சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

French strike movement at a crossroads

பிரெஞ்சு வேலைநிறுத்த இயக்கம் தீர்மானகரமான நிலையில்

27 October 2010

Use this version to print | Send feedback

பிரான்சில் ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியின் ஓய்வூதிய வெட்டுகளுக்கு எதிரான வேலைநிறுத்த இயக்கம் அரசியல் ரீதியாக தீர்மானகரமான நிலையில் நிற்கிறது. சார்க்கோசிக்கு ஆழமான அவப்பெயரும், சிக்கன நடவடிக்கைகளுக்கு வெகுஜன வெறுப்பும் இருந்த போதிலும், அரசாங்கமானது தாக்குதலை தொடர்கிறது, சமீபத்தில் ஓய்வூதிய மசோதா செனட்டில் நிறைவேறியிருப்பதற்கு இணங்கிச் செல்ல தொழிலாளர்களை கோருகிறது.

இதற்கான பிரதானக் காரணம் தொழிற்சங்கங்களின் மற்றும் “இடது” என்பதாய் அழைக்கப்படும் கட்சிகளின் துரோகம் தான். தொழிலாளர்களை போராட்டத்தைக் கைவிட நெருக்கும் ஊடக பிரச்சாரத்திற்கு இடையே, தொழிற்சங்க நிர்வாகிகள் தாங்கள் வேலைநிறுத்தங்களை முடிவுக்குக் கொண்டு வர விரும்புவதை சமிக்ஞையளிக்கிறார்கள். திங்களன்று இரவு France2 தொலைக்காட்சியில், உழைப்பாளர் பொதுக் கூட்டமைப்பின் (CGT) தலைவரான பேர்னார்ட் திபோ, இப்போது முதல் எதிர்ப்பு “பிற வடிவங்களை எடுக்க” இருப்பதாக அறிவித்தார்.

பிரெஞ்சு மற்றும் ஜனநாயக உழைப்பாளர் கூட்டமைப்பின் (CFDT) தலைவரான François Chérèque சார்க்கோசியின் வெட்டுகள் “இன்னும் தூய்மைப்படுத்தத்தக்கவை” என்றும் “நாடாளுமன்ற விவாதம் ஒரு முடிவை நெருங்கும்போது, நாங்கள் இன்னொரு கண்ணோட்டத்தை எடுப்போம்” என்றும் மேலும் சேர்த்துக் கொண்டார்.

பொருளாதார அமைச்சரான கிறிஸ்டின் லகார்ட் நேற்று சங்கங்கள் கூறிய கருத்துகளை வரவேற்றார், இந்த போராட்டம் ஒரு “திருப்புமுனையில்” நிற்பதாய் தான் கருதியதாக அவர் கூறினார். வேலைநிறுத்தம் செய்பவர்கள் வேலைக்குத் திரும்பும் நிர்ப்பந்தமுறுவார்கள் (அரசியல்ரீதியாகத் தனிமைப்பட்டு ஊதிய இழப்பு உணர்வும் எழும் நிலையில்) என்று அரசின் தலைமை அலுவலர்கள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் அனைவரும் எதிர்பார்த்திருக்கின்றனர்.

வேலைநிறுத்தங்கள் சக்திவாய்ந்த பொருளாதார தாக்கங்களை அளிப்பது தொடர்கிறது என்கிற உண்மை நிலையிலும் கூட தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகள் வெட்கமில்லாமல் அவற்றைக் காட்டிக் கொடுக்கின்றனர். துறைமுகங்கள் இன்னும் மூடியே உள்ளன, நகராட்சி மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் தங்களது வேலைப் புறக்கணிப்பை தொடர்கின்றனர், அத்துடன் பிரான்சின் அநேக எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் (மறியல் போராட்டங்களை உடைத்து ஊழியர்களை வேலைக்குத் திரும்பச் செய்ய மீண்டும் மீண்டும் போலிசார் தாக்குதல் நடத்தியும்) இன்னும் வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து கொண்டு தான் உள்ளன. நேற்று சார்க்கோசியின் வெட்டுகளுக்கு எதிராக 70,000க்கும் அதிகமான இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர், பிரான்சின் எரிபொருள் விநியோக மையங்களில் சுமார் 25 சதவீதம் இன்னும் காலியாகத் தான் உள்ளன.

சார்க்கோசியையும் செனட்டையும் வெட்டுகள் குறித்து தொழிற்சங்கங்களுடன் மறுபேச்சுவார்த்தைக்கு கொண்டுவருவதற்கான அழுத்தம் கொடுக்கும் முயற்சியாய், வேலைநிறுத்தங்களை இந்த சக்திகள் வரையறுத்தன. அரசாங்கத்திற்கு நெருக்குதலளிக்காமல், மாறாக அதனைத் தோற்கடித்து கீழிறக்கும் வெகுஜன தொழில்துறை நடவடிக்கையை அவை எதிர்த்தன. வேலைநிறுத்த இயக்கத்திற்குப் பெருவாரியான வெகுஜன ஆதரவு கிட்டி சார்க்கோசிக்கான மக்கள் ஆதரவு வீழ்ச்சி கண்டிருந்த போதும் இந்நிலையை அவை கொண்டிருந்தன.

