சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Strikes continue in France against pension cuts

பிரான்சில் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான போராட்டம் நீடிப்பு!

By Alex Lantier
25 October 2010

Use this version to print | Send feedback

தேசிய மற்றும் பிராந்திய அதிகாரங்ககளால் பிறப்பிக்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டத்திற்கு எதிரான உத்தரவுக்கிடையேயும், ஜனாதிபதி நிக்கோலா சார்கோசியின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான போராட்ட நடவடிக்கை அதிகரிப்பை வார இறுதிக்கு மேலாகவும் தொழிலாளர்களும், மாணவர்களும் தொடர்ந்தனர். அனைத்து புனிதர்களின் வார விடுமுறையின் முதல் நாளான, இன்று எண்ணெய் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடிய ஆபத்து குறித்துதான் அரசாங்கம் குறிப்பாக கவலையுற்றது.

பிரான்சின் 12 சுத்திகரிப்பு ஆலைகள் இன்னும் அதிகாரபூர்வமாக போராட்டத்தில் இருக்கின்றபோதிலும், குறைந்தது மூன்று — Fos, Donges மற்றும் Grandpuits — ஆலைகளில் போலீசார் நுழைந்து தொழிலாளர்களை அவர்களது போராட்டத்தை நிறுத்துமாறும், பெட்ரோல் நிலையங்களுக்கான மறுவிநியோகத்திற்கு எண்ணெயை விநியோகம் செய்யுமாறும் கட்டாயப்படுத்தியுள்ளனர். ஆனாலும் அனைத்து வாரத்திலும் போராட்டத்தை நிறுத்த Donges மற்றும் Feyzin சுத்திகரிப்பு ஆலைகள் அளித்த வோட்டளிப்புடன், எண்ணெய் கிடங்குகளின் போராட்டங்களும், தடைகளும் தொடரத்தான் செய்தன.

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் மேலும் பெட்றோல் கோருவதை தடுக்க Donges தொழிலாளர்களுக்கான வழக்கறிஞர் நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்தார். பிரான்ஸ் ஜனநாயக தொழிலாளர் கூட்டமைப்பின் (CFDT) Donges கிளை அதிகாரி Dmitri Guiller, சுத்திகரிப்பு ஆலைகளின் அனைத்து தொழிலாளர்களும் மறுகேள்விக்கு உட்பட்டுபடுத்தப்பட்டதாக Liberation இடம் தெரிவித்தார்.

மேலும் எண்ணெய் டேங்கரிலிருந்து அதன் எண்ணெயை இறக்கமுடியாதவாறு அவற்றின் இழுவையை தடுக்கும் விதமாக Donges துறைமுகத்தில், நான்கு இழுவைகளை 100 போராட்டக்காரர்களும், எதிர்ப்பாளர்களும் தடுத்துள்ளனர்.

பிரெஞ்சின் ஐந்து பெட்ரோல் நிலையங்களில் ஒன்றே ஒன்றில் மட்டுமே எண்ணெய் இல்லை என்று கடந்த வார இறுதியில் அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில், சமூக விவகாரங்களுக்கான சார்கோசியின் ஆலோசகர் Raymond Soubie, " மொத்தத்தில் நான்கு பெட்ரோல் நிலையங்களில் ஒன்றில் பெட்ரோல் விநியோகம் இல்லை" என்று Europe 1 விடம் ஞாயிற்றுக்கிழமை கூறியுள்ளார். ஆனாலும், "பிரான்சின் முக்கிய நெடுஞ்சாலைகளிலுள்ள 350 பெட்ரோல் நிலையங்களில் 5 நிலையங்கள் மட்டுமே பெட்ரோல் இல்லாமல் இருக்கும்" என்று அவர் கூறியுள்ளார்.

சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (CPGME) பொது கூட்டமைப்பு தலைவர் Jean-François Roubaud, எண்ணெய் போராட்டங்களை "பொருளாதார தீவிரவாதம்" என்று கண்டித்துள்ளார்.

