சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : ஆப்கானிஸ்தான்

Fraud, violence and mass abstention: Election debacle in Afghanistan

ஆப்கானிஸ்தானின் தேர்தல் படுதோல்வி: மோசடி, வன்முறை மற்றும் பெருவாரியான மக்கள் வாக்களிக்கவில்லை.

By Patrick Martin
20 September 2010

Use this version to print | Send feedback

ஆப்கானிஸ்தானில் சனிக்கிழமை நடந்த தேர்தல் எதிர்பார்த்தபடி ஒரு படுதோல்வியைத்தான் அடைந்தது. இதில் பரந்த மோசடி மற்றும் வன்முறை நிகழ்வுகள் இருந்ததுடன் ஆப்கானிய மக்களில் பெரும்பாலானவர்கள் வாக்களிக்கவில்லை. அமெரிக்க ஆதிக்கத்திற்கு உட்பட்ட ஜனாதிபதி ஹமித் கர்சாயியுடைய அதிகாரிகள் 3.6 மில்லியன் மக்கள் வாக்களித்ததாகக் கூறினார்கள். இது கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது கூறப்பட்ட 6 மில்லியன் வாக்குகளை விட மிகவும் குறைவு ஆகும். அப்பொழுதே அந்த தேர்தல் கர்சாய் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதிபடுத்தும் மோசடிக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.

3.6 மில்லியன் வாக்குகள் என்பது மொத்தம் பதிவு செய்யப்பட்டுள்ள 11.4 மில்லியன் வாக்காளர்களில் 31 சதவிகிதத்தைத்தான் குறிக்கிறது. ஆனால் கர்சாய் அரசாங்கம் இந்த எண்ணிக்கையை 40 சதவிகிதத்திற்கு உயர்த்த முயற்சித்தது. பாதுகாப்புக் காரணங்களுக்காக வாக்குப் போடுதல் நடத்த முடியாத பகுதிகளில் 2.2 மில்லியன் மக்கள் உள்ளனர் என்றும் அதையொட்டி மொத்தம் பதிவான வாக்காளர்கள் எண்ணிக்கையில் இருந்து இது ஒதுக்கப்பட வேண்டும் என்றும் வாதிட்டுள்ளது.

சுயாதீனத் தேர்தல் ஆணைக்குழு (IEC) 2003ல் இருந்து 16.7 மில்லியன் மக்கள் வாக்குப் போட பதிவு செய்துள்ளனர் என்று கூறியது. இது இப்பொழுது மொத்தம் வாக்குப் போட்டவர்களின் சதவிகிதத்தை 21 என்று ஆக்கிவிடும். ஆனால் எந்த எண்ணிக்கை கணக்கில் எடுக்கப்பட்டாலும் கூட, மொத்தம் வாக்குப்போட்டவர்கள் எண்ணிக்கை அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளின் கடுமையான கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் தலைநகரமான காபூலையும், அதைச்சுற்றியுள்ள பகுதிகளையும் தவிர மற்ற இடங்களில் மிகக்குறைவு என்பதில் சந்தேகம் இல்லை.

ஆப்கானியப் பாதுகாப்பு மந்திரியாகிய அப்துல் ரஹிம் வர்டக் என்பவர் தாலிபனுடைய அரசியல் செல்வாக்கு வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதை ஒப்புக் கொள்ளும் விதத்தில் செய்தியாளர்களிடம் குறைந்த வாக்குப் பதிவிற்கு ஒரு விளக்கம் கொடுத்தார். “எதிரியின் பிரச்சாரம் மக்கள் மனத்தைத் தாக்கியுள்ளது எனும் வாய்ப்பும் உள்ளது.”

