சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

US policies intensify world currency, trade conflicts

உலக நாணய முறையையும் வணிகப் பூசல்களையும் அமெரிக்கக் கொள்கைகள் தீவிரப்படுத்துகின்றன

By Barry Grey
18 October 2010

Use this version to print | Send feedback

அக்டோபர் 9-10 திகதிகளில் பூசல்கள் நிறைந்த சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டம் வாஷிங்டனில் நடந்ததைத் தொடர்ந்து, உலக நாணயம் மற்றும் வணிகப் போர்களில் இறங்கும் நிலை அதிகரித்துள்ளது. அதில் அமெரிக்கா முக்கிய தூண்டிவிடும் நாடாக இருக்கும் பங்கை வகிக்கின்றது.

சர்வதேச நாணயச் சந்தைகளில் அமெரிக்கா வேண்டுமென்றே டாலர்கள் விற்பனைக்கு ஊக்கம் தருகிறது. இதனால் அது அதன் முக்கிய வணிகப் போட்டி நாடுகளில் நாணய மாற்றுவிகிதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறது. அதன் விளைவாக அமெரிக்காவிற்கு அவை ஏற்றுமதி செய்யும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கையில், அமெரிக்கா அந்நாடுகளின் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களின் விலை குறையும்.

அதிகரிக்கும் நிதிய ஒழுங்கின்மைக்கு அதிக பொறுப்புக் கொண்டுள்ள வாஷிங்டன், குறிப்பாக சீனாவை உலகப் பொருளாதார மீட்பைப் பாதிக்கும் வகையில் அதன் நாணயமான ரென்மின்பியின் (யுவான் என்றும் அறியப்படும்) மாற்று விகிதத்தை விரைவில் உயர்த்த மறுப்பதின் மூலம் நடந்து கொள்கிறது என்று குற்றம் சாட்டுகிறது. டாலரின் மதிப்பைக் குறைக்கச் செயல்படும்போது, அமெரிக்க அரசாங்கமும் மத்திய வங்கிக்கூட்டமைப்பும் சீனா மீது நாணய மறுமதிப்பை செய்யுமாறு அதிக அழுத்தம் கொடுக்கின்றன. அதன் நாணயத்தில் விரைவாக மதிப்பு அதிகரிப்பு என்பது அதன் ஏற்றுமதித் தொழில்களைப் பாதித்து பெரும் பணிநீக்கம் சமூக அமைதிக்கு வழிவகுக்கும் என்ற எச்சரிக்கைகளை பெய்ஜிங் கொடுத்தும் அவை இந்த நிலைப்பாட்டை கொண்டுள்ளன.

பாதுகாப்புவாத குறைந்த மதிப்புடைய டாலர் என்னும் கொள்கை முக்கிய உள்நாட்டு அரசியற் செயற்பாட்டையும் கொண்டுள்ளது. அரசாங்கம் வேலைகள் அளித்தல் அல்லது வேலையற்றோருக்கு முக்கிய உதவியளிக்க மறுக்கும் நிலைபற்றி பெருகிய மக்கள் சீற்றத்தை ஒபாமா நிர்வாகம் மற்றும் காங்கிரசில் இருந்து திசைதிருப்பி சீனாமீதும் பொதுவாக “வெளிநாட்டவர்கள்மீது” செலுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. இக்கொள்கையின் ஆர்வமான ஆதரவாளர்களில் ஒரு பிரிவு தொழிற்சங்க அதிகாரத்துவம் ஆகும்.

வியாழனன்று அமெரிக்க அரசாங்க வணிகத்துறை அமெரிக்க வணிகப் பற்றாக்குறை ஆகஸ்ட்மாதம் கிட்டத்தட்ட 9 சதவிகிதம் அதிகரித்தது, இதற்கு முக்கிய காரணம் சீனாவுடனான வணிகப் பற்றாக்குறை உயர்ந்த அளவிற்கு $28 பில்லியன் என்று இருப்பதால்தான் என்று கூறியுள்ளது. இந்த வாதம் சீனாவிற்கு அழுத்தம் கொடுப்பதற்கான வணிகப் போர் விரிவுபடுத்தப்பட நியாயப்படுத்தப்படும்.

