சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : லிபியா

BRICS summit denounces “use of force” against Libya

லிபியாவிற்கு எதிராக வலிமையை பயன்படுத்தப்படுவதை BRICS உச்சிமாநாடு கண்டிக்கிறது

By John Chan
18 April 2011
Use this version to print | Send feedback

BRICS குழுபிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனாவுடன் இந்த ஆண்டு தென் ஆபிரிக்காவும் அடங்கிய குழுஏப்ரல் 14ம் தேதி சீனாவின் ஹைனன் தீவிலுள்ள சான்யாவில் நடத்திய மூன்றாவது உச்சிமாநாட்டில், உலகின் முக்கிய சக்திகளுக்கு இடையே அழுத்தங்கள் தீவிரமாவதின் கூடுதலான அடையாளங்களை வெளிப்படுத்தியது.

கடந்த மாதம் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் லிபியா மீது ஒரு பறக்கக்கூடாத பகுதியை நிறுவி அதையொட்டி அமெரிக்கா, ஐரோப்பியச் சக்திகள் குண்டுத் தாக்குதலை நடத்துவதற்குப் பச்சை விளக்கு காட்டிய ஐ.நா. பாதுகாப்புச் சபை தீர்மானம் 1973ன் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. அந்த வாக்களிக்காத முக்கிய சக்திகள் வட ஆபிரிக்காவில் கொண்டுள்ள பொருளாதார மூலோபாய நலன்களைத் தீவிரமாக அச்சுறுத்தும் இராணுவ நடவடிக்கைக்கு எதிரான ஒரு கூட்டு எதிர்ப்பு ஆகும்.

சான்யா உச்சிமாநாடு குண்டுத் தாக்குதலுக்கு எதிர்ப்பை வலியுறுத்தியதுடன், “பலத்தை பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என்னும் கொள்கையை நாங்கள் பகிர்ந்து கொள்ளுகிறோம்என அறிவித்தது. அதே நேரத்தில் BRICS அறிக்கை நேரடியாக நேட்டோவைக் குறைகூறாமல், “லிபியா மீது ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு நாங்கள் தொடர்ந்து ஒத்துழைப்புக் கொடுக்க விரும்புகிறோம்என்று கூறியுள்ளது. முன்பு பறக்கக்கூடாத தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்த தென்னாபிரிக்கா இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளது.

BRICS  அறிக்கை சமீபத்திய ஆபிரிக்க ஒன்றியத்தின் (AU) திட்டமானஅரசியல் தீர்விற்கு”—லிபியத் தலைவர் முயம்மர் கடாபி அகற்றப்பட வேண்டும் என்பதை சேர்க்காததால் நேட்டோ ஆதரவைக் கொண்ட லிபிய எதிர்ப்பாளர்களினால் உடனடியாக நிராகரிக்கப்பட்ட அழைப்புஆதரவைக் கொடுத்துள்ளது. தென் ஆபிரிக்க ஜனாதிபதி ஜாகப் ஜுமா ஒரு AU தூதுக்குழு லிபியாவிற்கு சமரசம் காண முயல்வதற்கு சென்றிருந்ததற்கு தலைமை தாங்கினார்.

BRICS உச்சிமநாட்டில் ஜுமாவுடன் பேசிய பின்னர், சீன ஜனாதிபதி ஹு ஜின்டாவோ போர் நிறுத்தம் உடனடியாக வேண்டும் என்று அழைப்பு விடுத்து அதுதான் லிபியாவில் நடக்கும்மனிதாபிமான நெருக்கடியைத்தவிர்க்கும் என்றார். ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவ் ஐ.நா. தீர்மானம் ஒருஇராணுவ நடவடிக்கைக்கு ஒப்புதல் கொடுக்கவில்லைஅத்துடன் தீர்மானம் எத்தொடர்பையும் கொண்டிருக்கவில்லைஎன்று அறிவித்தார்.

குடிமக்களை பாதுகாப்பதற்குகுண்டுத் தாக்குதல் தேவை என்னும் அமெரிக்க மற்றும் ஐரோப்பியக் கூற்றுக்களைப் போலவே இந்த எதிர்ப்புக்களும் பாசாங்குத்தனமானவை. சீனாவும் ரஷ்யாவும் ஐ.நா. தீர்மானத்திற்கு எதிராக தடுப்பதிகாரம் கொடுத்திருக்கலாம். அதற்குப் பதிலாக நேட்டோ சக்திகளுடன் ஒரு நேரடியான மோதலைத் தவிர்க்க விரும்பின. இரு நாடுகளும் முந்தைய ஐ.நா. பொருளாதாரத் தடைகள் பற்றிய தீர்மானத்தை ஆதரித்துத்தான் வாக்களித்தன. நடைமுறையில் இது மேற்கத்தைய சக்திகள் கடாபிக்கு எதிராக நடத்தும் நடவடிக்கைக்கு ஒரு போலிக்காரணத்தை ஏற்கும் தன்மையை பெற்றிருந்தது.

