சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஸ்பெயின்

The calling of early elections in Spain

ஸ்பெயினில் முன்கூட்டிய தேர்தல்களுக்கு அறிவிப்பு

By Peter Schwarz
3 August 2011

use this version to print | Send feedback

நிதியச் சந்தைகளின் பெருகிய அழுத்தங்களின் காரணமாக மார்ச் 2012 வரை காலஅவகாசம் இருந்திருந்த தேர்தல்களை நான்கு மாதம் முன்கூட்டி நவம்பர் 20 அன்றே நடத்த இருப்பதாக ஸ்பெயினின் பிரதம மந்திரி ஜோஸே லூயி சப்பாத்தேரோ அறிவித்துள்ளார். அநேகமாக PP என்னும் பழைமைவாத மக்கள் கட்சி தேர்தலில் வெற்றி பெற்று, ஏழு ஆண்டுகளுக்குப் பின் அதிகாரத்தைக் கைப்பற்றக்கூடும். சப்பாத்தேரோவின் PSOE எனப்படும் சோசலிச தொழிலாளர் கட்சி ஏற்கனவே மே மாதம் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் பெரும் இழப்புக்களை அடைந்துள்ளதுடன், கருத்துக் கணிப்புக்களிலும் பின்தங்கியுள்ளது.

மக்கள் கட்சி பாசிச பிராங்கோச் சர்வாதிகாரத்தில் இருந்து வெளிப்பட்டது. அது ஹிட்லர் மற்றும் முசோலினியின் ஆதரவுடன் 1939ல் மூன்று ஆண்டுக்கால உள்நாட்டுப்போருக்குப் பின் பதவிக்கு வந்து, பிராங்கோ 1975ல் இறந்தபின்தான் வீழ்ச்சியடைந்தது. இன்றுவரை மக்கள் கட்சி பிராங்கோவின் சர்வாதிகாரத்தையோ அப்பொழுது நடத்தப்பட்ட குற்றங்களையோ கண்டிக்க மறுக்கின்றது.

தேர்தல்கள் முன்கூட்டி நடைபெறும் என்ற வகையில், அதன் விளைவு தான் அகற்றப்பட்டு அரசாங்க அதிகாரம் வலதுசாரி மக்கள் கட்சிக்கு கொடுக்கப்படும் என்ற நிலையில், சோசலிச தொழிலாளர் கட்சி ஐரோப்பாவில் நன்கு நிறுவப்பட்டிருக்கும் ஒரு வடிவமைப்பைத்தான் பின்பற்றுகிறது.

பழைமைவாத வலதுசாரிக்கு மக்கள் காட்டும் எதிர்ப்பைப் பயன்படுத்தி சமூக ஜனநாயகக் கட்சியினர் வெற்றிபெறுகின்றனர். அதன் பின்னர் அவர்கள் தங்கள் முன்னோடிகளில் இருந்து சிறிதும் மாறுபடாத கொள்கையைத்தான் தொடர்கின்றனர். பழைமைவாதிகளை போலவே, இவர்களும் வெட்கம் கெட்டத்தனமாக நிதிய மூலதனத்தின் கருவிகளாகச் செயல்படுகின்றனர். தொழிற்சங்க அதிகாரத்துவதுடனும் போலி இடது குழுக்களுடனும் நெருக்கமான உறவுகள் என்ற அடித்தளத்தில், இவர்கள் தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதல்களை நடத்துகின்றனர். இந்நிலை பழைமைவாதிகள் பதவிக்கு வந்தால் இன்னும் கடுமையான எதிர்ப்பைத்தான் தூண்டும்.

இறுதியாக, தங்களை முற்றிலும் மதிப்பிழக்கச் செய்த பின்னர், அவர்கள் நிதிய உயரடுக்கிற்குப் பணிபுரியும் வகையில் ஒரு பழைமைவாதிகளின் தேர்தல் வெற்றிக்கான சாதகமான சூழ்நிலையை முன்கூட்டியே பாராளுமன்றத்தை கலைப்பதின் மூலம் தோற்றுவிக்கின்றனர்.

