சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Pervasive unemployment and poverty in London areas hit by riots

கலகங்களின் பாதிப்பிற்கு உட்பட்ட லண்டன் பகுதிகளில் படர்ந்துள்ள வேலையின்மையும் வறுமையும்

By Paul Stuart
16 August 2011

use this version to print | Send feedback

நான்கு குழந்தைகளுக்கு தந்தையும் 29 வயதுடையவருமான மார்க் டுக்கனை பொலிசார் கொன்றதை அடுத்து லண்டனிலும் பிற நகரங்களிலும் பரவிய கலகங்களில் தொடர்புடையவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள இளைஞர்களுக்கு எதிராக பிரிட்டிஷ் அரசியல் ஸ்தாபனமும் அதன் அரசாங்கக் கருவியும் மிகத் தீய வர்க்க நீதியை சுமத்திக் கொண்டிருக்கின்றன.


கா
ம்டெனில் பொலிஸ் கலகப் பிரிவினர்

கிட்டத்தட்ட 3,000 பேர் இதுவரை பொலிசார் தொடர்ந்து தலைநகரில் வீடுகளைச் சோதனை இடுவதைத் தொடர்வதை தொடர்ந்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே இவர்களில் பாதிப்பேர் எந்த முறையான வழிவகையும் இல்லாத அங்கீகரிக்கப்படாத நீதிமன்றங்கள் முன் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு முந்தைய தண்டனைகள் ஏதும் இல்லை என்ற உண்மை இருந்தாலும்கூட, சுற்றிவளைக்கப்பட்டவர்களில் மூன்றில் இரு பங்கினர் பிணை எடுப்பு கொடுக்கப்படாமல் காவலில் வைக்கப்பட்டு, தண்டனை கிடைக்கும் வகையில் காவலில் உள்ளனர்.

கூட்டுத் தண்டனை கொடுப்பது இப்பொழுது வாடிக்கையாகிவிட்டது; முழுக் குடும்பங்களும் நகரசபை வீடுகளிலிருந்து வெளியேற்றப்படுவதை முகங்கொடுக்கின்றனர்; இது அவர்கள் மீதான ஜனநாயக, சமூக உரிமைகளின் மீதான தாக்குதல் ஆகும்.

தெற்கு லண்டனில் பாட்டர்ஸீயிலுள்ள 18 வயது இளைஞர் டானியல் சர்டைன்-கிளார்க்கின் குடும்பம் இத்தகைய வெளியேறும் நடவடிக்கைகளுக்கான அறிவிப்பைப் பெற்றுள்ள முதல் குடும்பம் ஆகும். அண்டைப் பகுதியான கிளாப்ஹாமில் நடந்த கலகங்களில் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு சர்டைன்-கிளார்க் தான் நிரபராதி என்று மறுத்திருந்தும் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

அவருடைய தாயார் மைட் டி லா கால்வா, பொலிசார் தன் மகனையும் அவருடைய பெண்தோழியையும் அடித்து உதைத்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். ”என்னுடைய மகனும் ஜே-நீலும் [டானியலுடைய பெண்தோழி] ஒரு தவறான நேரத்தில் தவறான இடத்தில் இருந்தனர். அவர்கள் மடத்தனமாக ஆர்வம் கொண்டிருந்தனர்பொலிசார் தவறுகளைச் செய்துள்ளனர். அவர்கள் இரு இளவயதினரையும் அடித்துள்ளனர்.”

டானியல், அவருடைய தாயார் மற்றும் 14 வயதுச் சகோதரி ஆகியோர் வீடற்ற நிலையை எதிர்கொள்கின்றனர். குடும்பம் எங்கும் செல்லமுடியாதநிலை என்பதைக் கால்வா தெளிவாக்கியுள்ளார். தனியார் துறையின் மிக உயர்ந்த வாடகைகளை அவர்கள் கொடுக்க இயலாது என்பது மட்டும் இல்லைகுறிப்பாக கன்சர்வேடிவ்-லிபரல் ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் சிக்கன நடவடிக்கைளின் 80 பில்லியன் குறைப்புப் பொதியின் ஒரு பகுதியாக வீடுகளுக்கு கொடுத்துவரும் உதவித் தொகைகளை நிறுத்திய நிலையுமாகும். வெளியேற்றப்பட்டவர்களுக்கு அவசரக் கால இடம் கொடுப்பதையும் வறிய நிலைக்கு மக்கள் தள்ளப்படுவதைப் பாதுகாக்கும் வகையிலுள்ள சட்டத்தை நிறுத்தும் வகையில் ஒரு பிரச்சாரம் நடைபெற்றுவருகிறது.

