சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

UAW expands drive to cut auto workers’ pay

UAW கார்த்தொழிலாளர்கள் ஊதியங்கள் குறைப்பிற்கான உந்துதலை விரிவாக்குகிறது

Jerry White
7 October 2010

Use this version to print | Send feedback

சனிக்கிழமை பிற்பகல் மிச்சிகனிலுள்ள லேக் ஓரியனில் நடைபெற்ற உள்ளூர்த் தொழிற்சங்கக் கூட்டத்திற்குள் ஐக்கிய கார்த் தொழிலாளர் (UAW) அதிகாரிகள் நுழைந்து டெட்ரோயிட் புறநகரில் உள்ள GM இணைப்பு ஆலையில் 11 ஆண்டுகளுக்கும் குறைவான பணிமூப்பு உடைய தொழிலாளர்களுக்குத் ஆங்கள் 50 சதவிகித ஊதியக் குறைப்பை ஒப்புக் கொண்டதாக அறிவித்தனர்.

UAW Local 5690 அதிகாரிகள் அதிர்ச்சியுற்றிருந்த தொழிலாளர்களிடம் அவர்கள் இந்த ஊதியக் குறைப்பு பற்றி வாக்களிக்க அனுமிதிக்கமாட்டார்கள் என்றும் அதற்குக் காரணம் 2009ம் ஆண்டின் “பொது உடன்பாடு” GM, UAW இரண்டையும் சிறு கார்கள் தயாரிக்கும் ஆலைகளில்“நவீன தொழில் துறை உடன்பாட்டு விதிகளைச்” செயல்படுத்த அனுமதித்துள்ளது என்று கூறினர். ஊதியக் குறைப்பை ஏற்க மறுக்கும் எந்தத் தொழிலாளர்களும் வேலையில்லாமல் இருப்பர் என்றும் தங்கள் பெயர்களை மற்றொரு GM ஆலைக்கு மாற்றக் கோரும் பணிநீக்கப்பட்ட தொழிலாளர்கள் பட்டியலில் உள்ள ஆயிரக்கணக்கானவர்களுடன் சேர்க்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.

தொழிற்சங்க அதிகாரிகள் கருத்துப்படி குறைந்தது ஆலையில் 1,300 தொழிலாளர்களில் கிட்டத்தட்ட 40 சதவிகிதமான 500 தொழிலாளர்கள் மணித்தியாலம் ஒன்றிற்கு $14 வழங்கப்படுவர். இதுவரை UAW மற்றும் GM இரண்டும் புதிதாக வேலைக்கச் சேர்க்கப்படும் தொழிலாளர்கள் மீதுதான் குறைந்த ஊதியத்தைச் சுமத்தியுள்ளன. அதுவும் மொத்தத் தேசியத் தொழிலாளர் தொகுப்பில் 20சதவிகிதம் மட்டும் என்று வரம்பு இருந்தது. செய்தி ஊடக வர்ணனையாளர்களும் தொழில்துறை பகுப்பாய்வாளர்களும் இந்த உடன்பாட்டை ஒரு “திருப்புமுனையான” உடன்பாடு, சிறிய கார்த் தயாரிப்புத் தொழிலில் மட்டும் இல்லாமல் தொழில்துறை முழுவதிலும் ஊதியக் குறைப்புக்களுக்கு வழிவகுக்கும் என்று பாராட்டியுள்ளனர்.

UAW Local 5960 பொதுத் தலைவர் மைக் டன் உடன்பாட்டை ஆர்வத்துடன் பாராட்டும் விதத்தில் கூறினார்: “இது செயல்பட்டுள்ளது-நாம் அமெரிக்காவில் வேலைகளைத் தக்க வைத்துக் கொள்ளுகிறோம்.” UAW ஐப் பொறுத்தவரை, “அமெரிக்காவில் வேலைகளைத் தக்க வைத்தல்” என்பதின் பொருள் தொழிலாளர்களை அது வறுமையில் தள்ளி அவர்கள் வீடுகள், சேமிப்புக்களை இழந்து தங்கள் குழந்தைகளைக் கல்லூரிகளுக்கு அனுப்பாவிட்டாலும்கூட கிடைக்கும் பணவரத்துக்களை தங்கள் கருவூலத்தில் வைத்துக் கொள்ளவேண்டும் என்பதாகும். லேக் ஓரியன் ஆலையில் இருந்து UAW க்குக் கிடைக்கும் பணம் ஆண்டு ஒன்றிற்கு முக்கால் மில்லியன் டாலர்களாக இருக்கும்.

