சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

Greek debt crisis fuels fears of European sovereign default

கிரேக்கக் கடன் நெருக்கடியானது ஐரோப்பிய அரசாங்கக் கடன் திருப்பி செலுத்த தவறுதல் குறித்த அச்சங்களுக்கு எரியூட்டுகிறது

By Robert Stevens
14 September 2010

Use this version to print | Send feedback

இந்த மாதம் கிரேக்கம், அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் உட்பட ஐரோப்பாவில் பலவீனமான பொருளாதாரங்கள் சிலவற்றைப் பற்றி வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் கண்டம் முழுவதும் ஒரு இரண்டாவது மந்தநிலை வரக்கூடும் என்ற அச்சத்தைக் காட்டுகின்றன.

கிரேக்கப் புள்ளி விபரங்கள் அமைப்பானது கொடுத்துள்ள புதிய தகவல்கள் நாட்டின் மந்தநிலை இரண்டாவது காலாண்டுப் பகுதியில் ஆழமடைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. பொருளாதார வளர்ச்சியில் ஒரு சரிவைக் காட்டும் ஏழாவது தொடர்ந்த காலாண்டாகும் இது. வளர்ச்சி விகிதம், ஆண்டின் முதல் மூன்று மாதங்களுடன் ஒப்பிடுகையில் 1.8 சதவிகிதத்தால் குறைந்தது. இது உத்தியோகபூர்வ மதிப்பீடுகளில் கணிக்கப்பட்ட 1.5 சதவிகிதத்தை விட மோசமாகும். இந்த ஆண்டு முதல் காலாண்டுப் பகுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 0.8 சதவிகிதமாகச் சுருங்கியது. இரண்டாவது காலாண்டுப் பகுதியில் பொது நுகர்வானது 8.4 சதவிகிதமாக சரிந்தது. தனியார் நுகர்வானது 4.2 சதவிகிதமாகக் குறைந்தது. கடந்த ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 3.7 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது

எரிபொருள், மதுபானம், புகையிலை வகைப் பொருட்கள் ஆகியவற்றின் மீதான வரி அதிகரிப்புக்களானது 13 ஆண்டு காலமில்லாத பணவீக்கமாக 5.5 சதவிகித த்திற்கு உயர உதவியுள்ளது.

ஆண்டு அடிப்படையில் ஜூன் வரை வேலையின்மையானது 3 சதவிகிதத்தில் இருந்து 11.6 சதவிகிதம் என்று உயர்ந்துள்ளதாக உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 15 இருந்து 24 வயது வரை உள்ள தொகுப்பில் உள்ளவர்களில் குறிப்பிடத்தக்க வகையில் அதிகமாக 32.5 சதவிகிதமாக உள்ளது. இது நூறாயிரக்கணக்கான பொதுத்துறை ஊழியர்கள் அவர்கள் வேலைகளில் இருந்து நீக்கப்பட்டு உதவிக்கான வரிசைகளில் நிற்பதற்கு முன் வந்த புள்ளிவிபரம் ஆகும்.

கடந்த அக்டோபரில் தேர்ந்தெடுக்கப்ட்ட கிரேக்க சமூக ஜனநாயக PASOK கட்சியின் அரசாங்கமானது ஐரோப்பிய ஒன்றியமும் சர்வதேச நாணய நிதியமும் இணைந்து கொடுத்த 110 பில்லியன் யூரோக்கள் பிணை எடுப்புப் பொதிக்கு மாற்றாக 30 பில்லியன் சிக்கன நடவடிக்கைத் திட்டங்களைச் சுமத்தியது. இது மே மாதம் ஒப்புக் கொள்ளப்பட்டது.

பிணை எடுப்பின் விளைவாக பொருளாதார நெருக்கடியின் மோசமான கட்டம் முடிந்துவிட்டது என்ற கூற்றிற்குப் பதிலாக, பொருளாதார வல்லுனர்கள் கிரேக்கம் அதன் மலைபோன்ற கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாது என்று எச்சரித்துள்ளனர். சிலர் அது இறுதியில் யூரோ நாணய முறையைக் கைவிடும் கட்டாயத்திற்கு உட்படக்கூடும் என்றும் கணித்துள்ளனர்.

