சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : லிபியா

US-NATO bombings kill civilians in Tripoli

திரிப்போலியில் அமெரிக்க-நேட்டோ குண்டுவீசி பொதுமக்களை கொல்கிறது

By Bill Van Auken
1 April 2011

Use this version to print | Send feedback

திரிப்போலி மற்றும் இதர லிபிய நகரங்கள் மீது அமெரிக்க-நேட்டோ படை நடத்திய விமான தாக்குதல்களில் பலியாகும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக லிபிய தலைநகரிலுள்ள வத்திக்கானின் தலைமை பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

தாக்குதலில் பொதுமக்கள் பலியாவதாக லிபியா அரசாங்கம் கூறுவதை மறுத்து அது "பரப்புரை" என்றும், பொதுமக்களை பாதுகாப்பதற்கான "மனிதாபிமான" நடவடிக்கையே இந்த தாக்குதல் என்றும் பெரும்பான்மையான மேற்குலக ஊடகங்களின் பேராதரவுடன் வாஷிங்டனும், அதன் நேட்டோ கூட்டாளிகளும் மேற்கொண்ட முயற்சிக்கு இந்த தகவல் பலத்த அடியாக விளங்குகிறது.

மனிதாபிமானம் என்றழைக்கப்படுகின்ற இந்த விமான தாக்குதல்கள் திரிப்போலியின் பல்வேறு பகுதிகளில் டஜன் கணக்கான பொதுமக்களின் உயிர்களை பறித்துக்கொண்டன" என்று திரிப்போலி தேவாலயத்தின் அப்போஸ்தலர் பிஷப் Giovanni Innocenzo Martinelli வத்திக்கான் செய்தி சேவையான Agenzia Fides யிடம் தெரிவித்தார்.

"குறிப்பாக பஸ்லிம் மாவட்டத்தில் குண்டுவீச்சினால் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் கொல்லப்பட்டனர்" என்று அவர் கூறினார். "இருந்தாலும் குண்டு வீச்சினால் சில மருத்துவமனைகளும் மறைமுகமாக பாதிக்கப்பட்டுள்ளதை நேற்று நான் தெரிவித்தேன். தெற்கு திரிப்போலியிலிருந்து 100 மைல்கள் தொலைவிலுள்ள நகரமான மிஸ்டாவில், இவ்வாறு சேதமடைந்த மருத்துவமனைகளில் ஒன்று உள்ளது என்பதை என்னால் இப்போது உறுதியாக கூறமுடியும்."

மிஸ்டாவில் ஆயுதக் குவியல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சு தாக்குதலில் மருத்துவமனை மற்றும் அருகிலுள்ள வீடுகள் சேதமடைந்ததோடு, பொதுமக்களில் 13 பேர் காயமடைந்ததாக ஈரோ நியூஸ் தொலைக்காட்சி சேனல் ஒன்று தெரிவித்தது.

இந்த குண்டுவீச்சுகளினால் ஏராளமானோர் காயமடைந்ததும், "தங்களது உறவினர்களை இழந்ததும் எனக்கு உறுதிபடுத்தப்பட்டுள்ளது" என்று ஈரோ நியூஸிற்கு அளித்த பேட்டி ஒன்றில் பிஷப் மார்ட்டினெல்லி தெரிவித்தார்.

பொதுமக்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் அமைந்திருந்த ஆயுதக் கிடங்கு ஒன்றின் மீது நடத்தப்பட்ட விமான தாக்குதல் ஒன்றை அவர் மற்றொரு உதாரணமாக சுட்டிக்காட்டினார். "இந்த கட்டிடங்கள் மூன்று, நான்கு மணி நேரங்களுக்கு வெடித்து" மேலும் பலரை கொன்றதாக அவர் கூறினார்.

"குண்டு வீச்சுகள் மிக துல்லியமாக குறிவைக்கப்படுவதாகவே தெரிகிறது என்பது உண்மையாக இருக்குமானால்", "பொதுமக்களின் வசிப்பிடங்களின் மத்தியிலுள்ள இராணுவ நிலைகளை அவை தாக்குவதால், உள்ளூர் மக்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதும் கூட உண்மையானதாகவே இருக்கும்" என்று ஃபைட்ஸ் செய்தி ஏஜென்சியிடம் மார்ட்டினெல்லி தெரிவித்தார்.