அமெரிக்கக் கொள்கையும் சர்வதேச அழுத்தங்களின் வளர்ச்சியும் வாஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டத்தில் முழுமையாக வெளிப்பட்டன. அமெரிக்க நிதி மந்திரி திமோதி கீத்னர் சீனாவின் நாணயம் குறைமதிப்பில் உள்ளது என்றும் தங்கள் நாணயத்தை மறுமதிப்புச் செய்யாமலும் தங்கள் ஏற்றுமதிகளில் குறைப்பை ஏற்க மறுக்கத் தவறும் சீனா போன்ற உபரியை கொண்டுள்ள நாடுகளுக்கு எதிரான சர்வதேச நாணய நிதியம் கடுமையான நிலைப்பாடு கொள்ள வேண்டும் என்று கோரினார்.

சீனாவின் மத்திய வங்கி ஆளுனரான ஜௌ ஜியோசுவான் அமெரிக்க மத்திய வங்கி இன்னும் அதிக டாலர்களைச் சந்தையில் அதிக அளவு உட்செலுத்துவதின் மூலம் வங்கிகளின் மேலதிக இருப்பை அதிகரிப்பதால் பண விநியோகத்தை அதிகரிக்கும் கொள்கை (quantitative easing) எதிர்பார்ப்புக்கள் சீரில்லாத தன்மைகளை அதிகரித்து மூலதனவரத்துக்களை பெருக்குவதால் எழுச்சி பெறும் பொருளாதாரங்களை சீர்குலைய வைக்கின்றன என்று குற்றம் சாட்டியுள்ளார்.

உலகின் முதல் மற்றும் இரண்டாம் பொருளாதாரங்கள் மோதிக்கொண்டிருக்கும் நிலையில், சர்வதேச நாணய நிதியம் நாணய நெருக்கடி பற்றி உடன்பாட்டைக் கொண்டுவருவதில் தோல்வி அடைந்துள்ளது. ஜேர்மனி மற்றும் ஜப்பான் போன்ற வாஷிங்டனின் நட்பு நாடுகள் ரென்மின்பி மறுமதிப்பீட்டிற்கு உட்பட வேண்டும் என்பதற்கு ஆதரவைக் காட்டியுள்ளன; ஆனால் அமெரிக்கத் தலைமையிலான இராஜதந்திர வழித் தாக்குதலை பெய்ஜிங்கிற்கு எதிராக நடத்துவதற்கு அதன்பின்னால் நிற்கத் தயாராக இல்லை.

இது அமெரிக்க-சீன மோதலை வட கொரியாவில் சியோலில் நவம்பர் 11-12 நடக்க இருக்கும் முக்கிய நாடுகளின் எதிர்வரும் G20 கூட்டம் வரை ஒத்தி வைத்துள்ளது.

இதற்கு அடுத்த வாரம் வாஷிங்டனின் மலிவான டாலர் கொள்கை விரிவடைந்ததைக் கண்டது. மத்திய வங்கிக்கூட்டமைப்பு நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை அச்சிடுவதை மீண்டும் தொடரப்போவதாக குறிப்புக் காட்டியது. இது அதிக அளவு புழக்கத்தில் டாலர் வரும் ''வங்கிகளின் மேலதிக இருப்பை அதிகரிப்பதால் பண விநியோகத்தை அதிகரிக்கும்'' என்ற கருத்தில் நவம்பர் 2-3 கொள்கை இயற்றும் கூட்டத்தைத் தொடர்ந்து நடைமுறைக்கு வரும். வேலைகளைத் தோற்றுவித்தலுக்கு ஊக்கம் கொடுக்க இம்முறை பயன்படும் என்று அது கூறினாலும், அதன் முக்கியமான விளைவு அமெரிக்கக் கருவூலப் பத்திரங்களை மத்திய வங்கிக்கூட்டமைப்பு வாங்குவது புதுப்பிக்கப்படும். இதனால் அமெரிக்க வங்கிகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும் கிட்டத்தட்ட பூஜ்ய வட்டி விகிதத்தில் ஏராளமான கடன்கள் கிடைக்கும், மற்றும் பங்குகளிலும், பெருநிறுவன இலாபங்களிலும் பெரும் ஆதாயமும் கிட்டும்.