இம்மாதம் முன்னதாக லேக் கோமோவில் உள்ள European House Ambrosetti அரங்கில் பேசிய ஜேர்மனிய பொருளாதார வல்லுனர், மூனிச் IFI Institute ன் தலைவர் Hans-Werner Sinn, “இப்பெரும் சோகத்திற்கு தீர்வு ஏதும் இல்லை” என்றார்.

“ஏப்ரல் 28க்கும் மே 7க்கும் இடையேயான காலத்தில் கிரேக்கமானது ஐரோப்பிய ஒன்றியத்தால் உறுதியளிக்காமல் இருந்திருந்தால், கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் போயிருக்கும்.” என்றும் அவர் கூறினார்.

“மீட்பு நடவடிக்கைகள் இல்லாவிடின், கிரேக்கம் திவாலாகியிருக்கும். அனைத்து மாற்றீட்டுச் செயல்களும் கொடூரமானவை, ஆனால் மிகக் குறைந்த கொடூரமாக நாடு யூரோப் பகுதியிலிருந்து வெளியேறுவது ஆகும். இது கிரேக்க வங்கிகளை அழித்தாலும் நிலைமை இப்படித்தான்.”

“இப்பொழுது, இன்று, நாம் இரண்டாவது கிரேக்க நெருக்கடியில் உள்ளோம். கட்டாயப்படுத்தப்பட்டுள்ள “உள்ளக மதிப்பிறக்கம், பணச் சுருக்கம் மற்றும் மந்தநிலை ஆகியவை கிரேக்கத்தை ஒரு உள்நாட்டுப் போரின் விளிம்பில் நிறுத்தும் இடரைக் கொண்டுள்ளன. பெரும் கலகங்கள் ஏற்படாமல் ஊதியங்களையும், விலைகளையும் 30 சதவிகிதம் குறைப்பது இயலாது.” என்று சின் எச்சரித்துள்ளார்.

110 பில்லியன் யூரோப் பிணை எடுப்புப் பொதி அளித்தலுக்கு முக்கியமான காரணம் ஐரோப்பிய அரசாங்கங்களிடையே கிரேக்கம் கடனைத் திருப்பிக் செலுத்த முடியாமல் போனால் அது போர்த்துக்கல், ஸ்பெயின் போன்ற ஏனைய நாடுகளிலும் ஒரு நிதிய “தொற்றை” எற்படுத்தக்கூடும் என்ற அச்சம் இருந்ததுதான். குறிப்பாக பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் இங்கிலாந்திலுள்ள வங்கிகளுக்குத்தான் கிரேக்கத்திற்கு கொடுக்கப்பட்ட கடன் பணமானது செல்லும், இவைதான் கிரேக்க அரசாங்கக் கடன்களில் 80 சதவிகிதத்தை கொண்டுள்ளன. இங்கிலாந்து யூரோப்பகுதி நாடு அல்ல, ஆனால் இங்கிலாந்தை தளமாகக் கொண்ட வங்கிகள் கிரேக்கத்திற்குக் கடன் கொடுத்துள்ளன.

ஜூலை மாதம் வாஷிங்டனை தளமாகக் கொண்ட Centre for Economic and Policy Research பிணை எடுப்புத் திட்டத்தில் அடிப்படை நோக்கம் இதுதான் என்று விளக்கியுள்ளது:

