சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan plantation workers must launch an independent wage struggle

இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் ஒரு சுயாதீனமான சம்பள உயர்வுப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்

By the Socialist Equality Party (Sri Lanka)
1 April 2011
Use this version to print | Send feedback

இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் மீது தொழிற்சங்கங்களால் கடந்த 2009ல் சுமத்தப்பட்ட இரண்டு வருட சம்பள கூட்டு ஒப்பந்தம் மார்ச் 31ம் திகதியுடன் காலாவதியாகிவிட்டது. கம்பனிகளின் இலாபங்களைப் பாதுகாக்கும் பொருட்டு, சம்பளத்தை வறிய மட்டத்திலேயே வைத்திருக்க ஏற்கனவே இன்னொரு காட்டிக்கொடுப்பு தயாரிக்கப்பட்டு வருகின்றது.

தொழிலாளர்கள் தகுதியான சம்பளம் மற்றும் நிலமைகளுக்காக ஒரு பிரச்சாரத்தை திட்டமிட்டு முன்னெடுப்பதற்கு, தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமடைந்து, நடவடிக்கை குழுக்களை அமைப்பதன் மூலம் பிரச்சினையை தம் கையில் எடுக்க வேண்டும் என சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) அழைப்புவிடுக்கின்றது. அத்தகைய போராட்டத்துக்கு சோ.ச.க சகல அரசியல் உதவியையும் வழங்குவதாக உறுதியளிக்கின்றது.

சோ.ச.க. தொழிலாளர்களின் செலவில் இலாபத்தினை பெருக்குவதற்கு பயன்படும் நாட் கூலி முறையை நிறுத்துமாறு கோருகின்றது. காலாண்டுக்கான பணவீக்க சுட்டெண்ணின் அடிப்படையில், வாரத்தில் 40 மணிநேர வேலைக்கு 30,000 ரூபா உத்தரவாதமளிக்கப்பட்ட மாத சம்பளம் வழங்குமாறு நாம் கோருகிறோம். தோட்டத் தொழிலாளர்கள் முழு சம்பளத்துடனான மருத்துவ விடுமுறை, பொருத்தமான ஓழ்வூதியம் மற்றும் எதந்தவொரு மேலதிக நேர வேலைக்கும் மேலதிக சம்பளம் பெற வேண்டும்.

தொழிற் சங்கங்கள் இத்தகைய கோரிக்கைகளுக்காக ஒருபோதும் போராடப்போவதில்லை. ஜனநாயக மக்கள் முன்னணியின் [ஜ.ம.மு.] தலைவர் மனோ கணேசன் உலக சோசலிச வலைத் தளத்திற்கு தெரிவித்த கருத்துக்கள், அவர்கள எல்லோரினதும் நிலைப்பாட்டை சுருக்கிக் கூறுகிறது: ''நாங்கள் 500 ரூபா நாட் சம்பளத்துடன் 250 ரூபா கொடுப்பனவும் கோருகின்றோம். அதைவிடக் கூடுதலாக கேட்க முடியாது. நாங்கள் அதைவிட கூடுதலாகக் கேட்டால் தேயிலைத் தொழிற்துறை வீழ்சியடைந்துவிடும்'', என அவர் கூறினார்.

வேறு வார்த்தைகளில் சொன்னால், தொழிலாளர்களதும் அவர்களின் குடும்பங்களதும் அவசரத் தேவைகளை விட, தேயிலை தொழிற்துறையினதும் பெரும் கூட்டுத்தாபனங்களதும் கொள்ளை இலாபமே முதலாவதாக இருக்கின்றது. உலக சந்தைகளில் முடிவுக்கே வராத ஆபத்தான போட்டியில் போட்டியிடுவதற்கு இலங்கை கூட்டுத்தாபனங்களுக்கு உதவுவதற்காக, உலகம் முழுவதும் உள்ள தங்களின் சமதரப்பினரைப் போல், பெருந்தோட்டத் தொழிற் சங்கங்களும், தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களைப் பலியிடுகின்றன.

பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாகவே, இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தின் [இ.மு.ச.] தலைவர் லலித் ஒபயசேகர,  ''சம்பள அதிகரிப்பு வழங்குவதற்கான சாத்தியப்பாடு உற்பத்தி திறனில் தங்கியிருக்கின்றது," என ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டார். தொழிற்சங்கங்கள், செய்து முடிப்பதற்கு கடினமான உற்பத்தி இலக்குகளுடன் அற்ப சம்பள அதிகரிப்பை முடிச்சுப்போட்டுவிட இருக்கும் நிலையில், மீண்டுமொருமுறை "பேச்சுவார்த்தைகளை" முதலாளிமார் சுரண்டிக்கொள்வர்.

கம்பனிகள் பிரமாண்டமான இலாபங்களைப் பெற்றுள்ள போதும் இந்த நிலைமை காணப்படுகின்றது. 23 தேயிலை மற்றும் இறப்பர் கம்பனிகள், குறைந்த சம்பளத்தை கொடுத்து உற்பத்தி பொருட்களை அதிக விலைக்கு விற்றதன் காரணமாக, அவை 2009ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது தமது இலாபத்தை 935 வீதத்தால் அதிகரித்துக்கொண்டுள்ளன. 2009ல் இலாபங்கள் 453 மில்லியன் ரூபாயில் இருந்து, 2010ல் ரூபா 4,690 வரை வேகமாக அதிகரித்துள்ளது.

ஓப்பீட்டளவில், தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்கள் சீரழிந்து போயுள்ளன. விவசாயத் தொழலாளர்களுக்கான உண்மையான சம்பள அளவுச் சுட்டெண், 2004ம் ஆண்டு 93 ஆக இருந்து 2009ல் 83 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. 2010 பணவீக்கத்தை கணக்கில் கொள்ளும் போது, இந்த சுட்டெண் மேலும் சுமார் 78 புள்ளிகளால் வீழ்சியடைந்துள்ளது. வேறு வார்த்தைகளில் சொன்னால், இந்த பழைமையான உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களை அடிப்படையாகக் கொண்டால் கூட, தோட்டத் தொழிலாளர்கள் தமது சம்பளத்தில் சுமார் ஆறு மடங்கை இழந்துள்ளனர்..

தொழிற் சங்கங்கள் தங்களின் உரிமைகளுக்காக இனியும் போராடும் என்ற போலி நம்பிக்கை தொழிலாளர்களிடம் இருந்தால், கடந்த 2009ல் இறுதிச் சுற்றுப் பேச்சுவார்த்தையின் போது என்ன நடந்தது என்பதை அவர்கள் மீண்டும் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் [இ.தொ.க.] -கம்பனிகளின் முன்னேற்றத்துக்காக- ஆறு மாதங்களாக பேச்சுவார்த்தைகளை இழுத்தடித்து, பின்னர் தொழிலாளர்களின் முதுகுக்குப் பின்னால் ஒரு உடன்படிக்கையில் கையெழுத்திட்டது. தொழிற்சங்கங்கள் ஆரம்பத்தில் கோரிய 750 ரூபா (6.50 டொலர்) நாள் சம்பளத்தில் இருந்து, வருகை மற்றும் உற்பத்தி இலக்குகளுடன் முடிச்சுப்போட்டு வெறும் 405 ரூபாவுக்கு இறங்கி வந்தன. இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (LJEWU) மற்றும் தோட்டத் தொழிற் சங்க கூட்டுக் கமிட்டியும் உடனடியாக இந்த வியாபாரத்துக்கு ஆதரவளித்தன.

சீற்றமடைந்த பத்தாயிரக் கணக்கான தொழிலாளர்கள் மெதுவாக வேலை செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்தார்கள். எவ்வாறாயினும், மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு), தொழிலாளர் தேசிய சங்கம் (NUW), ஜனநாயக மக்கள் முன்னணி (DWC) மற்றும் அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கம் (ACPW) போன்ற ஏனைய தொழிற்சங்கங்கள் நடவடிக்கையில் இறங்கின. இந்த தொழிற்சங்கங்கள் உடன்படிக்கைக்கு எதிராகப் போராடுவதாக உறுதியளித்த போதிலும், தீபாவளிப் பண்டிகைக்குப் பின்னர் வரையும் ஒரு மாதமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் தாமதித்த பின்னர், எல்லோருமாக இந்தப் பிரச்சாரத்தினை முடித்துக்கொண்டனர்.

