சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

G20 meeting papers over conflicts

G20 கூட்டக் கொள்கை ஆவணம் மோதல்கள் குறித்து அறிவிக்கிறது

By Nick Beams
25 October 2010

Use this version to print | Send feedback

செப்டம்பர் 2008ல் ஆரம்பித்த நிதியச் சரிவை எதிர்கொள்ளக்கூடிய முதன்மை வாய்ந்த சர்வதேசப் பொருளாதார அரங்காக அது நிறுவப்பட்டபோது, எதிர்காலத்தில் G20 உலக முதலாளித்துவப் பொருளாதாரத்தின் மோதல்கள் மற்றும் சமச்சீரற்ற தன்மை ஆகியவற்றை வெற்றிகொள்ளும் ஒரு கருவியாக கொள்கைகளை ஒருங்கிணைத்து வளர்ச்சிக்கு உறுதியளிக்கும் என்றும் கருதப்பட்டது.

2009 ஆண்டு முழுவதும் பொருளாதார ஊக்கத் தேவைக்கு பரந்தளவில் உடன்பாடு இருந்தும், அந்த நம்பிக்கைகள் சமீப மாதங்களில் சர்வதேச “நாணயப் போர்” மற்றும் பெரும் சக்திகளிடையே, குறிப்பாக அமெரிக்கா மற்றும் சீனா ஆகியவற்றிற்கு இடையே, ஆழ்ந்துள்ள மோதல்கள் குறித்து எச்சரிக்கைகளால் கடுமையாகச் சிதைந்துள்ளன.

இம்மோதல்களின் தன்மையின் ஆழத்தினால் அமைப்பின் எதிர்காலமே இப்பொழுது கடந்தவாரம் G20 நிதி மந்திரிகள் மற்றும் மத்திய வங்கியாளர்களின் கூட்டம் தென் கொரியாவிலுள்ள Gyeoungju வில் நடப்பதற்கு முன் ஏற்பட்ட நிகழ்வுகளினால் வினாவிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

எப்படியும் G20 தலைவர்களின் கூட்டம் நவம்பர் 11-12ம் திகதிகளில் நடைபெற இருப்பதற்கு தயாரிப்புக்கள் நடத்த நிகழ்ந்த இக்கூட்டம், முறிவின் விளிம்பிலிருந்து மீண்டு, ஒரு அறிக்கையை வெளியிட்டது. குறைந்தபட்சம் தற்போதைக்கேனும், அது அனைவருக்கும் ஓரளவு ஆறுதலைக் கொடுத்து மோதல்களைப் பூசி மெழுகியது.

கூட்டமானது “அவசர உணர்வுடன்” கூடுகிறது என்பதை ஒப்புக் கொண்ட அறிக்கை G20, “சந்தை நிர்ணயிக்கும் நாணய மாற்று விகித முறையை நோக்கி நகரும், அதுதான் பொருளாதார அடிப்படைகளின் தளத்தில் இருப்பது என்று கூறி போட்டித்தன்மையான நாணய மதிப்புக்களைக் குறைப்பது தவிர்க்கப்படும்” என்றும் கூறியுள்ளது.

இது அமெரிக்க கூற்றான சீனா அதன் நாணயமான யுவானின் (ரென்மின்பி என்றும் அழைக்கப்படுவது) மதிப்பை மறுமதிப்பீடு செய்ய மறுக்கிறது, அதையொட்டி அது ஏற்றுமதிகளை அதிகரித்து தன்னுடைய நாணய இருப்புக்களை அதிகரிக்கிறது என்பதுடன் இணைந்துள்ளது. சீனாவும் பல நாடுகளும் உண்மையான பிரச்சினை யுவான் இல்லை, அமெரிக்காவின் குறைந்த வட்டிவிகித ஆட்சியும் “பொருளாதாரத்தை எளிமைப்படுத்தும்” கொள்கையும்தான் —அதாவது கருவூலப் பத்திரங்களை அமெரிக்க மத்திய வங்கி வாங்குவதுதான்— என்றும் இவைதான் வெள்ளம் என நிதிய உலகின் மற்றப் பகுதிகளுக்குச் செல்ல வகை செய்து, எழுச்சி பெறும் சந்தைகள் எனக் கூறப்படுபவற்றில் சொத்துக் குமிழிகளை ஏற்படுத்தி வருகிறது என்றும் வலியுறுத்தியுள்ளன.

இதையொட்டி அறிக்கையானது இந்த எதிர்ப்புக்களுக்கு விடையிறுக்கும் வகையில் சில கருத்துக்களை கூறியுள்ளது.

“முன்னேறிய பொருளாதாரங்கள், கையிருப்பு நாணையங்களைக் கொண்டவை உட்பட [அதாவது அமெரிக்கா], மிகவும் எச்சரிக்கையுடன் நாணய மாற்றுவிகிதத்தில் கூடுதல் கொந்தளிப்பு மற்றும் ஒழுங்கீன நடவடிக்கைகள் குறித்து இருக்கும். இந்நடவடிக்கைகள் சில எழுச்சி பெறும் சந்தைகள் எதிர்கொள்ளும் மூலதனப் பாய்வுகளில் மிகுந்த கொந்தளிப்புத் தன்மை இடரைக் குறைக்கும்.”