ஜேர்மனியில் சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைவாதிகளின் கூட்டணி அரசாங்கமான ஷ்ரோடர் அரசாங்கம், ஊதியங்களை முடக்கியது, வேலையின்மை நலன்களை வெட்டியது, ஒரு பரந்த குறைவூதியத் தொகுப்பை ஏற்படுத்தியது, 1945ல் இருந்து முதல் தடவையாக யூகோஸ்லேவியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவற்றில் நடக்கும் வெளிநாட்டுப் போர்களுக்கு ஜேர்மனிய படையினரை அனுப்பியது. 2005ல் அது திடீரென முன்கூட்டிய தேர்தல்களை கொண்டுவந்து அதிகாரத்தை அங்கேலா மேர்க்கல் மற்றும் கிறிஸ்துவ ஜனநாயகவாதிகளிடம் ஒப்படைத்தது.

இத்தாலியில் மத்திய-இடது கூட்டணியான ரோமனோ ப்ரோடி வரவு செலவுத் திட்டத்தை சமூகநலச் செலவுகளை பரந்த மக்கள் எதிர்ப்பை மீறி பாரியவெட்டுக்களுக்கு உட்படுத்தி மறுகட்டமைத்தது. அமெரிக்க இராணுவத் தளங்கள் விரிவாக்கப்படுவதை முனைப்புடன் செய்தது. 2008ல் சில்வியோ பெர்லுஸ்கோனியின் வலதுசாரிக் கூட்டணியின் மீது வெற்றி கொண்ட இரண்டு ஆண்டுகளின்பின், அது பெர்லுஸ்கோனி மீண்டும் பதவிக்கு வருவதற்கு உதவியது.

போர்த்துக்கல்லின் சமூக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பிரதம மந்திரி ஜோஸே சோக்ரடிஸ் சர்வதேச நிதிய மூலதனத்தின் சார்பில் பேரழிவு தரக்கூடிய சிக்கன நடவடிக்கைகளைச் செயல்படுத்தினார். அதன் பின் மார்ச் மாதம் இராஜிநாமா செய்து பழைமைவாத பெட்ரோ கொஹிலோ பதவிக்கு ஏற்க வழிவகுத்தார்.

கிரேக்கத்தில் PSOK எனப்படும் சமூக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பிரதம மந்திரி ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூ இதேபோல் ஒரு முன்கூட்டிய வெளியேறுதலை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்.

அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவும் இதேபோன்ற போக்கைத்தான் பின்பற்றுகிறார். ஜோர்ஜ் புஷ் மற்றும் குடியரசுக் கட்சியினருக்கு எதிரான விரோதப் போக்கு அவரை 2008ல் வெள்ளை மாளிகைக்கு இட்டுச்சென்றாலும், அவர் ஆப்கானிஸ்தானத்தில் போரை விரிவாக்கினார், லிபியாவில் ஒரு புதிய போரைத் தொடங்கினார் மற்றும் தொழிலாளர்கள், ஓய்வு பெற்றவர்கள், வறியவர்கள் இழப்பில் டிரில்லியன் கணக்கான டாலர்களை வெட்டுக்கள் மூலம் சுமத்தி, தன்னை வோல் ஸ்ட்ரீட்டின் நிபந்தனையற்ற முகவர் என்றுதான் அம்பலப்படுத்திக் கொண்டு வருகிறார்.

ஸ்பெயினில் நடக்கும் நிகழ்வுகள் இதே வடிவமைப்பைத்தான் கொண்டுள்ளன. 2004 தேர்தலில் ஸ்பெயின் ஈராக் போரில் தொடர்பு கொண்டதை அடுத்து ஏற்பட்ட பரந்த எதிர்ப்பினால் சோசலிச தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது. 2008ல் சாதகமான பொருளாதார நிலையை அடுத்து, அது பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை தக்க வைத்துக் கொள்ள முடிந்தது. ஆனால் கட்டுமானத்துறையில் ஏற்றநிலை சர்வதே நிதிய நெருக்கடியினால் சரிந்ததை அடுத்து, சப்பாத்தேரோ அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தின்மீது தீவிர தாக்குதல்கள் என்ற வகையில் விடையிறுப்பைக் கொடுத்துள்ளது.

