சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

Global currency, trade conflicts dominate IMF meeting

சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டத்தில் உலக நாணயம், வணிகப் பூசல்கள் மேலாதிக்கம்

By Barry Grey
8 October 2010

Use this version to print | Send feedback

இந்த வார இறுதியில் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெறவுள்ள சர்வதேச நாணய நிதியம் (IMF), மற்றும் உலக வங்கியின் அரையாண்டுக் கூட்டம், முக்கிய ஏகாதிபத்திய சக்திகளுக்கும் ஆசிய, இலத்தின் அமெரிக்காவின் எழுச்சி பெற்று வரும் பொருளாதாரங்கள் எனக் கூறப்படுபவற்றிற்கும் இடையேயும் மற்றும் ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையேயும் பெருகும் நாணயம் மற்றும் வணிகப் பூசல்கள் மீது முக்கியத்துவம் காட்டுவதாக இருக்கும்.

நாணயப் போர்கள் பற்றிய ஆபத்து குறித்து எச்சரித்த சர்வதேச நாணய நிதிய நிர்வாக இயக்குனர் டொமினிக் ஸ்ட்ரவுஸ் கான் பைனான்சியில் டைம்ஸிடம் திங்களன்று பின்வருமாறு கூறினார்: “நாணயங்கள் ஒரு கொள்கைரீதியான ஆயுதமாகப் பயன்படுத்தப்படாலாம் என்ற கருத்து பரவி வருகிறது என்பது தெளிவு. நடைமுறைப்படுத்தப்பட்டால், அத்தகைய கருத்து உலகப் பொருளாதார மீட்பிற்கு முக்கிய அபாயமாக இருக்கும்.”

நாணயச் சந்தைகள் மீது அரசாங்கத் தலையீடுகள் அதிகம் வருவதற்கான பொறுப்பை எழுச்சிபெறும் நாடுகள் என அழைக்கப்படுபவை, எல்லாவற்றிற்கும் மேலாக சீனாவின்மீது சர்வதேச நாணய நிதியம் உட்குறிப்பாக சுமத்தியுள்ளது. துணை நிர்வாக இயக்குனர் ஜோன் லிப்ஸ்கி ஒரு பேட்டியில் சீன ரென்மின்பி (யுவான் என்றும் அறியப்படுவது) “குறிப்பிடத்தக்க வகையில் குறைமதிப்பிடப்பட்டுள்ளது.” என்று கூறினார்.

சீன-எதிர்ப்பு பாதுகாப்பு வரிகள் தேவை என்ற உணர்வு அமெரிக்காவிலும், பிரிட்டனிலும் இருப்பது பைனான்சியல் டைம்ஸ் கட்டுரையாளர் மார்ட்டின் வொல்பினால் புதனன்று வெளியிட்ட ஒரு கட்டுரையில் சுருக்கமாகக் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது: “சீனாவுடன் ஒரு நாணயப் போருக்கான நேரம் வந்துவிட்டதா? பெருகிய முறையில் விடை ஆம் என்று தோன்றுகிறது. சீன மாற்றுவிகிதக் கொள்கை மீதான அரசியல் பொருளாதாரத் தாக்குதல்கள் பெருகிய முறையில் நம்பகத் தன்மை உடையனவாக உள்ளன. ஆனால் இச்சிந்தனை தீவிர வேதனை கொடுப்பது. ஆனால் இனி மாற்றீடு எதுவுமில்லலை என்றுதான் நான் நினைக்கிறேன்.”

ஒரு தாராளவதியான வொல்ப் இது செயல்படுத்தப்பட்டால் சீன அதன் முந்தைய அரைக்காலனித்துவ அந்தஸ்த்திற்குத் திரும்புவதைக் குறிக்கும் திட்டத்துடன் கட்டுரையை முடிக்கிறார்: “ஒரு நிகர இறக்குமதியாளர் என்று சீனாவை மாற்றும் கொள்கை தொகுப்பை மேற்கொள்வது அதன் மக்களுக்கும் உலகின் மற்ற பகுதிகளுக்கும் நலனை அளிக்கும். வனப்புரைச் சொற்களுக்கு அப்பால் பேசுவதற்கு செல்லும் காலம் வந்துவிட்டது. நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட வேண்டும்.”