தொழிற்சங்கங்கள் அரசாங்கத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தன, வெகுஜன இயக்கத்தை வலுவிழக்கச் செய்வதற்கும் அதனை மண்டியிடச் செய்வதற்குமான சிறந்த வழி குறித்து திரைக்குப் பின்னால் விவாதித்துக் கொண்டிருந்தன என்பதில் சந்தேகத்திற்கிடமில்லை. ஏற்கனவே எண்ணெய் கிடங்குகள் மற்றும் சுத்திகரிப்பு மையங்களில் தொழிலாளர்கள் மேற்கொண்ட மறியலுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்ட வேலைநிறுத்த உடைப்பு நடவடிக்கைகளை எதிர்த்து தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட மறுத்தபோதே சரணாகதிக்குத் தயாராய் இருப்பதை அவை சமிக்ஞையளித்து விட்டன.

இயக்கத்தை தடுமாறச் செய்ய சங்கங்களை சார்ந்திருந்த சார்க்கோசி, மக்கள் விருப்பத்திற்கு பகிரங்கமான எதிர்ப்பில் உறுதியாய் நின்றார். இப்போது “தவிர்க்கமுடியாததை” ஏற்றுக் கொள்ள தொழிற்சங்கத் தலைவர்கள் ஆலோசனையளிக்கின்றனர்.

இந்த துரோகம் தடுக்கப்பட்டு வாழ்க்கைத் தரங்களை கிழித்தெறிவதற்கு எதிரான போராட்டம் முன்செலுத்தப்பட வேண்டுமென்றால், இந்த நிகழ்வுகளில் இருந்தான அடிப்படையான அரசியல் படிப்பினைகளை தொழிலாளர்களும் இளைஞர்களும் வரைந்தாக வேண்டும். தொழிற்சங்கங்களுக்கும், உத்தியோகபூர்வ “இடது” கட்சிகளுக்கும், மற்றும் “அதி இடது” என்பதாக அழைக்கப்படும் கட்சிகளுக்கும் (இவற்றின் வேலையே வர்க்க போராட்டத்தை கழுத்தை நெரித்து ஆளும் வர்க்கம் தனது தாக்குதல்களைத் திணிப்பதற்கு வழிவகைசெய்து தருவது) இடையில் ஒரு அரசியல்ரீதியான உழைப்புப் பிரிவினை உள்ளது.

தொழிற்சங்கங்கள், தொழிலாள வர்க்கத்தை பாதுகாப்பதில் இருந்து வெகு விலகி, முதலாளித்துவம் மற்றும் அரசின் மிக முக்கிய அரணாக சேவை செய்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாய் தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர இயக்கம் எழுவதைக் கண்டு அஞ்சி, பொருளாதார நெருக்கடியின் முழுச் சுமையையும் தொழிலாளர்கள் மீது சுமத்தும் நிதிப் பிரபுத்துவத்தின் முயற்சிகளை அவை நனவுடன் ஆதரிக்கின்றன. அதனால் தான் சார்க்கோசி அரசாங்கத்தை கீழிறக்குவதற்கான ஒரு பொது வேலைநிறுத்தத்தை அவை தீர்மானத்துடன் எதிர்க்கின்றன.

தொழிற்சங்கங்கள் மீது பெருகும் ஏமாற்றத்தையும், அவற்றிடம் இருந்து தாங்கள் விலகி நிற்பதையும், அரசாங்கத்திற்கு எதிராய் போராட தங்களது செறிந்த சமூக சக்தியை பயன்படுத்துவதற்கான தங்களது விருப்பத்தையும் தொழிலாளர்கள் விளங்கப்படுத்தியுள்ளனர்.

எண்ணெய் மற்றும் துறைமுகத் தொழிலாளர்களின் விடாப்பிடியான வேலைநிறுத்தங்களும் மறியல்களும் பெரும்பாலும் தொழிற்சங்கங்களின் முயற்சியையும் தாண்டி நடந்ததே அன்றி, தொழிற்சங்கங்களின் முயற்சியால் நடந்ததல்ல.

உத்தியோகபூர்வ “இடது கட்சிகள்” - சோசலிஸ்ட் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி - முறையே CFDT மற்றும் CGT தொழிற்சங்க அதிகாரத்துவங்களுடன் நெருக்கமாகச் செயல்படுகின்றன.

