத்துக்கள் விற்பனை, வெளி ஆதாரங்களில் இருந்து ரொக்கத்தைத் திரட்டுவது கடினம் ஆகும். அரச “மோசமான வங்கியானது” (bad bank) தேசிய சொத்து பராமரிப்பு நிலையத்தின் (National Asset Management Agency-NAMA) மோசமான கடன்கள் மீது எதிர்பாராமல் கொடுக்கப்பட்ட உயர்ந்த தள்ளுபடியையொட்டி குறைமதிப்பிற்கு AIB உட்பட்டுவிட்டது.

அயர்லாந்து வங்கி, ஐரிஷ் நேஷன்வைட் பில்டிங் சொசைட்டி மற்றும் EBS (முன்பு Education Building Society என அழைக்கப்பட்டது) ஆகியவை அனைத்திற்கும் அரசாங்கப் பிணை எடுப்புக்கள் தேவைப்பட்டன. இது மொத்த பிணையெடுப்புத் தொகையை 45 பில்லியன் (தற்போதைய “மோசமான கடன் நிலையின்கீழ்” 50 பில்லியன் யூரோக்கள்) என்று ஆக்கியுள்ளது. இந்த எண்ணிக்கைகள் NAMA க்குள் தோன்றியுள்ள இழப்புக்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை -இது இன்னும் அதிக அளவில் வங்கி முறையின் செலுத்தமுடியாத சொத்துக்கள் கடன்களை தன் கணக்கில் ஏற்றிக் கொண்டுள்ளது.

உலகில் 14 டிரில்லியன் யூரோக்கள் என்று பரந்து 2008ல் இருந்து வங்கிமுறையில் புகுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த எண்ணிக்கைகளும் 4.5 மில்லியன் மக்களை மட்டுமே கொண்ட நாட்டிற்கு மிக அதிகம்தான். அரசாங்கம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11.6 சதவிகிதத்திற்கு அதிகமாகாமல் நிறுத்த முயற்சிக்கும் இந்த ஆண்டு பொதுத்துறைப் பற்றாக்குறை பற்றிய மதிப்புக்கள் உண்மையில் ஒரே இரவில் 32 சதவிகிதம் என அதிகம் உயர்ந்துவிட்டன.

Economist கருத்துப்படி, ஒப்புமையில் ஐரோப்பிய ஒன்றிய பிணை எடுப்பிற்கு பின்னர் கிரேக்கம் இந்த ஆண்டு 8 சதவிகிதப் பற்றாக்குறையையையும், அயர்லாந்து போன்ற நிலைமையைக் கொண்டுள்ள மற்றொரு நாடான போர்த்துகல்லில் பற்றாக்குறை 9.3 சதவிகிதம் ஆகும்.

அயர்லாந்தில் பொதுக்கடன் 172 பில்லியன் யூரோக்கள் என்று இருக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 98% ஆகும். இது 115% ஆக உயரலாம். இந்த விகித எண்ணிக்கை ஜிம்பாப்வே, ஜப்பான், சிங்கப்பூர், ஜமாய்க்கா, செயின்ட் கிற்ஸ் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளில் தான் இன்னும் அதிகம் ஆகும்.

லெனிஹன் உடைய நடவடிக்கைகள் உடனடியாக ஐரோப்பிய பொருளாதார ஆணையர் ஒலி ரெஹ்னால் இசைவு கொடுக்கப்பட்டன. அவர் “நிதானமான சந்தைகளுடைய” முயற்சிகளை வரவேற்றார். அரசாங்கம் பொதுத்துறைப் பற்றாக்குறையை 2014க்குள் 3% எனக்குறைக்கும் சிக்கன நடவடிக்கையைக் கைவிடக்கூடாது என்று ரெஹ்ன் கோரினார். வேறு வழியில்லை என்றும் எச்சரித்தார். “அரசாங்கங்கள் பேசாமல் இருந்து இந்த வங்கிகள் ஒழுங்கற்ற முறையில் தோல்வியுறுவதை அனுமதித்தன, முழு நிதிய முறையில் உறுதிப்பாடும் பேரழிவு தரக்கூடிய முழுப்பொருளாதார (macroeconomic) விளைகளால் ஆபத்திற்கு உட்படும்.” என்றார் அவர்.

ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் ஜீன்-கிளவ்ட ரிஷே உம் ரெஹனின் கருத்துக்களுக்கு ஒப்புதல் தெரிவித்தார். கடும் சிக்கன நடவடிக்கைகள் “நாட்டின் நம்பகத்தன்மைக்கு முற்றிலும் இன்றியமையாதவை ஆகும்” என்றார் அவர்.

இந்த ஆண்டு பிற்பகுதியில் திட்டமிடப்பட்டுள்ள 3 பில்லியன் யூரோக்களுக்கும் மேலான குறைப்பு செயல்படுத்தப்படும் என்ற லெனிஹன் ஏற்கனவே பலமுறை அடையாளம் காட்டியுள்ளார். இத்திட்டத்திற்கு பெரும்பாலான அயர்லாந்து அரசியல், பொருளாதார ஆளும்பிரிவின் ஒப்புதல் கிடைத்துள்ளது. தொழிலாள வர்க்கத்தின் மீதான புதிய வரிகள் தவிர்க்கமுடியாமல் போகும்.

ஏற்கனவே அரசாங்கம் பல சிக்கன வரவு-செலவுத் திட்டங்களை சுமத்தி பொதுத்துறை ஊதியக் குறைப்பு, சுகாதாரம், கல்வி, பொதுநலச் செலவுகளில் 15 சதவிகிதம் வரை குறைத்துவிட்டது. இந்த நடவடிக்கைகள், Fianna Fail தலைமையிலான கூட்டணியால் 2008 நெருக்கடிக்குப் பின்னர் வளர்க்கப்பட்டது, அயர்லாந்தின் சரிந்த நிதிய ஏற்றம், சொத்துக் குமிழி தகர்ப்பு ஆகியவற்றின் விளைவுகளை தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்த முற்படுகின்றன.

ஒரு நாளைக்கு பின்னர் ரெஹன் எந்த அளவிற்கு அவருடைய கருத்தின்படி அயர்லாந்து அரசாங்கம் பிரஸ்ஸல்ஸ் மற்றும் இறுதியில் பேர்லினுக்கு கடமைப்பட்டுள்ளது என்பதைத் தெளிவாக்கினார். அவ்வாறு செய்கையில் அவர் நெருக்கடியில் ஒரு புதிய காரணியை அறிமுகப்படுத்தினார். இதில் ஐரோப்பிய (முக்கியமாக ஜேர்மனிய நிறுவனங்கள்), நிறுவனங்கள் நேரடியாக அயர்லாந்தில் மிக அதிக முதலீட்டாளர்கள் என்ற முறையில் அமெரிக்காவிற்கு போட்டியாக உள்ளன.

வரவிருக்கும் தசாப்தம் பற்றிப் பேசுகையில் ரெஹன் குறிப்பிட்டார்: “ஒரு குறைந்த வரிவிதிக்கப்படும் நாடு என்று அயர்லாந்து தொடர்ந்து இருக்காது என்பது உண்மை. மாறாக அது ஐரோப்பிய பின்னணியில் முறையான வரி விதிக்கும் நாடாக விளங்கும்.” அயர்லாந்தில் பெருநிறுவனங்கள் மீது 12.5 சதவிகிதம் வரிவிதிப்பு பற்றித்தான் ரெஹ்னனின் கருத்துக்கள் இருந்தன. மூத்த நபர்கள் பின்னர் இவருக்கு ஆதரவு கொடுத்துப் பேசினர். அவர்களில் ஜேர்மனியின் பவேரியா மாநிலத்தின் ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு உறுப்பினராக உள்ள மார்க்கஸ் வெர்பெர் உள்ளார். இவருடைய கட்சியான கிறிஸ்துவ சமூக ஒன்றியம் (CSU) பேர்லினில் ஆளும் அங்கேலா மேர்க்கெலின் கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்துடன் கூட்டாக செயல்படுகிறது.

அயர்லாந்து பெருநிறுவனங்களின் மீது விதித்துள்ள 12.5 சதவிகிதம் வரி கடந்த இரு தசாப்தங்களாக தொடர்ச்சியாக இலாபங்கள் பெறும் அலைகளுக்கு அடிப்படையாக உள்ளது. ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவத்துடன் இந்த விகிதம் ஈர்ப்பிற்கான காரணங்களில் ஒன்றாக உள்ளது. அதேபோல் ஆங்கிலம் பேசும் குறைவூதிய தொழிலாளர்கள் இங்குள்ளனர். இதையொட்டித்தான் நூற்றுக்கணக்கான அமெரிக்க பெருநிறுவனங்கள் 1990களில் அயர்லாந்திற்கு ஈர்க்கப்பட்டதால் “செல்டிக் புலி (Celtic Tiger) என்று அழைக்கப்பட்ட எழுச்சிநிலை தோற்றுவிக்கப்பட்டது.