மார்செய் அருகேயுள்ள Bouches-du-Rhone துறையில் உள்ள தலைமை போலீஸின் அலுவலகம், குப்பை அள்ளும் தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு திரும்ப நிர்ப்பந்திக்கும் விதமாக உத்தரவு ஒன்றை வெளியிட்டது. அது அறிவித்தது: " Aygalades மற்றும் la Capelette ன் மையங்களுக்கான முகவர்களுக்கான வேண்டுகோள் அறிவிக்கை. இது அக்டோபர் 25 திங்கள் முதல் அக்டோபர் 30 சனிக்கிழமை வரை அமலில் இருக்கும்."

அக்டோபர் 11 லிருந்து பொதுத் துறை குப்பை அள்ளும் தொழிலாளர்கள், "ஓய்வூதிய வெட்டுக்கள் திரும்ப பெறப்படும் வரை முழு போராட்டத்தில்" ஈடுபட்டுள்ளதாக உள்ளூர் FO(தொழிலாளர் சக்தி-Workers’ Power)இன் உள்ளூர் கிளை கூறியுள்ளது. புதன்கிழமையன்று, Brignoles லிருந்து வந்திருந்த இராணுவத்தின் குடிம பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த 150 உறுப்பினர்களுக்கு மார்செயில் குப்பைகளை அள்ளுமாறும், நகரின் மையப்பகுதிகளிலுள்ள வர்த்தக பகுதிகளில் கவனம் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டது.

ரயில்வேக்களிலும் போராட்ட்டங்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. 10 அதிவேக ரயில்களில் 8இம், உத்தேசமாக பாரீஸ் புறநகர் பகுதிகளுக்கான இரயில் போக்குவரத்தில் பாதியளவு உத்தரவாதமாக இருக்கும் என்று அரசாங்கம் அறிவித்தது. சில குறிப்பிட்ட பல்கலைக்கழகங்களில் விடுமுறை இல்லாமல் போனால், விடுமுறையின்போது போராட்டங்களை தொடர முயற்சிக்கவோ அல்லது அரசாங்கத்திற்கான வெகுஜன எதிர்ப்பை தொடருவதை வலியுறுத்துவதற்கான தங்களது நடவடிக்கையை அதிகப்படுத்தவோ செய்யப்போவதாக பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்நிலை பள்ளி மாணவர்கள் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர். Nanterre ல் உள்ள Paris-10 பல்கலைக்கழகம் இலக்கிய மற்றும் மனிதயின கட்டடங்களில் நடைபெற்ற 650 மாணவர்கள் கலந்துகொண்ட ஒரு பொதுச் சபைக் கூட்டத்தில், மறியலுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது.

பிரெஞ்சு பல்கலைக்கழக மாணவர்களின் தேசிய சங்க (UNEF) அதிகாரிகள், உயர்நிலை பள்ளிகள் மாணவர்களின் தேசிய சங்கம் (UNL), மற்றும் சுதந்திர மற்றும் உயர்நிலை பள்ளி மாணவர்களின் ஜனநாயக கூட்டமைப்பு (FIDL) ஆகியவை, 2006 ல் First Job Contract (CPE) க்கு எதிராக நடந்த இளைஞர்களின் போராட்டத்தை விடுமுறைகள் தடுத்து நிறுத்திவிடவில்லை என்று குறிப்பிடுகின்றன. நாளை ஒரு தேசிய இளைஞர் போராட்டத்திற்கு அவர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.

செனட் மற்றும் தேசிய சபையின் மறு ஆய்வுக்குப் பின்னர் ஓய்வூதிய சட்டங்கள் ஒரு சமச்சீரான ஆணையத்தினால் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தினமான- அக்டோபர் 28 வரை அனைத்துவிதமான விரிவான போராட்டங்களை தள்ளிவைத்த தேசிய தொழிற்சங்கத் தலைவர்களின் ஆதரவு இல்லாதபோதிலும், ஒன்று திரள்வது தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்த முடிவுடன்தான், போராட்டத்தை முறியடிக்க அரசாங்கத்தால் குறிவைக்கப்பட்டுள்ள தொழிலாளர்களை பாதுகாப்பதற்காக, தொழிற்சாலைகளில் போராட்டத்தை அபிவிருத்தி செய்ய மாட்டோம் என்று தொழிற்சங்கங்கள் சமிக்ஞை காட்டிக்கொண்டிருக்கின்றன.