இது தான் புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி (NPA) தலைமையிலான நடுத்தர வர்க்க, போலி சோசலிச “அதி இடது” அமைப்புகளை முதலாளித்துவ ஊடகங்கள் ஊக்குவிப்பதன் காரணம். அரசியல் நனவு அபிவிருத்தியுறுவதை தடுப்பதும், பாரிய எதிர்ப்பே தானாக அரசாங்கத்தையும் ஆளும் வர்க்கத்தையும் நகரச் செய்து விடும் என்று வலியுறுத்துவதும், அத்துடன் தொழிற்சங்கங்களின் துரோகத்தை மூடிமறைப்பதுமே இந்த அமைப்புகளின் பாத்திரம். தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் “இடது” வக்காலத்துவாதிகளாக, அவை முதலாளித்துவ வர்க்கத்திற்கு தொழிலாளர்களுக்கு எதிரான போரில் பெருகிய முறையில் முக்கிய சொத்துகளாக உருவாகியுள்ளன.

வேலைநிறுத்த இயக்கத்தைக் காட்டிக் கொடுக்கும் தொழிற்சங்கங்களின் முயற்சிகளில் NPA முழுமையாகத் துணைபோயிருப்பதற்கு சாட்சியமாய் அந்த அமைப்பின் தலைமைச் செய்தித் தொடர்பாளரான ஓலிவியே பெசென்ஸனோ கடந்த பல நாட்களாக மௌனம் காக்கிறார். இது முழுமையாக தொழிலாள வர்க்கத்தை நோக்குநிலை பிறழச் செய்வதிலும் நிராயுதபாணியாக்குவதிலும் NPAவின் பாத்திரத்தின் வழிவந்ததாகும்.

இதனிடையே, தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகளுக்கு பணிந்து நடப்பதையும் சார்க்கோசியிடம் சரணடைவதையும் உபதேசிப்பதற்காக NPA “புத்திஜீவிகளுக்கு” முதலாளித்துவ ஊடகங்கள் விளம்பரமளிக்கின்றன. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களிலான போலிஸ் தாக்குதல்களுக்கு எதிராக “அடையாள” ஆர்ப்பாட்டங்களை மட்டுமே நடத்தவிருப்பதாக CGT அறிவித்த பின்னர், NPA கல்வியாளரான Philippe Corcuff தொழிலாளர்கள் தங்களை “விளையாட்டான” நடவடிக்கைகளுக்கு மட்டுப்படுத்திக் கொள்ள தான் ஆலோசனையளித்ததாய் Le Monde இடம் கூறினார்.

ஒரு புதிய, புரட்சிகர அரசியல் நோக்குநிலையின் - செனட் வாக்களிப்புக்கான மறுதலிப்பு மற்றும் சார்க்கோசி அரசாங்கத்தை கீழிறக்கி அதனை ஒரு தொழிலாளர் அரசாங்கத்தைக் கொண்டு இடம்பெயர்ப்பதற்கான போராட்டம் - அடிப்படையில் மட்டுமே வேலைநிறுத்தங்கள் தொடரவும் விரிவுபடுத்தப்படவும் முடியும். இதற்கு தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் “இடது” என்பதான கட்சிகளுக்கு எதிரான தொழிலாளர்களின் கிளர்ச்சி அவசியமாய் உள்ளது.

வேலைநிறுத்த இயக்கத்தை விரிவுபடுத்தவும், முதலாளித்துவ கட்சிகள், உத்தியோகபூர்வ “இடது” மற்றும் வலதை சேர்ந்த கட்சிகள் இவை அனைத்தில் இருந்தும் சுயாதீனப்பட்டு தொழிலாள வர்க்கத்தின் ஒரு அரசியல் தாக்குதலுக்காக போராடவும் சுயாதீனமான போராட்ட நடவடிக்கைக் குழுக்களை அமைக்க உலக சோசலிச வலைத் தளம் தொழிலாளர்களை அழைக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாய், வேலைநிறுத்த இயக்கமானது தொழிலாள வர்க்கத்தில் ஒரு புதிய புரட்சிகரத் தலைமையை கட்டுவதற்கான போராட்டத்தின் மையப்புள்ளியை மேலுயர்த்தியுள்ளது. ஒரு தெளிவான முழுமையாக சிந்திக்கப்பட்ட வேலைத்திட்டமும் முன்னோக்கும் இல்லாதிருப்பதே வெகுஜன இயக்கத்தின் மாபெரும் பலவீனமாய் உள்ளது. சார்க்கோசி அரசாங்கம் பலவீனமானதாகவும் தனிமைப்பட்டும் இருக்கும் அதே நேரத்தில் தனது நோக்கங்கள் மற்றும் வழிமுறைகள் குறித்த உயர்ந்த அளவிலான நனவைப் பொறுத்தவரை தொழிலாளர்களைக் காட்டிலும் அனுகூலமான நிலையில் உள்ளது.

