சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Another decade of neo-colonial war in Afghanistan

ஆப்கானிஸ்தானில் இன்னுமொரு தசாப்த கால நவ-காலனித்துவ போர் நீடிக்கும்

Peter Symonds
21 October 2010

Use this version to print | Send feedback

லிஸ்பனில் அடுத்த மாதம் நேட்டோ உச்சி மாநாடு நடக்கவிருப்பதை ஒட்டி, ஒபாமா நிர்வாகமும் அதன் கூட்டாளிகளும், தங்கள் நாடுகளில் பரந்த போர்-எதிர்ப்பு மனோநிலைக்கு முகம்கொடுக்கும் நிலையில், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மற்றும் நேட்டோவின் போரிடும் பாத்திரம் 2014க்குள் முடிவடையும் என்றும் துருப்புகள் வாபஸ் அடுத்த ஆண்டு தொடங்கும் என்றும் கூறி மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றன. ஆயினும், மூடிய கதவுகளுக்குப் பின்னால் பேசப்படுவது போர் முடிவது குறித்த விடயம் அல்ல, மாறாக முடிவற்ற நவ-காலனித்துவ ஆக்கிரமிப்பு குறித்தாகும்.

செவ்வாயன்று ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் ஆப்கான் போர் குறித்த விவாதத்தை துவக்கி வைத்துப் பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் விடயத்தை வெளிப்படுத்தினார். 2014 முடிவதற்குள்ளாக ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பிற்கான முழுப்பொறுப்பையும் ஹமித் கர்சாய் ஏற்றுக் கொள்வார் என்று எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டதன் பின், “இந்த இடைமருவு நிகழ்முறை” ஆப்கானிஸ்தானில் ஆஸ்திரேலிய இராணுவத்தின் இருப்பை முடிவுக்கு கொண்டு வந்து விடும் என்று அர்த்தமல்ல என்று வெளிப்படையாகத் தெரிவித்தார்.

கில்லார்ட் கூறினார்: “தெளிவாய் கூறுகிறேன், ஆப்கான் அரசாங்கம் பாதுகாப்பிற்கான தலைமைப் பொறுப்பை எடுத்துக் கொள்வதையே இது [இடைமருவு நிகழ்முறை] குறிப்பிடுகிறது. 2014க்குப் பின்னரும் சர்வதேச சமுதாயம் ஆப்கானிஸ்தானில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும். ஆஸ்திரேலியாவும் இதில் ஈடுபட்டிருக்கும். பயிற்சி மற்றும் பிற பாதுகாப்பு ஒத்துழைப்பில் அப்போதும் ஒரு பங்கு இருக்கும். மக்கள் தலைமையிலான உதவி மற்றும் அபிவிருத்தி முயற்சிகள் தொடரும்.... குறைந்தபட்சம் இந்த தசாப்தம் முழுமைக்கேனும் இந்த உதவி, பயிற்சி மற்றும் அபிவிருத்தி பணியானது தொடரும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.”

அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் அமைச்சர்களும் அதிகாரிகளும் ஆப்கானிஸ்தானில் 2014க்குப் பின்னர் இராணுவ பங்கு தொடர்வது பற்றி மழுப்பலாகவே பேசி வந்திருக்கும் நிலையில், கில்லார்ட் தான் குறைந்தபட்சம் இன்னும் ஒரு தசாப்த காலத்திற்கேனும் அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பு தொடரும் என்று அறிவித்த முதல் தலைவராவார். ”புதிய சர்வதேச மூலோபாயம்” குறித்து அவர் அடிக்கடி குறிப்பிட்டதானது இது ஒபாமா நிர்வாகத்தின் திட்டம் என்கிற உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அத்துடன், இப்போது சாதாரண எண்ணிக்கையில் 1,550 படையினரை கொண்டிருக்கும் ஆஸ்திரேலியா இன்னுமொரு 10 வருடங்களுக்கு இருக்க நோக்கம் கொண்டுள்ளதென்றால், அப்படியானால் அமெரிக்காவும் அதன் நெருக்கமான கூட்டாளிகளும் வரையற்ற காலத்திற்கு ஆப்கானிஸ்தானில் ஒரு பெரும் இராணுவ இருப்பைக் கொண்டிருக்க தயாரிப்பு செய்து கொண்டிருக்கின்றன என்பதே அர்த்தமாகும்.

அமெரிக்காவிடம் இருந்தான குறிப்பை பெற்றுக் கொண்டு, ”ஆப்கானிஸ்தான் மீண்டுமொருமுறை பயங்கரவாதிகளுக்கான ஒரு பாதுகாப்பான புகலிடமாக ஆக முடியாது” என்று அறிவித்து நடந்து வரும் ஆக்கிரமிப்பை கில்லார்ட் நியாயப்படுத்தினார். ஆயினும், தீவிரப்படும் அமெரிக்கா-தலைமையிலான போர் அல்கொய்தாவுக்கு எதிராக திருப்பப்பட்டது அல்ல (சிஐஏவின் கணக்குப் படி, இதன் எண்ணிக்கை ஆப்கானிஸ்தானில் 50 ஐ தாண்டாது), மாறாக “தலிபான்”களுக்கு எதிரானதாகும். ஆப்கான்கள், அதிலும் பிரதானமாக ஒன்பது வருடங்களுக்கும் மேலாக அப்பாவிப் பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பெரும் சேதமிழைத்துக் கொண்டிருக்கும் அந்நிய இராணுவ இருப்பு தொடர்வதன் மீது கடுமையாகக் குரோதம் காட்டும் பஷ்தூன் பழங்குடி மக்கள் தான் “எதிரி”. ”பயங்கரவாதத்தை” அடக்குவது என்றால் ஆப்கான் மக்களுக்கு எதிராக ஒரு முடிவடையாத நவ காலனித்துவ போர் என்றே பொருள்படும்.

