சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French government, unions try to end strikes against pension cuts

ஓய்வூதிய வெட்டுகளுக்கு எதிரான போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வர பிரெஞ்சு அரசாங்கம் மற்றும் தொழிற்சங்கங்கள் முயற்சி

By Alex Lantier
18 October 2010

Use this version to print | Send feedback

பல்வேறு மூலோபாய எண்ணெய் இருப்புக் கிடங்கை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் தொழிலாளர்களை கலைத்து விரட்டுவதற்காக வெள்ளிக்கிழமையன்று பிரெஞ்சு அரசாங்கம் CRS தேசிய கலகப் பிரிவுப் படைப் பொலிசாருக்கு உத்தரவிட்ட பின்னர், அதிபர் நிக்கோலா சார்கோசியின் வெகுஜன விரோத ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வருவதற்காக பிரெஞ்சு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புக்கள் தாங்களாகவே அரசாங்கத்திற்கு ஆதரவாக இணைந்துகொள்ளுகின்றன. செனட்டில் புதன்கிழமையன்று வெட்டுக்கள் மீதான இறுதி வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. தொழிலாளர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை நிறுத்துவதற்கான பாரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்து விலகி நின்று, வெட்டுக்களுக்கு எதிரான எதிர்ப்பை கைவிட தாங்கள் தயாராக இருப்பதை சமிக்கையாக்கிக் கொண்டிருக்கிறார்கள் தொழிற்சங்க பேச்சாளர்கள்.

சார்க்கோசியின் கொள்கைகளுக்கு எதிரான வெகுஜன எதிர்ப்பு பாரிய அளவிலான போராட்டங்கள் மற்றும் உயர்நிலை பள்ளி மாணவர்கள் எதிர்ப்புகள் ஆகியவற்றோடு, பல்வேறு தொழிற்சங்கங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நாடு தழுவிய ஒரு நாள் போராட்டத்திற்கு வழி வகுத்துவிட்டது. Fos-sur-Mer, Cournon d’Auvergne, Lespinasse மற்றும் Ambès எண்ணெய் இருப்புக் கிடங்குகளில் மேற்கொள்ளபட்ட போலீஸ் நடவடிக்கைகளுக்கு தொழிற்சங்க கூட்டமைப்புகளிடமிருந்து கடும் எதிர்ப்பு எதுவும் வராதது, போராட்டங்களை நம்பிக்கை இழக்க செய்து, முடிவுக்குக் கொண்டு வர உதவும் என்று அரசாங்கம் நம்பிக்கொண்டிருக்கிறது. மேலும் போராட்டங்கள் தோல்வியுற்றதாக அறிவிப்பதற்காக கடந்த அக்டோபர் 16 ல் நடைபெற்ற போராட்டத்தில் - அக்டோபர் 12 ல் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற 3.5 மில்லியன் போராட்டக்காரர்களை விட கொஞ்சம் குறைவாக - 3 மில்லியன் மக்கள் கலந்துகொண்ட உண்மையையும் அரசாங்கம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

UMP (Union for a Popular Movement) க்கான பேச்சாளர் Frédéric Lefebvre, " சார்க்கோசியின் கொள்கைகளை பிரெஞ்சு மக்கள் மதிப்பிடத் தொடங்கிவிட்டனர்" என்று கூறினார். மேலும், " வெட்டுக்களை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை கைவிடவோ அல்லது ஓய்வூதியத்திற்கான வயதை அதிகரிப்புக்கான எதிர்ப்பால் நாங்கள் நிறுத்தப்போவதோ இல்லை" என்றார் அவர்.

விவசாயத்துறை அமைச்சர் Bruno Le Maire, "நாங்கள் ஒரு தெளிவான திருப்பு முனையில் இருப்பதாவே நான் நினைக்கிறேன். நான் நம்புவது என்னவென்றால் காரணம் வெளிப்பட்டுவிட்டது, எனவே, இந்த (சீர்திருத்தம்) வருகிற நாட்களில் சுவீகரிக்கப்பட்டு, வருகிற வாரங்களில் நிச்சயம் செயலுக்கு வரும்" என்று ஐரோப்பா 1 செய்தியிடம் கூறியுள்ளார்.