கால்வா மற்றும் அவருடைய குழந்தைகளுக்கு எதிராக வெளியேற்றப்பட வேண்டும் என்று கொடுக்கப்பட்டுள்ள முன்னறிவிப்பு ஒரு தொடக்கம்தான் என்றார் வாண்ட்ஸ்வொர்த் நகர சபையின் கன்சர்வேடிவ் தலைவரான ரவி கோவிந்தா. உள்ளூர் அதிகாரத்தின்அதிகாரிகள் நீதிமன்றங்களுடன் இணைந்து செயல்பட்டு மற்ற நகர சபை வீடுகளில் வசிப்போர் அல்லது அவர்களின் வீடுகளில் இருப்போரின் அடையாளங்களை ஸ்தாபிக்கச் செயல்படுவர்; வரவிருக்கும் நாட்களிலும் வாரங்களிலும் இன்னும் அதிக அத்தகைய வழக்குகள் விசாரணைக்கு வரவுள்ளன என்றும் அவர் அச்சுறுத்தியுள்ளார்.

தொழிற் கட்சிக் கட்டுப்பாட்டில் இருக்கும் தலைநகரத்தின் மற்ற பிரிவுகளிலும், மான்செஸ்டர், மேற்கு மிட்லாந்து இன்னும் பிற இடங்களிலும் இதே போன்ற செயல்கள் நடக்கின்றன. மான்செஸ்டரில், தொழிற் கட்சியின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ள நகர சபை, தொந்திரவுகளின்போது பல்பொருள் அங்காடி ஒன்றில் இருந்து ஒரு பாட்டில் வையினைத் திருடியாதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒரு 12 வயதுச் சிறுவனின் குடும்பத்தை அகற்றும் திட்டத்தைக் கொண்டுள்ளது என்று கூறியுள்ளது.

இத்தகைய பாசாங்குத்தன, மூன்று கட்சிகளின் விலைபோகும் அரசியல்வாதிகள் இக்கடுமையான நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் வகையில் வீடுகளும் பிற சமூக வசதிகளும்சலுகைகளே ஒழிய, உரிமைகள் அல்ல என்று வாதிடுகின்றனர்.

கலகங்களுக்கும் சமூகநல இழப்புக்கள், வேலையின்மை மற்றும் தொழிலாள வர்க்கத்தின் இளைஞர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பொலிஸ் மிருகத்தன நடவடிக்கைகளுக்கும் தொடர்பு இல்லை என அவர்கள் வலியுறுத்துகின்றனர். இது முற்றிலும்வீணான இளைஞர்களின்குற்றத்தன்மையின் விளைவுதான் என்று அவர்கள் கூறுகின்றனர்.

இவையும் இதேபோன்ற இவர்களுக்கு உதவும் அவதூறுகளும் தொந்திரவுகளால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள சமூக நிலைமைகளினால், குறிப்பாக லண்டனில் உள்ளவற்றால், பொய் என நிரூபணம் ஆகின்றன. தலைநகரின் 33 உட்பிரிவில் கிட்டத்தட்ட மூன்றில் இரு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இவை பலவற்றைப் பொதுவாகக் கொண்டுள்ளன இவை மிகப் பெரிய அளவில் தொழிலாள வர்க்கப் பகுதிகள் ஆகும்; நாட்டின் மிக அதிக இழப்புக்களை பெற்றுள்ள பகுதிகள் இங்கே உள்ளன.