அது சிறுவர்களுக்கான நலன்களைக் குறைத்து, பொதுத்துறை ஊழியர்களின் ஊதியங்களைக் குறைத்து, ஓய்வூதியத் தொகைகளை குறைத்து, ஓய்வூதியம் பெறக்கூடிய வயதையும் அதிகரித்துவிட்டது. கடந்த ஆண்டு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் பாரிய ஊதிய வெட்டுக்களை எதிர்த்து வேலைநிறுத்தம் செய்தபோது, வேலைநிறுத்தம் செய்வோருக்கு எதிராக பிராங்கோவிற்குப்பின் முதல் முறையாக இராணுவத்தை நிறுத்தி, அதிகாரிகளை நீண்ட கால சிறைவாசம் நேரிடும் என்ற அச்சுறுத்தலுக்கு உட்படுத்தியது. சோசலிச தொழிலாளர் கட்சிக்கு தொழிற்சங்கங்களின் ஆதரவு உள்ளது. அவை சமூக வெட்டுக்களுக்கு எதிரான எதிர்ப்பை கட்டுப்படுத்தும் வகையில் செயல்திறன் அற்ற எதிர்ப்புக்களை மட்டும் காட்டி அரசுக்கு ஒத்துழைத்தன.

சப்பாத்தேரோ அரசாங்கம் அதன் பழைமைவாத முன்னோடி அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையைத்தான் தொடர்ந்தது. ஈராக்கில் இருந்து ஸ்பெயினின் துருப்புக்களை அது திரும்பப் பெற்றாலும், ஆப்கானிஸ்தானத்தில் உள்ள தன் படைகளில் அளவை அதிகரித்தது, லிபியாவிற்கு எதிரான ஏகாதிபத்தியப் போரில் பங்கும் கொண்டது.

இக்கொள்கைகளின் சமூக விளைவுகள் பேரழிவு தரக்கூடியவை ஆகும். உத்தியோகபூர்வ வேலையின்மை விகிதம் ஸ்பெனில் இப்பொழுது 21.3 சதவிகிதம் என்று உள்ளது. 25 வயதிற்குள் இருக்கும் இளைஞர்களில் இருவரில் ஒருவர் வேலையின்றி உள்ளார்.

இறுதியில் சப்பாத்தேரோ தேர்தல்கள் அறிவிப்பைச் செய்யும் முடிவு ஏழு ஆண்டுகள் விசுவாசமாக அவர் சேவை செய்த நிதிய உயரடுக்கினால் மேற்கோள்ளப்பட்டது. அவரிடம் எதிர்பார்க்கப்பட்டதை அவர் செய்துவிட்டார்.

பல மில்லியன் தொழிலாளர்கள் கடந்த இலையுதிர்காலத்தில் ஒரு பொது வேலைநிறுத்தத்தில் பங்கு பெற்ற பிறகு, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தபிறகு, சமூக ஜனநாயக் கட்சியினர் வசந்தகாலத்தில் நடந்த நகரசபை தேர்தல்களில் தோல்வி அடைந்தபின், நிதிய உயரடுக்கும் அதன் செய்தி ஊடகக் குரலும் சப்பாத்தேரோவினால் இனியும் கூடுதலான தாக்குதல்களை சுமத்தும் திறன் இல்லை என்ற முடிவிற்கு வந்தனர்.

அரசாங்கத்தின் கடுமையான செலவுக் குறைப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியிலும், நிதியச் சந்தைகள் ஸ்பெயின் மீது அழுத்தங்களை அதிகரித்துள்ளன. அரசாங்ககடன் பத்திரங்கள் மீதான வட்டி விகிதங்கள் 6% க்கும் மேல் உயர்ந்து விட்டன. கடந்த வெள்ளியன்று, சப்பாத்தேரோ  முன்கூட்டிய தேர்தல்களை அறிவிக்கும் முன்பு, கடன்தர நிர்ணயம் செய்யும் அமைப்பான மூடிஸ் நாட்டின் கடன்தரத்தை கீழிறிக்கி விடுவதாக அச்சுறுத்தியது.