நேட்டோ சக்திகள் வட ஆபிரிக்காவில் தங்கள் விழைவுகளுக்கு இன்னும் கூடுதலான வளைந்து கொடுக்கும் ஆட்சியை லிபியாவில் நிலைநிறுத்த முற்படுகையில், BRICS நாடுகளும் கடாபி அகற்றப்படுவது தங்கள் நலன்களைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடும் என்ற கவலையைக் கொண்டுள்ளன. குறிப்பாக சீனா, கட்டுமானத்துறை மற்றும் தொலைத் தொடர்புத் துறைகளில் 18 பில்லியன் டொலருக்கும் மேலான ஒப்பந்தங்களை இழக்கும் திறனைக் கொண்டுள்ளது. இதைத்தவிர லிபிய எண்ணெய்த் தொழில்துறையில் பங்கு இழப்பு பற்றிக் கூறத் தேவையும் இல்லை. ரஷ்யாவைப் பொறுத்தவரை அது 7 பில்லியன் டொலர் மதிப்புடைய ஆயுத பேரங்கள், ஒரு இரயில்வே அமைப்புத் திட்டம் ஆகியவற்றை இழக்கக் கூடும்.

பாதுகாப்புச் சபை உட்பட ஐ.நா.வில்ஒரு விரிவான சீர்திருத்தம்தேவை என்று BRICS அறிக்கை அழைப்பு விடுத்துள்ளது. “சீனாவும் ரஷ்யாவும் இந்தியா, பிரேசில், தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் சர்வதேச விவகாரங்களில் கண்டுள்ள அந்தஸ்த்திற்கு தாங்கள் கொடுக்கும் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தி, இவை ஐ.நா.வில் கூடுதல் பங்கு வேண்டும் என்னும் விழைவைத் தாங்கள் புரிந்து கொள்வதாகவும் அதற்கு ஆதரவளிப்பதாகவும்அறிவித்தன.

BRICS ல் தென் ஆபிரிக்கா நுழைந்தது முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மெக்சிக்கோ, தென் கொரியா, இந்தோனேசியா போன்ற பிறஎழுச்சி பெறும் பொருளாதாரங்களைவிடமிகக் குறைவு ஆகும். இந்நாட்டிற்கு ஆபிரிக்காவில் பிரதிநிதி என்ற நிலைப்பாட்டிற்கு ஆதரவு குறிப்பாக சீனாவிடம் இருந்து வந்துள்ளது. ஆபிரிக்காவில் பெய்ஜிங் பெருகிய முறையில் கூடுதலான முக்கியம் வாய்ந்த பொருளாதாரப் பங்கைக் கொண்டுள்ளது.

தென் ஆபிரிக்க ஜனாதிபதி ஜுமா சீனா மற்றும் பிற BRIC நாடுகளுக்குக் கடந்த ஆண்டு உறுப்பினர் தகுதி பெறுவதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் வருகை புரிந்திருந்தார். சீனாவை ஆபிரிக்காவில் ஒருநவ காலனித்துவசக்தி என்று பாசாங்குத்தனமாக மேற்கத்தைய நாடுகள் குறைகூறியிருப்பதை ஜுமா பகிரங்கமாக எதிர்கொண்டு சீனாவின் பெருகும் வணிகம் மற்றும் முதலீடுகள் ஆபிரிக்காவிற்கு முக்கிய நலன்களைக் கொடுக்கிறது என்றார். தென் ஆபிரிக்கா, மற்றும் ஆபிரிக்கா முழுவதும் சீனா மிகப் பெரிய வணிகப் பங்காளியாகி உள்ளது.

BRICS உச்சிமாநாட்டின் முக்கிய உந்துதல் சர்வதேச விவகாரங்களில் கூடுதலான பொருளாதார, அரசியல் பங்கிற்கு முனைப்புக் காட்டுவதாகும்இது தற்போது நடைமுறையிலுள்ள முதலாளித்துவ சக்திகளின் மேலாதிக்கத்தில் உள்ளது. பிரேசிலின் ஜனாதிபதி டில்மா ரௌசெப் செய்தியாளர்களிடம் கூறினார்: “IMF மற்றும் உலக வங்கியின் நிர்வாகம்  மற்ற நாடுகள் ஒதுக்கப்பட்டு அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றிடையே முறையாக மாறி மாறி வருவது என்பது ஏற்கத்தக்கது அல்ல என்ற உண்மையை நாம் வலியுறுத்துகிறோம்.”

