சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : 

An open letter to Professor Juan Cole: A reply to a slander

பேராசிரியர் ஜுவன் கோலிற்கு ஒரு பகிரங்கக் கடிதம்: ஒரு அவதூறுக்கு பதில்

use this version to print | Send feedback

உலக சோசலிச வலைத்தளம் தன் வாசகர்களை ஜுவான் கோலின் வலைத் தளமான http.www.juancole.come/contact க்கு எழுதுமாறு ஊக்கமளிக்கிறது

பேராசிரியர் ஜுவான் கோல் அவர்களுக்கு:

உங்கள் வலைத்தள பதிவான Informed Commentஇல் ஆகஸ்ட் 5 வெளியிட்டுள்ள கட்டுரையில் உலக சோசலிச வலைத்தளம் கிழக்கு லிபியாவை கடாபி ஆட்சி மீண்டும் எடுத்துக் கொள்ளும் முயற்சிக்கு ஆதரவு கொடுப்பதாகவும் லிபியர்களைப் படுகொலை செய்வதை வரவேற்கும் என்றும் தாங்கள் எழுதியுள்ளீர்கள்.

லிபியான மீது ஐந்து மாத காலமாக அமெரிக்க-நேட்டோப் படைகளை நடத்தும் போரின் சாத்தியமான விளைவு பற்றிய ஒரு குறிப்பில் நீங்கள் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளீர்கள்:

ஐக்கிய நாடுகளின் நட்பு நாடுகள் (UN allies) கடாபி கிழக்குப் பகுதியை எடுத்துக் கொண்டு, ஆயிரக்கணக்கானவர்களைப் படுகொலை செய்யவும், சிறையில் அடைக்கவும் அனுமதிக்கமாட்டா. குறைந்தபட்சம் அதைத் தடுப்பதற்கான நடைமுறை நடவடிக்கைகளுக்கு அவை எதிர்ப்புத் தெரிவித்தாலும் Tea Party, அலெக்சாந்தர் காக்பர்ன் மற்றும் உலக சோசலிச வலைத் தளம் அவ்வாறு நடக்க வேண்டும் என்று விரும்பினாலும்.”

நீங்கள் கட்டாயம் அறிந்துள்ளபடி, இந்த அறிக்கை லிபியப் போர் பற்றி உலக சோசலிச வலைத்தளம் எடுத்துள்ள நிலைப்பாட்டை முற்றிலும் தவறாகத் திரித்துக் கூறுவது ஆகும்.

அத்தகைய விளைவிற்கு ஆதரவு கொடுக்கும் எத்தகைய அறிக்கை அல்லது கட்டுரையையும் உலக சோசலிச வலைத் தளத்தில்  இருந்து நீங்கள் மேற்கோள் கொடுக்கவில்லை, கொடுக்கவும் முடியாது. லிபியா மீது அமெரிக்க நேட்டோ குண்டுத்தாக்குதல் நடத்தத் தொடங்கியதில் இருந்தே, உலக சோசலிச வலைத் தளம் ஒரு முன்னாள் காலனித்துவ நாட்டிற்கு எதிராக இந்த ஏகாதிபத்தியப் போர் குறித்து ஒரு கொள்கைரீதியான எதிர்ப்பு நிலைப்பாட்டைத்தான் உறுதியாகக் கொண்டுள்ளதுடன், அதே நேரத்தில் வலதுசாரி முதலாளித்துவச் சர்வாதிகாரியான முயம்மர் கடாபிக்கும் எந்த ஆதரவையும் கொடுக்கவில்லை.

போர் தொடங்குவதற்கு சற்று முன்பு இருந்தே, நாங்கள் லிபிய மக்கள் விடுதலைக்கான கருவி அமெரிக்கா அல்லது நேட்டோவின் குண்டுகள் அல்லது ஏவுகணைகளோ அல்ல, லிபியத் தொழிலாள வர்க்கம் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா முழுவதும் உள்ள தொழிலாளர்களுடன் கூட்டுச் சேர்ந்து போராடுவதின் மூலம்தான் என்று வலியுறுத்தி வந்துள்ளோம்.

