சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan SEP public meeting against the betrayal of plantation workers’ wage struggle

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் போராட்டம் காட்டிக்கொடுக்கப்பட்டதற்கு எதிராக இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி பொதுக் கூட்டம்

10 August 2011

use this version to print | Send feedback

இலங்கையில் தோட்டத் தொழிற்சங்கங்களால் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் போராட்டம் காட்டிக்கொடுக்கப்பட்டதற்கு எதிராகப் போராடுவதற்கான சோசலிச வேலைத்திட்டத்தைப் பற்றி கலந்துரையாடுவதற்காக சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) ஆகஸ்ட் 14 ஞாயிற்றுக் கிழமை ஹட்டன் நகரில் பொதுக் கூட்டமொன்றை நடத்தவுள்ளது.

மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கத்தின் ஆதரவுடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உட்பட தொழிற்சங்கங்களால் தொழிலாளர்களுக்குத் தெரியாமல் முதலாளிமார் சம்மேளனத்துடன் கடந்த ஜூன் 6 அன்று கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கையின் மூலம், தொழிலளார்கள் மேலும் இரண்டு வருடங்களுக்கு வறிய மட்டத்திலான சம்பளத்துடன் கட்டிப்போடப்பட்டுள்ளார்கள். இப்போது இந்த ஒப்பந்தத்தின் கீழ், வேலை அதிகமாக்கப்பட்டு, தொழிலாளர்களை அடிமைச் சுரண்டலுக்கு உள்ளாக்கும் நடவடிக்கைகளை தோட்டக் கம்பனிகள் உக்கிரமாக்கியுள்ளன.

இந்த ஒப்பந்தத்துக்கு எதிராக, சிறந்த சம்பள உயர்வையும் தரமான சேவைகளையும் மற்றும் சிறந்த வாழ்க்கைத் தரத்தையும் பெற தொழிலாளர்கள் அரசியல் மற்றும் தொழிற்துறை போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என சோ.ச.க. வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது.

ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத தோட்டத் தொழிற்சங்கங்களும் உடனடியாக அதற்கு அடிபணிந்தன. இந்த சகல தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களின் அவசியங்களில் அன்றி முதலாளிகளின் இலாபத்திலேயே அக்கறை காட்டுகின்றன. டெலிகொம், மின்சார சபை மற்றும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் உட்பட, அரச துறையினுள் சம்பளம் மற்றும் ஏனைய அடிப்படை உரிமைகளைக் கோரி இப்போது வளர்ச்சியடையும் போராட்டங்களைப் போலவே, பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்பளப் போரட்டத்திலும் தொழிற்சங்கங்களின் துரோக நடவடிக்கைகள் பற்றி சோ.ச.க. சுட்டிக்காட்டியவை இப்போது ஒப்புவிக்கப்பட்டுள்ளன.

எந்தவொரு தொழிற்சங்கத்தின் மீதும் நம்பிக்கை வைக்காமல் அந்த சங்கங்களில் இருந்தும் சகல முதலாளித்துவ மற்றும் இடதுசாரி வேடம் பூண்டுள்ள கட்சிகளில் இருந்தும் அமைப்பு ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் முழுமையாகப் பிரிந்து, தனியார் இலாபத்தை அடிப்படையாகக் கொண்டுள்ள முதலாளித்துவ முறைமையை தூக்கிவீசும் சோசலிச வேலைத் திட்டத்தை நோக்கி தொழிலாளர்கள் திரும்ப வேண்டும். தோட்டப்புறங்கள் பூராவும் தங்களது சுயாதீன நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்பி தொழிலாளர்கள் சம்பளம், சிறந்த வாழ்க்கை நிலைமைகள் மற்றும் தொழில் நிலைமைகள் மற்றும் ஏனைய அடிப்படை உரிமைகளுக்குமான போராட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

சோ.ச.க. கூட்டத்தில் இந்த இன்றியமையாத சோசலிச வேலைத் திட்டம் பற்றி கலந்துரையாடப்படும். தொழிலாளர்கள் இளைஞர்கள் மற்றும் எமது வாசகர்களுமாக அனைவரையும் இந்தக் கூட்டத்துக்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

காலம்: ஆகஸ்ட் 14 ஞாயிறு, காலை 10.00 மணி

இடம்: ஹட்டன், கிறிஸ்தவ தொழிலாளர் ஒத்துழைப்பு மண்டபம் (டன்பார் வீதி)