கடந்த நவம்பர் மாதம், IMF அதனுடைய வாக்களிக்கும் உரிமைகளில் 6 சதவிகிதத்தை ஜேர்மனி, பெல்ஜியம் போன்ற ஐரோப்பிய நாடுகளின் இழப்பில் எழுச்சி பெறும் நாடுகளுக்குத் தருவதற்கு ஒப்புக் கொண்டது. IMF ல் மூன்றாவது மிகப் பெரிய வாக்களிக்கும் சக்தியாக சீனா வரவிருக்கிறது. ஆனால் இத்தகைய சலுகைகள் அடித்தளத்திலுள்ள அழுத்தங்களை தீர்க்காது. ஏனெனில் இவை உலக உற்பத்தி முறையில் அடிப்படை மாற்றம் BRICS நாடுகளின்பால் வேரூன்றியுள்ளன என்பதில் அமைந்துள்ளன.

சீன சமூக அறிவியல் கூடம் வெளியிட்டுள்ள BRICS சமூகப் பொருளாதார வளர்ச்சியின் முதல் ஆண்டு அறிக்கையின்படி, BRICS நாடுகள் 21ம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதம் 8 சதவிகிதத்திற்கும் மேலாக எனக் கொண்டிருந்தன. இது தொழில்துறை வளர்ச்சியுற்றுள்ள நாடுகளில் 2.6 சதவிகிதம் ஆகும். உலகப் பொருளாதாரத்திற்கு சேர்க்கப்பட்டுள்ள சொத்தின் அடிப்படையில், BRICS ன் விகிதம் பெரிய அளவில் 1990 களில்கிட்டத்தட்ட ஒன்றுமில்லைஎன்பதிலிருந்து கடந்த ஆண்டு 60 சதவிகிதமாக ஆயிற்று, 2011ல் 70 சதவிகிதத்தை எட்டக்கூடும்.

ரஷ்யாவில் 2009ல் நடைபெற்ற முதல் BRIC உச்சிமாநாட்டிலிருந்து இக்குழுவிற்கு ஒரு அமெரிக்க எதிர்ப்பு வண்ணம் கிடைத்துள்ளது. குறிப்பாக அமெரிக்க டாலருக்குப் பதிலாக ஒரு புதிய உலக இருப்பு நாணயத்தின் தேவை குறித்து. ரஷ்யா, சீனா மற்றும் பிரேசில் ஆகியவை ஏற்கனவே தங்கள் சொந்த நாடுகளின் நாணயங்களை இருதரப்பு வணிகத்தில் பயன்படுத்துவதற்கான உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன. இந்த உச்சிமாநாட்டில் BRICS நாடுகள் இன்னும் ஒரு படி மேலே சென்று ஒன்றுக்கொன்று கடன் அல்லது மானியங்கள் வழங்கும்போது தங்கள் சொந்த நாணயங்களைப் பயன்படுத்துவதாக ஒப்புக் கொண்டுள்ளன.

BRICS நாடுகள் அமெரிக்க டாலருக்குப் பதிலாக மாற்றுவது என்பது பெரிதும் அடையாளச் செயல் ஆகும். ஆனால் அவை வாஷிங்டனின் நிதியக் கொள்கைகள் குறித்து வந்துள்ள பெருகிய விரோதப் பாங்கைச் சுட்டிக்காட்டுகிறது. குறிப்பாகதடையற்ற எளியமுறைஎனப்படும் அமெரிக்கக் கொள்கை பற்றி ஒரு சீற்றம் உள்ளதுஅதன்படி அமெரிக்கப் பொருளாதாரத் தொந்தரவுகளை தளர்த்த போட்டியாளர்களின் இழப்பில் டாலர்கள் அச்சடிக்கப்படுகின்றன. பிரேசிலைப் பொறுத்தவரை இதன் விளைவு அதன் நாணயமான ரியாலின் மதிப்பு டாலருடையதை விட உயர்ந்துள்ளது ஆகும். இதனால் அதன் ஏற்றுமதித் துறைகளில் பாதிப்பு ஏற்படும்.

இன்னும் கூடுதலான செல்வாக்கை உலக நிறுவனங்களில் கொள்ள வேண்டும் என்னும் அதன் பொதுக் கோரிக்கையைத் தவிர, BRICS குழு ஒரு உறுதியான முகாம் என்று கூறுவதற்கில்லைபல மாறுபட்ட, முரண்பாடான நலன்களும் இதில் அடங்கியுள்ளன.