The Free and Fair Elections Foundations of Afghanistan என்னும் அமைப்பு ஞாயிறன்று வெளியிட்ட அறிக்கையில், “தேர்தல்களின் தரம் பற்றி தான் தீவிரக் கவலை கொண்டுள்ளதாக” அறிவித்துள்ளது. இக்குழு 7,000 மக்களைப் பார்வையாளர்களாக அணிதிரட்டி ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற இத்தகைய நடவடிக்கையை மிக அதிக எண்ணிக்கையுடையதாகச் செய்திருந்தது. கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பில் முறையான வாக்கு மோசடித் திணிப்புக்கள் இருந்தவற்றை அம்பலப்படுத்தியதில் முக்கிய பங்கு கொண்டிருந்த சர்வதேசப் பார்வையாளர்கள் இந்த ஆண்டுத் தேர்தலைப் பெரும்பாலும் தவிர்த்துவிட்டனர். ஏனெனில் பாதுகாப்புக் கவலைகளும் அத்தகைய கண்காணிப்பிற்கு கர்சாய் ஆட்சி கொண்டிருந்த வெளிப்படையான விரோதப் போக்கும் அதற்குக் காரணங்கள் ஆகும்.

“வேட்பாளர்கள், அவர்களின் முகவர்கள் மற்றும் உள்ளூர் அதிகார முகவர்கள் பயன்படுத்தும் வன்முறைகள் பல பகுதிகளிலும் நடந்ததாகக் கூறப்பட்டுள்ளது. அதே போல் தாங்கள் விரும்பும் வாக்காளர்களுக்கு ஆதரவாக முடிவுகளை மாற்றும் விதத்தில் வாக்குப் போடும் வழிவகையில் அரசாங்க அதிகாரிகள் குறுக்கிட்ட நிகழ்வுகளும் ஏராளம்” என்று அமைப்பில் இருந்த வந்துள்ள அறிக்கை கூறுகிறது. “வாக்குகளைப் பெட்டியில் திணிப்பது மாறுபட்ட தன்மையில் பல இடங்களில் நடைபெற்றது. அதேபோல் கள்ள வாக்குகளும் குறைந்த வயதுடையவர்கள் போட்ட வாக்குகளும் அதிகம் ஆகும்.”

அறக்கட்டளையின் கருத்துப்படி தெற்கிலும் கிழக்கிலும் பொதுவாக பாதுகாப்பு இடர் காரணங்களுக்காக திறக்கப்படாத 1,053 வாக்குச் சாவடிகளைத் தவிர, மற்றும் ஒரு 1,584 சாவடிகள் நேரம் கழித்துத் திறக்கப்பட்டன. பல பகுதிகளில், முழு மாகாணங்களில் கூட, பெண் தேர்தல் அதிகாரிகள் இல்லை. இது பெண்கள் வாக்களிப்பதை இயலாததாக்கிவிட்டது.

செய்தி ஊடகத்தில் வந்த தகவல்கள் பல வாக்குச் சாவடிங்களில் உண்மையில் வாக்களித்தவர்களைவிட நோக்கர்களும் வேட்பாளர்கள் எண்ணிக்கையும் அதிக அளவில் இருந்ததாகத் தெரிவிக்கின்றன.

மோசடிக்கு எதிரான நடவடிக்கைகள், வாக்காளர்கள் கைகளில் பூசப்படும் மறையாது எனக்கருதப்படும் மை போன்றவை பயனற்றுப் போயின. இந்த மை எளிதில் கழுவப்பட்டுவிட முடியும் என்பதால் பலரும் பல முறை வாக்களித்தனர். வர்டக் மாகாணத்தில் ஒரு செய்தியாளர் பொலிஸுக்கும் தேர்தல் பணியாளர்களுக்கும் இடையே கைகலப்பைப் பற்றி விவரித்துள்ளனர். இது வாக்குப் பெட்டிகளில் விரும்பிய வேட்பாளருக்கு வாக்குச் சீட்டுகளைத் திணிப்பதையொட்டி நிகழ்ந்தவை.