தொடரும் போராட்டங்களால் பிரான்சின் கடன் மதிப்பீடு குறைந்து, தற்போது AAA ஆக மதிப்பிடப்பட்டுள்ளது, கிரேக்கத்தில் ஏற்பட்டது போன்ற நெருக்கடி பிரான்சில் ஏற்படுவதற்கான அறிகுறி தென்படுவதாக நிதி ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பத்து வருட காலத்திற்கு AA இருந்து A ஆக தர மதிப்பீடு செய்வது பிரான்சிற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று அனேகமாக அனைத்து குறியீடுகளும் தெரிவித்தன.

"அவர்கள் பிரான்சிற்கான தர விகிதத்தை குறைத்தால் அது தற்போது கட்டுக்குள் மட்டுமே இருக்கும் சர்வதேச பொருளாதார நெருக்கடிக்கு மீண்டும் வித்திட்டு, ஒட்டுமொத்த ஐரோப்பிய பிராந்தியத்திற்கும் பரவச்செய்துவிடும் என்பதை மதிப்பீடு அளிக்கும் முகவர் ஏஜென்சிகள், பிரதானமாக உணர்ந்துள்ளதேயாகும். ஆனால் தனது AAA அந்தஸ்தை தக்கவைத்துள்ளது பொதுச் செலவு வெட்டுக்களில் ஒரு அடிப்படை குறைந்தளவு குறைப்பும் விசேடமாக ஓய்வூதியத்தில் செய்வது பூகோள அரசியல் காரணங்களுக்கு அப்பால் தங்கியுள்ளதாக ஏஜென்சிகள் பிரான்சை எச்சரிக்கை கூட செய்கிறது'' என்று ACDEF விளக்குகிறது

நாடு முழுவதும் - துறைமுகம், சுத்திகரிப்பு நிலையங்கள், எண்ணெய் இருப்பு கிடங்குகள் மற்றும் அனைத்து போக்குவரத்து தொழிலாளர்களின் - போராட்டமானது வெட்டுக்களுக்கு எதிரான தொழிலாளர்களின் முக்கிய ஆயுதமானதால், பெட்ரோல் பற்றாக்குறை அச்சுறுத்தல் உருவானது. இதன் விளைவாக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்பதை மறுக்க அரசாங்க பேச்சாளர் மிகவும் சிரமப்பட்டுப்போனார். தொழிலாளர் துறை அமைச்சர் எரிக் வோர்த்," சில குறிப்பிட்ட எண்ணிக்கையிலான எண்ணெய் இருப்புக் கிடங்குகளை காவல்துறை ஆக்கிரமிப்பற்றதாக்கிவிட்டதால், ஆபத்து ஏதும் இல்லை என்பதோடு, அரசாங்கம் மிகவும் விழிப்புடன் உள்ளது" என்றார்.

ஐரோப்பா 1 செய்திக்கு, போக்குவரத்து துறை அமைச்சர் Dominique Bussereau, " எரிபொருள் இல்லாமல் எந்த நிலையங்களும் இல்லை" என்றார். மேலும் பிரான்சுக்கு வரும் முன்னர் கூடுதல் எரிபொருளை எடுத்துவருமாறு விமானங்களுக்கு - அப்படி எடுத்துவந்தால் பிரெஞ்சு விநியோகத்தை அவைகள் நம்பத்தேவையில்லை- அறிவுறுத்தப்பட்டுள்ளன என்பதை அவர் ஒப்புக்கொண்டுள்ள போதிலும், பிரெஞ்சு விமான நிலையங்கள் எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது என்பதை அவர் மறுக்கவும் செய்தார்.

