சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

Record levels of unemployment for Europe’s youth

ஐரோப்பிய இளைஞர்களிடையே மிக அதிக மட்டத்திலான வேலையின்மை

By Stefan Steinberg
13 August 2011

use this version to print | Send feedback

ஜேர்மனிய புள்ளிவிவர அலுவலகம் மற்றும் யூரோஸ்டாட்டின் (Eurostat) சமீபத்திய தகவல்கள்படி, ஐரோப்பா முழுவதும் இளைஞர் வேலையின்மை கடந்த இரண்டரை ஆண்டுகளில் அதிர்ச்சியூட்டும் வகையில் 25% உயர்ந்து விட்டது. தற்போதைய இளைஞர் வேலையின்மை விகிதங்கள் புள்ளிவிவரங்கள் சேகரிக்கத் தொடங்கியதில் இருந்து ஐரோப்பாவில் மிக அதிகமாகும்.

2008 வசந்தக் காலத்தில், அந்த ஆண்டு ஏற்பட்ட நிதியச் சரிவு மற்றும் லெஹ்மன் பிரதர்ஸின் சரிவு ஆகியவற்றிற்கு முன்பு, ஐரோப்பாவில் இளைஞர்களின் உத்தியோகபூர்வ வேலையின்மை விகிதம் சராசரியாக 15% என்று இருந்தது. ஜேர்மனிய புள்ளிவிவர அலுவலகத்தில் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய தகவல்கள் இப்பொழுது இந்த எண்ணிக்கை 20% க்கும் மேலாகிவிட்டது என்பதை வெளிப்படுத்துகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 27 நாடுகளில் மொத்தத்தில் 15 முதல் 24 வயதிற்குள் இருக்கும் இளைஞர்களில் 20.5% சதவிகிதத்தினர் வேலை தேடுகின்றனர். அதே நேரத்தில், இந்த எண்ணிக்கைகள் தனித்தனி ஐரோப்பிய நாடுகளில் உள்ள வேலையின்மை விகிதங்களில் உள்ள பெருத்த வேறுபாடுகளை மறைக்கின்றன.

ஜோஸே லூயி சப்பத்தேரோ தலைமையில் சமூக ஜனநாயக அரசாங்கம், சர்வதேச நாணைய நிதியம் மற்றும் வங்கிகளின் ஆணைகளுக்கு ஏற்ப தண்டனைபோல் உள்ள சிக்கன நடவடிக்கைகளை தொடர்ச்சியாக அறிமுக்கப்படுத்தியுள்ள ஸ்பெயினில், இளைஞர் வேலையின்மை 2008ல் இருந்து இருமடங்காகி இப்பொழுது 46% என்று உள்ளது. ஐரோப்பியத் தரப் பட்டியலில் கிரேக்கம் இரண்டாம் இடத்தில் உள்ளது. அந்நாடுதான் ஐரோப்பிய ஒன்றியத்தால் பிணையெடுக்கப்பட்டுச் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட்டது. அங்கு வேலையின்மை 40% என்று உள்ளது. மூன்றாம் இடத்தில் 28% உடன் இத்தாலி உள்ளது. அதைத்தொடர்ந்து போர்த்துக்கல்லும் அயர்லாந்தும் (27%), அதன்பின் பிரான்ஸ் (23%) உள்ளது.

நாட்டின் முக்கிய நகரங்களில் அலைபோன்ற கலகங்கள் மற்றும் எதிர்ப்புக்களில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ள பிரிட்டனில், வேலையின்மை விகிதம் 20% ஐச் சுற்றி உள்ளது. பிரிட்டனின் தேசியப் புள்ளி விவர அலுவலகத்தில் இருந்து வந்துள்ள ஒரு சமீபத்திய அறிக்கை 16 முதல் 24 வயதுவரை உள்ள இளைஞர்களிடையே வேலையின்மை உறுதியாக உயர்ந்துவருகிறது, 2008ன் முதல் காலாண்டில் 14.0% என்பதில் இருந்து 2011 ன் முதல் காலாண்டில் 20% என உள்ளது எனத் தகவல் கொடுத்துள்ளதுஇது மூன்றே ஆண்டுகளில் மிக அதிக 40% அதிகரிக்கும்.

சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, ஐரோப்பாவின் மிகப் பெரிய நாடான ஜேர்மனி இளைஞர் வேலையின்மை விகிதத்தைப் பொறுத்தவரை மிகக்குறைந்த உத்தியோகபூர்வ விகிதங்களில் ஒன்றாக உள்ளது (9.1%). முன்னாள் சமூக ஜனநாயகக் கட்சி-பசுமைக் கட்சி கூட்டணி அரசாங்கம் அறிமுகப்படுத்திய கொள்கைகளினால், முக்கியமாக, ஜேர்மனி ஐரோப்பாவில் மிகப் பரந்தளவில் உருவாக்கப்பட்டுள்ள குறைவூதியத் தொழிலாளர் துறைகளில் ஒன்றாக உள்ளது.

2010ல் குறைந்தப்பட்சம் 7.84 மில்லியன் ஜேர்மனிய தொழிலார்கள்வாடிக்கையான வகைகளில் இல்லாத வேலைகள்என்று அழைக்கப்படுபவற்றில் உறுதியற்ற தன்மையில் இருந்தனர். அதாவது, பிரதிநிதித்துவப்படுத்தும் பணி, தற்காலிகப் பணி, பகுதி நேரப் பணிகள் என்று வாரத்திற்கு 20 மணி நேரத்திற்கும் குறைவான அளவுதான் வேலை என்று உள்ள நிலை. இத்தொழிலாளர்களில் பலர் மாதம் ஒன்றிற்கு 400 யூரோக்கள் அல்லது அதற்கும் குறைவாகத்தான் வருமானம் ஈட்டுகின்றனர். சமீபத்திய புள்ளிவிவரங்கள் இத்தகைய தொழிலாளர்களின் ஊதியத் தரங்கள் உண்மையில் சமீப ஆண்டுகளில் சரிந்துவிட்டது என்பதைத்தான் காட்டுகின்றன. இதையொட்டி ஜேர்மனியில்உழைக்கும் ஏழைகள்பிரிவு என்பது அதிகரித்துவிட்டது.

இளம் ஜேர்மனியர்களில் வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளவர்களில் கிட்டத்தட்ட 40% தவிர்க்கமுடியாமல் இத்தகைய உறுதியற்ற வேலைகளில்தான் பணிபுரிகின்றனர் என்று ஜேர்மனிய புள்ளிவிவரங்கள் அலுவலகம் கூறுகிறது; இவற்றில் ஊதியம் மிகவும் குறைவாகும், மேலும் பணியும் மிக மிகத் தற்காலிகமானது. ஜேர்மனியில் வேலையின்மை பற்றிச் சரியான புள்ளிவிவரங்களை பெறுதல் கடினமாகும். ஆனால் நாட்டின் இளைஞர்களிடையே உள்ள தீவிர நிலைமை ஐரோப்பா முழுவதும் பிரதிபலிக்கிறது அதாவது, தகுதிக்குக் குறைந்த வேலைகளில் ஈடுபட்டுள்ள மில்லியன் கணக்கானவர்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டால், இளைஞர் வேலையின்மை பற்றிய உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் பாரியளவில் அதிகரிக்கும்.

ஐரோப்பிய இளைஞர்களிடையே ஒரு பரந்த அடுக்கு நீண்டகால வேலையின்மையில் இருக்கும் நிலை வளர்ந்துவருவது, அதில் மிக அதிகம் படித்த இளைஞர்கள், உயர்கல்வித் தகுதிகள் பெற்றும் பணி பெறமுடியாத நிலையில் இருப்பது என்பது, பல விமர்சகர்களை இவர்களை ஒருஇழந்துவிட்ட தலைமுறை என்று குறிப்பிட வைத்துள்ளது.

இளம் வேலையற்றோர் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சினைகள் சமூகநலச் செலவுக் குறைப்புக்கள் மற்றும் சிக்கன நடவடிக்கைகள் என்று ஐரோப்பா முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளவற்றால் அதிகமாகிவிட்டன. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் வங்கிகளின் கருவூலங்களை மீண்டும் நிரப்புவதற்கும் ஐரோப்பிய முதலாளித்துவ உயரடுக்கின் பணப்பைகளை நிரப்புவதையும் நோக்கமாகக் கொண்டு, இளைஞர்களை மிகக் கடினமான பாதிப்பிற்கு உட்படுத்துகின்றன.

