சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The persecution of Roma—under the Nazis and today

நாஜிக்களின் கீழும் இன்றும் ரோமாக்களை துன்புறுத்துதல்

Peter Schwarz
18 September 2010

Use this version to print | Send feedback

ரோமாக்களை ஏராளமாக வெளியேற்றுவதற்குப் பிரெஞ்சு அரசாங்கத்தைப் பொறுப்பாக்கும் ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் விவியன் ரெடிங்கின் முயற்சி ஒரு சில மணி நேரத்திற்குள் அப்படியே நின்று போயிற்று.

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜோஸ் மானுவல் பரோசாவும் பல ஐரோப்பிய அரசாங்கத் தலைவர்களும் அவர் சொற்களைத் தேர்ந்தெடுத்த முறையைக் குறைகூறிய பின்னர், நாஜிகள் நடத்திய வெளியேற்றங்களுடன் ஒப்புமை காட்டியதற்கு ரெடிங் மன்னிப்புக் கோரினார். ரெடிங் எழுப்பிய குற்றச்சாட்டுகளை இகழ்ச்சியுடன் நிராகரித்ததுடன் தன்னுடைய அரசாங்கம் அதன் வெளியேற்றும் கொள்கையில் இருந்து பின்வாங்காது என்றும் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி வலியுறுத்தினார். சார்க்கோசியின் நிலைப்பாட்டிற்கு இத்தாலிய அரசாங்கத்தின் தலைவரான பெர்லுஸ்கோனியிடம் இருந்து உடனடி ஆதரவு கிடைத்தது.

வியாழனன்று நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில் ஆணையத்தின் அந்தஸ்த்தை மிகச் சக்திய வாய்ந்த உறுப்பு நாட்டினால் இன்னும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் பரோசோவைச் சார்க்கோசி சாடினார். இப்பொழுது 27 ஐரோப்பிய நாடு மற்றும் அரசாங்கத் தலைவர்கள் தங்கள் அடுத்த கூட்டத்தில் “இப்பிரச்சினைக்கு ஒரு நீண்டகால மூலோபாயம் தேடுவது” என ஒப்புக்கொண்டுள்ளனர்.

ரோமா குறித்த சர்ச்சை ஐரோப்பிய ஒன்றியத்தால் தொழிலாளர்களுக்கு இதுவரை கொடுக்கப்பட்டு வந்துள்ள வெகு சில சுதந்திரங்களில்—தடையற்றுச் செல்லுதல், எந்த EU உறுப்புநாட்டில் வேண்டுமானாலும் வாழ்ந்து பணிபுரிதல் போன்றவற்றில்-- ஒன்றை அகற்றுவதற்குத் ஆரம்பக் கட்டம் என்ற அச்சத்திற்குத்தான் இது வகை செய்துள்ளது- ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் பரோசோ ஸ்பெயினின் செய்தித்தாள் El Pais இடம் செப்டம்பர் 19ம் திகதி “தடையற்றுச் செல்லுதல் என்னும் உரிமை முழுமையானது என்று கூறுவது தவறாகும்.” என்றார்.

தேசியவாதம் என்று தான் தோன்றுகிறது —அதாவது மேலும் தீவிர வெளிநாட்டவருக்கு எதிரான வெறுப்பு, அத்துடன் இணைந்துள்ள இனவெறி ஆகியவை— ஐரோப்பா முழுவதும் தடுக்கமுடியாதபடி முன்னேறுகிறது, ஆளும் வர்க்கத்தின் தனிப்பட்ட பிரதிநிதிகள் ரெடிங் போன்றோர் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தாலும், இந்த வழிவகையில் மனித உரிமைகள் மற்றும் குடிமக்கள் உரிமைகள் ஒதுக்கப்படுகின்றன. ஏன்?

ரோமாவிற்கு எதிரான சார்க்கோசியின் தாக்குதல்கள் செல்வாக்கைப் பெற்றுக் கொள்ளவில்லை. அவரைப் பற்றிய கருத்துக் கணிப்புக்கள் எப்பொழுதும் இல்லாத வகையில் மிகவும் குறைந்துள்ளன. இத்தாலிய பிரதமர் பெர்லுஸ்கோனியுடையதைப் போல் தான் உள்ளது. ஒரு மிகச் சிறிய எண்ணிக்கையிலுள்ள சிறுபான்மையினரான ரோமாக்களுக்கு எதிரான சார்க்கோசியின் பிரச்சாரம் —பிரான்சில் உள்ள 65 மில்லியன் மக்களில் 15,000 ரோமாக்கள் தான் வெளிநாட்டுப் பாஸ்போர்ட்டுடன் உள்ளனர்— மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான அவருடைய பாகுபாடு ஆகியவை பெருகும் சமூக அழுத்தங்களை இனவெறித் திசையில் திருப்பும் இழிந்த நோக்கத்தைப் பிரதிபலிக்கிறது.

