சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

OECD predicts global economic slowdown

பொருளாதார ஒத்துழைப்புக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பானது (OECD) உலகப் பொருளாதாரத்தில் மந்தநிலையை முன்கணிக்கிறது

By Tom Eley
10 September 2010

Use this version to print | Send feedback

பொருளாதார ஒத்துழைப்புக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பு (OECD) வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின்படி 2010 எஞ்சிய பகுதியில் முன்பு கணித்திருந்ததைவிடப் பொருளாதார வளர்ச்சியானது G7 தொழில்துறை நாடுகளின் பொருளாதாரங்களில் மிகவும் குறைவான வளர்ச்சி இருக்கும்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) G-7 உடைய வளர்ச்சியானது ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகியவற்றின் மொத்தச் சந்தை மதிப்பின் அளவில் மூன்றாவது காலாண்டுப் பகுதியில் 1.4 சதவிகிதம் குறையும் என்றும் இறுதிக் காலாண்டில் 1 சதவிகிதமாக குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கீழ்நோக்கிப் போகும் போக்கானது அமெரிக்கா, ஜப்பான், ஜேர்மனி, பெரிய பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி மற்றும் கனடா ஆகியவவைகளின் இணைந்த பொருளாதாரங்களில் தொடரும். இது மொத்தமாக முதலாவது காலாண்டில் 3.2 சதவிகிதமாகவும், இரண்டாவது காலாண்டில் 2.5 சதவிகிதமாகவும் குறைந்தது.

G7 இன் வளர்ச்சிக்கான புதிய மதிப்பீடு மூன்று மாதங்களுக்கு முன் கூறப்பட்ட கணிப்புக்களில் இருந்து தீவிர சரிவின் மறு ஆய்வைக் கொண்டுள்ளது. இது கூட்டாக உலகப் பொருளாதார உற்பத்தியின் அளவில் அரைவாசிக்கும் மேலாக உள்ளது.

மே மாதத்தில் பொருளாதார ஒத்துழைப்புக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பு (OECD) ஆனது உலகின் மிகப் பெரிய பொருளாதாரமான அமெரிக்கா மூன்றாவது, நான்காவது காலாண்டுகளில் முறையே 2.8 மற்றும் 2.7 சதவிகிதத்தைக் காணும் என்று மதிப்பிட்டுள்ளது. புதிய அறிக்கை இப்பொழுது அமெரிக்க வளர்ச்சி இதே காலத்தில் 2,1% சதவிகிதம் தான் இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது.

அமெரிக்க பொருளாதாரம் 3 சதவிகிதத்திற்கும் மேலான ஆண்டு வளர்ச்சியை பெற்றால்தான் கடந்த மூன்று ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள பேரழிவுதரும் வேலை இழப்புக்களை முறையாக மாற்ற முடியும் என்று பல பொருளாதார வல்லுனர்கள் நம்புகின்றனர். 2 சதவிகிதத்திற்கும் குறைவான வளர்ச்சி விகிதமானது வேலையின்மையில் புதிய வளர்ச்சியைத்தான் குறிக்கக்கூடும். இது இப்பொழுது தொழிலாளர்கள் தொகுப்பில் உத்தியோகபூர்வமாக 9.6 சதவிகிதம் என்று உள்ளது. (See: “As US “recovery” collapses, White House rules out social relief”)

வளர்ச்சி விகிதத்தில் தீவிரக் குறைவு ஐரோப்பாவின் முக்கிய பொருளாதாரமான ஜேர்மனியில் நடக்கக்கூடும். இது இரண்டாவது காலாண்டில் 9.0% ல் இருந்து மூன்றாவது காலாண்டில் 0.7%, நான்காவது காலாண்டில் 1.1% என்று சரியக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. “ஜேர்மனியைப் பொறுத்தவரை சரிவிற்கான உந்துதல்கள் கட்டுமானத் துறையில் இருந்து வருகின்றன. மேலும் உற்பத்தித்துறையிலும் வாங்குபவர்கள் இல்லாததால் சுருக்கம் ஏற்பட்டுள்ளது.” என்று பொருளாதார ஒத்துழைப்புக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் (OECD) தலைமைப் பொருளாதார வல்லுனர் Pier Carlo Pdoan கூறியுள்ளார். “வலுவான உற்பத்திமுறை, ஏற்றுமதி உந்துதல்களின் வளர்ச்சி ஜேர்மனியில் குறையக்கூடும்.”

