சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

International lessons of the South African public service strike

தென்னாபிரிக்க பொதுப் பணிகள் வேலைநிறுத்தத்தின் சர்வதேசப் படிப்பினைகள்

Ann Talbot
13 September 2010

Use this version to print | Send feedback

அவர்களுடைய மூன்று-வார வேலைநிறுத்தம் முடிந்துவிட்டது என்று தொழிற்சங்கத் தலைவர்கள் வேலைநிறுத்த்தில் ஈடுபட்டிருந்த பொதுப்பணித் துறை ஊழியர்களிடம் கூறியவுடன் அவர்கள் தென்னாபிரிக்காவிலுள்ள ஜோஹன்ஸ்பர்க் கூட்டத்தில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டனர். இந்த நிகழ்வு தொழிலளார்களுக்கும் தொழிற்சங்கக் அமைப்புகளுக்கும் இடையே சர்வதேச அளவிலான கூர்மையான முரண்பாட்டின் ஒரு முக்கிய வெளிப்பாடு ஆபகும்.

தென்னாபிரிக்க பொதுப்பணித் தொழிற்சங்கங்கள் அரசாங்கம் வேலைநிறுத்த தொடக்கத்தில் தொழிலாளர்களக்கு தரப்படுவதாகக் கூறியிருந்த அரசாங்கத்தின் சலுகையைவிட அரை சதவிகிதக் கூடுதலை ஏற்றிருந்தன. இந்த உடன்பாட்டை அவர்கள் ஒரு நீடித்த போராட்டத்திற்கு பின் உறுப்பினர்கள் மீது சுமத்த முற்பட்டனர். இப்போராட்டத்தில் தொழிலாளர்கள் பொலிஸிடம் இருந்து தாக்குதலை எதிர்கொண்டனர், மருத்துவமனைகளில் ஆயுதமேந்திய இராணுவத்தினர் நிலைநிறுத்தப்பட்டனர் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் வேலைநிறுத்தத்திற்கு எதிராக இருந்தன.

“உறுப்பினர்கள் கோபமாக உள்ளனர், தேசிய அலுவலகத்திற்குச் சென்று தங்கள் உறுப்பினர் அடையாள அட்டையை எரிக்கும் விதத்தில் எதிர்ப்பைக் காட்ட விரும்புகின்றனர்” என்று தேசிய சுகாதார மற்றும் ஒன்றிணைந்த தொழிலாளர் சங்க (National Health and Allied Workers Union-Nehawu) உறுப்பினரான Ndiitwani Ramarumo கூட்டம் முடிந்தவுடன் செய்தியாளர்களிடம் கூறினார்.

பெயர்குறிப்பிட விரும்பாத ஒரு தொழிற்சங்க அதிகாரி, “நாம் உறுப்பினர்களிடம் இருந்து தீவிர பதிலடியை எதிர்கொள்கிறோம்; அவர்கள் வேலைநிறுத்தத்தைத் தற்காலிகமாக நிறுத்தும் தொழிற்சங்கத் தலைமையின் முடிவை எதிர்க்கின்றனர்.” என்றார்.

“தங்களுக்கு ஒரு உதவாக்கரை உடன்படிக்கையை விற்றுவிட்டதாகப் பல உறுப்பினர்களும் கூறுகின்றனர்” என்று அதிகாரி தொடர்ந்து கூறினார். தொழிலாளர்களின் பிற பிரிவுகளுக்கும் போர்க்குணமிக்க அலைபரவும் அச்சம் ஏற்பட்டதால் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தின. NUMSA எனப்படும் தென்னாபிரிக்க உலோகத் தொழிலாளர்கள் தேசிய தொழிற்சங்கத்தின் உறுப்பினர்கள் ஒரு 15 சதவிகித ஊதிய உயர்விற்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வியாழனன்று போர்ட் எலிசபத் நகரில் அணிவகுத்து சில்லறை மோட்டார் தொழிற்துறை மற்றும் எரிபொருள் அமைப்பிடம் (Retail Motor Industry and the Fuel Retailers Association) ஒரு கோரிக்கையை கொடுத்தனர்.