இந்த ஆலை மாறுதலுக்கு உட்பட்டு Chevrolet Aveo என்று கொரியா, மெக்சிகோவில் தற்பொழுது தயாரிக்கப்படும் மிகக் கச்சிதமான காரைத் தயாரிக்கும். Automative News இடம் மைக் டன், குறைவூதியங்கள் GM இன் தொழிலாளர் செலவினங்களைப் போதுமான அளவு குறைத்து அமெரிக்காவில் கார்த்தயாரிப்பை ஒரு இலாபகர உற்பத்தியானதாக்கும் என்றார். “திட்டத்திற்குள் அது ஒரு ஒருங்கிணைந்த பகுதி.” என்றார் அவர். தொழிலாளர்களைப் பொறுத்தவரை, “அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர் என்று நான் கூறமாட்டேன், ஆனால் அவர்கள் புரிந்து கொண்டது போல் தோன்றியது.” என்றார்.

லேக் ஓரியன் நிகழ்வுகள் பல மாத காலம் UAW, இந்தியானாவில் உள்ள GM உலோகப் பதிப்பு ஆலையில் உள்ள தொழிலாளர்களை 50 சதவிகித ஊதியக் குறைப்பை ஏற்கக் கட்டாயப்படுத்திய பிரசாரத்தைத் தொடர்ந்தந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் தொழிலாளர்கள் UAW International நிர்வாகிகளை தங்கள் கூட்டத்தில் இருந்த வெளியேற்றிய பிறகு, UAW ஒரு அஞ்சல் வழி வாக்கெடுப்பை நட்த்தியது. இதுவும் தோற்றபின்-தொழிலாளர்கள் ஊதியக் குறைப்பை ஐந்துக்கு ஒன்று என்ற விகிதத்தில் எதிர்த்து வாக்களித்தனர். ஆனால் UAW,GM உடன் சேர்ந்து ஆலை மூடப்படும் என்று அறிவித்தது.

இந்த நிகழ்வுகள் கார்த் தொழிலாளர்கள் முற்றிலும் அவர்களுக்கு எதிரான விரோதப் போக்கு உடைய அமைப்பில் பொறிபோல் அகப்பட்டுக் கொண்டனர் என்பதைக் காட்டுகின்றன. அவர்கள் UAW க்குக் கட்டணம் செலுத்தக் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்-அந்தப் பணம் ஊதியத்தில் இருந்த நேரடியாகக் கழிக்கப்பட்டு விடுகிறது; தொழிற்சங்கம் நடத்தும் பேச்சுவார்த்தைகள் மூலம் வரும் ஒப்பந்தப்படி அவர்களுக்கு வேலைநிறுத்தம் செய்யும் உரிமையும் இல்லை. செய்தி ஊடகத் தகவல்கள்படி, ஊதியக் குறைப்பு உடன்பாடு ஞாயிறன்று அறிவிக்கப்பட்டது, 2015 வரை நடைமுறையில் இருக்கும்.

லேக் ஓரியனில் நடந்துள்ளது UAW யின் ஜனநாயக விரோத, தொழிலாளர் வர்க்க விரோத்தன்மைக்கு சிறப்பான உதாரணம் ஆகும். தொழிற்சங்கத்தின் புதிய அடிப்படை ஊதியமான $14 மணிக்கு என்பது அமெரிக்க உற்பத்தித் துறை தொழிலாளர்கள் பெறும் சராசரி ஊதியத்திற்கு 20 சதவிகிதம் குறைவாகும்; இதில் தொழிற்சங்கம் இல்லாத ஆலைகளும் அடங்கும்.

UAW எப்படியும் தொழிலாளர் வர்க்கப் போர்க்குணம், ஒற்றுமை ஆகியவற்றில் எஞ்சி இருப்பவற்றை அழித்துவிட வேண்டும் என்று தீவிரமாக உள்ளது. கடந்த மாதம் Detroit Free Press க்குக் கொடுத்த பேட்டி ஒன்றில், UAW தலைவர் பாப் கிங் தொழிற்சங்கம் டெட்ரோயிட் கார்த்தயாரிப்பாளர்களுடன் அடுத்து ஆண்டு பேச்சுவார்த்தைகளை வடிவமைப்பைக் கைவிட இருப்பதாகக் கூறினார். “பழைய UAW” போல் இல்லாமல், “புதிய UAW” இப்பொழுது “போட்டித்தன்மையையற்ற'' பெருநிறுவனங்களுக்கு கொடுக்காத ஒப்பந்த விதிகளை இனிப் பாதுகாக்காது என்றார்.