அமெரிக்காவின் “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்பது மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் உள்ள எரிசக்தி-வளம் செறிந்த பிராந்தியங்களில் மேலாதிக்கம் செலுத்துவதற்கான அமெரிக்க இலட்சியங்களை முன்னெடுப்பதற்கான ஒரு சாக்காகத் தான் எப்போதுமே இருந்தது. நியூயோர்க் மற்றும் வாஷிங்டன் மீதான 9/11 தாக்குதல்களுக்கு வெகுகாலம் முன்பே அமெரிக்க மூலோபாயம் வரையப்பட்டாகி விட்டது. 2001ல் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்ததும் 2003ல் ஈராக்கை அடிமைப்படுத்தியதும் மத்திய கிழக்கில் மறுவரையறை செய்வதற்கும் மத்திய ஆசியாவில் ஒரு பெரும் அமெரிக்க இருப்பை ஸ்தாபிப்பதற்குமான அகன்ற திட்டங்களின் பகுதியே ஆகும். இப்போது எழுச்சியுறும் சீனாவால் முன்நிறுத்தப்படும் சவாலின் மீது கவனம் குவித்து வரும் ஒபாமா நிர்வாகம் வருங்காலத்தில் மிகுந்த பயனளிக்கக் கூடிய ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்காவின் காலை எடுப்பதாய் இல்லை. ஆப்கானிஸ்தானில் ஒபாமாவின் துருப்பு “அதிகரிப்பு” என்பது, ஈராக்கில் போலவே, இராணுவத் தளங்கள் உள்ளிட்ட நிரந்தர அமெரிக்க இருப்பைப் பாதுகாக்கும் நோக்கமுடையதாகும். அதேசமயத்தில் ஆக்கிரமிப்பு-எதிர்ப்புப் போராளிகளுடன் சண்டை போடுவதில் பெரும்பங்கை கர்சாயின் கைப்பாவை ஆட்சியும் அதன் இராணுவமும் பார்த்துக் கொள்வது உறுதி செய்யப்படும்.

அமெரிக்க திட்டங்கள் குறித்து கில்லார்ட் சற்று கூடுதல் வெளிப்படையாகப் பேசினார் என்றால், அமெரிக்காவை அடியொற்றி அவரது தொழிற்கட்சி அரசாங்கம் நடக்கிறது என்பதை விளங்கப்படுத்துவதற்காகத் தான். லிஸ்பன் நேட்டோ மாநாட்டிற்கு தனது பாதுகாப்பு அமைச்சரை உடன் அழைத்துச் செல்லக் கூடும் என்றும், அங்கு தன்னைப் போன்றே மற்ற கூட்டாளிகளும் முடிவற்ற இராணுவ பங்கேற்பு வாக்குறுதியை அளிப்பதற்கு நெருக்குதலளிக்க ஒபாமாவுக்கு தான் தோள்கொடுக்கவிருப்பதாகவும் ஆஸ்திரேலிய பிரதமர் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருக்கிறார். கனடா அடுத்த ஆண்டுக்குள் தனது 2,800 படையினரை திரும்பப் பெற்றுக் கொள்ளவிருப்பதாய் அறிவித்திருக்கிறது. இத்தாலி தனது 3,300 படையினரை முழுமையாய் திரும்புவதற்கு 2014ஐ இறுதிக்கெடுவாய் அமைத்துள்ளது. தென்மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் ஆஸ்திரேலியா தனது சொந்த மூலோபாய நிலையை வலுப்படுத்துவதற்கு முழுமையான அமெரிக்க ஆதரவு கிட்டுவதை உறுதி செய்யும் ஒரு முயற்சியாக, உள்நாட்டில் போருக்கான பெருவாரியான எதிர்ப்பு இருந்தபோதிலும் கில்லார்ட் ஐயப்பாட்டிற்கு இடமளிக்கா வகையில் அமெரிக்காவின் பக்கம் நின்று கொண்டிருக்கிறார்.