New York Times பத்திரிகையானது: “குண்டுஸ் நகரத்தில் காஜி கான் உயர்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் IEC அதிகாரிகள் மற்றும் சில வேட்பாளர்களும் சாவடிக் கதவுகளை இரண்டு மணி நேரத்திற்கு மூடிவிட்டு தாங்களே வாக்குகளைப் போட்டதை செய்தியாளர்களும் தேர்தல் பார்வையாளர்களும் அவதானித்தனர்.” என்று கூறியது.

எங்கும் நிகழ்ந்திருந்த வாக்குகள் திணிப்புடன், முழுத் தேர்தல் வழிவகையானது மோசடித் தன்மையை ஒரு அடிப்படை உணர்வில் கொண்டிருந்தது. இந்த வாக்கெடுப்பு ஆப்கானிய மக்களின் விருப்பத்தைத் தடையின்றி வெளிப்படுத்தியதாகக் கூறுவதற்கில்லை. ஏனெனில் அமெரிக்க-நேட்டோ ஆக்கிரமிப்பு இராணுவம், அதன் ஆப்கானிய கைக்கூலிகளின் துப்பாக்கி முனையில் நடத்தப்பட்டதாகும்.

மேலும் ஆக்கிரமிப்பிற்கும், கைப்பாவை கர்சாய் ஆட்சிக்கும் எதிரான சுதந்திரப் போக்கு அல்லது எதிர்க்கும் திறனைத் தேர்ந்தெடுக்கப்படும் பாராளுமன்றம் கொண்டிருக்காது. 249 இடங்களுக்கு 2,500 பேர் போட்டியிட்டாலும், முறையாக அமைக்கப்பட்ட அரசியல் கட்சிகள் இல்லை. கிட்டத்தட்ட ஒவ்வொரு வேட்பாளருமே சுயேச்சையாகத்தான் போட்டியிட்டனர். இவர்களுள் கூட்டணி என்பது குறிப்பிட்ட மாகாண போர்ப் பிரபுக்கள் அல்லது கர்சாய் மற்றும் வர்டாக் போன்ற உயர்மட்ட அதிகாரிகளின் ஆதரவைக் கொண்டிருந்தது.

புதிய பாராளுமன்றம் உத்தியோகப்பூர்வமாக காரியத்தைச் சாதிப்பதற்கு அதன் முன்னோடிகளை விட இன்னும் அதிகமாக கீழ்பட்டு உடன்படும். பல முடிவுகளானது இறப்பர்-முத்திரையாக பெரும்பாலும் இருக்ககூடியதாக இருக்கிறது, சிலவேளை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாக்குகளை வாங்கிய பிறகு, அதிகார வரம்புக் காலத்தை அகற்றுவதாக இருக்கும், ஆகவே கர்சாய் மீண்டும் மறுதேர்தலுக்கு நிற்க முடியும். அதேபோல் அமெரிக்க இராணுவப் படைகளுக்கு நீண்டகால தளம் அமைக்கும் உரிமைகளைக் கொடுக்கும் சட்டமும் இயற்றப்படலாம்.

அமெரிக்க, நேட்டோ மற்றும் ஆப்கானிய கைப்பாவைத் துருப்புக்கள் மற்றும் பொலிஸ் என்று 400,000 ஆயுதப்படையினர் திரட்டப்பட்டிருந்தபோதிலும், நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் தேர்தல் தின வன்முறை நிகழ்வுகள் நிகழ்ந்தன. குறைந்தது 30 பேராவது வாக்கெடுப்பு அன்று கொல்லப்பட்டனர். இதில் 9 பொலிசார் அடங்குவார்கள். இரு வாக்குச் சாவடிப் பணியாளர்கள் வடக்கு மாகாணமான பால்க்கில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.