ஆகஸ்ட்டில் இருந்தே, பெரிய அளவில் கடன்பத்திரங்களை மீண்டும் வாங்குவதை மத்திய வங்கிக்கூட்டமைப்பு தொடர முதல் நடவடிக்கைகள் எடுத்ததில் இருந்தே, Dow Jones Industrial Average சராசரியாக 10 சதவிகிதத்திற்கும் மேல் உயர்ந்துவிட்டது; அமெரிக்க ஊதியங்கள் தொடர்ந்து சரிந்தாலும், இந்நிலை ஏற்பட்டுள்ளது.

போஸ்டனில் வெள்ளியன்று பெடரல் ரிசேர்வ் வங்கியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட உரையில் மத்திய வங்கிக்கூட்டமைப்பின் தலைவர் பென் பெர்னான்கே தான் அதிக அளவு டாலரைப் புழக்கத்தில் விடுவதை விரும்புவதாக பரந்த அளவில் சுட்டிக்காட்டினார். Federal Open Market Committee (FOMC) என்னும் தடையற்ற சந்தை மத்திய குழுவின் கொள்கை இயற்றும் கூட்டத்தில் அவர், “குழுவின் இலக்குகள் உள்ள நிலையில், மற்றவை அனைத்தும் சீராக உள்ள நிலையில், இன்னும் அதிக நடவடிக்கைக்கு வாய்ப்பு உள்ளது எனத் தோன்றுகிறது” என்றார்.

தற்போதைய பணவீக்க விகிதம் மிகக் குறைந்தது என அறிவிக்கும் அசாதாரண நடவடிக்கையை பெர்னான்கே மேற்கொண்டு மத்திய வங்கிக்கூட்டமைப்பின் கொள்கை பணவீக்கத்தை நிதிப் புழக்க அதிகரிப்பிற்கான ஊக்க நடவடிக்கைகள் மூலம் கிட்டத்தட்ட 2 சதவிகிதத்திற்கு அதிகரிப்பது என்றார். “நீண்டகாலப்போக்கில் மத்திய வங்கிக்கூட்டமைப்பின் 2 செயல்களான விலை உறுதிப்பாடு மற்றும் வேலையின்மை நீண்டகால அளவில் குறைக்கப்பட வேண்டும் என்பது குழுவின் கருத்துக்களுக்கு இயைந்த முறையில் பணவீக்கத்தரம் மிகக் குறைந்து இருக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டைக் கொடுக்கும் விளைவைத் தரும்.”

பணவீக்க நிதியக் கொள்கைக்கான அழைப்பு வேலையற்ற விகிதத்தைக் கணிசமாக குறைக்கும் விருப்பம் என்பதினால் உந்துதல் பெற்றது என்று பெர்னான்கே மக்களை நம்பவைக்க விரும்புவது உண்மையல்ல. தொடர்ந்த வேலையின்மை, பெருவணிகம் அதன் ஊதியக் குறைப்பு உந்துதலைத் தொடரவும் மற்றும் ஊதியங்கள் மீண்டும் உயர்வதைத் தடுப்பதற்கும் உதவும் என்று அது நம்பாவிட்டால், மத்திய வங்கிக்கூட்டமைப்பு ஒன்றும் பணவீக்கம் மிகக் குறைவாக இருக்கும் என்று அறிவிக்காது.