இந்தத் தொழிற்சங்கங்களில் எதுவும், ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷவையும் மற்றும் உடன்படிக்கைக்கு ஏற்கனவே ஆதரவளித்திருந்த அவரது அரசாங்கத்தையும் சவால் செய்யத் தயாராகவில்லை. இ.தொ.கா. போலவே ம.ம.மு. யும் இதுவரையும் ஆளும் கூட்டமைப்பின் பங்காளிகளாக இருந்து வருகின்றது.

2006ல் சம்பள உயர்வு சம்பந்தமாக நடந்த வேலை நிறுத்த இயக்கத்தினைக் காட்டிக் கொடுத்தமைக்கு இதே தொழிற்சங்கள் பொறுப்பாகும். தொழிற்சங்க நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வருமாறு இ.தொ.க. விடுத்த உத்தரவை இலட்சக் கணக்கான தொழிலாளர்கள் எதிர்த்து நின்றனர். நேரடியாகத் தலையிட்ட ஜனாதிபதி இராஜபக்ஷ, பிரிவினைவாதத் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ''உதவுவதாக'' வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களை கண்டனம் செய்தார். தோட்டப்புற மாவட்டங்களில் தொழிலாளர்களை மிரட்டி வேலைக்கு திரும்ப வைப்பதற்காக, ம.ம.மு. தலைவர் பெ. சந்திரசேகரனுடன் பிரதி தொழில் அமைச்சர் மேர்வின் சில்வாவும் சென்றிருந்தார். தொழிலாளர்கள் அவர்களை எதிர்த்து நின்றனர், ஆனால் சந்திரசேகரன், சம்பள திட்டத்துக்கு ஆதரவு அளித்ததுடன் வேலை நிறுத்தத்தினைக் கீழறுத்தார்.

இந்த தொழிற்சங்கங்கள் முற்றிலும் ஜனநாயக-விரோத அமைப்புகளாகும். இவற்றில் தொழிலாளர்களுக்கு இடம் கிடையாது. உதாரணமாக, இ.தொ.கா. வை எடுத்துக்கொள்வோம். உயர்மட்ட பதவிகள் தீர்மானிக்கப்படுகின்ற அதன் வருடாந்த மாநாடு என சொல்லப்படுவது, எப்போதும் இ.தொ.கா. அதிகாரத்துவத்தின் ஆதரவாளர்களை கொண்டே நடத்தப்படும். தோட்டத் தலைவர்கள், அதே போல், இ.தொ.கா. உயர்மட்டத்தினரால் தேர்வு செய்யப்பட்டு பணிக்கு வைக்கப்படும் பெண்கள் மற்றும் முன்னறை அலுவலர்களுக்கும் மட்டுமே பிரதிநிதித்துவம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

வருடாந்த மாநாட்டில் ஜனநாயத்தை காட்சிப்படுத்துவது கூட பெருமளவில் ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு தசாப்தங்களாக, இந்த மாநாடுகள் வழமையற்றதாகி வருகின்றன. அதிகாரத்துவ உயர்பீடத்தின் தன்னிச்சையான முடிவுகளாலேயே அனைத்தும் தீர்மானிக்கப்படுகிறது. அதன் தலைமைத்துவம், அதன் கொள்கைகளுக்கு விரோதமான எந்தவொரு எதிர்ப்பையும் தீர்த்துக்கொள்வதற்கு அச்சுறுத்தல், குண்டர் நடவடிக்கை மற்றும் பொலிசையும் கூட பயன்படுத்துகிறது.

2009 சமபளப் போராட்டத்தின் போது, அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், தமது கோரிக்கைகளுக்காகப் போராட சகல தொழிற்சங்கங்களில் இருந்தும் சுயாதீனமாக, துணிச்சலுடன் தமது சொந்த நடவடிக்கை குழுவை அமைத்துக்கொண்டனர். ஒவ்வொரு தோட்டத்திலும் இவ்வாறான நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு சகல தொழிலாளர்களையும் சோ.ச.க. ஊக்கிவிக்கின்றது. தோட்டத் தொழிலாளர்கள், நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் உள்ள சிங்களம்-பேசும் தொழிலாளர்களுக்கும் இத்தகைய நடவடிக்கைகளை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்க வேண்டும்.

