சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

100 million workers join India’s September 7 general strike

செப்டம்பர் 7ந் தேதி இந்திய வேலைநிறுத்தத்தில் 100 மில்லியன் தொழிலாளர் பங்கேற்பு

By a WSWS reporting team
9 September 2010

Use this version to print | Send feedback

அதிகரித்து வரும் விலைவாசி, தனியார்மயமாக்கல்-பொதுத்துறை பங்குகள் விற்பனை, தற்காலிக மற்றும் ஒப்பந்த முறையில் ஆட்களை பணிக்கு அமர்த்துதல், ஊழியர்களைப் ஓரளவுக்காவது பாதுகாக்கும் வகையில் நாட்டின் தொழிலாளர் விதிச் சட்டமியற்ற இந்திய அரசு தவறியது ஆகியவற்றைக் கண்டித்து, அகில இந்திய அளவில் செவ்வாயன்று நடைபெற்ற ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஏறத்தாழ நூறு மில்லியன் ஊழியர்கள் பங்கேற்றனர்.

LIC
இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவன அலுவலகத்தில் செவ்வாயன்று மறியலில் ஈடுபட்ட ஊழியர்கள். இந்த வேலைநிறுத்தத்திற்கு இந்திய நிதித்துறை ஊழியர்கள் முழு ஆதரவளித்தனர்

மத்திய தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு என்ற பெயரில் ஒன்பது பெரிய கூட்டமைப்புகள் இணைந்து அழைப்பு விடுத்த இந்த வேலைநிறுத்தத்தால் நாட்டின் பொருளாதார வாழ்க்கை பெரிதும் முடங்கியது.

இந்த வேலை நிறுத்தத்தால் வாகனத் தயாரிப்பு, நிலக்கரி சுரங்கம், மின் உற்பத்தி, வங்கி மற்றும் காப்பீடு, விமானம்- சாலை- கப்பல் போக்குவரத்து, ஆயுதத் தளவாடங்கள் உள்ளிட்ட தொழிற்சாலை மற்றும் சேவைப் பணிகள் பாதிப்புக்குள்ளாகின. ஹுண்டாய் தொழிற்சாலையில் நடந்த இரண்டு நாள் உள்ளிருப்புப்போராட்டம் இந்தியாவின் வளர்ந்து வரும் வாகன உற்பத்தித் துறையில் சங்கங்களை அனுமதிக்கக் கோரி வேலைநிறுத்தங்கள், ஏர் இந்தியா பணியாளர்களின் தொழிற்சங்கத்தின் அனுமதியற்ற வேலைநிறுத்தம், மத்திய அரசின் தனியார்மயமாக்கலைக் கண்டித்து தொலைத் தொடர்பு ஊழியர்கள், சுரங்கத் தொழிலாளர்களின் வெளிநடப்பு என கடந்த சில மாதங்களாக இந்தியாவில் தொழிலாளர் போராட்டங்கள் தீவிரமாக வலுத்து வருகின்றன.

தொழிற்சங்கங்க மற்றும் செய்தி ஏடுகள் வெளியிட்டுள்ள அறிக்கைகளிபடி, பொறியியல், நெசவு (ஜவுளி), உரம், இரசாயனம், கப்பல் கட்டும் தொழில்கள் மட்டுமின்றி மருத்துவமனை, போக்குவரத்து ஆகிய துறைகளில் இருந்தும் எண்ணிலடங்காத ஒப்பந்தத் தொழிலாளர்கள் செவ்வாயன்று நடந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். நாட்டின் 90 விழுக்காடு பணியாளர்களை தன்னகத்தே கொண்ட, அதே நேரத்தில் தொழிலாளர் சங்கங்கள் கூட அமைக்கப்பெறாத ‘அமைப்புசாராத் துறை’களில் இருந்தும்கூட ஊழியர்கள் பெருமளவில் போராட்டத்தில் குதித்தனர். டெல்லி உள்ளிட்ட பல நகரங்களில் ஏராளமான ஆட்டோ தொழிலாளர்கள் வாகனங்களை இயக்கவில்லை. கட்டுமானத் தொழிலாளர்கள், செங்கல்சூளை, வீட்டுவேலை செய்வோரும்கூட இந்த வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்டனர்.