எரிபொருள் பற்றாக்குறை எதுவும் இல்லை என்று அரசாங்கம் கூறுவது அப்பட்டமான பொய் ஆகும். பிரான்சின் முன்னணி எண்ணெய் நிறுவனம், அதன் 300 முதல் 400 வரையிலான பெட்ரோல் நிலையங்கள் காலியாகிவிட்டதாக நேற்றைய அறிக்கையில் தெரிவித்துள்ளது. Paris, Le Havre, Caen, Rouen, Saint-Nazaire, Reims, Toulouse, Bordeaux, Nîmes மற்றும் Alsace ல் உள்ள சிறிய நகரங்கள் ஆகிய இடங்களிலுள்ள பெட்ரோல் நிலையங்கள் பெட்ரோல் பற்றாக்குறையால் மூடப்பட்டதாக Le Monde தெரிவித்துள்ளது.

இருந்தபோதிலும், புதன்கிழமையன்று சட்டத்தை செனட் சபை நிறைவேற்றினால் வெட்டுக்களுக்கு எதிரான மேலும் போராட்டம் நடப்பதை நாங்கள் எதிர்ப்போம் என்று தொழிற்சங்கங்கள் கூறி வருகின்றன. பிரெஞ்சு தொழிலாளர் ஜனநாயக கூட்டமைப்பு (CFDT) மற்றும் தன்னாட்சி தொழிற்சங்கங்களின் தேசிய சங்கம் (UNSA) போன்ற வலதுசாரி தொழிற்சங்கங்கள், மசோதா மீதான செனட் சபையின் வாக்கெடுப்புதான், தாங்கள் மற்ற விதமான நடவடிக்கைகளை, அதாவது, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவது, பரிசீலப்பது குறித்து தீர்மானிக்கும் என்று Le Monde விளக்கியது.

UNSA வின் Jean Grosset ," நாம் ஒரு ஜனநாயகத்தில் உள்ளோம். ஒரு குறிப்பிட்ட புள்ளியில் சமூக எதிர்ப்பை அரசியல் வெற்றிக்கொண்டுவிடும். வெட்டு மீது நாடாளுமன்றம் வாக்களிக்கும்போது, நம்மை அது மகிழ்ச்சியடைய வைக்காவிட்டாலும் கூட, ஒன்றுமே நடக்கவில்லை என்பதுபோன்று நாம் செயல்படாமல் இருக்க முடியாது" என்று Le Monde இடம் கூறினார்.

இந்த வாதம் அதன் முகத்திலேயே போலியானதாக இருக்கிறது. ஓய்வூதிய மசோதாவை எதிர்ப்பது தொழிலாளர்கள் இல்லை, ஆனால் சார்கோசி அரசாங்கமே தனது வெட்டுக்கள் மூலமாக ஜனநாயகத்தை அடக்கி மக்களின் விருப்பத்தை நசுக்கிக்கொண்டிருக்கிறது. ஓய்வூதிய வெட்டுகளுக்கு எதிரான போராட்டத்திற்கு மக்களின் ஆதரவு 68 சதவிகிதம் இருப்பதாகவும், அவற்றை அரசாங்கம் திரும்ப பெறாவிட்டால், தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தம் ஒன்றை நடத்த வேண்டும் என்று 54 சதவிகித மக்கள் விரும்புவதாகவும் சமீபத்திய கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவிக்கிறது.

சார்க்கோசியின் வெகுஜன விரோத வெட்டுக்களுக்கு எதிரான போராட்டங்களை மூடிமறைப்பதற்காக, தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு ஆளும் வர்க்கத்தின் முகவர்களாக செயல்பட்டு, மக்கள் விரோத மூலதன நிதிக் கொள்கைகளை திணிக்கின்றன. உண்மை என்னவென்றால் அவர்களால் வலுவான எதிர்ப்பை தெரிவிக்கவோ அல்லது ஏற்படுத்தவோ - சார்கோசியின் வெட்டுக்களுக்கு எதிரான போராட்டத்திற்கு மக்களிடையே மகத்தான ஆதரவு உள்ளபோதிலும் - முடியாமல் இருப்பது அவர்களது பலவீனம் மற்றும் துரோகத்தின் வெளிப்பாடாகும்.

பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியுடன் வரலாற்று ரீதியில் இணைந்திருந்த தொழிலாளர் பொது கூட்டமைப்பு (CGT) க்கு சமமாக விரிவுபடுத்துகிறது. CGT செயலாளர் பேர்னார்ட் திபோ நேற்று வெளியிட்ட அறிக்கையில், "(மசோதாவுக்கு) அதன் தற்போதைய வடிவில் வாக்களிக்க வேண்டாம்", ஆனால் வெட்டுக்கள் மீது "தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குமாறு" செனட் உறுப்பினர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

வெட்டுக்கள் நிறைவேற உறுதியாக இருக்கும் வலதுசாரி கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ள UMP யின் கட்டுப்பாட்டில் இருக்கும் செனட் சபைக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த வேண்டுகோள், அவநம்பிக்கையாகவும், அர்த்தமற்ற அறிகுறியாகவும் இருக்கிறது. புதன்கிழமை வாக்களிப்பு விவகாரம், மிக வேடிக்கையாக உள்ளது. மிக மோசமான சமூக வீழ்ச்சிகளைக் கொண்ட - ஓய்வூதிய வயது மற்றும் அதை அளிப்பதற்கான காலம் அதிகரிக்கப்பட்ட- ஓய்வூதிய மசோதா ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுவிட்டது. திபோ கேட்டுக்கொண்டிருப்பதெல்லாம் அந்த மசோதாவில் சிறிய திருத்தம், அப்படி செய்தால்தான் CGT - தலைமையிலான போராட்டங்கள் முற்றிலும் தோல்வியடையவில்லை என்று அவர் கூறிக்கொள்ள முடியும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

Le Monde குறிப்பிடுகிறது:" எதிர்ப்பதற்காக CGT தலைமை போராட்ட நடவடிக்கையை தொடர்வதற்காக தனது சக்தியை முன்னோக்கித்தள்ளவில்லை. ஆனால் போராட்டத்தை கைவிடுமாறு அழைப்பு விடுவதற்கும், ஏனைய தொழிற்சங்கங்கள் அதுபோன்ற அழைப்பை விடுக்க இணைந்தாலும், அரசியல் பொறுப்பை ஏற்க அது விரும்பவில்லை. அதன் போராட்டங்கள் எப்போதுமே வெற்றியடையாது என்பது ஒப்புக்கொள்ளத்தக்கதாகவே இருக்கும்.

ஆனாலும் தோல்வி மற்றும் சரணாகதி ஆகியவற்றை நோக்கித்தான் தொழிற்சங்கங்களின் கொள்கைகள் கொண்டு செல்லும். அக்டோபர் 14 ஆம் தேதியின் பிரகாரம் அனைத்து- தொழிற்சங்கங்களும் நாளைய நடவடிக்கை குறித்து திட்டமிடுவதற்காக கூட உள்ளன. இன்றைய தின நடவடிக்கை "போராட்டத்தின் முடிவாக இருக்கலாம்" என்று Le Monde பேச்சாளர் Michel Noblecourt விளக்கினார்.

Noblecourt கூறுகையில், அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டணியால், " 'மற்ற வடிவங்களில்' போராட்டத்தை தூண்டவும், CGT யை திருப்திபடுத்தவும், சட்டவிரோதமாக இருப்பதும் பெரும்பான்மையான மக்களின் எதிர்ப்புக்கிடையேயும் சீர்திருத்தத்தை திணிப்பதற்கு சார்க்கோசிதான் அரசியல் ரீதியாக பொறுப்பாவார் என்று மனப்பூர்வமாக அறிவிக்கவும் முடியும். முக்கிய விடயம் அதற்கு ஏற்பாடு செய்வதுதான். அப்படி செய்தால்தான் Bernard Thibault ஆல் இந்த நிலைமையை ஏற்றுக்கொள்ளமுடியும். François Chérèque (CFDT தலைவர்) இதனை செய்ய அவருக்கு உதவ வேண்டும்" என்றார்.

