சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: New Anti-Capitalist Party academic advocates surrender to Sarkozy’s cuts

பிரான்ஸ்: புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியின் உயர் கல்வியாளர் சார்க்கோசியின் வெட்டுக்களுக்கு அடிபணிய வேண்டும் என்று வாதிடுகிறார்

By Alex Lantier
25 October 2010

Use this version to print | Send feedback

சனிக்கிழமையன்று, பிரான்ஸின் பிரபல நாளேடான Le Monde ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் சிக்கனக் கொள்கைகளுக்கு எதிராக நடந்துவரும் வேலைநிறுத்த இயக்கம் குறித்து ஒரு பல்கலைக்கழக சமூகவியலாளரும் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியின் உறுப்பினருமான Philippe Corcuff இன் கருத்துக்களை வெளியிட்டது. Le Monde மேற்கோளிட்டுள்ள மற்ற “தத்துவ வாதிகளுடன்” Corcuff ம் தன்னுடைய விரோதப் போக்கை சார்க்கோசிக்கு எதிரான வெகுஜன வேலைநிறுத்த நடவடிக்கை மீது வெளியிட்டுள்ளார்.

Le Monde இத்தகைய கருத்துக்களுக்கு ஆதரவு கொடுப்பது போராட்டத்தின் முக்கியமான காலத்தில் வேலைநிறுத்த இயக்கத்தின் நோக்குநிலையைச் சிதைக்கவும், உளரீதியாக உருக்குலைப்பதற்கும் ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாகும்.

பெருகிவரும் வெட்டுக்களுக்கு எதிரான வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்களுக்கு மக்கள் ஆதரவு இருந்தும்கூட, தொழிற்சங்கங்களானது அனைத்து மேலதிக தேசிய வேலைநிறுத்த நடவடிக்கையையும் சார்க்கோசியின் ஓய்வூதியச் “சீர்திருத்தத்தை” பாராளுமன்றம் இயற்றும் வரை என்று ஒத்திவைத்துள்ளன. எண்ணெய் மற்றும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் உறுதியான நடவடிக்கை ஒரு கடுமையான பெட்ரோலிய பொருட்கள் தட்டுப்பாட்டை விளைவித்துள்ளது. ஆனால் தொழிற்சங்கங்கள் வேண்டுமென்றே அவற்றின் வேலைநிறுத்தங்களை தனிமைப்படுத்தியுள்ளன.

தொழிற்சங்கங்களால் தோற்றுவித்துள்ள மூச்சுவிடுவதற்கான நேரத்தை பயன்படுத்திக் கொண்டு, சார்க்கோசி கலகத் தடுப்புப் பிரிவுப் பொலிசை மறியல்கள் மற்றும் முற்றுகைகள் என்று சுத்திகரிப்புத் தொழிலாளர்களின் நடவடிக்கைகளை Grandpuits மற்றும் Fos இன்னும் பிற பணியிடங்களில் முறியடிப்பதற்கு அனுப்பிவைத்துள்ளார்.

Corcuff இதை எதிர்கொண்டுள்ள விதம் சார்க்கோசிக்கும் பிரெஞ்சு ஆளும் வர்க்கத்திற்கும் நாணமற்ற முறையில் தாழ்ந்து நிற்பதாகும். தொழிலாளர்கள், அரசிற்கு எதிரான அரசியல் போராட்டத்தை எதிர்கொள்கையில், Corcuff ம் அவருடைய சக சிந்தனையாளர்களும் Le Monde மூலம் தலையிட்டு சரணடைய வேண்டும் என்ற கொள்கைக்கு வாதிடுகின்றனர்.

தொழிலாளர்கள் “விளையாட்டுத்தனமான” எதிர்ப்பு நடவடிக்கைகள் மீது குவிப்புக் காட்ட வேண்டும் என்று Corcuff கூறுகிறார். தொழிலாளர்கள் செய்தி ஊடகம் குறைகூறும் விதத்தில் இன்னும் சக்தி வாய்ந்த நடவடிக்கைகளை எடுத்தால் “அது சார்க்கோசியின் பாதுகாப்பு குறித்து கருத்துக்களை மீண்டும் நெறிப்படுத்திவிடக்கூடும்” என்று அஞ்சுகிறார்.