Tamil Nadu
செவ்வாயன்று நடந்த நாடு தழுவிய போராட்டத்திற்கு ஆதரவாக தென்னிந்திய மாநிலமான தமிழகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம்

அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு நிதியாக ரூ.50 ஆயிரம் கோடி (10 பில்லியன் டாலர்) ஒதுக்கவேண்டும் என போராட்டத்தில் பங்கேற்ற ஒரு தொழிற்சங்கம் வலியுறுத்தி வருகிறது. ஆனால், ரூ.1000 கோடி (200 மில்லியன் டாலர்) என்ற சிறுதொகையை ஒதுக்குவதாகத்தான் மத்திய அரசு இதுவரை உறுதியளித்துள்ளது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆளும் மாநிலங்களான மேற்கு வங்கம், கேரளாவில் இந்த வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடந்தது. மாறாக, தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் தொழிற்சங்க ஊழியர்கள் மிகக் குறைவாகவே பங்கேற்றனர்.

இந்துத்வா அமைப்பான பாரதிய ஜனதாக் கட்சி (பா.ஜ.க.)வுடன் கைகோர்த்துள்ள பாரதிய மஜ்தூர் சங் (பி.எம்.எஸ்) தவிர நாட்டில் உள்ள அனைத்து பெரிய தொழிற்சங்கக் கூட்டமைப்புகளும் இந்த வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தன. கடந்த அறுபது ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டு, காங்கிரஸ் கட்சியின் துணை அமைப்பாக செயல்பட்டு வரும் இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரசும் (ஐ.என்.டி.யு.சி.) கட்சித் தலைவர்களிடையே கடும் விவாதத்திற்குப் பின் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு அளித்தது.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் (TMC), அதன் சார்பு தொழிற்சங்கங்களும் பாரதிய மஜ்தூர் சங் உடன் இணைந்து வேலைநிறுத்தத்தை எதிர்த்தன. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஒரு வலதுசாரி கட்சியாகும். இருப்பினும், மேற்கு வங்கத்தை ஆளும் ஸ்ரானினிச இடதுசாரி அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் முதலீட்டாளர்களுக்கு ஆதரவான கொள்கைகளை செயல்படுத்த முனைந்தபோது விவசாயிகள், தொழிலாளர்களின் ஆதரவைப் தனக்கு சாதகமாக்கிக்கொள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அக்கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. செவ்வாயன்று, அக்கட்சி தனது உண்மை சொரூபத்தைக் காட்டிவிட்டது.

இந்தியாவின் பெரிய தொழில்திபர்கள் இந்த வேலை நிறுத்தத்தை ஏற்கவில்லை. அசோசாம் (இந்திய தொழில் மற்றும் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு) தலைவர் சுவாதி பிரமாள், இப்போராட்டம் “முற்றிலும் நியாயமற்றது” என்று தெரிவித்தார். உலக முதலாளித்துவத்துக்கு இந்தியாவில் மலிவான தொழிலாளர்களை உருவாக்கிக் கொடுக்க பெரிய நிறுவனங்கள் தயாராக இருப்பதை வெளிப்படுத்தும் விதத்தில், “பொருளாதாரப் போட்டியை சமாளிக்க அந்நிய முதலீடும், பங்கு விற்பனையும் அவசியம் என்பது இன்றைக்கு உண்மையாகிவிட்டது. நாடு தழுவிய பந்த்தை நடத்தி (அரசியல் வேலைநிறுத்தம்) அவற்றை எதிர்ப்பது அறிவார்ந்த செயல் அல்ல” என்கிறார் பிரமாள்.