அதே நேரத்தில், அமெரிக்க, பிரெஞ்சு, பிரிட்டிஷ், இத்தாலிய ஏகாதிபத்தியம் இப்போரை நடத்துவதில் கொண்டுள்ள நலன்களை பற்றி முழுமையான, தெளிவான பகுப்பாய்வையும் அபிவிருத்திசெய்துள்ளோம். ஏகாதிபத்திய சக்திகளின் மூலோபாயக் கணக்கீடுகளில் லிபிய எண்ணெய் நீண்டகாலமாகக் கொண்டுள்ள பங்கையும் நாங்கள் அம்பலப்படுத்தியுள்ளோம்; மேலும் இச்சக்திகளுக்கும் சீனா, ரஷ்யா ஆகியவற்றிற்கு இடையே பெருகிய மோதல்கள், லிபியாவிலும் பரந்த பிராந்தியத்திலும் அவற்றின் போட்டி நலன்கள் பற்றியும் அம்பலப்படுத்தியுள்ளோம்.

லிபியக் குடிமக்கள்படுகொலை செய்யப்படுவதைநாங்கள்காண விரும்புவோம்என்று கூறுவது ஒரு நச்சுத்தனமான பொய் ஆகும். லிபியாவில் நேட்டோ வான் தாக்குதல்களால் இன்னும் அதிகமான லிபியக் குடிமக்கள் படுகொலைக்கு உள்ளாகும் நிலையில், என்ன நடக்கப்போகின்றது என்ற கேள்வியையும் விட்டுவைத்துள்ளது.

உலக சோசலிச வலைத் தளத்திற்கு எதிரான தவறான குற்றச்சாட்டை அதிகப்படுத்தும் வகையில், நீங்கள் நேர்மையற்ற, நயமற்ற அரசியல் கலவை முறையைக் கையாள்கிறீர்கள். லிபியா பற்றிய எங்கள் நிலைப்பாட்டை நீங்கள் தவறாக்குவது மட்டும் இல்லாமல், பொய்யை உண்மைபோல் காட்ட வேண்டும் என்ற முயற்சியில், நீங்கள் மற்ற அரசியல் சக்திகள் எடுத்துள்ள முற்றிலும் இயைந்திராத நிலைப்பாடுகள் அனைத்தையும் ஒன்றாக இணைக்க முற்படுகிறீர்கள்.

ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான உலக சோசலிச வலைத் தளத்தின் கொள்கைரீதியான நிலைப்பாடு இப்பிராந்தியத்தில் ஆழ்ந்த முறையில் வேரூன்றியுள்ள காலனித்துவமுறை, ஏகாதிபத்தியம் ஆகியவற்றின் வரலாற்று அனுபவங்களில் உள்ளது என்பதுடன் சர்வதேச மார்க்சிச மற்றும் சோசலிச இயக்கத்தின் நீண்டகாலக் கொள்கைகளிலும் ஆழ்ந்த வேர்களைக் கொண்டுள்ளது.

நாங்கள் பல அரசியல் வேறுபாடுகள் கொண்டுள்ள அலெக்சாந்தர் காக்பர்ன் போரை ஒரு இடது ஜனநாயகவாதி என்னும் முறையில் எதிர்க்கிறார். ஏகாதிபத்தியப் போருக்கு இவருடைய எதிர்ப்பு ஒரு தீவிரவாத செய்தியாளர் என்ற முறையில் அவருடைய உத்தியோகப்போக்கினால் நன்கு நிறுவப்பட்டுள்ளது.

Tea Party கட்சி அமெரிக்க ஆளும் உயரடுக்கின் வலதுசாரிக் கருவி ஆகும். லிபியப் போரில் இது ஒபாமாவுடன் கொண்ட வேறுபாடுகள்நீங்களே குறிப்பிட்டுள்ளபடிஏகாதிபத்தியத்திற்கு எதிர்ப்பு என்ற கருத்துடன் எத்தொடர்பையும் கொண்டிருக்கவில்லை.

இக்கலவையின் வெளிப்படையான நோக்கம் ஒபாமா நிர்வாகத்தின் போர்க்கொள்கையை பற்றிய எந்த விமர்சனத்தையும் நியாயமற்றது என முத்திரையிடுவதுதான். இதன் விளைவு பொதுமக்கள் கொண்டுள்ள கருத்தை மாசுபடுத்துதல், லிபியப் போரில் உள்ள உண்மையான பிரச்சினைகளை இழிவுபடுத்துதல் மற்றும் என்ன நடக்கிறது என்பது பற்றிய புறநிலைப் ஆய்வைத் தடுப்பதும் ஆகும். ஒரே ஒரு விவரிப்புத்தான் அனுமதிக்கப்படுகிறதுஅதாவது நீங்கள் இப்போரை நியாயப்படுத்த எடுத்துள்ள நிலைப்பாடு; மற்றவை அனைத்தையும் மங்கச்செய்துவிடுகின்றன.