தேசிய சுரங்கத் தொழிலாளர் தொழிற்சங்கத்தின் (NUM) உறுப்பினர்களாக இருக்கும் பிளாட்டின சுரங்கத் தொழிலாளர்களும் ஆகஸ்ட் 23 முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பொலிஸ் மற்றும் இராணுவத்தின் சில பிரிவுகள்கூட பொதுப்பணித்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் சேரும் வாய்ப்பை விவாதித்தன. அவர்கள் பங்கு பெறுவதை அரசாங்கம் நீதிமன்ற ஆணை மூலம் அடைந்ததை ஒட்டித்தான் அவர்கள் தடுக்கப்பெற்றனர்.

வருடாந்த ஊதிய உயர்வுடன் தொடர்புடைய தொடர்ந்த வேலைநிறுத்தங்கள் என்று தொடங்கியது விரைவில் தென்னாபிரிக்க சமூகத்தின் அடக்கிவைக்கப்பட்டுள்ள வர்க்க அழுத்தங்களை வெளிப்படுத்தும் இயக்கமாகிற்று. 1.3 மில்லியன் பொதுப்பணி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒரு பொதுவேலைநிறுத்த மையமாக மாறுவதைத் தடுக்கத் தொழிற்சங்கங்கள் செயல்பட்டன. இத்தகைய இயக்கம் நகரங்களில் உள்ள பல முறைசாராத் தொழிலாளர்களின் சமூக அதிருப்தியுடனும் இணைந்தது. அவர்கள் பெருகிய முறையில் அடிப்படைப்பணிகளை வழங்குவதில் அரசாங்கத்தின் தோல்வியை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அரசாங்கம் செய்தி ஊடகத்தில் இழிந்த பிரச்சாரம் மூலமும் தெருக்களில் அடக்குமுறை மூலமும் நிறுத்த இயலவில்லை என்றவுடன், அவசரம் அவசரமாக தொழிற்சங்கங்கள் செயல்பட்டு வேலைநிறுத்தத்தை முடிக்க முற்பட்டன. இந்த நெருக்கடி முழுவதும் அவை ஆபிரிக்க தேசியக் காங்கிரசிற்கு முக்கிய ஆதரவாக உள்ளன.

COSATU எனப்படும் தென்னாபிரிக்க தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஆரம்பத்தில் இருந்தே வேலைநிறுத்தத்திற்கு எதிராக இருந்தது. உலக காலபந்தாட்ட போட்டி முடியும் வரை அது தாமதிக்கப்பட்டது. ஏனெனில் அரசாங்கத்தை அது சங்கடத்திற்கு உட்படுத்த விரும்பவில்லை. அதுவும் சிறிய சங்கக் கூட்டமைப்பான சுயாதீன தொழிலாளர் காங்கிரஸின் (Independent Labour Congress) உறுப்பினர்களின் சீற்றத்தால் நடவடிக்கை எடுக்கும் கட்டாயத்திற்கு உட்பட்டபோது COSATU தயக்கத்துடன்தான் அதற்கு ஆதரவைக் கொடுத்தது.

COSATU வின் பொதுச் செயலாளர் Zwelinzima Vavi வேலைநிறுத்தத்தின் மீது கட்டுப்பாட்டை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சிக்கு அவருடைய அதிக இடது சாரி வனப்புரையை மேற்கோண்டார். அரசாங்கத்தின் மந்திரிகளை கண்டித்த அவர், அடுத்த ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல்களில் ஜனாதிபதி ஜாகப் ஜுமாவிற்கு ஆதரவை தொழிற்சங்கங்கள் விலக்கிக் கொள்ளும் என்று அச்சுறுத்தினார். ஜுமாவின் மகன் டாஸுடான் ஜுமா, Arcelor Mittal உடன் பங்காளித்தனத்தில் இலாபம் அடைந்த விதத்தை எடுத்துக்காட்டினார். ஆபிரிக்க தேசிய காங்கிரஸுக்குள் (ANC) “ஒரு கொள்ளையடிக்கும் உயருக்கு” வெளிப்பட்டுவருவதைச் சுட்டிக்காட்டினார். இதில் கறுப்பு பொருளாதார அதிகாரமளித்தல் (Black Economic Empowerment) திட்டத்தினால் தோற்றுவிக்கப்பட்டுள்ள செல்வம் நிறைந்த வணிகர் தட்டு வளர்ந்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினார்.

