சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

The ideological roots of the Oslo atrocity

ஒஸ்லோ கொடூரத்தின் கருத்தியல் போக்கின் வேர்கள்

By Stefan Steinberg 
30 July 2011
Use this version to print | Send feedback

கடந்த வெள்ளியன்று ஒஸ்லோவில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பின் ஐரோப்பாவின் முதலாளித்துவ அரசியல் அமைப்பு முறையானது திட்டமிட்ட பிரச்சாரம் ஒன்றை ஆண்டர்ஸ் பெஹ்ரிங் ப்ரீவிக் நடத்திய கொடூரக் கொலைக்கார செயல்களின் பிரதான அரசியலில் ஆழ்ந்துள்ள வேர்களை கொண்ட முஸ்லிம் எதிர்ப்பு உணர்வுகளினால் உந்தப்பட்டது என்பதை மறுக்கும் வகையில் நடத்தப்படுகின்றது.

பல இளைஞர்களையும் சிறுவர்களையும் ஈவுஇரக்கமின்றி இரத்தக்களறியில் கொன்ற ஒரு மனிதனுக்கு எதிரான பொதுமக்கள் சீற்றத்தைத் தொடர்ந்து, முக்கிய அரசியல்வாதிகளும் செய்தி ஊடக கட்டுரையாளர்களும் ப்ரீவிக்கின் தாக்குதலுக்கு  பின்னணியில் இருந்த வெளிநாட்டவருக்கெதிரான இனவெறி, வெறுப்பு சூழ்நிலையை ஊக்கும்விக்கும் தங்கள் பங்கை குறைத்து காட்டுவதற்கு அசாதரண முறையில் செயல்பட்டு வருகின்றனர்.

தாக்குதலுக்கு சில நாட்களுக்கு பின் டெய்லி டெலிகிராப்பில் எழுதிய லண்டனின் மேயர் போரிஸ் ஜோன்சன் நீண்டகால திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ப்ரீவிக்கின் தாக்குதல், ஒரு தனிநபரின் சொந்த ஆணவ முனைப்புப் பிரச்சினை எனக் குறைத்துமதிப்பிடுகிறார். ஜோன்சன் எழுதுகிறார்: “இது ஒன்றும் குடியேறுதல் அல்லது ஐரோப்பாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகுதல் பற்றியது (Eurabia) அல்லது ஹடித் அல்லது மக்களுக்கு எதிராக ஆட்சி நடத்தும் யூரோக்கிராட்டுக்கள் பற்றியது அல்ல. இது உண்மையில் கருத்தியல் போக்கு அல்லது மதம் பற்றியது அல்ல. இது அனைத்தும் அவரைப் (ப்ரீவிக்கைப்) பற்றியதுதான்…..”

கன்சர்வேடிவ் சுவிஸ் ஏடான Neue Zürcher Zeitung ஐப் பொறுத்தவரை, ப்ரீவிக் வன்முறைக்கு அடிமையாகியுள்ளதும் ஒரு சமூகத்துடன் இயைந்திராத நபர் என்ற கருத்து கூறப்படுகிறது. NZZ கூறுகிறது: “ஜனரஞ்சகவாதத்திற்கும் அதிதீவிரவாதத்திற்கும் இடையே ஒரு பெரிய பிளவு உள்ளது”; நோர்வே படுகொலைகளை வலதுசாரி ஜனரஞ்சக கருத்துக்களின் எழுச்சியுடன் தொடர்புபடுத்தும் எந்த முயற்சியும்ஒரு நவீன மூடநம்பிக்கைக்கு ஒப்பாகும்.” NZZ  உடைய வாதம் சுவிஸ்சர்லாந்தின் முக்கிய இஸ்லாமிய-எதிர்ப்புக் கட்சியான வலதுசாரி சுவிஸ் மக்கள் கட்சி (SVP) இடம் இருந்து கவனத்தை திசைதிருப்பும் நோக்கத்தை தெளிவாகக் கொண்டதாகும். அக்கட்சியோ இஸ்லாமிய மசூதிகள் கட்டமைக்கப்படுவதற்கு தடையை அறிமுகப்படுத்தும் கருவியாக இருந்தது.

