சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US corporate profits soar on layoffs, wage cuts

வேலை நீக்கம், சம்பள வெட்டின் மீது அமெரிக்க கூட்டுத்தாபன இலாபம் வானளாவ உயர்கின்றது

By Barry Grey
6 October 2010

Use this version to print | Send feedback

மாபெரும் பொருளாதார வீழ்ச்சியின் (1930ல்) பின்னர் ஏற்பட்டுள்ள ஆழமான பொருளாதார சரிவின் மத்தியிலும் அமெரிக்க கூட்டுத்தாபனங்களின் இலாபங்கள் வானளாவ அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. வெகுஜன வேலையின்மையை பயன்படுத்தி சம்பளத்தை வெட்டுதல், அமெரிக்கத் தொழிலாளர்களை சுரண்டுவதை அதிகரித்தல் போன்ற ஈவிரக்கமற்ற கொள்கைகளின் அடிப்படையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்படுகின்றது. தொழிலாள வர்க்கத்தின் வறுமை நிலையை அமெரிக்க வாழ்க்கையின் ஒரு நிரந்தரமான தன்மையாக ஆக்குவதன் பேரில், தொழிலாளர்களை வேலைக்கமர்த்தி உற்பத்தியை அதிகரிப்பதற்குப் பதிலாக, கம்பனிகள் மிகப் பெருந்தொகையில் பணத்தை குவித்துக்கொண்டிருக்கின்றன.

“இலாப மீள்வருகையை ஊக்குவித்தல்: இயந்திரங்களை வழங்குதல், வேலையாட்களை குறைத்தல்” என்ற தலைப்பின் கீழ், வோல் ஸ்றீட் ஜேர்னலின் திங்கள் வெளியீட்டில் வெளியான, 2010ன் இரண்டாம் காலாண்டில் கூட்டுத்தாபனங்களின் இலாபங்கள் பற்றிய அதன் பகுப்பாய்வில் இருந்து வெளித்தோன்றும் முடிவுகள் இவையே ஆகும். இந்தக் கட்டுரை, பொருளாதார தேக்க நிலை மற்றும் வருவாய் வீழ்ச்சியடைந்து வரும் நிலையிலும் கூட, அமெரிக்க கூட்டுத்தாபனங்களின் இலாபங்கள் பெருகி, இலாபம் பிரதிநிதித்துவம் செய்யும் வருவாய் வீதத்தை தெளிவாக அதிகரிக்கச் செய்துள்ளதை காட்டும் புள்ளி விபரங்களை இந்தக் கட்டுரை வழங்குகின்றது.

அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது, 2008 செப்டெம்பரில் ஏற்பட்ட நிதியப் பீதியின் பின்னர், வேறு எந்தவொரு பிரதான தொழில்துறை நாடும் கூட்டுத்தாபன இலாபங்களில் அதிகரிப்பை பதிவுசெய்யவில்லை. தற்செயல் ஒத்திசைவாகக் கூட, இங்கு காணப்படுவது போல் வெறெந்த நாட்டிலும் இந்தளவு வெகுஜன வேலை நீக்கம் நடைபெறவில்லை.

இந்த வேறுபாடுகள், ஒபாமா நிர்வாகம் ஆற்றும் தீர்க்கமான வகிபாகத்தை சுட்டிக்காட்டுகிறது. அது தொழில்களை உருவாக்கும் எந்தவொரு நிச்சயமான நடவடிக்கையையும் நிராகரித்ததோடு, அதன் மூலம் நிரந்தரமான வெகுஜன வேலையின்மை என்ற ஒரு பொருளாதார சூழலை ஊக்குவித்துள்ளது. அது, ஜெனரல் மோட்டர்ஸ் மற்றும் கிரிஸ்லரை பலாத்காரமாக வங்குரோத்துக்குள் தள்ளி, வாகன உற்பத்தியாளர்களை அரசாங்கம் பிணை எடுத்ததன் ஒரு பாகமாக பத்தாயிரக்கணக்கானவர்கள் வேலை நீக்கம் செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய போதே, அமெரிக்க தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் நிலைமைகளுக்கு எதிராக நாடு முழுவதுமான ஒரு தாக்குதலுக்கு சமிக்ஞை செய்தது.

