சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

As police attack refinery strikers

French Senate votes pension cuts over mass opposition

எண்ணெய் சுத்திகரிப்பு தொழிலாளர்களை பொலிஸ் தாக்குகையில்

பிரெஞ்சு செனட் வெகுஜன எதிர்ப்புக்களை மீறி ஓய்வூதிய வெட்டுக்களுக்கு வாக்களிக்கிறது

By Alex Lantier
23 October 2010

Use this version to print | Send feedback

ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் ஒய்வூதிய வெட்டுக்களுக்கு பெரும் வெகுஜன எதிர்ப்புக்கள், தொடர்ந்த வேலைநிறுத்தங்களை இவற்றை எதிர்த்து பிரெஞ்சு செனட் 177-153 என்ற கணக்கில் நேற்று ஒப்புதல் கொடுத்து வாக்களித்தது. அதே நேரத்தில் அரசாங்கம் எண்ணெய்த் துறையில் வேலைநிறுத்தங்களை முறிப்பதற்கு பொலிசைப் பயன்படுத்துவதை முடுக்கி விட்டுள்ளது. அந்த வேலைநிறுத்தமோ பாரிஸுக்கு அருகே Grandpuits இல் ஆக்கிரமிப்பிற்கு உட்பட்டுள்ள சுத்திரிப்பு ஆலையில் பெரிய பொலிஸ் தாக்குதலுக்கும் காரணமாக உள்ளது.

பொலிஸ் வாகனங்கள் Grandpuits இல் நேற்று அதிகாலை 3 மணிக்கு வந்து வேலைநிறுத்தக்காரர்கள் “வேலையில் ஈடுபட வேண்டும்” என்று கோரினர். அதாவது அவர்கள் வேலைக்குத் திரும்ப வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர். அதிகாலை 4.30 அளவில் 50 வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சுத்திகரிப்பு பணியில் இருந்த தங்கள் சக ஊழியர்களுடன் சேர்ந்து கொண்டனர்.

காலை 7 மணியளவில் மற்ற ஆலைகள் மற்றும் அருகிலுள்ள குடியிருப்பாளர்களை கொண்ட 80 பேர் அடங்கிய ஒரு “குடிமக்கள் மறியல் குழு”, இந்தப் பொலிஸ் ஆணையை தடுக்க அமைக்கப்பட்டது. காலை 9 மணிக்கு பொலிஸ் ஆக்கிரமிப்பு இடத்தில் தாக்குதலைத் தொடங்கினர். மோதலில் மூன்று தொழிலாளர்கள் காயமுற்றதாக CGT தொழிற்சங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

Seine-et-Marne பகுதியின் பிராந்திய பொலிஸ் தலைவர் Michel Guillot நேரடியாக வந்து சுத்திகரிப்பு ஊழியர்களை அனைவரும் வேலை செய்ய வேண்டும் என்றும், “தேசியப் பாதுகாப்பின்” பேரில் தொழிலாளர்களை டோட்டலின் (Total) அப்பகுதியிலுள்ள எரிவாயு நிலையங்களுக்கு மீண்டும் வினியாகம் செய்ய வேண்டும் என்று ஆணையிட்டார்.

CGT யின் டோட்டல் ஆயில் பிரிவின் அதிகாரி ஒருவரான Charles Foulard “அரசியலமைப்புப் படி பாதுகாக்கப்பட்டுள்ள வேலைநிறுத்த உரிமையை நடைமுறைப்படுத்துவதை” தடுப்பதற்காகப் பொலிசைக் கண்டித்தார். மேலும் “தேசியப் பாதுகாப்பு” இங்கு சட்டபூர்வமாகப் பொருந்தவில்லை, ஏனெனில் பிரான்ஸ் ஒரு போர்க்கால அல்லது முற்றுகை நெருக்கடியில் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார். ஆனால் அரசியலில் பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்துள்ள CGT ஒரு அறிக்கை வெளியிட்டு, Grandpuits ஆக்கிரமிப்பு முறிக்கப்படுவதற்கு எதிராக “அடையாள நடவடிக்கைகளை மட்டுமே” மேற்கோள்ளும் என்று அறிவித்தது.

புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியின் (NPA) செய்தித் தொடர்பாளரான ஒலிவியே பெசன்ஸநோ ஒரு சுருக்கமான அறிக்கையில், “வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள், வேலைநிறுத்தம் செய்யும் உரிமையைப் பாதுகாப்பதற்கு, அனைத்து அரசியல் கட்சிகள், அரசியல் அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் உழைக்கும் மக்கள் மற்றும் அவர்களுடைய உரிமைகளுக்கு எதிராக நடத்தப்படும் ஏற்க இயலாத தாக்குதல்களுக்கு எதிராக ஒன்றுபட்டுப் போராட வேண்டும்” என்று கூறினார்.

இது ஒரு இழிந்த தந்திரம் ஆகும். CGT, சோசலிச கட்சி இன்னும் பிற அமைப்புக்களும் தாங்கள் பொலிஸ் அடக்குமுறைக்கு எதிராக எந்தத் தீவிர பிரதிபலிப்பையும் காட்டப்போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளன. பெசன்ஸநோவின் அறிக்கை CGT, சோசலிஸ்ட் கட்சி ஆகியவற்றின் மீது நப்பாசைகளை உருவாக்கும் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியின் பங்கினையும் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கையானது சார்க்கோசி அரசாங்கத்தையும் ஆளும் வர்க்கம் முழுவதையும் மாற்றத்தை ஏற்க போதுமானது என்ற அரசியல்ரீதியாக நோக்குநிலையற்றதாக்கும் தன்மையுடன்தான் இயைந்துள்ளது.

சட்டத்தின்மீதான விவாதத்தை முடிவிற்குக் கொண்டுவரும் விதத்தில் அரசாங்கத்திற்கு அரசியலமைப்பு விதி 44, பிரிவு 3ன் படி கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தை சார்க்கோசி பயன்படுத்தினர். இது அரசாங்கத்தை திருத்த வழிமுறையைக் கடந்து செனட்டில் சட்டவாசிப்பைக் கட்டாயப்படுத்தி, ஒரு வாக்களிக்க வைக்கிறது. செனட் இதுபற்றி வாக்களித்தபோது டஜன்கணக்கான பொலிஸ் வாகனங்கள் அதைச் சூழ்ந்து நின்றன.

ஆளும் UMP (Union for a Popular Movement) மற்றும் பிரான்சுவா பேய்ரூவின் மைய ஒன்றியம் எனப்படும் வலதுசாரி MoDem (மக்கள் இயக்கம்) கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் ஒரு செனட் பிரிவு இரண்டும் சட்டவரைவிற்கு வாக்களித்தன. முதலாளித்துவ “இடது” சோசலிஸ்ட் கட்சி (PS) மற்றும் பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி (PCF) இரண்டும் எதிராக வாக்களித்தன.

தேசிய சட்டமன்றத்தில் இருந்து 7 செனட்டர்கள் மற்றும் 7 கீழ்சபைப் பிரதிநிதிகள் அடங்கிய CMP எனப்படும் இணைந்த சமத்தன்மைக் குழு இப்பொழுது இன்று வாக்களிக்கப்பட்டுள்ள சட்டவரைவு செப்டம்பரில் தேசிய சட்ட மன்றம் இயற்றிய சட்டத்துடன் சமரசம் காண முயலும். இணைந்த சமத்தன்மைக் குழு (CMP) தன் பணியை முடித்தவுடன் இறுதி வாக்களிப்பு பாராளுமன்றத்தின் இரு பிரிவுகளிலும் நடக்கும். இது அக்டோபர் 27இல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செனட்டில் வாக்களிக்கப்பட்டுள்படி, சட்டம் ஓய்வூதியத் தகுதி பெறும் வயதை 62 என்றும், முழு ஓய்வூதியத் தகுதி பெறும் வயதை 67 என்றும் உயர்த்தியுள்ளது. இது குறைந்தபட்ச பணிக்காலத்தை 40.5 ல் இருந்து 41 ஆண்டுகளுக்கு உயர்த்தியுள்ளது; இன்னும் கூடுதலான அதிகரிப்புக்கள் வாழ்நாள் அதிகரிப்பு எதிர்பார்ப்புக்கள் பெருகுமானால் அனுமதிக்கப்படும்.

