சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா

Japan-China dispute in East China Sea flares up

கிழக்கு சீனக் கடல் குறித்து ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையே மோதல் வெடிக்கிறது

By John Chan
21 September 2010

Use this version to print | Send feedback

சீன மீன்பிடிக் கப்பலொன்றின் தளபதியை ஜப்பானியர்கள் சர்ச்சைக்கு உட்பட்ட கிழக்கு சீனக் கடலில் பகுதியில் தடுத்து வைத்துள்ளமையானது விரைவாக இரு நாடுகளுக்கும் இடையே வார இறுதியில் ஒரு பெரிய ராஜதந்திர மோதலாக வெடித்துள்ளது.

கப்பல் தளபதி ஸான் க்விக்சியோங் விடுவிக்கப்பட வேண்டுமென்று கடுவெறுப்புடன் சீனா கோரிக்கையாக மீண்டும் தெரிவித்திருந்தும், ஒகினாவாத் தீவிலுள்ள ஒரு ஜப்பானிய நீதிமன்றம் ஞாயிறன்று அவர் இன்னும் 10 நாட்களுக்கு காவலில் வைத்திருக்கப்படுவார் என்று அறிவித்தது. செப்டெம்பர் 7ம் தேதி இரு ஜப்பானியக் கடலோரப் பாதுகாப்புக் கப்பல்களுடன் மோதியதற்காக ஸான் கைது செய்யப்பட்டார். பெய்ஜிங்கோ அவர் ஒரு சீனக் குடிமகன், சீனப் பகுதியில் காவலில் வைக்கப்பட்டுள்ளார், எனவே ஜப்பானியச் சட்டம் அவருக்கு பொருந்தாது என்று வலியுறுத்தியுள்ளது.

ஜப்பானிய நீதிமன்றத் தீர்ப்பை எதிர்கொள்ளும் விதத்தில் சீன வெளியுறவு அமைச்சரகச் செய்தித் தொடர்பாளர் மா ஜாவோக்சு எச்சரித்தார்: “ஜப்பான் தொடர்ந்து தவறுகளை இழைத்து வந்தால், சீனா கடுமையான எதிர்நடவடிக்கைகளை எடுக்கும், இதன் விளைவுகள் அனைத்தும் ஜப்பான் தான் ஏற்க நேரிடும்.”

ஜப்பானுடன் அனைத்துவித அமைச்சரவை சார்ந்த மற்றும் மாநிலங்கள் மட்டங்களிலான தொடர்பை தற்காலிகமாக நிறுத்திவிட்டதாக சீனா அறிவித்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையே அதிக எண்ணிக்கையிலான விமானப் பயணங்கள் பற்றிய கலந்துரையாடல் கூட்டம் ஒன்றையும் ரத்து செய்துவிட்டது. அத்துடன் சீனப் பிரதமர் வென் ஜியாபோ மற்றும் ஜப்பானியப் பிரதம மந்திரி நாவோடோ கான் அடுத்த வாரம் ஐ.நா.பொதுச் சபைக் கூட்டத்தில் சந்திப்பதாக இருந்ததும் ரத்து செய்யப்பட்டுவிட்டது.

சந்தேகத்திற்கு இடமின்றி வாஷிங்டன் ஜப்பானிய அரசாங்கத்தைத் தூண்டி விடுகிறது. சமீபத்திய மாதங்களில் ஒபாமா நிர்வாகம் தெற்கு சீனக்கடலில் சீனாவின் உரிமைகளுக்குச் சவால் விட்டு ஒரு கூட்டு அமெரிக்க-தென் கொரிய கடற்படைப் பயிற்சியையும் மஞ்சள் கடற் பகுதியில் பெய்ஜிங்கின் எதிர்ப்புக்களை மீறி நடத்தியுள்ளது. டயோயு தீவுகள் (ஜப்பானில் சென்காகு என அழைக்கப்படும்) ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையே தற்பொழுது நடக்கும் சர்ச்சையின் மையமாகவும், சீன பெருநிலப் பகுதிக்கு அருகே மூலோபாய இடத்திலும் இருக்கின்றன.

