சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Thousands protest in France vs. witch-hunt of Roma

ரோமா மக்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக பிரான்ஸில் ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டம்

By Antoine Lerougetel
6 September 2010

Use this version to print | Send feedback

Demo
உயர்பள்ளி மாணவர்களின் தேசியச் சங்கம்

ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் குடியேற்ற-எதிர்ப்பு, அடக்குமுறைக் கொள்கைகள் மற்றும் ரோமா சமூகங்களுக்கு எதிரான அவருடைய தாக்குதல்கள் ஆகியவற்றை எதிர்த்து 150 பிரெஞ்சு நகரங்களில் சனிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் கிட்டத்தட்ட 100,000 மக்கள் கலந்து கொண்டனர். “அனைத்துவித தவறுகளின் வடிவங்களையும் ஒடுக்கும் என் உறுதியான நடவடிக்கையை தொடர்வேன், பாதிக்கப்பட்டவர்கள் உரிமைகளைக் காப்பேன், இவற்றை எந்த சமூகத்தையும் இழிவுபடுத்தாமல் இதைச் செய்வேன்” என்று உள்துறை மந்திரி Brice Hortefeux ஆர்ப்பாட்டங்களுக்கு விடையிறுக்கும் வகையில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.

சார்க்கோசியின் பழமைவாத கோலிச அரசாங்கம் ஒரு ஆழ்ந்த நெருக்கடியில் உள்ளது. ஜனாதிபதி பற்றி கருத்துக் கணிப்புக்களில் மக்கள் கொடுக்கும் ஒப்புதல் 30 சதவிகிதத்தை ஒட்டித்தான் உள்ளது, கிட்டத்தட்ட 70 சதவிகித மக்கள் அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கை கொள்கைகளுக்கு எதிரான செப்டம்பர் 7ம் தேதி நடவடிக்கை தினத்திற்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆண்டு முழுவதும் பணி நீக்கங்கள், ஆலை மூடல்கள், ஊதியக் குறைப்புக்கள் இவற்றிற்கு எதிராக பரந்த வேலை நிறுத்தங்கள் மற்றும் பணியிட ஆக்கிரமிப்புக்கள் நடந்துள்ளன. அதே நேரத்தில் பெரும் ஊழல் அம்பலங்கள் முன்னாள் கோலிச ஜனாதிபதி ஜாக் சிராக், சார்க்கோசி மற்றும் சார்க்கோசியின் தொழில்துறை மந்திரி எரிக் வோர்த் ஆகியோரைப் பற்றி காளான்கள் போல வெளிவந்துள்ளன.

Sans papier
சுலோக அட்டைகள் கூறுவது: “நாயை மூழ்கடிக்க விரும்பவர்கள் முதலில் அதற்கு வெறி வந்து விட்டது என்று குற்றம் சாட்ட வேண்டும்.” (இடது பக்கம்), “தேசிய அடையாளம்: என்னுடைய இதயத் துடிப்பை நிறுத்திவிட்டது.”

கிரெநோபிளில் ஜூலை 31ம் தேதி இரு தனி நிகழ்வுகளில் பொலிஸ் ஒரு இளம் ரோமா மற்றும் ஒரு குடியேறிய இளைஞரைத் துப்பாக்கிச் சூட்டில் கொன்றதையடுத்து விளைந்த கலகங்களுக்குப் பின் பேசிய சார்க்கோசி அனைத்து சட்டவிரோத ரோமா முகாம்களையும் அகற்றுவதுடன் குடியேற்றக்காரர்களின் பிரெஞ்சு தேசிய குடியுரிமையை ஒரு நீண்டி பட்டியல் தவறான நடவடிக்கைகளுக்காக பறிக்கப்படும் என்றும் உறுதியளித்தார். தேசியக் குடியுரிமையை நீக்குதல் என்பது பரந்த அளவில் மார்ஷல் பிலிப் பெத்தானின் விஷி ஆட்சியைத்தான் நினைவுபடுத்துவதாக கருதப்படுகிறது. அந்த ஆட்சி நாஜி ஆக்கிரமிப்புடன் இரண்டாம் உலகப் போரின் போது ஒத்துழைத்திருந்தது. அந்தக் கைக்கூலி அரசாங்கம் ஆயிரக்கணக்கான யூதர்களையும் மற்ற “விரும்பத்தகாதவர்களையும்” நாடோடிகள் உட்பட, நாஜி மரண முகாம்களுக்கு அனுப்பி வைத்தது.

அவருடைய நோக்கங்களுக்கு எதிராக, சார்க்கோசி வலதிற்குப் பாய்ந்துள்ளதானது அவர் ஒப்புதல் விகிதங்களை மீட்க உதவவில்லை.