இத்தகைய விவாதப்போக்கின் இழிந்த தன்மை, பேராசிரியர் கோலாகிய உங்களுக்கு முற்றிலும் அறிமுகமானதுதான். இஸ்ரேலிய அரசின் கொள்கைகளுக்கான உங்களது எதிர்ப்பை யூதஎதிர்ப்பு என்று சமன்படுத்திக் காட்ட முற்படுபவர்களால் இது பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏன் உங்கள் இஸ்ரேலியக் கொள்கை பற்றிய எழுத்துக்களுக்கும் இகழ்வுற்ற யூத எதிர்ப்பு ஏமாற்றான “The Protocols of the Elders of Zion” உடன் கூட ஒப்புமைகளை கூறப்பட்டுள்ளன.

இத்தகைய இகழ்வான வழிவகைகளுக்கு நீங்கள் ஏன் இப்பொழுது செல்ல முற்படுகிறீர்கள்? இதற்கு விடை நீங்கள் ஆர்வத்துடன் ஆதரவு கொடுத்துவரும் கடந்த ஐந்துமாத காலமாக நடைபெற்று வரும் போரின் நிகழ்வுப்போக்கில்தான் இதற்கான விடை காணப்பட முடியும்.

ஒபாமா நிர்வாகம் மற்றும் பிரெஞ்சு, பிரிட்டிஷ் அரசாங்கங்களின் போர்ப் பிரச்சாரத்தினால் தாம் ஏமாற அனுமதிக்கப்பட்டவர்களுள் நீங்களும் ஒருவர் ஆவர். இந்தச் சக்திகள் எண்ணெய் வளம் செழிக்கும் வட ஆபிரிக்க நாட்டில்மனித உரிமைகள்மற்றும்ஜனநாயகத்தின்பால் உள்ள அக்கறையினால் குறுக்கிடுகின்றன என்ற பாசாங்குத்தனமான கூற்றுக்களை நீங்கள் விமர்சனமின்றி ஏற்றுள்ளீர்கள். இக்கூற்றுக்கள் ஒன்றும் புதியனவை அல்ல. இதேபோன்ற வாதங்கள் 1914ல் இருந்து பெல்ஜியத்தில் கற்பழிப்பு தொடங்கி சதாம் ஹுசைனின்கற்பழிப்பு அறைகள்வரை ஒவ்வொரு ஏகாதிபத்தியப் போரையும் நியாயப்படுத்தப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

லிபியக் குடிமக்களைக் காப்பாற்றுவதற்கு ஒரு பரந்த பொது நோக்கத்தில் இருந்துதான் ஒபாமா நிர்வாகத்தின் செயல் தோன்றியது என நீங்கள் வலியுறுத்தியுள்ளது இதே நிர்வாகம் அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளின் குடிமக்களுக்கு எதிராகப் போர் நடத்துகிறது என்னும் உண்மையினால் சிறிதும் அதிர்விற்கு உட்படவில்லை; அதே போல் நிர்வாகம் சவுதி அரேபியாவின் ஆதரவுடைய மக்கள் அடக்குமுறை பஹ்ரைனிலும் மற்றும்  பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் படுகொலை செய்வதற்கும் ஆதரவு கொடுக்கிறது என்பதும் உங்களை அதிர்விற்கு உட்படுத்தவில்லை.

வாஷிங்டனும் மேற்கு ஐரோப்பியச் சக்திகளும் லிபிய நிகழ்வுகளைப் பற்றி இன்னும் நேரடியான, தடைகள் அற்ற கட்டுப்பாட்டை நாட்டின் கணிசமான பெட்ரோலிய இருப்புக்கள் மீதும் மற்றும் உலக எண்ணெய்ச் சந்தை முழுவதிலும் நிறுவும் நோக்கத்தைக் கொண்ட ஒரு இராணுவத் தலையீட்டிற்கு போலிக்காரணமாகப் பயன்படுத்துகின்றன என்தை நீங்கள் அப்படியே புறக்கணித்து விட்டீர்கள்.

லிபியக் குடிமக்களைப் பாதுகாத்தல் என்ற போலிக்காரணத்தில் தொடக்கப்பட்ட இப்போர் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கு இறப்பு, காயத்தை அளித்திருப்பதுடன் நாட்டின் உள்கட்டுமானத்தைத் தகர்த்து பிராந்தியம் முழுவதிலும் பொருளாதார இடர்கள் பரவவும் வழிவகுத்துள்ளது. நூறாயிரக்கணக்கான வெளிநாட்டு தொழிலாளர்கள் ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அவர்களில் பலர் இந்த வழிவகையில் உயிர்களையும் இழந்துள்ளனர்.