“ஐரோப்பாவும் IMF ம் கிரேக்கத்திற்குப் புதிய நிதி உதவியை அளித்துவிடவில்லை. பெரும்பாலும் ஐரோப்பிய நிதிய முறையைக் காப்பாற்றும் விதத்தில், கிரேக்கம் கடன் செலுத்த தவறினால் வரக்கூடிய 200 பில்லியன் யூரோக்களைக் காப்பாற்றச் செயற்பட்டன. கிட்டத்தட்ட கிரேக்கத்தின் காற் பகுதிக் கடன் இங்கிலாந்து ( மற்றும் அயர்லாந்து) நிதியத் துறையில் உள்ளது. யூரோப் பகுதி அரசாங்கங்க பொதிகளின் வெளிப்படையான அனுகூலம் அடைந்தவர்கள் கிரேக்கத் தொழிலாளர்களும் குடிமக்களும் அல்ல. அவர்கள் இன்னும் கடுமையான வரவு-செலவுத் திட்டக் குறைப்புக்களினாலும் மந்த நிலையினாலும் கடுமையான இடர் அடைவார்கள். City of London போன்ற நிதிய மையங்கள் தான் பயனடையும்.”

பிணை எடுப்பானது உலக மூலதனச் சந்தைகளில் இருந்து இன்னும் அழுத்தம் வராமல் பொருளாதாரத்திற்கு பாதுகாப்பு கொடுக்கும் என்று கிரேக்க அரசாங்கம் நம்பியது. ஆனால் ஒரு சில மாதங்களுக்குள் இந்த மூலோபாயம் ஏற்கனவே தோற்றுவிட்டது. சந்தைகள் தொடர்ந்து கிரேக்கம் அதன் கடனை செலுத்தத் தவறுதல் என்பதில் ஊகம் நடத்துகின்றன, நீண்ட கால கிரேக்கக் கடன்கள் மீதான “அதிக வட்டிகள்” தொடர்ந்து பெருகியுள்ளன. செப்டம்பர் 3ம் தேதி Daily Telegraph ல் Ambrose Evans-Pritchard, “கிரேக்க அரசாங்கத்தின் நீண்ட கால கடன் விகிதம் மீண்டும் நெருக்கடி அளவான 800 அடிப்படைப் புள்ளிகளுக்குச் சென்றுவிட்டது, இது கடன் செலுத்தத் தவறுதல் ஏற்படும் என்பது அதிக அபாயம் என்பதைத்தான் காட்டுகிறது.” என்று எச்சரித்துள்ளார்.

நாட்டின் அதிக கடன் கொடுக்கும் வங்கியான NBG எனப்படும் கிரேக்க தேசிய வங்கியானது அது 2.8 பில்லியன் யூரோக்கள் (2.3 பில்லியன் பவுண்ட்) புதிய மூலதனத்தை திரட்ட வேண்டும் என்று அறிவித்ததைத் தொடர்ந்து கிரேக்கத்திற்கும் அதன் வங்கிகளுக்கு எதிராகக் கூடுதல் ஊகங்கள் கடந்த வாரம் எழுந்தன. NBG இந்நிதியை பங்கு வெளியீட்டின் மூலம் திரட்ட முயல்கிறது. மேலும் துருக்கியத் துணை நிறுவனமான Financsbank ல் உள்ள தன் இருப்புக்களில் ஒரு பகுதியையும் விற்க உள்ளது.

மற்ற கிரேக்க வங்கிகளைப் போல் வங்கிகளுக்கு இடையேயான சந்தைக் கடனுக்கு வாய்ப்பு இல்லாத NBG, ஐரோப்பிய மத்திய வங்கியை கடனுக்கு நம்பியுள்ளது. NBG யின் நடவடிக்கையானது மூலதனத்திற்காக பல பில்லியன் யூரோக்களைத் திரட்டுவது ஆகும். இதற்கு அரசாங்கத்தின் ஒப்புதல் கிடைத்தது. இது கிரேக்க வங்கிகள் ஐரோப்பிய வங்கிகள் மீது பொதுவாக நம்பியிருக்க வேண்டிய நிலையில் இருந்து விடுவிக்கும் அடையாளம் என்று அரசாங்கம் கருதியது.