அந்த பிஷப் மேலும் கூறினார்: "திரிப்போலியின் நிலைமை நாளுக்கு நாள் மிக மோசமடைந்து வருகிறது. பெட்ரோல் நிலையங்களில் வரிசையாக அணிவகுத்து  நிற்கும் கார்களே, எரிபொருள் பற்றாக்குறை மிக மோசமடைந்துள்ளதை நிரூபிக்கிறது. இராணுவ சண்டை ஒரு "இக்கட்டு" என்று விளித்த அவர், லிபிய மக்களுக்கிடையே நடைபெறும் கொலைகளை முடிவுக்கு கொண்டுவர கடாபியை கண்ணியத்துடன் வெளியேற வைக்கும் இராஜதந்திர தீர்வை" வலியுறுத்தினார்

தாக்குதலில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதை பற்றி தாம் விசாரிப்பதாக, லிபியாவுக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான போருக்கு வியாழக்கிழமையன்று முறைப்படி அதிகாரம் அளிக்கப்பட்ட நேட்டோ தெரிவித்தது. லிபியாவில் நேட்டோ தாக்குதலுக்கு தலைமை வகிக்கும் கனடா அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் சார்லஸ் பவுச்சார்ட், பிஷப்பின் (உயிர்சேத) கணக்கு "செய்தி தகவல்" என்று கூறியதோடு, "மிக கண்டிப்பான விதிமுறைகள் கொண்ட ஒப்பந்தம்" மற்றும் "எங்களுடைய ஐக்கிய நாடுகள் கட்டளையின் சட்டபூர்வ அனுமதிக்கு உட்பட்ட விதிமுறைகளின்" கீழ் நேட்டோ செயல்படுகிறது என்றும் தெரிவித்தார்." ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் தொடர்ந்து கொல்லப்படுவதாக கூறப்பட்டதற்கு நேட்டோ தெரிவித்த அதே பதில் கருத்துக்களையே மீண்டும் கூறிய அவர்," இந்த தகவலின் மூலத்தை நான் மெச்சுகிறேன், ஆனால் அந்த பிரச்சனைகள் ஒவ்வொன்றையும் நான் தீவிரமாக எடுத்துக்கொள்கிறேன் என்று குறிப்பிடுவது நல்லதாக இருக்கும்" என அவர் மேலும் கூறினார்.

மற்றொரு சம்பவத்தில், தெற்கு திரிப்போலியிலிருந்து சுமார் 55 மைல்கள் தொலைவிலுள்ள கோரம் கிராமத்தில் 18 மாத கைக்குழந்தையான அல்-ஸ்வேஷியின் வீட்டிற்கு அருகேயுள்ள ஆயுதக் குவியல் மீது அமெரிக்கா-நேட்டோ போர் விமானங்கள் நடத்திய தாக்குதலின்போது கொல்லப்பட்ட அக்குழந்தையின் குடும்பத்தினரை அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் பேட்டியெடுத்தது.

தங்களது குடும்பத்தினரது வீடு சுமார் காலை ஆறு மணி அளவில் குண்டுவெடிப்பினால் வெடித்து சிதறி, வீட்டின் சுவர் ஓட்டை போடப்பட்டு இடிந்துகிடந்ததாக அந்த இளம் சிறுவனின் தாயார் கூறினார். அவர் தூங்கிக் கொண்டிருந்த தனது மகனை, அவனது முகத்தின் ஒருபக்கத்தில் கூர்மையான தகரத் துண்டு ஒன்று துளைத்து இருந்தபடி கண்டார்.

"அவனது இரத்தம் எனது கையில் வழிந்துகொண்டிருந்தது" என அவர் அழுதபடியே கூறினார்." அவன் தனது கையால் என்னை தொட்டு 'அம்மா, அம்மா', என்று அவன் அழுதான்.

