சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

How the NPA disorients the struggle against Sarkozy’s cuts

சார்க்கோசியின் வெட்டுகளுக்கு எதிரான போராட்டத்தை NPA எவ்வாறு நோக்குநிலை பிறழச் செய்கிறது

By Alex Lantier
15 October 2010

Use this version to print | Send feedback

ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் ஓய்வூதிய வெட்டுகளுக்கு எதிராக ஒரு உண்மையான போராட்டத்தை முன்வைக்கத் தலைப்படும் தொழிலாளர்களால் தோற்கடிப்பட வேண்டியிருக்கும் ஒரு குட்டி முதலாளித்துவ கட்சி, பிரான்சின் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) ஆகும். ஆர்ப்பாட்டங்களிலும் தொலைக்காட்சியிலும் “இடது” போல் தோற்றமளிக்க அவர்கள் முயற்சி செய்தாலும், NPAஇன் அரசியல், வேலைநிறுத்த நடவடிக்கையை அரசியல் அதிகாரத்திற்கான ஒரு போராட்டமாக அபிவிருத்தி செய்வதை அடிப்படையாகக் கொண்டதல்ல, மாறாக எதிர்ப்பு நடவடிக்கைகளை அரசியல் ஸ்தாபனத்தின் வணிக-ஆதரவு சக்திகளுடன் கட்டிப்போடுவதை அடிப்படையாகக் கொண்டது.

தான் ”ஒரு புதிய மே ‘68’” ஐ காண விரும்புவதாக NPA செய்தித் தொடர்பாளரான ஓலிவியே பெசன்ஸனோ நேற்று வெளியிட்ட குறிப்பில் தெரிவித்துள்ளார். அதாவது 10 மில்லியன் பேர் கலந்து கொண்டு ஸ்ராலினிச பிரான்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியை (PCF) திகைக்கச் செய்து, ஜனாதிபதியாக இருந்த ஜெனரல் சார்ஸ் டு கோல் பதவி விலக இட்டுச் சென்ற அந்தப் பொது வேலைநிறுத்தப் போராட்டம் திரும்ப நிகழ்வதை காண விரும்புவதாய் அவர் கூறினார். சார்க்கோசியின் வெட்டுகளுக்கு எதிராக ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு மக்களிடையே பரந்து பெருகி வரும் ஆதரவுக்கு அவர் விண்ணப்பித்திருந்தார்.

இந்த எதிர்ப்புகளை எவ்வாறு பார்க்கிறார் என்று சென்ற வாரத்தில் கேள்வி எழுப்பப்பட்டபோது பெசன்ஸனோ விளக்கினார்: “இரயில்வேத் துறை ஊழியர்களும் மாணவர்களும் ஒன்றாய் சேர்ந்து செல்வதைக் காண்கையில், அது பழைய சிறந்த நினைவுகளைக் கொண்டு வருகிறது... 1995 [அப்போது இரயில்வேத் தொழிலாளர்களின் ஒரு வேலைநிறுத்தத்தை அடுத்து பிரதம மந்திரி அலன் ஜுப்பேயின் ஓய்வூதிய வெட்டுகள் ஓரளவுக்கு திரும்பப் பெறப்பட்டது] மற்றும் முதல் வேலை ஒப்பந்தம் [CPE, Contrat Première Embauche] போன்ற ஒரு சுகந்த மணம் இருக்கிறது.” 2006ல், இளம் தொழிலாளர்களை அவர்களது முதலாவது வேலைகளில் பணியமர்த்தி பின் நீக்குவதை எளிதாக்கியிருக்கக் கூடிய இந்த CPEயை இளைஞர்களின் எதிர்ப்புகள் திரும்பப் பெறச் செய்தது. “இடது”களுடன் - முதலாளித்துவ சோசலிஸ்ட் கட்சி (PS) போன்ற சக்திகளை உள்ளே சேர்ப்பதற்காக எடுக்கப்பட்ட வார்த்தை - NPA எத்தகைய கூட்டணிகளை உருவாக்கலாம் என்று கேட்டபோது, பெசன்ஸனோ குறிப்பிட்டு எதனையும் கூறவில்லை. ஆயினும், “நாங்களே தான் ஒவ்வொரு விடயத்திற்கும் தீர்வு என்பதான பசப்புகளை ஒருபோதும்” NPA கொண்டிருந்ததில்லை என்று அவர் தெரிவித்தார்.