இந்த வேலைநிறுத்தம், உழைக்கும் வர்க்கத்தின் கோபமும், எதிர்ப்பும் அதிகரித்துள்ளதை வெளிப்படுத்துவதாகவே அமைந்திருந்தது. பெட்ரோல் விலையை அதிரடியாக உயர்த்தியது உள்ளிட்ட விலைவாசி அதிகரிப்பால் உழைக்கும் மக்கள் சம்பாதிக்கும் சொற்ப வருவாய் சுரண்டப்படும் நிலையில், இந்தியா பொருளாதார வளர்ச்சி பெற்றுவிட்டதாக இந்திய, வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் வாதாடிவருகின்றன. மேலும், பொருளாதார சலுகை என்ற பெயரில் பெரிய தொழிலதிபர்களுக்கு வரிக் குறைப்பு செய்து கோடிக்கணக்கான டாலர்களை ஊதாரித்தனமாகச் செலவிடும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு, சமூகச் செலவினங்களை தற்போது குறைத்து வருகிறது. இந்தியா தனது வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறையைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்திவரும் சர்வதேச பணச் சந்தைகளை சமாதானப்படுத்தும் நோக்கில் பங்கு விற்பனையை முடுக்கிவிட்டுள்ளது.

செவ்வாயன்று நடைபெற்ற போராட்டம், இந்தியாவின் பிரபல தொழில் நிறுவனங்கள், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (ஐ.மு.கூ) அரசு ஆகியவற்றுக்கு எதிராக உழைக்கும் வர்க்கத்தினர் தமது எதிர்ப்பு வலிமையை சூசகமாக உணர்த்துவதாகவே அமைந்திருந்தது. ஆனால் இப்போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து, வழிநடத்திச் சென்ற இந்திய தொழிலாளர் கூட்டமைப்புகள் இதற்கு எதிராக நிகழ்ச்சிநிரலை கொண்டிருந்தது.

ஸ்ரானிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இவற்றின் சார்பு உழைப்பாளர் கூட்டமைப்புகளான இந்திய தொழிற்சங்க மையம் (சி.ஐ.டி.யு), அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (ஏ.ஐ.டி.யு.சி.) ஆகியவை இந்திய முதலாளித்துவத்துக்கு எதிரான பிற்போக்கு நடவடிக்கைகளில் உழைக்கும் வர்க்கத்தினரையும் ஈடுபடுத்தும் நோக்கில் ஒருநாள் வேலைநிறுத்தம் நடத்துவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றன.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியுடன் நாடாளுமன்றத்தில் கைகோர்த்திருந்தபோது மே 2004 முதல் ஜூலை 2008 வரையிலான நான்காண்டு காலத்தில் ஸ்ராலினினிசவாதிகள் இதுபோன்ற பல பந்த்களுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றனர். இந்தோ-சீனா அணுசக்தி ஒப்பந்த பிரச்சனையில் காங்கிரஸ் கட்சியைவிட்டுப் பிரிந்து இத்தனை ஆண்டுகளுக்கு பின்னரும், மக்களுக்கு ஆதரவான கொள்கைகளை மேற்கொள்ளவேண்டும் என அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக இடதுசாரிகள் தொழிலாளர்களை போராட்டத்தில் ஈடுபடுத்தி வருகின்றனர். அதே நேரத்தில் வலதுசாரி சாதிய, பிராந்தியவாதக் கட்சிகளான தமிழகத்தின் அ.இ.அ.தி.மு.க. மற்றும் தெலுங்கு தேசம் (TDP) ஆகியவற்றை இவர்கள் ஒரு மூன்றாம் முன்னணிகூட்டுக்காக ஊக்குவிக்கின்றனர்.

இந்த நோக்கத்துடனும் மற்றும் தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்க, அரசியல்ரீதியான பெரிய போட்டி நிறுவனங்கள் சார்ந்த தொழிற்சங்கங்களை இணைத்து கூட்டணி அமைக்க வேண்டும் என்ற கருத்தை இந்திய தொழிற்சங்க மையம், அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் ஆகியவை வலியுறுத்தி வருகின்றன.

எனவேதான் செப்டம்பர் 7ந் தேதி வேலைநிறுத்தத்தில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்த பா.ஜ.க. சார்பு அமைப்பான பாரதிய மஜ்தூர் சங்கிற்காக இந்திய தொழிற்சங்க மையம் வருத்தம் தெரிவித்தது. ‘செப்டம்பர் 7ந் தேதியன்று அகில இந்திய வேலைநிறுத்தத்தில் பாரதிய மஜ்தூர் சங் பங்கேற்காவிட்டாலும், இதற்கான பிரச்சாரத்தில் முழுமையாக ஈடுபட்டதுடன், 5 அம்ச திட்டங்களை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்யவும் ஒத்துழைப்பை வழங்கியது’ என இந்திய தொழிற்சங்க மையம் அறிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் சார்பு அமைப்பான இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (INTUC) யும் பங்கேற்றதால் இப்போராட்டம் மாபெரும் வெற்றி என ஸ்ராலினிசவாதிகள் கூறுகின்றனர்.