இவர் முன்வைக்கும் திட்டம் CGT என்னும் தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பின் கருத்தைத்தான் ஒத்துள்ளது. ஸ்ராலினிசம் வழிநடத்தும் CGT ஆனது பாரிஸுக்கு அருகேயுள்ள Grandpuits இல் வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து அதை மீண்டும் திறப்பதற்காக அரசாங்கம் கலகத் தடுப்புப் பிரிவு பொலிசை பயன்படுத்தியதற்கு எதிராக “அடையாள” நடவடிக்கைகளைத்தான் கொள்ளும் என்று கூறியுள்ளது.

தொழிற்சங்கங்களின் காட்டிக் கொடுப்பிற்கு Corcuff முழு ஆதரவைக் கொடுக்கிறார். இனிக்கூடுதலான பொருளாதாரத் தட்டுப்பாடுகள் “பொது மக்கள் கருத்துடன் ஒரு முறிவை ஏற்படுத்தும்” என்று Le Monde Corcuff ஐ மேற்கோளிட்டுத் தெரிவித்துள்ளது. “தொழிற்சங்க அதிகாரிகளுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது என்ற உணர்வு மிகவும் முக்கியமாகும்.”

யதார்த்தமானது Corcuff இன் சோர்வுற்ற முன்னோக்கிற்கு முற்றிலும் மாறானது ஆகும். வெட்டுக்களுக்கு எதிரான வெகுஜன மக்கள் எதிர்ப்புத்தான் நிலைமையின் கூறுபாடாக உள்ளது-சமீபத்திய கணிப்புக்களின்படி இதற்கு 70 சதவிகித ஆதரவு உள்ளது. மேலும் வேலைநிறுத்தங்களுக்கு பெரும் மக்கள் ஆதரவும் உள்ளது. தொழிலாளர்களுக்கு பொதுமக்கள் காட்டும் ஆதரவைச் சிதைப்பதற்கு உறுதியான வழி தாழ்ந்துபோதலும், போராட்டத்தை இறுதிவரை நடத்திக்கொண்டு போகாததும் ஆகும்.

Corcuff மற்றும் தொழிற்சங்கங்கள் தலைவணங்கும் கருத்து ஒன்றும் மக்களின் பரந்த பிரிவுடைய கருத்தல்ல. மாறாக ஒரு முதலாளித்துவ மற்றும் அதன் குரலாக ஒலிக்கும் செய்தி ஊடகத்தின் கருத்துத்தான். இது ஒன்றும் முக்கியமான தவறான பகுப்பாய்வு அல்லது நிலைமை பற்றித் தவறாகப் புரிந்துகொண்டதின் விளைவு அல்ல. மாறாக, தொழிற்சங்கங்களும் NPA யிலுள்ள அவற்றைப் பின்பற்றுபவர்களும் தொழிலாள வர்க்கத்தினுள் புரட்சிகர உணர்வு பரவிவருவதை நன்கு அறிவர். இதை அவர்கள் அச்சத்துடன் விரோதப்போக்குடனும் எதிர்கொள்கின்றனர். அவர்கள் முயற்சிகள் அனைத்தும் மக்கள் இயக்கத்தைத் தகர்த்து அதை நசுக்குவதற்கு சிறந்தவழி என்ன என்பது பற்றிக் முக்கியத்துவம் காட்டுவதாக உள்ளது.

Le Monde உடனான மற்றொரு பேட்டியில் பேராசிரியை Cynthia Fleury இன்னும் வெளிப்படையாக மத்தியதர வர்க்கக் கூறுபாடுகளை சார்க்கோசிக்கு எதிரான வெகுஜன எதிர்ப்பை நிறுத்துவதற்கான தலையீட்டிற்காக வாதிடுகிறார். Le Monde கூறியுள்ளபடி, Fleury “ஜனநாயகத்தைக் கட்டுப்படுத்தும் வழிகளின்” கோட்பாடுகளை தொகுக்கிறார்-இன்னும் உண்மையைக் கூறவேண்டும் என்றால் அதை நெரிப்பதற்கு.

அனைத்து சான்றுகளுக்கும் எதிர்மாறான முறையில் அப்பட்டமாக “மக்கள் இறுதி இலக்கிற்கு ஆதரவு கொடுக்கின்றனர். அதாவது ஓய்வூதியச் சீர்திருத்தங்களுக்கு” என்று வலியுறுத்தி Fleury “தனது தடுப்பதிகாரத்தால் ஆளுமை செலுத்தும் தெரு ''எதிர்மறை இறையாண்மை'' என்ற வடிவத்துடன் வெளிப்பட்டுள்ளது” என்றும் இது நவீன ஜனநாயகத்தை எதிர்கொள்ளும் பெரிய சவால் ஆகும்” என்று கூறியுள்ளார். மேலும் “புதிய ஜனநாயகம்”, தொழிற்சங்க அதிகாரிகள் மூலமோ, பேராசிரியர்கள் அல்லது பிறர்மூலம் “பொதுவிவாதத்தில் வெளிப்படும் தகுதிபெற்ற பெரும்பான்மைகள் மூலம் தான் இருக்கும்” என்று முடிவுரையாகக் கூறுகிறார்.