Vavi யின் வார்த்தைஜாலங்களை தொடர்ந்து COSATU வேலைநிறுத்தத்தின் தலைமை என்ற நிலையை தக்கவைத்துக் கொள்ள, அது வேலைநிறுத்தத்தை நிறுத்தியதாகக் கூறியது. சீற்றமும், பெரும் ஏமாற்றமும் அடைந்தாலும், பல தொழிலாளர்களும் தங்கள் பணிக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

இந்தக் காட்டிக்கொடுப்பு வர்க்கப் போராட்டத்தின் எதிராளிகளாகவும், முதலாளிகள் மற்றும் அரசாங்கத்தின் கருவிகளாகச் செயல்பட்டு அவற்றின் தாக்குதல்களை உறுப்பினர்கள் மீது சுமத்தும் உலகரீதியான பங்கை அனைத்து உத்தியோகபூர்வமான தொழிற்சங்கங்களும் கொண்டுள்ளன என்பதைத்தான் எடுத்துக்காட்டுகிறது.

COSATU கொள்கை மற்றும் தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளின் முழு உந்துதலும் அரசாங்கத்தின் பங்காளி ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் ஒரு முற்போக்கான தன்மையைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது என்ற தோற்றத்தை வளர்ப்பது ஆகும். தொழிற்சங்கங்கள் ஆபிரிக்க தேசிய காங்கிரஸுடன் நிறவெறிக்கு எதிரான அதன் முந்தைய போராட்டத்தில் இருந்தே நெருக்கமாகப் பிணைந்தவை. ஆனால் இந்த உறவிற்குக் கொடுக்கப்படும் முன்னேற்றம் என்னும் தோற்றம் முதலாளித்துவ, தேசியவாத ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் பதவிக்கு வந்ததில் இருந்தே அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் நிறவெறிக்கு எதிரான இயக்கத்தின் தலைமையை தாங்கியபோது, அதன் திட்டம் வெளிப்படையாக முதலாளித்துவமாக இருந்த போதிலும், அது தொழிலாள வர்க்கத்திற்காக போராடுகின்றது என்று காட்டிக்கொள்ள முடிந்தது. இப்பொழுது அது அதிகாரத்தில் இருந்து ஒரு வெற்றிகரமான முதலாளித்துவ பொருளாதாரத்தை வளர்க்க திணறுகையில், அதற்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே உள்ள அடிப்படை மோதல் தீவிர வடிவமைப்பில் வெடித்துள்ளது.

இது ஒன்றும் ஜுமாவின் மகன் அல்லது மற்ற அரசியல் உயரடுக்கின் முக்கிய உறுப்பினர்கள் உடைய தனிப்பட்ட “ஊழல்” அல்லது வெளிநாட்டு நிறுவனங்களுடன் கொள்ளும் உடன்பாடுகளில் கிடைக்கும் ஆதாயம் பற்றிய பிரச்சினை அல்ல. ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய கறுப்பு முதலாளித்துவத்திற்கும் உலக ஏகாதிபத்தியத்திற்கும் இடையே உள்ள உறவைத்தான் காட்டுகிறது.

தன்னுடைய பங்கிற்கு தொழிற்சங்க அதிகாரத்துவம், அரசாங்கத்தில் அது கொண்டுள்ள பங்கு மற்றும் நிர்வாகத்துடனான நெருக்கமான உறவுகள் ஆகியவற்றின்மூலம் பெரும் சலுகை கொண்ட நிலைமையில் உள்ளது. இது எப்படியும் கீழிருந்து வரும் அச்சறுத்தலை எதிர்த்து நிற்கும் உறுதியைக் கொண்டுள்ளது. முன்னாள் சுரங்கத் தொழிலாளர் சங்கம் மற்றும் COSATU தலைவர் சிறில் ராம்போஸாவின் வாழ்க்கைப் போக்கு தெளிவாக்குவது போல், பலரும் தொழிற்சங்கத் தலைமை மற்றும் ஸ்ராலினிஸ்ட்டுக்களுடன் நெருக்கமான உறவுகளைப் பயன்படுத்தி ஆபிரிக்க தேசிய காங்கிரஸில் உயர் அரசியில் பதவியையும் வணிகத்தில் இலாபம் கிடைக்கும் வாய்ப்புக்களையும் பெற்றுள்ளனர்.

The International Socialists, தென்னாபிரிக்க ஏடு Amandla மற்றும் பிற மத்தியதர வர்க்க அரசியல் குழுக்கள் அரசாங்கத்தின் விட்டுக்கொடுத்தல் ஒரு பின்வாங்குதலைத்தான் பிரதிபலிக்கிறது, தொழிலாளர்களுக்கு ஓரளவு வெற்றி என்று கூட அறிவித்துள்ளன. COSASTU தலைவர்களை அவை ஏதேனும் தவறுக்குக் குறைகூறுகின்றன, சில நேரம் தவறான தந்திரோபாயம் அல்லது கூடுதலான எச்சரிக்கையுடன் இருப்பதற்காகவும் குறைகூறுகின்றன. வேலைநிறுத்தத்தை முடித்துக் கொண்டது “அயோக்கியத்தனமானது” என்றும் கூறியுள்ளன.