இச்சட்ட வரைவு பொதுத்துறைத் தொழிலாளர்களின் பங்கு ஊதியத்தில் 7.85 ல் இருந்து தனியார் துறையில் இப்பொழுது இருக்கும் 10.55 சதவிகிதமாகும் என்று அதிகரித்துள்ளது. இது தொழிலாளர்களுக்கு “உடல்ரீதியாக இயலாமை விகிதம்” என்பதை அனுமதித்து 20 அல்லது அதற்கு மேற்பட்ட சதவிகிதம் ஓய்வு பெறுவதை ஏற்கிறது. ஆனால் அது 60 வயதில்தான் முடியும். அதுவும் ஒரு தொழிலாளர் தன்னுடைய இயலாமை, தொழில் தொடர்பினால் ஏற்பட்டது என்று நிரூபித்தால்தான்.

மைய ஒன்றியத்தின் தடையற்ற சந்தைக் கோரிக்கைகளுக்கு சலுகை கொடுக்கும் விதத்தில் UMP செனட்டர்கள் 2013 ஓய்வூதிய முறையில் சில “கருத்தாய்வுகளை” பரிசீலிக்கும் விதியையும் சேர்த்தனர். அத்தகைய திட்டத்தின்படி, அரசாங்கம் ஒரு தொழிலாளி தன் பணி வாழ்க்கைக் காலத்தில் ஈட்டிய ஒவ்வொரு புள்ளியின் மதிப்பையும் நிர்ணயிக்கும். புள்ளிகளின் மதிப்புக் குறைவு பற்றியும் நிர்ணயிக்கும். இதையொட்டி வாழ்நாள் அதிகரிப்பு ஏற்பட்டால் தொழிலாளர்களின் ஓய்வூதியங்கள் பாதிப்பிற்கு உட்படும். இது அரசாங்கத்தை நிர்வாக ஆணை மூலம் நலன்களில் அதிக வெட்டுக்களைச் சுமத்த அனுமதிக்கும்.

சோசலிஸ்ட் கட்சியின் செயலாளர் மாட்டின் ஓப்ரி அரசாங்க நடவடிக்கைகள் “வலிமையைப் பயன்படுத்தும் நிரந்தர ஆட்சி” என்று குறைகூறியுள்ளார். சார்க்கோசி “செனட்டையும், ஜனநாயகத்தையும் இழிவுடன்தான் வைத்துள்ளார்” என்றும் விவரித்துள்ளார்.

உண்மையில், இந்த விவரிப்பு சார்க்கோசிக்கு என்று மட்டும் இல்லாமல் சோசலிஸ்ட் கட்சிக்கும் பொருந்தும். ஒய்வூதிய வயதை 60 என்று விட்டுவிடுவதாகப் பெயரளவிற்கு அது பிரச்சாரம் செய்திருந்தாலும், சோசலிஸ்ட் கட்சி “சீர்திருத்த” விதிகளுக்கு ஆதரவு கொடுக்கிறது. அவை நடைமுறையில் மக்களை ஓய்வூதிய நலன்கள் பெறுவதற்கு முன் நீண்டகாலம் உழைக்கும் கட்டாயத்திற்கு உட்படுத்தும்.

