சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Marseille strike hits Mediterranean shipping, oil supplies

மார்ச்சேயி வேலைநிறுத்தமானது மத்தியதரைக்கடல் கப்பல் போக்குவரத்தையும் கடல்வழி எண்ணெய் விநியோகத்தையும் பாதிக்கின்றன

By Pierre Mabut and Anthony Torres
11 October 2010

Use this version to print | Send feedback

தெற்கு பிரெஞ்சு துறைமுக நகரான மார்சேயில் தனியார்மயமாக்கல் மற்றும் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக கப்பல்துறைத் தொழிலாளர்கள் மற்றும் கப்பல் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நடத்தும் வேலைநிறுத்தம் கப்பல்களையும் எரிசக்தி விநியோகத் தடையையும் ஏற்படுத்தியுள்ளன. வேலை கொடுப்போர், தொழிலாளர் பொதுக் கூட்டமைப்புச் சங்கம் (CGT) மற்றும் உள்ளூர் அரசாங்க அதிகாரிகள் ஆகியோர்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையான துறைமுக வசதிகளை பகுதியான தனியார்மயமாக்குதல் மற்றும் ஓய்வூதிய வெட்டுகளுக்கான திட்டங்களுக்கு எதிராக தொழிலாளர்கள் போராடி வருகின்றனர்.

மார்சேயிக்கு வெளியே இப்பொழுது 35 பெட்ரோல் டாங்கர்கள் உட்பட 53 கப்பல்கள் சரக்குகளை இறக்குவதற்குக் காத்திருக்கின்றன. இதில் முக்கிய பங்கு போ லவேரா மார்சேயி (Fos-Lavera Marseille) எனப்படும் சர்வதேச பொருட்கள் மாற்றுதல் மற்றும் இறக்குமதி கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்படுதல் மையத்திலுள்ள 224 கப்பல் பழுதுபார்க்கும் தொழிலாளர்களால் நடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. துறைமுகத்தில் அவர்கள் வேலை செய்யும் பகுதி தனியார் துறை நிறுவனங்களால் செயல்படுத்தப்படுவதற்குத் திறக்கப்படவுள்ளன.

இந்த வேலை நிறுத்தமானது வட ஆபிரிக்காவுடன் பிரெஞ்சு வணிகத்தையும் நிறுத்தியுள்ளது. அல்ஜீரியச் செய்தித்தாள் எல் வாடன் எழுதியது: “ஒரு கடல்வழிப் போக்குவரத்து நிறுவனமான மார்பிரெட் (Marfret) இன்படி, மெக்ரெப்புடனான வணிகம் அநேகமாக முற்றிலும் நின்று விட்டது. உலகின் மூன்றாவது மிகப் பெரிய கடல் வணிக நிறுவனமான மார்செயைத் தளமாகக் கொண்ட CMA-CGM “வட ஆபிரிக்காவிற்கு மார்செய் வழியே செல்லும் ஐந்தில் கப்பல்களில் ஒரு கப்பல் அங்கு கட்டுப்படுத்தலான நிறுத்தத்திற்கு உட்பட்டிருப்பதாக” தெரிவித்துள்ளது. மார்சேயி துறைமுகத்திற்கு வரும் பொருட்களில் மிக அதிகமானமவை அல்ஜீரியாவிலிருந்து வருபவையாகவும் இரண்டாவது மிக அதிக எண்ணிக்கை உடையவையாகவும் இருக்கிறது.”

ஜூலை மாதத்திலிருந்து தங்கள் நிலைப்பாட்டில் திட்டமிடப்பட்டுள்ள மாறுதல்களுக்கு எதிராக மார்சேய் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் உள்ளனர். தொழிற்சங்கங்கள் நீண்டகாலமாக கப்பல்துறைத் தொழிலாளர்கள் மற்றும் கப்பல் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் இடையேயுள்ள பிளவுகளைத் தக்க வைத்து வருகின்றன. கப்பல்துறைத் தொழிலாளர்கள் இரட்டைப்படையான இலக்க நாட்களில் வேலைநிறுத்தம் செய்கின்றனர். கப்பல் பழுதுபார்க்கும் தொழிலாளர்களோ ஒற்றை எண்கள் உடைய நாட்களில் வேலைநிறுத்தம் செய்கின்றனர். இவர்கள் மாதம் இருமுறை ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராகவும் வேலைநிறுத்தம் செய்கின்றனர். ஆனால் கப்பல்துறைத் தொழிலாளர்கள் மற்றும் கப்பல் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் வெவ்வேறு நாட்களில் வேலைநிறுத்தம் செய்கின்றனர்.