கடந்த வாரம் ஆளும் ஜப்பானிய ஜனநாயகக் கட்சித் (DPJ) தலைவரும் மற்றும் நாட்டின் பிரதம மந்திரிப் பதவிக்கான தேர்தலில் சவால் போட்டியாளருமான இச்சிரோ ஒஸாவை வெற்றி கொண்டமைக்கு கானை அமெரிக்கா பாராட்டியுள்ளது. கானின் உறுதியான அமெரிக்கச் சார்பிற்கு மாறான விதத்தில் ஒஸாவா இன்னும் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை மற்றும் சீனாவுடன் நெருக்கமான உறவுகளை விரும்பியிருந்தார். இப்பிரச்சாரத்தின்போது ஒஸாவா வாஷிங்டனுடன் மீண்டும் ஒகினாவாத் தீவில் விவாதத்திற்குரிய அமெரிக்கத் தளம் தக்க வைக்கப்படுதல் குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்தப்பட வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

கடந்த புதன்கிழமை ஜப்பான் நாணயத் தலையீடாக யென்னின் மதிப்பைக் வலுக்கட்டாயமாக குறைப்பது நடந்தபோது டோக்கியோ மீதான வாஷிங்டனின் ஒரு பக்கச் சார்பு அதனுடைய விடையிறுப்பில் தெரிய வந்தது. ஜப்பானின் ஒருதலைப்பட்ச நடவடிக்கை குறித்துக் குறைகூறலானது அமெரிக்க காங்கிரஸ் மற்றும் ஐரோப்பாவில் வெளிவந்திருந்த போதும், ஒபாமா நிர்வாகம் இதுவரை இப்பிரச்சினையில் ஒரு நிதானமான மௌனத்தை கடைப்பிடிக்கின்றது—இது சீனா டாலருக்கு எதிராக யுவானின் மதிப்பை உயர்த்த வேண்டும் என்று பலமுறை கூறிவருவதற்கு முற்றிலும் எதிரிடையானது ஆகும்.

ஜப்பானின் புதிய வெளியுறவு மந்திரியாக செய்ஜி மெஹராவின் நியமனம் பற்றி அமெரிக்கத் துணை அரச செயலாளர் ஜேம்ஸ் ஸ்டீன்பெர்க் கருத்துக் கூறுகையில் வாஷிங்டனில் பல நண்பர்களை மெஹரா கொண்டுள்ளார் என்றும் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் உடன்பாடான வழிமுறைகளைக் கொண்ட பதிவுகளைக் கொண்டுள்ளவராகவும் உள்ளதாக குறிப்பிட்டார். உண்மையில், மெஹரா சீனாவின் மீது கடும் நிலைப்பாட்டாளர் என்ற பெயர் பெற்றவர், அதே போல் அமெரிக்க கூட்டணிக்கு ஆதரவாளரும் ஆவார்.

2005ல் DPJ தலைவர் என்ற முறையில் மெஹரா அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட Centre for Stratgeic and International Studies ல் ஒரு உரை நிகழ்த்தியதில், அதில் சீனாவின் இராணுவ விரிவாக்கம் “உண்மையில் பெரும் கவலை” என்று அறிவித்தார். ஜப்பானிய அரசியலமைப்பில் உள்ள சமாதான விதி என்பது திருத்தப்பட வேண்டும் என்று குரல் கொடுத்ததுடன், இராணுவமானது அமெரிக்காவுடன் சர்வதேச பிரச்சனைகளில் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கூறினார். ஜப்பானில் 2004ம் ஆண்டு ஈராக் போருக்கு ஜப்பானியப் படைகள் அனுப்புவது பற்றி பெருகிய எதிர்ப்பு வந்திருந்தபோதிலும் அவர் இத்தகைய கருத்துக்களைக் கூறினார்.

இதே உரையில் மெஹரா ஜப்பானியப் பெருநிறுவனங்கள் எரிசக்தி வளங்களை பெருக்குவதற்கும் பாதுகாப்பதற்கும் கிழக்கு சீனக் கடலில் சீனாவின் உரிமை கொண்டாடலுக்கு எதிராக இராணுவத்தைப் பயன்படுத்தவேண்டும் என்ற கருத்தையும் முன்பே காட்டியிருந்தார். ஜப்பான் “ஒரு கடல் வலிமை உடைய நாடு, அனைத்துத் திசைகளிலும் கடலால் சூழப்பட்டுள்ளது, அதனிடம் இயற்கை இருப்புக்களானது உண்மையில் இல்லை என்பதைக் குறித்து சிந்தித்தால், ஜப்பானியப் பொருளாதாரமானது வணிக நடவடிக்கைகளே அடிப்படை ஆதாரமாக அமைந்துள்ளது என்று கருதினால், கடல்வழிப் பாதைகளைப் பாதுகாப்பதானது பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று நாம் உணர வேண்டும்.” எனக் கூறினார்.