குறிப்பாக வட அமெரிக்கா, ஐரோப்பாவிலுள்ள நாடுகள் மற்றும் ஜப்பான் என்னும் முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகளில் வளர்ச்சி குறைந்து வரும் பின்னணியிலும் மற்றும் நிதியச் சந்தைகளில் தொடர்ந்துள்ள கொந்தளிப்பு ஆகியவற்றின் பின்னணியில், பொருளாதார நெருக்கடிக்கு சர்வதேச ஒருங்கிணைப்பு முயற்சிகள் தேவை என்பது உங்கள் அண்டை நாட்டவரை வறியவர்களாக்கும் மாற்று விகிதம் மற்றும் வணிகக் கொள்கைகள் ஆகியவற்றிற்கு வழிதிறந்துவிட்டு 1930களில் இருந்த பொருளாதாரப் போர்களை நினைவிற்குக் கொண்டு வருகின்றன.

உலக நாணய முறையும் அதன்மீது கட்டமைக்கப்பட்டுள்ள முழு பொருளாதார உறவுகளின் வலைப்பின்னலும் முதலாளித்துவ அமைப்புமுறையின் இயல்பான நெருக்கடி என்று நிருபணமாகியுள்ளதை நீரூபித்துள்ள நிலையில் முறிந்து கொண்டிருக்கின்றன. செப்டம்பர் 2008ல் ல் லெஹ்மன் பிரதர்ஸ் சரிவில் இருந்து உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் வங்கிகளை மீட்பதற்கும் சர்வதேச நிதிய உயரடுக்கின் மோசமான கடன்களை மூடிமறைக்கவும் எடுத்துள்ள நடவடிக்கைகள் நெருக்கடியின் அடித்தளக் காரணங்களை தீர்க்கவில்லை. மாறாக அவை உலக முதலாளித்துவத்தின் முரண்பாடுகளை எடுத்துக்காட்டி, நாடுகளுக்கு இடையே உள்ள அழுத்தங்களையும் நாடுகளுக்கள் இருக்கும் சமூக நெருக்கடிகளையும் தீவிரப்படுத்தியுள்ளன.

அமெரிக்கா வோல் ஸ்ட்ரீட் மீது மையம் கொண்டிருந்த இந்த நெருக்கடியை ஆக்கிரோஷத்துடன் பயன்படுத்துகிறது. இதற்குக் காரணம் அது முக்கிய பொருளாதார, புவி அரசியல் போட்டியாளர்களுக்கு எதிரான தன் தேசிய நலன்களை, முக்கியமாகவும் உடனடியாகவும் சீனாவிற்கு எதிரே, உறுதிப்படுத்த முற்பட்டுள்ளது.

187 சர்வதேச நாணய நிதிய அங்கத்துவ நாடுகளின் மத்திய வங்கியாளர்களும், நிதி மந்திரிகளும் கலந்து கொள்ளும் இந்த வார இறுதியில் நடக்கவுள்ள சர்வதேச நாணய நிதிய கூட்டத்தைப் பயன்படுத்தி, ரென்மின்பியின் மதிப்பை விரைவில், தீவிரமாக உயர்ந்துவதற்கு சீனாவிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்ற தன் உந்துதலுக்கு ஆதரவாக அமெரிக்கா ஐரோப்பா, ஜப்பான் மற்றும் பிற ஆசிய நாடுகளைத் தனக்கு ஆதரவாகக் கொண்டுவர முயல்கிறது.