ஜேர்னலில் வெளியிடப்பட்டுள்ள புள்ளி விபரங்களில் சிலவற்றை கீழே காணலாம்:

* வரி செலுத்திய பின்னர், சகல அமெரிக்க கம்பனிகளதும் இரண்டாவது காலாண்டுக்கான இலாபம் ஒரு ஆண்டு வீதத்தில் 1.208 ட்ரில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது என வர்த்தக திணைக்களம் மதிப்பிடுகின்றது. இது முதலாவது காலாண்டில் இருந்து 3.9 வீத அதிகரிப்பும் மற்றும் ஒரு முன்னைய ஆண்டில் இருந்து 26.5 வீத அதிகரிப்புமாகும். இதில் பணவீக்கம் கணக்கில் எடுக்கப்படாவிட்டாலும், பதிவாகியுள்ள உயர்ந்த ஆண்டு வீதம் இதுவேயாகும். தேசிய வருமான வீதம் என்ற வகையில், வரிக்குப்-பிந்திய இலாபங்கள் 1947ன் பின்னர் மூன்றாவது உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளது. கடைசியாக இடம்பெற்ற செழிப்பின் உச்சக் கட்டத்தில் 2006ன் இரு காலாண்டுகள் மட்டுமே இந்த மட்டத்தை விஞ்சியுள்ளன.

* ஸ்டான்டர்ட் அன்ட் புவர் 500 (Standard & Poor’s 500)பங்குச் சுட்டெண் கம்பனிகளின் இரண்டாவது காலாண்டு இலாபம் 189 பில்லியன் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது முன்னைய ஒரு ஆண்டை விட 38 வீத அதிகரிப்பாகும் மற்றும் இது அவற்றின் ஆறாவது ஆகக் கூடிய காலாண்டு மொத்த எண்ணிக்கையாகும். இது பணவீக்கத்துக்கு ஏற்றவாறு சரி செய்யப்பட்டதுமல்ல.

* வருவாய் 6 வீதத்தால் வீழ்ச்சியடைந்திருந்தாலும் கூட, ஸ்டான்டர்ட் அன்ட் புவர் 500 கம்பனிகளின் இந்த ஆண்டு இரண்டாவது காலாண்டு இலாபம், நிதியப் பீதிக்கு முன்னதாக 2008ன் இரண்டாவது காலாண்டை விட 10 வீத அதிகரிப்பைக் காட்டுகிறது. ஒவ்வொரு டொலர் விற்பனையில் இருந்தும், கம்பனிகள் கிட்டத்தட்ட 8.4 சதத்தை இலாபமாக வைத்துள்ளன. இது 2008 காலாண்டில் இருந்த 7 சதத்தில் இருந்து உயர்த்தப்பட்டுள்ளது.

* தொழில்நுட்ப நிறுவனங்களின் திரண்ட இலாபங்கள், வருவாய் 7 வீதத்தால் மட்டுமே அதிகரித்திருந்த போதிலும், 2008ல் இரண்டாவது காலாண்டுடன் ஒப்பிடும் போது அதே காலாண்டில் 33 வீதம் அதிகரித்துள்ளன.

* நிதி மற்றும் வாகன தொழிற் துறையை உள்ளடக்கிய நுகர்வோர் நுகர்வோர் வரையறைக்குட்படுத்தப்பட்ட பிரிவில், தூய வரம்பு –இலாபத்தை பிரதிநிதித்துவம் செய்யும் வருவாய் வீதம்—2008ன் இரண்டாவது காலாண்டுக்கும் இந்த ஆண்டின் அதே காலகட்டத்துக்கும் இடையில் மூன்று மடங்கையும் தாண்டியுள்ளது.