உலகின் இரண்டாவது பொருளாதாரமாக இருந்த ஜப்பானை இந்த ஆண்டு சீனாவால் கடக்கப்பட்டது வரை, இரு தசாப்தங்களாக அது கொண்டிருக்கும் தேக்க நிலையானது தொடரும் என்று OECD கணித்துள்ளது. இது 2010 முதல் இரு காலாண்டுகளில் முறையே 0.7 மற்றும் 0.6 சதவிகித வளர்ச்சியைத்தான் பெற முடிந்தது.

யூரோப் பகுதியில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களிலுள்ள பிரான்ஸும், இத்தாலியும், கிட்டத்தட்ட பூஜ்யம் அல்லது எதிர்மறை வளர்ச்சிக்கு வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரான்ஸின் வளர்ச்சி மூன்றாவது காலாண்டில் 0.7 சதவிகிதத்திலிருந்து 0.3 சதவிகிதமாக நான்காவது காலாண்டில் குறையும். அதே நேரத்தில் இத்தாலியின் பொருளாதாரம் உண்மையில் மூன்றாவது காலாண்டில் 0.3 சதவிகிதமாக சுருக்கம் அடையும்; நான்காவது காலாண்டில் மீண்டும் 0.1% என்ற வளர்ச்சியைப் பெறும்.

பிரிட்டிஷ் மற்றும் கனேடியப் பொருளாதாரங்கள் தங்கள் சக நாடுகளை விடக் கூடுதலாகச் சென்று, ஆண்டின் இறுதி ஆறு மாதங்களில் 2% க்கு சற்றே கூடுதலான சராசரி வளர்ச்சியை அடையும். ஆயினும் கூட, இந்த வளர்ச்சி விகிதங்கள் இங்கிலாந்தின் இரண்டாவது காலாண்டில் பதிவான 4.9% வளர்ச்சி, கனடாவின் ஏற்றுமதி உந்துதல் கொண்ட 5.8% சதவிகித முதல் காலாண்டு வளர்ச்சியில் இருந்து தீவிர சரிவைக் காட்டுகின்றன.

இப்படிச் சீரான எதிர்மறைத் தகவல்களை சுருக்கிக் கூறும் விதத்தில் OECD குழப்பத்திற்கு சற்று இடமளித்துள்ளது. “மீட்பில் ஒரு சுறுசுறுப்பான இயக்கம் இழக்கப்பட்டுள்ளது தற்காலிகமானதா….அல்லது இது கொள்கை அளவு ஆதரவு அகற்றப்படும் போது தனியார் செலவுகளின் தளத்தில் உள்ள வலுவற்ற தன்மையைக் கூடுதலாக அடிக்கோடிட்ட அடையாளமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.” என்று அறிக்கை கூறுகிறது.

இது ஒரு எச்சரிக்கையுடன் முடிக்கிறது: “சரிவு செயற்பாட்டில் நீடிக்கும் சக்திகளைப் பிரதிபலித்தால், கூடுதலான நிதிய ஊக்கம் நீண்ட காலத்திற்கு அதிகக் கடன் கொடுத்தல்கள், கிட்டத்தட்ட பூஜ்ய வட்டி விகிதத்திற்கு உறுதிப்பாடு என்பவை தேவை என்று பொருள்படும். பொது நிதிகள் அனுமதிக்கும் வரை, திட்டமிட்ட நிதிய ஒருங்கிணைப்பு காலதாமதத்திற்கு உட்படலாம்.