சோசலிஸ்ட் கட்சி (PS) மற்றும் ஸ்ராலினிச செல்வாக்கின்கீழ் உள்ள தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு (CGT) ஆகியவற்றால் அழைப்பு விடுக்கப்பட்டு, பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி(PCF) Jean-Luc Melenchon உடைய இடது கட்சி மற்றும் ஒலிவியே பெசன்ஸநோவின் NPA ஆகியவற்றின் ஆதரவைக் கொண்டிருந்தது. இந்த அமைப்புக்கள் அனைத்தும் உண்மையில் குடியேற்ற எதிர்ப்பு மற்றும் முஸ்லிம் எதிர்ப்புணர்வை தூண்டும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தன.

இவை வெளிப்படையான அல்லது உட்குறிப்பான ஆதரவை 2004ம் ஆண்டு பொதுப்பள்ளிகளில் முஸ்லிம் தலைமறைப்பை தடுக்க வகைசெய்த இஸ்லாமிய எதிர்ப்பு வெறிக்கும் இந்த ஆண்டு பொது இடங்களில் பர்க்கா அணிவதைத் தடைசெய்துள்ளதற்கும் ஆதரவைக் கொடுத்துள்ளன. இவற்றுள் எதுவும் சனிக்கிழமை ஆவணமற்ற தொழிலாளர்கள் கொடுத்த அழைப்பான அனைத்து “சட்டவிரோத” குடியேறியவர்கள் அனைவரும் சட்டபூர்வமாக்கப்பட வேண்டும் என்பதற்கு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு கொடுக்கவில்லை.

ஆர்ப்பாட்டங்களின் அரசியல், PS மற்றும் அதன் துணை அமைப்புக்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்ததுடன், கட்சியின் தேர்தல் விழைவுகளுக்காக தாழ்ந்திருக்கின்றன. சோசலிஸ்ட் கட்சி தன்னை ஜனநாயக உரிமைகளின் காவலர் என்றும் பாசிசத்திற்கு எதிரான தடை என்றும் காட்டிக் கொள்ள முற்படுகிறது

கடந்த செவ்வாயன்று முன்னாள் பிரதம மந்திரி Laurent Fabius ம் அவருடைய உதவியாளர் Jean-Christophe Cambadelis ம் எழுதிய விவாத ஆவணம் ஒன்றை PS வெளியிட்டது. அதில் இம்முதலாளித்துவக் கட்சியின் ஏகாதிபத்தியத் தன்மை உறுதிபடுத்தப்பட்டிருந்தது. இது பிரான்சின் அணுவாயுதக் கிடங்கைக் பாதுகாத்து, இராணுவச் செலவினங்களில் குறைப்பு கூடாது என்று கோரியதுடன், ஆப்கானிஸ்தான் உட்பட உலகம் முழுவதும் தலையிடும் திறனை ஐரோப்பிய ஒன்றிய, பிரெஞ்சு இராணுவப் படைகள் கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.

PS நாட்டின் பற்றாக்குறையைக் குறைப்பதற்கான சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆதரவைக் கொடுத்து யூரோவையும் பாதுகாக்க விரும்புகிறது. ஆர்ப்பாட்டங்களில் பல பிரெஞ்சுக் கொடிகள் இருந்தது, ஐந்தாம் குடியரசின் ஜனநாயக மதிப்புக்களை வலியுறுத்தவதாகக் கூறப்பட்டது—இது அமைப்பாளர்களின் தேசியவாத சார்பை உயர்த்திக் காட்டுகிறது.

Mediapart மாநிலங்களில் நடந்த எதிர்ப்பைப் பற்றிய தகவலில் Avignon போன்ற பல நகரங்களில் PS அலுவலர்கள் பங்கு பெறாத விதத்தில்தான் முக்கியமாக இருந்தனர் என்று கூறியுள்ளது. PS ன் 2007 ஜனாதிபதித் தேர்தலின் வேட்பாளர் செகோலீன் ரோயாலின் முன்னாள் உதவியாளர் François Rebsamen, Le Parisien இல் வெள்ளியன்று “மனித உரிமைகளுக்கான குழு போன்ற அமைப்புக்களை” எதிர்த்து கூறினார்: “எச்சரிக்கையாக இருக்கவும்! உறிஞ்சப்பட்டு விடாதீர்கள். PS ஒரு அரசாங்கத்தின் கட்சி ஆகும். அதை நாம் மறந்துவிடக்கூடாது.…இந்தவித ஆர்ப்பாட்டங்கள், நம் மேயர்கள் மற்றும் நகரசபை பிரதிநிதிகளை நம் நகரங்களில் ரோமா முகாம்கள் கட்ட வேண்டும் என்று கேட்கும் அல்லது சில சாலையில் உட்கார்ந்திருப்பவர்கள் பற்றிப் பொருட்படுத்தக்கூடாது என்று கூறும்.”