கூட்டம் நடப்பதற்கு முன்னதாக, பங்கு பெறும் நாடுகளுக்கு G20 உறுப்பு நாடுகள் தங்கள் பற்றாக்குறைகள் அவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறிப்பிட்ட பங்கிற்குக் கீழே இருக்குமாறு செய்யும் கொள்கைகளைத் தொடர வேண்டும் என்று கூறி ஒரு கடிதத்தை அமெரிக்க நிதி மந்திரி திமோதி கீத்நெர் எழுதினார். குறிப்பான எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை என்றாலும், அமெரிக்க அதிகாரிகள் அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவிகிதத்தையொட்டி இருக்க வேண்டும் என்று குறிப்புக் காட்டியிருந்தனர்.

பைனான்சியல் டைம்ஸ் வலைத் தளத்தில் வந்துள்ள ஒரு கட்டுரையின்படி, Gavyn Davies பல விதிவிலக்குகள் கருத்திற்கொள்ளப்பட்டபின், ஒரு நாடு தான் “அசாதாரண உபரி” க்குழுவில் இருப்பதாக—அதாவது சீனா—குறிப்பிட்டார். “அமெரிக்கத் திட்டம் பல நாடுகளுக்கும் பொருந்தும் மொழியில் எழுதப்பட்டாலும், இது முக்கியமாக ஒரு நன்கறிந்த இருதரப்பு இலக்கிற்குத்தான் உரைக்கப்படுகிறது” என்று அவர் எழுதினார்.

திட்டத்தைப் பற்றி பகிரங்கமாக சீனா கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. ஆனால் ஜேர்மனி மற்றும் ஜப்பான் என்று அதிக ஏற்றுமதி உபரிகள் உள்ள நாடுகளிலிருந்து எதிர்ப்புக்கள் வந்தன. ஜப்பானின் நிதி மந்திரி யோஷிஹிகோ நோடா குறிப்பிட்ட எண்ணிக்கை காட்டப்படும் இலக்குகளைச் செயல்படுத்துவது கடினமாக இருக்கும் என்றார்.

தங்கள் நாட்டின் உபரியானது போட்டித்தன்மையின் அடையாளம் என்றும் நாணய மதிப்புடன் தொடர்பு கொண்டிருக்கவில்லை என்றும் ஜேர்மனிய அதிகாரிகள் கூறினர். அமெரிக்காவை இலக்கு கொண்ட ஒரு சாடலில், ஜேர்மனிய பொருளாதார மந்திரி ரெய்னர் ப்ரூடெரி கூறினார்: “ஒரு சந்தைப் பொருளாதார நோக்கத்தை இலக்கு கொள்ள வேண்டுமே ஒழிய கட்டுப்பாட்டின் கீழ் வரும் பொருளாதாரத்தை அல்ல.”

இத்தகைய நிலைப்பாட்டை எதிர்கொள்கையில், அறிவிப்பு குறிப்பிட்ட இலக்குகள் பற்றி குறிப்பு ஏதும் காட்டவில்லை. G20 நாடுகள் “மிக அதிக சமச்சீரற்ற நிலையைக் குறைக்க உதவும் முழு அளவுக் கொள்கைகளை தொடர்வதோடு, கணக்கில் இருக்கும் சமச்சீரற்ற தன்மையை ஏற்கக்கூடிய தரங்ஙளில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளும்” என்று கூறியது. “தொடர்ந்த அதிக சமச்சீரற்ற தன்மைகள் இருப்பது ஏற்கப்பட்டுள்ள வழிகாட்டி முறைகளுக்கு எதிராக மதிப்பீடு செய்யப்படும், அதையொட்டி அவற்றின் தன்மை மற்றும் மூல காரணங்கள் மதிப்பிடப்பட நேரிடும், அதே நேரத்தில் தேசிய மற்றும் பிராந்திய நிலைமைகள், பெரும் பொருள் உற்பத்தி நாடுகளின் நிலை உட்பட பலவும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்பதும் உணரப்பட்டுள்ளது.”

SC First National Bank Korea வில் பொருளாதார வல்லுனராக இருக்கும் Oh Suk Tae ப்ளூம்பேர்க்கிடம் கூறினார்: “நாணயக் கொள்கையின் விதிகள் தெளிவற்று ஆனால் பரந்த தன்மையைக் கொண்டுள்ளவை. எனவே இவை பலவிதமாக விளக்கம் கொடுக்கப்படலாம், ஒவ்வொரு நாடும் சந்தையில் பங்கு பெறுவோரும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு.”

வேறுவிதமாகக் கூறினால் முடிந்துவிட்டது என்பதற்கு முற்றிலும் எதிரிடையாக நாணயப் போர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது எனலாம்.