இந்த வாரம் நிர்வாகத்தின் அதிகாரிகள் சர்வதேச நாணய நிதியம் ஒரு கடுமையான சீன எதிர்ப்பு நிலைப்பாட்டைக் கொள்ள வேண்டும் மற்றும் ஜப்பான் ஜேர்மனி போன்ற வணிக, இருப்புக்களை அதிகமாக கொண்டுள்ளனவும் மற்றும் டாலரின் மதிப்பை ஒட்டித் தங்கள் நாணயங்களின் மதிப்பை உயர்த்த வேண்டும் என்னும் அமெரிக்க முயற்சிகளை எதிர்க்கும் பிற நாடுகளும் அத்தகைய நிலைப்பாட்டைக் கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்கா ஒரு குறைமதிப்புடைய டாலர் கொள்கையை தொடர்கிறது; இதற்குக் காரணம் அதன் ஏற்றுமதி விலைகள் ஒப்புமையில் குறையும், அதன் போட்டியாளர்களுக்கு எதிராக அதற்கு ஏற்றுமதிகளில் நலன்கள் கிடைக்கும்.

சர்வதேச நாணய நிதியம் அதன் உலகப் பொருளாதாரப் பார்வை மற்றும் அதன் உலக நிதிய உறுதிப்பாட்டு அறிக்கை என்று வாரத் தொடக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் பொதுவாக அமெரிக்க நிலைப்பாட்டிற்கு ஆதரவைக் கொடுத்துள்ளது; உலகப் பொருளாதாரம் சமசீரமைக்கப்படுவதற்கும் அதில் அமெரிக்கா இன்னும் பல பற்றாக்குறை நாடுகள் தங்கள் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கும், சீனா, ஜப்பான், ஜேர்மனி மற்றும் ஏற்றுமதிச் சார்புடைய நாடுகள் தங்கள் ஏற்றுமதியைக் குறைப்பதற்கும் அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் மிகப் பெரிய பங்குதாரர் நாடும், அதிக நன்கொடையளிக்கும் நாடும் என்ற விதத்தில் சர்வதேச நாணய நிதியத்தில் மேலாதிக்கம் கொண்டுள்ள அமெரிக்கா அந்த அமைப்பு தன் நிலைப்பாட்டை இன்னும் ஆக்கிரோஷமாகத் தொடர வேண்டும் என்று விரும்புகிறது.

ஆனால் நலிந்துள்ள வளர்ச்சி மற்றும் தேக்கமடைந்துள்ள சந்தைகள் என்றுள்ள நிலையில் ஒவ்வொரு நாடும் ஏற்றுமதிச் சந்தைகளின் தன் பங்கை அதிகரிக்க பாடுபடுகின்றது. பைனான்சியல் டைம்ஸ் கட்டுரையாளர் ஜோன் பிளெண்டர் வியாழனன்று வெளிவந்துள்ள ஒரு கட்டுரையில் எழுதினார்: “1930களில் இருந்ததைப் போல், ஒவ்வொரு நாடும் பிரச்சனைகளில் இருந்து தப்ப ஏற்றுமதி வழியை நாடுகின்றன. ஆனால் வரையறைப்படி ஒவ்வொரு நாடும் இதைச் செய்ய முடியாது. எனவே உலக சமச்சீரற்ற நிலைகள் மீண்டும் பெருகியுள்ளன; அதேபோல் காப்புவரிக் கொள்கை என்ற இடரும் பெருகிவிட்டது.”

இந்த வாரம் நடந்த தொடர்ச்சியான நிகழ்வுகள் உலக நாணய போர் என்று பரந்து விவரிக்கப்படும் ஒரு நிகழ்வின் தீவிரத்தை அடையாளம் காட்டியுள்ளன. திங்களன்று பிரேசில், பிரேசிலியப் பத்திரங்களில் முதலீடு செய்யும் வெளிநாட்டவர்கள்மீது வரியை இருமடங்காக ஆக்கியுள்ளது. இது ஊக மூலதன வரத்தைக் கட்டுப்படுத்துவதற்காகச் செய்யப்பட்டுள்ளது; அது பிரேசிலின் நாணயமான ரியலை 2009 தொடக்கத்தில் இருந்து டாலருக்கு எதிராக 39 சதவிகிதம் அதிகரித்துவிட்டது.