ஜேர்னல் குறிப்பிட்டுள்ளது போல், “இந்த இலாபத்தை எட்டுவதற்காக, கம்பனிகள் இலட்சக்கணக்கான தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்து, குறைந்த இலாபம் பெறும் பிரிவுகளை மூடி, மலிவான பிராந்தியங்களுக்கு வேலையை மாற்றியதோடு நடவடிக்கைகளை நவீனமாக்கின.”

டெக்ஸாஸ் இன்ருமென்ட்ஸ், வீடியோ விளையாட்டு உட்பத்தியாளர்களான இலக்றோனிக் ஆர்ட்ஸ் இன்க், ஸ்டார்பக்ஸ், கொகா கோலா, போர்ட் மோட்டர் கம்பனி மற்றும் தொழிற்துறை உதிரிப்பாக உட்பத்தியாளர் பார்கர் ஹன்னிஃபின் உட்பட, செலவுக் குறைப்பு மற்றும் ஊழியர்கள் குறைப்பின் மூலம் தமது இலாபங்களை பெருமளவில் அதிகரித்துக்கொண்ட பல கம்பனிகளை அந்தக் கட்டுரை குறிப்பிட்டுள்ளது. 2008 உடன் ஒப்பிடும் போது, விற்பனை மட்டமாக அல்லது வீழச்சி கண்டிருந்த போதிலும், இவை அனைத்தும் உயர்ந்த இலாபங்களைப் பெற்றுள்ளதாக அந்த பத்திரிகை தெரிவிக்கின்றது.

“கனமான இலாபம் பெற்றிருந்த போதிலும், புதிதாக வேலை கொடுப்பதற்கு, உற்பத்திகளை செய்வதற்கு மற்றும் உபகரணங்களைப் பெறுவதற்கான செலவை அதிகரிக்கும் எண்ணம் நிர்வாகிகளுக்கு இப்போதைக்கு இல்லை” என ஜேர்னல் தெரிவிக்கின்றது.

வீடியோ கேம் உற்பத்திகளை அரைவாசியாகக் குறைத்து மற்றும் அதன் 9,800 ஊழியர் படையில் 2,000 பேரை வேலை நீக்கம் செய்த இலக்றோனிக் ஆட்ஸின் பிரதம நிர்வாகி ஜோன் ரிசிடியிலோ, “விற்பனை அதிகரிக்கும் போது மீண்டும் பழைய நிலைமைக்குத் திரும்ப வேண்டியிராதவாறு நிரந்தரமான மாற்றங்களில் நாம் குவிமையப்படுத்தினோம்” என கூறியதாக மேற்கோளிடப்பட்டிருந்தது.

பார்கர் ஹன்னஃபின்னில், விற்பனை 25 வீதத்தால் மட்டுமே அதிகரித்த அதே வேளை, ஒரு வருடத்திற்கு முன்பிருந்தே இலாபம் நான்கு மடங்காகியுள்ளது. “முன்ணுணரக் கூடிய எதிர்காலத்தில்” கனிசமானளவு புதிதாக ஆட்களை சேர்க்காமல் இருக்கத் திட்டமிடுவதோடு, அதற்கு மாறாக, பகுதி நேர ஊழியர்களை பயன்படுத்துவதன் மூலமும் வாரக் கடைசி வேலை நேரங்களை சேர்ப்பதன் மூலமும் அதன் தொழிற் படையையை விரிவாக்கும் என அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

போர்ட் கம்பனியின் விற்பனை வருமானம் மேலும் திகைப்படையச் செய்கின்றது. 2008ன் இரண்டாம் காலாண்டில் கம்பனிக்கு 8.7 பில்லியன் டொலர் நட்டம் ஏற்பட்டது. இந்த ஆண்டு, விற்பனை 2008ல் இருந்த மட்டத்தை விட 15 வீதம் குறைவாக இருந்த போதிலும் கூட, அது 2.6 பில்லியன் டொலரை இரண்டாவது காலாண்டு இலாபமாக பதிவு செய்துள்ளது. இது அதன் முறையான காலாண்டு இலாபங்களில் ஐந்தாவதாகும்.