கடந்த வார இறுதியில் தொடங்கிய எதிர்ப்புக்களும் கலகங்களும் நடந்த லண்டன் புறநகரான டோட்டன்ஹாம் லண்டனிலேயே மிக உயர்ந்தளவு வேலையின்மையைக் கொண்டுள்ளது. பிரிட்டனின் முழுப் பகுதியிலும் 12 வது உயர்ந்த இடம் என்பது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. டோட்டன்ஹாமிற்குச் சற்றே தெற்கில், லண்டன் உட்பகுதியான ஹாரின்கே (Haringey) ஏற்கனவே இளைஞர்கள் பணிகளுக்கான அதன் செலவுகளை இந்த ஆண்டு 75% குறைத்துவிட்டது. இந்த வெட்டுக்கள் பகுதி உள்ளாட்சியின் வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறையைக் குறைக்கும் நோக்கத்தைக் கொண்ட நடவடிக்கைகளின் தொகுப்பின் ஒரு பகுதி ஆகும். அத்தகைய போக்கு டேவிட் காமெரோனின் தலைமையில் உள்ள கன்சர்வேடிவ் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளன.

நூலகங்கள், விளையாட்டு மையங்கள் அடங்கிய இளைஞர்களுக்கான வசதிகளை மூடுதல் மற்றும் பொதுநல நிதியுதவிகளான இளைஞர்களுக்கு நிதியுதவி, வீடுகள் நிதியுதவிகளைக் குறைத்துள்ளதுடன் சேர்ந்து வேலையில்லாத இளைஞர்கள் வறுமையில் தள்ளப்பட்ட தங்கள் ஓய்வு நேரத்தைப் படைப்பாற்றல் திறனுக்குப் பயன்படுத்தும் வாய்ப்பும் மறுக்கப்படுகின்றனர் என்ற பொருளைத் தருகிறது. இத்தகைய நிலைமைகள் லண்டன் மற்றும் பிரிட்டனுக்கு மட்டும் பிரத்தியேகமானதல்ல. ஐரோப்பா முழுவதும் அவை படர்ந்துள்ளன. கன்சர்வேடிவ், சமூக ஜனநாயக, பசுமைக் கட்சி என அனைத்து அரசியல் வண்ணங்களையும் கொண்டுள்ள அரசாங்கங்களால் இக்கொள்கைகள் முன்வைக்கப்படுகின்றன.

பிரிட்டனில், முக்கிய அரசியல்வாதிகளும் சாக்கடைச் செய்தி ஊடகமும் மற்றும்தரமானசெய்தி ஊடகம் என அழைக்கப்படுபவையும் தங்கள் குற்றம்சார்ந்த நடவடிக்கைகளில் இருந்து கவனத்தைத் திசைத்திருப்பும் வகையில் எதிர்ப்புத் தெரிவிக்கும் இளைஞர்களைகுண்டர்கள்”, “அனைத்தையும் நாசப்படுத்துபவர்கள்என்று அரக்கத்தனமாக சித்தரிக்க முற்பட்டுள்ளனர். ஆனால் ஐரோப்பிய செய்தி ஊடகத்தின் முக்கியமான பிரிவுகளுக்கு இந்த வாரம் பிரிட்டனில் நடந்தவற்றிற்கும் தற்கால ஐரோப்பாவில் மில்லியன் கணக்கான இளைஞர்கள் முன்னோக்கு சிறிதும் இல்லாது இருக்கும் நிலைக்கும் இடையே உள்ள தொடர்பு நன்கு தெரிந்திருந்தது.

ஜேர்மனிய மொழிச் செய்தி ஊடகத்தில் இரு கட்டுரைகள் செய்தி ஊடகத்தின் சில பிரிவுகள் வேலைகள் மற்றும் இளைஞர்களுக்கான சமூகப் பாதுகாப்புக்களை முறையாகத் தகர்த்தல் என்பது வெடிப்புத்தன்மையை ஏற்படுத்தும் என்பது மட்டும் இல்லாமல், புரட்சிகர சமூக தாக்கங்களையும் கொண்டுள்ளது என்பதைத் தெளிவாக்குகின்றன.