“சாதாரண மக்களிடமிருந்து எதிர்ப்பு வரவில்லை” என்று அவர் அறிவிக்கிறார். “அது முடிந்துவிட்ட காலம்” என்று அவர் பறைசாற்றுகிறார். “இவை ஒன்றும் கூட்டம் அல்ல. இவர்கள் வெகுஜனங்கள் அல்ல. இவர்கள் கற்றவர்கள், முறையான நெறியைக் கொண்ட தனிநபர்கள், கொள்கைகளை முன்வைப்பதில் சக்தி உடையவர்கள்.”

Fleury மற்றும் Corcuff போன்றவர்கள் மத்தியதர வர்க்கத்தின் சலுகை பெற்ற, திமிர்பிடித்த பிரிவுகளுக்காக பேசுபவர்கள். இவர்கள் தொழிலாள வர்க்கத்தின் சமூக எதிர்ப்பை இழிவுடனும் அச்சத்துடனும் காண்கின்றனர். சமூகநலச் செலவு வெட்டுக்களின் தேவை பற்றி நம்பிக்கை கொண்டு அவர்கள் கடுமையாக தொழிலாள வர்க்கத்தின் சார்க்கோசிக்கு எதிரான போராட்டத்திற்கு விரோதிப் போக்கு கொண்டுள்ளனர். ஏனெனில் அது விரைவில் தொழிலாளர்கள் தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் ஒரு மோதலுக்கு வகை செய்யும் என்று உணர்ந்துள்ளனர். இது தொழிற்சங்கங்களையும் NPA இன் வர்க்க ஒத்துழைப்புக் கொள்கைகளையும் அம்பலப்படுத்திவிடும்.

உண்மையில், Corcuff ஒரு தொழிலாள வர்க்க இயக்கம் பொது வேலைநிறுத்தத்திற்காக தொழிற்சங்கங்கள் இடமிருந்து சுயாதீனமாக நடப்பதை விரோதப் போக்கு, பீதியுடன் காண்கிறார். அவருடைய சமீபத்திய வலைத் தள கட்டுரையில் (“For durable and pacific social guerrilla warfare”) என்பதில் அவர் விளக்குவது: “தேசிய அனைத்துத் தொழிற்சங்க கூட்டமைப்பிற்குள் உள்ள உடன்பாடு மற்றும் தீவிரமயப்படுதல் ஆகியவற்றின் அளவு ஒரு பரந்த, நீடித்த வேலைநிறுத்தங்களுக்கு அழைப்புவிடும் வாய்ப்பிற்கான நம்பிக்கையை நமக்குக் கொடுக்கவில்லை. இது பற்றி நாம் வருந்தினாலும், உண்மையைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.”

தொழிற்சங்கங்கள் பரந்துபட்ட தொழிற்துறை நடவடிக்கை எடுக்க ஏன் மறுக்கின்றன என்பதை Corcuff விளக்கவில்லை என்பதின் பொருள் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களின் தலைமையை ஏற்று, தாங்களே எதையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்பதாகும். மாறாக அவர் எழுதுவது: “நிதானமான மற்றும் தீவிர முனைகள் விலகிவிடமுடியாது இணைந்திருப்பதைப் பாதுகாப்பது முக்கியமான பணி இல்லையா?’

இத்தகைய கருத்துக்கள் புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சியின் முழு அயோக்கியத்தனத்தையும் அம்பலப்படுத்துகின்றன. முதலாளித்துவம் மற்றும் முதலாளித்துவ அரசிற்கு எதிரான எந்த தீவிரப் போராட்டத்திற்கு, CGT போன்ற வர்க்க ஒத்துழைப்பு அமைப்புகளுக்கு எதிராக ஒரு அரசியல் போராட்டம் தேவையாகும். ஆனால் Corcuff கூறும் “முதலாளித்துவ-எதிர்ப்பு” என்பது இலாபமுறைக்கு எதிரான போராட்டத்திற்கு முதல் முன்நிபந்தனை என்ற கருத்திற்குச் செல்லவில்லை.