தேர்தல் தினத் தாக்குதல்களில் மூன்று படையினர் கொல்லப்பட்டனர் என்றும் இதில் Queen’s Royal Lancers மற்றும் Royal Engineers ஐச் சேர்ந்த பிரிட்டிஷ் வீரர்கள் அடங்குவர் என்றும் நேட்டோ ஞாயிறன்று அறிவித்தது. அவர்கள் ஹெல்மாண்ட் மாகாணத்தில் லஷ்கர் கா மாவட்டத்தில் ரோந்துப் பணியில் இருந்தபோது தெருப்புறக் குண்டுகளால் தாக்கப்பட்டனர். இது ஆப்கானிஸ்தானில் இறந்த பிரிட்டிஷ் வீரர்களின் எண்ணிக்கையை 337 ஆக படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பு 2001ல் ஆரம்பித்ததிலிருந்து ஆக்கியுள்ளது.

காபூல் கைப்பாவை ஆட்சியின் நெருக்கடித் தன்மையைக் காட்டும் அடையாளமாக கர்சாய் ஞாயிறன்று நாட்டின் இரண்டாவது பெரிய நகரான காந்தகாரில் உள்ளுர் மூத்தோர்கள் மற்றும் அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுப்பவர்களைச் சந்திக்க இருந்த கூட்டத்தை இரத்து செய்து விட்டார். கர்சாயியுடைய சகோதரர் அஹமத் வாலி கர்சாய் காந்தகாரில் முக்கிய அரசியல் பிரமுகர் ஆவார். பரந்த அளவில் நடக்கும் போதைக் கடத்தலில் பெரும் செல்வம் ஈட்டியாதக க் கூறப்படுபவர். இதைத் தவிர CIA இடமிருந்து ஒரு பெரும் தொகையும் வாடிக்கையாகப் பெறுகிறார். ஆனால் இவராலும் ஒரு ஜனாதிபதி வருகைக்கு பாதுகாப்பை உறுதி செய்ய முடியவில்லை.

இக்கூட்டம் காந்தகாரின் மேற்குப் புறநகர்ப்பகுதியில் அர்கன்டாப் மாவட்டத்தில் நடக்க இருந்தது. இது சமீப வாரங்களில் அமெரிக்கத் தலைமையிலான இராணுவத் தாக்குதல்களின் முக்கிய குவிப்புப் பகுதியாக இருந்தது. அத்தாக்குதல் குறைந்த அளவு வெற்றியைத்தான் கண்டது. கூட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்த இடத்தில் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. மூன்று ராக்கெட்டுக்கள் வெடிக்கப்பட்டதை அடுத்து ஹமித் கர்சாய் அந்த இடத்திற்கு வரவில்லை.

செய்தி ஊடகத் தகவல்கள்படி, தேர்தல் தினம் முழுவதும் காந்தகார் பெரும் குழப்பத்தில் இருந்தது. குண்டுச்சத்தங்கள் நிறைய கேட்கப்பட்ட வண்ணம் இருந்தன. உள்ளூர் கவர்னர் தூர்யலை வெசாவின் கார் அணிவரிசை ஒரு சாலையோர வெடிகுண்டுத் தாக்குதலுக்கு உட்பட்டது. இது அவர் வாக்குச் சாவடிகளைப் பார்வையிடப் போனபோது நடைபெற்றது. நீண்டகாலமாக சக்தி வாய்ந்துள்ள தாலிபன் நகரமான காந்தகார் முழுவதும் தேர்தலுக்கு முன்பு துண்டுப் பிரசுரங்களை வெள்ளமென வெளியிட்டு மக்களை “அமெரிக்கச் செல்வாக்கிற்கு உட்பட்ட தேர்தல்தலில்” வாக்கு அளிக்கக்கூடாது என்று எச்சரித்தது. இரு தொலைபேசி எண்களை மேலதிக தகவல் பெறவும் புகார்களை கொடுக்கவும் வழங்கியிருந்தது.