கடந்த வெள்ளியன்று அவருடைய முதல் செய்தியாளர் கூட்டத்தில் மெஹரா சீனா ஒருதலைப்பட்சமாக கிழக்குச் சீனக் கடல் பகுதியில் ஜப்பான் உரிமை கொண்டாடும் இடங்களில் எரிவாயுவைக் பெறுவதற்காக தோண்டுவதற்கு தயாரிப்புக்கள் நடத்திவருகிறது என்று குற்றம் சாட்டினார். பல ஆண்டுகள் சர்ச்சைக்குப் பிறகு, 2008ல் இரு நாடுகளும் கூட்டாக எண்ணெய், எரிவாயு இருப்புக்களை பெருக்குவது என்று ஒப்புக் கொண்டன. சமீபத்திய அழுத்தங்களின் நடுவே, சீனா இப்பொழுது இம்மாதம் நடைபெற இருந்த எரிவாயு வயல்கள் குறித்து திட்டமிட்டிருந்த விவாதத்தைத் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. மெஹரா “தேவையான நடவடிக்கைகள்” எடுக்கப்படும் என்று அச்சுறுத்தியுள்ளார். இவற்றில் பெய்ஜிங் தோண்டும் நடவடிக்கைகளைத் தொடர்ந்தால், ஜப்பானும் இதே பகுதியில் எரிவாயுவிற்கான தோண்டுதலை மேற்கொள்ளும்.

கிழக்கு சீனக் கடலில் சர்ச்சைக்குட்பட்ட பகுதி 210,000 சதுர கிலோமீட்டர்களைக் கொண்டது. இதில் 970 கி.மீ. நீளப்பகுதி ஒன்று, 495.5 பில்லியன் கன மீட்டர்கள் எரிவாயு மற்றும் 20 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் ஆகியவை இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சீனா 2008ம் ஆண்டு உடன்படிக்கையை முறிக்கும் விதத்தில் சர்ச்சைக்குட்பட்ட இடத்திற்கு அருகே தோண்டும் செயல்களைத் தொடங்கியுள்ளதாக டோக்கியோ குற்றம் சாட்டியுள்ளது. இது ஜப்பான் உரிமை கோரும் “பிரத்தியேக பொருளாதாரப் பகுதியில்” இருந்து எரிவாயுவை உறிஞ்சிவிடும்.

டயோயு தீவானது சர்ச்சைக்குட்பட்ட பகுதியில் உள்ளது. இது எரிவாயு வயல்களுக்கு மிக அருகேயும் உள்ளது. தீவுக் கூட்டங்களுக்குப் பாதுகாப்புக் கொடுப்பதற்காக ஜப்பான் 20 கடலோரப் பாதுகாப்புக் கப்பல்களை அப்பகுதியில் நிறுத்தி முறையான விமானவழி ரோந்துகளை ஒவ்வொரு நாளும் மேற்கோள்ளுகிறது. அருகிலுள்ள தீவுகளில் அப்பகுதியில் நடப்பதைக் கண்காணிப்பதற்கு ராடர் நிலையங்களையும் டோக்கியோ நிறுவியுள்ளது. கடந்த இரு ஆண்டுகளில் சீனாவும் இன்னும் கடுமையான ஆக்கிரோஷ நிலைப்பாட்டை அடைந்து, பல போர்க்கப்பல்கள், போர் விமானங்களை டயோயு தீவுகளைச் சுற்றியுள்ள எரிவாயு வயல்களை ரோந்து பார்க்கிறது. சீன, ஜப்பானிய கப்பல்கள், விமானங்களுக்கு இடையே பல மோதல்களும் நிகழ்ந்துள்ளன.

கடந்த வெள்ளியன்று மெஹரா சீனாவின் பொதுவான இராணுவக் கட்டமைப்பை வினாவிற்கு உட்படுத்தி பெய்ஜிங்கிடம் இருந்து “ஒரு விளக்கத்தைக்” கேட்டுள்ளார். உண்மையில் கான் அரசாங்கம் “சீன அச்சுறுத்தலை” பயன்படுத்தி ஜப்பானிய இராணுவத்தின் விரிவாக்கத்தை நியாயப்படுத்த முற்படுகிறது. Kyodo செய்தி நிறுவனம் திங்களன்று டோக்கியோ நாட்டின் தற்பாதுகாப்புத் தரைப்படைகளை 155,000ல் இருந்து 168,000 என அதிகரிக்கும் திட்டம் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளது—இது 1972க்குப் பிறகு முதலாவது விரிவாக்கமாகும். ஜூலை மாதம் கானின் மந்திரிசபையானது ஜப்பானிய நீர்மூழ்கிப் போர்க் கப்பல் பிரிவில் விரிவாக்கத்தை அறிவித்துள்ளது—இது 1976 ல் இருந்து தொடர்ந்து வரும் ஜப்பானிய குறைந்த எண்ணிக்கையிலான நீர்மூழ்கிக் கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாகும்.