இந்த கொள்கை, பிற்போக்கான நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்தில் உறுதியாக உள்ள தொழிலாள வர்க்கத்திற்கும், சமூகத்திற்கும் கேடுகளை ஏற்படுத்த தீவிரமாகவுள்ள தொழிற்சங்க நிர்வாகத்திற்கும் இடையே, முரண்பாட்டை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது

சார்க்கோசி அரசாங்கம், அரசியல் ஸ்தாபனம் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்திலுள்ள அதன் முகவர்களின் சமூக எதிர்கொள்ளல் வருகையில், தொழிலாள வர்க்கம் தனது சொந்த சுயாதீனமான அமைப்பை அபிவிருத்தி செய்வது இன்றியமையாதது. இந்த காரணத்தினால், உலக சோசலிச வலைத் தளம், வேலை நிறுத்த போராட்ட நடவடிக்கைத் திட்டத்திற்கான சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களை தொழிற்சங்கங்கள் மற்றும் பூர்சுவா "இடது" கட்சிகளுடன் முறித்துக் கொண்டு அமைக்குமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. (See: “பிரான்ஸ்: சார்க்கோசியின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்திலுள்ள அரசியல் கேள்விகள்”.)

மிகப்பெரிய வெட்டுக்களை செய்யவும், தொழிலாளர்களின் எதிர்ப்பை நசுக்க போலீசை பயன்படுத்துவது என்று அரசாங்கம் தனது தீர்மானத்தை தெளிவாக்கிவிட்ட சூழ்நிலைகளின் கீழ், சார்க்கோசி அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான அரசியல் போராட்டம் ஒன்றே போராடிக் கொண்டிருக்கும் தொழிலாளர்களின் ஒரே வழியாக உள்ளது. தொழிலாள வர்க்கம் தனது போராட்டங்களை தீவிரப்படுத்திக் கொண்டிருப்பதினால் ஒரு புதிய சோசலிச மற்றும் சர்வதேச தலைமை வெளிப்படுவதற்கான தேவை இருக்கிறது.

பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளுக்கு வேலைநிறுத்த போராட்ட நடவடிக்கை பரவிவருவதாக கூறும் தகவல்களுடன், அரசாங்கம் கூறிவருவதற்கு மாறாக, பிரான்சில் இந்த போராட்டங்கள் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

இந்த வார தொடக்கத்தில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று SNCF தேசிய இரயில்வேக்களின் தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன. ஞாயிற்றுக்கிழமையன்று 26.55 சதவிகித தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், நாளைய போராட்டத்தில் வழக்கமான அளவான 30 சதவிகிதத்திற்கும் அதிகமான அளவு தொழிலாளர்கள் நாளை நாம் கொண்டிருப்போம்" என்று CGT இரயில் தொழிற்சங்கத் தலைவர் Didier Le Reste குறிப்பிட்டுள்ளார். "பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தும்" வகையில் இரயில் வலையமைப்பின் மூலோபாய இடங்களில் தடைகளை ஏற்படுத்த தொழிலாளர்கள் திட்டமிட்டுள்ளதாக மற்ற தொழிற்சங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மற்ற துறைகளில், குறிப்பாக துறைமுகங்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களில், போராட்டங்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை மீண்டும் தொடங்குவதாக பார ஊர்திகள் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. Vosges இல் உள்ள CFDT பார ஊர்திகள் தொழிற்சங்கத்தின் ஒரு பிராந்திய தலைவர் Denis Schirm, "எண்ணெய் நிலையங்கள், விநியோக மேடைகள் மற்றும் தொழிற்சாலை வளாகங்களின் நுழைவுகளை எங்களால் மறிக்க முடியும்" என்று Le Journal du Dimanche இற்கு தெரிவித்துள்ளார்.