வியாழன் அன்று ஜேர்மனிய Der Spiegel ஆகஸ்ட் 12 சர்வதேச இளைஞர் தினம் எனக் குறிப்பிட்டு கீழ்க்கண்ட வினாவை எழுப்பியது: “இது கொண்டாட்டம், களிப்பு ஆகியவற்றைக் கொண்ட தினமாக இருக்க வேண்டும். ….ஆனால் கொண்டாடுவதற்கு ஏதேனும் உள்ளதா? இல்லை.”

கட்டுரை தொடர்ந்து கூறுவது: “புள்ளிவிபரங்கள் மிக ஆபத்தானவை. ஏனெனில் அவை ஐரோப்பிய கடன் நெருக்கடிக்கு ஒரு விளக்கத்தைக் கொடுக்கின்றன. யூரோ நாடுகளிலுள்ள நெருக்கடி திவாலாகியுள்ள நாடுகளின் கருவூலங்களுக்கு மட்டும் அல்ல, மக்கள் அனைவருக்கும் தீய விளைவுகளைக் கொடுக்கும் என்பதைக் காட்டுகின்றன. மேலும் இதுபோன்றவற்றில் எப்பொழுதும் உள்ளதைப் போல், இது முதலில் இளைஞர்களைத் தாக்குகிறது.”

இதன்பின் ஏதென்ஸ் மற்றும் மாட்ரிட்டில் சிக்கன நடவடிக்கைளுக்கு எதிராகத் தெருக்களுக்கு வந்து ஆர்ப்பரித்த நூறாயிரணக்கணக்கான இளைஞர்கள் பற்றி கவனத்தை ஈர்த்து, சமீபத்திய பிரிட்டிஷ் எதிர்ப்புக்களுடன் இணைந்த தன்மையையும் காட்டி முடிவாகக் கூறுகிறது: “லண்டனில் இந்த நம்பிக்கை இழந்துவிட்ட தலைமுறையை நிறுத்தி வைக்கும் சக்தி ஏதும் இல்லை எனத் தோன்றுகிறதுஎன்று கட்டுரை கூறுகிறது.

வியன்னாவில் ஆஸ்திரிய Der Standard பத்திரிகை பின்வருமாறு எழுதுகிறது: “ஒருபுறத்தில் நம்முடன் வசிக்கும் பிசாசான Dow Jonesஐ களிப்புடன் வைத்திருப்பதற்காக அரசாங்கங்கள் பில்லியன் கணக்கான பணத்தைச் சந்தைகளில் கொட்டுகின்றன. மறுபுறமோ அவை சமூகநலச் செலவுகளைக் குறைக்கின்றன. இத்தகைய கொள்கைகள் இழிந்தமுறையில்தான் மக்களால் எடுத்துக் கொள்ளப்படுகின்றன என்பது ஸ்பெயின், கிரேக்கம் மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில் நடக்கும் நிகழ்வுகள் காட்டுகின்றன. இங்கு இளைஞர் வேலையின்மை முறையே 44% 38% மற்றும் 20% ஆக உள்ளன. இது மிகச் சிறிய உயரடுக்கிற்கு ஒரு புதிர்போல் உள்ளது. அவர்கள் அதிருப்தியடைந்துள்ள ஆர்ப்பாட்டக்கார்களுக்கும் குற்றவாளிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் பற்றி தேனீர் அருந்திக் கொண்டு விவாதிக்கின்றனர். அதேநேரத்தில் பணச் சந்தைகளில் நிலைமை பற்றித்தான் உண்மையில் கவலைப்படுகின்றனர்.”

இதற்கான தீர்வுகூடுதல் பொலிஸ் மற்றும் வெற்று வார்த்தைகள் அல்ல, செயல்பாடுதான் தேவை. அதுவும் மிக விரைவில் வரவேண்டும்.” ஆனால் கட்டுரை எச்சரிக்கையாகக் கூறும் முடிவுரையாவது: “ஆனால் அவ்வாறான நாள் வருமா என்பதை தெருக்களில் ஆர்ப்பரிக்கும் இத்தலைமுறை காணுமா என்பது சந்தேகத்திற்கு உரியதுதான்.”