கோடை காலத்திலிருந்து CGT அதிகாரிகள் சரக்கு இறக்கும் பகுதிகளில் அணியப்படும் பாதுகாப்பு உடைகள் தெரிவுசெய்வது குறித்து தொழிலாளர்கள் பாதிப்பிற்கு உட்படுத்துவதை எதிர்ப்பதையும் நிறுத்திவிட்டனர். இப்பிரச்சினைப் பற்றி தொழிலாளர்கள் ஒழுங்கினை கடைபிடிக்கும் சபைகளுக்கு அனுப்பப்படுகின்றனர்—இது துறைமுகங்களில் ஒரு புதிய நிகழ்வு ஆகும்.

துறைமுகத்திலுள்ள CGT அதிகாரிகள் திட்டமிடப்பட்டுள்ள சட்டப்பூர்வ மாற்றங்களான முன்கூட்டிய ஓய்வூதிய விதி, சலுகைகளைக் கொண்டிருந்தால் ஏற்க வேண்டும் என்று தொழிலாளர்களுடன் வாதிட்டுள்ளனர். தற்பொழுது, “சீர்திருத்தங்கள்” தொழிலாளர்கள் கப்பல்துறையில் 20 ஆண்டுகள் உடல்ரீதியாக உழைத்தால்தான் கடுமையான பணிநிலைமைகள் விதிகளின் கீழ் முன்கூட்டிய ஓய்வைப் பெறமுடியும்—இந்த நிபந்தனை துறைமுகத் தொழிலாளர்களால் எதிர்க்கப்பட்டுள்ளது.

CGT தலைவர் பேர்னார்ட் திபோவின் சமீபத்திய அறிக்கையானது துறைமுகங்களை முற்றுகையிடுதல் என்ற அச்சுறுத்தலைப் பயன்படுத்தி வெட்டுக்களைத் திரும்பப் பெறவைக்கும் எண்ணம் ஏதும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது. “போக்குவரத்தை தடைக்கு உட்படுத்துவது ஒன்றும் சிக்கல் வாய்ந்தது இல்லை. அதை எப்படிச் செய்வது என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் எங்கள் சங்கத்தின் நோக்கம் அது அல்ல.” என்று அவர் கூறினார்.

ஆயினும்கூட, வேலைநிறுத்தம் ஏற்கனவே எண்ணெய் வரத்துக்களைக் கணிசமாகத் தடைக்கு உட்படுத்திவிட்டது. மார்சேயிலுள்ள எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் செயற்பாட்டு விகிதங்களைக் குறைக்கும் கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளன. 12 பிரெஞ்சு சுத்திகரிப்பு நிலையங்களில் 6 தங்கள் உற்பத்தியைக் குறைத்துவிட்டன. ஏற்கனவே பிரெஞ்சு மத்தியதரைக்கடல் கோர்சிகா தீவில் பெட்ரோலியப் பொருட்கள் துறையின் செய்தித் தொடர்பாளர் Jean-Louis Schilansky தெற்கு பிரான்சில் அக்டோபர் 20 தையொட்டி “நமக்கு வினியோகப் பிரச்சினைகள் வரக்கூடும்.” என்றார்.

மார்சேயில் ஆறு சுத்திகரிப்பு நிலையங்களில் நான்கு இந்த வாரம் உற்பத்தியை நிறுத்திவிடக்கூடும். Fos-Lavera விலுள்ள எண்ணெய் நிலையங்கள் பிரான்ஸிலுள்ள 6 சுத்திகரிப்பு நிலையங்களுக்கு விநியோகங்களைக் கொடுக்கின்றன. நான்கு ஏனைய சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கிழக்கு பிரான்ஸில் Bas-Rhin பிராந்தியத்திற்கும் லியோன் இற்கும் இடையே செல்லும் ஐரோப்பிய எண்ணெய் குழாய் மூலம் கிடைக்கிறது. மொத்தத்தில் இவை பிரெஞ்சு சுத்திகரிப்புத் திறனில் 40 சதவிகிதத்தைப் பிரதிபலிக்கின்றன. ஒரு அவசரகால நடவடிக்கையாக சுற்றுச்சூழல், எரிசக்தி அமைச்சரகம் நான்கு டாங்கர்கள் ஞாயிறு முழுவதும் பிரெஞ்சு சாலை இணையங்களில் செயல்படுவதற்கு அனுமதி கொடுத்துள்ளது.