தன் உரையை நிகழ்த்துகையில், நிதிப்புழக்கத்தைத் தாராளமாக்கி எளிதாக்குவது, பணவீக்க உயர்வு அடைதல் என்பது மீண்டும் அமெரிக்க டாலர்கள் விற்பனைக்கு உந்துதல் கொடுக்கும் கொள்கை என்பது பெர்னான்கேக்கு நன்கு தெரியும். எப்படியும் சர்வதேச நாணய நிதிய கூட்டத்திற்குப் பின்னர் தொடர்ந்த டாலரின் புதிய சரிவு வெள்ளியன்று அதிகமாயிற்று.

வணிகத்தோடு பிணைந்த நிலையில் காண்கையில், பெர்னான்கே உரைக்குப் பின்னர் 0.7 சதவிகிதம் ஆண்டிலேயே மிகக் குறைந்த அளவிற்கு டாலர் சரிந்தது. ஆஸ்திரேலிய டாலர் 1983ற்கு பின் முதல் தடவையாக அமெரிக்க டாலருக்குச் சமமான மதிப்பைப் பெற்றது. அமெரிக்க நாணயம் கனேடிய டாலருடன் கூட சம மதிப்பை அடைந்தது.

இதைத்தவிர, ஸ்விஸ் பிராங்கிற்கு எதிராகவும் டாலர் புதிய குறைவான மதிப்பைக் கொண்டது. கிட்டத்தட்ட அனைத்து ஆசிய நாணயங்களும் டாலருக்கு எதிராக மதிப்புயர்வைப் பெற்றன. தங்கம் புதிய மிகப் பெரிய உயர்வை அடைந்தது. வெள்ளி, பித்தளை, தானிய வகை போன்றவையும் விலை ஏற்ற நிலையைத் தொடர்ந்தன.

டாலர் இப்பொழுது யென்னிற்கு எதிராக 15 ஆண்டுகள் இல்லாத குறைமதிப்பையும், யூரோவிற்கு எதிராக ஒன்பது மாதத்தில் மிகக் குறைந்த மதிப்பையும் கொண்டுள்ளது.

சனிக்கிழமை அன்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் ஒரு கடுமையான தாக்குதலைக் கொண்ட தலையங்கத்தை வெளியிட்டது; இதில் பெர்னான்கே உரையிலுள்ள நாணய-வணிகப் போர் பற்றிய தாக்கங்கள் சுருக்கமாகக் கூறப்பட்டன. “1970களின் டாலர் பாதைக்கு நடுவே, நிதிமந்திரி ஜோன் கானலி புகழ்பெற்ற வகையில் முணுமுணுத்திருந்த ஐரோப்பியர்களுக்கு ‘டாலர் எங்கள் நாணயம், ஆனால் உங்கள் பிரச்சினை’ என்றார். உன்னிப்பாகப் பார்த்தால், இதைத்தான் நேற்று மத்திய வங்கிக்கூட்டமைப்பின் தலைவர் பென் பெர்னான்கேயும் மத்திய வங்கிக்கூட்டமைப்பு நாணயப் புழக்கத்தை இன்னும் எளிதாக்க வேண்டும் என்று கூறுகையில் தெரிவித்துள்ளார்” என்று கட்டுரை தொடங்கியது.

“கிட்டத்தட்ட 4,000 சொற்கள் கொண்ட உரையில், மத்திய வங்கிக்கூட்டமைப்பின் தலைவர் ஒரு தடவை கூட டாலரின் மதிப்பு பற்றிக் கூறவில்லை. நாணய மாற்று விகிதங்களைப் பற்றியும் குறிப்பிடவில்லை. உலக நாணயச் சந்தைகளில் மத்திய வங்கிக்கூட்டமைப்பில் இன்னும் எளிதாக்கும் என்ற எதிர்பார்ப்பில் டாலர் சரிந்ததினால் ஏற்பட்ட கொந்தளிப்பு இருந்தும் அவர் ஏதும் கூறவில்லை…. தலைவர் கொடுத்துள்ள தகவல் மத்திய வங்கிக்கூட்டமைப்பு முற்றிலும் அமெரிக்க உள்நாட்டுப் பொருளாதாரத்தைப் பற்றிய கவனத்தைத்தான் கொண்டுள்ளது, தேவைக்கு ஏற்ப அது டாலர்களை அச்சிட்டுக் கொள்ளும் என்பதுதான். உலகின் மற்ற பகுதிகள் தங்கள் நிலைக்கு ஏற்ப, அவற்றிற்கு உகந்த முறையில் கொள்கைகளை மாற்றிக் கொள்ளலாம். மற்ற நாடுகளின் நாணயங்கள் மதிப்பு டாலரை ஒட்டிப் பெரிதும் உயர்ந்தால், அது மற்றவர்கள் பிரச்சினை” என்று தலையங்கம் தொடர்ந்து எழுதியுள்ளது.