உண்மையில் Corcuff “பொது வேலைநிறுத்தம்” என்ற சொற்றொடரை பயன்படுத்துவதை எதிர்க்கவில்லை. ஆனால் அச்சொற்றொடருக்கு முற்றிலும் புதிய, செயலற்ற பொருளைத்தான் கொடுக்க வலியுறுத்துகிறார்-இதையொட்டி ஒரு வலதுசாரியான Corcuff கூட முதலாளித்துவ செய்தி ஊடகத்திற்குப் பேட்டிகள் கொடுக்கும்போது பயன்படுத்தலாம். Corcuff ஐ பொறுத்தவரை, ஒரு பொது வேலைநிறுத்தம் என்றால், “கடினமான அனுபவங்களை பொதுமைப்படுத்திக் கூறும் ஒரு தேவையாகும்.” இச்சொற்றொரின் விளக்கத்தை வெளியிடாமல் தனக்குள்ளேயே வைத்துள்ளார்.

சார்க்கோசிக்கு எதிரான வேலைநிறுத்த நடவடிக்கைகளை சுயாதீனமாக ஒருங்கிணைக்க நடவடிக்கைக் குழுக்களை அமைக்க வேண்டும் என்று தொழிலாளர்களுக்கு உலக சோசலிச வலைத் தளம் அழைப்பு விடுத்துள்ளது. இக்குழுக்கள் தொழிலாள வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகளையும் ஒன்றுபடுத்தி நடவடிக்கைகளுக்கு ஒருங்கிணைத்து, சிக்கன நடவடிக்கைகள் மற்றும் வேலையின்மைக்கு எதிரான போராட்டத்தை விரிவாக்கி, ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்து சார்க்கோசி அரசாங்கத்தை வீழ்த்தி அதற்குப் பதிலாக சோசலிச கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட தொழிலாளர் அரசாங்கத்தைக் கொண்டுவரவேண்டும்.

அத்தகைய போராட்டத்தைத் தான் எதிர்ப்பதாக Corcuff தெளிவாக்கியுள்ளார். “அனைத்து தொழிலாளர்கள், மாணவர்கள், உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் ஆகியோர் அனைவரையும் வெற்றி அடையும் திறனுக்கான சமூக இயக்கத்தில் ஒருங்கிணைக்கும் வகையில் ஒரு பொதுமைப்படுத்தப்பட்ட வேலைநிறுத்தத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஈடுபடுத்துவது என்பது கடினமாகும்” என்று அவர் எழுதுகிறார். மாறாக அவர் தன்னுடைய முந்தைய “மாதிரியான” வலதுசாரி சக்திகளுடன் “பிணைப்புக்கள்” என்பதைக் கோருகிறார்: “அத்தகைய பொதுமைப்படுத்தும் முன்னோக்குத்தான் மிக நிதானமாக, நியாயமான பிரிவுகளை திரட்டின் பக்கத்தில் சேர்ப்பதற்கு ஒரு முன்கருத்தாக விளங்கும்.”

“ஐக்கியம்”, “மத்தியத்துவப்படுத்துதல்” என்று வர்க்கப் போராட்டத்தைச் செய்வது குறித்து அவர் பெரும் பீதியுடன் பின்வாங்குகிறார். அதை விளக்குகையில், “இது ஒன்றின் மேலாதிக்கத்தின் கீழ் பல என்பவற்றை நசுக்கும் தன்மை உடையது.” என்று கூறுகிறார். தன்னுடைய போக்கிலேயே, இதை விளக்குகையில், மனிதப் பன்முகதன்மையிலிருந்து ஆரம்பிக்கும் ஒரு பொது இடத்தை உருவாக்குவதை அரசியல் உள்ளடக்கியுள்ளது. அதில் ஒன்று என்பதற்காக பன்மை நசுக்கப்பட்டுவிடக்கூடாது” என்று விரிவாக விளக்கம் அளிக்கிறார்.

இவை அனைத்தும் போலித்தன அறிவார்ந்தவை எனப்படும் பிதற்றல்களாகத் தம்மையே செய்துகொண்டு, மத்தியதர வர்க்கத்தின் சலுகை பெற்ற பிரிவுகள் தொழிலாள வர்க்க எழுச்சியின் வெளிப்பாட்டை, ஐக்கியமான சமூக சக்தியை கவலையுடன் நோக்கும் இயல்பைத்தான் கொண்டுள்ளன. இதுதான் அவரைத் தவிர்க்க முடியாமல் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு ஈர்க்கிறது-மற்றொரு மத்தியதர வர்க்கத்தின் செழிப்புடைய அடுக்கு அது, வர்க்கப் போராட்டத்தை தன் சலுகைகளுக்கு அச்சுறுத்தல் என்று காண்பது.