உண்மையில், எந்த சூழ்நிலையில் இது சாத்தியமாயிற்று என்பதையும், ஸ்ரானிச கட்சிகள், அவற்றுடன் இணைந்த தொழிற்சங்கங்களுக்கும் இந்திய முதலாளித்துவத்துக்கும் இடையே உள்ள இருந்துவரும் ஆழமான தொடர்பையும் உழைக்கும் வர்க்கத்தினர் புரிந்துகொள்ளவேண்டும்.

இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் வேலைநிறுத்தப் பங்கேற்பை ‘இடதுபுறம்’ திரும்பிவிட்டதாக குறிப்பட்டாலும், அதற்கான உத்தரவைப் பிறப்பித்தவர் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் அரசின் பின்புல அதிகாரசக்தியான காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திதான். (முறைப்படி எந்த அரசுப் பொறுப்பிலும் சோனியா காந்தி இல்லாவிட்டாலும், அவரது விருப்பப்படியே தான் செயல்படுவதாக பிரதமர் மன்மோகன்சிங் வெளிப்படையாகவே திரும்பத் திரும்பக் கூறியிருக்கிறார்.)

தேசிய அளவிலான எந்த வேலைநிறுத்தத்திலும் பிற சங்கங்களுடன் இணைந்து இதுவரை பங்கேற்காத இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ், மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டு குழு செப்டம்பர் 7 வேலைநிறுத்தம் செய்வதாக எடுத்த முடிவை ஏற்காமல் மோசமாக பிளவடைந்துபோனது.

காங்கிரஸ் தலைமையிலான அரசை எதிர்க்க விரும்பாத இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ், இப்போராட்டத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை என இம்மாத தொடக்கத்தில் அறிவித்தது. ஆனால் அடுத்த சில நாட்களிலேயே, இந்த வேலைநிறுத்தத்தில் இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸும் பங்கேற்க வேண்டும் என அதன் தலைவர்களிடம் சோனியா உத்தரவிட்டதை அடுத்து, அவர்களும் உடனடியாக முடிவை மாற்றிக்கொண்டனர். இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் என்பது தொழிலாளர்களுக்கான அமைப்பு. எனவே தொழிலாளர் பிரச்சனைக்காக நீங்கள் போராட வேண்டும்’ என சோனியா அறிவுறுத்தியதாக பெயர் குறிப்பிடவிரும்பாத இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறினார்.

தன்னுடைய தலைமையிலான இயக்கத்தை, உழைக்கும் வர்க்கத்தினரை மேம்படுத்தும் வகையில் சுதந்திரமான அரசியல் இயக்கமாக மாற்றுவதல்ல என்றும், பந்த் வெறும் ‘பகட்டு வித்தை’ என்றும், சோனியாவுக்கு நன்றாகத் தெரியும். எனவேதான், தனது அரசுக்கு ‘எதிராக’ நடைபெறும் வேலைநிறுத்தத்திற்கு தானே அனுமதி கொடுத்துள்ளார்.

இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸுக்கு அனுமதி அளித்து வேலைநிறுத்தத்தில் பங்கேற்கச் செய்வதன் மூலம், தொழிலாளர்களிடையே வளர்ந்துவரும் போர்க்குணமான நிலமைக்கு மத்தியில் ஈடாடிவரும் தமது ஆளுமைக்கு முட்டுக்கொடுத்து நிறுத்திவிடலாம் என சோனியா நம்புகிறார். அரசின் தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தியும், ஸ்ராலினிச நாடாளுமன்றக் கட்சிகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்தும், உழைக்கும் வர்க்கத்தை பாதுகாப்பதும், அவர்களுக்கு பல ஆண்டுகளாக உண்மையாக இருப்பதும் தாங்கள் தான் என்பதை காட்டிக்கொள்ள இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸை அவர் பயன்படுத்த நினைக்கிறார்.