இதுவரை சார்க்கோசிக்கு வெற்றி கிடைக்கவில்லை. பல்லாயிரக்கணக்கான மக்கள் தெருக்களுக்கு வந்து ரோமாக்களை நாடு கடத்துவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். சில நாட்களின் முன்பு தான் மூன்று மில்லியன் மக்கள் அவருடைய ஓய்வூதியச் சீர்திருத்தத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர்.

ஆயினும்கூட, இனவெறி மற்றும் முஸ்லிம் எதிர்ப்பு உணர்வுகளைத் தூண்டிவிடுதல் அதிகரித்துக் கொண்டு தான் வருகின்றன—இது பிரான்ஸில் மட்டும் அல்ல. ஒல்லாந்து, டென்மார்க், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, இத்தாலி, ஹங்கேரி மற்றும் பல நாடுகளில் இனவெறிக் கட்சிகள் வசதியான நிதியாளர்களின் ஆதரவுடன் கணிசமான செல்வாக்கைச் செலுத்துகின்றனர். ஜேர்மனியில் செய்தி ஊடகத்தால் பெரிதும் உந்துதல் பெற்றுள்ள திலோ சராஸின் சமீபத்தில் வெளிவந்த புத்தகம் முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறி உணர்வுகளைத் தூண்டியுள்ளது.

இறுதியில் இந்தத் தேசியவாதம் மற்றும் இழிந்த இனவெறி அலை குறிப்பிட்ட பிற்போக்குத்தன அரசியல்வாதியின் தனிப்பட்ட கருத்து என்று குறைத்துப் பேசிவிட முடியாததாகும். இப்போக்கு மிகப் பரந்த அளவில் உள்ளது. முதலாளித்துவ சமூகத்தின் சரிவு மற்றும் அழுகிய தன்மையின் விளைவாகும் இது. இதிலிருந்து புழுக்கள் போல் கடந்த காலத்தின் தீமைகள் வளர்கின்றன.

சமூக சமத்துவமின்மை பெருகியுள்ளது அதாவது ஒரு சிறிய சிறுபான்மையினருக்கு சலுகைகள் செல்வம் திரளுதலும், பரந்த மக்களுக்கு வேலையின்மை மற்றும் வறுமை பெருகுதலும் ஆகும். இது ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுடன் பொருந்தி இருக்க முடியாதவை ஆகும். ஆளும் வர்க்கம் வெளிநாட்டவருக்கு எதிரான தீவிர வெறுப்பையும், இனவெறியையும் ஒரு குடிபோதை அடிமை, போத்தலைப் பற்றுவது போல் பற்றியுள்ளது— நிதான நேரத்தில் இது அழிவிற்கு வகை செய்யும் என்று அவர்களுக்குத் தெரிந்தபோதிலும் கூட.

இரண்டாவது உலகப் போரின் ஆரம்பத்தில், லியோன் ட்ரொட்ஸ்கி முதலளித்துவத்தின் சிதைவு மற்றும் யூத எதிர்ப்புப் பெருகுதல் இவற்றிற்கு இடையே உள்ள தொடர்பு குறித்து நேர்த்தியாக எழுதியிருந்தார். இதன் கொலைகார விளைவுகளை அவர் நன்கு கணித்திருந்தார்.

“சிதைவிலுள்ள முதலாளித்துவ உலகம் நெரிசலில் உள்ளது…. வெளிநாட்டு வணிகத்தை வீணடித்தல் மற்றும் உள்நாட்டு வணிகச் சரிவும் அதே நேரத்தில் சோவனிசம் குறிப்பாக யூத எதிர்ப்பின் அரக்கத்தன தீவிரக் காலத்தில் தான் உள்ளது. அதன் எழுச்சிச் சகாப்தத்தில் முதலாளித்துவம் யூதர்களை சேரிகளில் இருந்து அகற்றி அவர்களைத் தன் வணிகச் சுரண்டலுக்காகப் பயன்படுத்தியது. இன்று சிதைகின்ற முதலாளித்தவ சமூகமானது யூதர்களை அனைத்துத் துறைகளில் இருந்தும் பிழிந்து அகற்ற முயல்கிறது. உலகின் இரு பில்லியன் மக்கள் தொகையில் இருந்து 17 மில்லியன் மக்களை—அதாவது ஒரு சதவிகிதத்திற்கும் குறைந்தவர்கள் நம் உலகில் ஒரு இடம் கிடைக்காமல் இருப்பர்! பரந்த நிலப்பகுதிகள் மற்றும் தொழில்நுட்ப வியத்தகு முன்னேற்றங்களுக்கு இடையே, மனிதனுக்கு ஆகாயத்தை வெற்றி கொண்டான் மற்றும் பூமியையும் வெற்றி கொண்டான், முதலாளித்துவம் நம் பூமியை ஒரு துர்நாற்றச் சிறையாக மாற்ற முடிந்துள்ளது.”