இதில், பிரெஞ்சின் "இடதுகள்" என்று சொல்லப்படுபவர்களின் ஆதரவும் அவர்களுக்கு கிடைத்தது. பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF)யின் முதல் செயலர் Pierre Laurent, " நாம் புகார் கூறக்கூடாது. பதட்டமான ஒரு சூழ்நிலையில் தொழிற்சங்கங்கள் அருமையான பணியை செய்துள்ளனர். அவர்களிடம் நாம் நம்பிக்கை கொண்டு, நம்மிடம் உள்ள அனைத்தையும் கைவிட வேண்டும்" என்று Le Monde இடம் கூறியுள்ளார்.

புதிய முதலாளித்துவ எதிப்புக் கட்சியின் Olivier Besancenot (NPA) தனது உரையை வாபஸ் பெற்று, அளவைக் குறைத்துக்கொண்டதாக Le Monde மேலும் குறிப்பிட்டது. அது எழுதுகிறது:" அக்டோபர் தொடக்கத்துடன் ஒப்பிடுகையில், தொழிற்சங்கங்களை பலவீனமானவை என்று வர்ணித்த Olivier Besancenot, அவற்றின் மீதான விமர்சனங்களை ஒதுக்கிவைத்துவிட்டு, 'புதிய மே 1968' க்கான அழைப்பை விடுத்துள்ளார்.

தொழிற்சங்கங்கள் மற்றும் "இடது" கட்சிகளின் சரணாகதியை நம்பி, எதிர்ப்பை தோல்வியடைந்துவிட்டதாக காண்பிக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. Journal du Dimanche பத்திரிகை, "ஓய்வூதியங்கள்—போரட்ட முடிவை நோக்கி" என்ற தலைப்பிலான கட்டுரை ஒன்றில், "நவம்பர் 15 அன்று" சட்டம் அமூல் ஆகும் என்று Soubie கூறியதாக தெரிவித்துள்ளது."தேசிய போராட்டங்களை வாய்மூடச்செய்வதற்காக" அரசியல் சாசன குழுவில், சட்டபூர்வ சரிபார்த்தலுக்காக அந்த சட்டத்தை அரசாங்கம் தாக்கல் செய்யும் என்று Soubie கூறியதாக அப்பத்திரிகை மேலும் கூறியுள்ளது.

போராட்டங்களுக்கு மகத்தான ஆதரவு இருப்பதை கருத்துக்கணிப்பு தொடர்ந்து காட்டுகிறது. Dimanche Ouest -France க்கான கருத்துக்கணிப்பு ஒன்றில், சார்க்கோசியின் ஓய்வூதிய குறைப்புகளுக்கு எதிரான போராட்டத்திற்கு 63 சதவிகித மக்கள் ஆதரவு, முன்னர் காணப்பட்ட 71 சதவிகிதம் எப்படியோ குறைந்துபோனது, இருப்பது தெரிகிறது. ஆனாலும், சார்க்கோசியின் ஆதரவு விகிதம் 29 சதவிகிதமாக ஒரு புதிய வீழ்ச்சியை அடைந்துள்ளது.

சார்கோசியின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான போராட்டத்தை தொடர்வதன் மூலம், தொழிலாளர்களும், மாணவர்களும் அரசாங்கத்திற்கு எதிராக ஒரு அரசியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது சார்க்கோசி அரசாங்கத்தை வீழ்த்தி, அதற்குப் பதிலாக ஒரு தொழிலாளர்கள் அரசாங்கத்தை அமர்த்துவதற்கான ஒரு பொது வேலை நிறுத்தத்திற்கு தயாராகவும், போராட்டத்தை பாதுகாக்கவும் தொடர, தொழிலாளர்கள் தாங்களாகவே சுயாதீனமான குழுக்களை அமைக்கவேண்டும் என்று உலக சோசலிச வலைத் தளம் அழைப்பு விடுக்கிறது.