அரசியல் அமைப்பு முறை நேர்மையற்ற முறையில் ஒஸ்லோவில் நடந்தவை பற்றித் தன் கைகளை கழுவிவிடும் பொறுப்பற்ற முயற்சிகள் பிரிட்டிஷ் செய்தியாளர் சைமன் ஜேன்கின்ஸினால் சுருக்கமாக தரப்பட்டுள்ளது. கார்டியனில் இந்த வாரம் முன்னதாக ஒரு கட்டுரையில் ஜேன்கின்ஸ் கூறுவதாவது: “நோர்வேஜிய பெரும் சோகம், அதுமட்டுமே; அதாவது ஒரு பெரும் சோகம். இது வேறு எதையும் குறிக்கவில்லை; கட்டாயப்படுத்திக் குறிக்கப்படவும் கூடாது. 68 இளவயதினர்களை ஈவுஇரக்கமின்றிப் படுகொலைகள் செய்வதில் தவறு ஏதும் இல்லை என்று நினைக்கும் ஒரு பைத்தியக்கார மனிதனின் விவகாரம் மிக அசாதரணமானது; குற்றவியல் துறை, மூளை அறிவியல் தொடர்பு உடையவர்களுக்குத்தான் ஆர்வம், அரசியலுக்கு அல்ல.”

முதலாளித்துவ மையத்திற்கும்ஒஸ்லோ கொடூரத்திற்கும் அரசியல் தொடர்புகள் உள்ளது பற்றிய இத்தகைய மறுப்புக்கள் ப்ரீவிக் ஒரு பாசிஸ்ட் என்பதை வெளிப்படையாக மறுக்கும் வகையில் கூறப்பட்டுள்ள பல பேட்டிகள், அறிக்கைகள் ஆகியவற்றுடன் இணைந்து வந்துள்ளன. Süddeutsche Zeitung ஒரு செய்தியாளர் எழுதுகையில் ப்ரீவிக் ஒரு நவ பாசிஸ்ட் என்பதை மறுத்து, நவ பாசிஸ்ட்டுக்கள் செமிடிய எதிர்ப்பாளர்களாவார்கள், ப்ரீவிக் தொடர்பு கொண்டிருந்த இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கம் இஸ்ரேலுக்கு ஆதரவு காட்டும் அமைப்புஎன்று வாதிட்டுள்ளார்.

இதே வாதம்தான் ஜேர்மனிய உளவுத்துறைப் பிரிவான BfV யிலும் காணப்படுகிறது; இது இந்த வாரம் மற்ற பாதுகாப்பு அமைப்புக்களுக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில் ப்ரீவிக் இஸ்ரேலுக்கு ஆதரவும் மாறுபட்ட கருத்துக்களுக்கும் ஆதரவு கொடுப்பதால் ஒரு நவ நாசி என விவரிக்கப்பட முடியாதவர் என்று அறிவித்துள்ளது.

உண்மையில் ப்ரீவிக்கின் கருத்தியல்போக்கு, அவருடைய 1,500 பக்க அறிக்கையில் உள்ளதை ஆராயும்போது, பாசிச கருத்துக்களுக்கு அவர் கொண்டுள்ள ஆழ்ந்த தொடர்பைத்தான் வெளிப்படுத்துகிறது. குறிப்பாக ப்ரீவிக் ஸ்தாபனமயமான தொழிலாள வர்க்கம் மற்றும் சோசலிசத்திற்கு காட்டும் வெறுப்புணர்வு, இடதிற்கும் கலாச்சார மார்க்சிசத்திற்கும் எதிரான அவருடைய கணக்கிலடங்காத பல எதிர்ப்புக் கருத்துக்களில் வெளிப்பட்டுள்ளவை அனைத்துமே பாசிச கருத்தியல்ப்போக்கின் இருப்புக்கள்தான். கம்யூனிசத்திற்கும் ஸ்ராலினிசத்திற்கும் உள்ள அடிப்படை வேறுபாடுகளை அறிந்து கொள்ளும் அளவிற்கு ப்ரீவிக் அறிவு பெற்றிருக்கவில்லை; ஆனால் அவருடைய ஆன்லைன் வீடியோக் காட்சிகள் இரண்டாம் உலகப்  போருக்குப் பின் ஜேர்மனிய பேரரசின் (Reichtag) அழிவில் சோவியத் கொடி ஏற்றப்படுவதைக் காட்டுவதில் தொடங்கியுள்ளது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. ப்ரீவிக்கை பொறுத்தவரை இச்செயல் ஐரோப்பாவில் போருக்குப் பின் அவர் அழைக்கும்மார்க்சிசக் கலாச்சார இடதின்மேலாதிக்கத் தொடக்கம் என்றுதான் உள்ளது.