ஒரு வலதுசாரி வேலைத்திட்டத்தை “இடது” வார்த்தைகளைக் கொண்டு மறைக்கும் NPAவின் திறமைக்கு இந்த வெளியீடு மிகச் சிறந்த உதாரணமாய் திகழ்கிறது. பெசன்ஸனோ மற்றும் NPAவுக்கு, ஒரு பொதுவேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுப்பதென்றால் அதன் அர்த்தம் சார்க்கோசிக்கு எதிராக பாரிய வேலைநிறுத்த நடவடிக்கையை ஒழுங்கமைக்க போராடுவது என்பதோ, அவரது அரசாங்கத்தை கீழிறக்குவது என்பதோ, மற்றும் ஒரு தொழிலாளர் அரசாங்கத்தை கட்டமைப்பது என்பதோ அல்ல. அரசாங்கத்துடன் ஒரு அரசியல் போராட்டத்தை ஒழுங்கமைக்க தொழிற்சங்கங்கள் மறுப்பது குறித்த எந்த விமர்சனத்தையும் பெசன்செனோவின் அறிக்கை வைக்கவில்லை.

அதற்குப் பதிலாய், அவரது அறிக்கையானது ஆளும் வர்க்கத்துடன் கூட்டணிகளை உருவாக்கிக் கொண்டு NPA நடத்தும் ஆர்ப்பாட்ட அரசியலை ஊக்குவிப்பதற்கான ஒரு வழியாக உள்ளது. இத்தகையதொரு கொள்கையின் பிரதான விளைவாக இருப்பது அரசாங்கம் மற்றும் அதன் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக பாரிய தொழிலாளர் போராட்டங்கள் அபிவிருத்தியுறுவது தடுக்கப்படுதலே ஆகும். இதனை வார்த்தையில் கூறாமல் இருப்பதில் பெசன்ஸனோ திறமை படைத்தவராய் இருந்தாலும், NPA உறுப்பினரான சான்ட்ரா டுமார்க் (Sandra Demarcq) “ஒரு வெடிப்பான நிலைமை” என்ற தலைப்பிலான சமீபத்தியதொரு அறிக்கையில் இதனை இன்னும் தெளிவாய் கூறினார்:

அவர் எழுதினார்: “ஓய்வூதிய வெட்டுகளுக்கு எதிரான ஒருமித்ததொரு பரப்புரையில்....PS உள்ளிட்ட முழுமையான பிரெஞ்சு இடதுகளுடன் NPA பங்கேற்கிறது.” ஆயினும் “ஒருமித்த கூட்டணிக்குள்ளாக” பல “கருத்துவேறுபாடுகள்” இருந்ததை அவர் ஒப்புக் கொண்டார்.

இந்த “பரப்புரை”யில் மிக சக்திவாய்ந்த படையானது வெட்டுகளை ஆதரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதான ஒரு விவரம். டுமார்க் எழுதுகிறார்: “கோரிக்கைகள் குறித்த கருத்துவேறுபாடு என்பது குறிப்பாக சோசலிஸ்ட் கட்சியுடன் இருக்கிறது. குறைந்தபட்ச ஓய்வு வயதை 60ல் பராமரிக்க வேண்டும் என்பதான கோரிக்கையுடன் அவர்கள் உடன்படுகின்றனர், ஆனால் முழுமையான ஓய்வூதியம் பெற நீண்ட காலத்திற்கு தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டும் என்கிற யோசனையை அவர்கள் பாதுகாக்கிறார்கள். எனவே அவர்கள் ஒரு முழுமையான ஓய்வூதியத்தைப் பெறுவதற்கு தகுதிபெற வேலைசெய்திருக்க வேண்டிய வருடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வலதுசாரி பிரதிநிதிகளின் பக்கம் வாக்களித்தனர்.”