இந்த வாரம் முன்னதாக பைனான்ஸியல் டைம்ஸ் கட்டுரையாளர் மார்ட்டின் வொல்ப் இதேபோல் அமெரிக்கக் கொள்கையின் ஒருதலைப்பட்ச மற்றும் தேசியவாத சாரத்தைச் சுட்டிக்காட்டி ஒரு கட்டுரையை எழுதினார். “சுருங்கக் கூறின், அமெரிக்க கொள்கை இயற்றுபவர்கள் பணத் தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்கு அனைத்தையும் செய்ய வேண்டும். உண்மையில் அமெரிக்கா திருப்திகரமாக இந்த நிலையை அடையும் வரை மத்திய வங்கிக்கூட்டமைப்பு இதைச் செய்யும். உலகின் மற்ற பகுதிகளில் இது ஏற்படுத்தக் கூடிய விளைவு பற்றி நமக்கு அக்கறை இல்லை.”

“ஒத்துழைப்பு மற்றும் நாணய விகிதம், வெளிநாட்டு கணக்கைச் சீராக்குவதற்குப் பதிலாக, அமெரிக்கா தன்டனுடைய விருப்பத்தைச் சுமத்தும் விதத்தில் அச்சடிக்கும் இயந்திரத்தை பயன்படுத்துகிறது….நெருக்கடியின் மோசமான நேரத்தில், தலைவர்கள் ஒன்றாகத் தொங்கினர். இப்பொழுது, மத்திய வங்கிக்கூட்டமைப்பு அவர்களைத் தனித்தனியே தொங்கவிடப்போகிறது.”

வெள்ளியன்று பைனான்சியல் டைம்ஸ் அமெரிக்க நிதியக் கொள்கை பற்றி ஐரோப்பாவிற்குள் இருக்கும் பெருகிய சீற்றம் பற்றிய குறிப்பைக் காட்டியது; “ஒரு மூத்த ஐரோப்பிய கொள்கை இயற்றுபவர்” மத்திய வங்கிக்கூட்டமைப்பின் கொள்கை “பொறுப்பற்றது” என்று கூறியதை அது மேற்கோளிட்டுள்ளது. இக்கட்டுரை ரஷ்ய நிதி மந்திரி அலெக்ஸி குட்ரின் நாணய மாற்றுவிகிதக் கொந்தளிப்பிற்கு ஒரு காரணம் “சில முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகளின் நிதியக் கொள்கைக்கு ஊக்கம் தருதல் என்பதாகும்; எல்லாவற்றிற்கும் மேலாக இது அமெரிக்காவில் கடைபிடிக்கப்படுகிறது; இவை தங்கள் அடிப்படை கட்டமைப்பு பற்றிய பிரச்சனைகளை இவ்விதத்தில் தீர்க்க முற்பட்டுள்ளன” என்று கூறியதாக மேற்கோளிட்டுள்ளது.