இந்தியா, தாய்லாந்து, தென்கொரியா மற்றும் தைவான் அடங்கிய பல எழுச்சிபெற்றுவரும் பொருளாதாரங்களில் பிரேசிலும் ஒன்றாகும். இவற்றின் நாணய மதிப்புக்கள் முன்னேற்றம் அடைந்துள்ள பொருளாதாரங்களில் கிடைக்கக்கூடிய வருமானத்தை விட அதிகமாக இருப்பதால் மூலதன உள்பாய்ச்சல் தீவிரமாகியுள்ளது. அபிவிருத்தியடைந்துள்ள பொருளாதாரங்களில் வட்டிவிகிதங்கள் பூஜ்யத்தை ஒட்டித்தான் உள்ளன. அந்நாடுகளில் பலவும் நாணயச் சந்தைகளில் பலமுறையும் தலையிட்டு தங்கள் நாணய மதிப்பைக் குறைத்து வைக்கின்றன.

செவ்வாயன்று பாங்க் ஆப் ஜப்பான் குறிப்பிடத்தக்க வட்டி விகிதத்தை பூஜ்யத்தில் இருந்து 0.1 எனக் குறைப்பதாகவும், ஜப்பானிய அரசாங்கப் பத்திரங்கள் இன்னும் பல பாதுகாப்புப் பத்திரங்களை வாங்குவதற்கு $60 பில்லியன் திட்டத்தைத் தொடக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளது. இப்படி “தர முறையில் எளிதாக்கும்“ (quantitative easing)* கொள்கை என்பது யென்னை அச்சிடுவதற்கு ஒப்பாகும்.

*வங்கியமைப்பு முறையின் மேலதிக இருப்பினை அதிகரிக்க நாணய விநியோகத்தை அதிகரித்தல்.

யென்னுடைய மாற்றுவிகிதத்தைக் குறைக்கும் முயற்சியாக இது தொடங்கியள்ளது. அது இந்த ஆண்டு டாலருக்கு எதிராக 12% உயர்ந்தது; இதையொட்டி ஜப்பானின் ஏற்றுமதிகள் மலிவாகும். செப்டம்பர் 15ம் திகதி ஜப்பானிய அரசாங்கம் ஆறு ஆண்டுகளின் முதல் தடவையாக ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு இந்த நோக்கத்திற்காகவே 2 மில்லியன் யென்களை விற்றது.

செவ்வாயன்று கடந்த மார்ச் மாதம் அது முடித்துவிட்ட அதிக புழக்கம் உள்ள கொள்கை என்பதை அமெரிக்க மத்திய வங்கிக்கூட்டமைப்பு குழு மீண்டும் புதுப்பிக்கப்படுவதை தவிர்க்கும் விதத்தில் ஜப்பான் செயல்பட்டது. கடந்த வாரத்தில் முக்கிய மத்திய வங்கி அதிகாரிகள் கருவூலப் பத்திரங்கள் மத்திய வங்கிக்கூட்டமைப்பினால் வாக்கப்படுவது மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பொது அறிக்கைகளை விட்டனர்; அமெரிக்க பணவிகிதம் மிகக் குறைவாக உள்ளது என்று இதற்காக வாதிட்டுள்ளனர். இவையும் இவை போன்ற மத்திய வங்கிக்கூட்டமைப்புத் தலைவர் பென் பெர்னன்கேயுடைய குறிப்புக்களும் டாலர் விற்பனையை நாணய சந்தைகளில் விற்பதற்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் உள்ளன. மேலும் அமெரிக்க நாணயத்தின் மாற்றுவிகிதம் இன்னும் குறைக்கும் நோக்கமும் உண்டு.

இத்தகைய நடவடிக்கைகள் போட்டியில் நாணய மதிப்புக் குறைப்பு என்ற கொள்கையில் அடங்கும். தவிர்க்கமுடியாமல் இவை வாஷிங்டனின் முக்கிய வணிகப் போட்டியாளர்களிடம் இருந்தும் இதேபோன்ற நடவடிக்கைகளுக்கு எரியூட்டும்.

மேலும் செவ்வாயன்றே யூரோப்பகுதி நிதி மந்திரிகள் பிரஸ்ஸல்ஸில் நடந்த ஐரோப்பிய-ஆசிய பொருளாதார உச்சிமாநாட்டில் சீனப் பிரதமர் வென் ஜியோபோவை எதிர்கொண்டு அவர் யூரோவிற்கு எதிராக ரென்மின்பியின் மதிப்பை உயர்த்துவதை விரைவுபடுத்த வேண்டும் என்று கோரினர். இக்கோரிக்கைகள் வென் நிராகரித்தார். இது இரு தரத்தாருக்கும் இடையே மோதல் நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.