NBG யின் ஒற்றை மிகப் பெரிய பங்குதாரர் கிரேக்க அரசாங்கம் ஆகும். நிதி மந்திரி ஜோர்ஜ் பாப்பாக்கான்ஸ்டான்டிநோ இந்த நடவடிக்கை ”கிரேக்க வங்கி முறையில் சர்வதேச முதலீட்டாளர்கள் கொண்ட நம்பகத்தன்மை மற்றும் பரந்த விதத்தில் உள்ளூர்ப் பொருளாதாரத்தில் நம்பிக்கை ஆகியவற்றைக் காட்டுகிறது” என்றார்.

ஆனால் நிதியச் சந்தைகள் வேறுவிதமாக நினைத்தன என்பது விரைவில் வெளிப்படையாயிற்று. ஏனெனில் NBG ஆனது அவற்றின் மதிப்பில் 12 சதவிகிதத்திற்குக் குறைந்தன.

ஜூலை மாதம் ஐரோப்பா முழுவதும் நடத்தப்பட்ட அழுத்தச் சோதனைகளில் வெற்றி பெற்ற ஐந்து கிரேக்கக் கடன் கொடுக்கும் நிறுவனங்களில் NBG யும் ஒன்றாகும். இச்சோதனைகள் ஐரோப்பிய வங்கி முறையின் ஆபத்தான நிலைமை பற்றித் துல்லியமாக அறிவதற்கு நடத்தப்படவில்லை. வங்கிகள் தாமாகவே ஆணையிட்டுக் கொண்ட நம்பிக்கை ஊட்டிக் கொள்ளும் செயற்பாடுதான். அவற்றின் நோக்கம் தளர்ச்சியில் இருந்த நிதிச் சந்தைகளுக்கு ஊக்கம் கொடுத்தல், யூரோவிற்கு உறுதிப்பாடு கொடுத்தல் ஆக இருந்தன.

இன்னும் கூடுதலான கரைதலை நாடும் வங்கியின் முடிவைப் பற்றி சுருக்கமாகக் கூறிய வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் நிக் ஸ்க்ரெகஸ், “NBG ஐரோப்பிய ஒன்றிய அழுத்தச் சோதனையில் ஜூலை மாதம் வசதியாகத் தேறியிருந்தாலும், ஒரு ஆழ்ந்த கிரேக்க மந்தநிலை மோசமான கடன்களை தொடர்ச்சியான ஓட்டச் செயல்களுக்கு வழிவகுக்கும். இதையொட்டி கூடுதல் மூலதனம் தேவைப்படும்.

“கிரேக்க அரசாங்க கடன் பத்திரங்களின் வணிக இழப்புக்களுடன் சேர்ந்து, தர நிர்ணயம் செய்யும் அமைப்புக்கள் சரிவைக் காட்டிய நிலையிலும், உள்ளூர் கடன் பத்திரச் சந்தையில் விற்பனைகள் அதிகமாகிப் போன நிலையிலும், இரண்டாவது காலாண்டு நிகர லாபம் 68 விகிதச் சரிவை ஆண்டுக் கணக்கில் பெற்றது என்பதுதான் இதன் பொருள்.”

ஏனைய கடன் வாங்கியுள்ள பல நாடுகளின் அரசாங்க கடன் பத்திரங்களுக்கு எதிரான ஊகங்களும் விரைவில் நடந்து கொண்டிருக்கின்றன. போன வாரம் முதலீட்டாளர்கள் அயர்லாந்து அரசாங்க கடன் பத்திரச் செலுத்தத் தவறுதலுக்கு எதிரான நிதிய காப்பீட்டின் விலையை உயர்த்தினார்கள். அயர்லாந்தின் 10 ஆண்டுப் பத்திரங்களில் இருந்து கிடைக்கும் வருமானம் யூரோ அறிமுகப்படுத்தப்பட்ட பின் முதல் தடவையாக 6 சதவிகிதத்தைவிட அதிகமாயிற்று.