வெள்ளியன்று நிகழ்த்தப்பட் பெர்னன்கே உரைக்குப் பின்னர், ஒபாமா நிர்வாகம் சீனாவுடனான தன் மோதலில் இன்னும் இரு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. அமெரிக்க நிதித்துறை அமெரிக்க வணிகத்திற்கு இணையான மற்றைய முக்கிய நாடுகளில் உள்ள நாணய கொள்கைகள் பற்றிய அரையாண்டு மதிப்பீட்டை வெளியிடுவதை தாமதப்படுத்தியுள்ளது. சியோலில் அடுத்த மாதம் G20 மாநாடு வரை இது அறிக்கையை வெளியிடுவதாக இல்லை என்றும் கூறிவிட்டது.

தொழிற்சங்கங்கள் ஆதரவு கொடுக்க, முக்கிய ஜனநாயக கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் இருந்து சீனா நாணய மதிப்பைத் திரிபுபடுத்திய விதத்தில் மதிப்படுகிறது என்று அறிவிக்கப்பட நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது; இத்தகைய நடவடிக்கை பதிலடி இறக்குமதி, சுங்க வரிகள் என்பன சீன இறக்குமதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படுவதில் முடிவடையும். ஆனால் நிர்வாகம் அத்தகைய வெளிப்படையான விரோதப் போக்கு நடவடிக்கையை ஏற்கவில்லை, ஏனெனில் அது G20 மாநாட்டில் நாணயப் பிரச்சினை விவாதத்திற்கு இடமின்றிச் செய்துவிடும். சீனாவிற்கு எதிராக ஐரோப்பிய, ஆசிய நாடுகளின் கூட்டணியை உருவாக்க அது விரும்புகிறது.

ஆனால், அதேநேரத்தில் ஜனநாயகக் கட்சியில் உள்ள காப்புவரிப் பருந்துகளைச் சமாதானப்படுத்தும் விதத்தில் அமெரிக்க வணிகப் பிரதிநிதி அமெரிக்க எஃகுத் தொழிலாளர்கள் சங்கம் சீனா நியாயமற்ற, சட்டவிரோத உதவித்தொகைகளை இயற்கை வளங்களில் இருந்து விசை தொழிற்துறைக்கு கொடுக்கிறது என்ற குற்றச்சாட்டு பற்றி விசாரணை வேண்டும் என்று கூறியுள்ளார்.

அமெரிக்க நிதியக் கொள்கையினால் உலகில் பாதிப்பு

வாஷிங்டனின் குறைமதிப்பு டாலர் கொள்கை முக்கிய உபரி நாடுகளான சீனா, ஜேர்மனி மற்றும் ஜப்பான் ஆகியவற்றின்மீது அழுத்தத்தை அதிகரிக்கும். இதைத்தவிர ஆசிய, இலத்தின் அமெரிக்கப் பொருளாதார எழுச்சி பெறும் நாடுகள் மீதும் தங்கள் நாணயங்களை மதிப்புக் குறைப்பிற்கு உட்படுத்தி போட்டியாளர்களின் சரியும் நாணயங்களுக்கு ஏற்ப குறைக்கச் செய்யும். அதுவும் முதலிலும் முக்கியமானதுமாக அமெரிக்க நாணயத்திற்கு எதிராக.

போட்டித்தன்மையில் நாணய மதிப்புக்களைக் குறைத்தல், “அண்டை நாட்டாரை பிச்சைக்காரர்களாக்குக” என்னும் கொள்கைகளினால் விளைந்துள்ள நிலை இதுதான்; இப்படிப்பட்ட நிலைமைதான் 1930களில் பெருமந்த நிலைக்காலத்தில் இருந்தன. அவைதான் உலகச் சந்தையை விரோதப் போக்குடைய வணிக, நாணய முகாம்களாகப் பிரித்து, இறுதியில் இரண்டாம் உலகப் போருக்கு வழிவகுத்தன.