சுதந்திர லிபியச் சக்திகள்என்று நீங்கள் குறிப்பிடும் பிரிவுகள் உதைத்து மிதித்தல், சித்திரவதை செய்தல், படுகொலைகள் உட்பட பல போர்க்குற்றங்களில் தொடர்புடையவை. பெங்காசியைத் தளமாகக் கொண்ட CIA ஆதரவாளர்கள், முன்னாள் கடாபி அதிகாரிகள் மற்றும் அல் குவைடா பிரிவுகள் நிறைந்த TNC என்னும் இடைக்கால தேசியக் குழுவிற்குள் காணப்படும் இடைவிடாத உள்மோதல்கள் அதன் தலைமை இராணுவத் தளபதியான ஜெனரல் அப்துல் படா யூனிஸ் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்டதில் வெளியே வந்துள்ளது; மேலும் இப்பிராந்தியம் முழுவதையும் போட்டி இனக்குழுக்களிடையேயான போர் முறையில் ஆழ்த்தும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளது

இதற்கிடையில், போரை நடத்தும் முக்கிய சக்திகள் பெங்காசித் தளமுடையை இடைக்கால தேசியக் குழுவை லிபியாவின்சட்டபூர்வமான அரசாங்கம்என்று அங்கீகரித்து, திரிப்போலி ஆட்சியுடனும் பேச்சுக்களை நடத்துகின்றன. இந்த இழிந்த வழிவகையை ஒட்டி இறுதியில் ஒரு புதிய ஆட்சி வெளிப்படுமேயானால், அது ஏகாதிபத்திய சக்திகளின் கொள்ளை முறைக்கு உதவும் வகையில் இருக்கும், லிபிய மக்களின் ஜனநாயக மற்றும் சமூக விருப்புகளுக்கு நேரடி எதிர்ப்பைக் காட்டும்.

லிபியப் போர் தொடங்கியதற்குப் பின் நீங்கள் உங்கள்இடதிற்கு ஒரு பகிரங்கக் கடிதம்என்பதில் முன்வைத்துள்ள உங்கள் வாதங்கள் முற்றிலும் மதிப்பிழந்துவிட்டன; அப்பொழுது நீங்கள் எடுத்த நிலைப்பாடும் பெருகிய முறையில் ஏற்க முடியாத தன்மையை அடைந்துவிட்டது.

உங்கள் பிழைகளைத் திருத்திக் கொள்ளுவதற்கு மாறாக, உலக சோசலிச வலைத் தளத்திற்கு எதிராக நீங்கள் நெறியற்ற முறையில் அவதூறுகளை அள்ளி வீசுகிறீர்கள்; அதுவோ உங்கள் அறிக்கைகளை முழு விமர்சனத்திற்கு உட்படுத்தியது. (பார்க்கவும். லிபியா, ஏகாதிபத்தியம் மற்றும் "இடது" புத்திஜீவிகளின் சரணாகதி: பேராசிரியர் ஜூவான் கோல் விவகாரம்.

அதன் வழியில் இந்த விடையிறுப்பு உங்கள் நிலைப்பாட்டின் அரசியல் மற்றும் அறிவார்ந்த தன்மையின் திவால்தன்மைக்குத்தான் சாட்சியம் கூறுகிறது. உங்கள் கருத்துக்களைக் பாதுகாப்பதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது; ஆனால் உலக சோசலிச வலைத் தளத்தின்  மீது சகதி பூசுவதற்கு உங்களுக்கு உரிமை இல்லை.

உலக சோசலிச வலைத் தளத்தின் மீது தவறான குற்றச்சாட்டான அது லிபிய மக்கள் படுகொலைக்கு ஆதரவு தருகிறது என்ற குற்றசாட்டை கூறியுள்ளதின் மூலம் நீங்கள் அதன் மீது அவதூறு கூறுவதற்குப் பொறுப்பு ஆகிறீர்கள். உங்களுடைய Informed Comment வலைத் தளக் கட்டுரைப் பகுதியில் இதுபற்றி நீங்கள் முழுமையாக மற்றும் பகிரங்கமாக திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு நாங்கள் கோருகிறோம்.

Bill Van Auken
For the 
World Socialist Web Site