உலக அரசாங்கங்களின் கொள்கைகளோ முற்றிலும் எதிர்த்திசைக்குத்தான் துல்லியமாக சென்று கொண்டிருக்கின்றன. திறமையுடன் உலக நிதியத் துறைக்கு பல டிரில்லியன் டாலர்கள் கொடுத்துப் பிணை எடுப்பு நடத்தியபின், ஒவ்வொரு முக்கிய தொழில்துறை நாட்டிலும் “நிதிய ஒருங்கிணைப்பு என்பது தொழிலாள வர்க்கத்தின் மீது அனைத்துவிதச் சமூக நலச் செலவுகளில் வெட்டுக்கள் மற்றும் ஊதியங்களுக்கு எதிராக ஒருங்கிணைந்த உந்துதல் மூலம் குறைப்பு நடைபெறுகின்றன.

OECD யின் அறிக்கையை தொடர்ந்து, OPEC எனப்படும் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்புக்கள் எண்ணெய்க்கான தேவையில் குறைந்த அளவு வளர்ச்சியை எதிர்பார்க்கின்றன. OPEC எண்ணெய்க்கான தேவை உண்மையில் மேற்கு ஐரோப்பாவில் இந்த ஆண்டின் இறுதி ஆறு மாதங்களில் சரியும் என்று எதிர்பார்க்கிறது.

“தற்போதைய பொருளாதார நிலைமை, பல முன்னேறிய தொழில்துறை நாடுகளில், ஊக்கம் தருவதாக இல்லை” என்று OPEC அறிவித்துள்ளது.

“சில OECD நாடுகள் ஊக்கப் பொதித் திட்டங்களை செயல்படுத்தும் நிலையில் இல்லை என்பது இந்த ஆண்டின் இரண்டாவது பகுதியில் அவற்றின் பொருளாதாரங்கள் மீது அழுத்தம் கொடுக்கக்கூடும். இது முதல் பகுதியுடன் ஒப்பிடும்போது குறைந்த எண்ணெய் தேவைக்கு வகை செய்யும்.

OECD அறிக்கை G-7 மீது குவிப்புக் காட்டினாலும், G-7 ல் உற்பத்தி வெளிப்பாடு “மீண்டும் உயர்நிலையில்” கொண்டுவருவது என்பது இதே போன்ற வளர்ச்சிகளைத் தான் முக்கிய வளர்ச்சி பெற்று வரும் ‘BRIC’ நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகியவற்றில் பிரதிபலிக்கிறது என்று அறிக்கை கண்டறிந்துள்ளது.

2008 கடைசியில் உலக வர்த்தகத்தில் மிகக் குறைவை அடைந்ததிலிருந்து அதனுடைய மீட்பு தற்போதைய மாதங்களின் பின்னர், உலக வர்த்தகத்தின் அளவு ஒன்றுகுவிக்கப்பட்டது என்றும் பெரும்பான்மையான 33 OECD நாடுகளில் வீட்டு மதிப்பின் தேக்கநிலையையும் அல்லது பலவீனத்தையும் மீண்டும் ஒருமுறை ஆரம்பித்தது என்றும் மேலும் யூரோ வலையம், அமெரிக்கா ஆகிய இரண்டிலும் வேலையின்மை விகிதம் கிட்டதட்ட 10 சதவிகிதமான சிறிய மாற்றத்துடன் உள்ளது என்றும் அந்த அறிக்கையில் காணப்படுகிறது.