ஆர்ப்பாட்டங்கள் அரசியல் நிற வண்ணங்களாக பல கட்சிகளில் இருந்து வந்தவர்களைக் கொண்டிருந்தது, இதில் போலி “இடது” NPA யில் இருந்து நடைமுறை வலதின் கட்சிகள், நபர்கள் என்று இருந்தனர். முன்னாள் பிரதம மந்திரி டொமினிக் டு வில்ப்பனின் புதிய கோலிசக் கட்சி Republique Solidaire இன் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்றனர். இதேபோல் வலதுசாரி MoDem Euro பாராளுமன்ற உறுப்பினர் Coririne Lepage ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்று, “தேசிய அடையாளத்தை நீக்கும் திட்டங்கள் புறக்கணிக்கவியலாதவை என்று காண்கிறேன். ரோமாவைப் பொறுத்தவரை, எங்கு அவர்கள் சட்டவிரோதமாக இருந்தாலும், சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.

நீண்ட காலமாக சார்க்கோசி ஆதரவாளரும் முன்னாள் பிரதம மந்திரியும் இப்பொழுது Bordeaux ன் மேயராகவுள்ள அலைன் யுப்பே, அவருடைய நகரத்தின் தொழிற்சங்கங்களுடனும் “இடது” கட்சிகளுடனும் அணிவகுப்பில் செல்லவில்லை, மாறாக அவருடைய உதவியாளர் Veronique Fayet கலந்து கொண்டார்.

சார்க்கோசியின் கிரெநோபிள் உரைக்குப் பின் 100க்கும் மேற்பட்ட ரோமா முகாம்கள் அகற்ப்பட்டுள்ளன, 1,000 ரோமாக்கள் நாடு கடத்தப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். PS மற்றும் அதன் நட்பு அமைப்புக்கள் இந்த அன்றாட மனித வேட்டை, சிறைபிடித்தல் இவற்றிற்கு எதிராக பிரச்சாரம் ஏதும் நடத்தவில்லை. உண்மையில் PS மேயர்கள், Lille மேயர் Martine Aubry உட்பட ரோமாக்களை அகற்றி அவர்கள் முகாம்களைத் தகர்க்க பொலிசை அனுப்பியுள்ளன.

Reading
மாணவர்கள் WSWS துண்டுப் பிரசுரத்தைப் படிக்கின்றனர்

பாரிசில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆதரவாளர்கள் World Socialist Web Site அறிக்கையான “Back to Vichy” என்பதின் பிரதிகளை விநியோகித்தனர்.

Nicky
Nicky

ஈராக் போரை எதிர்த்தோ, ஆப்கானிஸ்தானில் நவ காலனித்துவ ஆக்கிரமிப்பில் பிரான்சின் பங்கை எதிர்த்தோ பாரிஸ் அணிவகுப்பில் பதாகைகள், கோஷ அட்டைகள் அல்லது துண்டுப்பிரசுரங்கள் காணப்படவில்லை. ஒரு பெண்ணுரிமை இயக்கத் துண்டுப் பிரசுரத்தை தவிர, பொது இடங்களில் பர்க்கா அணிவதைத் தடை செய்யும் சட்டம் பற்றி எதிர்த்தும் அறிவிப்புக்கள் இல்லை.

Lille பல்கலைக்கழக மாணவரான நிக்கி, WSWS இடம், “சார்க்கோசி பொருளாதார, சமூகப் பிரச்சினைகள், பெத்தென்கூர் ஊழல் இவற்றில் இருந்து மக்கள் கவனத்தை வேறுவகையில் திசைதிருப்ப முயல்கிறார்” என்றார்.

Theo
Théo

பாரிசில் சோர்போனில் இசை பயிலும் தியோ கூறினார்: “நான் ஆர்ப்பாட்டத்தில் சார்க்கோசியின் ரோமா-எதிர்ப்பு அறிவிப்பிற்கு எதிராகப் பங்கு பெறுகிறேன். அரசாங்கத்தின் வழிமுறை ரோமா மக்களை இழிவுபடுத்துவதாக உள்ளது, ஒரு தனிமைபடுத்தப்பட்டதான நிகழ்வில் இருந்து அனைவரையும் பொதுமைப்படுத்தவதாக உள்ளது. இது தீவிர வலதின் வாக்குகளைப் பெறப் பழைய சட்டம்-ஒழுங்கு வழிவகையைக் கையாள்வதுதான்.”

“ரோமாக்களை அகற்றுவதில் பொருள் இல்லை, அதுவும் அவர்கள் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களாக இருக்கும்போது. சில விதங்களில் குடியேறுபவர்கள் எங்கும் தடையற்று இருக்க வேண்டும் என்று நான் கருதுபவன். ரோமாக்கள் மீதான தாக்குதல் அரசாங்கம் மற்றும் இடதுகளின் நகரசபைகளின் தோல்வியை ஒப்புக் கொள்ளும் செயல்தான். அவை அவர்களுக்கு வசிக்க இடம் அளிக்கும் சட்டப் பொறுப்புக்களை நிறைவேற்றவில்லை. PS, PCF ஆகியவை தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகளைக் காப்பதற்கு என்று நான் நம்புகிறேன், ஆனால் அவை வளர்ச்சி அடையவில்லை, பூகோளமயம், முதலாளித்துவம் என்னும் முன்னோக்கில் இருந்து வேறுபாட்டைக் கொள்ளவில்லை, அவற்றை அவர்கள் ஏற்றுள்ளனர்.”