பல தசாப்தங்களாக சோசலிச தொழிலாளர் கட்சிக்கு ஆதரவு கொடுக்கும் முக்கிய செய்தித்தாளாக இருக்கும் எல் பெய்ஸ் இனி தான் சப்பாத்தேரோவை ஆதரிக்கப்போவதில்லை என கடந்த வாரம் அறிவித்து விட்டது. “ஒரு வட்டம் முடிவிற்கு வருகிறது. திரு. சப்பாத்தேரோ தன் நாட்டிற்குக் கடைசிப் பணியைச் செய்ய விரும்பினால், விரைவில் இராஜிநாமா செய்ய வேண்டும்என்று செய்தித் தாளின் தலையங்கம் கூறியது. இந்த ஏட்டின் மூலதனத்தில் கடந்த ஆண்டு அமெரிக்காவின் செல்வம் படைத்த முதலீட்டாளராக நிக்கோலஸ் பெர்க்ருவன் அதிக பங்குகளைக் கொண்டார்.

ஸ்பெயினின் வங்கிகளில் இரண்டாவது மிகப்பெரிதான BHVA யும் சப்பாத்தேரோ இராஜிநாமா செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது; “ஸ்பெயினுக்கு வலுவான, திறமையான அரசாங்கம் தேவை.” என்று பிரான்ஸிஸ்கோ கோன்சரலெஸ் அறிவித்தார். “எமக்கு அக்கறையற்ற குழுவிடம் இருந்து நம்மை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். கிரேக்கர்கள், போர்த்துகீசியர்கள் மற்றும் அயர்லாந்திடம் இருந்து, பிரான்ஸ், ஹாலந்து, ஜேர்மனி போன்ற நாடுகளுடன் சேர வேண்டும்.”

சோசலிச தொழிலாளர் கட்சியின்  முக்கியமான பிரிவினரும் அரசாங்கத் தலைவரிடம் இருந்து தங்களை ஒதுக்கிக் கொள்ளுகின்றன. சப்பாத்தேரோவிற்கு பதிலாக சோசலிச தொழிலாளர் கட்சிக்கு தலைமை தாங்க இருக்கும் முன்னாள் உள்துறை மந்திரி அல்பிரேடோ பெரஸ் ரூபல்காபா ஜூலை மாதம் தன் பதவியில் இருந்து இராஜிநாமா செய்தார்.

அனைத்துக் கட்சிகளும், மரபார்ந்தஇடதுகள்உட்பட நிதிய மூலதனத்திற்கு முற்றிலும் தாழ்ந்து நிற்பது, அரசியல்ரீதியாக தொழிலாள வர்க்கத்தை செல்வாக்கு இல்லாமல் செய்துவிட்டது. ஸ்பெயினில் வரவிருக்கும் தேர்தல்கள் எந்த ஜனநாயகத் தன்மையும் அற்ற ஒரு கேலிக்கூத்து ஆகும். தேர்தல் வாக்காளர்ளின் கண்களை மறைப்பதற்குத்தான் இது குறுகிய காலத்தில் நடத்தப்பட உள்ளது.

பல வேட்பாளர்களில் ஒருவரை வாக்காளர்கள் தேர்ந்து எடுக்கலாம். ஆனால் வருங்கால அரசாங்கத்தின் கொள்கைகள் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டன. கடும் சிக்கனம் மற்றும் சமூகநலச் செலவுகள்மீதான குறைப்புக்கள் தொடரும். அது மக்கள் கட்சி வெற்றிபெற்றாலும், எதிர்பார்ப்பிற்கு மாறாக சோசலிச தொழிலாளர் கட்சி வெற்றிபெற்று அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றினாலும் சரி.

இது ஒரு சர்வதேச நிகழ்வுதான்; ஸ்பெயினில் மட்டும் நடக்கவில்லை. தேர்தல்கள் வருகின்றன, அரசாங்கங்கள் நிதிய உயரடுக்கின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றப்படுகின்றன. ஆனால் நோக்கம் எப்பொழுதும் மிருகத்தனமான செல்வாக்கற்ற கொள்கைகளைத் திறமையுடன் செயல்படுத்துவது என்றுதான் உள்ளது.

சப்பாத்தேரோ ஒரு முக்கிய ஐரோப்பிய நாட்டின் கடைசி சமூக ஜனநாயகக் கட்சிப் பிரதம மந்திரி ஆவார். ஸ்பெயினைத்தவிர, சமூக ஜனநாயக வாதிகள் ஆஸ்திரியா, ஸ்லோவேனியா, கிரேக்கம் ஆகியவற்றில்தான் அதிகாரத்தில் உள்ளனர். ஆனால் இதன் பொருள் அவர்கள் மறுபடியும் தேவைப்பட மாட்டார்கள் என்று ஆகிவிடாது.