உண்மையில் மார்க்சிச இயக்கம் பாசிசத்தின் வரலாற்று, வர்க்க வேர்களை எப்பொழுதும் தெளிவாகவே வெளிப்படுத்தியுள்ளது. 1930களில் ஹிட்லர் பதவிக்கு வந்த நேரத்தில் எழுதிய லியோன் ட்ரொட்ஸ்கியின் பாசிசத்தின் சாரம்தொழிலாள வர்க்கப் புரட்சி என்னும் அச்சுறுத்தலுக்கு முதலாளித்துவத்தின் விடையிறுப்புஎன விவரித்துள்ளார்.

ப்ரீவிக்கின் பயங்கரவாத தாக்குதலின் இலக்கு ஒரு அமைப்பு என்பது குறிப்பிடப்பட வேண்டும்அதாவது நோர்வேஜிய தொழிற் கட்சி; இது ப்ரீவிக்கினால் இடது மற்றும் தொழிலாள வர்க்கத்துடன் தொடர்புடையது என்று தவறாகக் கணிக்கப்பட்டது.

பன்முகக் கலாச்சார நெறிகளுக்கு எதிரான ப்ரீவிக்கின் தாக்குதல்கள் மற்றும் தேசியவாதத்திற்கு அவர் காட்டும் ஆதரவு ஆகியவையும் பல நவ நாசிச வலைத் தளங்கள், வெளியீடுகளிலுள்ள கட்டுரைகளை ஒத்துத்தான் உள்ளன.

நாசிச இயல்பைக் கொண்டிருந்த செமிடிய எதிர்ப்பிற்கு பதிலாக ப்ரீவிக் இஸ்லாமிய எதிர்ப்பை புகுத்தியுள்ளார். இவ்வகையில் அவர் ஏராளமான வலதுசாரி அமைப்புக்கள் மற்றும் கட்சிகளுடன் பொது நிலைப்பாட்டில்தான் பங்கைக் கொண்டிருக்கிறார்; அவை அனைத்தும் முக்கிய ஐரோப்பிய அரசியலில் முக்கிய பங்கைக் கொண்டவை; மேலும் அரசியல் மையத்தின் பரந்த அடுக்குகளிலும் முக்கிய பங்கைக் கொண்டவை; இதில் சமூக ஜனநாயகவாதிகளும்முன்னாள் தீவிரமயமானவர்களும்உள்ளனர்.

ஐரோப்பாவை இஸ்லாமியர் கைப்பற்றிவிடுவர், மற்றும் ஒரு பன்முகக் கலாச்சாரச் சமுதாயத்தின் ஆபத்துக்கள் என்பவை பற்றி ப்ரீவிக்கின் எச்சரிக்கைகள் பாசிச நோர்வேஜிய முற்போக்குக் கட்சியின் கருத்துக்களுக்கு கிட்டத்தட்ட இணையாகத்தான் உள்ளன; இதில் அவர் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் உறுப்பினராக இருந்தார். நோர்வேயில் இஸ்லாமிய சமுதாயம் மிகக் குறைந்த சிறுபான்மையாகத்தான் உள்ளது என்றாலும் (1.6%), முற்போக்குக் கட்சி தன்னுடைய திட்டத்தின் மையத்தில்எங்கும் நிறைந்த இஸ்லாமிய மயம்என்பதை எதிர்த்துப் பிரச்சாரம் செய்கிறது.

இதேபோன்ற இஸ்லாமிய எதிர்ப்பு கருத்துக்கள் டேனிஷ் மக்கள் கட்சியாலும் பிரச்சாரம் செய்யப்படுகின்றன; அது நாட்டின் சிறுபான்மை லிபரல்-கன்சர்வேடிவ் அரசாங்கத்திற்கு 2001ல் இருந்து அரசியல் ஆதரவைக் கொடுத்துவருகிறது. நீண்டகாலமாக ஐரோப்பாவில் மிகத் தாராளவாத நாடுகளில் ஒன்று எனக் கருதப்படும் டென்மார்க் சமீபத்தில் மிகத்தீமை பயக்கும் அடக்குமுறை நிறைந்த குடியேற்ற சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

