சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan SEP and ISSE to hold May Day meeting

இலங்கை சோ..க மற்றும் ஐ.எஸ்.எஸ்.. நடத்தும் மேதினக் கூட்டம்

21 April 2011

சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ...) சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் (.எஸ்.எஸ்..) அமைப்பும், உலக தொழிலாளர் தினத்துக்காக மே 1 அன்று கொழும்பில் நடத்தவுள்ள மேதினக் கூட்டத்துக்கு வருகை தந்து, அனைத்துலகத் தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சினைகளைப் பற்றி கலந்துரையாடுமாறு தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றன.

பல தசாப்தகால எதிர் நடவடிக்கைகளுக்குப் பின்னர், 2011 ஆரம்பத்தில் இருந்தே, மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா, அதே போல் அமெரிக்காவில் விஸ்கொன்ஸின் மாநிலத்திலும் நடந்த போராட்டங்களில், ஜனநாயக உரிமைகளைக் காக்கவும் வாழ்க்கைத்தரம் மோசமாக சீரழிவதை நிறுத்தவும் உலகம் பூராவும் தொழிலாளர்கள் முன்னிலைக்கு வந்துள்ளார்கள். தொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள தீர்க்கமான பிரச்சினை: எந்தப் பாதையில் முன்னேறுவது என்பதேயாகும்.

2008ல் தோன்றிய பூகோள முதலாளித்துவத்தின் வீழ்ச்சி, பெரும் வல்லரசுகளுக்கு இடையிலான பகைமைக்கு தீமூட்டுவதோடு நவ-காலனிய படையெடுப்புக்களையும் தூண்டிவிட்டுள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் அவர்களது பங்காளிகளாலும் லிபியா மீது நடத்தப்படும் நேட்டோ குண்டுத் தாக்குதல்கள், ஆற்றல் வளங்கள் மீதான கட்டுப்பாட்டுக்கு ஏகாதிபத்தியம் போட்டியிடுவதையும் அந்தப் பிராந்தியத்துள் இடம்பெறும் புரட்சிகர எழுச்சிகளை நசுக்க நடவடிக்கை எடுப்பதையும் கோடிட்டுக் காட்டுகின்றன. அதே சமயம், தொடரும் பொருளாதார நெருக்கடியின் சுமைகளை கொடூரமான சிக்கன நடவடிக்கைகள் ஊடாக உழைக்கும் மக்களின் தோள்களில் ஏற்றிவிடவும் நிதி மூலதனம் உலகம் பூராவும் முயற்சிக்கின்றது.

இந்த நிகழ்வுப் போக்குகளில் இருந்து இலங்கை தப்பிக்க முடியாது. இந்த சிறிய தீவு பெரும் வல்லரசுகளின், குறிப்பாக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பகைமையின் சூறாவளியில் சிக்கிக்கொண்டுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, விலை மானியங்கள், பொதுக் கல்வி மற்றும் சுகாதார சேவை உட்பட பொதுச் செலவில் மில்லியன் கணக்கான மக்கள் மீது பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கடும் வெட்டுக்களைக் கோரும் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளை இப்போது அரசாங்கம் அமுல்படுத்திக்கொண்டிருக்கின்றது.

முதலாளித்துவ முறைமையை தூக்கி வீசி, உலக ரீதியில் திட்மிடப்பட்ட சோசலிச பொருளாதாரத்தை ஸ்தாபிக்க அனைத்துலக தொழிலாள வர்க்கம் ஐக்கியப்பட்டு போராடுவது மட்டுமே யுத்தத்துக்கு முடிவுகட்டவும் ஜனநாயக உரிமைகளையும் பொருத்தமான வாழ்க்கை நிலைமைகளையும் உத்தரவாதப்படுத்தவும் முடியும். சோ.ச.க.யும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் உள்ள அதன் சகோதரக் கட்சிகளும் போராடுவது இந்த புரட்சிகர முன்னோக்குக்கே ஆகும். எங்களது மே தினக் கூட்டத்துக்கு வருகை தருமாறு நாம் உலக சோசலிச வலைத் தள வாசகர்கள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.

திகதியும் நேரமும்: ஞாயிறு, மே 1, பி.ப. 3.00 மணி

இடம்: புதிய நகர மண்டபம், கிறீன் பாத், கொழும்பு