மறுநாள் பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற ஒரு வணிக மாநாட்டில், சீனப் பிரதம மந்திரி பெய்ஜிங் ரென்மின்பியின் மதிப்பை இரட்டை இலக்க வேகத்தில் உயர்த்த வேண்டும் என்ற அமெரிக்க ஐரோப்பிய கோரிக்கைகளின் தாக்கங்கள் பற்றி எச்சரித்தார். “நாங்கள் யுவானை 20 முதல் 40% வரை, சிலர் கேட்டுக் கொள்ளுவது போல், அதிகரித்தோம் என்றால், எங்கள் ஆலைகள் பலவும் மூடப்பட வேண்டும், சமூகம் பெரும் கொந்தளிப்பில் ஆழ்ந்துவிடும்.”

“எங்கள் ஏற்றுமதி நிறுவனங்கள் பலவும் மூடப்பட நேரிடும். குடிபெயர்ந்து வந்துள்ள தொழிலாளிகள் மீண்டும் கிராமங்களுக்குத் திரும்ப நேரிடும். சீனாவில் சமூக மற்றும் பொருளாதாரக் கொந்தளிப்பு ஏற்பட்டால், அது உலகிற்கே ஒரு பேரழிவைக் கொடுக்கும்.” என்று அவர் தொடர்ந்து கூறினார்.

பின்னர் புதனன்று அமெரிக்க நிதி மந்திரி கீத்னர் சர்வதேச நாணய நிதியம் சீனாவை தனியே கண்டிக்க வேண்டும் என்று அழைப்புவிடுத்த ஆத்திரமூட்டும் தன்மையுடைய உரையை நிகழ்த்தினார். வாஷிங்டனில் உள்ள ஒரு ஜனநாயகக் கட்சி சிந்தனைக் குழுவான Brookings Institution ல் பேசிய அவர், ஐயத்திற்கு இடமின்றி சீனாவைக் குறிப்பிட்டு, “குறைமதிப்புடைய நாணய மாற்றுவிதிகளைக் கொண்ட பெரிய பொருளாதாரங்கள் நாணயமதிப்பு உயராமல் நிலைநிறுத்துவது மற்ற நாடுகளுக்கும் அவ்விதமே செய்ய ஊக்கம் அளிக்கும். இது ஒரு ஆபத்தான இயக்க முறையை ஏற்படுத்தும்” என்றார். ஏனெனில் நாடுகள் தங்கள் நாணயங்களின் மதிப்பை குறைத்தே வைத்துக் கொண்டு போட்டியிட முடியும்.

ஒரு பாதிக்கப்பட்ட நாடு என்ற தோற்றத்தைக் காட்டிக் கொண்டு, 1930 களின் பெருமந்த நிலையை ஊக்கிவிட்ட “போட்டி நாணய மதிப்புக் குறைப்புக்களுக்கு பதிலாக” உலகம் “போட்டி மதிப்பை உயர்த்தாத நிலை'' என்ற அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக அறிவித்தார். இது ஒரு நயமான சூத்திரம், நாணயப் போர் முறையை முற்றிலும் சீனா போன்ற-உட்குறிப்பாக ஜேர்மனி, ஜப்பானும்-உபரி இருப்புக்கள் இருக்கும் நாடுகளின்மீது சுமத்துகிறது. இந்நாடுகள்தான் தங்கள் நாணய மதிப்பு உயர்த்தப்படுவதை எதிர்க்கின்றன. இது வாஷிங்டன் மற்றும் அதன் குறைமதிப்பு டாலர் கொள்கையை கருத்திற் கொள்ளவில்லை.