கடந்த வாரம் France2 தொலைக்காட்சியின் ஓப்ரி தான் பணிக்காலத்தை 41.5 ல் இருந்து 42 வயது ஆக உயர்த்துவதை ஆதரிப்பதாக அறிவித்திருந்தார். சோசலிஸ்ட் கட்சி தற்போதைய சட்டவரைவில் பணிக்கால அதிகரிப்பிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளது. சோசலிஸ்ட் கட்சியின் செய்தித்தொடர்பாளர் Benoît Hamon தான் தொழிலாளர்கள் தேசிய ஓய்வூதியத் திட்டங்களில் 40 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் பயன் பெறுவர் என்ற நிலை தேவை என்பதை “விரும்புவதாக”க் கூறியபோது, இது சோசலிஸ்ட் கட்சிக்குள் கடுமையான உள்மோதல்களுக்கு வழிவகுத்தது.

France Inter இடம் பின்னர் பேசுகையில் சோசலிஸ்ட் கட்சியின் முக்கிய நபரான Manuel Valls, கட்சித் தலைமையை சார்க்கோசியின் ஓய்வூதியச் சட்டம் பற்றி எந்தக் குறையையும் கூறாததற்குக் கண்டித்தார். பணிக்கால அதிகரிப்பு “தவிர்க்க முடியாது” என்று கூறிய அவர், “இடதுகளிடம் ஒரு வார்த்தை பிரயோகம் உள்ளது. அது இடதில் இருப்பது என்பது கோஷங்களைப்போலவே 1970, 1980 அல்லது 1990 களின் கருத்துக்களைக் கூறுவது என்பது பிரச்சினையாக உள்ளது.” என்றார். “2012ல் நாம் வெற்றிபெற்றால், அது உண்மையைப் பயன்படுத்தும் வார்த்தைகளாக இருக்க வேண்டும்” என்றும் அவர் சேர்த்துக் கொண்டார்.

எண்ணெய் வேலைநிறுத்தங்களை முடிவிற்குக் கொண்டுவர அரசாங்கம் பெரும் முயற்சி செய்கின்றது. சுற்றுச் சூழல் மற்றும் எரிபொளுள் மந்திரி Jean-Louis Borloo நேற்று பிரான்சின் 12,300 பெட்ரோலியப் பொருட்கள் விற்பனை நிலையங்களில் கிட்டத்தட்ட 2,500 முற்றிலும் எரிபொருள் இல்லாமல் இருக்கின்றன என்றார். “முன்னேற்றம் மிகத் தாமதமாகத்தான் இருக்கும்” என்பதையும் அவர் ஒப்புக் கொண்டார். ஆனால் கிராண்புட் இல் பொலிசார் தாக்குதல் பாரிஸ் நகர்ப்பகுதியில் “நிலைமையக் கணிசமாக முன்னேற்றுவிக்கும்” என்றும் கூறி, எரிபொருள் பங்கீட்டு முறையில் விற்கப்படும் என்ற கருத்தை நிராகரித்தார்.

பிரான்சின் ஆகும் வர்க்கம் ஐரோப்பாவில் இருந்தும் ஆதரவைத் திரட்டுகிறது. UFIP (பிரெஞ்சு பெட்ரோலியத் தொழில்களின் ஒன்றியம்) ன் Jean-LouisSchilansky “ஏராளமான எரிபொருட்கள் சுத்திகரிப்பு ஆலைகள் மூடப்பட்டதின் விளைவைச் சமாளிக்க இறக்குமதி செய்யப்பட்டுள்ளது” என்றார். “இறக்குமதிகள் ஐரோப்பா முழுவதிலும் இருந்து வந்துள்ளன. பிரெஞ்சு சந்தைகளுக்கு விநியோகிக்க ஐரோப்பிய முறை முழுவதையும் நாங்கள் திரட்டிவருகிறோம்” என்றும் அவர் கூறினார்.

எண்ணெய்த் துறையின் மீதான மற்றொரு தாக்குதலில், நேற்று ஒரு நீதிபதி எண்ணெய் நிறுவனமான டோட்டல், டன்கிர்க் சுத்திகரிப்பு ஆலையை மூடும் திட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்தார்.