இந்த வயதுப் பிரிவுக் குழுவின் தேசிய வேலையின்மை விகிதங்கள் ஏற்கனவே 20 சதவிகிதம் என்று உள்ளன இவர்களுள் கால்பகுதியினர் குறைந்த பட்சம் 12 மாதங்கள் வேலையின்றி உள்ளனர். கலகங்களினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் பலவற்றில், வேலையின்மை விகிதம் இன்னும் அதிகம் ஆகும். ஏனெனில் 16ல் இருந்து 18 வயது வரை உள்ளவர்களுக்கு வேலையின்மை நலன்கள் கொடுக்கப்படுவது இல்லை.

வேலையில் உள்ளவர்களுடைய நிலைமை ஒன்றும் சிறப்பாக இல்லை. உழைக்கும் இளைஞர்களில் 40 சதவிகிதத்தினர் மிகக் கடுமையாக உலக மந்தநிலையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான இளம் தொழிலாளர்கள் மிகக் குறைந்த ஊதிய விகிதங்களைப் பெறுகின்றனர்: 21க்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு 5 பவுண்டு 93 ஷில்லிங்குகள், 18-20 வயதில் இருப்பவர்களுக்கு 4.92 பவுண்டுகள் மற்றும் 16-17 வயது இளைஞர்களுக்கு 3.64 பவுண்ட் என்றும் 19 வயதிற்குக் குறைந்தவர்களில் பயிற்சி பெறுவோருக்கு வெறும் 2.50 பவுண்டும்தான் கொடுக்கப்படுகிறது.

இந்த நிலைமைக்கு நேரடிப் பொறுப்பு தொழிற் கட்சிதான்; இது இந்த இளைஞர்களின் வாழ்வில் பெரும்பாலான காலத்தில் பதவியில் இருந்தது. கூட்டணி அரசாங்கத்தின் கீழ் இந்நிலைமை வியத்தகு அளவில் மோசமாகியுள்ளது; இதற்குக் காரணம் பிரிட்டிஷ் வங்கிகள் பிணை எடுக்கப்படுவதற்காக கொடுக்கப்பட்ட பெரும் பில்லியன் பவுண்டுகள் நிதியின் சுமை தொழிலாளர்கள், இளைஞர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த மாதங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உயர்கல்வி பெறுவதில் தடையை எதிர்கொண்டனர்; ஏனெனில் பல்கலைக் கழக பயிற்சிக் கட்டணங்கள் மும்மடங்கு உயர்த்தப்பட்டு 9,000 பவுண்டுக்கள் என்று அரசாங்கத்தால் அதிகரிக்கப்பட்டுவிட்டன; அதைத்தவிர கல்விப் பராமரிப்புப் படி என்பதும் அகற்றப்பட்டுவிட்டது; அதைப் பல தொழிலாள வர்க்க இளைஞர்கள் கல்லூரிப் படிப்பிற்கு நம்பியிருந்தனர்.

இளைஞர்கள் இப்பொழுது அவர்கள் சுகாதாரம், பொதுநலன்கள் ஆகியவற்றை பரமாரிக்க உதவிய பணிகள் மீது சம்மட்டி அடியைப் பெறுகின்றன; அதேபோல் அவர்களைப் பணியில் சேர்க்க உதவுதலும் நகர சபை வரவு-செலவுத் திட்டத்தின் குறைப்புக்களின் இலக்குகளால் பாதிப்பிற்கு உட்பட்டுவிட்டன. மற்ற பொது நலன்களான நூலகங்கள், விளையாட்டு மையங்கள், இளைஞர் பொழுதுபோக்கு மன்றங்கள் இன்னும் ஆலோசனை மையங்கள், வேலை பற்றிய சிறப்புத் தகவல் கொடுப்போர் ஆகியோரும் பணியில் இருந்து நீக்கப்பட்டு விட்டனர்.

பெப்ருவரி மாதம் Save the Children அமைப்பு நாடு முழுவதும் 1.6 மில்லியன் குழந்தைகள் வறுமையில் வாழ்வதாகத் தெரிவித்துள்ளது. “நாடு முழுவதும் குழந்தைகள் வீடுகளில் வெப்பமின்மை, சரியான ஆகாரம் இன்மை ஆகியவற்றுடன் உறங்கச் சென்று, முறையான பள்ளீச்சீருடைகள் இன்மை என்ற நிலையில் காலையில் விழித்து எழுகின்றனர் என்று அது கூறியுள்ளது.