பொருளாதார, மூலோபாய நலன்கள் இடருக்கு உட்பட்ட நிலையில், டோக்கியோ மற்றும் பெய்ஜிங் இரண்டுமே தற்பொழுதைய சர்ச்சையைப் பயன்படுத்தி பிற்போக்குத்தன தேசியவாத உணர்வைத் தூண்டுவதுடன் உள்நாட்டில் உள்ள சமூக, அரசியல் அழுத்தங்களைத் திசைதிருப்ப முயல்கின்றன. ஹாங்காங் செய்தி ஊடகமானது ஜப்பானில் இருக்கும் பல சீன குடியேற்றப் பள்ளிகள், கடந்த சில நாட்களாக வெடிகுண்டு அச்சுறுத்தலைகளைப் பெற்றுள்ளதாகவும், வலதுசாரி ஜப்பானியத் தேசியவாதிகளிடம் இருந்து பழிதூற்றும் கடிதங்களைப் பெறுவதாகவும் தெரிவித்துள்ளது. சீனாவானது ஜப்பானியப் பாதுகாப்பு, பொலிஸ் வலைத்தளங்களில் “சைபர் தாக்குதல்களை” நடத்தியதாக ஆதாரமற்ற கூற்றுக்களை கடந்த வாரம் ஜப்பானியச் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

சீனாவில் சிறு அளவிலான ஜப்பானிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களானது 1931ல் மஞ்சூரியா மீது ஜப்பான் படையெடுத்த நினைவு தினமான கடந்த சனிக்கிழமையன்று தொடர்ந்து நடைபெற்றன. இந்த எதிர்ப்புக்களானது அரசாங்கத்தின் உட்குறிப்பான ஆதரவு இல்லாமல் நடந்திருக்க முடியாது. “ஜப்பான் வீழ்க”, “டயோயுத் தீவுகளில் இருந்து வெளியேறுக” மற்றும் “ஜப்பானிய அரக்கர்களை அகற்றுக” போன்ற இனவெறி கோஷங்கள் இவற்றில் செல்வாக்கு செலுத்தியிருந்தன.

சீனாவில் ஜப்பானுக்கு எதிரான நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ளன. திங்களன்று சீன இராணுவ உயர்கல்வி அறிவியல் கூடத்தின் தளபதி பெங்குவாங்கியன், தூண்டிவிடும் வகையில் கிழக்கு சீனக் கடல் எரிவாயு வயல்கள் குறித்த பேச்சுக்களானது ஜப்பானுடன் நிரந்தரமாக ஒத்திப்போடப்பட வேண்டும் என்று கூறினார். அதே போல் டயோயு தீவுகளுக்குச் சீன மீன்பிடிக்கும் கப்பல்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க ஆயுதமேந்திய ரோந்துக் கப்பல்கள் அனுப்பப்பட வேண்டும், டயோயு தீவுகள் சீன இராணுவப் படைகளால் “சுடும் பயன்பாட்டுப் பகுதியாக” அமெரிக்கா பனிப் போர்க் காலத்தில் பயன்படுத்தியது போல் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

பொருளாதார வகையில் பதிலடி கொடுப்பதும் விவாதிக்கப்பட்டு வருகிறது. சீன சமூக அறிவியல் உயர்கல்விக் கூடத்தின் பெங் ஜாவோக்யி ஜப்பானியப் பொருட்களைப் புறக்கணித்தலானது ஜப்பானிய சொத்துக்களை வாங்குவதைப் போன்ற திறனைக்கொண்டது அல்ல என்றும், இது யென்னின் மதிப்பை கட்டாயமாக உயர்த்தி, ஜப்பானில் ஒரு மந்த நிலையை உருவாக்கும் என்றும் வாதிட்டுள்ளார். ஏனைய வர்ணனையாளர்களும் சீனாவிலுள்ள ஜப்பானிய வணிகங்கள் மீது அதிக வரிகள் விதிக்கப்பட வேண்டும் மற்றும் ஜப்பானுக்கு இயற்கை இருப்புக்களை ஏற்றுமதி செய்வதில் தடைகள் வேண்டும் என்று கூறியுள்ளனர்

டயோயுத் தீவுகள் குறித்து விரைவில் அதிகரிக்கும் சர்ச்சையானது இரு முக்கிய சக்திகளுக்கு இடையே மோதல் நிகழும் அபாயத்தை உயர்த்துகிறது. மேலும் ஒபாமா நிர்வாகம் பொறுப்பற்ற முறையில் வேண்டுமேன்றே அப்பகுதி முழுவதும் சீனாவுடன் அழுத்தங்களைத் தீவிரப்படுத்துவதையும் கோடிட்டுக் காட்டுகிறது.