அனைத்து முக்கிய சக்திகளும் எழுச்சி பெறும் பொருளாதாரத்தை உடைய நாடுகளும் செப்டம்பர் 2008ல் நிதிய நெருக்கடி வெடித்ததைத் தொடர்ந்து நடைபெற்ற சர்வதேசக் கூட்டங்களில் இத்தகைய நடவடிக்கையைத்தான் செய்வதில்லை என்று உறுதியாக வாக்குறுதி அளித்தன. இப்படி பெரிதும் ஒற்றுமை என்று உலக ஒருங்கிணைப்பு காட்டப்பட்டு இரு ஆண்டுகளுக்குள் இப்பொழுது ஒன்றை ஒன்று அச்சுறுத்துவது, அப்பட்டமான பொருளாதாரப் போர் ஆகியவை வந்துவிட்டன.

சீனா அதன் நாணய மாற்று விகிதத்தை உயர்த்த வேண்டும், அதையொட்டி சீனாவிற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதில் ஜேர்மனியும் ஜப்பானும் களிப்படைந்தாலும், வாஷிங்டனின் சீன எதிர்ப்புப் போராட்டத்தில் முழுமையாகச் சேர்ந்து கொள்ளுவதற்கும் தயக்கம் காட்டுகின்றன. ஏனெனில் தாங்களும் மத்திய வங்கியின் குறைமதிப்பு டாலர் கொள்கையின் இலக்காகிவிடுவோம் என்பதை அவை நன்கு அறியும்.

கடந்த மாதம், டாலருக்கு எதிராக கடந்த ஆண்டு 10 சதவிகிதம் தன் நாணய மதிப்பு உயர்ந்துவிட்டதைக் கண்டுள்ள ஜப்பான் மாபெரும் பதிலடியை ஒருதலைப்பட்சமாகக் கொடுக்கும் விதத்தில் யென்னை ஒரு நாளைக்கு விற்றது. இம்மாதம் ஜப்பானிய மத்திய வங்கி தன் வட்டிவிகிதத்தை இன்னும் குறைப்பதாகவும், அதிகப்புழக்கம் மூலம் பண விநியோகத்தை அதிகரிக்கும் திட்டத்தையும் அறிவித்துள்ளது. இதற்காக மத்திய வங்கி ஜப்பானிய அரசாங்க கடன் பத்திரங்களை $60 பில்லியனுக்கு வாங்க உள்ளது.

தென் கொரியா, தாய்லாந்து, இந்தியா, தைவான், மற்றும் பிரேசில் போன்ற எழுச்சி பெற்றுவரும் பொருளாதாரங்கள், இந்த அதிக வளர்ச்சி உடைய நாடுகளில் அரசாங்க, பெருநிறுவனப் பத்திரங்கள் வாங்கினால் அதிக ஆதாயம் கிடைக்கும் என்பதற்காக ஊக வகையில் டாலர்கள் செலவழிக்கப்படும் அலைகளினால் தங்கள் நாணய மாற்றுவிகிதங்கள்மீது ஏற்பட்டுள்ள உயர் அழுத்தத்தினால் திணறுகின்றன.

பெரிய வங்கிகளுக்கு செல்வாக்குத் திரட்டும் The Institute of International Finance, இந்த ஆண்டு வளர்ச்சி அடையும் நாடுகள்மீது 825 பில்லியன் டாலர் உள்பாய்ச்சலடையும் என்று மதிப்பிட்டுள்ளது; இது 2009 ஐ விட 42 சதவிகிதம் அதிகம் ஆகும். வளர்ச்சி அடையும் பொருளாதார நாடுகளின் கடன் பத்திரங்களில் முதலீடு என்பது மட்டும் மும்மடங்காக 272 பில்லியன் டாலர் என்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மாதம், பிரேசிலிய அரசாங்கத்தின் நிதி மந்திரி உலக நாணய முறைப் போர் பற்றி எச்சரித்தார். இம்மாதம் முன்னதாக அவருடைய அரசாங்கம் வெளிநாட்டினர் பிரேசிலிய கடன் பத்திரங்கங்களை வாங்குவதற்கான வரிவிதிப்பை இருமடங்காக அறிவித்தது. இது மூலதன வரத்து அதிகரிப்பதைக் குறைக்கும், மற்றும் அதையொட்டி நாட்டின் நாணயமான ரியலின் மதிப்பு ஒப்புமையில் உயர்வதையும் தடுக்கும்.