சகல சமபளக் கோரிக்கைகளும், தொழிலளர்களாலேயே சுயாதீனமாக திட்டமிடப்பட வேண்டும். தொழிற்சங்கங்களால் அல்ல. அந்தக் காரணத்துக்காக, ஒரு தொகை கோரிக்கைகளை தீர்மானிக்கவும் அவற்றுக்காகப் போராட ஒரு பிரச்சாரத்தை திட்டமிடவும், நடவடிக்கைக் குழுவின் மாநாடு ஒன்று கூட்டப்பட வேண்டும்.

சோ.ச.க. பின்வரும் கோரிக்கைகளை பிரேரிக்கின்றது:

* தொழிலாளர்களை தொடர்ந்தும் வறுமைக்குள்ளும் அரை அடிமைகளாகவும் வைத்திருக்கும் முறைமைக்கு முடிவுகட்டி, அதற்குப் பதிலாக வாரத்தில் 40 மணித்தியால வேலைக்கு மாத சம்பளமாக 30,000 ரூபா உத்தரவாதமளிக்கப்பட வேண்டும்.

* முழு செலவும் உள்ளடக்கப்பட்ட மருத்துவ பாதுகாப்பு, பொருத்தமான ஓயுவூதியம் மற்றும் மேலதிகநேர வேலைக் கொடுப்பனவை ஸ்தாபித்தல்.

* தண்ணீர், மின்சாரம் மற்றும் சுகாதார வசதிகளுடனா வீடு, அதேபோல் பொருத்தமான கல்வி மற்றும் சுகாதாரப் பராமரிப்பு தோட்டத் தொழிலாளருக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் கிடைக்கப் போராட வேண்டும்.

இவைகள் கம்பனிகள் மற்றும் அவர்களின் தொழிற்சங்க கூட்டாளிகளினால் வழங்கப்படும் சலுகைகள் அல்ல, மாறாக அவை உழைக்கும் மக்களுக்கான அடிப்படை உரிமைகளாகும்.

தொழிலாளர்கள் மாயைக்குள் அகப்படக் கூடாது. இத்தகைய கோரிக்கைகளுக்கான பிரச்சாரம், அரசியல் அர்த்தமுடையாதாகும். அது இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிரானது மட்டுமன்றி, தவிர்க்கமுடியாமல் கூட்டுத்தாபனங்களின் பக்கமே நிற்கும் முழு அரசியல் ஸ்தாபனத்துக்கும் எதிரான அரசியல் போராட்டமாகும். ஒரே மாதிரியான பிரச்சினைகளை எதிர்கொள்ளும், இலங்கையிலும் உலகம் பூராவும் உள்ள அவர்களது வர்க்க சகோதர சகோதரிகளே தோட்டத் தொழிலாளர்களின் உண்மையான நண்பர்களாவர். தோட்டத் தொழிலாளர்கள் அவர்கள் பக்கமே திரும்ப வேண்டும்.

இதற்கு ஒரு அரசியல் வேலைத் திட்டம் தேவை. தொழிலாளர்களின் நடவடிக்கைகள், அரசாங்கத்துக்கு அல்லது கூட்டுத்தாபன உயரடுக்குக்கு அழுத்தம் கொடுப்பதையே குறிக்கோளாகக் கொள்ளாமல், கிராமப்புற மக்களுக்கு தலைமைகொடுத்து அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதை இலக்காக் கொண்டால் மட்டுமே, அவர்களால் எந்தவொரு சலுகையையும் வெல்ல முடியும். இதனாலேயே, உலகம் பூராவும் சோசலிசத்துக்கான போராட்டத்தின் பாகமாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசு என்ற வடிவத்தில் தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்துக்காக சோ.ச.க. போராடுகிறது. இந்த முறையில் மட்டுமே, ஒருசில செல்வந்தர்களின் இலாபத்தினை விட, பெரும்பான்மையானவர்களின் அவசரத் தேவைகளை இட்டு நிரப்புவதற்காக சமூகத்தினை மறு ஒழுங்கு செய்ய முடியும். இந்தப் போராட்டத்தினை முன்னெடுக்குமாறு நாம் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.