பரபரப்பான ஊகத்தைத் தடுக்கும் முயற்சியாக அயர்லாந்து அரசாங்கம் தன்னுடைய அரசாங்கத்திற்குச் சொந்தமான Anglo Irish Bank Corp ஐ இரு பகுதிகளாகப் பிரிக்கும் என்றும், ஒன்று வாடிக்கையாளர் சேமிப்பை ஒட்டியும் மற்றொன்று “சொத்துக்கள் மீட்பு வங்கியாக” இருக்கும், அதன் அறவிடமுடியா கடன்களைத் தக்க வைத்துக் கொள்ளும்” என்றும் அறிவித்தது.

அமெரிக்க வணிகப், பொருளாதாரப் பகுப்பாய்வாளர் Megan McArdle, இம்முடிவு பற்றி, “ஏற்கனவே அரசாங்கத்தின் உடைமையாக இருக்கும் வங்கியின் மீது மக்கள் பணம் பெறுவதற்கு ஓடுவதைத் தடுப்பதற்கு அரசாங்கமே தலையிடுவது என்பது நல்ல அடையாளம் இல்லை. ஆனால் இதுதான் Anglo-Irish வங்கியில் அவர்கள் செய்கின்றனர்” என்று குறிப்பிட்டார்.

ஐரிஷ் டைம்ஸில் கருத்துத் தெரிவித்த Fintai O’Toole, ஒரு தீர்க்கதரிசன முறையில், “இப்பொழுது விருப்புரிமை அப்பட்டமானது: நம்முடைய சமூகத்தையே அழித்துக் கொள்ளும் நிலைமையில் “நல்ல ஐரோப்பியர்களாக” தொடர்ந்து இருப்போமா அல்லது நம் ஐரோப்பியப் பங்காளிகளின் நம்பிக்கையை இழந்து, நம்மைக் காப்பாற்றிக் கொண்டு “மோசமான ஐரோப்பியர்களாக” இருக்கப்போகிறோமா?”

“பெரும் நெருக்கடி நிலையிலேயே மிகவும் வலுவற்ற நாடுகள் கூட தன் தேசிய நலனை முதலில் எடுத்துக் கொள்ளும் கட்டம் வரும். நாம் அந்தக் கட்டத்தில் தான் இப்பொழுது உள்ளோம்.” என்றார்.

செப்டம்பர் 8ம் தேதி Daily Telegraph அரசாங்கக் கடன் நெருக்கடி பற்றிய கட்டுரை ஒன்றில் Evans-Pritchard அயர்லாந்து நெருக்கடியைச் சுட்டிக்காட்டி இது ஒரு முக்கியமான ஐரோப்பா முழுவதிலுமான பிரச்சினை என்று வலியுறுத்தினார். “CDS (Credit default swaps) போர்த்துக்கல், ஸ்பெயின், இத்தாலி மற்றும் பெல்ஜியம் அனைத்திலும் இந்த வாரம் வெளிப்பட்டுள்ளன” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நிதியத் தகவல் நிறுவனமான மர்கிட் கருத்துப்படி “யூரோப் பகுதியில் அழுத்தமானி இப்பொழுது கடன் நெருக்கடியைவிட அதிகம் காட்டுகிறது. அப்பொழுது ஐரோப்பிய ஒன்றியம் அதன் 440 பில்லியன் பிணை எடுப்புப் பொதியைத் தொடக்கியது, ஐரோப்பிய மத்திய வங்கி யூரோப் பகுதிப் பத்திரங்களை வாங்கத் தொடங்கியது.”