ஓய்வூதிய வயதை 60க்கும் அதிகமாய் உயர்த்துவதை எதிர்ப்பதாக PS கூறுவது ஒரு மோசடியாகும். இப்போது அவசியமான பணிக் காலம் 41 ஆண்டு மற்றும் அதற்கு அதிகமாய் என அதிகரிக்க இருப்பதால், அநேக தொழிலாளர்கள் தாங்கள் 20 வயதுக்கு மேலே இருக்கும் சமயத்தில் தான் உத்தியோகபூர்வமாக வேலைக்குள் நுழைகிறார்கள் என்பதால், குறைந்தபட்ச ஓய்வூதிய வயது எண் கணக்கே ஒரு முக்கியத்துவமற்றுப் போன ஒன்றாக ஆகி விட்டிருக்கிறது. இருந்தபோதிலும், வெட்டுகளுக்காக PS திறம்பட வாக்களித்த பின்னரும் NPA இன்னமும் அதனை ஒரு “இடது” கட்சி என அழைத்துக் கொண்டிருக்கிறது!

PSஇன் வலதுசாரி பதிவேட்டை கணக்கில் கொண்டு பார்க்கையில் அது ஆர்ப்பாட்டங்களுக்கு அழைக்கும் NPA உடன் ஒரு கூட்டணிக்கு ஏன் விருப்பம் கொண்டிருக்க வேண்டும்? பெசன்ஸனோ புகழ்ந்த 1995 மற்றும் 2006 போராட்டங்களைக் கருதிப் பார்த்தால் இது தெளிவாகத் தெரியும்.

இரண்டு சந்தர்ப்பங்களிலுமே, 2009ல் NPA உருவாக்கச் சென்றவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக வெகுஜன தொழிற்துறை நடவடிக்கையை ஒழுங்கமைக்க மறுத்தனர். பதிலாக தொழிலாளர் போராட்டங்களை தொழிற்சங்கங்கள் திட்டமிடவும் தலைமையேற்று நடத்தவும் வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர், அரசாங்கத்திற்கு எதிராக ஒரு வெகுஜன அரசியல் வேலைநிறுத்தத்தை ஒழுங்கமைக்கும் எண்ணம் தொழிற்சங்கங்களிடம் இல்லை என்பது தெளிவாய் தெரிந்த போதிலும்.

இதன் விளைவாய், இந்த போராட்டங்கள் ஒரு அரசியல் முன்னோக்கு மறுக்கப்பட்ட நிலையில் வேகம் இழந்தன, இது ஆளும் வர்க்கம் சுதாரித்துக் கொள்வதற்கும் கூடுதலான சமூக தாக்குதல்களைத் தொடுப்பதற்கும் அனுமதித்தது. இந்தமுறையும் அது நடப்பதற்குத் தான் ஆளும் வர்க்கம் நம்பிக் கொண்டிருக்கிறது என்பதை சார்க்கோசி தனது வெட்டுகளைத் திருத்த திமிருடன் மறுப்பது காட்டுகிறது. இத்தகையதொரு விளைவை உறுதியளிக்க NPA உதவும் என்று PS நம்புகின்ற நிலையில் NPAக்கு ஆதரவு சேர்ப்பதில் உதவ PS விரும்புகிறது.

ஆயினும் பதிவேடு மிகத் தெளிவாய் இருக்கிறது. 1997 தேர்தல்கள் லியோனல் ஜோஸ்பனது PS அரசாங்கத்தை அதிகாரத்திற்குக் கொண்டுவந்தன. அது பாரிய தனியார்மயமாக்க வேலைத்திட்டத்தை மேற்கொண்டது. 2006 ஆர்ப்பாட்டங்களை பொறுத்தவரை, சார்க்கோசி அவற்றுக்கு புலப்படுகிற ஆதரவை வழங்கியதானது (அப்போது அவரது எதிரியான அப்போதைய பிரதமர் டொமினிக் டு விலெபென்னுக்கு எதிராக) அவரது கருத்துக்கணிப்பு ஆதரவுக்கு வலுவூட்டியது, அவர் 2007 ஜனாதிபதி தேர்தலில் வென்று பின் தனது வலதுசாரி, சிக்கன-ஆதரவு வேலைத்திட்டத்தை மேற்கொள்வதற்கு அவருக்கு உதவியது.