ப்ரீவிக்கின் இஸ்லாமிய எதிர்ப்பு ஸ்வீடிஷ் ஜனநாயகவாதிகள் கட்சியின் சிந்தனைப் போக்கிலும் எதிரொலியை காண்கிறது (அதுதான்ஸ்வீடன் மக்களுக்கு ஸ்வீடன் என்னும் கோஷத்தை ஏற்றுள்ளது). அதையொட்டி கடந்த செப்டம்பர் மாதம் முதல் தடவையாக தேசிய பாராளுமன்றத்தில் அதற்குப் பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது; அதேபோல் “True Finns” எனப்படும் அமைப்பும் இந்த ஆண்டு முன்னதாக பின்லாந்து பாராளுமன்றத்தில் கிட்டத்தட்ட 20 சதவிகிதப் பங்கை மொத்த வாக்குகளில் பெற்று நுழைந்துள்ளது.

நோர்டிக்கின் தீவிர வலதுப் பிரிவு உத்தியோகபூர்வ அரசியலில் பெரும் பங்கைக் கொண்டிருப்பது குறித்துள்ள ஸ்வீடனின் தேசிய இயக்கங்கள் பற்றிய வல்லுனர் ஒருவர் முடிவுரையாகக் கூறியுள்ளார்: “அவை நிறுவப்பட்டுவிட்டன; அவை இப்பொழுது நடைமுறை அரசியலில் ஒரு பகுதியாகி விட்டன.”

ஸ்கான்டிநேவியாவிற்கு அப்பால், இஸ்லாமியமய எதிர்ப்பு அறிக்கைகள், ப்ரீவிக்கின் கருத்துக்களுக்கு இணையாக இருப்பவை, டச்சு சுதந்திரக் கட்சியின் (PVV) திட்டத்திலும் அதன் தலைவர் கீர்ட் வில்டெர்ஸுடைய உரைகளிலும், வடக்கு லீக்கின் திட்டம், நடைமுறைகள் ஆகியவற்றிலும் காணப்பட முடியும்; வடக்கு லீக் சில்வியோ பெர்லுஸ்கோனியின் கட்சியுடன் இத்தாலியை ஆளும் கூட்டணியில் பங்கைக் கொண்டுள்ளது. உண்மையில் லீக்கின் பல முக்கிய உறுப்பினர்கள் இப்பொழுது ப்ரீவிக் மற்றும் அவருடைய கொள்கைகளுக்கு ஆதரவாக வெளிப்பட்டுள்ளனர்.

பிரான்சில் பல தொடர்ச்சியான அரசாங்கங்கள் பல ஆண்டுகளாக இஸ்லாமிய எதிர்ப்புணர்வை பிரச்சாரம் செய்து வருவது மட்டும் இல்லாமல், தங்கள் திட்டத்தைச் செயல்படுத்தவும் முற்பட்டுள்ளன. ஏற்கனவே 2004ம் ஆண்டு ஜக் சிராக்கின் அரசாங்கம் பொதுப் பள்ளிகளில் இஸ்லாமிய தலைமறைப்பை தடைசெய்த சட்டத்தை அறிமுகப்படுத்தியது. அந்நேரத்தில் இந்த இனவெறிச் சட்டம் சோசலிஸ்ட் கட்சியின் ஆதரவைப் பெற்றதோடு மட்டுமின்றி, அதன் பின் முன்னாள் தீவிரக் குழுவான தொழிலாளர் போராட்டம் (Lutte Ouvrier-LO) உடைய ஆதரவையும் பெற்றது. நாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான பிரச்சாரம் முறையாக நிக்கோலா சார்க்கோசியின் அரசாங்கத்தால் விரிவாக்கப்பட்டுள்ளதும் சோசலிஸ்ட் கட்சியின் ஆதரவுடன்தான் நடந்துள்ளது.

இஸ்லாமிய எதிர்ப்பு உணர்விற்கு ஆதரவு என்பது ஐரோப்பிய அரசியல் கட்சிகளுடன் மட்டும் நின்றுவிடவில்லை. பல அறிவுஜீவிகள், செய்தியாளர்கள், சிந்தனையாளர்கள் என ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ளவர்களாலும் எரியூட்டப்படுகிறது; இவர்கள் 9/11 தாக்குதல்களுக்கு பின்இஸ்லாமியவாதத்திற்கு எதிரான சிலுவைப் போர்என்னும் அழைப்பு அமெரிக்க ஜனாதிபதி விடுத்துள்ளதற்கு இணங்கியுள்ளனர்.