செனட் வாக்களிப்பும், வேலைநிறுத்தக்காரர்கள் மீது பொலிஸ் தாக்குதல்களும் சார்க்கோசியின் வெட்டுக்களுக்கு எதிரான வெகுஜன வேலைநிறுத்தங்களை நடத்துகையில், தொழிலாளர்களும் மாணவர்களும் அரசாங்கத்திற்கும் முழு ஆளும் வர்க்கத்திற்கும் எதிராக அரசியல் போராட்டத்தை எதிர்கொள்கின்றனர் என்பதற்கு மற்றொரு நிரூபணம் ஆகும். இப்போராட்டம் தொழிற்சங்கங்கள் மற்றும் “இடது” என்று அழைக்கப்படும் கட்சிகளில் இருந்து சுயாதீனமாக நடத்தப்பட்டால்தான் வெற்றி பெற முடியும். தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த இயக்கத்தை வலுவிழக்கச் செய்து முடிவிற்குக் கொண்டுவர முனைகிறது. ''இடதுகள்'' முக்கியமாக வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்கள் தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டில் இருந்து அகல்வதைத் தடுக்க முயல்கின்றன.

இயக்கத்தை மூடிவிடும் தங்கள் விருப்பத்தை அடையாளம் காட்டிய விதத்தில் தொழிற்சங்கங்கள் எண்ணெய்த்துறைத் தொழிலாளர்களை பொலிஸ் தாக்குதலில் இருந்து காக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; அதேபோல் அத்தகைய தாக்குதல்களுக்கு விடையிறுக்கும் வகையில் பொருளாதாரத்தின் மற்ற பிரிவுகளுக்கு வேலைநிறுத்தம் விரிவடையும் முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. அவற்றின் முக்கிய கோரிக்கை எப்பொழுதுமே அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவது, அதுவும் ஓய்வூதியத்தின் விதிமுறைகள் பற்றிப் பேசுவது என்பதாக உள்ளதே ஒழிய, வெட்டுக்களைத் தெளிவாக, கொள்கை அளவில் நிராகரிப்பது என்று இல்லை.

CGT தலைவர் பேர்னார்ட் தீபோ உட்பட தொழிற்சங்கத் தலைவர்களுடன் பின்புறக் கதவு வழியே சார்க்கோசி ஆலோசனைகளை நடத்தியுள்ளார் என்பதில் ஐயமில்லை. அதே போல் தொழிற்சங்க உயரலுவலர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மீதான பொலிஸ் தாக்குதல்கள் தீவிரமடைந்தால் தாங்கள் விடையிறுக்க மாட்டோம் என்றும் உத்தரவாதம் கொடுத்திருப்பர்.

தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை ஒரு பொது வேலைநிறுத்தம் என்னும் திசையில் விரிவாக்க முயல்கையில் தொழிற்சங்கங்கள் சார்க்கோசி மற்றும் பிரெஞ்சு ஆளும் உயரடுக்கின் பாதுகாப்பிற்கு முக்கிய ஆதரவு கொடுப்பவையாக வெளிப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான உயர்நிலைப் பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களும் தொழிலாளர்களுக்கு ஆதரவாகத் திரண்டு நிற்கையில், பொது மக்களும் உறுதியாக வேலைநிறுத்தங்களுக்கு ஆதரவு தருகையில். சார்க்கோசியோ பிரெஞ்சு மக்களின் பெரும்பான்மையினால் வெறுக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டுள்ளார்.

ஒரு BVA-Canal+ கருத்துக் கணிப்பு, நேற்று வெளியிடப்பட்டது, மக்களில் 69 சதவிகிதம் வெட்டுக்களுக்கு எதிராக வேலைநிறுத்தங்கள் தொடர்வதை, செனட் வாக்கையும் மீறி, ஆதரவு கொடுப்பதாகக் காட்டுகிறது. முந்தைய கருத்துக் கணிப்புக்கள் 10இல் 6 பிரெஞ்சு மக்கள் சார்க்கோசியின் கொள்கைகளுக்கு எதிரான ஒரு பொதுவேலைநிறுத்தத்திற்கு ஆதரவு உண்டு என்பதைக் காட்டியுள்ளது. சமீபத்திய வாரங்களில் வெட்டுக்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் பலமுறையும் 3 மில்லியன் எதிர்ப்பாளர்களுக்கும் மேலாகத் திரட்டியுள்ளன; எதிர்ப்பை ஒட்டி உயர்நிலைப்பள்ளி மாணவர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் தங்கள் நிலையங்களை முற்றுகைக்கு உட்படுத்தியுள்ளனர்.