சீனாவிற்கும் பிரேசிலுக்கும் இடையே பொருளாதார உறவுகள் குறுப்பிடத்தக்கவை. கடந்த இரண்டு ஆண்டுகளில் சீனா அமெரிக்காவிற்கு பதிலாக பிரேசிலுடன் மிகப் பெரிய வணிகப் பங்காளி, வெளிநாட்டு முதலீட்டாளர் என்ற இடத்தைப் பெற்றுவிட்டது. ஆனால் சீனாவின்குறைமதிப்பிலுள்ளநாணயம் பற்றி பிரேசில் குறைகூறி, அது பிரேசிலின் தொழில்துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவிக்கிறது.

பிரேசிலின் ஜனாதிபதி ரௌசெப் சீன யுவான் வெளியிடப்படுவது பற்றிய பிரச்சினையை எழுப்பவில்லை. ஏனெனில் அந்நாடு சீனாவுடன் வணிகத்திற்காக 500 வணிகத் தலைவர்கள் கொண்ட பெரிய குழு ஒன்றை அழைத்து வந்துள்ளது. சீன மின்னணுத்துறைப் பெருநிறுவனம் Foxconn பிரேசிலில் அடுத்த 5-6 ஆண்டுகளில் 12 பில்லியன் டொலரை முதலீடு செய்ய உள்ளது. இது ஏற்கனவே அங்கு 2005 முதல் இது செயல்படுத்திவரும் ஐந்து தொழிற்சாலைகளைத் தவிர என்பது குறிப்பிடப்பட வேண்டும். இதற்கு மாறாக பிரேசிலின் திட்டமான Embraer E190 வணிக ஜெட்டுக்கள் சீனாவில் கட்டப்பட வேண்டும் என்பதை சீனா நிராகரித்து, மாறாக தன் சொந்த தேசிய விமானத் திட்டமான ARJ21 க்கு ஆதரவைக் கொடுத்துள்ளது.

இந்திய-சீன உறவுகளும் தொடர்ந்து அழுத்தத்தில் உள்ளன. இந்தியப் பிரதம மந்திரி மன்மோகன் சிங்கும் சீன ஜனாதிபதி ஹுவும் கடந்த ஜூலை மாதம் முடக்கம் அடைந்துவிட்ட இராணுவப் பரிவர்த்தனைகளை மீட்பதற்கு ஒப்புக் கொண்டுள்ளனர். பாக்கிஸ்தானும் உரிமை கோரும் ஜம்மு-காஷ்மீரில் பணியாற்றுகிறார் என்ற காரணம் காட்டி இந்திய இராணுவத் தளபதிக்கு முழு விசா கொடுக்க சீனா மறுத்துவிட்டது. இந்த நிகழ்வு சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையேயுள்ள தொடர்ந்த எல்லைப் பூசல்களில் இருந்தும் இரு நாடுகளும் எல்லைப் பகுதியில் தங்கள் இராணுவ நிலைப்பாட்டைக் கூடுதலாக்கியிருப்பதில் இருந்தும் எழுகின்றது. அமெரிக்காவுடன் மூலோபாயப் பங்காளித்தனத்தை இந்தியா வளர்ப்பது பற்றியும் சீனா கவலைப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்தியா பெருகிய முறையில் இந்தியப் பெருங்கடலில் சீனாவின் பெருகும் செல்வாக்கு குறித்துக் கவலை கொண்டுள்ளது.

இந்த, இன்னும் பிற பூசல்கள் இருந்தபோதிலும் கூட BRICS நாடுகள் தங்கள் பரஸ்பர நலன்களைப் பாதுகாப்பதற்கு ஒன்றாக வந்துள்ளனஇது அமெரிக்கா மற்றும் ஐரோப்பியச் சக்திகளின் பெருகிய ஆக்கிரோஷ இராணுவத் தலையீடுகளை எதிர்கொள்கிறதுஅமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகள் உலகப் பொருளாதார நிறுவனங்களின் மீது தொடர்ந்து மேலாதிக்கம் கொண்டுள்ளன. “எழுச்சி பெற்று வரும் சக்திகளுக்கு”  இடம் கொடுப்பதற்கு முற்றிலும் மாறாக, நடைமுறை முதலாளித்துவ சக்திகள் தங்கள் மேலாதிக்கத்தை வலியுறுத்த அவற்றின் இராணுவ, பொருளாதார வலிமையைப் பயன்படுத்தும் நோக்கத்தைத்தான் கொண்டுள்ளன.

 

கட்டுரையாளர் கீழ்காணும் கட்டுரையையும் பரிந்துரைக்கிறார்:

Economic summits marked by great power divisions and concerns over class conflict