2006ல் அமெரிக்க பிரச்சாரகர் ப்ரூஸ் பாவெர் ஐரோப்பா உறங்கியபோது (While Europe Slept) என்னும் தலைப்பில் அவருடைய நூலை வெளியிட்டார்; அது முஸ்லிம் குடியேற்றங்கள் விளைவித்த ஐரோப்பிய கலாச்சாரச் சரிவு என்பதை விளக்குவதாகக் கூறுகிறது. தன்னுடைய சொந்த வலைத் தள கட்டுரையில் பாவெர் ஐரோப்பாவிற்கு (குறிப்பாக ஒஸ்லோவிற்கு) 1990களின் கடைசிப் பகுதியில் தான் சென்றிருந்தபோது இனவெறிக் கருத்துக்களை வளர்த்ததாகக் கூறியுள்ளார்.

ஓராண்டிற்குப் பின் அதே கருத்து அமெரிக்க ஆசிரியர் வால்டர் லாக்வரினாலும் அவருடைய புத்தகமான ஐரோப்பாவின் கடைசி நாட்கள் என்பதிலும் கூறப்பட்டது; மீண்டும் ஐரோப்பிய புரட்சிகள் பற்றிய சிந்தனைகள் என்னும் தன் புத்தகத்தில் அமெரிக்க செய்தியாளர் கிறிஸ்டோபர் கால்ட்வெல்லினாலும் கூறப்பட்டது. ரூபர்ட் மெர்டோக்கின் அமெரிக்காவிலுள்ள Weekly Standard ல் கட்டுரைகள் எழுதுவதைத் தவிர, கால்ட்வெல் வாடிக்கையாக அமெரிக்காவின் முக்கிய நிதி நாளேடான பைனான்ஸியல் டைம்ஸிலும் எழுதுபவர் ஆவார்.

இஸ்லாமியவாதத்திற்கு எதிரான கருத்தியல் போக்குப் பிரச்சாரம் ஐரோப்பாவில் இத்தாலிய பத்திரிகையாளர் ஒரியனா பலாசியின் தலைமையில் நடந்தது. இவர் முசோலினிக்கு எதிரான இத்தாலிய பாதுகாப்பு அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஆவார். ஐரோப்பாவில் முஸ்லிம்கள் குடியேறுவதை எதிர்த்து மூன்று புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளார். 2005ம் ஆண்டு வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலுக்கு கொடுத்த பேட்டி ஒன்றில், பலாசி இஸ்லாமியத்தின் பெருகும் செல்வாக்கினால் ஐரோப்பாயூரபியாஎன இன்னும் துல்லியமாக அழைக்கப்படலாம் என்று அறிவித்தார்.

பிரிட்டனிலும்யூரபியாஎன்னும் கருத்து அதே ஆண்டு வலதுசாரி Spectator  இதழால் மேற்கொள்ளப்பட்டது; தன் இதழின் ஒரு பதிப்பில் அதுயூரபிய தீயகனவு என்று அட்டையில் ஒரு தலைப்பையும் கொடுத்திருந்தது.

இந்த ஏட்டில், தவறான முஸ்லிம் எதிர்ப்பு உணர்வுப் பொழிவில் முக்கிய பங்களிப்பாளர்களில் ஒருவர் என்ற நிலையில் முன்னதாகக் கூறப்பட்ட  போரிஸ் ஜோன்சன் இருந்தார். தன்னுடைய கட்டுரையில் ஜோன்சன்முதல் போலிக் கருத்தைக் கைவிடுவது தேவை, அதாவது இஸ்லாம் ஒரு பிரச்சனை என்பதை ஏற்க வேண்டும். இஸ்லாம்தான் பிரச்சினைஎனக் கூறியுள்ளார். இதன்பின் இஸ்லாமியமயம்அனைத்து மதங்களிலும் மிகத் தீமை பயக்கும் குறுகிய பற்றுடையதுஎன்றும் விவரித்தார். இதே நபர்தான் இப்பொழுது முஸ்லிம்-எதிர்ப்பாளரும், பாசிச எதிர்ப்பாளருமான ப்ரீவிக் முற்றிலும் சொந்த உந்துதல்களுக்காக செயல்பட்டார் என்று கூறுகிறார்!