அமெரிக்கா, யூரோப்பகுதி மற்றும் ஜப்பானில் மொத்த வணிக முதலீடானது 2008 இன் சரிவிலிருந்து மீளவில்லை என்று அறிக்கை ஆவணப்படுத்தியுள்ளது. ஆனால் பெருநிறுவன இலாபங்களானது இம் மூன்று பகுதிகளிலும் 2009 நடுவில் இருந்து மிகவும் அதிகமாகியுள்ளன. வேறுவிதமாகக் கூறினால், உலகெங்கிலும் உள்ள பெருநிறுவனங்கள் பெரும் இலாபங்களை அடைந்து வருகின்றன, ஆனால் இப்பணம் மீண்டும் உற்பத்தி, வேலைகள் ஆகியவற்றை விரிவாக்க பயன்படுத்தப்படவில்லை. உதாரணமாக அமெரிக்க பெடரல் ரிசர்வ், அமெரிக்க வங்கிகள் இப்பொழுது கூடுதல் ரொக்க இருப்புக்களை 1டிரில்லியன் டாலர்கள் வரை கொண்டிருக்கின்றன என்று தகவல் கொடுத்துள்ளது.

அமெரிக்க பொருளாதார வளர்ச்சியில் கீழ்நோக்கு என்பது OECD யினால் கணிக்கப்பட்டது, புதனன்று பெடரல் ரிசேர்வ் போர்டின் “Beige Book” எனப்படும் அதன் 12 வட்டாரத் தொகுதிகளின் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதில் இணைந்து காணப்படுகிறது. அது பொதுவாக எதிர்மறைப் பொருளாதார வருங்கால நிலைப்பாடுகளைத்தான் காட்டியுள்ளது.

அறிக்கைகளின் சுருக்கத்தின்படி, நியூ யோர்க் பகுதியின் பொருளாதாரம், “சரியும் தன்மையின் அடையாளங்களை கொண்டுள்ளது.” க்ளீவ்லாந்தில், “ஆலைகள் உற்பத்தி உறுதியாக அல்லது கீழ்நோக்கி உள்ளதாகக்” குறிப்பிட்டுள்ளன. வர்ஜீனிநா, ரிச்மண்ட் பகுதியில் “குறையும் அடையாளங்கள் அல்லது சுருங்கும் பொருளாதாரச் செயல்கள்தான் அதிகமாக உள்ளன”, மற்றும் அட்லான்டா வங்கித் தொகுதியில் “பொருளாதார செயற்பாடு குறைந்துவிட்டது.”

வங்கி வட்டாரங்கள் சீராக எதிர்மறைப் போக்குகளைத்தான் வீடுகள் சந்தையில் அறிவித்துள்ளன. பெரும்பாலனவை தேக்க அல்லது எதிர்மறை வளர்ச்சிகளைத்தான் உற்பத்தி, சில்லறை விற்பனைப் பிரிவுகளில் அறிவித்துள்ளன.

அமெரிக்க தொழில்துறைப் பிரிவு வியாழனன்று முதல் முறையாக வேலையின்மை நலன் கோருவோரின் எண்ணிக்கை அமெரிக்காவில் 451,000 இருந்து 27,000 ஆல் குறைந்து என்று முந்தைய வாரத்துடன் ஒப்பிடப்படுவதுடன், பொருளாதாரமானது எதிர்மறை வளர்ச்சியில் நுழையவில்லை என்பதற்கான சான்று என வரவேற்கப்பட்டது. இன்னும் நம்பிக்கையான புள்ளிவிவரங்கள், நான்கு வார கால நகரும் சராசரி 477,750 இருந்து 9,.250 ஆல் குறைந்துள்ளதாகக் காட்டுகிறது.

ஆனால் பொருளாதார வல்லுனர்கள் வாரந்திர வேலையின்மையில் உள்ளோர் கோரும் உதவிப் புள்ளிவிவரங்கள் வேலை வளர்ச்சியை குறிப்பிடுவதாக நம்புகின்றனர். இது 400,000 க்கும் கீழே போயிருக்க வேண்டும். முழு ஆண்டிற்கும் சராசரி 454,000 புதிய வேலையின்மையில் உள்ளவர்கள் ஒவ்வொரு வாரமும் உதவிகள் பெறுகின்றனர் என்பது காட்டப்படுகிறது.