UAW தன்னலக்குழு பல பில்லியன் டாலர்கள் மதிப்புடைய சொத்துக்களைக் கட்டுப்படுத்துகிறது; இதில் GM உடைய பங்குகளில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கும் அடங்கும். இந்தச்செல்வக் கொழிப்புடைய கும்பல், ஆயிரக்கணக்கான சர்வதேச அதிகாரிகள், பணிப் பிரதிநிதிகள், வட்டார இயக்குனர்கள், உள்ளூர்த் தொழிற்சங்க நிர்வாகிகள் என்ற பிரிவுகளைக் கொண்டது, தொழிலாளர் செலவினங்களைக் குறைப்பதில் நேரடி நிதிய நலன்களைக் கொண்டுள்ளது, இலாபங்களை உயர்த்துதிலும நேரடி அக்கறை கொண்டுள்ளது.

UAW க்கு எதிர்ப்புக்களும் முறையீடுகளும் நேரத்தை வீணடிப்பதையும் விட மோசமான செயலாகும். இந்த அணுகுமுறை, UAW உள்ளூர் அதிகாரிகள், வலதுசாரி முன்னாள் தீவிரவாதிகள் தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் இணைந்த வகையில், நீண்ட காலம் முன்னரே ஒரு தொழிலாளர் அமைப்பு என்பதாக இல்லாமல் போய்விட்ட கார் முதலாளிகளின் இவ்வமைப்பு மாறுதலுக்கு உட்படும் என்ற போலிப் பிரச்சாரத்திற்கு ஊக்கம் கொடுக்கிறது.

கார்த்தொழிலாளர்கள் நிறுவனங்களின் தாக்குதலை எதிர்க்கத் துவங்கியுள்ளனர். அவர்கள் எதிர்ப்பு UAW க்கு எதிரான எழுச்சி என்ற வடிவில் உள்ளது. இது எதிரெதிரானதும் ஒன்றுடன் ஒன்று பொருந்தாததுமான வர்க்க நலன்களின் மோதல் என்பதைக் காட்டுகிறது.

UAW தங்கள் நலன்களுக்கு விரோதமாக உள்ளது என்பதைத் தொழிலாளர்கள் உணர்ந்து வருகின்றனர்; தாங்கள் இனித் தங்கள் நலன்களைத் தாங்களே பொறுப்பில் கொள்ள வேண்டும் என்றும் விரும்புகின்றனர். கடந்த மாதம் இந்தியானாபொலிஸில் தொழிலாளர்கள் ஒரு சுயாதீன அடிமட்டத் தொண்டர் குழுவை UAW விற்கு எதிராக அமைத்து, ஆலையில் உள்ள அனைத்துத் தொழிலாளர்களையும் ஆலை மூடல் மற்றும் ஊதியக் குறைப்பிற்கு எதிராகத் திரட்டியுள்ளனர்.

சோசலிசச் சமத்துவக் கட்சி இந்த தைரியமான ஆரம்ப முயற்சிக்கு ஆதரவு கொடுத்து, லேக் ஓரியன் மற்றும் கார்த் தொழில் முழுவதும் GM முத்திரைப் பதிப்பு ஆலையில் உள்ள அனைத்துத் தொழிலாளர்கள் குழுவைப் பிற்பற்றுமாறு அழைப்பு விடுகிறது. நாங்கள் கூறுவது: UAW இழிந்தவர்களுக்கு எதிராக ஒரு எழுச்சியை ஒழுங்கமைக்கவும்! ஒவ்வொரு ஆலையிலும் அடிமட்டத் தொழிலாளர்களைக் கூட்டிக் குழுக்களை அமைத்து, பணிநீக்கங்கள், ஊதியக் குறைப்புக்கள், விரைந்து வெளியே அனுப்புதல், ஓய்வூதியத் தகர்ப்பு, சுகாதாரப்பாதுகாப்பு ஆகியவற்றிற்கு எதிரானப் போராட ஒன்றுபடுங்கள்.