ஜேர்மனியில் இஸ்லாமியவாதத்திற்கு எதிரான தீமை மிகுந்த பிரச்சாரத்திற்கு தீவிர சியோனிசவாதியும் முன்னாள் இடதுமான ஹெண்ரிக் ப்ரோடர் வழிநடத்துகிறார்; இவர் நேரிய முறையில் பல நேரமும் ப்ரீவிக்கின் அறிக்கையில் மேற்கோளிடப்பட்டுள்ளார். ஜேர்மனியின் முக்கிய நாளேடுகளில் ஒன்றான Die Welt, மற்றும் மிகவும் அதிகமாகப் படிக்கப்படும் வார ஏடான Der Spiegel ஆகியவற்றிலும் ப்ரோடர் தன்னுடைய இஸ்லாமியவாத எதிர்ப்புக் கருத்துக்கள் கொண்ட கட்டுரைகளை வெளியிடுகிறார்.

கடந்த ஆண்டு ப்ரோடர் தன்னுடைய பிரச்சாரத்திற்குக் கணிசமான ஆதரவை சமூக ஜனநாயகக் கட்சி உறுப்பினரும் முன்னாள் பேர்லின் நிதிய செனட்டருமான திலோ சராஜின்னிடம் இருந்து பெறுகிறார். பிந்தையவர் அவருடைய சொந்த ஒரு சகிக்கமுடியாத ஒரு தீவிரப் பார்வையுடைய கட்டுரையில், நாட்டின் அரபு, துருக்கிச் சமூகங்களை அவதூறு கூறும் தன்மை உடையதாகஜேர்மனி தன்னையே அழித்துக் கொள்கிறதுஎன்பதை எழுதினார். இப்பொழுது ஒஸ்லோ படுகொலைகள் நடந்து ஒரே வாரத்திற்குள் சராஜின் ஒரு முதல் அட்டைப் பக்க புகைப்படம் மற்றும் மையக் கட்டுரையில் ஜேர்மனியின் மிக அதிகமாகப் படிக்கப்படும் நாளேடான Süddeutsche Zeitung லும் பாராட்டிப் பெருமைப்படுத்தப்பட்டுள்ளார். சராஜின்னின் இனவெறி நச்சிற்கு தொடக்க ஆதரவுகள் கொடுத்தபின், ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் அவருடைய கருத்தாய்வுகளிலிருந்து ஓரளவு தன்னை ஒதுக்கி வைத்துக்கொள்ள முற்பட்டார். ஆனால் ஒரு பன்முக கலாச்சார சமூகத்தை அவர் கண்டித்துள்ளது பற்றிய கருத்து சான்றாக உள்ளது (இதே போன்ற கருத்துக்களை பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் காமெரோனும் கூறியுள்ளார்.)

செய்தி ஊடகக் கட்டுரையாளர்கள் மற்றும் முக்கிய அரசியல்வாதிகள் என அட்லான்டிக்கின் இருபுறத்தில் இருப்பவர்களிடம் இருந்து வரும் தகவல் தெளிவாகத்தான் உள்ளன. இவை கடுமையான இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வை கொண்டுள்ளன; பல மக்கள் ஒன்றாக இணைந்து வாழும் சமூகத்தை கண்டிக்கின்றன; பயன் அற்ற தேசியவாதம் மற்றும் அரசியல் இடதின் வெறுப்பை உமிழ்கின்றனஅதாவது தற்கால பாசிசத்தின் அடிப்படைக் கூறுபாடுகள் அனைத்தையும் கொண்டுள்ளன. இவை முக்கிய அரசியல் பிரச்சாரத்தின் கூறுபாடுகளில் ஏற்கப்பட்டுள்ளன. ப்ரீவிக்கின் பாசிச அரசியலுடனான இணைப்புக்கள் அதிகம் கூறப்படுவதில்லை, மக்களிடம் இருந்து மறைக்கப்படுகின்றன; இதையொட்டி அவருடைய கருத்துக்களை பற்றிய விவாதம் மற்றும் செயல்படுத்தப்படுதல் ஆகியவை தொடரப்பட முடியும்.

ஒரு வாரம் முன்பு ஒஸ்லோவில் நடத்தப்பட்ட பயங்கரவாதக் கொடுமைக்கு இத்தகைய அரசியல் மற்றும் செய்தி ஊடகப் பின்விளைவு அரசியல் மற்றும் அறநெறிகளில் ஆழ்ந்த சிதைவு கொண்டுள்ள ஒரு சமூக ஒழுங்கின் தன்மையைத்தான் பிரதிபலிக்கிறது.