ஜனநாயகத்தின் பொறிகளை எல்லாம் ஒருபக்கமாய் தூக்கியெறிந்தால் தான் பிரெஞ்சு முதலாளித்துவம் தொழிலாள வர்க்கத்தை வறுமையில் தள்ளி உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடியில் இருந்து பிழைக்க முடியும் என்று கோருகின்ற நிதி மூலதனத்தின் சாதனமாக சார்க்கோசி பகிரங்கமாகவும் இரக்கமற்றவராயும் ஆட்சி செலுத்துகிறார்.

ஐரோப்பாவெங்குமான அரசுகள், வங்கிப் பிணையெடுப்புக்கும் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்திற்கும் செலுத்துவதற்கு பாரிய பற்றாக்குறையை நடத்திக் கொண்டிருக்கையில், முன்பை விடவும் அதிகமாக அவை கடனளிப்பவர்களின், அதாவது இந்த நெருக்கடியில் இருந்து ஆதாயம் பெற்ற பெரிய வங்கிகள் மற்றும் பில்லியனர்களின், தயவில் இருக்கின்றன. போட்டித் திறனைக் கூட்டுவதற்காகவும் தனது கடனில் ஒரு பாய்வைத் தடுப்பதற்காகவும் ஒவ்வொரு அரசும் ஊதியங்கள் மற்றும் சமூக செலவினங்களை வெட்டுவதன் மூலம் தனது பற்றாக்குறையை குறைக்க மற்ற அனைத்து நாடுகளுடனும் போட்டியிடுகிறது. இதில் ஒவ்வொரு நாட்டிலும் தொழிற்சங்கங்களின் ஆதரவு அவற்றுக்கு இருக்கிறது.

பிரிட்டனில் புதிய வெட்டுக்கள் 81 பில்லியன் பவுண்டுகளை எட்டலாம் என்றும் ஒரு மில்லியன் வேலைவாய்ப்புகளை நீக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படும் நிலையில், சார்க்கோசியின் தற்போதைய வெட்டுக்கள் பிரெஞ்சு தொழிலாள வர்க்கத்தின் மீது வரவிருக்கும் தாக்குதல்களில் ஒரு தவணை மட்டுமே ஆகும்.

கடுமையான அவமதிப்பைப் பெற்ற அரசாங்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்புக்கு எதிரான அரண்களாய் தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் “இடது” ஆதரவாளர்களை சார்ந்து இத்தகைய கொள்கைகளை முன்னெடுக்க முடிந்துள்ளது. இந்த இளவேனில் காலத்தின் கிரீக் கடன் நெருக்கடியின் போது, கிரீஸ் மற்றும் ஸ்பெயினின் சமூக ஜனநாயகக் கட்சி அரசாங்கங்கள் பாரிய வெட்டுகளை செய்தன, அதே சமயத்தில் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் எதிர்ப்புகளை ஒரு சில தேசிய அளவிலான ஒருநாள் ஆர்ப்பாட்டங்களுடன் மட்டுப்படுத்தின. பிரிட்டனில், பிரதமர் டேவிட் கமரூனின் வெட்டுக்களுக்கு எந்த எதிர்ப்பையும் ஒழுங்கமைக்கப் போவதில்லை என்பதை தொழிற்சங்கங்கள் தெளிவுபடுத்தியிருக்கின்றன.

ஆளும் வர்க்கத்தின் எதிர்புரட்சி வேலைத்திட்டத்தை எதிர்கொள்ள தொழிலாளர்களுக்கு அவர்களது சொந்த புரட்சிகர வேலைத்திட்டம் அவசியமாகும், இதன் அர்த்தம் ஒரு புதிய புரட்சிகர தலைமையைக் கட்டுவது என்பதாகும்.

தொழிலாள வர்க்கம் முகம் கொடுக்கும் அரசியல் கடமைகள் - உலகெங்குமான அரசாங்கங்களை கீழிறக்குவது மற்றும் நிதிப் பிரபுத்துவத்தை பறிமுதல் செய்வது- அதிகாரத்துக்காக போராடுகின்ற ஒரு வெகுஜன சோசலிச இயக்கத்தை அபிவிருத்தி செய்வதை அவசியமாக சுமத்துகின்றன. இந்த முன்னோக்குக்காகப் போராடும் ஒரே கட்சி நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) ஆகும். உலக சோலிச வலைத் தளத்தை படிப்பதற்கும் தொடர்பு கொள்வதற்கும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் புதிய புரட்சிகரத் தலைமையை கட்டுவதற்கான போராட்டத்தைக் கையிலெடுப்பதற்கும் பிரெஞ்சுத் தொழிலாளர்களையும் மாணவர்களையும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.