இப்பொழுதே ஆர்ப்பாட்டங்கள், ஆலை ஆக்கிரமிப்புக்கள், வேலைநிறுத்தங்களுக்குத் தயாரிப்பு நடத்தி, UAW, GM, அரசாங்கம் ஆகியவை சுமத்தியுள்ள அடிமைப் பட்டயத்தை அகற்றி ஒவ்வொரு தொழிலாளிக்கும் பாதுகாப்பான, நல்ல ஊதியம் உள்ள சமூக உரிமைகளுக்கு உத்தரவாதம் அளியுங்கள்.

UAW க்கும் கார்த்தயாரிப்பு முதலாளிகளை மட்டும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளவில்லை; அவர்கள் பெருநிறுவன ஆதரவுடைய கட்சிகள், அவை காக்கும் முதலாளித்துவம் இவற்றையும் எதிர்கொள்ளுகின்றனர். லேக் ஓரியனில் நிகழ்ந்த ஊதியக் குறைப்பு உடன்பாடு ஒபாமா நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்டது; அதுதான் GM, Chrysler இரண்டையும் திவாலுக்குத் தள்ளி பொருளாதாரம் முழுவதும் ஊதியக் குறைப்பு நடவடிக்கையைத் துவக்கியது.

ஒவ்வொரு நாட்டிலும் இதே பல்லவிதான் உள்ளது. கடந்த மாதம் Fiat and Chrysler உடைய உயர் நிர்வாக அதிகாரி Sergio Marchionne அமெரிக்க முறையிலான ஊதியக்குறைப்புக்கள், “வளைந்து கொடுக்கும்” ஒப்பந்தங்களை தொழிலாளர்கள் ஏற்காவிட்டால் Fiat இன் இத்தாலிய ஆலைகள் அனைத்துயும் மூடப்போவதாக அச்சுறுத்தினார்.

அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களும் அழிவில் ஆழ்ந்து போகாமல் இருக்க வேண்டும் என்றால், அவர்கள் தொழிலாளர் வர்க்கத்தை முதலாளித்துவத்திற்குப் பதிலாக சோசலிசத்தைக் கொண்டவரக்கூடிய புதிய அரசியல் மூலோபாயத்தைத் தளமாகக் கொண்டுவரத் திரட்ட வேண்டும். இதில் கார்த் தொழில் மற்றும் பொருளாதாரத்தில் பல நெம்புளோல்கள் பொது நிறுவனங்களாக தொழிலாளர் வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ் தனியார் இலாபத்திற்கு என்று இல்லாமல் சமூகத்தின் நன்மைக்குப் பாடுபடும் மாற்றமும் அடங்கும்.

சமீபத்தில் ஏற்பட்ட திட்டத்தில் SEP கூறுகிறது: “தன்னுடைய நலன்களை முன்னேற்றுவிக்க, தொழிலாளர் வர்க்கம் உண்மையான அடிமட்டத் தொழிலாளர் அமைப்புக்களைக் கட்டமைக்க வேண்டும்-அனைத்து பணிமனைத் தொழிலாளர்கள், ஆலை மற்றும் அண்மையில் உள்ள ஜனநாயக நடவடிக்கைக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்; இவை புரட்சி எதிர்ப்பு, வளைந்துகொடுக்காத தன்மை உணர்வினால் உந்தப்பெற்று பெரு வணிகத்தின் இருகட்சிகளக்கும் எதிராகச் செயல்பட வேண்டும். இந்த அமைப்புக்கள் தொழிலாளர் வர்க்கத்தை ஒன்றுபடுத்தும் இன்னும் மகத்தான பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும்-வேலையில் உள்ளவர்கள், இல்லாதவர்கள், பயிற்சி பெற்றவர்கள், பெறாதவர்கள், உள்ளூராயினும், வெளிநாட்டில் இருந்து வந்திருந்தாலும், பல தொழில்களையும் பணியிடங்களையும் கடந்து, ஒன்றாக முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிரான பொதுப் போராட்டங்கள் அமைக்கப்பட வேண்டும்.”

அனைத்துக் கார்த் தயாரிப்புத் தொழிலாளர்களும் எங்கள் திட்டத்தை நன்கு படித்து SEP யில் சேர்ந்து சோசலிசத்திற்கான போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும்.