டோட்டன்ஹாமில் இருக்கும் ஹாரிங்கே உட்பகுதியில் வேலையின்மை விகிதம் 28 ஆகும். ஜூன் மாதத்தில் இப்பகுதியில் புதிய வேலைகள் ஏற்படுதல் என்பது 2009 முதல் 50 சதவிகிதம் குறைந்துவிட்டது, இதையொட்டி ஒரு வெற்றிட வேலைக்கு 54 பேர் போட்டியிடுகின்றனர்.

தொழிற் கட்சியின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் நகர சபை அடுத்த மூன்று ஆண்டுகளில் மொத்த வரவு-செலவுத் செலவுகளான 273 மில்லியன் பவுண்டுகளில் 84 மில்லியன் பவுண்டுகளை வரவு-செலவுத் திட்டக் குறைப்புக்கள் மூலம் ஈடுசெய்ய முற்படுகிறது. இது 1 மில்லியன் பவுண்டு என்று குறைக்கப்படும். ஹாரிங்கேயில் 13 இளைஞர் மனமகிழ்மன்றங்களில் (youth clubs) 8 மூடப்பட்டுவிட்டன; ஏப்ரல் 1 அன்று, இளைஞர்களுக்கு ஆலோசனை கூறும் சேவைகளின் பகுதிகள் மூடப்பட்டன. நகர சபை அதன் 4,600 மொத்த தொழிலாளர் தொகுப்பில் இருந்து 1,000 பேரைப் பணிநீக்கம் செய்கிறது.

பொலிசுக்கும் இளைஞர்களுக்கும் இடையே மோதல்களின் முக்கிய இடமாக இருந்த இங்கிலாந்திலுள்ள ஹாக்னியானது சமூக இழப்புக்கள் மிக அதிகமுள்ள இடங்களில் ஒன்றாகும். இங்கு குழந்தைகளில் 44 விகிதமானோர் வறுமையில் வாழ்கின்றனர்.

லண்டன் நகருக்குக் கிழக்கே டவர் ஹாம்லெட்ஸ் என்ற இடத்திலும் கலவரங்கள் மூண்டன; அங்கு இளைஞர் வேலையின்மை 25.3 சதவிகிதம் ஆகும்; அதாவது நான்கில் ஒருவருக்கு வேலை இல்லை. உள்ளூராட்சி மேயர் லுட்பர் ரஹ்மன் தலைமையில்சுயேச்சை உறுப்பினர்களின் கூட்டு ஒன்றினால் நடத்தப்படுகிறது; இவர் ஒரு முன்னாள் தொழிற் கட்சி உறுப்பினர் ஆவார். சமீபத்திய தேர்தல்களில் ஜோர்ஜ் காலோவேயின் ரெஸ்பெக்ட் (Respect) கட்சியின் ஆதரவைப் பெற்ற ரஹ்மான் உள்ளுராட்சி வரவு-செலவு திட்டத்தில் 72 மில்லியன் பவுண்டுகள் வெட்டுக்களை அறிவித்துள்ளார்; இதில் குழந்தைகள் மையங்கள் மற்றும் மன வளர்ச்சி குன்றியவர்களின் மையங்கள் குறிப்பாகப் பாதிப்பிற்கு உட்படுகின்றன.

தொந்திரவுகள் இருந்த மற்ற பகுதிகளிலும் இதேபோன்ற மிக உயர்ந்த இளைஞர் வேலையின்மை உள்ளது: Greenwich இல் 26.3 சதவிகிதம், Southwark இல் 21.8 சதவிகிதம், Croydon இல் 22.5 சதவிகிதம். கடைசிக் காலாண்டில் வேலை வாய்ப்பு,16-24 வயதினரிடையே 101,000 குறைப்பு ஏற்பட்டது. இது வேலை வெட்டுக்கள் மற்றும் புதிதாக வேலைக்கு நியமிக்கப்படுவதில் முடக்கம் என்று பொது, தனியார் துறைகளில் இருப்பதின் நேரடி விளைவு ஆகும்.