இத்தாலியில் நிதிய உயரடுக்கின் பெரும்பகுதி மீண்டும் மத்திய-இடது கட்சிகள் அரசாங்கம் அமைக்க வேண்டும் என வாதிடுகின்றன. ஏனெனில் பெர்லுஸ்கோனி ஆட்சி பெரிதும் உள்மோதல்களுக்கு உட்பட்டு, கடுமையான செலவுக் குறைப்பு நடவடிக்கைளை செயல்படுத்துவதில்லை. ஒரு புதிய மத்திய-இடது அரசாங்கம் ப்ரோடி அரசாங்கம் செய்ததைவிடக் கடினமாக தொழிலாள வர்க்கத்தின்மீது ஆக்கிரோஷமாக தாக்குதலை நடத்தும். முதலாளித்துவஇடதுநீண்ட காலம் முன்னரே சமூக சீர்திருத்தங்கள் பற்றிய அக்கறையைக் கைவிட்டு, அதன் பழைமைவாத எதிர்ப்பாளர்களைவிட அதிகம் மாறுபட்டிருக்கவில்லை.

அரசாங்கங்கள் நிதிய உயரடுக்கின் ஆணைக்கு ஏற்ப அரசாங்கங்கள் மாறினாலும், முழு அரசியலமைப்பு முறையையும் இழிவுபடுத்தப்பட்டாலும், எப்பொழுதும் மேலும்  சர்வாதிகார ஆட்சிகளை நிறுவித் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை நசுக்குவதற்கு பின்னணித் தயாரிப்புக்கள் நடந்துதான் வருகின்றன. இவ்வகையில், ஸ்பெயினின் மக்கள் கட்சி பாசிச பிராங்கோ ஆட்சியுடன் கொண்டுள்ள முறியாத பிணைப்புக்கள் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நிதிய தன்னலக்குழுவின் சிக்கனக் கோரிக்கைகளுக்கு மாற்றாகவும், ஜனநாயக உரிமைகள், தொழிலாளர்களின் சமூக நலன்களைக் பாதுகாப்பதற்கு தேவையானது சமூக ஜனநாயக வாதிகள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் முறித்துக் கொண்டு, புதிய ஜனநாயகப் போராட்ட அமைப்புக்களை நிறுவுதலும், தொழிலாள வர்க்கத்திற்கு புரட்சிகர சோசலிசத் தலைமையும்தான் தேவை ஆகும்.

இதற்கு ஸ்ராலினிசக் கட்சிகள், குட்டி முதலாளித்துவ இடதுகள் Spanish Izquierda Unida, ஜேர்மன் இடது கட்சி, பிரான்சின் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி போன்றவற்றிடம் இருந்து வெளிப்பட்டுவரும் அரசியல் போக்குகளுக்கு எதிரான இடையறாப் போராட்டம் முக்கியமாகும். இக்கட்சிகள் தொழிற்சங்களை பாதுகாக்கின்றன. அவையோ அரசாங்கங்களுடன் ஒத்துழைத்து வெட்டுக்களைச் சுமத்துகின்றன. சில நேரம் குறைகள் கூறினாலும், அவை சமூக ஜனநாயக வாதிகளைக்குறைந்த தீமை எனச் சித்தரித்து தேர்தல்களில் அவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கூறி தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசியல் வளர்ச்சிக்கு தடை செய்கின்றன.

இன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஒன்றுதான் தொழிலாள வர்க்கத்தின் நலன்களைப் பிரதிபலிக்கிறது. பல தசாப்தங்களாக இது ஐரோப்பிய சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் போலித்தோற்றங்களுக்கு எதிராகப் போராடுகிறது. இத்தகைய பிற்போக்குத்தன முதலாளித்துவக் கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்கும் போலி இடது கட்சிகளையும் எதிர்க்கிறது. அது ஒன்றுதான் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரக் கட்சிகளான சோசலிச சமத்துவக் கட்சிகளைக் கட்டியமைத்துக் கொண்டிருக்கிறது.