கர்சாய், ஐ.நா.பொதுச் செயலாளர் பான் கி மூன், வெள்ளை மாளிகை மற்றும் அமெரிக்க இராணுவத் தலைவர் தளபதி டேவிட் பெட்ரீயஸ் அனைவரும் தேர்தலைப் புகழ்ந்து அதை ஒரு வெற்றி எனச் சித்தரிக்க முற்பட்டபோது, பொதுவாக வளைந்து கொடுக்கும் அமெரிக்கச் செய்தி ஊடகம் வெளிப்படையானதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டியிருந்தது.

Time இதழின் வலைத்தளம் தேர்தலை “முன்னரே நடந்தது போன்ற தோற்றத்தைக் கொடுக்கும் மோசமான நிகழ்வு” என்று விவரித்தது. இதைக் கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்புத் தோல்வியுடன் ஒப்பிட்டது. Washington Post இத்தேர்தல் “ஒரு ஏமாற்றத்திற்குட்பட்ட வாக்காளர் தொகுப்பு—ஒரு ஆர்வம் நிறைந்த எழுச்சி” ஆகியவற்றை இத்தேர்தல் வெளிப்படுத்தியது என்று எழுதியுள்ளது

New York Times அங்கு வசந்த காலத்தில் மிகப் பெரிய அமெரிக்க இராணுவத் தாக்குதல் நடத்த இலக்கு கொண்டிருந்த மர்ஜா மாவட்டத்தில் நிருபர் எலிசபெத் பூமில்லரரை இருத்தியது. அவர் மர்ஜாவில் மிகக் குறைந்த 10 சதவிகித அளவுதான் வாக்களித்தனர் என்று குறிப்பிட்டுள்ளார். இதுவும் கூட தெருக்களை காலியாக வைக்க முற்பட்ட தாலிபன் கெரில்லாக்களுக்கும் மரைன் படைகளுக்கும் இடையே நடந்த கடும் மோதல்களுக்கு நடுவே நடந்தது என்றார் அவர்.

“காலை 10.30 அளவில் மர்ஜா உயர்நிலைப் பள்ளியில் இருந்த வாக்குச்சாவடி தேர்தல் பணியாளர்கள் அதுவரை 27 பேர் மட்டுமே வாக்களிக்க வந்திருந்தனர் என்றும் தெருக்களில் கேட்கப்படும் துப்பாக்கிச் சண்டை ஒலி ஏனைய பெரும்பாலான மக்களை ஒதுங்கி இருக்குமாறு செய்துவிட்டது” என்று அவர் எழுதியுள்ளார். “பணியாளர்கள் பேசிக் கொண்டிருந்தபோது ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட இரு கையெறி குண்டுகள் வாக்குச் சாவடிக்கு அருகே கேட்டன. பின்னர் AK-47 ல் இருந்து வந்த தோட்டங்கள் அதே நேரத்தில் வாக்குச் சாவடிக்கு மேல் விரைந்து சென்றதாகக் மரைன் படையினர் கூறினர்.”

பிரிட்டிஷ் செய்தித்தாளான Guardian காபூலில் வாக்காளர்கள் மிரட்டப்பட்ட தகவலைக் கொடுத்துள்ளது. 800 படையினர் Pul-e-Charki உயர்நிலைப் பள்ளியில் வாக்குச் சாவடிக்குள் அணிவகுத்து வந்து எவரேனும் அரசாங்க எதிர்ப்பு வேட்பாளர்களுக்கு வாக்களித்தல் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தனர். “பாதுகாப்பற்ற தெற்குப் பகுதியில் மக்கள் அல் கெய்டாவினால் வாக்களிக்க முடியவில்லை, காபூலில் இங்கே அல் கெய்டா உள்ளது, எங்களை வாக்களிக்க அது அனுமதியாது” என்று ஒரு உள்ளூர்வாசியான காலிக் நூர் கார்டியனிடம் தெரிவித்தார்.