ஆனால் அடிப்படையில் அவை தொழிற்சங்கங்கள் புத்துயிர் பெறலாம், அவற்றிற்குத்தான் தொழிலாள வர்க்கத்தை வழிநடத்தும் உரிமை உண்டு என்ற கருத்தை நம்புகின்றன, தொழிலாளர்களும் நம்ப வேண்டும் என்று விரும்புகின்றன. இதன் பொருள் ஆபிரிக்க தேசிய காங்கிரஸுக்கு தொழிலாள வர்க்கம் அடிபணிந்து நிற்க வேண்டும். இதற்காக தொழிலாளர்கள் நலன்களைப் பிரதிபலிக்கும் திறனுடைய அதிலுள்ள ஏதேனும் ஒரு பிரிவு முற்போக்கானது என்பதைக் காட்ட தேடப்பட்டுவருகிறது.

COSATU இந்த வேலைநிறுத்தத்தில் கொண்டுள்ள பங்கு பற்றிய சான்று தொழிற்சங்கவாதத்தின் தன்மைக்கே ஒரு சாட்சியம் ஆகும். பெயரளவிற்கு உலகிலேயே பெரும் “போர்க்குணமிக்க” தொழிற்சங்கக் கூட்டமைப்பு என்று கூறிக்கொள்வது, தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக முதலாளித்துவத்தின் பிரதிநிதிகளுடன் இணைந்துகொண்டுள்ள போக்கானது ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை அரசாங்க சக்திகளுடன் மோதலுக்கு இட்டுச்சென்றுள்ளது. இதுதான் தொழிலாள வர்க்கத்திற்கு சர்வதேச முக்கியத்துவம் உடைய அனுபவம் ஆகும்.

கடந்த பல தசாப்தங்களாகவே, உலகப் பொருளாதாரம் பெருகிய முறையில் ஒருங்கிணைந்துள்ளபோது, தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமைகளில் ஓரளவு சீர்திருத்தங்கள், முன்னேற்றங்களைக்கூட வெற்றி அடையமுடியவில்லை. ஒரு சில திறமையான தொழிலாளர்கள், உத்தியோகபூர்வ பணவீக்கத்திற்கு மேலே ஒரு சில சதவிகிதப் புள்ளிகள் ஊதிய அதிகரிப்பை பெற்றவர்களும் நாளடைவில் இதுவும் இல்லாதுபோய்விட்டதை காண்கின்றனர்.

பெரும்பாலான தொழிலாள வர்க்கத்தினருக்கு, தொழிற்சங்கங்கள் எந்த நலனையும் கொடுப்பதில்லை. அதிகாரத்துவம் தொழிலாளர்களின் நிலைமையான கஷ்டங்கள், மோசமாகிவிரும் சமூக நிலைமைகள் மற்றும் உயரும் வேலையின்மை பற்றிச் சிறிதும் பொருட்படுத்துவதில்லை. மாறாக தொழிற்சங்கங்கள் அரசாங்கங்களின் பங்காளிகளாக செயற்ப்பட்டு, இன்னும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை சுமத்துகின்றன. இதனால் முக்கிய வங்கிகளும், பெருநிறுவனங்களும் உலகப் பொருளாதார நெருக்கடியின் நடுவிலும் தங்கள் இலாபங்களை தக்க வைத்துக் கொள்ள முடியும்.

சர்வதேசரீதியாக தொழிலாளர்களும் இளைஞர்களும் தென்னாபிரிக்க பொதுப்பணித்துறை ஊழியர்களின் வேலைநிறுத்தத்தில் இருந்து தீவிர படிப்பினைகளைப் பெற வேண்டும். தொழிற்சங்கங்களிடம் இருந்து அவரசரமான அரசியல் உடைவு தேவை என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. அதேபோல் வர்க்கப் போராட்டத்திற்குப் புதிய அமைப்புக்களும் மற்றும் சர்வதேச சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் ஒரு புதிய அரசியல் தலைமையும் கட்டமைக்கப்பட வேண்டும்.