ஆனால் வியாழனன்று அடுத்த நடவடிக்கை எடுப்பதற்குத் தான் அக்டோபர் 28 வரை (சட்டத்தின் மீது இறுதி வாக்கு தினம்) பொறுத்திருக்கும் என்று அறிவித்த விதத்தில் அனைத்து தொழிற்சங்கக் கூட்டு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு எதிராக அரசாங்கத்தின் தாக்குதலுக்கு பச்சை விளக்கு காட்டியுள்ளது. அடுத்த வாரம் All-Saints Week விடுமுறையைப் பயன்படுத்தி மாணவர் எதிர்ப்புக்களைத் தகர்க்கும் விதத்தில் வேலைநிறுத்தங்களை முறிக்க சார்க்கோசி முயல்வார்.

இந்த நிகழ்வு தொழிலாளர்கள் நடவடிக்கைக் குழுக்களை அமைக்க வேண்டும், அவை தொழிற்சங்கங்கள் மற்றும் “இடது” கட்சிகளிடம் இருந்து சுயாதீனமாக இருக்க வேண்டும் என்னும் உலக சோசலிச வலைத் தளம் விடுத்துள்ள அழைப்பின் அரசியல் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இக் குழுக்களானது போராட்டத்தின் உண்மையான ஜனநாயகக் கருவி என்ற முறையில், ஒரு பொதுவேலைநிறுத்தத்திற்காக போரிடும். அதன் இலக்கு சார்க்கோசி அரசாங்கம் கவிழ்க்கப்பட்டு அதற்குப் பதிலாக ஒரு தொழிலாளர் அரசாங்கம் நிறுவப்பட வேண்டும் என்று இருக்கும்.

தொழிலாள வர்க்கத்தின் இத்தகைய சுயாதீன வெகுஜன தொழில்துறை, அரசியல் நடவடிக்கை என்னும் முன்னோக்கு ஸ்ராலினிச PCF மற்றும் NPA போன்ற மத்தியதர போலி இடது அமைப்புக்களின் முன்னோக்கிற்கு முற்றிலும் எதிரானது ஆகும்; அவை தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை நிலைகுலைத்து 2012 தேர்தலின் பின் அதைத் திசைதிருப்ப முயல்கின்றன; அதவும் மற்றொரு பிற்போக்குத்தன சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதற்காக.

ஒரு சுயாதீன அரசியல் தலைமை தொழிலாள வர்க்கத்திடம் இல்லை என்பதுதான் இந்த நிலைமையின் மிக முக்கியமான கூறுபாடு ஆகும். பல மில்லியன் தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு எதிரான பொலிஸ் வன்முறை நிகழ்விற்கு விடையிறுக்கும் வகையில் ஒரு பொது வேலை நிறுத்தம் தேவை என்கின்றனர். பாராளுமன்றத்தில் மக்கள் விருப்பத்தை மீறிய விதத்தில் இயற்றப்பட்டுள்ள தீமை நிறைந்த சட்டத்தை எதிர்க்கின்றனர். செயற்பாட்டுக் குழுக்களை கட்டமைத்தல் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்காக ஒரு புரட்சிகரத் தலைமயை கட்டமைப்பதும் இப்பொழுது தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள்மீது நடத்தப்பதும் தாக்குதலை தோற்கடிப்பதற்கான மையத்தானம் ஆகும்.

கட்டுரை ஆசிரியர் கீழ்க்கண்டதையும் பரிந்துரைக்கிறார்:

ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக பிரான்ஸில் மில்லியன் கணக்கானவர்கள் ஆர்ப்பாட்ட அணிவகுப்பு