இடைவரும் காலத்தில் வளர்ந்து வந்திருக்கும் தலைமுறைக்கு இதன் சமூக பின்விளைவுகள் பேரழிவூட்டுவதாய் அமைந்திருந்திருக்கின்றன. பாதுகாப்பான வேலைகளின் எண்ணிக்கை பொறிவு காணும் நிலையில் பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் தற்காலிக வேலைகளுக்குள்ளோ, அல்லது வேலைவாய்ப்பின்மைக்குள்ளோ -வேலைவாய்ப்பின்மை காப்பீடுகள் துண்டிக்கப்பட்டு விட்டன- தள்ளப்பட்டிருக்கின்றனர். மிக பிரதானமான வெட்டுகளை மட்டும் குறிப்பிடுவதாக இருந்தால், வேலை வார காலம் அதிகரிப்பு, தொடர்ச்சியான ஓய்வூதிய வெட்டுகள் என சார்க்கோசியின் நடப்பு “சீர்திருத்தம்” வரை அழைத்து வந்திருக்கும் பல நடவடிக்கைகளை அவர்கள் கண்டிருக்கின்றனர்.

NPAவே தனது ஒரு சமீபத்திய அறிக்கையில் ஒப்புக் கொண்டதைப் போல (”இளைஞர்கள் பியோன் மற்றும் சார்க்கோசி மீது கழிகின்றனர்”), “இளைஞர்கள் சூழலை மிக நன்றாய் புரிந்து கொண்டிருக்கிறார்கள், தங்களது தலைமுறை பலியிடப்படுகிறது என்பதை, தாங்கள் தமது முந்தைய தலைமுறைகளை விட ஆரோக்கியம் குறைந்த சூழலிலேயே வாழவிருக்கிறோம் என்பதை.” இந்த நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் எவரொருவரும் வரக்கூடிய நேர்மையான முடிவு என்னவாயிருக்கும் என்றால், 1995 மற்றும் 2006ல் தொழிலாளர்கள் வென்றிருக்கக் கூடிய தற்காலிக வெற்றிகள் என்னவாய் இருந்தாலும் சரி, இந்த போராட்டங்கள் இறுதியாக படுபயங்கர தோல்விகளையே உருவாக்கின. பின் ஏன் பெசன்ஸனோ அவற்றில் ஒரு “சுகந்த மணம்” கண்டார்?

வருங்காலத்தில் PS உடனான ஒரு கூட்டணி அரசாங்கத்தில் அமைச்சரக பதவியுடன் வரக் கூடிய அரசு விருந்துகள், சிறந்த வாசனைத் திரவியங்கள் மற்றும் பிற ஊக்கத்தொகைகள் தான் NPA நுகரும் “சுகந்த மணமாக” இருக்கலாம் என்பதை NPAன் தேசிய தலைமையின் ஒரு முன்னணி உறுப்பினரான Pierre-François Grond இடம் இருந்தான சமீபத்திய அறிக்கை காட்டுகிறது.

”ஒரு சமூக மற்றும் ஜனநாயகக் கிளர்ச்சிக்காக” என்பதில் கிராண்ட் எழுதுகிறார்: “2012க்கான [அடுத்த ஜனாதிபதி தேர்தல்] சக்திகளின் உறவு இப்போது தீர்மானிக்கப்படுகிறது. ஒரு ஒன்றுபட்ட சமூக மற்றும் அரசியல் இடதின் அதாவது ஒரு போராட்டக் கட்சியின் ஆதரவுபெற்ற வெகுஜன அணிதிரட்டல்களை.... கட்டுவதற்கான திறன் வெற்றிக்கான ஒரு நிபந்தனையாக உள்ளது.” பெயரடைகள் மாற்றி மாற்றி இருந்தாலும், கிராண்ட் சொல்ல வருவது தெளிவாய் இருக்கிறது. ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுவதற்கு உரிமை கொண்டாடுவதன் மூலம், அடுத்த தேர்தலில் “ஐக்கிய இடதின்” வெற்றியை ஒழுங்கமைக்க NPA நம்பிக்கை கொண்டிருக்கிறது. அந்த வெற்றி NPAக்கு (மற்றும் பிரஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இதேபோன்ற வலதுசாரி சின்னஞ்சிறுசுகளுக்கு) ஒரு சில சிறு அமைச்சரவைகளை ஒப்படைக்க கடமைப்பட்டதாய் உணரும் ஒரு PS ஜனாதிபதியை உருவாக்கும்.