அந்த குடும்பம் அவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றது, அங்கே அவனுக்கு தீக்காயங்கள் மற்றும் எலும்பு முறிவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது, ஆனாலும் அன்றிரவே அவன் இறந்துபோனான்.

விமான தாக்குதலால் நடந்த குண்டுவெடிப்பினால் அந்த பகுதியில் மற்ற ஏராளமானோர் காயமடைந்ததாகவும், வீடுகள் சேதமடைந்ததாகவும் அருகிலுள்ளவர்கள் தெரிவித்தனர்.

தாக்குதலிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க "தேவையான அனைத்து நடவடிக்கைகளுக்கும்" அனுமதி அளிக்கும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் 1973 தீர்மானத்தை துணைக்கழைத்து லிபியா மீதான தங்களது ஏகாதிபத்திய தாக்குதலுக்கு சட்டபூர்வ உரிமை உள்ளதாக வாஷிங்டனும், அதன் நேச நாடுகளும் கூறின. பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்று கூறப்படும் அப்பாவி பொதுமக்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட இந்த "நடவடிக்கைகள்" அதிகரிக்கும் ஆதாரமாக அது ஆகிவிட்டது.

பொதுமக்கள் உயிரிழப்பதாக வெளியான செய்திகளினால், அமெரிக்க-நேட்டோ நடவடிக்கை பல நாடுகளின் கண்டனத்திற்குள்ளானது.

அனைத்து பகுதிகளிலும் பறந்து தாக்குதல் நடத்த அனுமதித்த ஐ.நா. தீர்மான வாக்கெடுப்பை ரஷ்யா, இந்தியா, பிரேசில் மற்றும் ஜேர்மனியுடன் இணைந்து புறக்கணித்த சீனா, போர்நிறுத்தம் செய்யுமாறு புதன்கிழமையன்று வேண்டுகோள் விடுத்தது. லிபிய தலைவர் மும்மர் கடாபியை பதவியிலிருந்து தூக்கி எறியும் இராணுவ நடவடிக்கைக்கு மிக உரத்த குரல் கொடுத்தவர்களில் ஒருவரான பிரெஞ்சு அதிபர் நிக்கோலா சார்க்கோசியுடனான சந்திப்பின்போது உலக நாடுகள் "அமைதிக்கு ஒரு வாய்ப்பளிக்க வேண்டும்" என்று சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ வலியுறுத்தினார்

.நா. தீர்மானத்தின் நோக்கம் வன்முறையை நிறுத்தி பொதுமக்களை பாதுகாப்பதுதான்" என்று சார்க்கோசியுடனான சந்திப்பின்போது ஹூ கூறியதாக சீன அரசு தொலைக்காட்சி குறிப்பிட்டது. "இராணுவ நடவடிக்கைகள் அப்பாவி பொதுமக்களுக்கு பேரழிவை ஏற்படுத்தி, பாரிய மனித நெருக்கடிகளை உருவாக்குமானால், அது பாதுகாப்புச் சபையின் உண்மையான நோக்கத்தை மீறுவதாகிவிடும்."

லிபியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், அங்குள்ள சுமார் 18.8  பில்லியன் டொலர் மதிப்பிலான சீன முதலீடுகளை நிறுத்திவைத்துள்ளதோடு, லிபியாவின் மிகப்பெரிய ஆசிய வாடிக்கையாளரான சீனாவுக்கான லிபியாவின் எண்ணெய் ஏற்றுமதியையும் தொடரமுடியாததாக தெரிகிறது.

.நா. பாதுகாப்பு சபையின் நிரந்தரமற்ற உறுப்பினர் என்ற வகையில் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த தென்னாபிரிக்காவும், இதேபோன்று போர் நிறுத்த மற்றும் அனைத்து தரப்பும் "கட்டுப்பாட்டுடன்" நடந்துகொள்ள வேண்டும் என்ற அழைப்பை விடுத்தது. "தென்னாபிரிக்காவாக நாங்கள் கூறுவது பொதுமக்களை கொல்லக்கூடாது, ஆட்சி மாற்றக் கொள்கை கூடாது மற்றும் லிபியா அல்லது வேறு எந்த ஒரு இறையாண்மை நாட்டிலும் அன்னிய ஆக்கிரமிப்பு கூடாது", என வியாழக்கிழமையன்று தென்னாபிரிக்க அமைச்சரவையால் விடுக்கப்பட்ட அறிக்கை கூறியது.