பிரெஞ்சுப் பல்கலைக்கழகங்களிலுள்ள, மாணவர்களை வகுப்பறைகளில் சொற்களைப் பயன்படுத்தி குழப்பி, உறங்க வைக்கும் ஒரே “அறிவார்ந்தவர்” Corcuff மட்டும் இல்லை. ஆனால் இவர் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டத்தை எதிர்ப்பதற்கு “இடது” ஒலிக்குறிப்பு கொடுப்பதில் வல்லுனர் ஆவார். இவர் முன்வைக்கும் நிலைப்பாடுகள் NPA உடைய 2009 நிறுவன மாநாட்டில் ட்ரொட்ஸ்கிசத்துடன் சொற்கள் தொடர்பு கூடக் கூடாது என்று பகிரங்கமாக மறுக்கப்பட்டதின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. மார்க்சிசம் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு விரோதப் போக்கு என்பதை இது பகிரங்கமாக ஒப்புக் கொள்ளுவது ஆகும்.

மே 2009 “Anti-productivism and anti-capitalism new convergences” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் Corcuff, NPA க்கும் அதைச் சுற்றியிருக்கும் சுற்றுச் சூழல்வாதிகளான பொருளாதார வளர்ச்சிக்கான எதிர்ப்பவர்கள் இயக்கத்திற்கும் (Movement of Objectors to Economic Growth MOC) இடையே ஒரு உடன்பாட்டைக் காணும் முயற்சியை விளக்கியுள்ளார். NPA பல பிராந்திய பிரச்சாரங்களில் MOC உடன் சேர்ந்து மார்ச் மாதப் பிராந்திய தேர்தல்களில் மேற்கொண்டது.

Corcuff இன் கட்டுரை பொருளாதார உற்பத்தியைக் கண்டித்து, “உற்பத்தி எதிர்ப்பு கலாச்சார புரட்சி தேவை” என்று அழைப்பு விடுக்கிறது. இதேபோல், பிரெஞ்சுக் கார்த் தயாரிப்பு தொழிலாளர்களிடையே வேலைநிறுத்தங்கள் பெருகியபோது, மறைந்த முன்னாள் NPA பல்கலைக்கழக தத்துவவாதி Daniel Bensaïd கார்த் தயாரிப்புத் தொழில் “தொழில்துறை வகையில் முதிர்ச்சியினால் தளர்ச்சி அடைந்துவிட்டது, சுற்றுச் சூழலில் பிரச்சினையை எழுப்புகிறது” என்று விவரித்தார்.

இத்தகைய ஆழ்ந்த பிற்போக்குத்தனக் கருத்துக்கள் Corcuff இன் மார்க்ஸ் மீதான தாக்குதல்களில் அவருடைய “உற்பத்தி முறை மயக்கம்” எனப்படுவதற்கு எதிராகப் பிரதிபலிக்கின்றன. பேராசிரியர் எழுதுகிறார்: “இது அறிவொளி சார்ந்த காலத்தின் முழுப் பிரிவுகளான அறிவார்ந்த முறை, விஞ்ஞானம், அல்லது முற்போக்குகளையும் கைவிடும் பிரச்சினை அல்ல. ஆனால் அவற்றின் மேலாதிக்க முழு நிலைமையை மறுத்தல், அவற்றை சுற்றுச் சூழல் பற்றிய கவலையில் பகடையாகச் செய்தல் என்பதுதான். இதைத்தான் வேறு இடத்தில் நான் அரை கண்ணால் பார்க்கும் அறிவொளி விளக்கம்எ(Blinkered Englightenment) என்று அழைத்துள்ளேன்.

விஞ்ஞானம், மார்க்சிசம் மற்றும் தொழிலாள வர்க்கம் ஆகியவற்றின் மீதான அவருடைய அரைக்கண்ணால் பார்க்கும் எதிர்ப்புடன் Corcuff இன், நெருக்கடி காலத்தில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக சமூகப் பிற்போக்குத்தனம் பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கும் அறிவார்ந்த பின்பகுதியைச் சேர்ந்தவர். பொது வேலைநிறுத்தத்தைக் கண்டித்து சார்க்கோசியின் சமூகநலக் குறைப்புக்களுக்கு அடிபணிய வேண்டும் என்று வாதிடுகையில் அவர் தனக்குக் கொடுக்கப்பட்டுள்ள பங்கான நிதியப் பிரபுத்துவத்திற்கு மத்தியர வர்க்கத்தின் முகவர் என்ற பாத்திரத்தை வகிக்கிறார்.