2012க்கான PSன் அநேகமான ஜனாதிபதி வேட்பாளராய் விவரிக்கப்படும் மனிதரின் அடையாளத்தில் இருந்தே இத்தகையதொரு அரசாங்கத்தின் குணம் தெளிவாய் தெரியும்: இப்போது சர்வதேச நாணய நிதியத்தின் தலைவராய் இருக்கும் டொமினிக் ஸ்ட்ராஸ்-கான் தான் அவர். பல கடன்பட்ட அரசுகளின் மீது கடுமையான சிக்கன நடவடிக்கைகளைத் திணிப்பதற்கு ஸ்ட்ராஸ்-கான் உதவியிருக்கிறார். குறிப்பாக இந்த வருடத்தின் ஆரம்பத்தில் கிரேக்கத்தில் ஒரு ஐரோப்பிய ஒன்றிய-சர்வதேச நாணய நிதிய பிணையெடுப்பிற்கு பிரதிபலனாக பலத்த சமூக வெட்டுகளுக்கு அவர் வலியுறுத்தினார். PS நிலைப்பாட்டுடன் ஒரேவரிசையில் நிற்கும் பிரெஞ்சு ஓய்வூதியங்கள் மீதான ஒரு அறிக்கையையும் சர்வதேச நாணய நிதியம் சமீபத்தில் வெளியிட்டது. சார்க்கோசியின் வெட்டுகள் தரும் “நிதி சமநிலையை” ஆதரிப்பதாகவும், ஆயினும் குறைந்தபட்ச ஓய்வூதிய வயது 60லியே பராமரிக்கப்படுவதை பரிந்துரைப்பதாகவும் அந்த அறிக்கை கூறியது.

ஸ்ட்ராஸ்-கான் உடன், அல்லது அவரது வருங்கால அரசாங்கத்துடன் கூட்டணி சேர்வது குறித்து NPA சிந்தித்து வருகிறது என்பதே அதன் வர்க்க தன்மையை பக்கம் பக்கமாய் பேசுகிறது.

கிரேக்கத்திலுள்ள கியார்ஜியோஸ் பாப்பாண்ட்ரூவின் சமூக-ஜனநாயகக் கட்சி அரசாங்கம் இத்தகைய அரசாங்கம் எப்படி தொழிலாளர்களுக்கு எதிரான பாரிய சிக்கன நடவடிக்கைகளை அமலாக்க முடியும் என்பதற்கு ஒரு உதாரணத்தை வழங்குகிறது. சமூக செலவினங்களுக்கான தொகையை பில்லியன்கணக்கான யூரோக்களின் அளவில் அதிகப்படுத்த இருப்பதாக வாக்குறுதியளித்து அக்டோபர் 2009ல் தேர்ந்தெடுக்கப்பட்ட பாப்பாண்ட்ரூ பதவிக்கு வந்தவுடன், கிரேக்கம் முன்னர் ஒப்புகொள்ளப்பட்டிருந்ததை விட பெருமளவிலான பற்றாக்குறைகளைக் கொண்டிருந்ததை திடீரென்று கண்டுகொண்டதாய் கூறினார். ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலில் உள்ள தனது சமூக-ஜனநாயகக் கட்சி சகாக்களைப் போலவே, பாப்பாண்ட்ரூவும் வெகுவிரைவில் பெரும் சமூக வெட்டுகளை மேற்கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியம் மற்றும் பிற நிதி ஸ்தாபனங்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.

NPAவும் மற்றும் ஒட்டுமொத்த முதலாளித்துவ “இடது” ஸ்தாபகங்களும் எதிர்வரும் சமூகப் போராட்டங்களுக்குள் தொழிலாள வர்க்கத்தின் எதிரிகளாக உள்நுழைகின்றன. தொழிலாளர்கள் வெகுஜன வேலைநிறுத்தங்களுக்கும் அரசியல் போராட்டங்களுக்கும் தயாரிப்பு செய்கின்ற நிலையில், அவர்கள் மனதில் விழிப்புடன் கொள்ள வேண்டிய வாசகம் இது தான்: சர்வதேச நாணய நிதியத்தின் குட்டிமுதலாளித்துவ நண்பர்கள் மீது நம்பிக்கை வைக்காதே.