கடந்த வாரம் தாய்லாந்து இதேபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு, தாய் பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அடையும் மூலதன ஆதாயம், வட்டிப் பணம் ஆகியவற்றின் மீதான வரிகளை நிறுத்தி வைக்கும் விதத்தில் 15 சதவிகித நிறுத்தி வைக்கும் வரியை அறிவித்தது. இது பஹ்ட் எனப்படும் அதன் நாணய மதிப்பு கூடுவதைத் தடுக்கும் நோக்கம் கொண்டது. அது ஏற்கனவே இந்த ஆண்டு டாலருடன் ஒப்பிடுகையில் 10 சதவிகிதம் உயர்ந்துவிட்டது.

நாணயம் மற்றும் வணிகப் போரின் வெடிப்பு பொருளாதார வளர்ச்சி மெதுவாகிக்கொண்டு வருகின்ற நிலைமையினால் மோசமான மட்டத்திற்கு உந்தப்பட்டு 1930களுக்குப் பின் வந்துள்ள ஆழ்ந்த சரிவில் இருந்து உண்மையான மீட்பு கடினமாகிறது. சரியும் உள்நாட்டுத் தேவை அல்லது தேக்கமடைந்துவிட்ட வெளிநாட்டுச் சந்தைகள் என்ற நிலையை எதிர்கொள்கையில், அல்லது (அமெரிக்கா போன்றவற்றில் இரண்டையும் எதிர்கொள்கையில்), முக்கிய பொருளாதாரங்கள் தங்கள் ஏற்றுமதியை எப்படியும் அதிகரிக்க வேண்டும் என்று ஊக்கம் கொண்டுள்ளன. மந்த நிலைக்கு முன்பு இருந்த அளவுகளுக்குப் பொருளாதார வளர்ச்சி புதுப்பிக்கப்படும் என்பதற்கான வாய்ப்புக்கள் குறைகையில், பலநாடுகள் ஏற்கும் நாணய, வணிக உறவுகள், இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட உடன்பாடுகள் சரிந்த வண்ணம் உள்ளன. அப்படித்தான் பல நாடுகளுக்கிடையிலான உண்மையான ஒருங்கிணைப்பு பற்றிய நிலைப்பாடும் உள்ளது.

இறுதியில் போருக்குப் பிந்தைய காலத்தில் முக்கிய பொருளாதார சக்திகளுக்கு இடையே உலகளவில் பொருளாதாரக் கொள்கை பற்றிய ஒருங்கிணைப்பு என்பது அமெரிக்கப் பொருளாதார ஏற்றத்தின் தளத்தில் இருந்தது. இது அமெரிக்க டாலர் அப்பொழுது உலக வணிகம் மற்றும் இருப்பு நாணயம் என்ற விதத்தில் கொண்டிருந்த சிறப்பு நிலைப்பாட்டில் உள்ளடங்கியிருந்தது. இது அமெரிக்கா உலகப் பொருளாதார நிலையில் நேரடியாகக் காணக்கூடிய சரிவின் விளைவாக இப்பொழுது இனி மீளாது என்ற நிலைக்கு முறிந்துவிட்டது.

இதன் விளைவு ஒவ்வொன்றும் மற்ற அனைத்தையும் எதிர்த்து நடத்தும் போராட்டம்; அத்துடன் ஒவ்வொரு நாடும் தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராக நடத்தும் பொதுத் தாக்குதல் என்பதும் ஆகும். அவர்கள்தான் இதற்கு ஊதிய வெட்டுக்கள், கடும் சிக்கன நடவடிக்கைகள் ஆகியவற்றின்மூலம் விலை கொடுக்கும் கட்டாயத்திற்கு உட்பட்டு உலகப் பொருளாதார ஒழுங்கு நிலைமுறியாமல் இருக்க பயன்படுத்தப்படுகின்றனர்.