இந்த இலாப வளர்ச்சியானது உற்பத்தி மற்றும் தொழில்களை பொதுவில் விரிவாக்குவதில் இருந்து தோன்றுவதற்கு மாறாக, தொழிலாளர்களை சம்பள வெட்டையும் வேலை வேகத்தையும் ஏற்றுக்கொள்ளச் செய்வதற்காக அவர்களை அச்சுறுத்துவதன் பேரில், ஏறத்தாழ முற்றிலும் தொழில்களை அழிப்பதில் இருந்தும் வெகுஜன வேலையின்மையை பயன்படுத்திக்கொள்வதன் மூலமும் அடையப்பட்டுள்ளது.

திங்களன்று வெளியான ஒரு பத்தியில் பைனான்சியல் டைம்ஸ் கருத்தாளர் டோனி ஜக்சன் எழுதியது போல், “நெருக்கடிக்குப்-பிந்திய உலகின் பல போட்டிமிக்க இயல் நிகழ்ச்சிகளின் மத்தியில், அமெரிக்க கூட்டுத்தாபன இலாபங்களில் ஏற்பட்டுள்ள திகைப்பூட்டும் எதிர்வீச்சு மிகையானவற்றில் ஒன்றாகும். மொத்த தேசிய உற்பத்தியின் ஒரு பகுதி என்ற வகையில், அமெரிக்க கூட்டுத்தாபன இலாபம், “நிதிய நெருக்கடியின் ஆர்வக் குலைவின் மத்தியில் மீண்டும் சாதனை மட்டத்துக்கு வந்துள்ளதை” சுட்டிக்காட்டும் ஜக்சன், இந்த உண்மையை “மூலதனத்துக்கும் உழைப்புக்கும் இடையிலான குழப்பத்தினால் ஏற்பட்ட பிளவு” என காரணம் கற்பிக்கின்றார்.

பெடரல் ரிசேர்வ் வங்கியின் பூஜ்ஜியத்தை நெருங்கிய வட்டி வீத கொள்கையினதும் இலாப அதிகரிப்பினதும் விளைவாக, அமெரிக்க கூட்டுத்தாபனங்கள் குவித்துக்கொண்டிருக்கும் வரம்பற்ற பணத்தைப் பற்றி திங்களன்று கூட நியூ யோர்க் டைம்ஸ் முன்பக்க கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. கூட்டுத்தாபன பணப்பேழைகளில் இருப்பதாக மதிப்பிடப்படும் 1.6 ட்ரில்லியன் பணம், தொழிலாளர்களை வேலைக்குச் சேர்த்துக்கொள்ளப் பயன்படவில்லை. முடிந்தமட்டும் இந்த பணத்தின் பெரும்பகுதி முதலீடு செய்யப்படுகிறது. இது பெருமளவில் எந்தவொரு உண்மையான பெறுமதியையும் உருவாக்காமல் பங்கு மதிப்பை மேலே உயர்த்த சேவையாற்றும் பங்குகளை வாங்கி விற்றல், ஒருங்கிணைத்தல் மற்றும் சம்பாதித்தல் போன்ற ஒட்டுண்ணித்தனமான தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன. இந்த நடவடிக்கை தவிர்க்க முடியாமல் மேலும் வேலை வெட்டுக்கும் மற்றும் ஆட் குறைப்புக்கும் வழிவகுக்கும்.