இந்த வரிவிகிதம் கடந்த தசாப்தத்தில் நிதியத் துறைப் பணிகளில் பெரிய விரிவாக்கத்திற்கு அரங்கு அமைத்தது. Irish Funds Association கொடுத்துள்ள புள்ளிவிவரங்கள் கிட்டத்தட்ட 10,700 அயர்லாந்துத் தளமுனைய நிதியங்கள் 1.8 டிரில்லியன் யூரோக்களை இங்கு நிர்வகிக்கின்றன. இது யூரோப்பகுதி மொத்தத்தில் உள்ள தொகையில் பாதிக்கும் சற்றே குறைவானது ஆகும். குறைந்த பெருநிறுவன வரிவிதிப்பையொட்டி அயர்லாந்து உலகின் “வரிகுறைப்புள்ள நாடுகள்”, “வருமானத்தை மாற்றக்கூடிய” நாடுகளில் ஒன்றாக உள்ளது. அதாவது பாரிய சர்வதேச அளவில் பெருநிறுவன வரி தவிர்த்தலுக்கு.

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பு, Bank for Inernational Settlements, சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கி போன்றவற்றால் இணைந்து நடாத்தப்படும் Joint External Debt Hub எனப்படும் அமைப்பின் வருகை, இதே தொழில்துறையின் வளர்ச்சிக்கு கூடுதல் சான்றுகளை வெளிப்படுத்துகிறது. உதாரணமாக இங்கிலாந்து மொத்த பொதுத்துறை, தனியார்துறைக் கடன்கள் என்று 9.1 டொலர் டிரில்லியன் தொகையைக் கொண்டுள்ளது-உண்மையில் இது மிகப் பெரிய தொகையாகும். ஆனால் சிறிய அயர்லாந்தோ 2.25 டொலர் கடனைத்தான் கொண்டுள்ளது.

ரெஹன் கருத்துக்களால் தங்கள் நலன்களுக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களுக்கு அமெரிக்க நிறுவனங்கள் உடனடியான விடையிறுப்பைக் காட்டின. அயர்லாந்திலுள்ள அமெரிக்க வர்த்தகக் குழுவின் தலைவர் லியோனல் அலெக்ஸாண்டரின் கருத்துப்படி, “அயர்லாந்தில் இப்பொழுதுள்ள சர்வதேச நிறுவனங்களின் தளங்கள் மீது பாதிப்பை ஏற்படுத்துவது எதுவும், அயர்லாந்தில் புதிய முதலீட்டிற்குத் தடை செய்யும் புதிய முயற்சி எதுவும் பொறுத்துக் கொள்ளப்படமாட்டாது.”

“ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்திடம் அரசாங்கம் தெளிவாகவும், உறுதியாகவும் அயர்லாந்து வரிவிதிப்பு விஷயங்களில் தன் இறைமையை தக்கவைத்துக் கொள்ளும் என்று நினைவுபடுத்துவததானது, ஆணையர்கள் இத்தகைய தேவையற்ற கருத்துக்களை கூறுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்த வேண்டும்” என்று அவர் மேலும் கோரினார்.

மோசமடைந்து வரும் நிதியப் பேரழிவு அயர்லாந்தின் ஆளும்தட்டினை சீற்றமிகு மனக்கொந்தளிப்பிற்கு உட்படுத்தியுள்ளது. “நாம் ஒரு நெருக்கடிக் காலத்தில் உள்ளோம் என்று கூறுவது மிகையான கருத்து அல்ல. வருங்காலம் பற்றிய உறுதியற்ற நிலையுடன், அரசாங்கத்தை மாற்றுவது அயர்லாந்தின் பொருளாதார வாய்ப்புக்களில் எந்த மாற்றத்தையும் கொண்டுவராது என்ற பரந்த நம்பிக்கையும் உள்ளது.” என்று Irish Times பத்திரிகை புலம்பியுள்ளது.