அமெரிக்காவின் பெருகிய முறையில் பாதுகாப்புவரிக் கொள்கை மேற்கொள்ளப்படுவது கடந்த மாதம் பிரதிநிதிகள் மன்றம் வெளிப்படையாக சீனாவிற்கு எதிராக இயக்கிய ஒரு சட்டவரைவில் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது; இதன்படி வணிகத்துறை தங்கள் நாணய மதிப்பைக் குறைவாகக் காட்டுகின்றன என்று கருதப்படுபவற்றின் மீது அபராதத் தொகைகள் சுமத்த வழிவகுத்துள்ளது.

தன் போட்டி நாடுகள் நாணய மதிப்புத் திரித்தலை பற்றிப் புகார்கள் கூறியுள்ள நிலையில், இந்த வாரம் டாலர் எட்டரைமாத காலம் இல்லாத அளவிற்கு பல நாணயங்களின் மதிப்பிற்கு எதிராக மதிப்பில் குறைந்தது. யென்னிற்கு எதிராக 15 ஆண்டு காலத்தில் குறைந்த மதிப்பைக் கண்டுள்ளது.

உலக நாணய மாற்று முறையின் பொது நெருக்கடி தங்கத்தின் விலையில் வெடிப்புத் தன்மை உடைய ஏற்றத்தில் அப்பட்டமான வெளிப்பாட்டைக் கண்டுள்ளது. அக்டோபர் மாதம் Comex தங்கம் விற்பனைக்கு $23.50 ஒரு டிராய் அவுன்ஸிற்கு என்று செவ்வாயன்று உயர்ந்து $1,338.90 என்ற நிலையில் ஒரு புதிய உயர் அளவை எட்டியது.

இதற்கிடையில், உலகப் பொருளாதாரப் பார்வை மற்றும் உலக நிதிய உறுதிப்பாடு அறிக்கையில் சர்வதேச நாணய நிதியம் பொருளாதார நிலைமை பற்றியும் வரும் ஆண்டிற்கான வாய்ப்புக்கள் பற்றியும் ஒரு இறுக்கமான சித்திரத்தை தீட்டியுள்ளது. எப்படிப்பார்த்தாலும், சர்வதேச நாணய நிதியம் உலகப் பொருளாதாரம் இந்த ஆண்டு 4.8% விரிவடையும் என்று கணித்துள்ளது; அடுத்த ஆண்டு வளர்ச்சி விகிதம் 4.2% எனக் குறையும்.

அமெரிக்க வளர்ச்சிக் கணிப்பை இந்த அமைப்பு 2010க்கு 3.3 என்று கடந்த ஜூன் மாதம் குறித்ததில் இருந்து 2.6% என்று குறைத்துவிட்டது. 2011 ஐ பொறுத்தவரை, சர்வதேச நாணய நிதியம் அமெரிக்கப் பொருளாதாரம் முன்பு மதிப்பிட்ட 3% என்பதில் இருந்து குறைந்து நலிந்த 2.3% ஆகத்தான் விரிவடையும் என எதிர்பார்க்கிறது.

யூரோப்பகுதி நாடுகள் மற்றும் ஜப்பானுக்கான கணிப்புக்கள் இன்னும் மோசமாக உள்ளன. முந்தையதை பொறுத்தவரை சர்வதேச நாணய நிதியம் இந்த ஆண்டு 1.7% வளர்ச்சி, 2011ல் 1.5% என்று கணித்துள்ளது. பிந்தையதை பொறுத்தவரை அமைப்பு 2010க்கு 2.8% விரிவாக்கம் என்றும் அடுத்த ஆண்டு இது 1.5% என்று தீவிர சரிவைப் பெறும் என்றும் கூறியுள்ளது.