இக்கட்டுரை மோர்கன் ஸ்டான்லியிலுள்ள தலைமை உலகப் பொருளாதார வல்லுனர் Joachim Fels உடைய கருத்துக்களை மேற்கோளிட்டுள்ளது. அவர் “ஒன்று அல்லது பல அரசாங்கங்கள்” விரைவில் மீட்பு முறையை மேற்கொள்ள நேரிடும் என்று முடிவிற்கு வந்துள்ளார். ஐரோப்பிய வங்கிகள் மீது நடத்தப்பட்ட அழுத்தச் சோதனைகள் நீடித்த நம்பிக்கையை நிலைநிறுத்துவதில் தோற்றுவிட்டன என்று எச்சரித்த Fels, “ஐரோப்பிய அரசாங்கக் கடன் நெருக்கடியையோ அல்லது வங்கித் துறை நெருக்கடியையோ தீர்க்கவில்லை, இரண்டும் ஒன்றையொன்று தீவிரமாகத் தாக்குகின்றன” என்று முடித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் ஒரு நாடு கடன் செலுத்தத் தவறுதலில் ஏற்படும் ஆபத்தைக் குறைத்துக் கூறியுள்ளது. செப்டம்பர் 1ம் தேதி அறிக்கையில், “கடன் இடர் பற்றிய தற்போதைய சந்தைக் குறியீடுகள் சந்தையின் கூடுதல் விடையிறுப்பைக் காட்டுவது போல் தோன்றுகிறது.” என்று கூறியுள்ளது.

இந்த மதிப்பீடு அரசாங்கக் கடன் நிலைப்பாடானது சர்வதேச அளவில் எப்படி இருக்கும் என்ற விரிவான IMF ஆய்வின் விளைவுகளுக்கு முற்றிலும் முரணாக உள்ளது. ஆய்வாளர்கள் இப்பொழுது திருப்பிக் கொடுக்கமுடியாத அளவு கடன்களைக் கொண்டுள்ள நாடுகளிடம் கிட்டத்தட்ட “நிதிய இருப்பு” இல்லை என்ற முடிவிற்கு வந்துள்ளனர். நிதிய இருப்பு என்பது IMF னால் தற்போதைய பொதுக் கடன் அளவிற்கும் ஒரு நாட்டின் நிதியைச் சீர் செய்யும் சான்றில் உட்குறிப்பாக உள்ள கடன் அளவிற்கும் இடையே உள்ள வேறுபாடு என விளக்கப்படுத்தப்பட்டுள்ளது. நிதிய இருப்புக் குறியீடுகள் எந்த அளவிற்கு ஒரு நாடு நிதிய அமைப்புக்களில் இருந்து கடன் வாங்கலாம் என்பதை அளக்கும் அடிப்படைதான். அதாவது அதைத்தாண்டினால் சந்தை நிதியைத் தராமல் கொடுக்க முடியாத அளவிற்கு வட்டியைக் கோரும்.

“குறிப்பாக கிரேக்கம், இத்தாலி, ஜப்பான் மற்றும் போர்த்துக்கல் ஆகியவை குறைந்த நிதி நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன. ஐஸ்லாந்து, அயர்லாந்து, ஸ்பெயின், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகியவையும் தங்கள் நிதிய செயற்பாட்டின் தன்மையில் எச்சரிக்கையுடன் உள்ளன.” என்று ஆய்வு கூறியுள்ளது.

கிரேக்கம் அல்லது ஏனைய கடன்பட்டுள்ள ஐரோப்பிய தேசம் அதன் கடன்களை செலுத்த தவறுதல் ஏற்படுத்துவது பெருகிய முறையில் நிகழும் என்ற நிலையில், முக்கிய வங்கிகளின் CDS வணிகர்கள், மற்றும் ஒதுக்கு நிதியாளர்கள் (hedge funds) அவற்றை அழுகும் பிணத்தைக் கழுகுகள் இலக்கு கொள்ளுவது போல் இலக்கு கொண்டு நலம் பெற முயல்கின்றனர்.

அதன் சிக்கன நடவடிக்கைத் திட்ட பொறுப்புக்கள் அனைத்தையும் கிரேக்கம் செய்தாலும், அதன் அரசாங்கக்கடன் விகிதம், மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 2014 ஐ ஒட்டி 145 சதவிகிதமாக இருக்கும் என்று IMF மதிப்பிட்டுள்ளது. இது 2009ல் இருந்த விகிதமான 115 உடன் ஒப்பிடத்தக்கது.