மேலும் நாணய மோதலே உலக முதலாளித்துவப் பொருளாதாரத்தின் ஆழ்ந்த பிரச்சினைகளின் ஒரு வெளிப்பாடுதான். முக்கிய முதலாளித்துவ நாட்டுப் பொருளாதாரங்கள் நிதிய நெருக்கடியின் வெடிப்பிற்கு முன்பிருந்ததைவிட, 2008 ஆரம்பத்திலிருந்த தரங்களின் போக்கில் இருந்து 10 சதவிகிதம் குறைவாக வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கையில், பெருகிய முறையில் உலகச் சந்தைகளுக்கான ஆழ்ந்த மோதல் பெருகியுள்ளது.

இது நாணய மாற்று விகிதப் போரானது ஒரு சர்வதேச வணிகப் போருக்கு முன்னோடியாக இருக்கலாம் என்ற அச்சங்களுக்குத்தான் வகை செய்துள்ளது.

இந்தக் கவலைகள் பாங்க் ஆப் இங்கிலாந்தின் கவர்னர் மெர்வின் கிங் கடந்த செவ்வாயன்று கூறிய ஒரு முக்கிய உரையில் வெளிப்பட்டன. மீட்பிற்கான முயற்சிகள் “வணிகத்திலுள்ள சமச்சீரற்ற தன்மைகளினால் தடைக்கு உட்படுகின்றன, அவை மீண்டும் வளர்ச்சி பெறுகின்றன” என்று கிங் எச்சரித்தார். “முக்கிய சக்திகளிடையே கொள்கைகள் குறித்து உடன்பாடு ஏற்பாடவிட்டால், மோதல் மறுக்க முடியாத குறைந்த அளவு உலக உற்பத்தியை ஏற்படுத்திவிடும், அதையொட்டி அனைத்து நாடுகளும் மோசமான விளைவுகளைக் காணும்.”

சர்வதேச நாணய நிதியமுறை பெரும் உபரி மற்றும் பற்றாக்குறையுடைய நாடுகள் நேரடி மோதலுக்கு இடம் தரும் கொள்கைகளை தொடர்வதால் “சிதைந்துவிட்டது”. “எனவே இப்பிரச்சினையில் சீனா மற்றும் அமெரிக்காவிற்கு இடையே இருதரப்பு மோதல் கூறுபாடுகளைவிட அதிகம் உள்ளன.” அக்டோபர் 2008 ஆண்டில் G20 கூட்டத்தில் “ஒன்றாக இணைந்து உழைக்க வேண்டும் என்ற வலுவான உறுதிப்பாடு இருந்தது”, ஆனால் அது “இப்பொழுது குறைந்து போய்விட்டது” என்றும் கிங் கூறினார்.

“கூட்டான நலன்களுக்கு செயல்படவேண்டும் என்பது இன்னும் உணரப்படவில்லை, அது உணரப்பட்டாலொழிய, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகள் வணிகப் பாதுகாப்பு முறையை உள்நாட்டுக் கருவியாக கொண்டு தேவையான மறுசீரமைப்பை கொண்டுவரச் செயல்படும் நாள் அதிக தூரம் இல்லை. 1930 களில் நடந்ததுபோல், அது நடந்தால், உலகம் முழுவதும் செயற்பாடுகளில் பேரழிவு தரும் சரிவு ஏற்படும். ஒவ்வொரு நாடும் அழியும் தன்மை கொடுக்கும் விளைவுகளைச் சந்திக்கும்.”

“மாபெரும் பேரம்” முக்கிய பொருளாதாரங்களிடையே தேவை, அத்தகைய பேரம் நடக்க வேண்டிய அரங்கம் தான் G20 என்று கிங் கூறினார்.

ஆனால் அவ்வாறு நடந்துவிடும் என்ற நம்பிக்கை அவரிடம் இருந்ததாகத் தோன்றவில்லை. பிரிட்டனின் தொழிற் புரட்சி பிறந்த இடமான West Midlands Black Countryல் தன்னுடைய உரையை அளித்த கிங் “சர்வதேசக் கூட்டங்களின் வாடிக்கையான சுற்றுக்களை உண்மையான உடன்பாட்டிற்கு மாற்றுவதற்கு ஒரு புரட்சி தேவை, மாறுபட்ட தன்மை கொண்டிருக்க வேண்டும், ஆனால் எப்படியும் Black Country வரைபடத்தில் இடம் பெற்றதைப் போல் முக்கியத்துவம் வாய்ந்திருக்கும்.” என்றார் கிங்.

ஆனால் சர்வதேச ஒத்துழைப்பை உறுதிப்படுத்தக்கூடிய அத்தகைய “புரட்சி” முதலாளித்துவ முறையின் கீழ் இயலாது. ஏனெனில் ஆழ்ந்த, பேரழிவுத் திறன் உடைய மோதல்களானது இலாபமுறை மற்றும் தேசிய அரச அமைப்பு முறையில் தோன்றி, அவற்றில் வேரூன்றியவை.

உலகப் பொருளாதாரமானது முதலாளித்துவத்தின் கீழ் ஒன்றுபடுத்தப்பட முடியாது. அப்பணி சர்வதேச சோசலிசப் புரட்சியினால்தான் முடியும்.