இன்று முஸ்லிம்களை வேட்டையாடுதலானது யூத எதிர்ப்பிற்குப் பதிலாக நிகழ்கிறது (ஹங்கேரி போன்ற சில நாடுகளில் யூத எதிர்ப்பும் செயற்பட்டியலில் உள்ளது). துருக்கி மற்றும் மக்ரெப்பில் இருந்தும் முஸ்லிம் தொழிலாளர்கள் பொருளாதார எழுச்சிக் காலத்தில் மனித சக்திக்காக கொண்டுவரப்பட்டனர். இன்று அவர்கள் தான் வேலைகளை முதலில் இழக்கின்றனர், சமூக விலக்கல் பின்னர் நாடுகடத்தலுக்கும் உட்படுகின்றனர்.

ஆனால் ரோமாக்கள் துன்புறுத்தப்படுவது சீராக நடைபெறுகிறது. யூதர்களுக்குப் பின்னர், இவர்கள் தான் நாஜி மனிதப் படுகொலைகளில் முக்கிய இலக்காக வைக்கப்பட்டனர். நாஜிக்கள் இவர்களை இனவழியில் தாழ்ந்தவர்கள் என்று வகைப்படுத்தியதுடன், கட்டாய மலடாக்கி, “நாடோடி முகாம்களில்” சிறை வைத்து, கட்டாய வேலைகளுக்கு உட்படுத்தி, கடும்சிறை முகாம்களில் முறையாகக் கொல்லவும் செய்தனர்.

கிட்டத்தட்ட ஒரு மில்லியன் சின்டி மற்றும் ரோமாக்கள் ஐரோப்பாவில் இரண்டாவது உலகப் போருக்கு முன் வாழ்ந்தனர். அவர்களில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது சரியாகக் கூறப்பட முடியவில்லை. ஓரளவு நிதானமான மதிப்பீடுகள் கூட அவர்களில் கால்பகுதியினர் நாஜிக்களாலும் அவர்களுடைய கூட்டணி நாடுகளாலும் கொல்லப்பட்டனர் என்று அறிவிக்கின்றன. ஏனைய மதிப்பீடுகள் இந்த எண்ணிக்கையை 500,000 ஆக மதிப்பிடுகிறது.

சார்க்கோசியும் அவருடைய அரசாங்கமும் மீண்டும் ரோமாக்களை அவர்களுடைய இனவெறிப் பிரச்சாரத்தில் இலக்காகச் செய்துள்ளமையானது நிலைமை ஒன்றும் அதிகம் மாறவில்லை என்பதைத்தான் நிரூபிக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் மிகக் கொடூரமான குற்றம் கூட இவர்களை தங்கள் இனவெறி நச்சைப் பரப்புவதற்குத் தடையாக இல்லை போலும்.

ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் ரெடிங், பிரெஞ்சுக் கொள்கை “இழிந்தது” என்றார். உண்மையில் என்ன நடக்கிறது என்பதை இது நாகரிகமான முறையில் குறைத்துக் காட்டுவது ஆகும். அப்படியும் கூட ஐரோப்பிய அரசாங்கங்களின் அழுத்தங்களையடுத்து அவர் மன்னிப்புக் கேட்கும் கட்டாயத்திற்கு உட்பட்டார். இது ஐரோப்பிய உயரடுக்கு எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்பதைத்தான் நிரூபிக்கிறது. அதன் பிரிவுகளில் எவையும் அடிப்படை குடியுரிமைகள் மற்றும் மனித உரிமைகள் பற்றி தக்க ஆதரவு கொடுப்பதில்லை. இவைதான் ஒருகாலத்தில் புரட்சிகரப் பிரான்சின் அடையாளப் பெருமையாக இருந்தன.

ஐரோப்பா மீண்டும் ட்ரொட்ஸ்கி விவரித்த ஒரு “நச்சுச் சிறையாகவும்” அதையொட்டிய கொடூரங்கள் நிறைந்ததாகவும் மாற்றப்பட்டு வருகிறது. இந்தப் பெரும் அழிவு உண்டாக்கக்கூடிய வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்குத் தொழிலாள வர்க்கம் ஒரு சோசலிச ஐரோப்பாவிற்காக தாக்குதல் நடத்தினால்தான் முடியும்.