அடுத்த மாதம் லிஸ்பன் நேட்டோ மாநாட்டில் ”இடைமருவல் நிகழ்முறை” குறித்த பேரம் நடப்பதற்கு முன்பாக இந்த வாரத்தில் ஆப்கானிஸ்தான் குறித்த ஒரு தயாரிப்பு கூட்டம் ரோமில் நடந்தது. குறிப்பிட்ட மாகாணங்கள் காபூலின் இராணுவக் கட்டுப்பாட்டின் வசம் ஒப்படைக்கப்படுவதற்கான கால அட்டவணை எதனையும் லிஸ்பன் மாநாடு வரையப் போவதில்லை என்று ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க சிறப்புத் தூதரான ரிச்சார்ட் ஹோல்புரூக் வலியுறுத்தினார். நீண்ட கால இராணுவ இருப்புக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதை உறுதிப்படுத்திய அவர், “இடைமருவல்” என்பதும் துருப்புகள் வாபஸ் என்பதும் ஒன்றல்ல என்பதையும் வலியுறுத்திக் கூறினார்.

லிஸ்பன் மாநாடு நெருங்கும் நிலையில், துருப்பு அதிகரிப்பால் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்கள் குறித்து வலியுறுத்த அமெரிக்கா பெரும் பிரயத்தனம் செய்கிறது. உதாரணமாக, சமீப மாதங்களிலான தீவிர இராணுவத் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான தலிபான் தலைவர்களும் மற்றும் 3,000க்கும் அதிகமான போராளிகளும் கொல்லப்பட்டனர் அல்லது சிறைப்பிடிக்கப்பட்டனர் என்றும், இது சில கிளர்ச்சிக்குழுக்களை கர்சாய் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்குச் செல்வதை பரிசீலிக்க தள்ளியிருக்கிறது என்றும் அதிகாரிகள் கூறியது வாஷிங்டன் போஸ்டில் வெளியாகியிருந்தது. முன்னாளில் தலிபான் கை ஓங்கி இருந்த பகுதிகளில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு சந்தைகள் எல்லாம் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் ”பாதுகாப்புப் பகுதிகள்” குறித்து அவர்கள் பேசினர்.

தலிபான் தலைவர்கள் மற்றும் போராளிகளின் படுகொலைகளுக்கு - குறிப்பாக தெற்கு நகரமான காந்தகாரைச் சுற்றி தற்போது நடக்கும் தாக்குதல்களில் - பெருமளவில் காரணமாய் இருப்பது தீவிரப்படுத்தப்பட்ட சிறப்பு படைகளின் செயல்பாடுகளின் விளைவே ஆகும். வான்வழிக் குண்டுவீச்சுகள் மூலம் குருதியோடச் செய்வது போல, இந்த கொலைப் படைகள் அப்பாவிப் பொதுமக்களைக் கொல்லும் பயங்கரமான குணமுடையவை. இதன்மூலம் ஆப்கானியர்களிடையே தங்களது நாடு ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதை நோக்கிய மற்றும் காபூலின் ஊழலுற்ற கைப்பாவை ஆட்சியை நோக்கிய வெறுப்பும் வஞ்சமும் அதிகரிக்க வழிசெய்கின்றன. தெற்கில் பாதுகாப்புப் பகுதிகள் (அந்நிய துருப்புகளின் எண்ணிக்கையை 150,000 ஆக விரிவுபடுத்தியதன் விளைபொருள்) என்று சொல்லப்படுவனவற்றுக்கு இணையாக வடக்கில் கிளர்ச்சித் தாக்குதல்கள் அதிகரித்திருக்கும் விவரங்கள் கிடைக்கின்றன.

ஒபாமா நிர்வாகத்தின் குரலில் மற்றும் கில்லார்ட் போன்ற அதனைப் பின்பற்றி நடப்போர்களது குரலில் ஒலிக்கும் நம்பிக்கையான தொனி போர் நடந்த ஒன்பது வருடங்கள் ஆப்கான் மக்களுக்கு குறையாத அழிவாகத் தான் நிரூபணமாகி உள்ளன என்கிற உண்மையை மறைத்து விட முடியாது. மிகப் பழமைவாத அடிப்படையிலான ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீடுகளின் படியே, குறைந்தபட்சம் 14,000 அப்பாவி மக்களின் மரணத்திற்கு இராணுவ மோதலே நேரடிக் காரணமாய் கூறப்பட்டுள்ளது. இராணுவ ஆக்கிரமிப்பானது காபூலில் ஊழலுக்கும் தேர்தல் மோசடிக்கும் படுபயங்கரமான வகையில் இழிபுகழ் பெற்ற ஒரு நச்சு ஆட்சிக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. பெருவாரியான மக்கள் இன்னும் வறுமையில் மூழ்கியுள்ளனர் என்பதோடு அவர்களுக்கு மின்சாரம், கல்வி, மற்றும் ஆரோக்கிய பராமரிப்பு போன்ற அடிப்படை சேவைகளும் கூட எட்டவில்லை.

அந்நிய துருப்புகள் அனைத்தும் உடனடியாக நிபந்தனையின்றி வாபஸ்பெறப்படவேண்டும் என்பதையும் போர் சேதாரங்களை சீர்படுத்துவதற்கு பத்து பில்லியன் கணக்கான டாலர்களை செலுத்த வேண்டும் என்பதையும் கோருவதே இந்த குற்றவியல் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் ஆப்கானிஸ்தான் மக்கள் தங்களது எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானிக்க அனுமதிப்பதற்குமான ஒரே வழி ஆகும்.