இணைத்துக் காணும்போது முன்னேற்றம் அடைந்துள்ள பொருளாதாரங்கள் இந்த ஆண்டு 2.7% தான் வளர்ச்சி அடையும்; 2011ல் இது 2.2% ஆக இருக்கும். உலக வளர்ச்சி பெரும்பாலும் எழுச்சி பெறும், வளர்ச்சியடையும் பொருளாதாரங்களின் விளைவாக இருக்கும்; இது இந்த ஆண்டு 7.1% என்றும் அடுத்த ஆண்டு 6.4 என்றும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“இந்த விளைவு மீட்பு வலுவாகவும் இல்லை சமசீராகவும் இல்லை, தொடர்ந்து நீடிக்காது என்ற இடரைக் காட்டுகிறது” என்று தலைமைப் பொருளாதார வல்லுனர் ஒலிவியே பிளோன்சார்ட் சர்வதேச நாணய நிதியத்தின் உலகப் பொருளாதாரப் பார்வைக்கு முன்னுரையில் எழுதியுள்ளார். உலகெங்கிலும் 210 மில்லியன் மக்கள் உத்தியோகபூர்வமாக வேலையின்மையில் உள்ளனர் என்று கணக்கிடப்பட்டுள்ள நிலையில், 2007ல் இருந்து இது 30 மில்லியன் அதிகம் என்றுள்ள நிலையில், பிளோன்சார்ட் ஒரு செய்தியாளர் மாநாட்டில் புதனன்று வேலையின்மை விகிதம் “மிக உயர்ந்து” காணப்படும், அமெரிக்காவில் 9.6% என்றும் யூரோப்பகுதியில் 10% என்றும் இருக்கும் எனக் கூறினார்.

அதே நேரத்தில் உலக நிதிய முறை அதிகம் நலிந்து சிதைந்து உள்ளது; மற்றொரு முறிவும் வரக்கூடும் என்று உலக நிதிய உறுதிப்பாட்டு அறிக்கை கூறுகிறது. “உலக நிதிய முறை இன்னமும் கணிசமான உறுதியற்ற நிலையில் உள்ளது, பொருளாதார மீட்பிற்குப் பெரும் தடையாக உள்ளது” என்று அறிக்கை கூறுகிறது. “சமீபத்திய ஐரோப்பிய அரசாங்கக் கடன் திருப்பிக் கொடுத்தலில் நெருக்கடியின் விளைவினால் ஏற்பட்ட கொந்தளிப்பு வங்கிகளின் பெருகிய பாதிப்புதன்மைகள், அரசாங்க இருப்புநிலைக் குறிப்புகள் ஆகியவற்றை எடுத்துக் காட்டியுள்ளன” என்று அது மேலும் கூறியுள்ளது.

கிட்டத்தட்ட 4 டிரில்லியன் டாலர்கள் வங்கிக் கடன்கள் அடுத்து 24 மாதங்களுக்குள் தீர்க்கப்பட வேண்டும், புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் அறிக்கை கூறுகிறது.

சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ள செயல்முறைகள் அனைத்திலும் பொதுவாக இருப்பது தொழிலாள வர்க்கத்தின் மீது இரக்கமற்ற தாக்குதல் என்பதுதான். முன்னேற்றம் அடைந்துள்ள பொருளாதாரங்கள் “நிதிய உறுதிப்படுத்தலை” கொள்ள வேண்டும் என்று அமைப்பு கோருகிறது, “இது உறுதியாக 2011ல் தொடக்கப்பட வேண்டும்.” என்றும் கூறுகிறது.

உலகப் பொருளாதாரப் பார்வை இத்தகைய சரிசெய்தல்கள் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களை இலக்கு வைக்க வேண்டும் என்கிறதே ஒழிய பெருநிறுவன உயரடுக்கின்மீது என்று கூறவில்லை. “இத்தகைய திட்டங்கள் பெருகும் செலவுத் திட்டங்களில் சீர்திருத்தங்கள், குறிப்பாக உதவித் தொகைகள் கொடுத்தல், நுகர்விற்குப் பதிலாக உற்பத்திக்கு ஆதரவு தரும் வரிச்சீர்திருத்தங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி இருக்க வேண்டும்” என்று அது அறிவிக்கிறது.

எழுச்சி பெறும் பொருளாதாரங்களை பொறுத்த வரை, நாணய மதிப்பு உயர்த்தப்பட வேண்டும், ஏற்றுமதிகள் குறைக்கப்பட வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் கூறுகிறது. இதன் பொருள் ஏராளமான பணிநீக்கங்கள் மற்றும் மக்களின் பரந்த பிரிவுகள் வறுமையில் தள்ளப்படுதல் என்பதாகும்.