லிபியாவில் குறிப்பிடத்தக்க பொருளாதார மற்றும் பூகோள மூலோபாய நலன்களை உருவாக்க தொடங்கியிருந்த ரஷ்யாவும் கூட போர் நிறுத்தம் மற்றும் கடாபி ஆட்சிக்கும் "புரட்சியாளர்களுக்கும்" இடையே உடனடி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. புதன்கிழமையன்று மாஸ்கோவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் Sergei Lavrov, "புரட்சியாளர்களுக்கு" ஆயுதம் வழங்குவது குறித்து பரிசீலிப்பதாக அமெரிக்கா, பிரிட்டிஷ் மற்றும் பிரான்ஸ் அதிகாரிகள் கூறியதற்கு கண்டனம் தெரிவித்தார். .நா. தீர்மானத்தின் நோக்கம், "பொதுமக்களை பாதுகாக்கத்தானே தவிர அதற்கு ஆயுதம் வழங்க அல்ல" என்று Lavrov கூறினார்.

வியாழக்கிழமையன்று, லிபியாவிலிருந்து காலி செய்த நூற்றுக்கணக்கான ரஷ்ய பிரஜைகள், துனிசியாவிலிருந்து அவசரநிலைத் துறை அமைச்சகத்தின் விமானம் ஒன்றில் மாஸ்கோவுக்கு அழைத்து வரப்பட்டதாக ரஷ்ய அரசு தொலைக்காட்சி சேனலான ரொஷியா 1 தாயகம் திரும்பியோர் குறித்த செய்தியில் தெரிவித்தது

"கூட்டுப் படை, கிடங்குகளில் குண்டுவீசுவதால், கிடங்குகளின் அனைத்து பகுதிகளிலும் குண்டுகள் பறந்து, அவை பொதுமக்கள் வசிக்கும் கட்டிடங்கள், வீடுகள் மீது தாக்குகின்றன," என்று லிபியாவிலிருந்து வெளியேறியவர்களில் ஒருவரான Lyubov Shalyeva என்பவர் ரொஷியா 1 யிடம் தெரிவித்தார்.

ரஷ்யாவை சேர்ந்த மகப்பேறு மருத்துவரான Andrey Novseltsev மற்றும் அவரது மனைவியும் பணியாற்றிய மிஸ்ரடாவிலுள்ள ஒரு மருத்துவமனையில்," தினமும் டஜன் கணக்கான மக்கள் வருவார்கள் என்றும், இரண்டு தினங்களுக்கு முன்னர் கூட தாங்கள் ஒரு அறுவை சிகிச்சை செய்துகொண்டிருந்தபோது தங்களுக்கு மிக அருகில் ஒரு குண்டு விழுந்ததாககூறியதை அந்த செய்தி சுட்டிக்காட்டியது.

"தரையில் நான் எப்படி விழுந்தேன் என்பது கூட எனக்கு தெரியவில்லை," என்று கூறிய Novoseltsev," அது பட்டாசு என்று எங்களது குழந்தையிடம் நாங்கள் கூறினோம். என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது அவளுக்கு தெரியவில்லை. நல்லது, Tomahawks என்ன என்பதை நாங்கள் இப்போது தெரிந்துகொண்டோம்" என்றார்.

ரஷ்ய பணியாளர்கள் லிபியாவை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் அமெரிக்க-நேட்டோ படையினர் அந்நாட்டின் மீது நடத்தும் தாக்குதலை கண்டிக்கும் அறிக்கை ஒன்றை தயாரித்ததாக ரொஷியா 1 ன் நிருபர் தெரிவித்தார்