நெருக்கடியின் முழு சுமையையும் தொழிலாள வர்க்கத்தின் மீது திணிக்க, ஒபாமா நிர்வாகத்தின் முன்னெடுப்பிலும் பெரும் வர்த்தகர்களின் கட்சிகளின் ஆதரவுடனும் ஆளும் வர்க்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் விளைவாகவும் மற்றும் முதலாளித்துவ இலாப முறைமையின் தோல்வியின் விளைவாகவும், ஒரு புறம் மனித துன்பங்களும் சமூக அழிவுகளும் ஏற்பட்டுள்ளதையும், மறு புறம் நிதி பிரபுத்துவம் முன்னெப்போதுமில்லாதளவு செல்வத்தைப் பெருக்குவதையும் சுட்டிக்காட்டும் ஒரு சிறிய சமிக்ஞையே இந்த புள்ள விபரங்களாகும்.

இங்கு ஏற்பட்டிருப்பது, தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரத்தை மோசமாகவும் நிரந்தரமாகவும் கீழிறக்குவதை அடிப்படையாகக் கொண்டு, வர்க்க உறவுகளில் ஒரு அடிப்படை மறு அணிதிரள்வே அன்றி, பின்னர் வெகுஜனங்களின் நிலைமைகளை மேம்படுத்தக்கூடிய ஒரு தற்காலிக வீழ்ச்சியல்ல.

இந்த தாக்குதலை முன்னெடுப்பதற்காக, தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை நசுக்குவதன் பேரில், ஆளும் வர்க்கமானது தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்பில் தங்கியிருக்கின்றது. ஐக்கிய வாகன தொழிலாளர் சங்கம், ஏ.எப்.எல்.-சீ.ஐ.ஓ. மற்றும் வெற்றிக்கான மாற்றம் போன்ற தொழிற்சங்க கூட்டணிகள் ஒபாமா நிர்வாகத்துக்கும் கூட்டுத்தாபன கும்பல்களுக்கும் குற்றம் புரிவதில் உடந்தையாய் இருக்கின்றன. உழைக்கும் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் வர்க்க யுத்தத்தில் கொள்ளையடிக்கப்படுவதில் இருந்து தொழிற்சங்க அதிகாரத்துவத்துக்கு ஒரு பகுதியை தக்கவைத்துக்கொள்வதில் மட்டுமே அவர்கள் அக்கறை காட்டுகின்றனர்.

இந்த மோசடி மிக்க வலதுசாரி அமைப்புக்களுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுக்குமாறும் மற்றும் வேலை வெட்டுக்கள், வேலைத் தல மூடல்கள் மற்றும் சம்பள வெட்டுக்களுக்கும் எதிராகப் போராடுவதன் பேரில் சுயாதீன உறுப்பினர்களின் நடவடிக்கை குழுக்களை சுயாதீனமாகவும் ஜனநாயக ரீதியாகவும் ஸ்தாபிக்குமாறு சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது. இந்தக் குழுக்கள் தொழிலாளர்களின் சகல பகுதியினரையும் இளைஞர்களையும் ஐக்கியப்படுத்தும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் சக்தியை அணிதிரட்டும் போராட்டத்துக்கு முன்னணி வகிக்க வேண்டும்.

இது ஒபாமா நிர்வாகத்துக்கும், இரு பிரதான பெரும் வர்த்தகர்களின் கட்சிகளுக்கும் மற்றும் அவை பாதுகாக்கும் முதலாளித்துவ அமைப்பு முறைக்கும் எதிரான ஒரு அரசியல் போராட்டமாகும். நாம் “முதலாளித்துவத்தின் நிலை முறிவும் அமெரிக்காவில் சோசலிசத்துக்கான போராட்டமும்” என்ற சோ.ச.க. யின் வேலைத் திட்டத்தை வாசிக்குமாறும், தமது பிரதேசத்தில் நடக்கும் பொதுக் கூட்டங்களுக்கு வருகை தருமாறும் மற்றும் சோ.ச.க. யில் இணைவதற்கு முடிவெடுக்குமாறும் தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.