செவ்வாயன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் ஐக்கிய தொழிலாளர் கூட்டமைப்பு பதாகைகளை தாங்கியபடி சென்னை மெமோரியல் ஹால் அருகே பொதுக்கூட்டம் நடத்தினர். அப்போது அங்கு கூடியிருந்த பல தொழிலாளர்களை உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் சந்தித்தனர்.

ஆர்.எஸ்.பி. டிரான்ஸ்மிஷன் இந்தியா ஊழியரான ரமேஷ் (25) கூறுகிறார்: விலைவாசி உயர்வு, குறைந்த சம்பளம், சங்கத்திற்கு அனுமதி மறுப்பு ஆகியவற்றைக் கண்டித்து நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம். இருங்காட்டுக்கோட்டையில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கானோருக்கு சங்கங்கள் அமைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள தொழிலாளர்களுக்கு மாத சம்பளமாக ரூ.3,500 (76 டாலர்கள்) முதல் ரூ.4,000 (86 டாலர்கள்) வரைதான் வழங்கப்படுகிறது. போதிய அளவுக்கு கழிப்பறை வசதிகூட இல்லை. 400 பேருக்கு ஒரே ஒரு கழிப்பறைதான் உள்ளது.

உணவுவிடுதி வசதி, முதலுதவி போன்றவைகளும் கிடையாது. பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாததால் பல ஊழியர்கள் விபத்துகளில் சிக்கிக் கொள்கின்றனர். ஊழியர்களை நீண்ட நேரம் வேலைபார்க்கும்படியும் வற்புறுத்துகின்றனர். ஸ்ரீபெரும்புதூர் தொழிற்பேட்டையில் இருந்து (ஏராளமான வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்கியுள்ள பகுதி) எங்களைப் போன்ற தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளோம். எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மேலும் பல போராட்டங்களை நடத்துவோம்”

மெட்ராஸ் ரப்பர் ஃபாக்டரி (MRF) ஊழியர் ரகுபதி (36) சொல்கிறார்: “மெட்ராஸ் ரப்பர் ஃபாக்டரியில் தொழிற்சங்கம் அமைக்க வேண்டுமென கடந்த 1992ம் ஆண்டு முதல் போராடி வருகிறோம். ஆனால் இதுவரை முடியவில்லை. எங்களுக்கு கிடைப்பது சொற்ப சம்பளம்தான். மெட்ராஸ் ரப்பர் ஃபாக்டரியில் சங்கம் அமைக்க முயன்றதற்காக பல தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டனர். இவ்வாறு நீக்கப்பட்டவர்கள் வறுமையில் தள்ளப்பட்டு, சிலர் தற்கொலை செய்துகொண்டுவிட்டனர். இதே நிலை நீடித்தால் மற்ற தொழிற்சாலை ஊழியர்களுடன் கைகோர்த்துப் போராடுவோம்.”

ஆட்டோரிக்ஷா டிரைவர் மணிமாறன் நம்மிடம் கூறியதாவது: “நான் சி.பி.எம். இளைஞர் அணியின் உறுப்பினர். இதுபோன்ற பல போராட்டங்களில் நான் பங்கேற்றுள்ளேன். ஆனால் எந்தப் பயனும் கிடையாது. கடைசியில் தேனீர்- பிஸ்கட் கொடுத்து போராட்டத்தை முடித்துவிடுவார்கள்.” “மக்களுக்கு இவற்றால் எந்தவிதப் பயனும் இல்லை. நாளொன்றுக்கு நான் 300 ரூபாய் (6.50 டாலர்) சம்பாதிக்கிறேன். ஆட்டோ உரிமையாளருக்கு 150 ரூபாயைக் கொடுத்துவிட்டு, என் வீட்டுக்கு 150 ரூபாய் தான் எடுத்துச் செல்கிறேன். நான் குடியிருக்கும் வீட்டுக்கு மாதவாடகை மட்டும் 1000 ரூபாய் (22 டாலர்). என்னுடைய சொற்ப வருமானத்தைக் கொண்டு பிள்ளைகளையும் படிக்க வைத்து, குடும்பம் நடத்துவது என்பது மிகச் சிரமமாக உள்ளது.” என்கிறார் மணிமாறன்.