Intercontinental மாற்றுவிகிதத்தில் எரிபொருள் எண்ணெய் வருங்கால விலை வேலைநிறுத்தம் தொடங்கியதிலிருந்து 6 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஐரோப்பாவில் உடனடி விலை செப்டம்பர் 27 ந் திகதி வேலைநிறுத்தம் தொடங்கியதிலிருந்து 8 சதவிகிதம் உயர்ந்துவிட்டது.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின்படி,”பெட்ரோல் வணிகர்கள் மத்தியதரைக்கடல் பகுதியிலுள்ள ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கிற்கு நீண்ட கால விநியோக ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதற்குத் திணறுகின்றனர்.” பிரென்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு $85.29 என்று உயர்ந்துவிட்டது. அமெரிக்க கச்சா எண்ணெய் கடந்த வாரம் $83.33 என்று ஆகிவிட்டது. வலுவற்ற டொலர், பணம் அச்சிட்டு நிலைமையைச் சமாளித்தல் (அமெரிக்க பெடரல் ரிசர்வ் அச்சிடுதல்) என்ற எதிர்பார்ப்புக்கள், மற்றும் ஹூஸ்டனில் கடந்த வாரம் கப்பல் போக்குவரத்து மூடப்பட்டது ஆகியவை எண்ணெய் விலைகளை ஐந்து மாதங்களில் இல்லாத அதிகரிப்பிற்கு உட்படுத்திவிட்டன.

மார்சேய் துறைமுகத் தொழிலாளர்களுடைய அணுகுமுறை இத்தகைய கடும் சிக்கன நடவடிக்கை திட்டங்களுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் பெருகிய சீற்றத்தின் அடையாளம் ஆகும். இச்சட்டவரைவு, ஓய்வுபெறத் தகுதி என்னும் குறைந்த பட்ச சட்டபூர்வ வயதை 62க்கு உயர்த்துவது என்பது, தேசியசட்ட மன்றம் மற்றும் செனட்டால் சட்டமாக இயற்றப்பட்டுவிட்டது.

மார்சேயில் 4,000 பெண் பள்ளிக்கூடச் சிற்றுண்டித் தொழிலாளர்கள் 10 நாட்களாக வேலைநிறுத்தம் செய்துவரும் நிலையில் 200 சிற்றுண்டி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இவர்களுக்குத் ஆரம்ப ஊதியம் மாதம் 1,000 யூரோக்கள் ஆகும். ஆதரவை நாடுகின்ற பெற்றோர்களுக்கு அற்பத்தொகையாக 700 யூரோக்கள் கிடைக்கும் என்று அவர்களுக்கு அறிவிக்கப்படுகிறது.

மார்சேயிலுள்ள Monoprix பேரங்காடிகளிலுள்ள வெளிச் சோதனைத் தொழிலாளர்கள் செப்டம்பர் 17ல் இருந்து ஒரு தரமான ஊதியத்திற்காக வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். தொழிலாளர்களில் பாதிப் பேர் பகுதி நேர வேலையாளர்கள் என்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

சமீபத்திய கருத்துக் கணிப்புக்களில் கேள்விகள் கேட்கப்பட்டவர்களில் 70 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள் வெட்டுக்களுக்கு எதிராக நடக்கும் போராட்டம் நியாயமானது மற்றும் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர். IFOP-Paris Match கருத்துக் கணிப்பும் வேலைநிறுத்தங்களுக்கான பொது ஆதரவை உறுதிபடுத்தியுள்ளன. “ஆதரவில் ஒன்றும் சரிவு இல்லை…இதில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியான UMP ஆதரவாளர்களை தவிர மற்ற அனைத்துப் பிரிவினரும் அடங்குவர்.”